நாகூர், நாகப்பட்டினம் பகுதியில் பிறந்து வளர்ந்ததால் இஸ்லாமியர்கள் வாழ்வியல் முறைகள் பற்றி ஓரளவு எனக்கு தெரியும். இஸ்லாமியர்கள் பற்றிய எனது சிறுவயது எண்ணம், அவர்கள் இந்து கோவில்களுக்கு வரமாட்டார்கள். மசூதிக்கு செல்பவர்கள், மாறுபட்ட உடை பழக்க வழக்கம் கொண்டவர்கள் என்பதே. எங்கள் வீட்டினருக்கும் நெருக்கமான இஸ்லாமிய குடும்பங்கள் உண்டு. நாங்களும் இஸ்லமிய சிறுவர்களும் விளையாடும் போது அவர்கள் / நாங்கள் வேறு என்பதாக நினைத்தது கிடையாது. பெரியவர்கள் அளவிலும் பண்டிகைகளில் உணவுகள் இடம் மாறும். பெரியவர்கள் அளவில் இஸ்லாமிய சிறுவர்களை சுன்னத் பற்றி கிண்டல் அடிப்பதுடன் சரி. இஸ்லாமிய சிறுமிகள் எட்டு வயதிற்கும் மேலும் தெருவில் உள்ள மற்ற சிறுமிகளுடன் விளையாடிப் பார்த்தது கிடையாது. எட்டு வயதிலிருந்து தாவணிகள் அணியும் வழக்கத்திற்கு சிறுமிகள் சென்றிருப்பார்கள். பளபளப்பான சரிகை வகை உடைகளை அணிந்திருப்பார்கள். பள்ளி ... பள்ளி விட்டால் வீடு என்பதாகவே இஸ்லமிய சிறுமிகளின் நடவெடிக்கைகள் மாறி இருக்கும். "சின்ன வயதிலேயே தாவணிப் போட்டு வீட்டோடு இருப்பதால் சிறுமிகளுக்கு கூச்ச உணர்வு ஏற்பட்டுவிடுகிறது, பெரியவளானதும் ஆண்களைக் கண்டால் அவர்களுக்கு உடனேயே கூச்சம் வந்துவிடுகிறது, வீட்டுக்கு அடங்கி இருக்கிறார்கள்" என்று எங்க வீட்டு பெரியவர்கள் பேசிக் கொள்வார்கள். இப்போது நினைத்துப் பார்த்தால் பெண் வீட்டினுள் அடங்கி இருக்கவேண்டும் என்று விரும்பவர்களாக எங்கள் வீட்டு பெரியவர்களும் விரும்பி இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
சிறுவயது முதலே உடைக்கட்டுப்பாடு, குறிப்பிட்ட உடை என்ற அளவில் பழக்கப்படுத்தப்படுவதால் இஸ்லாமிய பெண்களைப் பொருத்த அளவில் கைகள், இடுப்பு, கழுத்து பகுதி வெளியே தெரிய உடை அணிவது அவர்களது வளர்ப்பு முறையால் அவர்களை மிகவும் கூச்சப்படுத்தும். விரும்பி பர்தா அணிகிறார்கள் என்பதைவிட அது தான் தங்கள் உடலுக்கும், கூச்ச உணர்விற்கும் பாதுகாப்பு என்பதாக இயல்பாகவே பர்தா அணிந்தே வெளியே செல்வார்கள். பொது இடத்தில் அவர்களால் மற்ற பெண்களைப் போல் பர்தா இல்லாமல் இருப்பது வேட்டி மட்டுமே அணிந்து வந்த ஒருவரை ஒரு நாள் பேண்ட் போடச் சொன்னால் அவர் நெளிவதைப் போன்ற அவஸ்தைதான். என்ன தான் நாம ஆண் என்று மார்பு தட்டினாலும் ஜட்டியுடன் பலர் முன் நிற்பது நம்மால் நினைத்துப் பார்க்கவே கடினமானது தான். ஜட்டி அணிந்திருப்பது அம்மணத்தைவிட மேலானது, கோவணம் அணிந்து பலர் வேலை செய்வதைப் பார்த்து இருக்கிறோம். இருந்தும் நம்மால் பொது இடத்தில் அனுமதி கொடுத்தாலும் ஜட்டியுடன் ஒரு ஆண் தான் நிற்க நேரிட்டால் வெறும் வீம்புக்கு என்பதை விட்டு விட்டு பார்த்தால் அவனுக்கு மிகுந்த கூச்சமான அனுபவமாகவே நேரிடும்.
உடை கைதெரிய அணியலாமா, இடுப்பு தெரிய அணியலாமா தொடை தெரிய அணியலாமா என்கிற விவாதங்களை விட ஒருவர் எந்தவிதமான உடைக்கு பழக்கப்பட்டு இருக்கிறாரோ அதுவே அவருக்கு பொருத்தமான உடை என்பதே உடை குறித்த கேள்விக்கு சரியான விடையாக இருக்கும். சென்னையில் இருக்கும் போது நண்பர்கள் அரை ட்ராயர் போடுவது போல் நானும் போட்டுக் கொள்ள நினைத்துப் பார்த்தால் எனக்கு மிகுந்த கூச்சம் ஏற்பட்டது. ஆனால் சிங்கை வந்த பிறகு வேலை நேரம் தவிர்த்து பலரும் அரை ட்ராயரில் தான் உலாத்துகிறார்கள். நானும் அரை டிராயருக்கு மாறிவிட்டேன். சொந்த ஊருக்குச் சென்றாலும் விமானத்தில் சென்றாலும் அரை ட்ராயர் எடை குறைந்ததாகவும் வசதியாகவும் இருப்பதாக உணர்ந்து அலுவல் தவிர்த்த வேளைகளில் அணிந்து வருகிறேன்.
எப்போதும் புடவை அணியும் அம்மாவை வெளி நாட்டிலாவது கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாம் சுடிதார் அணியச் சொன்னால் அவங்க வெட்கப்பட்டுக் கொண்டு மறுத்துவிடுவார்கள். அவர்களைப் பொருத்த அளவில் அவர்களின் வளர்ப்பு முறையில் அவர்களுக்கு ஏற்ற கண்ணியமான ஆடையாக புடவை அணிவதை நினைக்கிறார்கள். இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதும் கூட வளர்ப்பு முறையினால் தான். பர்தா அணிந்தே வளர்க்கப்பட்டவர்களால் பர்தா இன்றி வெளியே செல்வதை அவர்கள் கண்ணியம் குறைவாக நினைப்பார்கள், அவ்வாறு அவர்களால் செல்லவும் முடியாது. இப்படியான வளர்ப்பு முறைகளை அவரவர் நற்குடி வளர்பு என்று நினைத்துக் கொள்வதைத் தவிர்த்து இதில் ஒன்றும் இல்லை. என்னைப் பொருத்த அளவில் கவிஞர் பர்வின் சுல்தான புடவையுடன் தான் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்கள் ப்ர்வின் சுல்தானா வீட்டில் குழுக்கலாச்சாரம் வேண்டாம், ஒரு குழுவிற்குள் முடக்கவேண்டாம் என்று ஏனைய பெண்களைப் போல் உடை அணியட்டம் என்று அனுமதிக்கப்பட்டு அதன் படி அவர்கள் வளர்க்கப்பட்டு இருக்கலாம். அவர்களைப் பொருத்த அளவில் மற்ற பெண்கள் பொதுவாக அணியும் உடை அவர்களுக்கு கண்ணியமானது. அவர்கள் பர்தா அணியவில்லை என்பதற்காக அவர்கள் நற்குடி, இஸ்லாமிய முறைப்படி வளர்ந்தார்களா என்ற ஆராய்ச்சிகளெல்லாம் நடத்தினால் நமது பார்வை மிகக் குறுகியதே. இந்து மதத்திற்குள் பெண்களுக்கு புடவை கட்டுவதிலே கூட பல்வேறு வகைகள் இருக்கின்றன. நகரத்து பெண்களும், கிராமத்து பெண்களும் ஒரே துணி என்றாலும் புடவை கட்டும் விதம் வேறு, கிராமத்தினர் போல் நகரத்தினர் அணிவது அவர்களுக்குள் கூச்சமாகவே இருக்கும். மடிசார் எனப்படும் புடவைக் கட்டை பார்பன பெண்கள் மட்டுமே அணிகிறார்கள். மற்ற பெண்களுக்கு அதைக் கட்டினால் அவர்கள் தடுக்கி விழுந்தாலும் விழுவார்கள். புடவை கட்டுகள் ஒரு பெண்ணின் நற்குடி பற்றி எதுவும் சொல்லாதோ, அதே போன்று தான் நற்குடிக்கும் பர்தாவுக்கும் தொடர்பே இல்லை. அதை அணிவதும் அணியாததும் அவரவர் பெற்றோர் வளர்ப்பு முறை தான்.
அதே சமயத்தில் பெண்ணிய காவலாளிகள் போல் பர்தா பெண்ணை முடக்குகிறது என்று கூச்சலிடுபவர்கள் தம் இனப் பெண்களுக்கு என்ன விதமான உடை சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் என் கண் முன்னே இன்னும் கூட பல இடங்களில் வெள்ளை உடை அணிந்த விதவைகளும், இன்னும் சில இடங்களின் அக்ரஹாரங்களில் காவி உடை அணிந்து தலையில் முக்காடு அணிந்து, தலை மொட்டையான பார்பான பெண்களும் கூடத் தெரிகிறார்கள். முக்காடு அணிந்த இஸ்லாமியர்கள் பார்பதற்கு இந்து விதவைகள் போல் இருக்கிறார்கள் என்று நினைப்பதுடன் சகிக்காமல், தாழ்வுணர்வில் 'இஸ்லாம் பெண்களின் மீது ஆடைக் கட்டுபாடு விதித்திருக்கிறது' என்று கூச்சல் இடுகிறார்கள் என்றும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.
பர்தா பற்றி ஒரு இஸ்லாம் இணைய தளம் சொல்லும் கருத்து,
ஹிஜாப் என்பது கண்ணியம் பேணுதலுக்கான உடை அல்ல. பாரம்பரிய நடைமுறை பழக்கவழக்கம் என்பவற்றிற்காக அணியும் ஆடையும் அல்ல. இது இஸ்லாத்தின் ஒரு கடமையாகும். அதற்குறிய சட்ட விதிப்படி உடை அணிதல் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணின் மீதும் அல்லாஹ் (சுபு) விதித்துள்ள கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்(சுபு) எமது முஸ்லிம் பெண்களையும் நேர்வழியில் செலுத்துவானாக!
*****
பெண்களுக்கான கண்ணிய உடைகள் இவை என்பவை ஆண்களின் பார்வையில் தப்ப ஆண்களே வடிவமைத்து செய்த ஏற்பாடு என்பதைத் தவிர்த்து, எந்த ஒரு சமயத்தைச் சேர்ந்த பெண்களின் உடையையும் அப்பெண்களே முடிவு செய்துவிடவில்லை. பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெண்கள், எந்த உடை பாரம்பரியமானது, எதை அணியலாம் என்று கருத்து சொல்லும் உரிமை அந்த பெண்களுக்கு உண்டு, ஆனால் அதையும் 'பெண்களுக்கான' உடை என்று பன்மையில் பொதுப்படுத்துவது தவறு தான்.
*****
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் !
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
66 கருத்துகள்:
// அதே சமயத்தில் பெண்ணிய காவலாளிகள் போல் பர்தா பெண்ணை முடக்குகிறது என்று கூச்சலிடுபவர்கள் தம் இனப் பெண்களுக்கு என்ன விதமான உடை சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் என் கண் முன்னே இன்னும் கூட பல இடங்களில் வெள்ளை உடை அணிந்த விதவைகளும், இன்னும் சில இடங்களின் அக்ரஹாரங்களில் காவி உடை அணிந்து தலையில் முக்காடு அணிந்து, தலை மொட்டையான பார்பான பெண்களும் கூடத் தெரிகிறார்கள். முக்காடு அணிந்த இஸ்லாமியர்கள் பார்பதற்கு இந்து விதவைகள் போல் இருக்கிறார்கள் என்பதால் இவர்களுக்கு பார்பதற்கு சகிக்காமல் 'இஸ்லாம் பெண்களின் மீது ஆடைக் கட்டுபாடு விதித்திருக்கிறது' என்று கூச்சல் இடுகிறார்கள் என்றும் சந்தேகிக்கத் தோன்றுகிறது. //
இந்த பத்தியை நீக்கிவிட்டால், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட பதிவு!
எந்த ஒரு மத நம்பிக்கையும், கலாச்சாரத்தையும் விமர்சிக்கும் பொழுது, தனியே விமர்சித்தல் ஏற்று கொள்ளதக்கது! வேறொரு மத பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டால், அதில் நேர்மை இருக்காது! தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளே அமையும்!
இந்த பத்தி உங்களை காட்டி கொடுக்கவும் செய்கிறது! ;)
//இன்னும் கூட பல இடங்களில் வெள்ளை உடை அணிந்த விதவைகளும், //
அண்ணே சின்னதம்பி படத்தை ரீஜண்டா ஏதும் பார்த்தீங்களா?:)))
//முறைகளை அவரவர் நற்குடி வளர்பு //
3 மணி நேர படம் பார்க்கும் பொழுது படத்தோட டைட்டில் எங்கயாவது ஒருமுறை வரும் அதுபோல் இங்கேயும் வந்துட்டு:)))
ஒரு வழியாக வினவு பதிவில் இருந்து விடுபட்டு இங்கேயும் பதிவு எழுத நேரம் கிடைத்து விட்டது :-))
பதிவுலகத்தில் நடந்துகொண்டிருப்பது பர்தா விவகாரமோ, கலாசாரக் காவல் கூப்பாடுகளோ இல்லை!
ஒவ்வொரு தரப்பும் மாறி மாறித் தாங்கள் எவ்வளவு பெரிய அசடுகள் என்பதைக் கூவிக் கூவி, நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள், அவ்வளவு தான்!
//நற்குடிக்கும் பர்தாவுக்கும் தொடர்பே இல்லை. அதை அணிவதும் அணியாததும் அவரவர் பெற்றோர் வளர்ப்பு முறை தான்//
இதைத்தான் நிறைய பதிவர்கள் சொல்கிறார்கள். இந்த விடயத்தை விடுத்து விவாதம் எங்கெங்கோ சென்றுவிட்டது.
புத்தாண்டு வாழ்த்து கோவி.
ஒரு Typical பகுத்தறிவுவாதியாக, குட்டையை குழப்பும் வேலையை செய்திருக்கிறீர்கள்.
:-)
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//இந்த பத்தியை நீக்கிவிட்டால், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட பதிவு!
எந்த ஒரு மத நம்பிக்கையும், கலாச்சாரத்தையும் விமர்சிக்கும் பொழுது, தனியே விமர்சித்தல் ஏற்று கொள்ளதக்கது! வேறொரு மத பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டால், அதில் நேர்மை இருக்காது! தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளே அமையும்!
இந்த பத்தி உங்களை காட்டி கொடுக்கவும் செய்கிறது! ;)//
விதவைகளுக்கு ட்ரஸ் கோட் வைத்திருக்கும் நமக்கெல்லாம் பிற மதத்து கட்டுபாடுகளை விமர்சனம் செய்யும் தகுதி இல்லை என்பதை எவ்வாறு சுட்டிக்காட்டுவது ?
//குசும்பன் said...
அண்ணே சின்னதம்பி படத்தை ரீஜண்டா ஏதும் பார்த்தீங்களா?:)))//
சின்ன தம்பியில் அந்த ஆயா மனோரமா வெள்ளைப் புடவை கட்டி இருக்கும், மதுரைக்கு அங்கிட்டுப் போனால் வெள்ளை புடவை ஆயாக்களைப் பார்க்கலாம்.
//முறைகளை அவரவர் நற்குடி வளர்பு //
3 மணி நேர படம் பார்க்கும் பொழுது படத்தோட டைட்டில் எங்கயாவது ஒருமுறை வரும் அதுபோல் இங்கேயும் வந்துட்டு:)))//
:) டேய் உதைபடுவ படுவா !
// கிருஷ்ணமூர்த்தி said...
ஒரு வழியாக வினவு பதிவில் இருந்து விடுபட்டு இங்கேயும் பதிவு எழுத நேரம் கிடைத்து விட்டது :-))
பதிவுலகத்தில் நடந்துகொண்டிருப்பது பர்தா விவகாரமோ, கலாசாரக் காவல் கூப்பாடுகளோ இல்லை!//
இதுலேயும் கம்யூனச கோஷ்டி நாங்கள் தான் அக்மார்க் அப்பழுக்கற்றவர்கள் என்கிறார்கள், கம்யூனிச தலைமையில் எத்தனை பெண்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டதும் சரியான பதில் இல்லை. நக்சல் குழுவில் பெண்கள் இருக்கிறார்களாம். நான் கேட்டது கம்யூனிச ஆளுகைக்கு உட்பட இடங்களில் (தலைமை) பொறுப்பில் இருக்கும் பெண்கள் பற்றி. எனக்கு பதிலே கிடைக்கல. அவர்கள் போட்டு இருக்கும் தலைவர்கள் வரிசையில் மருந்துக்கு கூட பெண் படம் இடம் பெறவில்லை.
கண்ணன்
கிறுக்கன் என்ற பெயர் உமக்கு மிகவும் பொருத்தமாய் இருக்கும். அதனால் தான் தலைக்கிறுக்கு பிடித்து பேசியுள்ளீர். என்னவோ பார்ப்பனர் மட்டுமே சாதி பார்ப்பது போலவும் பிற உயர்சாதி இந்துக்கள் தலித் மக்களை கட்டியணைத்து உறவு பாராட்டுவது போலவும் இருக்கிறது உங்கள் கூற்று. இது நியாயமா? பலமுறை தலித்துக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துபவர்கள் பார்ப்பனரா, இல்லை பிற உயர்சாதி இந்துக்களா?
சற்று கோபம் இல்லாமல் சிந்தித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள். அவர்களை எதிர்க்க மனத்திடமற்ற உம்மை போன்றோர்க்கு, ஊருக்கு இளைத்தவரை, பொதுவாக எதிர்த்து பேச விரும்பாதவரை தாக்குவதிலும், ஏளனம் செய்வதிலும் ஒரு அளப்பறியா ஆனந்தம் போலும். படித்த உம்மைப் போன்றோரே இப்படி இருப்பது வருந்தத்தக்க ஒரு விடயம். பாரி போன்ற நடுநிலையாளர்களும் இதைப் பாராட்டுவது ஆச்சரியமாக உள்ளது.
மண்சோறு உண்ணுதல், தீ மிதித்தல், சாமியாடி ஏழை மக்களை ஏமாற்றுதல் போன்றவை யார் கண்டுபிடிப்புகள்? வேதம் இயற்றியவர்களது அல்லவே! செயேந்திரர் அப்பழுக்கற்றவர் என்று நான் கூற வரவில்லை. செயேந்திரர் ஒருவர் கைதை வைத்து மொத்தமாக எல்லோர் மீதும் குற்றம் சாற்றாதீர். இன்னொன்று அவர் கைதுக்கு பிஜேபி-யை தவிர கட்சி சார்பில்லாத யாரும் குய்யோ முய்யோ என்று கதறவில்லை. சிங்கையில் உட்கார்ந்து கொண்டு கண்டபடி உளறாதீர்! எதையும் எழுதுவதற்கு முன் சற்று சிந்தியுங்கள், தோழரே!
//Blogger ஈரோடு கோடீஸ் said...
//நற்குடிக்கும் பர்தாவுக்கும் தொடர்பே இல்லை. அதை அணிவதும் அணியாததும் அவரவர் பெற்றோர் வளர்ப்பு முறை தான்//
இதைத்தான் நிறைய பதிவர்கள் சொல்கிறார்கள். இந்த விடயத்தை விடுத்து விவாதம் எங்கெங்கோ சென்றுவிட்டது.
புத்தாண்டு வாழ்த்து கோவி.//
நன்றி ! எனது வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் இல்லத்தாருக்கும்.
// ♠ ராஜு ♠ said...
ஒரு Typical பகுத்தறிவுவாதியாக, குட்டையை குழப்பும் வேலையை செய்திருக்கிறீர்கள்.
:-)
புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
டிபிகல் பகுத்தறிவாதிகளும் பெண்களை தலைமை ஏற்க அழைப்பதில்லை.
//சுகுணாதிவாகர் said...
கண்ணன்
கிறுக்கன் என்ற பெயர் உமக்கு மிகவும் பொருத்தமாய் இருக்கும். //
சுகுணாதிவாகர் பெயரில் புரொபைல் தொடங்கி பின்னூட்டமிடுவது, அவர் பெயரில் பின்னூட்டமிடும் மற்றொரு போலி.
வணக்கம் கோவியாரே,
எனக்கு ஒரு ஐயம் தங்களால் தீர்த்து வைக்க முடியுமென நினைக்கிறன்,
தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்களின் வீட்டில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு சமூகத்தில் தங்களை மேல்சாதிக்காரர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுடன் பழகும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்களுடைய பெற்றோர்களாலேயே அறிவுறித்தி (அவர்களை தீண்டக்கூடாது, அவர்களின் பேச்சை எதிர்க்க கூடாது வீட்டிற்கு சென்றால் வெளியிலேயே நிற்க வேண்டும் போன்ற) ஒரு அடிமை முறையில் வளர்க்கப் படுகிறார்களே அது சரி கூறுகிறீர்களா, அல்லது நான் மேற்ச் சொன்ன உதாரணத்தை அப்படியே திருப்பிப் போடுங்கள்
அதே மேல்சாதிக்காரர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தங்களது கொழந்தைகளை ஒரு ஆதிக்க மனோநிலைக்கு பழக்கப் படுத்தியே வளர்கிறார்கள் அது சரியா?
தங்களது பதிவில் தாங்கள் கூறிய வளர்ப்பு முறை சரியென்றால் நான் கூறிய வளர்ப்பு முறைகளையும் சரியென்றே கூறலாமா?
வளக்குங்கள் அய்யா.
//சுகுணாதிவாகர்
அவர்களை எதிர்க்க மனத்திடமற்ற உம்மை போன்றோர்க்கு//
சொல்லீட்டாருய்யா அஞ்சா நெஞ்சன்...
சொந்த பதிவையே எல்லோரும் படிக்க முடியாதபடி மறைத்து வைத்திருக்கும் இவர் மற்றவர்களுக்கு புத்தி சொல்லுறாராம்.
//அப்பாவி முரு said...
//சுகுணாதிவாகர்
அவர்களை எதிர்க்க மனத்திடமற்ற உம்மை போன்றோர்க்கு//
சொல்லீட்டாருய்யா அஞ்சா நெஞ்சன்...
சொந்த பதிவையே எல்லோரும் படிக்க முடியாதபடி மறைத்து வைத்திருக்கும் இவர் மற்றவர்களுக்கு புத்தி சொல்லுறாராம்.//
நானும் அவர் போலிப் பெயரில் பின்னூட்டம் இடுகிறார் என்று தெரியாமல் பின்னூட்டமிட்டேன்.
இப்பதான் தெரிகிறது சுகுணாதிவாகர் பெயரில் வரும் பல பின்னூட்டங்கள் இவரது திருவிளையாடல்கள் என்று.
விட்டுத் தள்ளுங்க !
பஞ்ச கச்சத்த அவுக்கலாம் வாங்க
//செயேந்திரர் அப்பழுக்கற்றவர் என்று நான் கூற வரவில்லை. செயேந்திரர் ஒருவர் கைதை வைத்து மொத்தமாக எல்லோர் மீதும் குற்றம் சாற்றாதீர்.//
இதை இதை வைத்து தான் சுகுணாதிவாகர் பெயரில் ஒரு போலிக் கொண்டை என்று கண்டுபிடித்தேன். எனக்கு சுகுணாதிவாகர் எப்படி எழுதுவார் என்று தெரியும்.
வணக்கம் கோவியாரே,
எனக்கு ஒரு ஐயம் தங்களால் தீர்த்து வைக்க முடியுமென நினைக்கிறன்,
தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்களின் வீட்டில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு சமூகத்தில் தங்களை மேல்சாதிக்காரர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுடன் பழகும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்களுடைய பெற்றோர்களாலேயே அறிவுறித்தி (அவர்களை தீண்டக்கூடாது, அவர்களின் பேச்சை எதிர்க்க கூடாது வீட்டிற்கு சென்றால் வெளியிலேயே நிற்க வேண்டும் போன்ற) ஒரு அடிமை முறையில் வளர்க்கப் படுகிறார்களே அது சரி கூறுகிறீர்களா, அல்லது நான் மேற்ச் சொன்ன உதாரணத்தை அப்படியே திருப்பிப் போடுங்கள்
அதே மேல்சாதிக்காரர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தங்களது கொழந்தைகளை ஒரு ஆதிக்க மனோநிலைக்கு பழக்கப் படுத்தியே வளர்கிறார்கள் அது சரியா?
தங்களது பதிவில் தாங்கள் கூறிய வளர்ப்பு முறை சரியென்றால் நான் கூறிய வளர்ப்பு முறைகளையும் சரியென்றே கூறலாமா?
வளக்குங்கள் அய்யா.
//பெண்களுக்கான கண்ணிய உடைகள் இவை என்பவை ஆண்களின் பார்வையில் தப்ப ஆண்களே வடிவமைத்து செய்த ஏற்பாடு என்பதைத் தவிர்த்து, எந்த ஒரு சமயத்தைச் சேர்ந்த பெண்களின் உடையையும் அப்பெண்களே முடிவு செய்துவிடவில்லை//
//பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெண்கள், எந்த உடை பாரம்பரியமானது, எதை அணியலாம் என்று கருத்து சொல்லும் உரிமை அந்த பெண்களுக்கு உண்டு//
//ஆனால் அதையும் 'பெண்களுக்கான' உடை என்று பன்மையில் பொதுப்படுத்துவது தவறு தான்.//
உங்களின் கடைசி பாராவில் இருந்த்தைத் தான் வரிசை மாறாமல், கட்டிங் - எடிட்டிங் செய்யாமல் மூன்றாக பிரித்து வைத்துள்ளேன்.
முதல் பகுதியில் பெண்களின் உடையை ஆண்கள் தான் தீர்மானித்தார்கள் என கண்டு சொன்ன நீங்கள்,
இரண்டாம் பகுதியில் பெண்களுக்கான உரிமையை வலியுறுத்தும் நீங்கள்,
மூன்றாம் பகுதியில்,அவர்களுக்கான உடையை பெண்களுக்குள் பேசித் தீர்மானிக்கும் முன் நீங்கள் போய் தீர்ப்பு சொல்கிறீர்கள்.
முரண்பாடாக இல்லையா?
இந்த பிரச்சனைய பெண்களே பேசித் தீர்க்கட்டும் என விட்டுவிடலாமே...
//புடவை கட்டுகள் ஒரு பெண்ணின் நற்குடி பற்றி எதுவும் சொல்லாதோ, அதே போன்று தான் நற்குடிக்கும் பர்தாவுக்கும் தொடர்பே இல்லை. அதை அணிவதும் அணியாததும் அவரவர் பெற்றோர் வளர்ப்பு முறை தான்.//
ஒப்பு கொள்ள வேண்டிய விஷயம்; இதை ஒப்பு கொள்வதில் ஏன் சிலருக்கு தயக்கம்? தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்பவர்களை ignore செய்வதே சிறந்த punishment ஆக இருக்கும்.
கண்ணன் அண்ணே..
போலின்னு சொல்ல முடியாது.
இந்த சு.தி.யின் Blog க்கும், இருக்கும் இன்னோர் சு.தி. யின் Blog க்கும் ஒரே
Informations தான் வருது.
This blog is open to invited readers only
http://sugunadivakar.blogspot.com/
This blog is open to invited readers only
http://suguna2896.blogspot.com/
//மூன்றாம் பகுதியில்,அவர்களுக்கான உடையை பெண்களுக்குள் பேசித் தீர்மானிக்கும் முன் நீங்கள் போய் தீர்ப்பு சொல்கிறீர்கள்.
முரண்பாடாக இல்லையா?
இந்த பிரச்சனைய பெண்களே பேசித் தீர்க்கட்டும் என விட்டுவிடலாமே...//
நான் தீர்ப்பு எதையும் சொல்லவில்லை. பெண்ணுக்கான உடையை பெண் முடிவு செய்யலாம், பெண்களுக்கான உடை என்பதை ஒரு பெண் பொதுப்படுத்துவிட முடியாது என்பது தீர்ப்பு அல்ல. கருத்து.
\\அப்பாவி முரு said...
இந்த பிரச்சனைய பெண்களே பேசித் தீர்க்கட்டும் என விட்டுவிடலாமே...\\
இதையும் ஒரு ஆண் சொன்னால், ஆணாதிக்கம் என்பார்களே.
நண்பருக்கு,
பர்தா பற்றி நான் சொல்ல வந்ததை, சொல்ல முடியாததை அல்லது சொல்லத் தெரியாததை மிக அழகாக விளக்கியிருக்கிறீர்கள்! எம் உணர்வுகளை அப்படியே பிரதி எடுத்தது போல உணர்ந்தேன்!
வளர்ப்பு முறையின் காரணமாக, நான் பர்தா இல்லாமல் வெளியே செல்வதை வெட்கமாக உணர்கிறேன்; ஆனால், மற்ற பெண்களை விட, பல விஷயங்களில் நான் சுதந்திரமாகவே இருக்கிறேன்.
மதரீதியான உங்கள் கண்ணோட்டம் எப்படி இருந்தாலும், உடை குறித்த உங்கள் நேர்மையான எண்ண வெளிப்பாட்டுக்கு ஒரு சபாஷ்!
//Blogger ♠ ராஜு ♠ said...
கண்ணன் அண்ணே..
போலின்னு சொல்ல முடியாது.
இந்த சு.தி.யின் Blog க்கும், இருக்கும் இன்னோர் சு.தி. யின் Blog க்கும் ஒரே
Informations தான் வருது.
This blog is open to invited readers only
http://sugunadivakar.blogspot.com/
This blog is open to invited readers only
http://suguna2896.blogspot.com///
http://sugunadiwakar.blogspot.com
இதற்கும் கூட அப்படியே வரும், உங்கள் பதிவை கூட நீங்க செட்டிங் மாற்றி ரீடர்ஸ் ஒண்லின்னு வைத்துக் கொள்ள முடியும். போலின்னு சொல்ல ப்ளாக் முகவரியைவிட எழுத்து காட்டிக் கொடுத்துவிடும். போலியாவதன் நோக்கம் எதிர்கருத்து சொல்வதற்கே, சுகுணா சுகுணாவாகத்தானே எழுதுவார். போலி மட்டுமே சுகுணாவின் சிந்தனைகளுக்கு மாற்றாக எழுதுவார்
கோவி / மற்ற அன்பர்கள் அனைவருக்கும்,
பின்னூட்டத்தில் வருபவர்கள் சரியான ஆட்கள் தானா, இல்லை போலியான அடையாளத்தோடு வருபவர்களா என சரிபார்த்து பதில் சொல்லவும்.
மேலே சுமஜ்லா பேரில் வதிருப்பருப்பது ஒரிஜினல் சுமஜ்லா தான் சரிபார்த்தாயிற்று.
வாழ்த்துகள் சகோதரி.
வித்தியாசமான பார்வை கோவிஜி... பர்தா... விவகாரம் கொஞ்சம் காரமாதான் போய்கிட்டு இருக்கு... மதம்கிறது போதைதான் அப்ப அப்ப நிருபிக்கப்பட்டு கொண்டு வருகிறது.
சராசரியா என்னோட பார்வைவில பர்தாவே தேவையற்ற ஒன்றுதான், பாலைவன பிரதேசங்களில் மணல் புயலில் இருந்து காத்து கொள்வதற்ககா அணிய ஆரம்பித்தது இன்று மதச் சடங்காய் சுத்துகிறது. சுடிதார் கண்டிப்பாக அந்த இடத்தை பூர்த்தி செய்யும்(லாம்). சேலை என்பது கூட ஒரு குறிப்பிட்ட இடத்தில் உடுத்தும் ஆடைதான், எதுவும் பெருபான்மை பெண்களின் ஆடையும் கிடையாது. இரண்டாவது பெண்ணிற்கு என்ன போடலாம் போட கூடாது என்பதை ஆண் எப்படி தீர்மானிக்கலாம்??? மூன்றாவது இந்த விவதத்தை தொடர்ந்து கொண்டுருக்கும் யாராகிலும் பெண்களுக்கு என்ன ஒரு விடுதலை வாங்கி தர முடிந்தது? இவர்கள் தீயை மூட்டி குளிர் காய்பவர்களே...
ஒரு வழியா கோவியண்ணனும் தன்னோட பர்தாக்கருத்தை சொல்லிட்டாரு. வேற யாரும் இருக்கீங்களாப்பா கருத்து சொல்லாம.. :)
&&&&
ஒரு வழியா கோவியண்ணனும் தன்னோட பர்தாக்கருத்தை சொல்லிட்டாரு. வேற யாரும் இருக்கீங்களாப்பா கருத்து சொல்லாம.. :)
&&&&
சென்ஷி - நானு நானு :)-
////Blogger ♠ ராஜு ♠ said...
கண்ணன் அண்ணே..
போலின்னு சொல்ல முடியாது.
இந்த சு.தி.யின் Blog க்கும், இருக்கும் இன்னோர் சு.தி. யின் Blog க்கும் ஒரே
Informations தான் வருது.
This blog is open to invited readers only
http://sugunadivakar.blogspot.com/
This blog is open to invited readers only
http://suguna2896.blogspot.com/////
ஒரிஜினல் சுகுணாதிவாகரின் ப்ரொபைல்
On Blogger Since December 2009 என்றும் இருக்காது
//Blogger SUMAZLA/சுமஜ்லா said...
நண்பருக்கு,
பர்தா பற்றி நான் சொல்ல வந்ததை, சொல்ல முடியாததை அல்லது சொல்லத் தெரியாததை மிக அழகாக விளக்கியிருக்கிறீர்கள்! எம் உணர்வுகளை அப்படியே பிரதி எடுத்தது போல உணர்ந்தேன்!
வளர்ப்பு முறையின் காரணமாக, நான் பர்தா இல்லாமல் வெளியே செல்வதை வெட்கமாக உணர்கிறேன்; ஆனால், மற்ற பெண்களை விட, பல விஷயங்களில் நான் சுதந்திரமாகவே இருக்கிறேன்.
மதரீதியான உங்கள் கண்ணோட்டம் எப்படி இருந்தாலும், உடை குறித்த உங்கள் நேர்மையான எண்ண வெளிப்பாட்டுக்கு ஒரு சபாஷ்!
2:01 PM, December 31, 2009//
சகோதரி சுமஜ்லா, உங்கள் பர்தா பற்றிய பதிவில் நீங்கள் மதக்கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியதால் உங்களால் பர்தா அணிவதற்கான உண்மையான உணர்வுரீதியான விளக்கங்களைச் சரியாக சொல்ல முடியமல் போனது என்று நினைக்கிறேன். பர்தா இல்லாமல் வெளியே செல்வதன் கூச்சம் அதை அணிந்து பழகியவர்களால் தான் உணர்ந்து கொள்ளம் முடியும் என்று நீங்கள் விளக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்கள் நற்குடி சொல் குறித்த விளக்கம் அதைச் சொல்வதாக நினைத்து நீங்கள் எழுதிவிட்டீர்கள், நான் உட்பட எல்லோராலும் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
பின்னூட்டத்திற்கு நன்றி.
மதங்கள் குறித்த எனது கருத்துகளை கருத்து என்ற அளவில் தான் சொல்கிறேன், அதில் எந்த வழியுறுத்தல்களையும் நான் செய்ய முயற்சிப்பது இல்லை. பல்வேறு தரப்பு கருத்து என்பாதாக என் கருத்தையும் எடுத்துக் கொண்டால் போதும் என்றே நினைத்து எனது கருத்துகளை எழுதிவருகிறேன்
கோவி,
மேலே வந்த பின்னூட்டங்களை நான் இடவில்லை. நான் ஒரு பிளாக்கைத் தவிர மற்றவற்றை மூடிவிட்டேன். எப்படில்லாம் கிளம்புறாய்ங்க? அப்பாவிமுரு, முதலில் எது உண்மை, எது போலி என்பதைத் தெரிந்துகொண்டு விமர்சித்தால் நலம். அந்த பின்னூட்டத்தில் உள்ள கருத்து நூறுசதவிகிதம் என் கருத்துக்கு மாறானது.
நல்ல கருத்துகள்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
//rajan RADHAMANALAN said...
விட்டுத் தள்ளுங்க !
பஞ்ச கச்சத்த அவுக்கலாம் வாங்க//
எனக்கு அம் மணம் பிடிக்காது !
:)
//தமிழ்த்தொண்டன் said...
வணக்கம் கோவியாரே,
எனக்கு ஒரு ஐயம் தங்களால் தீர்த்து வைக்க முடியுமென நினைக்கிறன்,
தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்களின் வீட்டில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு சமூகத்தில் தங்களை மேல்சாதிக்காரர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுடன் பழகும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்களுடைய பெற்றோர்களாலேயே அறிவுறித்தி (அவர்களை தீண்டக்கூடாது, அவர்களின் பேச்சை எதிர்க்க கூடாது வீட்டிற்கு சென்றால் வெளியிலேயே நிற்க வேண்டும் போன்ற) ஒரு அடிமை முறையில் வளர்க்கப் படுகிறார்களே அது சரி கூறுகிறீர்களா,//
அது சரியா தவறா என்பதைவிட அது அவர்கள் அறியாமையால் செய்வது என்றே சொல்லுவேன். நாமும் மனிதன் தானே என்கிற விழிப்புணர்வே அவர்களுக்கு வரவில்லை, வரவிடவில்லை என்கிற காரணம் தான்.
//அல்லது நான் மேற்ச் சொன்ன உதாரணத்தை அப்படியே திருப்பிப் போடுங்கள்
அதே மேல்சாதிக்காரர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தங்களது கொழந்தைகளை ஒரு ஆதிக்க மனோநிலைக்கு பழக்கப் படுத்தியே வளர்கிறார்கள் அது சரியா?
தங்களது பதிவில் தாங்கள் கூறிய வளர்ப்பு முறை சரியென்றால் நான் கூறிய வளர்ப்பு முறைகளையும் சரியென்றே கூறலாமா?
வளக்குங்கள் அய்யா.//
நான் ஆடை குறித்த வளர்ப்பு முறைகள் இருக்கின்றன என்றே சொல்லி இருக்கிறேன், அது சரியா தவறா என்று சொல்லவில்லை.
//மோகன் குமார் said...
//புடவை கட்டுகள் ஒரு பெண்ணின் நற்குடி பற்றி எதுவும் சொல்லாதோ, அதே போன்று தான் நற்குடிக்கும் பர்தாவுக்கும் தொடர்பே இல்லை. அதை அணிவதும் அணியாததும் அவரவர் பெற்றோர் வளர்ப்பு முறை தான்.//
ஒப்பு கொள்ள வேண்டிய விஷயம்; இதை ஒப்பு கொள்வதில் ஏன் சிலருக்கு தயக்கம்? தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்பவர்களை ignore செய்வதே சிறந்த punishment ஆக இருக்கும்.//
அவங்கதான் சொல்ல வந்ததை சரியா சொல்லாமல் விட்டுவிட்டேன் என்று சொல்லிவிட்டார்களே.
//சென்ஷி said...
ஒரு வழியா கோவியண்ணனும் தன்னோட பர்தாக்கருத்தை சொல்லிட்டாரு. வேற யாரும் இருக்கீங்களாப்பா கருத்து சொல்லாம.. :)
2:17 PM, December 31, 2009
Delete
Blogger மணிகண்டன் said...
&&&&
ஒரு வழியா கோவியண்ணனும் தன்னோட பர்தாக்கருத்தை சொல்லிட்டாரு. வேற யாரும் இருக்கீங்களாப்பா கருத்து சொல்லாம.. :)
&&&&
சென்ஷி - நானு நானு :)-//
சென்ஷி மற்றும் மணி,
நான் எழுதும் பதிவுகள் உங்களை அப்படி படுத்துதா ? அவ்வ்வ்வ்வ்வ்வ் ! :)
//அதே சமயத்தில் பெண்ணிய காவலாளிகள் போல் பர்தா பெண்ணை முடக்குகிறது என்று கூச்சலிடுபவர்கள் தம் இனப் பெண்களுக்கு என்ன விதமான உடை சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் என் கண் முன்னே இன்னும் கூட பல இடங்களில் வெள்ளை உடை அணிந்த விதவைகளும், இன்னும் சில இடங்களின் அக்ரஹாரங்களில் காவி உடை அணிந்து தலையில் முக்காடு அணிந்து, தலை மொட்டையான பார்பான பெண்களும் கூடத் தெரிகிறார்கள்.//
முன்னது இன்னும் வழக்கில் உள்ளது. வெள்ளை உடை அணிந்த விதவைகளும், இன்னும் சில இடங்களின் அக்ரஹாரங்களில் காவி உடை அணிந்து தலையில் முக்காடு அணிந்து, தலை மொட்டையான பார்பான பெண்களும் வழக்கொழிந்து போய் ரொம்ப நாள் ஆகுது சார். அப்படியே இருந்தாலும் வரும் தலைமுறையில் வழக்கொழிந்து போய்விடும். இங்கே தவறு என்றால் மாற்றிக் கொள்வார்கள். அங்கே சென்று சும்மா சொல்லி பாருங்கள் :)
எதுக்கு இந்த தேவையில்லாத ஜல்லி? நல்ல மதச்சார்பின்மை...
//பாலைவன பிரதேசங்களில் மணல் புயலில் இருந்து காத்து கொள்வதற்ககா அணிய ஆரம்பித்தது இன்று மதச் சடங்காய் சுத்துகிறது.//
இதே தான் என் கருத்தும். இதே கருத்து தான் மதச்சடங்குகளுக்கும்.
//இங்கே தவறு என்றால் மாற்றிக் கொள்வார்கள். அங்கே சென்று சும்மா சொல்லி பாருங்கள் :)
எதுக்கு இந்த தேவையில்லாத ஜல்லி? நல்ல மதச்சார்பின்மை...//
அது அப்படியே இருந்தாலும் அதை அம்மதங்களை ஏற்றுக் கொள்பவர்கள் சரியா தவறா என்று முடிவு செய்ய வேண்டும். நாம இல்லை.
கோவில் விவகாரத்திலும் நாத்திகன் ஏன் தலை இடுகிறான் என்றால் பிரச்சனையை எதிர் கொள்பவர்கள் நாத்திகனின் உதவியை கேட்கிறார்கள், அதனால் இவர்களும் தலை இடுகிறார்கள். இல்லைங்கிறவனை விட்டுத் தள்ளு இருக்கு என்பவனை உள்ளே விடலாமே என்று நாத்திகர்கள் அது பொதுவிவகாரமாகும் போது கேட்கிறார்கள்
அதே போல் பர்தா எங்களை சுதந்திரமாக வாழவிடவில்லை என்று இஸ்லாமிய பெண்கள் வெளியே கூறினால் அப்போது நாம அது பற்றி கருத்து சொல்ல முடியும்.
பர்தா பத்தி இன்னொரு பதிவா ...
வரவேற்க்கதக்கது ; இது மாதிரி விளக்கங்கள் தேவை ,
நல்லதொரு முயற்சி
வாழ்த்துக்கள் கண்ணன் அண்ணே !
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
அந்த போலிப் பதிவைத் தொடர்ந்து சென்றால் sugunadivakar.blogspot.com என்று காட்டுகிறது. ஆனால் உண்மையில் அதன் வலைப்பக்க முகவரி suguna2896.blogspot.com. மேலும் மிதக்கும்வெளி என்ற பெயரிலான இன்னொரு வலைப்பூவின் முகவரி sugunadiwakar.blogspot.com . ஆனால் இங்கோ divakar என்று உள்ளது.
// சுகுணாதிவாகர் said...
அந்த போலிப் பதிவைத் தொடர்ந்து சென்றால் sugunadivakar.blogspot.com என்று காட்டுகிறது. ஆனால் உண்மையில் அதன் வலைப்பக்க முகவரி suguna2896.blogspot.com. மேலும் மிதக்கும்வெளி என்ற பெயரிலான இன்னொரு வலைப்பூவின் முகவரி sugunadiwakar.blogspot.com . ஆனால் இங்கோ divakar என்று உள்ளது.//
சுகுணா,
நீங்கள் உங்களின் ஒரு பதிவில் இது குறித்த எச்சரிக்கையை போட்டு பதிவர்களுக்கு சுட்டிக்காட்டுங்கள்.
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
பர்தா பத்தி இன்னொரு பதிவா ...
வரவேற்க்கதக்கது ; இது மாதிரி விளக்கங்கள் தேவை ,
நல்லதொரு முயற்சி//
பாராட்டுக்கு நன்றி ஷேக் !
// வாழ்த்துக்கள் கண்ணன் அண்ணே !
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்//
உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் !
//அக்பர்
நல்ல கருத்துகள்.
புத்தாண்டு வாழ்த்துகள்.//
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !
புத்தாண்டு வாழ்த்துகள்
1027+1
விதவைகளுக்கு தனியுடை என்பது தவறல்ல். அவர்களை விதவைகள் என சமூகம் தெரிந்து கொள்வது நல்லது. திருமணமான பெண்கள் தங்களை திருமாணவர்கள் எனக் காட்டிக்கொள்ளவும் பலபல அடையாளங்கள் உண்டு. அதனால் பல நன்மைகள் உண்டு. இதைப்போலவே விதவைகளுக்கும் உண்டு.
விதவை எனத்தெரிந்தவுடன் நமக்கொரு கழிவிரக்கம் தோன்றுகிறது. ‘வாழ்வேண்டிய நேரத்தில் வாழ முடியாமல் விதி சதி செய்துவிட்டது’ என்பதாக.
பர்தா சரியென வாதிட்டால், அனைத்தும் சரி. பார்ப்பனப்பெண்களைப்பற்றிப்பேச தகுதியிழந்தவராகிறீர்கள்.
எல்லாமதங்களும் பெண்களுக்கென சிறப்புக்கட்டுப்பாடுகளை வித்திருக்கின்றன.
இரு நிலைகளைத்தான் எடுக்கலாம்:
அக்கட்டுப்பாடுகள் பெண்ணுக்கெதிரான சதி. அவைகள் - எவ்ர் போட்டாலும் - உடைதெரியப்படவேண்டும்.
(அல்லது)
கட்டுப்பாடுகள் தேவை. பெண் பலபல கூறுகளால் (factors) ஆணிலிருந்து வேறுபாடுகிறாள். அக்கூறுகள் அன்னிய ஆண்கள் நிறைந்த வெளிச்சமூகத்தில் அவளுக்கு ஆபத்தை ஏற்படுத்தாலாம். என்வே அவளுக்காகவே அத்தளைகள். (In fact, this is the agrument advanced by the men of religion).
Govi Kannan is neither here nor there.
அந்த போலிப் பதிவைத் தொடர்ந்து சென்றால் sugunadivakar.blogspot.com என்று காட்டுகிறது. ஆனால் உண்மையில் அதன் வலைப்பக்க முகவரி suguna2896.blogspot.com. மேலும் மிதக்கும்வெளி என்ற பெயரிலான இன்னொரு வலைப்பூவின் முகவரி sugunadiwakar.blogspot.com . ஆனால் இங்கோ divakar என்று உள்ளது
புத்தாண்டு வாழ்த்துக்கள்
அப்பாடா.. உங்கள் பதிவின் மூலம் பர்தா விவகாரம் அல்லது விவாதம் நன்றாக புரிந்துக்கொள்ளப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்றே நினைக்கிறேன். நன்றி. சீரிஸசாக படித்து கொண்டே வந்த நான், குசும்பனின் குசும்பு கண்டு கண்ணில் நீர் வர சிரித்து விட்டேன். முகம், கை தெரிய மற்ற பாகங்களை மறைக்கும் சூடிதாரையும் மேல் துண்டையும் அணியலாம். வரும் தலைமுறையில் நிச்சயம் மாற்றம் வரும் என்று நம்புவோமாக. ஆண்களாகிய நாம் எப்படி உடுத்துகிறோமோ(முகம்,கை தெரிய) அப்படியே பெண்களுக்கும் பரிந்துரை செய்வோம்.
நன்றி திரு கோவி அவர்களே
இது ஒரு சிறந்தப்பதிவு
பிரச்சனைக்குறிய பதிவில் கூட உங்களால் தான் அதன் தடம் மாறியது
என்பது என் கருத்து
பிறகு பர்தா என்ற தலைப்பில் பதிவிட்ட பலரும் தனிமனிததாக்கலும் வசைவும் எதிர்வசைவும்தான் செய்தார்கள்
நடு நிலையோடு ஓறிறுவர் தான் பதிவிட்டார்கள்
மீண்டும் நன்றி
வழ்த்துக்கள்
//சுகுணாதிவாகர்
கோவி,
மேலே வந்த பின்னூட்டங்களை நான் இடவில்லை. நான் ஒரு பிளாக்கைத் தவிர மற்றவற்றை மூடிவிட்டேன். எப்படில்லாம் கிளம்புறாய்ங்க? அப்பாவிமுரு, முதலில் எது உண்மை, எது போலி என்பதைத் தெரிந்துகொண்டு விமர்சித்தால் நலம். அந்த பின்னூட்டத்தில் உள்ள கருத்து நூறுசதவிகிதம் என் கருத்துக்கு மாறானது//
இல்லை சுகுணா திவாகர். நான் உங்களை குறிப்பிடவில்லை. அந்த முகமூடியைத்தான் குறிப்பிட்டேன். எதற்கும் உங்கள் நண்பர்களுக்கு எச்சரிக்கை விடவும். முகமூடி உங்கள் பேரைக் கெடுக்கும் முன்.
அண்ணா,
பர்தா விஷயத்துக்கு பர்தா போட்டிருக்கிறீர்கள்.
சகோதரியின் பின்னூட்டம் மனதிற்கு நெகிழ்வைத்தருகிறது!
நன்றிங்கண்ணா!
பிரபாகர்.
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்
கலைஞரின் விளக்கம் போல் நன்றாக உள்ளது கோவிஞர்.
உண்மை!
//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
விதவைகளுக்கு தனியுடை என்பது தவறல்ல். அவர்களை விதவைகள் என சமூகம் தெரிந்து கொள்வது நல்லது. திருமணமான பெண்கள் தங்களை திருமாணவர்கள் எனக் காட்டிக்கொள்ளவும் பலபல அடையாளங்கள் உண்டு. அதனால் பல நன்மைகள் உண்டு. இதைப்போலவே விதவைகளுக்கும் உண்டு.//
விதவைகளுக்கு ட்ரஸ் கோட் எதற்குத் தேவை ? வெளி நாடுகளில் விதவைப் பெண்களே இல்லையா ? மற்றவர்களைப் போலவே உடை அணியும் அவர்களை ஒழுக்கக் குறைவானவர்கள் என்று யாரும் நினைப்பதும் இல்லை.
//விதவை எனத்தெரிந்தவுடன் நமக்கொரு கழிவிரக்கம் தோன்றுகிறது. ‘வாழ்வேண்டிய நேரத்தில் வாழ முடியாமல் விதி சதி செய்துவிட்டது’ என்பதாக.//
பிறர் 'பச்' கொட்டுவதற்காக ஒரு விதவைப் பெண்ணுக்கு யூனிபார்ம் கொடுக்கனுமா ? இது தேவையற்ற செண்டிமெண்ட். சிறுவயதில் பெற்றோர்களைப் பறிகொடுத்த பசங்களுக்கும் எதாவது அடையாளம் இருக்கனும் என்று சொல்லுவீர்களோ ?
//பர்தா சரியென வாதிட்டால், அனைத்தும் சரி. பார்ப்பனப்பெண்களைப்பற்றிப்பேச தகுதியிழந்தவராகிறீர்கள்.//
நான் உடைகளை சரி அல்லது தவறு என்று சொல்லவில்லை, அவரவர் விருப்பத்திற்கு ஏற்றது என்றே சொல்லி இருக்கிறேன். நான் ஏன் தேவையின்றி பார்பனப் பெண்களைப் பற்றிப் பேசவேண்டும் ? ஏன் இந்த தேவையற்ற உளரல் ? தகுதிக்கு எதாவது அளவுகோல் வைத்திருக்கிறீர்களா ? பிறர் தகுதி பற்றி எடை போடும் சிந்தனையாளர்கள் பார்பனிய சிந்தனையாளர்கள் என்று சொல்லுகிறார்களே.
//எல்லாமதங்களும் பெண்களுக்கென சிறப்புக்கட்டுப்பாடுகளை வித்திருக்கின்றன.//
எல்லா மதமும் பெண்களுக்கு கட்டுப்பாடு வைத்திருக்கின்றன என்று மற்றவர்கள் சொல்லுகிறார்கள். கட்டுப்பாட்டை சிறப்பு என்று நினைத்துக் கொள்வது முட்டாள் தனம் என்றும் சொல்லுகிறார்கள்.
//இரு நிலைகளைத்தான் எடுக்கலாம்:
அக்கட்டுப்பாடுகள் பெண்ணுக்கெதிரான சதி. அவைகள் - எவ்ர் போட்டாலும் - உடைதெரியப்படவேண்டும்.
(அல்லது)
கட்டுப்பாடுகள் தேவை. பெண் பலபல கூறுகளால் (factors) ஆணிலிருந்து வேறுபாடுகிறாள். அக்கூறுகள் அன்னிய ஆண்கள் நிறைந்த வெளிச்சமூகத்தில் அவளுக்கு ஆபத்தை ஏற்படுத்தாலாம். என்வே அவளுக்காகவே அத்தளைகள்.//
பெண்களுக்கு என்னவிதமான பாதுக்காப்பு தேவை என்று முடிவு செய்ய வேண்டியது பெண்களே, இப்போதும் ஆண் சமூகம் என்ன சொல்கிறது என்பதையே கேட்டு நடக்க வேண்டும் என்று பொதுவில் சொன்னால் "போய்யா.......போ" என்று சொல்லுவார்கள். பெண்களை சுதந்திரமாக சிந்திக்க வழிவிடுங்கள். சோ இராமசாமி போலவே உடல் கூறு, அது இது ஆண்கள் வேறு பெண்கள் வேறு என்று பெண்ணியக் கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக ஜால்ரா அடிக்காதீர்கள் ?
உங்கள் சமநோக்குகள் என்பது உங்கள் மதத்தில் அனுமதிக்கப்பட்டது பிறமதத்திலும் எதிர்க்கப்படாமல் இருந்தால் அனைத்து மதமும் சமம் என்று சொல்லும் சம நோக்குகள் போல் உள்ளது.
உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்துவிட்டு மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவது நல்லது என்பது என்பரிந்துரை
//ராஜவம்சம் said...
நன்றி திரு கோவி அவர்களே
இது ஒரு சிறந்தப்பதிவு//
நன்றி !
//பிரச்சனைக்குறிய பதிவில் கூட உங்களால் தான் அதன் தடம் மாறியது
என்பது என் கருத்து//
இப்ப தான் கேள்வி படுகிறேன். பதிவர் சுமஜ்லாவும் என்னால் தான் தடம் மாறியது என்று சொன்னது போல் தெரியவில்லை.
//மீண்டும் நன்றி
வழ்த்துக்கள்
//
உங்களுக்கும் வாழ்த்துகள் !
//இப்ப தான் கேள்வி படுகிறேன். பதிவர் சுமஜ்லாவும் என்னால் தான் தடம் மாறியது என்று சொன்னது போல் தெரியவில்லை.//
என் பதிவின் கீழ் உள்ள பின்னூட்டத்தில், தாங்களும் நண்பர் கிரி அவர்களும் பாரம்பரியம் என்ற வார்த்தையைத்தான் சுமஜ்லா நற்குடி என்று தவறாக மொழி பெயர்த்துள்ளார் என்று பேசிக் கொன்டீர்கள். உடனே அதை சரியென்று உணர்ந்து, என் தவறை உணர்ந்தேன்...உடனே, நான் வார்த்தைகளை மாற்றி விட்டேன்.அதாவது, ‘நற்குடியில் பிறந்து, இஸ்லாமிய பாரம்பரியப்படி வளர்க்கப்படும்’ என்பதாக!
நீங்கள் சொன்னது சரியென்று பட்டதால், உடனே அதை திருத்தினேன். அடுத்தடுத்து, சில விவகாரம் பிடித்தவர்கள்(சஞ்சய் காந்தி), அந்த பதிவையே தூக்க வேண்டும் என்ற நோக்கத்தில், என்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்தும் என் மற்ற பதிவுகளை கீழ்த்தரமாக விமர்சித்தும், பின், அந்த பதிவைத் திருத்தி விட்டால், அந்த விமர்சனத்தையும் தூக்கி விடுங்கள் என்றும் உத்தரவிட்டனர். இது எனக்கு கடும்கோபத்தை வரவழைத்தது...! அன்புக்கு கட்டுப்படுவேன், ஆனால், அதிகாரத்துக்கு ஒரு போதும் தலைவணங்க மாட்டேன். இது என் பிறவிக் குணம்!
நான் செய்த தவறு, கமெண்ட் மாடரேஷன் வைக்காதது தான்! இது அடுத்தடுத்த பிரச்சினைகளை உருவாக்கி விட்டது...! வம்பு சண்டைக்கு நான் எப்போதும் போவதில்லை, அதே போல வந்த சண்டையையும் விடுவதில்லை!
அப்துல் என்றும் சுமதி என்றும், இன்னும் வேறு பெயர்களிலும் ஒரே ஐடியில் இருந்து தரக்குறைவான இருவேறுமாதிரியான பின்னூட்டங்கள்...! அது என்னுடைய பினாமி சுனாமி என்று விமர்சனங்கள் வேறு! ஐயா, யாரைக் கண்டு பயந்து, நான் பினாமி பெயரில் எழுத வேண்டும்???
இது என் ப்ளாக்! யார் சொன்னாலும், எனக்கு சரியென்று பட்டால் தான் மாற்றுவேன்...! தங்களுடைய ப்ளாகில் எப்படி தங்கள் கருத்தை கருத்தாக மட்டுமே சொல்கிறீர்களோ, அதே போலத்தான் நான் முன்வைத்ததும்! இதை பதிவுலக அரசியலாக்கி, கிழித்து, தம்மைத் தாமே ஃபேமஸ் ஆக்கிக் கொண்டனர் சிலர்.
நற்குடியில் பிறந்தால் மட்டும் போதாது, இஸ்லாமிய பாரம்பரியப்படி வளர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் சொன்னதும், நீங்கள் பர்தா குறித்து சொன்னதற்கும் பெரிய வேறு பாடு ஒன்றுமில்லை...! பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் மாற்றம், அர்த்தம் ஒன்று தான்!
இதை வெளியிடுவதும் வெளியிடாததும் தங்கள் விருப்பம்...! நன்றி!!
//இதை வெளியிடுவதும் வெளியிடாததும் தங்கள் விருப்பம்...! நன்றி!!//
சுமஜ்லா,
ஆபாசம், தனிமனித தாக்குதல் தவிர்த்து மற்ற பின்னூட்டங்களை கருத்து சுதந்திரம் என்கிற அளவில் நான் வெளி இடத் தயங்கியது இல்லை.
இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..
இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
உண்மை!
11:39 AM, January 01, 2010
//
எனது கருத்துகளில் எந்தளவுக்கு ஆபாசம், தனி மனிதத் தாக்குதல் இருந்திருந்தால் இவ்வளவு தாமதமாக,அளவு கடந்த பரிசீலனைக்குப் பிறகு தற்போது வெளியிட்டிருப்பீர்கள்!?
எனது கருத்துகளைப் படிக்க கண ”காலம்” எடுத்துக்கொண்டிருக்கக் கூடும் என்கிற வகையில் இத்துடன் அமைகிறேன்!
:(:
திரு.கோவியாரே,
பர்தா இசுலத்தின் பிரச்சனை இல்லை.ஆனால் polygamy மிகப் பெரிய பிரச்சனை.அது மட்டும் அல்ல,அவர்கள் பொது சிவில் சட்டதுக்கு உட்படாததாள் குழந்தை திருமணம் மிக சாதரனம்.உடனே இவை இந்து மதத்தில் இல்லையா என்று கேட்க வேண்டாம்.அவைகள் சமுதாய சிர்திருத்தங்களை ஏற்றுக் கொல்கின்றன.ஆனால் இசுலாம்???
// momentumcalls said...
திரு.கோவியாரே,
பர்தா இசுலத்தின் பிரச்சனை இல்லை.ஆனால் polygamy மிகப் பெரிய பிரச்சனை.அது மட்டும் அல்ல,அவர்கள் பொது சிவில் சட்டதுக்கு உட்படாததால் குழந்தை திருமணம் மிக சாதரனம்.//
இருந்தாலும் இது பற்றிக் கவலைப்பட வேண்டியது இஸ்லாமிய பொதுமக்கள் தானே. இஸ்லாமிய பொதுச் சட்டங்களைப் பொறுத்த அளவில் பிற(ர்) தலையீடுகளை அவர்கள் விரும்புவதில்லை. ஒரு மதத்தில் இருக்கும் குறைகளைச் சீர்த்திருத்தும் உரிமை அம்மதத்தில் பிறந்தவர்களுக்கே உண்டு, பிறர் அவை பற்றி கருத்து சொல்லலாம். அவ்வளவே. பெரியார் ஏன் மதம் மாறவில்லை என்றால் மதம் மாறினால் தமிழக இந்து மக்களின் மீது அவருக்கு இருந்த உரிமை போய்விடும், பிறகு சீர்திருத்தம் பற்றி பேச முடியாது
//உடனே இவை இந்து மதத்தில் இல்லையா என்று கேட்க வேண்டாம்.அவைகள் சமுதாய சிர்திருத்தங்களை ஏற்றுக் கொள்கின்றன.ஆனால் இசுலாம்???//
மதரீதியான ஒப்பிடுகள் சரி இல்லை என்றே நினைக்கிறேன். இந்து மதத்தை நீங்கள் பின்பற்றாவிட்டாலும் நீங்கள் இந்து தான். :)
தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "யாதும் நாடே யாவரும் பாரீர்" இடுகையை பார்த்தேன்.
வெற்றி பெற வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்.
கருத்துரையிடுக