பின்பற்றுபவர்கள்

12 நவம்பர், 2011

தினமலர் வேறு தொழில் செய்யலாமே !

தினமலரின் திரித்தல் தெரிந்தும் பலர் படிப்பதற்குக் காரணமே அது எந்த அளவுக்கு கேவலாக செய்திகளை வெளியிடுகிறது, பொய் பரப்புகிறது, இட்டுக்கட்டி எழுதுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு பதலடிக் கொடுப்பதற்குத்தான், வெகுஜன ஊடகம் என்று கடைவிரித்திருக்கும் தினமலருக்கு இதைச் செய்யாவிட்டால் அவை வழக்கமான வாசக மந்தைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும், பொதுப் புத்திகளை வாசகர்களிடையே உருவாக்குவதில் தினமலருக்கு நிகர் வேறு எந்த நாளிதழும் இல்லை, மற்ற நாளிதழ்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு நிலையிலேயே நீடிக்கும் ஆளும் கட்சிக்கு அடிவருடுதல் என்ற நிலை அவர்கள் ஆதரிக்கும் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, ஆனால் தினமலர் அப்படிப்பட்டது அல்ல, அவர்கள் அடிவருடும் அரசியல் கட்சி எப்போது ஆட்சியில் இருக்கும் கட்சியாகத்தான் இருக்கும், சென்ற திமுக ஆட்சியின் போது ஓயாமல் ஜால்ரா அடித்து செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு பகுதியே ஒதுக்கி இருந்தது தினமலர், கருணாநிதியின் அரசியலை மறைமுகமாக எதிர்த்தாலும் விளம்பர லாபம் கருதி திமுக ஆளும் கட்சியாக இருந்த போது எப்போதும் ஜால்ரா அடித்தும், சிலவற்றை விமர்சிக்காமல் அடக்கியும் வாசித்தது. இருந்தாலும் கருணாநிதியின் ஆட்சி நீடிப்பதை தினமலர் விரும்பி இருக்கும் என்பது ஐயமே.

எம்மைப் போன்றவர்கள் கருணாநிதியையும் அவரது அரசியல் நிலைப்பாட்டையும் விமர்சிப்பதற்கும் எதிர்ப்பதற்கும் அடிப்படைக்காரணம் உண்டு, திமுக கருணாநிதியின் வாரிசுகளால் ஆக்கரமிக்கப்பட்ட பிறகு அது தன் அரசியல் பாதையில் இருந்தும் கொள்கைகளிலிருந்தும் முற்றிலுமாக விலகி, ஊழல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்ளிட்டவைகளிலும், மதுரை தினகரன் உள்ளிட்டவைகளில் கொலையானவர்கள் குறித்து அனுதாபமே இல்லாமல் குடும்பமாகக் கூடிக் கொண்டது மேலும் குறிப்பாக இலங்கைப் போராட்டத்தின் போது காங்கிரசின் கைப்பாவையாக செயல்பட்டார்கள் என்பதே. ஆனால் இவை போன்று கொள்கை ரீதியாக கருணாநிதி பற்றிய விமர்சனம் செய்யாத தினமலர் வழக்கமான திராவிட அரசியல் காழ்புணர்வு மற்றும் கருணாநிதி பற்றிய தீவிர வெறுப்பு என்ற நிலையிலேயெ உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுவருகிறது, அரசியல் மட்டுமல்ல திரைத்துறையைச் சார்ந்த நடிகைகளை விபச்சாரிகள் என்று கூறி அவர்களை அடையாளப்படுத்துவதாக படங்களை வெளியிட்டு திரைத்துறையினரிடம் செருப்படிப் படாத குறையாக கண்டனங்களைப் பெற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டது

******

எந்த ஒரு குற்ற (கிரிமினல்) வழக்கிலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று நீதிபதிகளே குறிப்பிடுவது கிடையாது, காரணம் குற்றம் சுமத்தப்படுவதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார் என்பது தெளிவு, விசாரணைகள், சாட்சிகள் அடிப்படையில் தான் ஒருவர் குற்றவாளி, குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது, மற்றபடி குற்றம் தொடர்பில் கைது செய்யப்படுவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் (accused) என்றே அழைக்கப்படுகிறார்கள். வழக்கு முடியும் வரை குற்றத் தொடர்புடையவர் குற்றம் சுமத்தப்பட்டவர் என்றே அழைக்கபடுவர், ஒருவர் குற்றமற்றவரா என்று தெரியாமல் அவரை குற்றவாளி என்று தொடர்ந்து அழைப்பது தான் குற்றம். 30 ஆண்டுகளாக நாளிதழ் நடத்திவரும் தினமலருக்கு இது தெரியாதா ? இவர்களுக்கு உண்மையிலேயே தெரியாது என்றால் 'பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் சங்கராமன் கொலைக் குற்றவாளி ஜெயந்திர சரஸ்வதி ஆஜரானார்' என்று செய்திகள் போட்டு இருக்கலாமே இவர்கள், பிறகு ஏன் ?


இது போன்ற கேவலாமான காழ்புணர்வு தலைப்புகளை இட்டு செய்தி வெளியிட்டு வாசகர்களின் பொது அறிவையும் பாழ்படுத்தும் தினமலரின் செயல் கண்டிக்கத்தக்கது, திமுகவினர் நினைத்தால் மேற்கண்ட இழிவிற்கு மான இழப்பு வழக்கே தொடுக்கலாம், செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறதோ தினமலர், நான் கனிமொழி இராசா ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று சொல்லவரவில்லை, அவற்றை முடிவு செய்வது நீதிமன்றம் தானே. இப்படிப்பட்ட இழிதொழிலாக்கி நாளிதழ் நடத்துவதற்கு ஆளும் அரசியல்வாதிகளுக்கு குண்டி கழுவி விட்டு சேவை செய்து துட்டுப்பார்க்கலாம், துய்மை செய்யும் தூய பணி. செய்வார்களா ?

36 கருத்துகள்:

ஜோ/Joe சொன்னது…

உண்மையை உரக்கச் சொன்னீர்கள் கோவியாரே!

வசந்தத்தின் தூதுவன் சொன்னது…

இதேதான் கூடங்குளம் போராட்டத்தைப் பற்றி வெளியிட்ட செய்தியும்.

போராட்டத்தில் பாதிரிமார் கலந்து கொண்டதை வைத்து இது கிறித்துவர்களால் நடத்தப் படும் போராட்டம் என கயிறு திரித்தது. பிறகு ஒரு பாதிரி விலகியதும் பாதிரியே விலகிவிட்டார். போராட்டக்குழுவில் பிளவு என தனது பிளவு பட்ட நாக்கை வெளித்தள்ளியது.

ஆக அது ஏற்கனவே நீங்கள் குறிப்பிடும் வேறு வேலைதான் செய்து கொண்டிருக்கிறது. நாம் தான் இதையும் செய்தித்தாள் கணக்கில் இன்னும் விட்டு வைத்துள்ளோம்.

guna சொன்னது…

போராட்டத்தில் பாதிரிமார் கலந்து கொண்ட. this is true my dear friend

suvanappiriyan சொன்னது…

உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.

வவ்வால் சொன்னது…

கோவி,

இது ஒரு பக்க சார்பான கட்டுரை, கடந்த சில வாரங்களாக , கனிமொழியின் படம் போட்டு அய்யோ பாவம் என்பது போல ஜூனியர் விகடன் கட்டுரை வெளியிட்டதே அப்போதும், அவர் என்ன மகாத்மாவா ஏன் ஜூவி கட்டுரை போடனும்னு கேட்டு இருக்கணும்.

ஏன் கனிமொழி ஊழல் செய்யாத நல்லவரா? எஸ்ஆரெம் யுனிவர்சிட்டி நடத்துரவர்கிட்டே கனிமொழி பற்றி கேளுங்க,இல்லை லக்கி லுக்னு ஒரு பதிவர் இருக்காரே கேளுங்க!

தினமலர் அப்படி கட்டுரை எழுதுனது தப்பு! ஆனால் மத்தவங்க எழுதுன கட்டுரைக்கு நீங்க என்ன செய்தீங்க? அடீச்சாங்க கொள்ளை இப்போ மாட்டிகிட்டாங்க, எதாவது சொன்னா உயிர் போயிடும்னு தெரியும்!

Santhose சொன்னது…

Voval,

Kovi is questioning about the Journalism and its ethics only.

why you are commenting about Lucky in this matter. Is Lucky, a blogger and a News Pager are in the same category.

Here Kovi is not talking about the truth, he questioned about the ethics & integrity of Dinamalar only.

I know that you are a brilliant guy and discuss about any subject, and I as a reader like your comments in many subject. But this comment is a biased one.

Thennavan சொன்னது…

இது மக்களுக்கான பத்திரிக்கை இல்ல
மாக்களுக்கான பத்திரிக்கை .

கேரளாக்காரன் சொன்னது…

Unga jaalra satham thaan kaathu kiliyuthu.. Kanimozhi enna periya kannahiyaa...... Kutravaali thaan. Neenga kattaayam enga papera padikkanumnu tv ramasubbaiar ungalukku mail pannunaaraa?

Surya Prakash சொன்னது…

உண்மையை நேர்மையாக எடுதுரைதுள்ளீர்கள் .....
இது ஒருபக்க சார்பான கட்டுரை என்று றனக்கு தோன்ற வில்லை ..........

Thangavel Manickam சொன்னது…

பத்திரிக்கைகளைப் பற்றி நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளாத குறைதான் உங்களின் இப்பதிவு. பத்திரிக்கை சுதந்திரம் இந்தியாவில் கிடையவே கிடையாது சார்.

உங்கள் நண்பன்(சரா) சொன்னது…

Anpu KOVi

eppadi irukiringa

ஓசூர் ராஜன் சொன்னது…

தினமலர் நாளிதழை மனுதர்ம இதழாகவே பலரும் அறிவார்கள்! நல்ல பதிவு, வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

சாட்டை அடி!
தேவைதான்

புலவர் சா இராமாநுசம்

Anand சொன்னது…

//பத்திரிக்கை சுதந்திரம் இந்தியாவில் கிடையவே கிடையாது சார்.

தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள். இது பத்திரிக்கை சுதந்திரம் பற்றி அல்ல. தினமலர் அவாளுக்கான வருணாசிரம பத்திரிக்கை.

Unknown சொன்னது…

தினமலர் ”உண்மையின் உரை கல்”லாம்.விஸமத்தனத்திற்கு பெயர் போன கேவலமான பத்திரிகையில் முதலிடம் இந்த தினநாற்றம்.கூடங்குளம் பிரச்சனையில் இதன் பார்வை சமீபத்திய இதன் கிறுக்குதனம்.

தமிழ்மலர் சொன்னது…

உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.

அன்புடன் நான் சொன்னது…

உங்க கோபம் நேர்மையானதே.

Rajaraman சொன்னது…

இவருடைய கோபத்தை புரிந்து கொள்ள‌ முடிகிறது.தியாகச் சுடர் கருணாநிதி குடும்பத்தைப் பற்றி இப்படி எழுதினால் கோபம் வரதா?

ராஜா, சிங்கப்பூர்

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோ/Joe said...
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் கோவியாரே!//

நன்றி ஜோ

கோவி.கண்ணன் சொன்னது…

//போராட்டக்குழுவில் பிளவு என தனது பிளவு பட்ட நாக்கை வெளித்தள்ளியது.//

நான் கூட சன் செய்தியில் பார்த்தேன் கூடங்குள அணு உலைக்கு ஒட்டுமொத்த கிறித்துவ அமைப்பும் ஆதரவு என்ற தகவல் ஓடியது

கோவி.கண்ணன் சொன்னது…

//guna said...
போராட்டத்தில் பாதிரிமார் கலந்து கொண்ட. this is true my dear friend

2:22 AM, November 12, 2011//

தகவலுக்கு நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன் said...
உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.//

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//தினமலர் அப்படி கட்டுரை எழுதுனது தப்பு! ஆனால் மத்தவங்க எழுதுன கட்டுரைக்கு நீங்க என்ன செய்தீங்க? அடீச்சாங்க கொள்ளை இப்போ மாட்டிகிட்டாங்க, எதாவது சொன்னா உயிர் போயிடும்னு தெரியும்!//

மத்தவங்க என்ன எழுதினாங்கன்னு தெரியாது, ஆனால் நாளிதழ்கள் லட்சக்கணக்கானோர் படிப்பது இது போன்று குற்றவாளிகள் தான் இவர்கள் என்று தீர்ப்பு எழுத இவர்கள் நீதிபதி இல்லையே, ஏன் பொது புத்தியை இவர்கள் விதைக்க வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

சந்தோஷ் புரிதலுக்கு நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// Thennavan said...
இது மக்களுக்கான பத்திரிக்கை இல்ல
மாக்களுக்கான பத்திரிக்கை .//

மக்களை ஆட்டுமந்தைகளாக உருவாக்க தினமலர் முயற்சிக்கிறது, ஆனால் அதன் வாசகர்களை மாக்கள் என்று நான் கருதவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...
Unga jaalra satham thaan kaathu kiliyuthu.. Kanimozhi enna periya kannahiyaa...... Kutravaali thaan. Neenga kattaayam enga papera padikkanumnu tv ramasubbaiar ungalukku mail pannunaaraa?//

நாளைக்கு வழக்கு நீர்த்துப் போனாலோ, நிருபனம் செய்யமுடியாமல் போனாலோ தினமலர் நாண்டு கொள்ளுமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//Surya Prakash said...
உண்மையை நேர்மையாக எடுதுரைதுள்ளீர்கள் .....
இது ஒருபக்க சார்பான கட்டுரை என்று றனக்கு தோன்ற வில்லை //

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவை எம் தங்கவேல் said...
பத்திரிக்கைகளைப் பற்றி நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளாத குறைதான் உங்களின் இப்பதிவு. பத்திரிக்கை சுதந்திரம் இந்தியாவில் கிடையவே கிடையாது சார்.//

பத்திரிக்கைகளுக்கு ஆளும் கட்சியை ஜால்ரா அடித்து பிழைக்கும் சுதந்திரம் உண்டு, ஆனால் பொதுமக்களுக்கு உண்மையான போராளிகளுக்கும் தான் உணர்வை வெளிப்படுத்தும் சுதந்திரம் இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் நண்பன்(சரா) said...
Anpu KOVi

eppadi irukiringa//

சரவணன் நான் நல்லா இருக்கேன், நீங்கள் எப்படி ? ரொம்ப நாளாக தொடர்பில் இல்லையே.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஓசூர் ராஜன் said...
தினமலர் நாளிதழை மனுதர்ம இதழாகவே பலரும் அறிவார்கள்! நல்ல பதிவு, வாழ்த்துக்கள்!//

அது மனுதர்ம நாளிதழ் தான் என்று எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவது நம் கையில் தான் உள்ளது

கோவி.கண்ணன் சொன்னது…

//புலவர் சா இராமாநுசம் said...
சாட்டை அடி!
தேவைதான்

புலவர் சா இராமாநுசம்//

நன்றி ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

//Anand said...
//பத்திரிக்கை சுதந்திரம் இந்தியாவில் கிடையவே கிடையாது சார்.

தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள். இது பத்திரிக்கை சுதந்திரம் பற்றி அல்ல. தினமலர் அவாளுக்கான வருணாசிரம பத்திரிக்கை.//

ஆனந்த் நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//ரா.செழியன். said...
தினமலர் ”உண்மையின் உரை கல்”லாம்.விஸமத்தனத்திற்கு பெயர் போன கேவலமான பத்திரிகையில் முதலிடம் இந்த தினநாற்றம்.கூடங்குளம் பிரச்சனையில் இதன் பார்வை சமீபத்திய இதன் கிறுக்குதனம்.

9:08 PM, November 12,//

ஆதரவான கருத்துகளுக்கு நன்றி திரு செழியன்

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ்மலர் said...
உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.//

நன்றி தமிழ்மலர்

கோவி.கண்ணன் சொன்னது…

//சி.கருணாகரசு said...
உங்க கோபம் நேர்மையானதே.//

நன்றி கருணாகரசு.

கோவி.கண்ணன் சொன்னது…

// Rajaraman said...
இவருடைய கோபத்தை புரிந்து கொள்ள‌ முடிகிறது.தியாகச் சுடர் கருணாநிதி குடும்பத்தைப் பற்றி இப்படி எழுதினால் கோபம் வரதா?

ராஜா, சிங்கப்பூர்//

உங்க பொது அறிவு ஒடம்பெல்லாம் அரிக்க வைக்குது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்