பின்பற்றுபவர்கள்

4 நவம்பர், 2010

கலவை 04/நவ/2010 !

பதிவு எழுத மேட்டர் தேத்துவதைவிட இப்போதெல்லாம் பதிவு எழுத நேரம் கிடைக்கவில்லை எனக்கு. வீட்டில் இருக்கும் போது குழந்தைகளுடன் இருப்பதற்கே நேரம் சரியாக இருக்கும், கையில் ஐபோன் இருப்பதால் கணிணியை திறக்காமலேயே இணையத்தை மேய்ந்துவிட முடிகிறது, அரசியல் விமர்சனம் எழுதி அலுத்துப் போச்சு. நாம எழுதுவதால் எதுவும் மாறப் போவதில்லை என்றாலும் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகளில் கட்சிக்காரர்கள் அனைவருமே மனசாட்சி அற்றவராக இருக்கும் பொழுது (இவங்களெல்லாம் மனுசப் பிறப்பான்னு கூட நினைச்சுப் பார்ப்பேன்) நம்மைப் போன்ற மனநிலை உள்ளவர்களுக்காக பகிர்தல் என்ற அளவில் தான் எனது அரசியல் விமர்சனங்கள், பொதுமக்களின் வெறுப்பு ஆளாகுபவர்கள் எவராக இருந்தாலும் ஆட்சி அமைக்கவே முடியாது என்பது கடந்தகாலப் பாடம், அதையும் ஊடக தந்திரங்கள் இலவசங்கள் என்பதாக (ஆளும்)அரசியல்வாதிகள் வென்றுவரும் வேலையில் எவன் இருந்தால் என்ன செத்தால் என்ன நமக்கு பிரச்சனை இல்லாதவரை சரிதான். மக்கள் உணர்வற்று அல்லது உணர்வுகள் மழுங்கடிக்கப் படுவது தொடர்ந்து என்றுமே நடைபெறாது, மக்கள் சோம்பிக் கிடந்த நாடுகளில் தான் புரட்சிகள் வெடித்துள்ளன, அந்த புரட்சி சிங்களர்களால் அன்றாடம் துன்புறுத்தபடும் மீனவ சமுதாயத்திடமிருந்தோ, இலவசம் என்று எதுவும் கிடைக்கப் பெறாமல் பரபரப்பாக அன்றாடம் வேலைக்குச் சென்றுவரும் பொதுச் சமூகத்திடமிருந்தோ கூடத் ஏற்படலாம். ஒருவிதத்தில் அரசியல்வாதிகள் ரிஸ்க் எடுக்கிறவர்கள் தான் அவர்களால் தானே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடிவது போல் சிறைச்சாலைக்குள் அலுமினிய தட்டில் சாப்பிடவதற்கான வாய்ப்புகளும் அடுத்து அடுத்து நடக்கிறது :) அரசியல்வாதிகளால் சூழப்பட்டுள்ள இந்தியர்களுக்கு தீபாவளி வெள்ளைக்காரன் போனவுடனே போச்சு :)

பணக்காரர்களின் குழந்தைகள் கடத்தப்படுவது வாடிக்கையாகத் தொடர்கிறது, இதில் இரு குழந்தைகள் மிகவும் கொடுமையான முறையில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பணக்காரன் வீட்டில் குழந்தையாகப் பிறப்பதும் கூட பாவம் என்ற நிலைக்குச் சென்றிருப்பது பொருளாதார ஏற்றத்தாழ்வு சமச்சீரின்மையின் வேறு கோணம் தான். குற்றவாளிகள் பிடிப்பட்டது ஆறுதல் அளிக்கிறது, இருந்தாலும் இவை தொடராது என்பதற்கு எந்த பற்றுறுதியும் கிடையாது. ஏழைக் குழந்தைகள் போலி சாமியார்களின் நரபலிக்கோ, சமூக விரோதிகளானால் பிச்சை எடுக்கவோ கடத்தப்படுகிறார்கள், பணக்காரக் குழந்தைகள் பணத்துக்காகக் கடத்தப்படுகிறார்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் என்பதில் இவை அனைத்தும் ஒன்றே. குழந்தைகளை குறித்தக் குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

தீபாவளி சந்தைகள் சிங்கையில் மலேசியாவிலும் களைகட்டியுள்ளது, குட்டி இந்தியா செரங்கூன் சாலை வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறது, விறுவிறுப்பான தீபாவளி சந்தை விற்பனை நடைபெறுகிறது, நான் சென்று வந்த மலேசியா ஜோகூர் பகுதியிலும் அதே நிலைதான், வண்ண விளக்குகள் இல்லை, ஆனால் நிறைய தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. எங்க வீட்டுக் குட்டிப்பையனு இது முதல் தீபாவளி, அதைவிட வேறு ஒண்ணும் எங்களுக்கு இந்த தீபாவளியில் தனிச் சிறப்பு கிடையாது.
(JB- Malaysia)


(Near Perumal Temple, Serangoon Road, Singapore)

(Near Teka Market, Serangoon Road, Singapore)

பலரையும் உடனேயே ஈர்க்க் கூடிய திரைப்படம், பாலியல் ஜோக்குகள் போன்ற மார்கெட்டிங்க் யுத்திகள் எதுவும் இல்லாமல் அன்றாடம் பயன்படுத்தும் கணிணி தொடர்பான வெறும் தொழில் நுட்பப் பதிவுகளை மட்டுமே எழுதி ஏராளமான பின் தொடர்பவர்களைப் பெற்று அலெக்சா பட்டியலில் முதல் ஒரு லட்சம் இணையத்தளங்களுக்கான தர வரிசையில் ஒருவராக பதிவர் வேலன் இடம் பிடித்திருக்கிறார். இதன் மூலம் திரைப்படம், பாலியல் சாராத தகவல்கள் கூட பலரிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன, எழுத்து முயற்சியும் பயனுள்ள தகவல்களும் கூட சிறந்த வரவேற்பை பெற முடியும் என்ற நம்பிக்கையை பலருக்கும் பெற்று தந்திருக்கிறார். வாழ்த்துகள் வேலன் சார்.

*****

பதிவர் உறவுகள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்

13 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

குடும்பத்தினர் அணைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள். அலுமினியத்தட்டில் இங்கே இருப்பவர்கள் சாப்பிடும் காலம் வரும் என்பதை நீங்களூமுமா நம்புறீங்க. சிலை வைப்பதற்காக இடம் இருக்கிறதா என்பதை அதிகாலை வேலையில் போய் பார்ப்பது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Kodees சொன்னது…

கோவி சார், அங்கே IPHONE 4G என்ன விலை?

Unknown சொன்னது…

தீபாவளி எப்போதும் சிங்கையில் சிராங்கூன் ரோடு களைகட்டும்...

iniyavan சொன்னது…

கோவி சார்,

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஈரோடு கோடீஸ் said...
கோவி சார், அங்கே IPHONE 4G என்ன விலை?

3:24 PM, November 04, 2010//

1200 வெள்ளிக்கு மேல் இருக்கும்னு நினைக்கிறேன். இங்கு யாரும் ரொக்கம் கொடுத்து வாங்குவதில்லை, மொபைல் இணைப்பு நிறுவனங்கள் Plan க்கு ஏற்றார் போல் குறைந்த விலைக்கு விற்கிறார்கள். நான் வைத்திருப்பது 3GS இரண்டு ஆண்டு சந்தா செலுத்தனும், இன்னும் ஒராண்டு முழுதாக இருக்கு. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிஜி said...
குடும்பத்தினர் அணைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள். அலுமினியத்தட்டில் இங்கே இருப்பவர்கள் சாப்பிடும் காலம் வரும் என்பதை நீங்களூமுமா நம்புறீங்க. சிலை வைப்பதற்காக இடம் இருக்கிறதா என்பதை அதிகாலை வேலையில் போய் பார்ப்பது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

2:28 PM, November 04, 2010//

தங்கள் இல்லத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// எழுத்து முயற்சியும் பயனுள்ள தகவல்களும் கூட சிறந்த வரவேற்பை பெற முடியும் என்ற நம்பிக்கையை பலருக்கும் பெற்று தந்திருக்கிறார். வாழ்த்துகள் வேலன் சார்.//

என்னைபொருத்தவரை இது முற்றிலும் உண்மை. பலரையும் உடனேயே ஈர்க்க் கூடிய திரைப்படம், பாலியல் ஜோக்குகள் போன்ற மார்கெட்டிங்க் யுத்திகள் எதுவும் இல்லாமல் நிறைய பதிவுகள் சரியான வாசகர்களை சென்று அடைவது கண்கூடு. அதே போல் நண்பர் சூர்யா கண்ணனும் தெழில் நுட்ப வரிசையில் இந்த தரவரிசையில் முதல் இடத்தில் வருகிறார் எனபதும் மகிழ்ச்சியான செய்திதான் . இங்கு சகலமும் இருக்கும். யார்யாருக்கு ஏது வேண்டுமோ அவைகளை நோக்கி செல்கின்றனர். நன் நம் வேலையை செய்வோம். அதுவே சுகம் இல்லையா?

ராவணன் சொன்னது…

பார்த்தேனே....இன்று உங்களைப் பார்த்தேனே.964 பஸ்ஸில் இருந்து இறங்கினீர்கள்,Admiralty MRT யில் உங்களைப் பார்த்தேன்.வேலை இப்போது உட்லண்ட்ஸ் பகுதியிலா?
964 என்றால் உட்லண்ட்ஸ் செக்டார், அல்லது உட்லண்ட்ஸ் ஸ்பெக்ட்ரம்?
பெரிய நிறுவனங்கள் ஏதும் இல்லையே?

நம்ம பையன் ஒருத்தன் என்னைப் பார்க்கவேண்டும் எனக்கேட்டான்,
அவனுக்காக அட்மிரால்டியில் காத்திருந்தேன்.அவனும் அதே 964 பஸ்ஸில் வந்தான்.

நீங்கள் உட்லண்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் பகுதியில் பஸ் ஏறியதாகவும், கடைசி இருக்கையில் அமர்ந்ததாகவும் நம்ம பையன் சொன்னான்.கழுத்தில் தொங்கிய போன் வைத்து நம்ம பையனும் அடையாளம் கண்டான்.

தளர்ந்த நடை ஏனோ? ஒன்றும் வயதானவராகத் தெரியவில்லையே?

கோவி.கண்ணன் சொன்னது…

இராவணன் என்னைப் பார்த்திருந்தால் அழைத்துப் பேசி இருக்கலாமே. :(

நீங்கள் கூறிய விவரங்கள் சரி. நான் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் 964 கடைசி நிறுத்தம் அருகில் தான் வேலை செய்கிறேன். கார் வாங்க இன்னும் ஓட்டக் கற்றுக் கொள்ளவில்லை :)

a சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள்........

தேவன் மாயம் சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துகள் !

ராவணன் சொன்னது…

//இராவணன் என்னைப் பார்த்திருந்தால் அழைத்துப் பேசி இருக்கலாமே. :(

நீங்கள் கூறிய விவரங்கள் சரி. நான் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் 964 கடைசி நிறுத்தம் அருகில் தான் வேலை செய்கிறேன். கார் வாங்க இன்னும் ஓட்டக் கற்றுக் கொள்ளவில்லை :)//

நானாக யாரிடமும் பேசுவதில்லை, என்னிடம் பேசுபவர்களிடம் சில வார்த்தைகள் பேசுவேன்,
நான் பேசுவது மிக மிகக் குறைவு.

நீங்கள் யூசூன் பகுதியில் பணிபுரிவதாக எண்ணியிருந்தேன்.
இப்போது மாற்றமா?

தெரிந்திருந்தால் எனது காரிலேயே(!) drop செய்திருப்பேனே.

அது கடைசி நிறுத்தம் அல்லவாம்..இன்னுமொரு நிறுத்தம் உள்ளதாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நானாக யாரிடமும் பேசுவதில்லை, என்னிடம் பேசுபவர்களிடம் சில வார்த்தைகள் பேசுவேன்,
நான் பேசுவது மிக மிகக் குறைவு.//

என்கிட்டேயும் குறைவாக பேசி இருக்கலாம். எனக்கு மொக்கை பார்டிகளை பிடிக்காது :)

//நீங்கள் யூசூன் பகுதியில் பணிபுரிவதாக எண்ணியிருந்தேன்.
இப்போது மாற்றமா?//

Manufacturing Industry இருக்கும் இடங்களில் தான் இதுவரை பணி புரிந்து இருக்கிறேன். உபி, துவாஸ் தற்போது உடலண்ட்ஸ்.

//தெரிந்திருந்தால் எனது காரிலேயே(!) drop செய்திருப்பேனே.// சொந்தக்கார் காரரா :) நாள் தோறும் அலுவலக நண்பர் தான் என்னை அவரது உந்தில் அழைத்துவருவார், சில நாட்களில் அவருக்கு பணி மிகுந்து இருக்கும் போது நான் பேருந்து எடுத்துவருவேன்.

//அது கடைசி நிறுத்தம் அல்லவாம்..இன்னுமொரு நிறுத்தம் // ஐயோ சாமி அது லூப் பஸ் கடைசி நிறுத்தம் முதல் நிறுத்தம்னு எதுவும் கிடையாது. சரி சரி அடுத்த முறை பார்க்க நேர்ந்தால் பேசுங்கள். பார்த்தும் விலகிப் போற அளவுக்கான ஆள் நான் இல்லைன்னு தான் நினைக்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்