பின்பற்றுபவர்கள்

2 ஜூன், 2011

சோ இராமசாமியும் சுவனப்பிரியனும் !

பெண்கள் கார் ஓட்டுவதற்கு சவுதி அரேபியா ஏன் தடைவிதித்திருக்கிறது என்பதற்கு அறிவுப்பூர்வமான ஆராய்ச்சி நடத்தி இருக்கிறார் திருவாளர் சுவனப்பிரியன். இவரது புனைப்பெயரிலேயே இவர் எவ்வளவு சுவனத்தின் மீது ஆசை கொண்டிருக்கிறார் என்பது தெளிவு, நண்பருக்கு சுவனத்தில் நித்திய கன்னிகைகள் தேவைக்கு மிஞ்சியே கிடைக்க வாழ்த்துகிறேன். சுவனத்தின் நித்திய கன்னிகைகளை நாம் மறந்தாலும் இவரது புனைப்பெயரே இவர் பதிவிடும் பொழுதெல்லாம் அதை நினைவுபடுத்திவிடுகிறது. பிரச்சனை அதுவல்ல.

*****

பெண்கள் கார் ஓட்டுவதை சவுதி அரசு தடைசெய்வதற்கு காரணம் பெண்களின் பாதுகாப்புக் குறித்ததாம். அதாவது தனியாக கார் ஓட்டிச் சென்று ஏங்கேயாவது காமுகர்களிடம் சிக்கிக் கொண்டால் அந்த பெண்களின் கதி என்ன ஆகும் என்று சவுதி அரசு கவலைப்பட்டே இந்த சட்டத்தை சவுதி அரசு இயற்றி நடைமுறைப்படுத்தி வருவதாக இவரே ஊகமாக சொல்லி இருக்கிறார், சவுதி அரசு பெண்கள் கார் ஓட்ட தடை குறித்த காரணங்களை சுவனப்பிரியன் சொல்வது போல் எங்கும் குறிப்பிடவில்லை. இதற்கு அடைப்படைக்காரணம் பெண்(கள்) அல்லது மனைவி(கள்) தனியாக கணவர் துணையின்றி வெளியே செல்லக் கூடாது என்கிற குரான் அறிவுறுத்தல் மட்டும் தான். மேலும் குரான் உருவான காலத்தில் கார் என்று ஒரு வாகனமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குரான்படி பார்த்தாலும் பெண்கள் கார் ஒட்டுவதற்கு அவர் கணவர் கூடவே செல்லும் போது தடை ஏதும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம், சவுதி அரசு குரானைக் காரணம் காட்டி பெண்கள் கார் ஓட்டுவதை தடை செய்திருப்பது முற்றிலும் ஆணாதிக்க மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலையே. இதை எந்த ஒரு சப்பைக்கட்டாலும் சரி என்று சொல்லிவிடமுடியாது. சவுதி தவிர்த்து ஏனைய மலேசியா, இந்தோனேசியா, துபாய் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி இருப்பதை ஒப்பு நோக்குகையில் குரானை சாக்கிட்டு சவுதி தடை விதித்திருப்பதில் எந்த ஒரு ஞாயமும் இல்லை.

பெண்கள் கார் ஓட்டுவதை தடுப்பதற்கு சவுதி அரசு மாற்று வழிகளை அனுமதித்திருப்பதில் மிகவும் தரக்குறைவான ஒன்று, பெண்களுக்கு ஓட்டுனர்களாக இருப்பவர்கள் உறவுக்காரர்களாக இருந்தால் தடை ஒன்றும் இல்லை, அப்படி உறவுக்காரர்களாக இல்லாதவர்கள் ஓட்டுனர்களாக அமைத்துக்கொள்ள குறிப்பிட்ட பெண்கள் ஓட்டுனராக ஆக இருப்பவருக்கு முலைப்பால் கொடுக்க வேண்டுமாம். ஒருமுறை முலைப்பால் குடித்துவிட்டால் பிறகு ஓட்டுனர் இரத்த உறவுக்குள் வந்துவிடும் அந்நியர் அல்லாதவர் ஆகிவிடுகிறாராம். கார் ஓட்ட அனுமதிப்பதை தடைசெய்ய இது போன்ற இழிசெயல்களை நடைமுறையில் வைத்திருப்பது எவ்வளவு கீழான செயல் என்பதை சுவனப்பிரியன் தெரிந்தும் அதைக் கட்டுரையில் குறிப்பிடவே இல்லை.

பாதுகாப்புக் காரணங்களுக்காக கார் ஓட்ட அனுமதியில்லை என்றால் நகருக்குள் பேருந்து ஓட்ட அனுமதித்து பெண்கள் ஓட்டுனர் ஆவதற்கு எந்த தடையுமில்லை என்று சவுதி முன்மாதிரியாக இருந்திருக்கலாமே. இவரின் சப்பைக்கட்டின்படி வெளியே தனியே செல்லும் பெண்களுக்கு என்ன என்ன பாதுகாப்புக் குறைபாடு காரணங்கள் இருக்கிறதோ அதே காரணம் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கும் இருக்கும் என்பதை இவர் சிந்திக்கவே இல்லை.

மேலும் திரு சுவனப்பிரியனின் பின்னூட்ட பொன்மொழிகளில் ஒன்று கிட்டதட்ட சோ இராமசாமியின் பெண்கள் குறித்த கூற்று போலவே அமைந்திருக்கிறது.

"என்னதான் நாம் சமத்துவம் பேசினாலும் ஆணும் பெண்ணும் உடல் ரீதியாக ஒரே அளவு கோலை பல இடங்களில் நாம் கடை பிடிப்பதில்லை. மேலாடை இல்லாமல் ஆண்களாகிய நாம் சுதந்திரமாக வர முடியும். அதே அளவு கோளோடு பெண்களும் வெளியில் வர முடியுமா? நாம் அனுமதிக்க மாட்டோம். மூட்டை தூக்குதல், பாரங்களை இழுத்தல் போன்ற உடல் சார்ந்த வேலைகளை நாம் பெண்களை செய்ய அனுமதிப்பதில்லை. ஏனெனில் அவர்களின் உடல் மென்மையானது. ரெஸ்லிங்கில் விளையாடும் பெண்களை பார்த்தால் அங்கு பெண்மை நமக்கு தென்படுகிறதா? ஆணுக்கு பெண்ணின் மேல் உள்ள ஈர்ப்பும் இதனால் குறைந்து விடும். "

இதில் " ரெஸ்லிங்கில் விளையாடும் பெண்களை பார்த்தால் அங்கு பெண்மை நமக்கு தென்படுகிறதா? ஆணுக்கு பெண்ணின் மேல் உள்ள ஈர்ப்பும் இதனால் குறைந்து விடும். " என்பது தவிர்த்து இவை 100க்கு 100 சோ இராமசாமியின் பொன்மொழிகள் ஆகும்.

ரெஸ்லிங்மட்டுமல்ல, பலுத்தூக்கும் பெண்களுக்கும் உடல் கட்டுக்கட்டாகத்தான் இருக்கும். ஓட்டப்பந்தயங்கள், மாரத்தான் பெண்களுக்கும் கூட உடல் தசைகள் இறுக்கமாகத்தான் இருக்கும். இவர் கூற்றுப்படி விளையாட்டுத் துறையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் பெண்மையின் மென்மை இல்லாமல் ஆண்களைப் போன்று ஆனவர்களாம், இவர்களைப் பார்த்து ஈர்ப்பு வராதாம். அப்படி என்றால் அவர்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்களெல்லாம் ஆண்களே இல்லை என்று இவர் சொல்லுகிறார் போல. கட்டுமஸ்தான உடல் உடைய ஆண்களை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வோம் என்று பெண்கள் கூறினால் 99 விழுக்காடு ஆண்களுக்கு திருமணமே ஆகாது. அல்லது ரெஸ்லிங் ஆண்களின் உடல்கட்டைப் பார்த்து பெண்களுக்கு ஈர்ப்பு வருது என்று ரெஸ்லிங்க் ஆண்ககளின் உடல்பயிற்சியை தடைச் செய்யச் சொல்லுவாரா ?

சவுதி கார் ஓட்டுவதை தடை செய்திருப்பதற்கு ஒட்டு மொத்தமாக விளையாட்டுத் துறையில் ஈடுபட்டிருக்கும் பெண்களைப் பற்றி மிகக் கேவலமாக கருத்தொன்றை உதிர்த்திருக்கிறார், இவர் ஒன்றும் இஸ்லாமுக்கு முன் மாதிரியோ பின்மாதிரியோ கிடையாது என்பதால் நான் இவரின் கருத்தை இஸ்லாமிய கருத்தாகப்பார்க்காமல் இஸ்லாமிய அடிப்படை வாதியின் கருத்தாகவே பார்த்து எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்தான் அல்குரானை அன்றாடம் ஓதுவர் ஆகிற்றே இவருக்கு ஏன் ரெஸ்லிங் பெண்கள் மீது பார்வை போனது ? அல்லாவுக்கே வெளிச்சம். குரான் கட்டுப்பாட்டின் படி ரெஸ்லிங் பெண்கள் சுவனம் புகமுடியாது என்பதால் இவருக்கு கிடைக்கும் நித்திய கன்னிகைகளில் ரெஸ்லிங்க் பெண்கள் இருக்கமாட்டார்கள் என்று நம்பி ரெஸ்லிங்க் பெண்கள் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

இன்சா அல்லா...........!

பலவித சமூக பழமை வாதக்கருத்துகளில் பார்பனிய அடிப்படை வாதிகளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் வேறுபாடே இல்லை. குறிப்பாக ஓரிறைக் கொள்கையை வழியுறுத்த சுவனப்பிரியன் போன்றோர் இந்துவேதங்களில் இருந்து மேற்கோள் காட்டுவதில் இருந்து கூட இதனை தெரிந்து கொள்ளலாம். ஹுசைனம்மா உள்ளிட்டோர் கூட இவரது கருத்துகளில் சிலவற்றை ஆதரிப்பது இவருக்கு டானிக் கொடுத்தது போல் இருப்பதால் இவர் கண்டபடி கருத்துகளை திணித்துவருகிறார் என்பது கவலை அளிக்கிறது, இவரது கருத்துகளினால் இஸ்லாம் ஒரு அடிப்படைவாத மதம் என்றே மீண்டும் மீண்டும் பிறமதத்தினரை எண்ண வைத்துவிடுகிறது என்பதை இஸ்லாமிய பதிவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

சுவனப்பிரியனின் ஆணாதிக்க கருத்துகளை பின்னூட்டத்தில் பொடி(புடை)த்த பதிவர் இக்பால் செல்வனுக்கு பாராட்டுகள்.

பின்குறிப்பு : திரு சுவனப்பிரியன் உங்கள் மீது எனக்கு எந்த காழ்புணர்வும் இல்லை, விமர்சனங்களெல்லாம் உங்களின் கீழான கருத்துகளின் மீது தான். பார்பனிய அடிப்படை வாதிகளுக்கும் இதைத்தான் நான் செய்கிறேன்.

25 கருத்துகள்:

குடுகுடுப்பை சொன்னது…

ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதியை விமர்சிக்க சம்பந்தமே இல்லாமல் பார்ப்பானியத்தை, சோவை துணைக்கழைத்திருக்கிறீர்கள், பார்ப்பானிய இந்து அடிப்படைவாதியை விமர்சிக்க சம்பந்தமே இல்லாமல் இஸ்லாமிய அடிப்படைவாதம்/ வாதியை துணைக்கழைத்து கணக்கை நேர் செய்து விடுவீர்கள் என்று நம்புகிறேன்.

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

நல்லவேளை கல்பனா சாவ்லா இஸ்லாமியர் இல்லை. இந்தியாவிலும் இல்லை..

பெண்களை இன்னும் அடிமையாக நடத்தும் மனப்பான்மை எப்ப குறையும்?.. ஆணுக்கு பயம் நீங்கினால் மட்டுமே..

கடத்தப்படுவாள் என்றால் கராத்தே சொல்லிக்கொடுங்க.. அல்லது துப்பாக்கியையோ ஆசிட் ஸ்பிரேயோ கொடுத்து தற்காத்துக்கொள்ள பழக்குங்கள்.. அதைவிட்டு இப்படி முட்டாள்தனமான சட்டம் போட்டு அமுக்கி வைத்தால் ஒருநாள் வெடித்து கிளம்பும்.. நாள் வெகு தொலைவில் இல்லை..:)

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

பதிவுலகில் இதை தவறு னு சொல்லக்கூடிய இஸ்லாமிய பெண் பதிவர்கள் இருக்காங்களா என்ன?..

இருந்தா சொல்லுங்க ..

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கடத்தப்படுவாள் என்றால் கராத்தே சொல்லிக்கொடுங்க..//

அவருதான் பெண்மையின் மென்மை போய்விடும் ஈர்ப்பு வராதுங்கிறாரே.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// குடுகுடுப்பை said...
ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதியை விமர்சிக்க சம்பந்தமே இல்லாமல் பார்ப்பானியத்தை, சோவை துணைக்கழைத்திருக்கிறீர்கள், பார்ப்பானிய இந்து அடிப்படைவாதியை விமர்சிக்க சம்பந்தமே இல்லாமல் இஸ்லாமிய அடிப்படைவாதம்/ வாதியை துணைக்கழைத்து கணக்கை நேர் செய்து விடுவீர்கள் என்று நம்புகிறேன்.//

அவர் குறிப்பிடும்,

"சிலரை மேலானவர்களாகப் படைத்தான் அவரவருக்கான நற்கூலி ஏற்றபடி கொடுக்கப்படும்" என்கிற கூற்றிற்கும்.

பார்பனர்களை பிரமணர்களாக முகத்திலிருந்து படைத்து பெருமை செய்திருக்கிறான், சூத்திரர்கள் கடமையைச் செய்தாலே சொர்கம் புகுந்துவிடுவார்கள்" என்கிற பார்பன அடிப்படைவாதிகளின் கூற்றிற்கும் என்ன வேறுபாடு ?

துணைக்கு அழைக்கக் கூடாது, கூடவே சேர்த்துக் கட்டிவிட வேண்டும்.

saarvaakan சொன்னது…

நண்பர் சுவனப் ப்ரியன் கருத்துகள் சவுதியில் நடப்பதை கூறியுள்ளன.இந்த பெண்கள் வாகனம் ஓட்டும் உரிமை இன்மை உலகில் சவுதியில் மட்டுமே உள்ள நடைமுறை ஆகும்.சவுதி எண்ணெய் வளத்தால் பணம் கொழிப்பதால் எந்த சர்ர்சைகுரிய மனித உரிமை மீறலையும் செய்ய முடிகிறது.
இந்த எண்ணெய் வளம் முடிந்த பின் எல்லா நாடுகளை போல் சமூக பொருளாதார சிக்கல்களை தவிர்க்க ஜனநாயகம்,மனித உரிமை சட்டங்கள் அமலுக்கு வந்து விடும் என்பது என் கணிப்பு. அப்போது ஹஜ் பயணிகளை வைத்தே சவுதி பொருளாதாரம் அமையும் ,மத அடிப்படைவாத பிரச்சாரம் கூட கொஞ்சம்(முழுதும்?) அடங்கி விடும்.அதுவரை சவுதி அப்படித்தான் இருக்கும்,நண்பர் சுவனன் போல் பலரும் சிலாகித்தும் பேசுவர்.

KARIKALVALAVAN சொன்னது…

பாவம் சோ திரு சுவனப்பிரியன் கருத்துக்களுக்கும் திரு சோ அவர்களை
இழுக்க வேண்டுமா.

ஷர்புதீன் சொன்னது…

இன்றைய எனது மத ரீதியான விவாதத்திற்குரிய இடுக்கையை காண அழைக்கிறேன்

PRABHU RAJADURAI சொன்னது…

சோ?

suvanappiriyan சொன்னது…

நான் முன்பே பெண்கள் கார் ஓட்டுவதற்கு குர்ஆன் எந்த தடையும் போடவில்லை என்று தெளிவாக்கியிருக்கிறேன்.

முதலில் சவுதியின் சாலை அமைப்புகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். நம் நாட்டை விட பரப்பளவில் கொஞ்சம் பெரியது சவுதி அரேபியா. அதன் மக்கள் தொகை தமிழகத்தையும் ஆந்திராவையும் சேர்த்தால் என்ன வருமோ அவ்வளவுதான். உதாரணத்திற்கு நீங்கள் ரியாத்திலிருந்து கஸீம் நகருக்கு பயணிக்கிறீர்கள். இரு ஊர்களுக்கிடையில் 350 கிலோ மீட்டர் தூரம். இடையில் மனித நடமாட்டம் உள்ளதாக நான்கு ஐந்து சிறிய ஊர்கள் வரும். இடைப்பட்ட சாலைகள் இரு புறமும் வெறும் மணல் திட்டுகள்தான். முன்பு தனியாக வரும் டிரெய்லர்களை மடக்கி கொள்ளையடிக்கும் வழக்கம் இருந்தது. சில நேரங்களில் ஓட்டுனர்களை கொலை செய்தும் விடுவார்கள் கொள்ளையர்கள்.

சவுதி அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தது இந்த பிரச்னை. மப்ஃடியில் போலீஸார் பல நாள் காத்திருந்து அந்த ஆப்ரிக்க கொள்ளையர்களை கையும் களவுமாக பிடித்தனர். பல கொலைகள் செய்த அந்த கொள்ளையர்களை சிரச்சேதம் செய்து சாலையின் இரு மருங்கிலும் உடலை கட்டி தொங்க விட்டது சவுதி அரசு. அதன் பிறகு கொலையும் கொள்ளையும் நின்றது. ஆள் அரவம் இல்லாத இந்த பாலைவனப் பகுதிகள் சமூக விரோதிகளுக்கு மிக வசதியாக இருக்கிறது.

ஆண்களாகிய நாங்களே இரவு நேரங்களில் தனியே டிரைவ் செய்து வருவதற்கு பயப்படுவோம். இந்த நிலையில் பெண்களுக்கும் தனியே அனுமதி கொடுத்தால் பல தவறுகள் நடக்க அதுவே காரணமாகி விடும். வருமுன் காப்போம் என்ற முன்னெச்சரிக்கையாகவே பெண்கள் வாகனம் ஓட்டுவதை அரசு தடுக்கிறது. இதனால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

முகமது நபி வாழ்ந்து மறைந்த ஊர். கஃபா அமைந்துள்ள நாடு. மக்கா மதினா என்ற இரண்டு புனித இடங்களை தன்னகத்தே கொண்ட நாடு. வருடம் ஒரு முறை உலக முஸ்லிம்கள் 30 லட்சம் பேர் வருகை தரும் புனித மண். எனவே இந்த ஊருக்கென்று சில பிரத்யேக மரியாதை உண்டு. அதற்கு பங்கம் வராமல்தான் சட்டங்களை இயற்ற முடியும்.

பெண் கல்வி, பெண்களின் வேலை இதிலெல்லாம் சவுதி அரசு கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. பெண்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் சிறந்தே இங்கு விளங்குகிறார்கள்.

பெண் விடுதலை என்று ஓவராக நாம் போனதால்தான் பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமி கழிவறையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொண்டதை பத்திரிக்கைகளில் படித்தோம். இன்பத்தை இருவருமே அனுபவித்தனர். பாவம் ஆனால் அந்த பெண் பாவத்தை சுமந்து பள்ளியில் பிரசவம் பார்த்து இன்று மூலையில் முடங்கிக் கிடக்கிறாள். சம்பந்தப்பட்ட அந்த ஆணோ ஹாய்யாக வெளியில் சுற்றித் திரிகிறான். இதுதான் பெண் விடுதலையா!

ராஜ நடராஜன் சொன்னது…

இக்பால் செல்வன் பேட்டைக்கு புதுசுங்கிறதால நேற்று அவருக்குப் பின்னூட்டம் போடவில்லை.

நீங்க உஸ்தாதுங்கிறதால நீண்ட நாட்கள் கழித்து உங்க பின்னூட்ட கொடுக்கல் வாங்கல்களை பதிவின் மூலமாக மறுபடியும் கணக்கு சரி செய்துட்டீங்களோன்னு ஒரு சந்தேகம்:)

சவுதியை ஒட்டிய ஏனைய வளைகுடா நாடுகள் உலக தாராளமயமாக்கலில் நன்றாகவே கலந்து விட்டதோடு மட்டுமல்லாமல் பன்மை கலாச்சார பாங்குகளை சிலவற்றில் இலை மறை காயாகவும் உணவு,உடைகள் போன்றவற்றில் நிறையவே மாற்றம் கொண்டுள்ளார்கள்.

சவுதியில் உணவுப் பொருட்களின் தரம்,பால்,பழரசங்கள் போன்றவை கலப்படமில்லாமல் இருக்கும் நல்லவைகளையெல்லாம் விட்டு விட்டுடறாங்க:)

மூஞ்சிக்கு முக்காடுகள் போடுவது,பொம்பளை கார் ஓட்டக்கூடாது போன்று பிற்போக்குத்தனத்தை வளைகுடா நாடுகளே நிராகரிக்கின்றன.

எத்தனை அடித்தாலும் தாங்கும் மாறமாட்டேன் கழக கண்மணிகள் மாதிரி இவர்களும் கூட:)

குறும்பன் சொன்னது…

சானியா மிஸ்ராவை பார்த்து யாரும் ஜொல்லு விடக்கூடாது என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பெண்ணும் ஆணும் 1 ஊரில் இருந்து அடுத்த ஊருக்கு பயணப்பட்டால் (சவுதியில் 2 ஊர்களுக்கு இடையேயான தூரம் அதிகம்) ஆணை அடித்து போட்டு விட்டு பெண்ணை பாலியல் வன்முறை செய்து விடுவார்கள் என்பதால் இரவில் யாரும் கார் ஓட்டக்கூடாது என சவுதி அரசு தடை விதிக்க வேண்டும்.

பெண்கள் கார் ஓட்டினால் நம்நாட்டவர்கள் வேலையிழப்பார்கள் அதனால் அவர்கள் கார் ஓட்டக்கூடாது.

பெண்களுக்கு எதிராக மேலும் பல தடைகளை விதிக்க வேண்டும், எனக்கு சுவனத்தில் நித்திய கன்னிகைகள் தேவைக்கு மிஞ்சியே கிடைக்க அனைவரும் (முஸ்லிம் மட்டும்) வாழ்த்தவேண்டும்.

Massy spl France. சொன்னது…

சவுதியில் என்னத்த செய்தா நமக்கு என்ன என சும்மா இருக்கத்தான் நெனைக்க வருது. இருந்தாலும் இதில் 'ஓட்டுநர்களுக்கு முளைப்பால் கொடுக்கிறது' போன்ற சங்கதி கொஞ்சம் விட்டலாகவே இருக்கிறது.

சில ஆப்ரிக்க நாட்டு கிராமங்களில் இளம் பெண்கள் கல்யாணத்திற்கு முன்பு ஆடவர்களுடன் உடலுறவு வைத்து கொள்ளாமல் இருக்கும் பொருட்டு யோனியின் உணர்ச்சி உருப்பான பருப்பை (clitoris) அறுத்து எடுத்து விடுவார்கள். சுவனப்பிரியன் வாயிலாக இதையே சவுதி அரசுக்கு சிபாரிசு செய்யச் சொல்லாமே! அல்லது பண்டைய ஐரோப்பியர்கள் தங்களது பெண்டிர்களுக்கு இடுப்பு பூட்டு அணிந்தனர். இதையாவது செய்யச் சொல்லாமே! இப்படியாவது முழு காட்டு மிராண்டிகளாக ஆவதற்கு.

தமிழ் உலகத்திற்கு நல்ல செய்திகள் கொண்டுவந்து அதன் தரத்தை உயர்த்த உதவும் ஆக்கங்களே நமக்கு தேவை. மாறாக, தரம் தாழ்த்தி கற்காலம் நோக்கி செல்ல வைக்கும் இவைகள் போன்ற பதிவுகளை தமிழுலகம் புறக்கணித்தல் அவசியம்.

suvanappiriyan சொன்னது…

கோவிக் கண்ணன்!

//இவர்தான் அல்குரானை அன்றாடம் ஓதுவர் ஆகிற்றே இவருக்கு ஏன் ரெஸ்லிங் பெண்கள் மீது பார்வை போனது ? அல்லாவுக்கே வெளிச்சம்.//

அடடா... குர்ஆன் இறங்கியது தினந்தோறும் ஓதி பாராயணம் பண்ணுவதற்கல்ல கண்ணன்! அதன் சட்டங்களை நமது வாழ்வில் கூடிய வரை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொள்ள பல சேனல்களையும் பார்க்கிறோம். இடையில் இது போன்ற ஒன்றிரண்டு சேனல்கள் பக்கமும் போவது உலக நடப்புகளை தெரிந்து கொள்ளவே!

//இவருக்கு கிடைக்கும் நித்திய கன்னிகைகளில் ரெஸ்லிங்க் பெண்கள் இருக்கமாட்டார்கள் என்று நம்பி ரெஸ்லிங்க் பெண்கள் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.//

குர்ஆனின் சட்டத்தின் படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் உங்களுக்கும் நித்திய கன்னிகைகள் கிடைக்கலாம். இன்ஷா அல்லாஹ்! வாழ்த்துக்கள்.

//மேலும் திரு சுவனப்பிரியனின் பின்னூட்ட பொன்மொழிகளில் ஒன்று கிட்டதட்ட சோ இராமசாமியின் பெண்கள் குறித்த கூற்று போலவே அமைந்திருக்கிறது.//

கோவிக் கண்ணன் என்னதான் வேதங்களை கரைத்து குடித்தாலும் மேன் மக்கள் ஆகமுடியாது என்பது சோவின்(இந்து மதத்தின்) வாதம். ஒரே இனமான ஆண் இனத்திலேயே நெற்றியில், காலில் பிறந்ததாக சோ கதையளப்பார்.

ஆனால் உடல் ரீதியாக பல மாறுபாடுகளை கொண்ட ஆண் இனமும் பெண் இனமும் சமமாக முடியாது என்று இஸ்லாம் கூறுவது அறிவியல் பூர்வமாக ஒத்துக் கொள்ளப்பட்டது. இதற்கு பல உதாரணங்களை கூறலாம்.

இதனால் பெண்களை இஸ்லாம் இழிவுபடுத்தவில்லை.

'அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை'
-குர்ஆன் 2:187

'பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.'
-குர்ஆன் 2:228

viyasan சொன்னது…

இந்துத்துவா மட்டுமல்ல இஸ்லாமியத்துவாவும் வெறுக்கத் தக்கதே. இரண்டையும் தமிழர்கள் வெறுக்க வேண்டும் ஏனென்றால் இரண்டுமே தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்கும். இந்துத்துவாவை விமர்சிக்கும் பல தமிழர்கள் இஸ்லாமியத்துவாவை விமர்சிக்கப் பயப்படும் போது, உங்களைப் போன்ற நடுநிலையான வலைப்பதிவாளர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//சில நேரங்களில் ஓட்டுனர்களை கொலை செய்தும் விடுவார்கள் கொள்ளையர்கள்.//

இந்தப் பிரச்சனை ஆண் / பெண் இருபாலர் வண்டி ஓட்டினாலும் பொதுவானது தான். ஆண்கள் கொலை செய்யப்படுவது 'ஓகே' என்கிறதா சவுதி அரசு ? நீங்களே பதில் சொல்லாதிங்க, அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று சொல்லுங்க.


//பெண் விடுதலை என்று ஓவராக நாம் போனதால்தான் பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமி கழிவறையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொண்டதை பத்திரிக்கைகளில் படித்தோம். இன்பத்தை இருவருமே அனுபவித்தனர். பாவம் ஆனால் அந்த பெண் பாவத்தை சுமந்து பள்ளியில் பிரசவம் பார்த்து இன்று மூலையில் முடங்கிக் கிடக்கிறாள். சம்பந்தப்பட்ட அந்த ஆணோ ஹாய்யாக வெளியில் சுற்றித் திரிகிறான். இதுதான் பெண் விடுதலையா!
//

அந்த சிறுமிக்கு 15 வயது, அன்னை ஆயிஷாவை 50 வயதைக் கடந்த முகமது நபி மணந்த போது அன்னை ஆயிஷா வயது 9 தான். உங்க வசதிக்கு தேவைப்படும் இடத்தில் சிறுமி என்று போட்டுக் கொள்வது இங்கே நல்லா இல்லை. பள்ளி மாணவி என்றிருந்தாலே போதும். இது போன்று ஒரு சில பள்ளி மாணவிகள் சீரழிவது, ஏமாற்றப்படுவது எல்லா நாட்டிலும் நடப்பது தான், அது அந்த நாட்டின் ஒட்டு மொத்த ஒழுக்கத்தை முடிவு செய்துவிடாது.

மேலும் பெண் விடுதலையை முடிவு செய்வதெல்லாம் ஆண்கள் கையில் இல்லை என்பதை அழுத்தமாகவே சொல்லிக் கொள்கிறேன். உங்கள் மனைவியை மகளை நீங்கள் கட்டுப்படுத்தலாம், அதுவும் கூட அவர்கள் உங்களை நம்பி இருந்தால் மட்டுமே. பொதுவாக மற்ற பெண்கள் குறித்த 'பெண் உரிமை குறித்த கருத்து தெரிவிக்க' உங்களுக்கோ எனக்கோ எந்த ஒரு அருகதையும் இல்லை.

ஒரு முதலாளி தொழிலாளிக்கு ஓவராக சலுகைக் கொடுத்து அலுத்துக் கொண்டேன் / அனுபவித்தேன் என்பது போன்ற உங்களுடைய வாதங்கள் நீங்கள் பெண்களை அடிமையாக ஆண்டவன் படைத்தான் என்று நம்புவதாகவே அமைகிறது, உங்கள் கருத்து முற்றிலும் நிராகரிக்கத்தக்கது.

கோவி.கண்ணன் சொன்னது…

//இடையில் இது போன்ற ஒன்றிரண்டு சேனல்கள் பக்கமும் போவது உலக நடப்புகளை தெரிந்து கொள்ளவே!//

ரெஸ்லிங் பெண்களைப் பார்த்து அதுவும் அவர்களுடைய விளையாட்டைப் பார்க்காமல் உடல் கட்டுகளைப்பார்த்து நீங்கள் வளர்த்துக் கொண்ட உலக அறிவு
'ஆண்களுக்கு ரெஸ்லிங் பெண்களைப் பார்த்தால் ஈர்ப்பு வராது' என்பது தானே ?

ரெஸ்லிங்க் ஆண்களின் உடல் கட்டுமஸ்தாக இருக்கும் அவர்களைப் பார்க்கும் பெண்கள் அனைவருக்கும் அவர்கள் திருமணம் ஆனவராக இருந்தாலும் கூட ஈர்ப்பு வருமா ? வராதா ? வந்தால் ஓகேவா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரே இனமான ஆண் இனத்திலேயே நெற்றியில், காலில் பிறந்ததாக சோ கதையளப்பார்.//

சுபி,

மேற்கண்டதற்கும் நீங்கள் இட்டிருக்கும்

'உங்களில் சிலரை மேன்மையாளர்களாகப் படைத்தோம், அவர்களைப் பார்த்து பொறாமை கொள்ளக் கூடாது' என்று சொல்லும் குரான் வசனத்திற்கும் என்ன வேறுபாடு ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால் உடல் ரீதியாக பல மாறுபாடுகளை கொண்ட ஆண் இனமும் பெண் இனமும் சமமாக முடியாது என்று இஸ்லாம் கூறுவது அறிவியல் பூர்வமாக ஒத்துக் கொள்ளப்பட்டது//

ஆணைப் பெற்றுத் தருவதே பெண் தான். அவர்களால் முடியாது என்று எதுவும் கிடையாது. ரிஸ்லிங்க் பெண்களைப் பார்த்து மிரண்டு போன நீங்கள் மாற்றிப் பேசுவது வியப்பளிக்கிறது.

ஒரு காலத்தில் பெண்ணால் பேருந்து ஓட்ட முடியாது, விமானம் ஓட்ட முடியாது என்ற நம்பிக்கைகள் இருந்தது, தற்போது பிணவறையில் கூட பெண்களால் செயல்பட முடிகிறது, உங்கள் பழமைவாதக்கருத்துகளை குப்பையில் போடுங்கள்.

Seshadri சொன்னது…

Soudi Arabs are very tough people to handle. you see the laws are very tough due to that only. otherwise you can not control the local people.

for the good will to ladies they are avoiding the possibility of mistakes.

once mistake happen who is the loser.
police or affected party.

they know very well about them self.better to avoid is the solution.

sharfu சொன்னது…

its seems to be mr. seshadri's statement is more logical and acceptal than any other comments here.

கோவி.கண்ணன் சொன்னது…

// sharfu said...
its seems to be mr. seshadri's statement is more logical and acceptal than any other comments here.//

உலக முஸ்லிம்கள் ஒன்று சேரும் இடத்தில் வாழும் சவுதி அரபு ஆண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள், தனியே வரும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் மனநிலை கொண்டவர்கள் என்று சுவனப்பிரியன் எங்கேயாவது குறிப்பிட்டு இருந்தால் நீங்களும் சேசாத்திரியும் சொல்வது சரியாக இருக்கும், எனக்கு தெரிந்து சுவனப்பிரியன் அப்படி எதுவும் சொல்லவில்லை

பெயரில்லா சொன்னது…

இங்கேயும் இவ்வளவு நடந்திருக்கா. நடக்கட்டும் நடக்கட்டும்.. எல்லாம் நன்மைக்கே ..ஹிஹி !

ஜோதிஜி சொன்னது…

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

அல்லாவின் வானவர் படைத்தளபதி சொன்னது…

சுவனப்பிரியன்.. நானொரு கேள்வி கேட்டேன்..
இவ்வளவு நாள் ஆகியும் பதில் சொல்லவே இல்லியே..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்