ஒழுக்கம் பற்றிய கட்டமைப்பில் மது அருந்துதல் என்பது ஒவ்வாத ஒன்றாக இந்திய தத்துவங்கள் சொல்கின்றன. பிறமதங்களில் கூட 'மது' என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று அறிவுறுத்தப்படுகிறது. தனிமனித ஒழுக்கமாக இருக்க வேண்டியவை 'மது விலக்கல்' மற்றும் பல... மதக் கோட்பாடுகளுக்காப்பட்டு இருக்கின்றன. ஒழுக்க விதிகள் அனைத்தையும் மதமே தருகிறது என்ற காட்டுவதற்கு இது போன்ற தனிமனித ஒழுக்கம் சார்ந்தவைகள் அனைத்தும் கோட்பாடுகளாக்கப்பட்ட கட்டுப்பாடுகளாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
'உடல் நலனுக்கு கேடு' என்பதால் மது அருந்துதல் தவறா ? சரியா ? என்பதை அதன் மீது விருப்பு உள்ளவர்களே முடிவு செய்ய முடியும். ஒருவர் மிதமிஞ்சி குடித்துவிட்டு தன்நினைவு அற்றவராக இருந்தால் அது ஒழுங்கீனம் என்று சொல்லமுடியும். ஆனால் அப்படி இல்லாதவர்கள் தாமே விரும்பி குடிப்பது ஒழுக்கம் என்னும் விதிக்குள் வராது. இஸ்லாமிய நாடுகள் தவிர்த்து வெளிநாடுகளில் வயது வந்தவர்கள் மது அருந்துதல் ஒழுங்கீனம் என்ற கருத்து எங்கும் இல்லை.
நமது இந்தியாவில் மது அருந்துதல் மட்டுமல்ல, இறைச்சி (கூடவே மீனும் முட்டை ) உணவும் கூட இந்திய மதங்கள் வழி சொல்லப்படும் ஒழுக்க விதிகள் என்கிற கருத்தே இந்திய தத்துவ/பக்திசார் நூல்களில் விரிவிக்கிடக்கின்றன. இன்றும் இந்துமதம் என்று சொல்லப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட இந்திய மதத்தில் மதுவும் மாமிசமும் நாடுவது தவறு என்பது கோட்பாடாக இருக்கிறது. ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன் அவ்வாறு இருந்ததா ? என்று பார்த்தால் அப்படி இருந்தது போல் தெரியவில்லை. இந்துமதத்தில் ஒன்றான வேதம் சார்ந்த வைதிக மதமான சநானதான தர்மத்தில் வேதம் காலம் முற்பட்டே, விலங்குகளை உண்ணுவதைப் பற்றியும், மது (சோம / சுரா) பாணம் அருந்துவது பற்றியும் நான்கு வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதாக அதை ஆராய்ந்தவர்கள் சொல்லும் கூற்று. வேதகொள்கையில் வழி முதன்மை நிகழ்வாக நிகழும் வேள்வியில் விலங்குகளை பலி இடுவதும் / நரபலி இடுவதும் நடைபெற்றே இருக்கின்றன. பின்னாளில் அவையெல்லாம் பிற்போக்குத்தனமானவை என்றும் விலங்குகளையோ, மனிதர்களையோ பலி இடுவது கண்டிக்கத்தது என்ற கருத்தாக்கத்தை சமணமும், பெளத்தமும் முன்வைத்தன. அதாவது நாகரிகம் வளர வளர முன்பு இருப்பவை பிற்போக்குத்தனமானவை என்பது அப்போதைய கருத்து சூழலில் உருவாகும் ஒரு கட்டமைப்பு.
பவுத்தமும் இறைச்சி உண்ணுவதை முற்றிலும் தடைசெய்யவில்லை. ஆனால் தவிர்க்க முடியாத சூழலில் தமக்காக கொள்ளப்படவில்லை என்றால் இறைச்சி உண்ணுவது தவறல்ல என்ற கொள்கையும் கொண்டிருந்தன. புலால் தவிர்த்தலை கடைபிடிக்கவும் செய்தனர். 80 வயது கடந்த புத்தர், ஏழை அடியர் ஒருவரின் பன்றி இறைச்சி உணவை அதில் விசம் பரவி இருக்கிறது என்று அறிந்தே உண்டு உயிர்நீத்தார். சமணம் / பவுத்தம் பரவியபோது இறைச்சி உணவு தவிர்த்தல் (புலால் மறுத்தல்) கட்டுப்பாடாகவே வைத்திருந்தனர். அது ஜீவகாருண்யம் என்ற கொள்கையாக அறியப்பட்டு மக்களால் ஈர்க்கப்பட்டதால் அந்த மதங்கள் உயர்வாக கருத்தப்பட்டது. அதே போன்று தமிழக வேளாளர் சமயத்தினரும் (சைவர்கள்) இறைச்சி உணவை தவிர்த்தவர்களாகவும் இருந்தனர் (ஏன் என்று அதுபற்றி விரிவாக தெரியவில்லை) ஜீவகாருண்யம் உயர்வான தத்துவமாக இருந்ததால் சநாதன தர்மமும் அவற்றை தமது வைதீக கோட்பாடுகளாக மாற்றிக் கொண்டது. வைதிகம் சைவம் ஆனதன் பலனாக மாட்டிறைச்சி உண்ணுபவர்களை அதையே காரணம் காட்டி புலையர்கள் என்ற சொல்லில் தீண்டத்தாகதவர்கள் ஆக்கி விலக்கி வைக்கவும் எளிதாக இருந்திருக்கிறது.
இராமயணத்தை வால்மிகி எழுதியதாக சொல்லப்பட்ட காலத்தில் மதுவும் / மாமிசமும் ஒழுக்கக் கெடுகளான கருத்துக்களாக இருந்ததில்லை. எனவே இராமனை மது / மாமிசம் உண்டான் என்று சொல்வதில் பெரிய ஆராய்ச்சி செய்து அதை வைத்து தூற்றவது என்பது ஏற்கத்தக்கதல்ல. மேலும் இராமயணம் என்று சொல்லப்படும் வால்மிகி இராமகாதையின் நோக்கம்... கம்ப இராமயணத்திற்குப் பிறகு சொல்லப்படும் 'ஒருவனுக்கு ஒருத்தி' தத்துவமும் இல்லை. வால்மிகி இராமயணத்தின் நோக்கம் கிருஷ்ணன் மனித அவதாரத்தில் இராமனாக பிறப்பது என்று சொல்லப்படும் கதை மட்டுமே. தமிழில் மொழிமாற்றம் செய்யும் போது கம்பர் இராமயணத்தை மொழிபெயர்த்தால் மட்டும் போதாது என்று நினைத்தே 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று அவர்காலத்தில் தேவையாக இருந்த சமூக ஒழுக்கத்தை அதில் காட்டி உயர்வு செய்ய முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பதை, இன்றைக்கு இராமர் பற்றி பேசுபவர்கள் குறிப்பாக 'ஒருவனுக்கு ஒருத்தி' பற்றி சிலாகித்துப் பேசுவதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
திருக்குறளில் புலால் மறுத்தல் குறித்து ஒரு அதிகாரமே இருக்கிறது. கம்பரின் காலம் திருவள்ளுவருக்கு பிறகு என்பதால், கம்பன் மொழி பெயர்க்கும் போது வால்மிகி இராமயணத்தில் இராமன் குறித்து சொல்லப்பட்ட மாமிசம் குறித்த செய்திகளை முடிந்தவரையில் தவிர்த்திவிட்டு புலால் உணவு நட்பை பாராட்டும் விதமாக குகன் தந்தபோது உண்டான் என்று மட்டுமே சொல்லியுள்ளான்.
இன்றைக்கு மது / மாமிசம் நுகர்தல் எந்த சாதியை / மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் / அவை மதக்கட்டுப்பாடுகளாக இருந்தாலும் ... அவற்றைச் சேர்ந்தவர்கள் தாமே விரும்பி விலக்கி வைத்திருத்தலையும் / பலர் அவற்றை விரும்பி நாடுவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த சாதியைச் சேர்ந்தவன் என்பதால் இவற்றை விலக்குகிறார் என்பதை விட அவரவர் தம் கட்டுப்பாட்டுக்கு ஏற்றவாறு தான் நடந்து கொள்கின்றனர் என்று சொல்வதுதான் பொருத்தமானது.
இந்த கட்டுரையில் சொல்ல வந்தது... "அன்றைய / பழங்கால சமூக ஒழுக்கமாக / பழக்கமாக இருந்த ஒன்றை இன்றைய கால ஒழுக்கத்தில் பொருத்திப் பார்த்து அது தவறு" என்று சொல்ல முனைவது மாபெரும் தவறு. அதாவது இராமன் குடிகாரன் என்று கருணாநிதி அன்றைய வழக்கை பழிப்பதும், அவற்றை மறுத்து 'மது'வுக்கு 'தேன்' என்று பொருள் கூறும் 'சோ'வின் திரித்தலும் தவறு.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
3 கருத்துகள்:
ஒழுக்கவிதிகள் இடம் பொருள் ஏவலைப் பொருத்து மாறுகிறது.
இங்க நெதர்லாந்துல பெரும்பாலும் எல்லாரும் மது அருந்துறாங்க. ஆனா யாரும் தப்பா நடந்து பாத்ததில்லை. நம்மூர்ல மது அருந்தாமைன்னு சொல்றோம். ஆனா குடிச்சிப் போட்டு வம்பு செய்றவங்க எத்தனை பேரு. வரைமுறையற்ற உடலுறவுன்னு சொல்றோம். ஆனா யாரும் யாரையும் கையைப் பிடிச்சு இழுக்குறதில்லை. ராத்திரி 12மணிக்கு ஒரு பொண்ணு தனியாப் போக முடியுது. நம்மூர்ல பண்பாடும் கலாச்சாரமும் கட்டிக்காத்துக் குட்டிச்சுவராக்கி வெச்சிருக்கோம். இது பண்பாட்டுக் காவலவர்களும் மதவாதிகளும் ஆணாதிக்கவாதிகளாக இருப்பதால்...நம்ம நாடு இப்பிடியே இருக்கு. ஒன்னும் பண்ண முடியாது.
நல்ல கட்டுரை. கருத்து ஏற்ப்புடையதாகவே இருக்கிறது...
//G.Ragavan said...
ஒழுக்கவிதிகள் இடம் பொருள் ஏவலைப் பொருத்து மாறுகிறது.
இங்க நெதர்லாந்துல பெரும்பாலும் எல்லாரும் மது அருந்துறாங்க. ஆனா யாரும் தப்பா நடந்து பாத்ததில்லை. நம்மூர்ல மது அருந்தாமைன்னு சொல்றோம். ஆனா குடிச்சிப் போட்டு வம்பு செய்றவங்க எத்தனை பேரு. வரைமுறையற்ற உடலுறவுன்னு சொல்றோம். ஆனா யாரும் யாரையும் கையைப் பிடிச்சு இழுக்குறதில்லை. ராத்திரி 12மணிக்கு ஒரு பொண்ணு தனியாப் போக முடியுது. நம்மூர்ல பண்பாடும் கலாச்சாரமும் கட்டிக்காத்துக் குட்டிச்சுவராக்கி வெச்சிருக்கோம். இது பண்பாட்டுக் காவலவர்களும் மதவாதிகளும் ஆணாதிக்கவாதிகளாக இருப்பதால்...நம்ம நாடு இப்பிடியே இருக்கு. ஒன்னும் பண்ண முடியாது.
//
ஜிரா,
சரியாகத்தான் சொல்கிறீர்கள் மேற்கத்திய தாக்கம் உள்ள வெளிநாடுகளில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு நமது நாட்டைவிட குறைவே.
கருத்துரையிடுக