பின்பற்றுபவர்கள்

11 நவம்பர், 2010

ஒருங்குறி - தினமணி குழப்பம் செய்ய முயற்சி !

தமிழுக்கான ஒருங்குறி புதிய பட்டியலில் புதீ'ய வடமொழி எழுத்துகளை நுழைத்து சர்மா என்பவர் பரிந்துரை செய்ததும் அதை தடுக்க கருணாநிதி முயன்றுவருவதும் பலரும் அறிந்ததே. இதற்கு இடையே தினமணி தலையங்கத்தில் இதனை வேறு மாதிரியாக திரித்து ஜ,ஷ,க்ஷ,ஸ, ஹ எழுத்துகளை ஒருகுறியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக அரசும், தமிழக ஆர்வலர்களும் முயற்சிப்பதாக எழுதியுள்ளது. இது ஒருங்குறி பற்றி முற்றிலும் அறியாதவர்களை குழப்பும் முயற்சியாகும், தமிழில் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ஜ,ஷ,க்ஷ,ஸ, ஹ (தமிழுக்காக உருவாக்கப்பட்ட வட அல்லது பிற மொழியில் அமைந்த தமிழில் இல்லாத ஒலி அமைந்த சொற்களை ஒலிக்கும் வட்டெழுத்துகள், இவை தமிழ் வடிவம் பெற்றவை, இந்த எழுத்துகளின் ஒலிப்பு எழுத்துகள் இந்திய மொழிகளில் கிரந்த மற்றும் வட்டார மொழி எழுத்துவடிவங்களில் இருக்கிறது என்றாலும் இந்த எழுத்தை தமிழர்கள் தவிர்த்து வேறு எவரும் படிக்க முடியாது, இவை வட எழுத்துகள் என்பது தவறான பொருள், இவை தமிழில் பிற்காலத்தில் புகுத்தப்பட்ட எழுத்துக்கள், இவற்றை முற்றிலும் எடுக்க வேண்டும் என்று எவரும் சொல்லவில்லை, ஆனால் இவற்றின் புழக்கத்தை குறிக்கும் வண்ணம் சொற்களை தமிழ் படுத்தி பயன்படுத்துங்கள் என்றே சொல்கிறார்கள்), தினமணிக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஒன்றை அரைகுறையாகப் புரிந்து கொண்டதமின்றி அந்த அரைகுறைப் புரிதலை வைத்து தலையங்கம் தீட்டி தவறான கருத்தை பரப்பி வருகிறது தினமணி

தினமணி தலையங்கத்தின் பகுதி இது கீழே,

"சம்ஸ்கிருத ஒலிப்பே இடம்பெறாத தமிழ்ச் சூழலை உருவாக்குதல் நன்று. ஆனால், தானே மெல்ல வழக்கொழிந்துவரும் 5 வரிவடிவங்களுக்காக உலகம் முழுவதும் இணைய தளத்தில் ஒன்றுபோல அனைத்துத் தமிழருக்கும் பயன்தரக்கூடிய மென்பொருளையே நிறுத்தி வைப்பது சரியல்ல. பெருவாரியான தமிழ் ஆர்வலர்களின் பேரக்குழந்தைகளின் பெயர்களை ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ இல்லாமல் உச்சரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பது முதல்வருக்குத் தெரியாதா என்ன? தேவையில்லாத சர்ச்சைகளை தேவையே இல்லாத வேளையில் கிளப்பி, மக்களின் பார்வையைத் திசை திருப்புவது என்பது அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை. இதுவும் அந்த ரகத்தைச் சேர்ந்தது என்பது மட்டும் தெரிகிறது. கண்ணெதிரில் தமிழை விழுங்கும் ஆங்கிலத்தைத் தமிழக அரசும், தமிழ்ச் சமூகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் செத்துப்போன மொழியின், செத்தஉடலாக இற்றுக்கொண்டுவரும் 5 வரிவடிவங்களுக்காகத் தமிழக அரசு வேட்டியை வரிந்துகட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கிறது. இதனால் யாருக்கு லாபம்?"


(தமிழக அரசு வேட்டியை வரிந்து கட்டாமல் பஞ்சகச்சத்தை வரிந்து கட்டினால் மகிழ்வார்களோ ?, இதைத்தான் தான் ஆடாவிட்டாலும் தன்னிடம் அனுமதிவாங்கமலேயே தான் அணிந்திருக்கும் பூணூல் ஆடும் என்பார்களோ !)

தினமணி கூறியிருப்பது யாவும் கற்பனையே. ஜ,ஷ,க்ஷ,ஸ, ஹ எழுத்துகளை யாரும் நீக்க வேண்டும் என்று குறிப்பிடாத போது தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் தினமணி ஏற்படுத்துவது எதற்காக யாரை மனநிறைவு செய்ய ? தமிழ் ஒருங்குறியில் சர்மா புகுத்தி முயன்ற புதிய 26 எழுத்துகளைத் தான் கூடாது என்கின்றனர் தமிழறிஞர்கள்.

தினமணியை கண்டனம் செய்து சங்கமித்ரன் என்பவர் எழுதிய இடுகையின் சுட்டி

14 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

உள்ளேன் அய்யா ..

ராஜரத்தினம் சொன்னது…

அப்ப ஸ்டாலினை ச்டாலின் கூப்டா தமிழ் இன்னும் ஒரு 10000 ஆண்டுகள் கூடுதலாக வாழுமா? இல்லை will it dislodge english as universal language?

ராவணன் சொன்னது…

http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=19710&id1=4

இதில் உள்ள சிங்கப்பூர் அரவிந்தன்(தகவல் தொழில் நுட்ப நிபுணர்) யார் என்று தெரிகின்றதா?

கருணாநிதியின் புத்திக்கும், தினமணி புத்திக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
இரண்டும் உருவான இடம் ஒன்றே!

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜரத்தினம் said...
அப்ப ஸ்டாலினை ச்டாலின் கூப்டா தமிழ் இன்னும் ஒரு 10000 ஆண்டுகள் கூடுதலாக வாழுமா? இல்லை will it dislodge english as universal language?

7:49 PM, November 11, 2010//

சீனர்களிடம் உங்கள் பேரைப் படிக்கச் சொன்னால் லாஜலத்தினம் என்பார்கள், அவர்களிடம் எழுத்துச் சீர்த்திருத்தம் கேட்டுவந்து கருத்துச் சொல்லுங்கள். ஆங்கிலம் வெள்ளைக்காரனுக்குச் சொந்தமான மொழி அல்ல, உலக மக்கள் பலரின் உழைப்பும் அதில் இருக்கு, அது உலகினருக்கு பொதுவான மொழி, ஆங்கிலம் தவிர்ந்து தமிழ் உட்பட வேறெந்த மொழியும் அந்தத் தகுதியை அடையமுடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//இதில் உள்ள சிங்கப்பூர் அரவிந்தன்(தகவல் தொழில் நுட்ப நிபுணர்) யார் என்று தெரிகின்றதா?// சத்தியமாக தெரியலைங்கண்ணா.

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரியமுடன் பிரபு said...
உள்ளேன் அய்யா ..

11:09 AM, November 11, 2010// யெஸ் சார் யெஸ் சார் த்ரி பேக் புல் :) குவாட்டர், ஆப் பெல்லாம் கிடையாது

ஆ.ஞானசேகரன் சொன்னது…

வணக்கம் கண்ணன்

ரிஷபன்Meena சொன்னது…

அப்ப ஸ்டாலினை ச்டாலின் கூப்டா தமிழ் இன்னும் ஒரு 10000 ஆண்டுகள் கூடுதலாக வாழுமா? இல்லை will it dislodge english as universal language?

7:49 PM, November 11, 2010//

சீனர்களிடம் உங்கள் பேரைப் படிக்கச் சொன்னால் லாஜலத்தினம் என்பார்கள், அவர்களிடம் எழுத்துச் சீர்த்திருத்தம் கேட்டுவந்து கருத்துச் சொல்லுங்கள். ஆங்கிலம் வெள்ளைக்காரனுக்குச் சொந்தமான மொழி அல்ல, உலக மக்கள் பலரின் உழைப்பும் அதில் இருக்கு, அது உலகினருக்கு பொதுவான மொழி, ஆங்கிலம் தவிர்ந்து தமிழ் உட்பட வேறெந்த மொழியும் அந்தத் தகுதியை அடையமுடியாது//

உங்க பதில் புரியலையே ! என்ன சொல்ல வாரீங்க. ராச ரத்தினம் அல்லது ராஜரத்தினம் எது தமிழ் ஆர்வல்ர்கள் பார்வையில் சரி ?

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்க பதில் புரியலையே ! என்ன சொல்ல வாரீங்க. ராச ரத்தினம் அல்லது ராஜரத்தினம் எது தமிழ் ஆர்வல்ர்கள் பார்வையில் சரி ?

1:04 PM, November 12, 2010//

அரசு, அரசன் என்ற தமிழ் சொல்லில் இருக்கும் ச வை சரியாக சொல்லத்தெரியாமல் அரஜன் என்பதாக வடமொழியாளர்கள் மாற்றி பின்னர் ராஜன், ராஜா என்று அவரகளுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டனர். இப்பவும் வேட்டி என்றச் சொல்லை பார்பனர்கள் வேஷ்டி என்றும் கோயில் என்ற சொல்லை கோவில் என்றும் தான் எழுதி பிறருக்கும் அதையே பழக்கி இருக்கின்றனர். தோசையை தோசா என்று சிலர் எழுதிவருவதால் தோசையை தோசா என்று எழுதுவது தான் சரி என்று சொல்லமுடியுமா ?

ரிஷபன்Meena சொன்னது…

அப்ப ஸ்டாலின்- ஐ ஸ்டாலின் என்று எழுதலாம் என்பதாகப் புரிந்து கொள்கிறேன்.

வடமொழியா தமிழ் மொழியா என்ற விவகாரத்துக்குள் நுழைய விரும்பவில்லை.

Fridge, Genarator போன்றவார்த்தைகளை சரியான உச்சரிப்பில் தமிழில் எழுத அந்த எழுத்துக்கள் அவசியம். அதை மொழி மாற்றம் செய்து நடைமுறையில் யாரும் பயன்படுத்துவதில்லை.

ராஜரத்தினம் சொன்னது…

//சீனர்களிடம் உங்கள் பேரைப் படிக்கச் சொன்னால் லாஜலத்தினம் என்பார்கள்//
அதற்கு காரணம் அவர்கள் மாண்ட்ரினில் லாஜா என்றால் Spciy என்பதால் அவர்கள் என்னை நான் சைனாவில் இருக்கும்போது அப்படிதான் அழைப்பார்கள். அப்ப என் பேரை லாஜானு மாத்திக்கட்டுமா?

கோவி.கண்ணன் சொன்னது…

// ராஜரத்தினம் said...
//சீனர்களிடம் உங்கள் பேரைப் படிக்கச் சொன்னால் லாஜலத்தினம் என்பார்கள்//
அதற்கு காரணம் அவர்கள் மாண்ட்ரினில் லாஜா என்றால் Spciy என்பதால் அவர்கள் என்னை நான் சைனாவில் இருக்கும்போது அப்படிதான் அழைப்பார்கள். அப்ப என் பேரை லாஜானு மாத்திக்கட்டுமா?

2:24 PM, November 14, 2010//

அவங்க மொழியில் இல்லாத ஒன்றை உங்கப் பேரைச் சரியாக அவர்கள் சொல்ல நீங்கள் ஏன் அவர்களுக்கு எழுத்து சீர்த்திருத்தம் பற்றி அறிவுறுத்தல் செய்யக் கூடாது ? அறிவழகன், அழகிரி என்ற பெயரை வடமாநிலத்தவர் சரியாகச் சொல்லமாட்டார்களாம், தேவநகரி எழுத்தில் ழ சேர்க்கச் சொல்லி அவர்களுக்கு நீங்கள் பரிந்துரை செய்யலாமே

Indian சொன்னது…

////இதில் உள்ள சிங்கப்பூர் அரவிந்தன்(தகவல் தொழில் நுட்ப நிபுணர்) யார் என்று தெரிகின்றதா?// சத்தியமாக தெரியலைங்கண்ணா.//

கனிமொழியின் கணவர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ரிஷபன்Meena
அப்ப ஸ்டாலின்- ஐ ஸ்டாலின் என்று எழுதலாம் என்பதாகப் புரிந்து கொள்கிறேன்.

வடமொழியா தமிழ் மொழியா என்ற விவகாரத்துக்குள் நுழைய விரும்பவில்லை.

Fridge, Genarator போன்றவார்த்தைகளை சரியான உச்சரிப்பில் தமிழில் எழுத அந்த எழுத்துக்கள் அவசியம். அதை மொழி மாற்றம் செய்து நடைமுறையில் //

Fridge - குளிர்சாதனப் பெட்டி, Genarator - உற்பத்தி எந்திரம் என்று சொல்ல தமிழுருக்க ஏன் தேவையற்ற எழுத்துக்களைச் சேர்க்க வேண்டும் ? கத்தார் நாட்டை ஆங்கிலத்தில் எப்படி எழுதுகிறார்கள் ? வெள்ளைக்காரர்களுக்கு எழுத்துச் சேர்க்கச் சொல்லி பரிந்துரைக்கலாமெ ? அனைத்து மொழிகளிலும் இல்லாத ழ வை அந்தந்த மொழிகளுக்குள் சேர்க்கச் சொல்லி பரிந்துரைக்கலாமே

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்