பின்பற்றுபவர்கள்

6 ஜூன், 2011

இக்பால் செல்வனும் முகமது நபி படமும் !

பதிவர் இக்பால் செல்வன் முந்தைய நாள் பதிவொன்றில் குரானில் குறிப்பிட்டிருக்கும் ஏசு (இஸ்லாமியர்களுக்கு ஈஸா அலை) மற்றும் முகமது பற்றிய குறிப்புகளை சுரா (செய்யுள் எண்) எண் உள்ளிட்டவைகளைக் குறிப்பிட்டு ஒப்பிடுகளை எழுதி இருந்தார், அதாவது குரானில் முகமதுவை ஒரு கொள்ளைக்காரர் ரேஞ்சுக்கு தான் குறிப்புள்ளது ஆனால் ஏசு பற்றி உயர்வாகவே குரான் பேசுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக ஏசு திருமணம் ஆகாதவர், பெற்றோர் உடலுறவாள் பிறக்காதவர், ஏசுவின் தாயார் ஆசிர்வதிகப்பட்டவர் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளது, ஆனால் அத்தகைய சிறப்புகள் ஒன்றும் முகமதுவுக்கு குரானில் இல்லையே என்று சுட்டிக்காட்டி இருந்தார், எனக்கு தெரிந்தவகையில் இக்பால் செல்வன் குறிப்பிட்டுருந்தவை அனைத்தும் குரானைத் தொட்டே இருந்தன. இஸ்லாமிய பதிவர்களும் (சுவன பிரியன் மற்றும் ஆசிக்) அவை குறித்த ஆழமான மறுப்புகள் எதையும் எழுதவும் இல்லை. ஆனால் முகமதுவை ஒப்பிடுகையில் ஏசு ஒன்றும் புனிதமானவர் இல்லை என்பதை சொல்வதற்கு முனைந்திருந்தனர். இந்த ஒப்பீடு இடுகையில் இக்பால் செல்வன் ஏசு மற்றும் முகமது பற்றீய படங்களை இணைத்திருந்தார்.

நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல் அவரது இடுகையின் சாரம் பற்றி எதுவும் பேசாது, 'அவர் முகமதுவின் படத்தை வெளியிட்டுவிட்டார், எனவே பதிவுலக தினமலமாக செயல்படுகிறார்' என்று திரு ஆசிக், திரு இக்பால் செல்வன் மீது எழுத்து வன்முறையை காட்டி இருக்கிறார்.

* முகமது மற்றும் ஏசு (ஈஸா அலை) ஆகியோர் குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும் இறைத்தூதர்கள் ஆவார்கள், முகமது பற்றி எழுதிவிட்டால் பொங்குவது ஏன் ஏசுவிற்கு பொங்குவதில்லை, ஏசுவின் படத்தை எவர் வேண்டுமானாலும் போடலாமா ? ஒரு இஸ்லாமியருக்கு முகமது மேல் எவ்வளவு அன்பு இருக்கிறதோ அதே அளவுக்கு ஏசுவின் மீதும் இருக்க வேண்டும் அல்லவா ? அதையெல்லாம் விட அல்லா தன்னைத் தவிர வேறு எவர் மீதும் இறைக்கு சமமான மதிப்பு வைத்திருக்கக் கூடாது என்று குரானில் சொல்லுகிறார், ஒரு இஸ்லாமியருக்கு அல்லாவைத் தவிர்த்து அனைவரும் மனிதர்களே, பிறகு ஏன் முகமது பற்றிய கேள்விகளுக்கு முறையான பதில் கொடுக்காது, கேட்டவர்களின் குடும்ப நலம் விசாரிக்க வேண்டும் ?

* அல்லாவைத் தவிர்த்து யாரையும் குறியீடாகக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே முகமது தன்னைப்பற்றிய படங்கள் கூட கூடாதென்றார். ஆனால் சவுதி அரேபியாவில் அவர் பயன்படுத்திய செருப்பு மற்றும் வாள் ஆகியவை பாதுக்காப்பாக பலர் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. ஒருவரின் தனிப்பட்ட அடையாளம் என்பது வெறும் அவருடைய முகம் மட்டும் தானா ? ஒருவரைப்பற்றி நினைக்க அவர் பயன்படுத்திய பொருள்கள் பயன்படாது என்பது உண்மை என்றால் அவர் பயன்படுத்தியவற்றை பாதுகாப்பது எதற்காக ?

* முகமது பற்றி நிறைய டாக்குமெண்ட்ரிகள் எனப்படும் குறும்படங்கள், கார்டூன் படங்கள் பலமுறை வெளிஆகி இருக்கிறது, முகமது படத்தை வணங்கக் கூடாது, கேலி செய்யக் கூடாது என்பது மட்டும் தான் இஸ்லாமிய கட்டுப்பாடு அன்றி முகமது படத்தை வரைந்தவர்கள் கையை வெட்ட வேண்டும் என்று எங்கும் சொன்னது போல் தெரியவில்லை, மேலும் டென்மார்க் நாளிதழ் ஒன்றில் முகமதுவை கொச்சைப்படுத்துவதாக வரைந்திருந்த கார்டூனுக்குத்தான் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர், அதை மறுவெளியிடு செய்த தினமலர் தமிழக இஸ்லாமிய பெருமக்களின் வேண்டுதலால் அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டது, ஆனால் முகமது பற்றிய டாக்குமெண்ட்ரிகள் அரபு நாடுகளில் இதுவரை தடைசெய்யப்பட்டதாக தெரியவில்லை. டாக்குமெண்ட்ரிகளில் முகமது பற்றிய படங்கள் இல்லாது எடுத்துவிடமுடியுமா ? நான் பார்த்த டாகுமெண்டிரிகளில் முகமது காணப்படுகிறார். பிறகு ஏன் அவற்றை அரபு நாடுகள் தடைசெய்யவில்லை ?

பதிவர் இக்பால் செல்வன் வெளி இட்டிருந்த முகமது குறித்தப்படத்தில் எந்த ஒரு கேலியும் இல்லை. இதே போன்ற படங்களை இஸ்லாமியர்கள் துணையுடன் வரையப்பட்டு குறும்படங்கள், பிரச்சாரப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன, பதிவர் இக்பால் செல்வன் கேலிச்சித்திரம் வரைந்திருந்தாலோ, முகமது பற்றி உண்மைக்கு புறம்பாக எழுதி இருந்தாலோ நான் கண்டனம் தெரிவித்திருப்பேன், எம் போன்றவர்கள் தினமலர் டென்மார்க்கின் கார்டூனை வெளி இட்ட உடனேயே கண்டனம் தெரிவித்திருந்தோம் அன்று மாலையே இணையப்பதிப்பில் இருந்து அதனை நீக்கிவிட்டார்கள்,

முகமது பற்றி இஸ்லாமியர்கள் எடுத்த குறும்படம் :

http://en.wikipedia.org/wiki/Muhammad:_Legacy_of_a_Prophet
http://video.google.com/videoplay?docid=-5588678537059723932#

மற்றொரு டாக்குமெண்ட்ரி
http://www.sodahead.com/united-states/have-anyone-seen-a-movie-of-muhammed/question-748903/?link=ibaf&imgurl=http://www.iranian.com/main/files/blogimages/message.jpg&q=Muhammad:_Legacy_of_a_Prophet
http://www.iranian.com/main/files/blogimages/message.jpg
http://en.wikipedia.org/wiki/Mohammad,_Messenger_of_God

முகமதுவின் படைத்தைப் போட்டதாலேயே இஸ்லாத்தை கொச்சைபடுத்திவிட்டார் இக்பால் செல்வன் என்கிற கூப்பாடும் அவர் மீதான தூற்றலும் நிராகரிக்கத்தக்கதாகும்.

தொடர்புடைய சுட்டிகள் :

31 கருத்துகள்:

Aashiq Ahamed சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்,

இக்பால் செல்வன் அவர்களது தளத்தில் போட்ட உங்களுக்கான கம்மேண்டட் இங்கேயும் போடுகின்றேன். ஏனென்றால் இங்கேயும் தானால் அந்த லிங்க் கொடுத்திருக்கிண்றீர்கள்

சகோதரர் கோவி.கண்ணன்,

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...அமீன்.

----

முகமது நபி பற்றிய டாக்குமெண்டிரிகளில் கூட முகமது நபி பற்றிய படம் உண்டு. நீங்கள் இது வரை பார்த்திராவிட்டால் உடனே பார்க்கவும்,
----

கண்ணன், உங்களை என்ன சொல்வது என்று புரியவில்லை சகோதரர். எப்படி எப்படியெல்லாம் தவறாக புரிந்து கொள்ள முடியும் என்பதற்கு தாங்கள் ஒரு சிறந்த உதாரணமாக எனக்கு தெரிகிண்றீர்கள். நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள், இதோ கீழே வருகின்றது விளக்கம்,

----
"Muhammad: Legacy of a Prophet" doesn't feature a single painting or image of Muhammad. His portrait comes alive in the stories that people tell of him, the colorful 16th century paintings the filmmakers use to depict scenes from the Arabian Peninsula and the video images of the Saudi Arabian desert and of the annual pilgrimage to Mecca known as the hajj.

ஆதாரம் பார்க்க http://www.sfgate.com/cgi-bin/article.cgi?file=/chronicle/archive/2002/12/17/DD244427.DTL
-----

அதில் வரக்கூடிய படங்களை பார்த்து அது முஹம்மது (ஸல்) அவர்களின் படம் என்று தவறாக நினைத்துவிட்டீர்கள். தவறில்லை. மனிதர்களாக இருந்தால் தவறு செய்வதும், அவசரப்படுவதும் இயல்பு தான்.

ஆனால் சகோதரர், உங்கள் உதவிக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அல்ஹம்துலில்லாஹ். நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிய ஒரு அற்புதமான ஆவணப்படத்தை இங்கே அறிமுகப்படுத்தி நாங்கள் செய்ய வேண்டிய இஸ்லாமிய அழைப்பு பணியை நீங்கள் செய்திருக்கின்றீர்கள். சுப்ஹானல்லாஹ். ஜஜாக்கல்லாஹ் (உங்கள் உதவிக்கு சிறந்த நற்கூலியை இறைவன் தந்தருள்வானாக) சகோதரர்.

சகோதரர், அப்புறம், இங்கே பிரச்சனை நபியை கேலியை வரைந்தார்களா இல்லையா என்பதில் இல்லை. அவர்கள் கேலியாக வரைந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி எங்களுக்கு எல்லாமே ஒன்றுதான்.

நாயகம் (ஸல்) அவர்கள் தன்னை உருவப்படுத்துவதை தடுத்தார்கள். அவ்வளவே விஷயம். அது கேலியாக இருந்தால் தான் என்று இல்லை. புரியும் என்று நினைக்கின்றேன்.

மற்றொன்று, அந்த ஆவணப்படத்தில் வருபவர்களில் நான்கு பேர் இஸ்லாமை தழுவியவர்கள். முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்தவர்களை காட்டிலும் எவ்வளவு இஸ்லாமிய அறிவை கொண்டிருக்கின்றார்கள் இவர்கள். அல்ஹம்துலில்லாஹ்.

அழகான பகிர்வுக்கு மாற்றொருமுறை ஜசாக்கல்லாஹ் சகோதரர்.
------------------------

நன்றி.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

உதயம் சொன்னது…

அந்தப்படத்தைப் போட்டுத்தான் இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டுமா என்ன? என்பது தான் என் நிலைப்பாடு.

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

இக்பால் பகுத்தறிவோடு கேள்வி எழுப்பும்போதே எதிர்பார்த்தேன் எதிர்ப்பு வருமென...:)

மரியாதையாகவே உல்லது அவரது எழுத்து..

பதிவுலகம் துணை நிற்கணும் அவருக்கு..

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

நியாயத்தை எடுத்தியம்பிய இந்த பதிவுக்கும் நன்றி..

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

சகோ.கோவி கண்ணன்..
தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக...

ஒரு மனிதனின் "சிந்தனை ஓட்டம்" என்பது வறையருக்கப்படாததா..?
.
ஆதாரமின்றி எந்த அவதூறையும், பொய்யான செய்திகளையும் கற்பனையாக எவர்மீதும், எந்த வரலாறிலும் இட்டுக்கட்டலாமா..?
.
இதற்குப்பெயர்தான் (Freedom of expression) கருத்துரிமையா..?
.
இதைத்தான் எனக்கு மைனஸ் ஓட்டு போட்டு ஆதரிக்கிறீர்களா..?
.
அப்படியெனில்... உங்களிடம் ஒரு கேள்வி... சகோ..!.\
.
நீங்கள் மிகவும் மதித்து போற்றி நேசிப்பவரை அல்லது உங்கள் குடும்பத்தாரை அல்லது உங்களை... கற்பனையாக... உங்களை & உங்கள் புகைப்படத்தை என் வாழ்நாளில் ஒருபோதுமே நான் பார்த்தறியாமலேயே எவ்வித ஆதாரமுமின்றி என் இஷ்டத்துக்கு ஒரு படத்தை... "இவர் இப்படித்தான் இருந்திருப்பார்" என கற்பனையாக நான் வரைந்து, "இதுதான் நீங்கள்" என்று நான் சொன்னால்... அதில் உங்களுக்கும் அந்த படத்துக்கும் 0.01% கூட பொறுத்தம் இல்லை எனினும் "ஆம்..! இதுதான் நான்" என நீங்கள் முழுஅறிவுடன் சுயநினைவுடன் இருக்கும் நிலையில் ஏற்றுக்கொள்வீர்களா..?
.
மைனஸ் ஓட்டு போட்ட பிற சகோதரர்களிடமிருந்தும் (சகோ.சார்வாகன் & 5 others) பொறுப்பான பதிலை இதற்கு நான் எதிர்பார்க்கிறேன்..!

ஜோ/Joe சொன்னது…

//முகமது மற்றும் ஏசு (ஈஸா அலை) ஆகியோர் குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும் இறைத்தூதர்கள் ஆவார்கள், முகமது பற்றி எழுதிவிட்டால் பொங்குவது ஏன் ஏசுவிற்கு பொங்குவதில்லை, ஏசுவின் படத்தை எவர் வேண்டுமானாலும் போடலாமா ? ஒரு இஸ்லாமியருக்கு முகமது மேல் எவ்வளவு அன்பு இருக்கிறதோ அதே அளவுக்கு ஏசுவின் மீதும் இருக்க வேண்டும் அல்லவா ? //

கோவியார் , இதே கேள்வியை முன்வைத்து முன்பு என்னுடைய வலைப்பதிவில் ஒரு விவாதம் நடந்தது ..அதையும் பார்க்கவும்
http://cdjm.blogspot.com/2006/10/blog-post.html

Robin சொன்னது…

பதிவுலகில் கருத்து சுதந்திரத்தை இஸ்லாமியர்கள் பறிக்க அனுமதிக்கக்கூடாது.

ராஜ நடராஜன் சொன்னது…

ஆசிக் அகமது அவர்களுக்கு,

ஒவ்வொருவருக்கும் பொது மேடையாக பதிவுலகில் அவரவர் கருத்துக்களை வைப்பதற்கு உரிமையுள்ளது.இதோ நீங்கள் நாகரீகமாக பின்னூட்டமிடுவது போல் ஏனைய இஸ்லாமிய சகோதரர்களும் பின்னூட்டமோ பதிவோ இட்டால் பார்வையிடுபவர்களோ அல்லது பின்னூட்டமிடுபவர்களோ தங்கள் சார்ந்தோ எதிராகவோ கருத்தை சொல்வார்கள்.அது தவிர்த்து தனி மனித தாக்குதல்களாக தலைப்பும்,பின்னூட்டமிடுவதும் அவரவர் பெயர்கள் கெடுவதோடு மட்டுமல்லாமல் தான் தொழும் மதத்திற்கும் இழுக்கு உண்டாக்குவதோடு இஸ்லாமை தரம் குறைப்பதற்கு இந்த மாதிரி தலிபானிச கருத்துக்களே போதும்.இந்திய,பாகிஸ்தானிய முஸ்லீம்கள் உண்மையான இஸ்லாத்தை கடைப்பிடிப்பதில்லை என்பது அவர்களின் சீற்றத்தை முன் வைப்பதிலிருந்தே வெளிப்படும்.

இக்பால் செல்வன் தனது கருத்தை நாகரீகமாகவே வெளியிட்டிருந்தார்.அதே நாகரீகத்தை எதிர் கருத்திலும் காட்டுவதே இவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது என யோசிக்க வைக்கும்.இஸ்லாம் என்று மட்டுமல்லாது ஏனைய பலவற்றையும் இக்பால் செல்வன் விவாதத்திற்கு வைக்கிறார்,எனக்கு உடன்படாத கருத்தாக இருந்த போதிலும் அவரது நாகரீகமான கருத்துரிமைக்காக அதனை மதிக்கிறேன்.

ராவணன் சொன்னது…

முஸ்லீம்களின் கடவுளுக்குத்தான் உருவம் இல்லை, முகமது நபிக்கும் உருவம் இல்லையா?

அவர் மனிதராக பிறந்து மடிந்த ஒருவர்தானே? அவருக்கு உருவம் என்று ஒன்று இருக்கவேண்டுமே?

saarvaakan சொன்னது…

நண்பர் ஆசிக் அகமது வணக்கம்,
1.
//நாயகம் (ஸல்) அவர்கள் தன்னை உருவப்படுத்துவதை தடுத்தார்கள். //
எந்த மத கட்வுள்களையும் யாரும் பார்த்து வரையவில்லை.திரு ஈசா(இயேசு)ன் உருவம் கூட ஒரு கற்பனை உருவமே.இன்னும் ஆதம், நூஹ், இப்ராஹிம், மூசா,இவர்களை பற்றி பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.முகமதுவின் படம் மட்டும் பயன் படுத்தக் கூடாது என்று ஏன் கூறுகிறீர்கள்?.


இது குறித்து இன்னும் தெரிந்து கொள்ளவே அனைவரும் விரும்புகிறார்களே தவிர யாரையும் புண்படுத்த அல்ல.கலத்திற்கேற்றபடி பல வழக்கங்கள் பல மதங்களிலும் மாற்றப்படுவதும் அனைவரும் அறிந்ததே.வணங்குவதற்கு அல்லாமல்,இஸ்லாமல்லாத பிற மதத்தவர் அவருடைய படத்தை அவரை குறிக்க பயன் படுத்தக் கூடது என்பதை 610 முதலே நடைமுறையில் இருந்து வருகிறது,என்பதை வலியுறுத்தும் ஒரு இஸ்லாமிய அறிஞரின் ஆய்வுக் கட்டுரை தாருங்கள்.


அந்த படம் நண்பர் இக்பால் செல்வனின் கற்பனை அல்ல.( 632_1900) இடைப்பட்ட காலத்தில் அவருடைய வாழ்வில நடந்ததாக சொல்லப் பட்ட பல சம்பவங்கள் இஸ்லாமிய ஆட்சி நடக்கும் போதே இஸ்லாமியர்களாலேயே வரைய‌ பட்டிருக்கின்றன.ஷியா முஸ்லிம்கள் மரியாதையான உருவ படங்களுக்கு ஆட்சேபனை இல்லை யென்று சொல்லுவதாகவும் செய்தி உண்டு.அதில் ஒன்றுதான் இ.செ.வின் பதிவில் உள்ளது.இதற்கு சுட்டி அளித்து விளக்க விரும்பவில்லை.

யார் மனமும் புண்படவேண்டாம்.ஒரு சமாதான தீர்வுக்கு வருவதையே விரும்புகிறேன்.

suvanappiriyan சொன்னது…

சார்வாகன்!

//இது குறித்து இன்னும் தெரிந்து கொள்ளவே அனைவரும் விரும்புகிறார்களே தவிர யாரையும் புண்படுத்த அல்ல.//

1341. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிஸினியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிஸினியா சென்றிருந்த உம்மு ஸலமா(ரலி) உம்மு ஹபீபா(ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி(ஸல்) அவர்கள், 'அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரின் கப்ரின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரின் உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடம் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!" என்று கூறினார்கள்.
Volume :2 Book :23

2225. ஸயீத் இப்னு அபில் ஹஸன் அறிவித்தார்.
நான் இப்னு அப்பாஸ்(ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து, 'அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்' எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), 'நபி(ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். 'யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர்உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!' என்றார்.
Volume :2 Book :34


3351. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அங்கு இப்ராஹீம்(அலை) அவர்களின் உருவப் படத்தையும் கண்டார்கள். உடனே, இந்தக் குறைஷிகளோ உருவம் உள்ள வீட்டில் (இறை கருணையைக் கொணரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்களே! இது இப்ராஹீமின் உருவம். (இதில், அவர் தம் கையில் இருக்கும் அம்புகளால்) குறி சொல்பவராக நிற்கிறாரே அவருக்கென்ன? (அவருக்கும் குறி சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?)" என்று கூறினார்கள்.
Volume :4 Book :60

மரம், செடி, வீடு, போன்ற மனிதர்கள் விலங்குகள் அல்லாத உருவங்களை வரைவது தடுக்கப்பட வில்லை. இஸ்லாத்தில் மதிப்பு மிக்க உருவப்படங்கள் வரைவதை முகமது நபி தடுத்ததற்கான காரணம் பின்னாளில் அந்த உருவங்களுக்கு இறைத் தன்மை கொடுக்கப்பட்டது தான். ஏசு நாதர் ஒரு தூதர்தான் என்பது அனைவருக்கும் தெரியும். மேரி அவருக்கு மட்டுமே அன்னை என்பதும் தெரியும். ஆனால் ஒவ்வொரு தேவாலயங்களின் நிலை என்ன? தேவாலயம் என்ற பெயர் போய் மாதா கோவில் என்ற பெயர் நிலை பெற்று விட்டது. இவை எல்லாம் எப்படி ஏற்பட்டது? ஏசுவையும் மேரியையும் கற்பனை படங்களாக வரைந்து மரியாதை செய்ய ஆரம்பித்து முடிவில் கர்த்தரை மறந்து விட்டார்கள். இந்த நிலை எந்த நிலையிலும் இஸ்லாத்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனை பின்னூட்டங்களும், இத்தனை பதிவுகளும்.

இந்து மதத்திலும் இத்தனை கடவுள்கள் எப்படி வந்தது? அரசனையும் ஊர் நாட்டாண்மையையும் வசதி படைத்த ஊர் பெரியவர்களையும் படங்களாகவும் சிலைகளாகவும் நமது முன்னோர்கள் மரியாதை நிமித்தம் செதுக்கியும் வரைந்தும் வைத்தார்கள். அதன் பலனை இப்போது நமது நாடு அனுபவித்து வருகிறது.

முகமது நபியின் அடக்கத்தலத்தில் எப்போதும் இரண்டு போலீசார் நின்று கொண்டிருப்பர். மதினாவுக்கு செல்லும் இந்திய பாகிஸ்தானிய பங்களாதேஷ முஸ்லிம்கள் பக்தி மேலீட்டால் அங்கு கைகளை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். உடன் அந்த காவலர்கள் அந்த மக்களை தடுத்து 'இங்கு பிரார்த்தனை செய்யக் கூடாது! அருகில் உள்ள பள்ளியில் சென்று இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்று அவர்களை அருகில் உள்ள பள்ளிவாசலின் பக்கம் அனுப்புவார்கள்.

1330. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்" என்று கூறினார்கள்.
பயம் மட்டும் இல்லையாயின் நபி(ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.
Volume :2 Book :23

பெயரில்லா சொன்னது…

நியாயமானக் கேள்விகளுக்கு நியாயமான பதில்கள் வரும் என நம்புவது நியாயமில்லை என்பதை பதிவுலகில் நான் கண்ட உண்மை ... !!!

கும்பலில் கோவிந்தப் போட்டால் - லட்டு இலவசம். கோவிந்தன யார் எனக் கேட்டால் - குட்டி இலவசம்.

ஹிஹி !!!

@ கோவி. கண்ணன் - எனதுக் கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் இப்பதிவுகளுக்கு நன்றிகள்.

இண்ட்லியில் பதிவை இணைக்கவில்லையா ?

பெயரில்லா சொன்னது…

நியாயமானக் கேள்விகளுக்கு நியாயமான பதில்கள் வரும் என நம்புவது நியாயமில்லை என்பதை பதிவுலகில் நான் கண்ட உண்மை ... !!!

கும்பலில் கோவிந்தப் போட்டால் - லட்டு இலவசம். கோவிந்தன யார் எனக் கேட்டால் - குட்டு இலவசம்.

ஹிஹி !!!

@ கோவி. கண்ணன் - எனதுக் கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் இப்பதிவுகளுக்கு நன்றிகள்.

இண்ட்லியில் பதிவை இணைக்கவில்லையா ?

குட்டி என்பதை குட்டு என வரவேண்டும் .. பொருள் மாறி நித்தியானந்தா ஸ்டோரிப் போல ஆகி விட்டது ..ஹிஹி ..

@ சார்வாகன் - தங்களது கருத்தினை வழிமொழிகின்றேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நாயகம் (ஸல்) அவர்கள் தன்னை உருவப்படுத்துவதை தடுத்தார்கள்.//

அது இஸ்லாமியர்களுக்கு சொல்லியதாக இருக்கும், பிறரை கட்டுப்படுத்தும் அதிகாரம் முகமது நபிக்கு இல்லையே.

முகமது சொல்லிவிட்டார் என்பதற்காக பிறமதத்தினர் அல்லா ஹு அக்பர் சொல்லுவதில்லையே. பிரச்சனை முகமது நபியின் உருவத்தை கொச்சைபடுத்தி இருந்தால் மட்டுமே. மற்றபடி ஒரு அரபுக்காரர் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்வதற்கு யாரையும் தடைசெய்ய முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//உதயம் said...
அந்தப்படத்தைப் போட்டுத்தான் இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டுமா என்ன? என்பது தான் என் நிலைப்பாடு.//

என் மதத்துக் கடவுள் தான் கடவுள் மற்றெதெல்லாம் சாத்தான் என்று சொல்லும் உரிமையை மட்டும் யார் கொடுத்தது ? பிறமதங்களை ஒப்பிடாமல் மதங்கள் எதுவுமே இல்லை.

முகமது நபி படத்தை தடுப்பவர்கள் ஏன் ஈஸா நபியின் படத்தை தடுக்க முடிவதில்லை ?

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் மிகவும் மதித்து போற்றி நேசிப்பவரை அல்லது உங்கள் குடும்பத்தாரை அல்லது உங்களை... கற்பனையாக... உங்களை & உங்கள் புகைப்படத்தை என் வாழ்நாளில் ஒருபோதுமே நான் பார்த்தறியாமலேயே எவ்வித ஆதாரமுமின்றி என் இஷ்டத்துக்கு ஒரு படத்தை... "இவர் இப்படித்தான் இருந்திருப்பார்" என கற்பனையாக நான் வரைந்து, "இதுதான் நீங்கள்" என்று நான் சொன்னால்... அதில் உங்களுக்கும் அந்த படத்துக்கும் 0.01% கூட பொறுத்தம் இல்லை எனினும் "ஆம்..! இதுதான் நான்" என நீங்கள் முழுஅறிவுடன் சுயநினைவுடன் இருக்கும் நிலையில் ஏற்றுக்கொள்வீர்களா..?
.//

ஒரு விழுக்காடு கூட பொறுத்தமில்லாதவர் என்பதை உடையவர் மட்டுமே சொல்ல முடியும். இந்தியர்களின் பொதுவான முகம் இது என்று இந்தியரை பார்த்த ஒருவர் வரைவது கடினமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவியார் , இதே கேள்வியை முன்வைத்து முன்பு என்னுடைய வலைப்பதிவில் ஒரு விவாதம் நடந்தது ..அதையும் பார்க்கவும் //

இந்த இடுகை எழுதும் போது உங்கள் இடுகை குறித்த நினைவு இருந்தது

கோவி.கண்ணன் சொன்னது…

//
@ கோவி. கண்ணன் - எனதுக் கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் இப்பதிவுகளுக்கு நன்றிகள்.

இண்ட்லியில் பதிவை இணைக்கவில்லையா ?//

நான் விடுமுறையில் சென்றதால் பதிவை எழுதிய உடன் தமிழ்மணத்தில் இணைக்கவே நேரமிருந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆதாரமின்றி எந்த அவதூறையும், பொய்யான செய்திகளையும் கற்பனையாக எவர்மீதும், எந்த வரலாறிலும் இட்டுக்கட்டலாமா..?//

பறவை யானைக் கூட்டத்தை துறத்தியதாகக் கூட கதைகள் உண்டு, இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று எப்போதாவது கேட்டிருக்கிறீகளா ?

கோவி.கண்ணன் சொன்னது…

இந்தப் பதிவை இட்ட உடன் 2 - 3 பாலோயர்கள் நீங்கிக் கொண்டார்கள், கோவி.கண்ணன் நடுநிலை வேடம் கலைந்தது என்று நினைத்தார்களோ !
:)

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி),
ஆதாரம் : புகாரி. //

----------
அண்டை வீட்டாருக்குத் ( பதிவருக்கு ?. ) தொல்லை தரவேண்டாம்.

//நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்”//

Aashiq Ahamed சொன்னது…

சகோதரர் கோவிக்கண்ணன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களுடைய இந்த பதிவில் நான் கமெண்ட் போட்டு சென்றதோடு சரி இதனை subscribe செய்யவில்லை. அதனால் இங்கு நடந்ததை பார்க்கவில்லை. ஆனால் இப்போது மற்றொரு முறை பார்த்து அதிர்ந்து விட்டேன்.

தாங்கள் கொடுத்த இந்த
---
http://en.wikipedia.org/wiki/Muhammad:_Legacy_of_a_Prophet
http://video.google.com/videoplay?docid=-5588678537059723932#
---

இரண்டு லின்குகளுக்கும் மேலே பதில் சொல்லிவிட்டேன். அதாவது தாங்கள் கொடுத்த லிங்க்குகளில் நாயகம் (ஸல்) அவர்களது படம் உபயோகப்படுத்தபடவில்லை என்று.

இப்போது மற்ற லிங்க்குகளை பார்த்தேன். அதிர்ந்துவிட்டேன்

---
மற்றொரு டாக்குமெண்ட்ரி
http://www.sodahead.com/united-states/have-anyone-seen-a-movie-of-muhammed/question-748903/?link=ibaf&imgurl=http://www.iranian.com/main/files/blogimages/message.jpg&q=Muhammad:_Legacy_of_a_Prophet
http://www.iranian.com/main/files/blogimages/message.jpg
http://en.wikipedia.org/wiki/Mohammad,_Messenger_of_God
----

இதில் உள்ள அந்த போஸ்டரில் உள்ள படம் அதில் நடித்த anthony quinn அவரக ளது படம். அவர் ஏற்று நடித்த காதாபாத்திரம் "ஹம்சா" என்பது. அதாவது நபியுனுடைய உறவினர் கதாபாத்திரம்.

இந்த படத்தில் நாயகம் (ஸல்) அவர்களின் படம் வராது. இந்த படத்தின் துவக்கிலேயே அதனை தெளிவாக சொல்லிவிடுவார்கள்.

ஆக, தாங்கள் கொடுத்த எந்த லின்கிலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களது படம் இல்லை. தங்களின் அறியாமை இந்த பதிவை படித்தவர்களை திசை திருப்பி இருக்கோமோ என்று அஞ்சுகின்றேன்.

சொல்ல வேண்டியது கடமை. சொல்லிவிட்டேன். இனி தாங்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள்.

தங்கள் மீதும் தங்களின் குடுமப்த்தினர் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆக, தாங்கள் கொடுத்த எந்த லின்கிலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களது படம் இல்லை. தங்களின் அறியாமை இந்த பதிவை படித்தவர்களை திசை திருப்பி இருக்கோமோ என்று அஞ்சுகின்றேன். //

விக்கியில் முகமதுநபி வாழ்க்கை வரலாறு பற்றிய குறிப்பில் முகமது படம் இருக்கு, அதற்கு எந்த இஸ்லாமிய அரசும் எதிர்ப்பு தெரிவித்து அந்த பக்கத்தை தடை செய்தது போல் தெரியவில்லை,இஸ்லாமிய அரசுகளுக்கே இல்லாத அக்கரை தங்களுக்கு இருப்பதாக புலம்புவது ஞாயம் அற்றது.

கோவி.கண்ணன் சொன்னது…

//அண்டை வீட்டாருக்குத் ( பதிவருக்கு ?. ) தொல்லை தரவேண்டாம்//

அண்டை வீட்டார் என்றால் அவர் மற்றொரு இஸ்லாமியரோ, அரபு தேசத்தில் அண்டை வீட்டார் வேறு யாரும் இருப்பார்களா ?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

தங்கள் மீது சாந்தி நிலவட்டும் சகோ.கோவி கண்ணன்.

மீண்டும் மீண்டும் பொய்யே சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி சகோ.கோவி கண்ணன்..? சென்சிடிவ் விஷயங்களிலாவது கொஞ்சம் மொக்கை போடாமல் சீரியசாக இருங்கள் சகோ.


இப்படித்தான் தலை குப்புற விழுந்தாலும் எங்கள் மீது மண் ஒட்டவில்லை என்பதா..?

இது நபிபடம் என்று, நீங்கள் ஒரு லிங்க் கொடுதீர்கள்...

சகோ.ஆஷிக் வந்து அது நபி இல்லைன்னு ப்ரூவ் பண்ணிட்டார்.

தவறு நிரூபிக்கப்பட்டால் மனுஷன் தன் தப்பை ஒத்துக்கனும்.

ம்ஹூம்... இல்லை. நீங்கள் ஒத்துக்கவில்லை.

ஆனால், உங்கள் லிங்க் தவறென்று மட்டும் உள்ளூர உணர்ந்து, இன்னொரு புதிய லிங்க் கொடுத்தீர்கள். இது தான் நபி என்று.

அதையும்...

"அங்கே சென்றால் நபி படமே இல்லையே... நபியின் உறவினர் படம் அல்லாவா அது... என்று கூறி எதுக்கு இந்த பொய் லிங்க்..?"

....அப்டின்னு சகோ.ஆஷிக் உங்களை கேட்க,.. இப்பவும் உங்கள் தப்பை நீங்கள் ஒத்துக்கலை.

ஆணா, அந்த லிங்க் ரொம்ப அவமானம் ஆகிவிட்டது என்று நைசாக முகத்தில் வாயினுள் ஒட்டி இருக்கும் மண்ணை எல்லாம் துடைத்துவிட்டு... (நான் குப்புற விழலியே..)...இப்போ இங்கே //முகமது படம் இருக்கு// என்று கூறி இன்னொரு புதிய விக்கிபீடியா லிங்கை கொடுத்து இருக்கிறீர்கள்.


அதில் நான் சென்று பார்த்தால்...


ஹஜருள் அஸ்வத் கல்லை எப்படி காபாவில் பொருத்தி கட்டினார்கள் என்று அந்த செயலை --சிவில் இன்ஜினியரிங் டெக்னிக்கை--விளக்கும் ஒரு விளக்கப்படம் (depiction)அது...!

அதில் 'சிறுவனான(!)முகமதையும்' மற்றவர்களையும் வரைந்து இருக்கிறார்கள்.

ஹி.. ஹி...

இன்னொன்றில், முதல் இறைசெய்தி வந்த வானதூதர் ஜிப்ரீல் மற்றும் ஹிரா குகையுடன் காட்சிப்படுத்துகின்றனர்.

ஆக இவையும் நபி படம் இல்லை. அவை depiction கள் என்று அவற்றுக்கு கீழேயே விக்கிபீடியா தெளிவாக கூறுகிறது.

முதலில் depiction- என்றால் என்ன என்று தெரியுமா?

இதில் depiction-க்கு அதே உங்களின் விக்கிபீடியா விளக்கம்:

Depiction is meaning conveyed through pictures.

A picture resembles its object in a way a word or sound does not. Resemblance is no guarantee of depiction, obviously.

(அதாவது இங்கே படம் அல்ல பிரதானம்... அந்த செய்தி/சம்பவம் தான் முக்கியம்.)

எனக்கு இப்போது ஒரு சந்தேகம் சகோ...

நாத்திகம் என்பதுக்கும் மனிதப்பண்புக்கும் சிந்தனைக்கும் பகுத்தறிவுக்கும் ஒன்றுக்கொன்று அணுவளவேனும் தொடர்பு ஏதும் இருக்கிறதா..?

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

//நாத்திகம் என்பதுக்கும் மனிதப்பண்புக்கும் சிந்தனைக்கும் பகுத்தறிவுக்கும் ஒன்றுக்கொன்று அணுவளவேனும் தொடர்பு ஏதும் இருக்கிறதா..?//

//ரொம்ப அவமானம் ஆகிவிட்டது என்று நைசாக முகத்தில் வாயினுள் ஒட்டி இருக்கும் மண்ணை எல்லாம் துடைத்துவிட்டு... (நான் குப்புற விழலியே..)//

---------


நா ( ஆ) த்திகம் என்பதுக்கும் மனிதப்பண்புக்கும்....??

கோவி.கண்ணன் சொன்னது…

//(அதாவது இங்கே படம் அல்ல பிரதானம்... அந்த செய்தி/சம்பவம் தான் முக்கியம்.)
//
இதைத்தான் இக்பால் செல்வனும் குறிப்பிடுகிறார்.

//....அப்டின்னு சகோ.ஆஷிக் உங்களை கேட்க,.. இப்பவும் உங்கள் தப்பை நீங்கள் ஒத்துக்கலை.//

வாழ்ந்த ஒரு அரபுக்காரர் இப்படித்தான் இருப்பார் என்கிற கற்பனையை வரைய பிற மதத்தினருக்கு தடை விதிக்க ஒன்றும் இல்லை.


//எனக்கு இப்போது ஒரு சந்தேகம் சகோ...

நாத்திகம் என்பதுக்கும் மனிதப்பண்புக்கும் சிந்தனைக்கும் பகுத்தறிவுக்கும் ஒன்றுக்கொன்று அணுவளவேனும் தொடர்பு ஏதும் இருக்கிறதா..?//

வெடிகுண்டுக்கும் இஸ்லாமுக்கும் தொடர்பில்லைன்னு கூட சொல்றாங்க ஆனா யாரும் ஒப்புக் கொள்வதில்லை தானே, இஸ்லாம் சார்பில் இயங்கும் தீவிரவாதிகளைப் போட்டுத் தள்ளவும் பிற மதத்தினர் முன்வந்தால் தான் முடிகிறது சகோ.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

சகோ.கோவி,

இக்பால் செல்வன் போட்ட படம் ஒரு செயலை விளக்கும் படம் இல்லை.
'இவர்தான் அவர்' என்று சுட்டும் படம்.

பதிவில் கூறிய ஒரு செயலை விளக்கிக்காட்டும் ஒரு படமாக அது இல்லை. That is a picture. Not a depiction with true disclaimer.

அதற்கு கீழ் சகோ.இக்பால் செல்வன்...'இது கற்பனையானது...' 'உண்மையில்லை..', 'இந்த ஓவியத்துக்கும் நபிக்கும் சம்பந்தம் இல்லை...', 'காலத்தால் மிகவும் பிந்தைய கற்பனை இது' என்று பிரகடனப்படுத்தி இருந்திருக்க வேண்டும். படிப்போர், "அட.. அப்படியா.... இவர்தானா நபி" என்ற தவறான புரிதலில் வீழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அந்த படம் இல்லமலே கூட பதிவு போட்டிருக்க முடியும்.

மீண்டும் மீண்டும் உங்கள் எண்ணங்கள் இதே பாதையில் பயணிப்பது அயற்சியை ஏற்படுத்துகிறது.

இன்னொருவரின் ஒரு தவறை நியாயப்படுத்த தொடர்ச்சியான எத்தனை சப்பைக்கட்டுக்கள் கூறுகிறீர்கள்..!!!

அவை அத்தனையும் பொலபொல வென உதிர்கின்றன. இனி என்னத்த சொல்ல..?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

சகோ.கோவி கண்ணன்...

விக்கிபீடியா செயல் கூட கண்டிக்க பட்டிருக்கும்...

எப்போது..?

அந்த பக்கத்தில்...
top right-இல் முஹம்மது நபி பயோடேட்டா கட்டத்திற்கு மேல் பொதுவாக இவர் இன்னார்தான் என்று சுட்டும் இடத்தில் ஒரு depiction-ஐ போட்டிருந்திருதால்...

ஆனால், நீங்கள் கொடுத்த விக்கிபீடியா சுட்டியில்...
அங்கே வெறுமனே நபிக்கு யாதொரு படமும் போடாமல்...

/////
Muhammad ibn ‘Abdullāh
(அரபியில்...முஹம்மத் ஸல்..)
The name Muhammad written in Thuluth, a script variety of Islamic calligraphy.
/////

---என்றுதானே எழுதி இருக்கிறார்கள்...?

இதைவிட நான் வேறு விளக்கம் தனியாக என்ன கூற வேண்டும்..?

இக்பால் செல்வன் இந்த இடத்தில்தான் அந்த படத்தை போட்டிருந்தார்.

இப்போதாவாது புரிகிறதா சகோ...?

இரண்டுக்குமுள்ள வித்தியாசம்..?

கோவி.கண்ணன் சொன்னது…

//அவை அத்தனையும் பொலபொல வென உதிர்கின்றன. இனி என்னத்த சொல்ல..?//

என்னத்த கொட்டுது, இணையத்தில் முகமது நபி படம் என்று ஆங்கிலத்தில் தேடினால் ஆயிரம் கொட்டுது அதுல கண்ணியமான ஒன்றை எடுத்து அவர் போட்டார். உங்களுக்கு பிடிக்காத தருகாவிற்கு போகாதது போல் நீங்க விரும்பினால் அதை புறக்கணிக்கலாம் அவ்வளவு தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால், நீங்கள் கொடுத்த விக்கிபீடியா சுட்டியில்...
அங்கே வெறுமனே நபிக்கு யாதொரு படமும் போடாமல்... //

விக்கிப்பீடியாவில் படம் இருக்கு, ஆனால் கீழே இருக்கு, தனிப்படமாக இல்லை. படம் இருக்கா இல்லையா ? அதைச் சொல்லுங்க, அவர் தலைப்பில் போட்டார், இங்கே போடவில்லை என்பதெல்லாம் பிரச்சனை இல்லை, ஆனால் நீங்க அப்படி ஒரு படமே இல்லை, போடுவது தவறு என்று சொல்லிக் கொண்டு இருந்தீர்கள், முகமது என்று பெயர் வைத்துக் கொள்ளும் போது படம் பார்த்துவிட்டு வணங்கத் துவங்கினால் இணை வைத்தாகிவிடும் என்றால் அல்லாவின் பெயரைத் தவிர்த்து முகமதுவின் பெயரையும் பெயராக வைத்துக் கொள்வது ஏன் ? அல்லாவுக்கு நிகர் முகமது என்று எங்களைப் போன்றவர்களை நினைக்க வைப்பவர்களே உங்கள் பெயர்கள் தான்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்