இன்னிக்கு ஒரு முக்கியமான செய்தி, 'கருணாநிதியின் மகள் செல்வி, கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் கனிமொழிக்காக காளகஸ்தி கோவிலில் 'ராகு - கேது' சர்ப தோஷ வழிபாடு செய்தாராம். இதில் என்ன கருணாநிதி தம்மை நாத்திகனாகக் கூறிக் கொண்டால் அவரது வாரிசுகள் கோவிலுக்குப் போகக் கூடாதா ? அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கக் கூடாதா ? என்பது தானே கேள்வி.
கடவுள் நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை, அவ்வாறு இருப்பதும் இல்லாததும் அவரவரின் விருப்பம். ஆனால் 'ராகு - கேது' சோஷியம் பரிகாரம் இன்னும் பிற இழவுகளும் இந்துமத அடிப்படைகளின் ஒன்று, இதைமட்டுமே இந்துமதம் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, பிறப்பினால் ஏற்றத் தாழ்வுடன் பிராமணன் - சூத்திரன் வரை பிரிவுகளை வைத்திருந்து வேதக் கல்வி கற்றிருந்தாலும் பிறப்பின் வழியாக பார்பனர் அல்லாதோர் ஆகமக் கோவிலும் பூசை செய்ய ஆகமம் இடம் தரவில்லை என்று தடையாணையுடன் நிற்கிறது. இந்த இராகும் கேதுவும் யார் ? அசுரரும் - தேவரும் அமிர்தம் கடைந்த போது கிடைத்த அமிர்தத்தில் அசுரர்களுக்கு பங்கில்லை என்று கைவிரித்து அவர்களை புறக்கணித்த போது அந்த அசுரரில் ஒருவர் தேவராக உருமாறி இடையில் நிற்க அமிர்தம் கிடைக்கப் பெற்று உண்டதும், அவர் தேவர் இல்லை என்பதால் உடல் வெட்டப்பட்டு, உண்ட அமிர்தத்தின் காரணமாக உயிர் போகமல் இருக்க இராகுவாகும் கேதுவாகவும் சபிக்கப்பட்டதாக இந்து மத இழிபுராணம் ஒன்று கூறுகிறது. இதை எதற்கு இழி புராணம் என்று கூறுகிறேன் என்றால் உடல் உழைப்பிற்கு அதாதவது அமிர்தம் கடைய உறுதுணையாக இருந்த அசுரர்கள் நிராகரிக்கப்பட்டதற்கு அவர்கள் தேவர்கள் அல்ல என்னும் அற்பக் காரணமே. இத்தகைய புராணங்கள் இழிபுராணம் அன்றி வேறென்ன ? இதே வழியில் தான் வேதம் படித்த பார்பனர் ஒன்று கூடி வேதம் படித்த பார்பனர் அல்லாதோர் பூசை செய்யும் தகுதி படைத்தவர் அல்லர் என்று வாதிட்டு தடை ஆணையும் பெற்றுள்ளனர்.
இந்து மதமும் அதன் புராணங்களும் குறிப்பாக இராகுவும் கேதுவும் இந்து மத ஏற்றத்தாழ்வுகளின் அவமானச் சின்னமாகவே தொடர்கின்றனர், உழைப்பாளிகளின் உழைப்பு மட்டுமே சுரண்டப்பட்டு அவர்களுக்கான பலன் மறுக்கப்பட்டதன் உவமானம் தான் ஒரு அசுரன் இராகு கேதுவாக சபிக்கப்பட்ட கதை. இது தான் ஆகமவழி கோவில்களின் அவலட்சணம். பிறப்பின் வழி ஏற்றத் தாழ்வுகளை எதிர்க்கிறேன் என்று தோன்றிய இயக்கதின் தலைமை பதவியில் பலன்களை தொண்டர்களின் ஆதரவால் பெற்ற ஒருவரின் பெற்ற மகள் இத்தகைய ஏற்றத் தாழ்வை போற்றும் இந்துமதம் பற்றியும் ஆகமக் கோவில் பார்பனர்களின் ஆளுமையையும் அறிந்திருக்கமாட்டாரா ? அவ்வாறு அறிந்திருக்கமாட்டார் என்றால் பெற்ற மகளுக்கே இத்தகைய அறிவை ஊட்டதாவர் பிறருக்கு செய்ததெல்லாம் ஊருக்கு உபதேச வகையில் தானா ?
தாம் திராவிடன் அல்லது திராவிடர் என்று நம்பும் ஒருவர் ஆகமக் கோவிலின் ஐயர்மார்கள் செய்து தரும் பரிகார பூசையை நம்பும் போது, இந்து மத ஏற்றத் தாழ்வுகளை ஏற்றுக் கொள்வதாகத் தான் பொருள். அது மட்டுமல்லாது அவர்கள் பார்பனர்கள் அல்லாதோர் என்றால் இந்துமதக் கோட்பாட்டின் படி தம்மை சூத்திரர்களாக பார்பனர் உள்ளிட்ட பலர் அழைப்பதை தாழ்வுடன் ஏற்றுக் கொள்பவரும் ஆகிறார்கள்.
கருணாநிதிக்கு நாகதோசமா ? ஒருவேளை பெரியார் சொன்னதில் பாதியைப் புரிந்து கொண்டு விட வேண்டிய பாம்புகளை அடித்துக் கொன்றாரோ ?
மு.க செல்வி காளகஸ்தி கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்து தம்மை சூத்திரர் ஆக்கிக் கொண்டுள்ளார், வாழ்க திரா'விடம்'
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
13 கருத்துகள்:
//ஹலோ கோவிலுக்கு போனது அவரது மகள், அவர் மனைவியும் கோவிலுக்கு போகிறவர் தான். சிகரெட் பிடிக்காதேன்னு அறிவுரை சொல்கிறவர் மகனையும் அப்பாவையும் திருத்தினாரான்னு கேட்கப்படாது, அவரு பிடிக்கிறாரான்னு தான் பார்க்கனும் :)//
கிகிகி..... :)
அன்புடன்
சிங்கை நாதன்
//கிகிகி..... :)
அன்புடன்
சிங்கை நாதன்//
நல்லது, அது நான் கூகுள் பஸ்ஸில் நாத்திகம் பற்றி கிண்டல் அடித்தவருக்குச் சொன்ன பதில். நான் இங்கு சொல்வது இந்துமதம் சார்ந்த நம்பிக்கை பற்றியது.
நல்ல ஆணித்தரமான கருத்தாயிந்த கேள்விகள் சார்
ஊருக்கு உபதேசம் என்பது இதுதானோ
உங்கள் எல்லா பதிவுகளை படித்துகொண்டிருக்கிறேன்....நன்றி.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அரசியல்வாதியிடம் கொள்கைகளை எதிர்பார்க்கவும், அவர்களின் தனிமனித வாழ்க்கையில் நடைமுறை படுத்துவார்கள் என எதிர்பார்க்கவும் கூடாது.
புதிய தகவல்.
ஆக என்னதான் பகுத்தறிவு வாதம் பேசினாலும் இந்து மதம் என்ற ஒரு கோட்டுக்குள் இருந்து வெளியேற முடியாது எனபது இது போன்ற நிகழ்வுகள் மூலம் தெரிகிறது.
//ஆக என்னதான் பகுத்தறிவு வாதம் பேசினாலும் இந்து மதம் என்ற ஒரு கோட்டுக்குள் இருந்து வெளியேற முடியாது எனபது இது போன்ற நிகழ்வுகள் மூலம் தெரிகிறது.//
நன்றி சுவனப்பிரியன் சார்
நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும், நீங்கள் ஒரு கற்பூரம். உங்களுக்குத்தான் பகுத்தறிவு முதல் அனைத்தையும் இறைவன் தேக்கரண்டி தேக்கரண்டியாக ஊட்டி இருக்கிறான்.
உலகத்திலே மரணம் என்ற ஒன்று இருக்கின்ற வரையில், நாம் எதிர் பார்த்த ஒன்று நடக்காத வரையில், நாம் எதிர் பாராத ஒன்று நடக்கின்றவரையில் கடவுள் நம்பிக்கை இருந்தேதீரும்.
விவேகானந்தர்.
பசி வந்திட பத்தும் பறந்து போகும்.
வாழ்க திரா'விடம்'!
அருமை!!!
அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள்,அறிவுகெட்ட பூசாரி,என்று கொள்கை முழக்கமிட்ட பகுத்தறிவு பகலவனின் குலத்தோன்றல் காலஹத்தியிலா,வெட்கம்.
இந்த சுவனபிரியன் போன்ற ஆடு நனையும் என்று கவலை படுவர்கள் கருத்தை இங்கு வெளியிடுவது நியாயமா? ஜனநாயகம் என்று சொல்லாதீர்கள். நாத்திகம் பேசும் கைகூலிகளாவது லாபம் இல்லாதபோது காளஹஸ்தி போய்விடுவார்கள். ஆனால் இது போன்ற அந்நியர்களின் கருத்து இங்கு தேவையில்லை என்பது எனது கருத்து.
பிறப்பால் உயர்வு இல்லை என்கிறீர்களே? அம்பானிகளும், ராகுல்களும், ஸ்டாலின்களும் இருக்கும்போது இது எப்படி பொய்யாகும்?
நல்ல காலம் பாப்பான்களை ஒன்றும் சொல்லாமல் விட்டீர்களே ஏன்? உங்க பாப்பான் நண்பர்கள் மாறிவிட்டார்களா?
//இந்த சுவனபிரியன் போன்ற ஆடு நனையும் என்று கவலை படுவர்கள் கருத்தை இங்கு வெளியிடுவது நியாயமா? ஜனநாயகம் என்று சொல்லாதீர்கள். நாத்திகம் பேசும் கைகூலிகளாவது லாபம் இல்லாதபோது காளஹஸ்தி போய்விடுவார்கள். ஆனால் இது போன்ற அந்நியர்களின் கருத்து இங்கு தேவையில்லை என்பது எனது கருத்து.//
அந்நியர் என்று யார் யாரைப் பார்த்து சொல்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. எகிப்திலிருந்து ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய் வழியாக எனது நாடான இந்தியாவுக்குள் புகுந்து கூடாரம் அடித்து தங்கி விட்ட கூட்டம் முஸ்லிம்களைப் பார்த்து வந்தேறிகள் என்பதா!
ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை தெரியுமா ராஜரத்னம்?
//அந்நியர் என்று யார் யாரைப் பார்த்து சொல்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது/
அவர் இங்கே அந்நியர் என்றால் மாற்று மதத்தினர் என்ற பொருளில் தான் சொல்லி இருக்கிறார். நீங்க உணர்ச்சி வசப்பட இதில் ஒன்றும் இல்லை சுபி
கருத்துரையிடுக