நாம் எதாவது தரவுகளை தேடும் போது, எதாவது தேடு தளம் (Search Engine) பயன்படுத்துவோம், அப்படி தேடும் போது தொடர்பே இல்லாத பக்கங்களையெல்லாம் சேர்த்து ஒரு பெரிய பட்டியலை அது கொடுக்கும், அதிலிருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்றால், "டவுசரு கிழியுது, தாவு தீறுது" லக்கி பாணி அலுப்பே மிஞ்சும்.
வலைப்பதிவுகள் மாத அடிப்படையில் எழுதப்பட்ட பக்கங்கள் சேமிக்கப்பட்டு இருக்கும், அதில் குறிப்பிட்ட கட்டுரையை, கவிதையை எடுக்க வேண்டும், ஒரே ஒரு சொல்மட்டுமே நமக்கு நினைவில் இருக்கிறது அதைவைத்து தான் அந்த பக்கத்திற்கு சென்று அந்த பக்கத்தில் உள்ளவற்றை மீண்டும் படித்துக் கொள்ள, அல்லது தரவாக இணைப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்ற சூழலில் எப்படி குறிப்பிட்ட பக்கத்தை அடைவது, ஒவ்வொரு இடுகையாக திறந்து பார்த்து தேடுவதற்குள் கண் பூத்துவிடும். அதற்கு எளிய வழி,
லக்கி பதிவை எடுத்துக் கொள்வோம், அவர் எந்தந்த பதிவுகளில் "டவுசர்" பயன்படுத்தி இருக்கிறார் என்று பார்க்க வேண்டுமென்றால்,
கூகுள் தேடுதல் தளத்திற்கு சென்று "டவுசர்" site:http://madippakkam.blogspot.com என்று தட்டச்சு செய்து தேடு பொத்தானை அழுத்தினால்,எத்தனை டவுசரை கிழித்திருக்கிறார் என்று தெரியும். நான் பார்த்த போது அவரது பதிவில் 36 முறை டவுசர் கிழிபட்டு இருக்கிறது.
எண்ணிக்கை மிகக் குறைவுதான், இன்னும் கூட கூடுதலாக கிழிபட்டு இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.
அடுத்து ரத்னேஷ் பதிவில் எத்தனை முறை பெண்ணியம் வருகிறது என்று பார்க்க
"பெண்ணியம்" site:http://rathnesh.blogspot.com
6 இடத்தில் தான் 'பெண்ணியம்' வந்திருக்கிறது.
வலைத்தளத்தில் தேடும் முறை இதுதான், தேடுதல் தளத்தில், தேடும் சொற்களை, ஒருங்குறி (யூனிக்கோட்) தமிழ் பயன்படுத்தலாம், சுட்டியை கண்டிப்பாக ஆங்கிலத்தில் தான் கொடுக்க வேண்டும்.
"Search text" site:blogurl
பொதுவாக புழக்கத்தில் இருக்கும் தேடு(தல்) தளங்கள் :
http://google.com
http://yahoo.com
http://www.msn.com
http://altavista.com
http://alltheweb.com (இது யாகூவைத்தான் பயன்படுத்துகிறது)
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
21 கருத்துகள்:
நன்றி!!!!!
:)
வலைபதிவில் தேட, அவர்கள் வலைபதிவில், மேலே
"Search the blog" என்ற பொட்டியில் தட்டினாலும் சுலபமாக தேடலாம்.
ஆனா, நீங்க குறிப்பிட்டு இருப்பது, பொதுவாக எந்த தளத்திற்குள்ளும் தேட பயன்படுத்தலாம்.
அதுப் போல கேச்சேக்குள் தேட வழியிருக்குதா..?
//TBCD said...
வலைபதிவில் தேட, அவர்கள் வலைபதிவில், மேலே
"Search the blog" என்ற பொட்டியில் தட்டினாலும் சுலபமாக தேடலாம்.//
அது சரியாக வேலை செய்யவில்லை. முயற்சித்து பாருங்க.
//ஆனா, நீங்க குறிப்பிட்டு இருப்பது, பொதுவாக எந்த தளத்திற்குள்ளும் தேட பயன்படுத்தலாம்.
அதுப் போல கேச்சேக்குள் தேட வழியிருக்குதா..?
//
தேடிப்பார்கிறேன். வழி இருக்கும்
//ஜெகதீசன் said...
நன்றி!!!!!
:)
//
மீண்டும் வருக !
நன்றி கோவி.கண்ணன்,
இது மாதிரி பயனுள்ள விஷயங்களை என் போன்ற ஆரம்பநிலை ஆட்களுக்குக் கற்றுத் தாருங்கள் அவ்வப்போது.
//RATHNESH said...
நன்றி கோவி.கண்ணன்,
இது மாதிரி பயனுள்ள விஷயங்களை என் போன்ற ஆரம்பநிலை ஆட்களுக்குக் கற்றுத் தாருங்கள் அவ்வப்போது.
//
ரத்னேஷ் அண்ணா, கூகுளில் முயற்சித்துப்பாருங்கள், வேகமாக எடுத்து கொடுக்கிறது.
உங்கல் பின்னூட்டம் எப்பொழுதுமே, நீங்கள் பின்னூட்டம் போட்ட 10 நிமிடம் அல்லது அதற்கு மேல் சென்றே எனக்கு வருகிறது,
RATHNESH to me
show details 12:06 PM (16 minutes ago) Reply
RATHNESH has left a new comment on your post "கூகுள் உதவியுடன் உங்கள் வலைப்பதிவிற்குள் தேடுவது எ...":
மற்றவர்கள் டிபிசிடி, ஜெகதீசன் போடுவது அடுத்த விநாடியே வருகிறது. இந்தியாவிலிருந்து பின்னூட்டமிட்டல் மிரர் சர்வர்களுக்கெல்லாம் சென்றுவர 10 நிமிடம் எடுத்துக் கொள்ளும் போல் தெரிகிறது.
கோவி,
நான் பெரும்பாலும், இது போன்ற வழிமுறைகளை நினைவில் வைத்துக்கொள்வதில்லை, தேவையான போது கூகிள் அட்வான்ஸ் செர்ச், டிப்ஸ் என்று உள்ளப்போய் பார்த்து செயல்ப்படுத்திப்பேன். நீங்கள் இங்கே தனியாக சொன்னதும் உதவியாகவே இருக்கு.
அப்படீயே கூகிளில் "அறிஞர் அண்ணா" என்று போட்டு தேடுவது எப்படினும் சொல்லிக்கொடுத்தா சிலருக்கு உபயோகமாக இருக்கும் :-))
இது கூடவா தெரியாம பதிவர்கள் இருப்பாங்க ? ஆச்சர்யம்தான்.
thanks
sury
thanjai.
// வசந்தம் ரவி said...
இது கூடவா தெரியாம பதிவர்கள் இருப்பாங்க ? ஆச்சர்யம்தான்.
//
ரவி ஐயா,
அலக்சா ரேட்டிங் எல்லாம் அலேக்காக சொல்லி, தமிழ்மணத்துக்கு ஆலோசனை சொல்லும் தாங்கள் எங்கே நாங்கள் எங்கே,
அறியா பதிவர்கள் இன்னும் பலர் இருக்காங்க, அவர்களுக்காக கூகுளில் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வலைப்பதிவுக்குள் தேடுவது என்பது பற்றி சொல்லி இருக்கேன். கூகுளில் தேடுவது பற்றி அல்ல.
அனைத்தும் அறிந்த் தாங்கள் இருட்டில் இருக்கும் எங்களை மன்னிச்சிடுங்க ஐயா !
ஸ்மைலி போடவில்லை என்றால் சீரியஸ் மறுமொழி அல்ல. டென்சன் ஆகிடாதிங்க.
// வவ்வால் said...
கோவி,
நான் பெரும்பாலும், இது போன்ற வழிமுறைகளை நினைவில் வைத்துக்கொள்வதில்லை, தேவையான போது கூகிள் அட்வான்ஸ் செர்ச், டிப்ஸ் என்று உள்ளப்போய் பார்த்து செயல்ப்படுத்திப்பேன். நீங்கள் இங்கே தனியாக சொன்னதும் உதவியாகவே இருக்கு.
அப்படீயே கூகிளில் "அறிஞர் அண்ணா" என்று போட்டு தேடுவது எப்படினும் சொல்லிக்கொடுத்தா சிலருக்கு உபயோகமாக இருக்கும் :-))
//
வவ்வால் ஜி,
(வவ்வால் the Great என்று எடுத்துக்கனும்),
விக்கிபீடியா போன்ற தளங்களில் பெரியார் என்றால் பெரியாறு ஓடிய இடமே பெரியார் என்று சொல்லப்படுவதாக தகவல் இருக்காமே, அறிஞர் அண்ணாவுக்கும், அறிஞர் என்றால் அறிவாளி அண்ணா என்றால் மூத்த சகோதரன், அறிவாளியான மூத்த சகோதர்களை அறிஞர் அண்ணா(க்கள்) என்று தமிழகத்தில் அழைக்கிறார்கள் என்று எதும் குறிப்பு இருக்கிறதா என்று நாம தான் தேடி பார்க்கனும்.
மனதை காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள
//வசந்தம் ரவி said...
மனதை காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள
//
புன்படவில்லை, உங்களுக்கு சொல்லியது புரிந்திருக்கிறது அது போதும். மன்னிபெல்லாம் வலைப்பதிவாளர்களிடம் பெரிய வார்த்தை. அதுக்காக நான் சொல்லாமல் இருப்பது இல்லை. என்னிடம் பிறர் சொல்லுவதில் ஏற்பு இல்லை.
புன்பட்டால் அதை ஆற்றும் சிறு உபாயம் தெரியும். நோ டென்சன் ப்ளீஸ்.
:)
// வசந்தம் ரவி said...
இது கூடவா தெரியாம பதிவர்கள் இருப்பாங்க ? ஆச்சர்யம்தான்.
//
நான் கூடத்தான் நினைத்தேன் , டெம்பிளேட் மாற்றுவது எப்படினு நீங்க பதிவ போட்டபோது இது கூடவா தெரியாம பதிவர்கள் இருப்பங்கனு :-))
ஆனாலும் எத்தனைப்பேர் நல்லப்பதிவுனு சொன்னாங்க , எல்லாருக்கும் எல்லாமே தெரிஞ்சுடாது, பெரிய விஷயங்கள் சில சமயம் எளிதா தெரியும், ஆனா சில சின்ன விசயங்கள் தெரியாம நாமல்லாம் இருப்போம், எனவே எல்லாம் தெரியும்னு இருப்பதும் தப்பு , எதுவும் தெரியாதுனு நினைப்பதும் தப்பு :-))
விஞ்ஞானி நியூட்டன் பூனைவளர்த்த கதை தான் நினைவுக்கு வருது,பூனை வீட்டுக்குள்ள வர பெரிய பூனைக்கு ஒரு ஓட்டை, அதோட குட்டிப்பூனைக்கு ஒரு சின்ன ஓட்டைனு ரெண்டு போட்டாராம், பெரிய ஓட்டை வழியா சின்னப்பூனை போகாதா என்ன? :-))
வவ்வால் ஜி யிடம் சிக்கிய வசந்தம் ரவிக்கு எனது அனுதாபங்கள்.
:)
கோவி,
//வவ்வால் ஜி,
(வவ்வால் the Great என்று எடுத்துக்கனும்),
//
என்னைக்கலாய்க்க நீங்களே எல்லாருக்கும் சொல்லித்தருவிங்க போல இருக்கே :-))
இப்படி ஜி.எல்லாம் போட்டா வவ்வாலுக்கு இனிசியல் ஜி னு மக்கள் நினைச்சுடப்போறாங்க :-))
//வவ்வால் ஜி யிடம் சிக்கிய வசந்தம் ரவிக்கு எனது அனுதாபங்கள்.
:)//
ரவி பரபரப்பு கிளப்புறதுல படாக்கில்லாடி கடசில நான் மாட்டிக்க போறேன், எனக்குத்தான் அனுதாபம் தேவைப்பட போவுது :-))
//வவ்வால் said...
கோவி,
என்னைக்கலாய்க்க நீங்களே எல்லாருக்கும் சொல்லித்தருவிங்க போல இருக்கே :-))
இப்படி ஜி.எல்லாம் போட்டா வவ்வாலுக்கு இனிசியல் ஜி னு மக்கள் நினைச்சுடப்போறாங்க :-))//
அப்பாவி மாதிரி சொல்லாதிங்க, மக்கள் விளம்பரம் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லிடுவோமா ?
:)
//ரவி பரபரப்பு கிளப்புறதுல படாக்கில்லாடி கடசில நான் மாட்டிக்க போறேன், எனக்குத்தான் அனுதாபம் தேவைப்பட போவுது :-))
1:17 AM, March 29, 2008
//
இப்படி சொல்லிக் கொடுப்பது நீங்களா ? நானா ?
போச்சு...!
உங்களுக்கு நாளைக்கு தனிப்பதிவு தயார் செய்துவிடுவார். அலெக்சா ஆண்டவனுக்கு படையல் போடனுமே
:)
இங்க சின்ன பசங்களுக்கு டியூஷன் நடக்குதா ? நடக்கட்டும் ........நடக்கட்டும்
வலையுலக நியூட்டன் என்று எனக்கு பட்டம் அளித்த நண்பர் வவ்வாலுக்கு நன்றி. பட்டதை பெற உதவிய கோவியாருக்கு நன்றி.
ம்.. தெரிஞ்சிகிட்டேன்....நன்றி
வசந்தம் ரவி, கோவி கண்ணன், வவ்வால் இப்படிய பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் ஒன்னா சோநது இவ்வளவு ஜாலியா பேசிக்கிறீங்க. நல்லாத்தான் இருக்கு.
பொதுவாகவே சில சின்ன விஷயங்கள் பெரியவர்களுக்கு தெரியாமல் போகலாம் அதனால 'வலைப்பதிவிற்குள் தேடுவது எப்படி' ங்கறது பலருக்கும் பயன்படும் வஷயம் தான். நியூட்டன் பூனை விஷயம் சரியான உதாரணம்.
கருத்துரையிடுக