பின்பற்றுபவர்கள்

8 ஆகஸ்ட், 2010

எந்திரனுக்கு உயிர் கொடுக்கும் எஸ்பிபி !

எந்திரனில் அனைத்துப் பாடல்களும் எனக்கு திரும்பக் கேட்டப் போது பிடிக்க துவங்கினாலும், முதல் முறை கேட்ட போதே பிடித்தப் பாடல் 'புதிய மனிதா பூமிக்கு வா'. படத்தில் இந்தப் பாடல் முதல் பாடலாக இருக்கும் என்று நினைக்கிறேன். எந்திரனை வடிவமைக்கும் ரஜினி அதை எழவைக்கும் போது பாடும் பாடல் போன்று வரிகள் இருக்கின்றன.

ரஜினிப் படங்கள் எனக்கு பிடிக்கக்காரணமானது எஸ்பிபி குரலில் படத்தில் ஒரே ஒரு சூப்பர் பாடலாகவது அதில் இருக்கும் என்பதால் தான், ரஜினிக்கு எஸ்பிபி பாடாத படங்கள் மிகக் குறைவு. எஸ்பிபியின் குரல் ரஜினிக்கு மட்டுமல்ல எந்த ஒரு நடிகருக்கும் பொருந்தும் குரல் தான். எம்ஜிஆர் துவங்கி இன்றைய முன்னனி நடிகர்கள் அனைவரும் எஸ்பிபி பாடல்களுக்கு வாயசைத்திருக்கிறார்கள். சர்கரையில் பிசைந்த பலாச்சுளைப் போன்ற எஸ்பிபி குரல் தமிழுக்குக் கிடைத்தது எம்ஜிஆரின் முயற்சி. அன்று துவங்கிய பாடும் நிலா... என்றுமே இசைவானின் முழு நிலவு தான்.

எந்திரனில் எஸ்பிபி பாடலில் குரல் ஏற்றக் இரக்கம் (ஹைப் பிச், லோ பிச்) அடுத்து அடுத்து அமைந்தப் பாடல் 'புதிய மனிதா பூமிக்கு வா'. பல்லவி சரணங்களுக்கு பிறகு எஸ்பிபியின் குரல் பாட்டில் வருகிறது. 'அரிமா...அரிமா' பாடலும் எஸ்பிபி பாடியிருந்தால் இன்னும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

கருவில் பிறந்தது எல்லாம் மரிக்கும்,
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை -

என்பதாக எந்திரன் என்னும் ரோபோவினை உருவாக்கும் இறுதியில் அதன் சிறப்புகளைச் ரஜினி சொல்லி சொல்லி எந்திரனை உயிரூட்டுவதாக எழுதப்பட்டப் பாடல். இடையே 'எந்த மொழி அறிந்திருந்தாலும் என் தந்தை மொழி தமிழ் அல்லவா' என்ற வரிகள் ரஜினியைக் குறிப்பதாக வருகின்றன. ரஜினியின் தமிழ் பால் தற்போது அதே வைரமுத்துவினால் 'தந்தை மொழி' ஆகி இருக்கிறது. தந்தை மொழி, தந்தையர் நாடு இவை போன்றவை வலதுசாரி சிந்தனை என்பதாகச் சொல்லுவார்கள். திராவிடர்கள் தாய்நாடு என்றும் ஆரியர்கள் தந்தையர் நாடு என்று சொல்லுவார்கள் (தந்தையர் நாடெனும் போதினிலே சக்தி பிறக்குது மூச்சினிலே - பாரதியார்) வைரமுத்து எதை வைத்து அப்படி எழுதினார் என்றே தெரியவில்லை. தமிழர் பண்பாட்டுக்கேற்ப தாய்மொழி என்றே சொல்லி இருக்கலாம்.

'புதிய மனிதா பூமிக்கு வா' பாடல் ஏஆர் ரஹ்மானின் குரலில் பல்லவியாகத் தொடங்குகிறது, தொடர்ந்து ரஹ்மானின் மகள் கதீஜா தொடர்கிறார், பிறகு எஸ்பிபி பாடுகிறார். கதீஜாவின் குரல் கிடதட்ட இந்திராவில் 'நிலா...காய்கிறது ' பாடிய போது இருந்த ஹரினியின் குரல் போன்றே இனிமையாக இருக்கிறது. முழுநேரப் பாடகி ஆகும் குரல் வளம். முதன் முறையாக கதீஜா எஸ்பிபியுடன் இணைந்து பாடும் பாடலாக அமைந்திருப்பதும் அவருக்கும் மற்றொரு சிறப்பு.

எனக்கு எல்லா பாடகர்/பாடகிகளின் குரலும் பாடலுக்கு ஏற்ப பிடிக்கும் என்றால் எஸ்பிபி பாடும் எந்தப் பாடலும் அவரது குரலுக்காவே பிடிக்கும்.

எஸ்பிபி ரஜினிகாகப் பாடிய 'ஒருவன் ஒருவன் முதலாளி', 'எம்பேரு படையப்பா', 'தேவுடா தேவுடா' போன்ற படு வேகப் பாடல்கள் போல் அல்லாது எந்திரனில் கொஞ்சம் அதிரடி, கொஞ்சம் அமைதியான பாடலாகத்தான் இருக்கிறது. பின்னரவில் அமைதியான சூழலில் கேட்க சிறப்பாக இருந்தது.

10 கருத்துகள்:

ஜோ/Joe சொன்னது…

//எஸ்பிபி குரல் தமிழுக்குக் கிடைத்தது எம்ஜிஆரின் முயற்சி.//
இப்படி போற போக்குல எதையாவது அள்ளி விடக்கூடாது .

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

'புதிய மனிதா பூமிக்கு வா' .... கேட்டுப் பார்த்தேன் ... பரவாயில்லை ரகம் ... வணிக சினிமாவை வணிக சினிமாவாக அணுகாமல் பகுத்தறிகிறேன் கட்டுடைக்கிறேன் பரட்சி செய்கிறேன் பேர் வழி என அணுகாமல் இயல்பாக அணுகியதற்கு எனது வாழ்த்துக்கள். தீராத பக்கத்தில் எனது எதிர்வினையை சற்றே காட்டமாக பின்னூட்டினேன்;வெளியிடுவாரா எனத் தெரியவில்லை ...

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

தீராத பக்கத்தில் நானிட்ட பின்னூட்டம் ...

முப்பத்தைந்து வாக்குகள் வாங்கி தமிழ் மண உச்சியில் அமர்வதற்கு இந்த பதிவிற்கு என்ன தகுதியிருக்கிறது என பல முறை உங்கள் பதிவை படித்துப் பார்த்தும் எனக்கு ஒன்றும் புரிபடவில்லை... மொக்கை பதிவு ஒன்று உச்சியில் அமர்வது குறித்து எனக்கு வருத்தமில்லை தான்;ஆனாலும் லேபிளில் மொக்கை என்று இல்லாததால் தான் வருத்தம் ! கோவி கண்ணன் அவர்கள் உங்களை குறித்து எழுதிய பதிவு ஒன்று மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் கம்யூனிச உறுப்பினர்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் நிரம்பி வழிவதற்கு என்ன காரணம் என்று இந்த பதிவை படிக்கும் போதே தெரிகின்றது.

//சத்யஜித்ரேவையெல்லாம் எங்கே கொண்டு போய் வைக்க என்று தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட சினிமா அறிவு இவருக்குத்தான்! //
உங்களின் அறிவும் என் உச்சந்தலையை குளிரச்செய்கிறது ... வணிக சினிமா நிகழ்வொன்றில் சத்யஜித்ரேயை கண்டுபிடிக்கும் ஆற்றல் ....

//அதன் வெளியீடு நடப்பதற்குள், என்ன திகிடுதத்தங்கள் எல்லாம் நடக்க இருக்கிறதோ! அதையெல்லாம் அவரவர் புத்திசாலித்தனத்துக்கேற்ப கலர் கலராய் வாந்தியெடுத்து, பிரமாதப்படுத்துவதற்கு என்று பலரும் இருக்கிறார்கள். சமூகப் பார்வையும், சினிமா குறித்து அக்கறையும் அற்ற இந்த ஜென்மங்களை என்ன செய்வது? //

யோவ்..மாதவராஜ் ... வேலை வெட்டி இல்லாம சுரணை கெட்டு எந்திரன் நிகழ்வு ஒண்ணு விடாம எல்லாத்தையும் பாத்துட்டு நீர் பேசுற பேச்சு குமட்டிகிட்டு வர்துய்யா ... ஐநூறு ரூவா குடுத்து போயிட்டு வந்தவன் சொன்னானாம் இனி யாரும் போகாதீங்க அவளுக்கு அங்கேசொறின்னு !

பி கு : நான் ரஜினி,ரகுமான்,சங்கர் ,கலாநிதி மற்றும் கோவி கண்ணனின் ரசிகன் அல்ல! ரஜினி,சங்கர் படங்கள் எதையும் திரையரங்குக்கு போய் இதுவரை பார்த்ததில்லை;இனியும் தான்.

ஆயிரம் ரூபா கொடுத்து எந்திரன் முதல் காட்சி பார்த்துவிட்டு மாதவராஜ் எழுதப்போகும் "எந்திரன்:தமிழ் ரசிகனுக்கு ஒரு எச்சரிக்கை" பதிவிற்கு ஓட்டுப் போடும் படி இப்போதே நண்பர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஜோ/Joe சொன்னது…

//முப்பத்தைந்து வாக்குகள் வாங்கி தமிழ் மண உச்சியில் அமர்வதற்கு இந்த பதிவிற்கு என்ன தகுதியிருக்கிறது என பல முறை உங்கள் பதிவை படித்துப் பார்த்தும் எனக்கு ஒன்றும் புரிபடவில்லை... //

+1

பித்தனின் வாக்கு சொன்னது…

/// 'எந்த மொழி அறிந்திருந்தாலும் என் தந்தை மொழி தமிழ் அல்லவா' என்ற வரிகள் ரஜினியைக் குறிப்பதாக வருகின்றன. //

anna rajini appa dharmapuriyila irunthu karnadakavukkup ponavar. ithai indirect aaka solla thanthaiyar nadunnu solranga,

enakku therinthathu ammpututhangoooo

ராஜரத்தினம் சொன்னது…

// தந்தை மொழி, தந்தையர் நாடு இவை போன்றவை வலதுசாரி சிந்தனை என்பதாகச் சொல்லுவார்கள்//

வலதுசாரி உமக்கு பிடிக்காது. இடதுசாரியாவது உமக்கு பிடிக்குமா? இல்லை நடுநிலைசாரியா?
இது சரியா? சித்த சொல்லுங்கோன்னா?

கோவி.கண்ணன் சொன்னது…

//வலதுசாரி உமக்கு பிடிக்காது. இடதுசாரியாவது உமக்கு பிடிக்குமா? இல்லை நடுநிலைசாரியா?
இது சரியா? சித்த சொல்லுங்கோன்னா?//

வலது பக்கம், இடதுபக்கம் எந்தப் பக்கம் அரித்தாலும் என் கையால் தான் சொறிஞ்சுக்குவேன்

Unknown சொன்னது…

//தந்தை மொழி தமிழ் அல்லவா

ஒரு ஆண் விஞ்ஞானி உருவாக்கிய இயந்திரம் மனிதன் போல் அறிவு பெற்று யோசிக்கும் போது தன் தந்தையாக அந்த விஞ்ஞானியை நினைக்கிறது.

அதனால்தான் தந்தை மொழி என்று வித்தியாசமாக எழுதியுள்ளார் கவிஞர்.

இந்த பாடலில் எஸ்பிபின் குரல் ஆரம்பிக்கும்போது ஒரு மின்சாரம் பாய்வதை உணர முடிகிறது.

அவர் குரல் வயதாக வயதாக ’ஒப்பனைக் கலைஞர்’ இல்லாமலே இளமையாகிறது :)

Karthick Chidambaram சொன்னது…

//சர்கரையில் பிசைந்த பலாச்சுளைப் போன்ற எஸ்பிபி குரல் தமிழுக்குக் கிடைத்தது எம்ஜிஆரின் முயற்சி// - உண்மை

என்திரனில் எல்லா பாடலும் நல்லா இல்லை என்று நண்பன் சொன்னான். உங்கள் கருத்து ?

Bruno சொன்னது…

//வைரமுத்து எதை வைத்து அப்படி எழுதினார் என்றே தெரியவில்லை. //

எந்திரன் என்பனை உருவாக்கிய விஞ்ஞானி ஆண்

எந்திரனுக்கு தாய் கிடையாது, தந்தை மட்டும் தான்

எனவே......

(படம் வரும் வரை ஊகம் மட்டும் தான்)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்