பின்பற்றுபவர்கள்

30 நவம்பர், 2010

சென்னை அருகே ஒரு போலி சுங்கச் சாவடி !

மகளின் பள்ளி விடுமுறையை அடுத்து மகனையும் மகளையும் தமிழகத்திற்கு அழைத்துச் செல்லும் திட்டமாக ஒருவார காலம் சென்று வந்தேன். மழைகாலம், எல்லோரையும் பார்த்துவருவது இயலாத செயல், ஒருவார காலமே இடைவெளி என்பதால் நண்பர்களிடம் சொல்லிக் கொள்ளவில்லை. சென்னை சென்றது ஓடபோன் இணைப்புப் பெற்று கூகுள் பஸ்ஸில் அறிவித்திருந்தேன். அதைப் பார்த்து அழைத்தவர்கள் கேபிள், அப்துல்லா, லயன் சுதாகர் (பித்தனின் வாக்கு), இவர்களுடன் கேஆர்பி செந்திலையும் சந்திக்க முடிந்தது.
கேஆர்பி செந்தில் மற்றும் கேபிள் சங்கர்
பித்தன் வாக்கு சுதாகர், அப்துல்லா
அப்துல்லா மற்றும் செங்கதிர்

20 ஆம் தேதி சென்னைச் சென்றேன், 22 ஆம் தேதி சென்னையில் சிறு வேலை இருந்ததால் சென்னையில் 22 ஆம் தேதி வரை தங்கினேன். சிங்கையில் இருந்து சென்னைச் செல்லும் பயணிகளில் 90 விழுக்காடு தமிழர்கள், ஆனாலும் ஏர் இந்திய விமான சேவையின் அறிவிப்புகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் தான் வருகிறது. இறுக்கையில் டிவி வைத்திருக்கிறார்கள், மருந்துக்கு ஒரு தமிழ் படம் கூடப் போடவில்லை. இந்தியை வலுக்கட்டாயமாக திணிப்பதில் என்ன ஒரு கொல வெறியோ. இந்தி ஒழிகன்னு விமானத்தின் நடுப்பகுதிக்கு வந்து கத்தனும் போல் இருந்தது. அவனுங்களுக்கு தமிழ் தெரியாதேன்னு விட்டுவிட்டேன். வழக்கம் போல் பாட்டிகளே விமானப் பணிப் பெண்ணாக வந்தார்கள். உலகிலேயே ரிடையர்ட் வயது விமானப் பணிப் பெண்ணை ஏர் இந்தியா சேவையில் தான் பார்க்க முடியும். திரும்பும் போதும் அதே கதைதான். இந்தியாவிற்குச் செல்லும் விமானங்களில் கட்டுப்படி கட்டண (பட்ஜட்) சேவை இல்லாத பொது விமான சேவையில் மிகவும் மட்டமான சேவைக்கு பதக்கம் கொடுத்தால் ஏர் இந்தியாவுக்குக் கொடுக்க நான் வாக்களிப்பேன். விமானங்களில் பார்க்க முடியாத தமிழ் விமான நிலையத்தில் பார்க்க முடிந்தது, அறிவிப்புகள் தமிழில் இருந்தன. சென்னை செல்லும் பிற நாடுகளின் விமானங்கள் தமிழில் அறிவிப்புகள் செய்யும் போது ஏர் இந்தியா விமானத்திற்கு மட்டும் என்ன எழவு நேர்ந்தது ?

*****

தமிழக பயணத்தின் ஊடாக பிறந்த ஊருக்குச் சென்று இரு நாட்கள் இருந்துவிட்டு, மதுரையில் டிபிசிடி மற்றும் சீனா ஐயா அழைப்பின் பேரில் மதுரைக்குச் சென்று வந்தேன். மழை மிகுதியாக இருந்ததால் ஏற்கனவே சந்தித்தவர்கள் தவிர்த்து யாரையும் அழைத்து தொந்தரவு செய்ய விரும்பவில்லை. 24 ஆம் தேதி பின்னிரவில் பேருந்தில் ஏறி தஞ்சை சென்று அங்கிருந்து புதுக்கோட்டை வழி மதுரையை அடைந்தேன். காலை 6 மணி ஆகி இருந்தது. மாட்டுத் தாவணி பேருந்து நிலையை எதிரே உள்ள விடுதிகளில் ஏற்கனவே தங்கி இருந்து பட்டதால் அங்கு தங்க விருப்பம் இன்றி வேறுறொரு விடுதி முகவரியைக் கேட்டு அங்கு சென்றேன், அன்று மங்கல நாளாம் விடுதிகள் அனைத்தும் அறைகள் இல்லை என்று கை விரித்தன. அப்பறம் அங்கு டிபிசிடி வந்து வேறொரு விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கும் இல்லை, அறை இல்லை என்றவரிடம் அண்ணனை எழுப்பிவிடுவேன் என்று டிபிசிடி மிரட்டிப் பார்த்தார். அண்ணனுக்கு அங்கு மதிப்பு இல்லை, திரும்பி எதிரே இருந்த மற்றொரு விடுதியில் இடம் இருந்தது, 300 ரூபாய் என்றார்கள், பணத்தை முன்பணமுமாகச் சேர்த்து 600 கொடுத்துவிட்டு அறைக்கு சென்றால் அரசு மருத்துவ மனையின் ஒரு அறையில் படுக்கைப் போட்டது போல் இருந்தது, பினாயல் வாடை போதாக் குறைக்கு பச்சை நிறத்தில் படுக்கை. எந்த வசதியும் இல்லை, 300க்கு இவ்வளவு தான், ஆனாலும் அறை கிடைக்காத சூழலில் ? அங்கே விட்டுச் சென்ற டிபிசிடி 10 நிமிடத்தில் அழைத்தார். அண்ணே இங்கு சாரதா இராஜனில் டிலக்ஸ் ரூம் 2,500 டபுள் ரூம் 1,700 என்றார். 1,700 க்கு உள்ளதை பேசி முடித்துவிடு என்றேன், கீழே வந்து அறையைக் காலி செய்வதாகச் சொல்ல, 300ம் அம்பேல்.
சீனா ஐயா
ஜாலி ஜம்பர்
தருமி ஐயா
டிபிசிடி
கோவியார் என்கிற நான்

சாரதா இராஜனில் அறையை எடுத்துவிட்டு சீனா மற்றும் தருமி ஐயாவை அழைத்து வருகையைச் சொன்னேன். 30 நிமிடத்தில் காலை 9.30 மணி அளவில் சீனா ஐயா வந்தார். அவருடன் காலை உணவு எடுத்துவிட்டு பேசிக் கொண்டு இருந்தோம், பிறகு தருமி ஐயா வந்தார், மதிய உணவு நேரம் ஆகி இருந்தது, அருகில் இருந்த மீனாட்சி பவனில் உணவு அருந்தி சிறிது ஓய்வு எடுத்துவிட்டு மாலை 3:30 மணிக்கு தருமி ஐயா விடைபெற்றார், பிறகு வீட்டுக்கு உணவு அருந்த சென்ற சீனா ஐயா குட்டித் தூக்கம் போட்டுவிட்டு மாலை 5 மணிக்கு வந்தார், பிறகு ஜாலி ஜம்பர் வந்தார், பேசினோம்... பேசினோம் மாலை 6 ஆகி இருந்தது, பிறகு டிபிசிடி திரும்பவும் வந்து மூவருடன் சிறிது நேரம் கதைத்துவிட்டு நேரம் ஆகவே மாலை 7 மணிக்கு அறையை காலி செய்து அனைவரிடம் விடை பெற்று பிறந்த ஊருக்குத் திரும்பினேன் வந்து சேரும் போது இரவு 3 மணி ஆகி இருந்தது. மதுரையில் பிற பதிவர்களையும் சந்திக்க ஆவல் இருந்தாலும், அன்று வியாழன் வேலை நாள், நல்ல மழை என்பதால் அழைத்த நண்பர்களை மட்டும் பார்த்துத் திரும்பினேன்.

*********

போலி சுங்கச் சாவடி (Poli-Toll)


தமிழகத்தில் சாலை வசதிகள் விரிவு படுத்தப்பட்டுள்ளது, 120 கிமீ விரைவில் வாகனங்கள் பயணித்தன. இது போன்ற விரைவு சாலைகளை வெளிநாடுகளில் மட்டுமே முன்பு பார்க்க முடியும்,
வாஜ்பாய் அரசு துவங்கிய சாலை நல்ல திட்டம், செயல்படுத்திய அரசுகளை பாராட்டவேண்டும். ஆனாலும் அரசு ஆதரவுகளோடு விரைவு சாலைகளில் தில்லுமுல்லு நடக்கின்றன, புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் பயணித்தேன், நண்பருடைய கார் தான். மூன்று நண்பர்களாக பாண்டியில் இருந்து சென்னைக்கு பயணித்தோம், முன்னதாக இருவர் ஏற்கனவே சென்னையில் இருந்து புதுவைக்கு அதே காரில் வந்திருந்தனர், திரும்பும் போது என்னையும் அழைத்துச் சென்றனர். திண்டிவனத்திற்கும் மதுராந்தகத்திற்கு இடையே ஒரு டோல் கேட். நண்பர் விவரம் அறிந்தவர் என்பதால் அந்த டோலில் நிற்காமல் போனால் ஒண்ணும் கண்டு கொள்ள மாட்டார்கள், காரணம் ஒரு எம் எல் ஏ தான் தன்னுடைய ஆட்களைப் போட்டு டோல் நடத்திவருகிறார், அந்த இடத்தில் முன்பு டோல் இருந்தது பிறகு வேறொரு இடத்தில் செங்கல்பட்டு தாண்டி சென்னையில் நுழையும் முன்பாக மாற்றிக் கொண்டு சென்றுவிட்டார்கள், ஆளும் கட்சியின் எம் எல் ஏ நேரடியாக இந்த டோலை நடத்துவதால் அரசுகளின் ஆதரவோடு பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்றார். திண்டிவனம் மார்க்கமாக ஒரு நாளைக்கு சென்னைக்குச் செல்லும் தனியார் வாகனங்கள் குறைந்தது 10,000 என்றால் டோல் கட்டணம் 20 வைத்துக் கொண்டாலும் நாள் ஒன்றுக்கு 2 லட்ச ரூபாய் கிடைக்கும், 10 பேருக்கு யூனிபார்ம் போட்டு நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு மாத வருமானம் 60 லட்சம். 10 பேருக்கு நபர் ஒன்றுக்கு 5 ஆயிரம் சம்பளம் கொடுத்தாலும் மீதம் 59+ லட்சம் பகல் கொள்ளையாக நடக்கிறது. நண்பர் காவல் துறையில் இருந்ததால் அவருக்கு இது போலி டோல் என்பது தெரியும், அவருக்கு மட்டுமல்ல, அந்த வழியாகச் செல்லும் அரசு பேருந்துகளுக்கும், நாள் தோறும் சென்று வருபவர்களுக்கும் தெரியும், அவர்களும் இந்த ஏமாற்றுக் கூத்து தெரிவதால் சுங்கம் செலுத்துவதில்லை. நாங்கள் காரை அங்கு நிறுத்தவும் இல்லை, அவர்களும் எங்களை துறத்திப் பிடிக்கவும் இல்லை.

*****

தமிழகம் எங்கும் நல்ல மழை பல ஆண்டுகளுக்குப் பிறகு மதுராந்தகம் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது.

(எனது நண்பர்கள் இராம் என்கிற இராமநாதன் மற்றும் ஜெ.கண்ணன்)

சென்னையில் முதன்மையான சாலைகள் தவிர்த்து தெருக்களில் குண்டும் குழியும், சேறுமாக நிற்கிறது. சிங்காரச் சென்னை மழைகாலத்தில் அசிக்காரச் சென்னையாக நிற்கிறது. முழுவதும் சுரங்க இரயில் பாதைகளைப் போடலாம், மெட்ரோ ரயில் திட்டம் அவ்வளவாக பயனளிக்குமா என்று தெரியவில்லை. சென்னை மக்கள் தொகைக்கு மெட்ரோ இரயிலெல்லாம் போதாது. வெளிநாடுகளில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வேண்டிய வசதிகள் என்பதை பொதுமக்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள். இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தேவைப்படும் வசதியைத்தான் ஏற்படுத்தித் தருகிறார்கள் இரண்டாம் வரிசை அலைக்கற்றை ஊழல் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியாம். இதில் எத்தனையோ நல்ல திட்டங்களைப் போட்டிருக்கலாம், கிடைக்கும் சில ஆயிரம் கோடி கையூட்டுகளுக்காக அரசு வருமானம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அம்பேல்.


***

நெருங்கிய பதிவர் நண்பர்களின் அலைபேசி எண்கள் கைவசம் இருந்தும் தொடர்பு கொள்ள இயலவில்லை. சென்று பார்க்க இயலாத கடுமழைச் சூழலில் அழைத்துப் பேசி பிறகு பார்க்காமல் திரும்பவும் மனதில்லை என்பதால் தவிர்த்தேன். மன்னிக்கவும்.

20 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

படிச்சிட்டேன். மதுரை நிறுத்தம் செமயா போயிருக்கு போலவே!

என்னய்யா நடக்கிது சாலையை அப்போ யாரு வேணாலும் குறுக்கே மறிச்சு டோல் வசுலிக்கலாமா அதுவும் ஒரு நாளக்கி இரண்டு லட்சமா :(( ...

அப்துல்லா கையில செங்கதிர் ஜொலிக்கிறானே... :)

சீனா, லுக்ஸ் ரிலாக்ஸ்ட்.

Karthick Chidambaram சொன்னது…

//இந்தி ஒழிகன்னு விமானத்தின் நடுப்பகுதிக்கு வந்து கத்தனும் போல் இருந்தது. அவனுங்களுக்கு தமிழ் தெரியாதேன்னு விட்டுவிட்டேன். //

100% உண்மை

துளசி கோபால் சொன்னது…

சுங்கச்சாவடியிலும் போலியா!!!!!!!!111

விடிஞ்சது போங்க.

எப்படி இப்படி பணம் பணமுன்னு அலையுதுங்க இந்த அரசியல் வியாதிகள் எல்லாம்?????

பயண விவரம் ரசித்தேன்.

ஏர் இந்தியாவையும் இந்தியன் ஏர்லைன்ஸையும் நினைச்சாலே பயம்தான். நம்ம அனுபவம் அப்படி. அதுக்குப் பதிலாப் பொடிநடையா நடந்தே போயிறலாம்:-))))

கதிருக்கு எங்கள் அன்பு.

அப்துல்லா முகத்தில் .........ஆஹா.... எத்தனை மகிழ்ச்சி!!!!!

Kesavan சொன்னது…

உங்கள் ப்ளாக்கில் ஹிந்தி எழுத்துகளை கொண்ட வரைபடத்தை தவிர்த்திருந்தால் , உங்களின் ஹிந்தி எதிர்ப்பு இன்னும் நன்றாக இருந்திருக்கும் :)

Kesavan சொன்னது…

உங்கள் ப்ளாக்கில் ஹிந்தி எழுத்துகளை கொண்ட வரைபடத்தை தவிர்த்திருந்தால் , உங்களின் ஹிந்தி எதிர்ப்பு இன்னும் நன்றாக இருந்திருக்கும் :)

Unknown சொன்னது…

இங்கே ஒரு செங்கதிர் இருப்பதால் கதிரவன் ஓய்வெடுத்து மழையை அனுப்பி விட்டானோ .
கிடைத்த சில ஆயிரம் கோடிகளுக்காக சில லட்சம் கோடிகளை நட்டப்படுத்தியது கொடுமை. இதுவரை எந்த அரசியல்வியாதியாவது தண்டணை அடைந்திருந்தால்தானே இவர்களுக்கு பயம் வரும். மக்கள் சக்தி, ஜனநாயகப் பண நாயகம்.:(

cheena (சீனா) சொன்னது…

பரவா இல்லையே - உடனே இடுகை இட்டாயிற்றா ? செங்கதிர் அப்துல்லா கையில் - இருவருக்கும் மகிழ்ச்சி - மதுரைக்குக் கூட்டி வந்திருக்கலாம்ல - ம்ம்ம்ம்

நிகழ்காலத்தில்... சொன்னது…

போலி டோட்கேட்..

வாயைப்பிளக்கவைத்துவிட்டது..

பயணம் நல்ல முறையில் அமைந்ததிற்கு வாழ்த்துகள்..

டீ சர்ட் போட்டோ நல்லா வந்திருக்கிறது....

ஜோதிஜி சொன்னது…

தனிப்பட்ட வருத்தமும் (?) அப்துல்லா என்ற கதாநாயகனை முழுமையாக பார்த்த மகிழ்ச்சியும்.

ஜோதிஜி சொன்னது…

பாட்டி பணிப்பெண்கள்.........

எழவெடுத்த ஹிந்தி

ரசித்த வார்த்தைகள்.

ஜோதிஜி சொன்னது…

எப்படி இப்படி பணம் பணமுன்னு அலையுதுங்க இந்த அரசியல் வியாதிகள் எல்லாம்?????

தினந்தோறும் இங்கு உள்ளூருக்குள் பத்து விசயங்கள் நடந்துகிட்டுருக்கு.

ஒருவேளை சந்தனகட்டையோடு பணக்கட்டுகளை வைத்து எறிக்கச் சொல்லுவாங்களோ?

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

// அப்துல்லா கையில செங்கதிர் ஜொலிக்கிறானே... :)

//

:))))

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

// அப்துல்லா முகத்தில் .........ஆஹா.... எத்தனை மகிழ்ச்சி!!!!!

//

அம்மா, அந்த பயபுள்ளைய நேர்ல பாத்தீங்கன்னா என்னையவிட இன்னும் சந்தோஷப்படுவீங்க :)




// அப்துல்லா என்ற கதாநாயகனை //

அண்ணே, நான் வரலை இந்த விளையாட்டுக்கு :))))

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan|தெகா said...
படிச்சிட்டேன். மதுரை நிறுத்தம் செமயா போயிருக்கு போலவே!

என்னய்யா நடக்கிது சாலையை அப்போ யாரு வேணாலும் குறுக்கே மறிச்சு டோல் வசுலிக்கலாமா அதுவும் ஒரு நாளக்கி இரண்டு லட்சமா :(( ...//

யார் வேண்டுமானாலும் இல்லை அதிகாரம் கையில் உள்ளவர்கள் மட்டும் தான் :)

//அப்துல்லா கையில செங்கதிர் ஜொலிக்கிறானே... :)//

:)

//சீனா, லுக்ஸ் ரிலாக்ஸ்ட்.

11:07 AM, November 30, 2010//

அவரு இனி பள்ளிக் கூடம் போகத் தேவை இல்லை அந்த மகிழ்ச்சி தான் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Karthick Chidambaram said...
//இந்தி ஒழிகன்னு விமானத்தின் நடுப்பகுதிக்கு வந்து கத்தனும் போல் இருந்தது. அவனுங்களுக்கு தமிழ் தெரியாதேன்னு விட்டுவிட்டேன். //

100% உண்மை

// நாமெல்லாம் இந்தி.....யன் என்று இவனுங்க இப்படித்தான் புரிய வைப்பானுங்கப் போல :(

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
சுங்கச்சாவடியிலும் போலியா!!!!!!!!111

விடிஞ்சது போங்க.

எப்படி இப்படி பணம் பணமுன்னு அலையுதுங்க இந்த அரசியல் வியாதிகள் எல்லாம்?????//

ஜோதிஜி சொல்லி இருக்கார் பாருங்க சந்தனக்கட்டைக்கு பதிலாக காந்திப்படம் போட்டு எரிக்கலாம் என்ற திட்டம் வச்சிருப்பாங்கப் போல

//பயண விவரம் ரசித்தேன்.// ஒருவாரம் தான் நேரம் போதவில்லை அம்மா.

//ஏர் இந்தியாவையும் இந்தியன் ஏர்லைன்ஸையும் நினைச்சாலே பயம்தான். நம்ம அனுபவம் அப்படி. அதுக்குப் பதிலாப் பொடிநடையா நடந்தே போயிறலாம்:-))))//

ப்ளைட்டுல வர்ற ஏர்ஹோஸ்டஸ் பாட்டிங்க வட சுட்டுக் கொடுத்தா நல்லா இருக்கும்

//கதிருக்கு எங்கள் அன்பு.// மிக்க நன்றி.

அப்துல்லா முகத்தில் .........ஆஹா.... எத்தனை மகிழ்ச்சி!!!!!

11:26 AM, November 30, 2010//

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...
உங்கள் ப்ளாக்கில் ஹிந்தி எழுத்துகளை கொண்ட வரைபடத்தை தவிர்த்திருந்தால் , உங்களின் ஹிந்தி எதிர்ப்பு இன்னும் நன்றாக இருந்திருக்கும் :)

12:32 PM, November 30, 2010// வாய்யா வா......உங்க வாத்தியார் உன் வாயில பொய் வரக்கூடாதுன்னு சொல்லி இருப்பார், அவரிடம் சார் இப்பதான் உங்க வாயிலேர்ந்து 'பொய்' வந்ததுன்னு சொல்லி இருப்பியோ.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
இங்கே ஒரு செங்கதிர் இருப்பதால் கதிரவன் ஓய்வெடுத்து மழையை அனுப்பி விட்டானோ .//

:) நன்றி !


//கிடைத்த சில ஆயிரம் கோடிகளுக்காக சில லட்சம் கோடிகளை நட்டப்படுத்தியது கொடுமை. இதுவரை எந்த அரசியல்வியாதியாவது தண்டணை அடைந்திருந்தால்தானே இவர்களுக்கு பயம் வரும். மக்கள் சக்தி, ஜனநாயகப் பண நாயகம்.:(

2:42 PM, November 30, 2010
//

இவர்களுக்காகவே மேல் கோர்ட் கீழ் கோர்ட் எல்லாம் வச்சிருக்காங்க எல்லா கோர்டிலும் ஏறி இறங்குவதற்குள் நரசிம்ம ராவ் போல் மண்டையைப் போட்டுவிடலாம் என்பதை திடமாக நம்பியே ஊழல் செய்கிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...
பரவா இல்லையே - உடனே இடுகை இட்டாயிற்றா ? செங்கதிர் அப்துல்லா கையில் - இருவருக்கும் மகிழ்ச்சி - மதுரைக்குக் கூட்டி வந்திருக்கலாம்ல - ம்ம்ம்ம்

3:09 PM, November 30, 2010//

கூட்டி வரும் வயது குழந்தை இல்லை, இன்னும் 4 மாதம் முடியவில்லை. அடுத்த முறை வருகிறோம்

KOTTAKUPPAM சொன்னது…

நண்பர் கண்ணன் அவர்களுக்கு, உங்கள் எழுத்து வலிமையானது என்று மிண்டும் ஒருமுறை நிருபம், இன்று 01/12/2010 தினமணி தலையங்கம் நீங்கள் சொன்ன தகவல் தான். வாழ்த்துக்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்