பின்பற்றுபவர்கள்

26 செப்டம்பர், 2007

மனிதன் ஏன் இயற்கையை வெல்ல வேண்டும் ?

மனிதனின் உணர்வுகள் அனைத்தும் இயற்கை ... அதில் கட்டுப்பாடு என்பது மனிதனாக முடிவு செய்து கொண்ட செயற்கை. இந்த செயற்கையை மனிதன் தன்விருப்பத்திற்கு ஏற்றவாரே ஏற்படுத்திக் கொண்டான். நாளாடைவில் அது அவனுக்கு சமூகம் என்ற சிறந்த அமைப்பை தந்தது.

உண்ணும் உணவை மென்மையாக்க நெருப்பை பயன்படுத்திக் கொண்டான்...காலப்போக்கில் அவன் கூறிய பற்களின் அவசியமின்மையால் தட்டையாக மாறியது. உணர்வலையின் உந்துதலில் எதிர்பாலினரிடம் கூடி தனித்துக் கொள்ளும் விலங்குகளைப் போன்று அல்லாது உறவு முறைகளை அமைத்துக் கொண்டு கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டான்.

குடும்பம் என்ற அமைப்பு ஒரு கட்டுப்பாடு என்பதைவிட பாதுகாப்பு என்பதே பொருத்தம். தனிமனிதன் துன்பத்திற்கு ஆளாகும் போது தனக்கென்று ஒரு குடும்பம் இல்லை என்றால் அவனால் தற்காத்துக் கொள்வது எளிதன்று.

இன்றைய சமுதாய சூழ்நிலையில் தனிமனித சுதந்திரத்தின் தேவையே பெரிது என்பதுபோல் சித்தாந்தங்கள் முன்மொழியப்படுவதும், நவீன சிந்தனையாக்கம் என்ற பெயரில் வலியுறுத்தப்படுகிறது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் மனிதர்கள் சுதந்திரமாக இருப்பதாகவும் தரவுகள் முன்வைக்கப்படுகின்றன. இவைதான் சரியோ என்று பலரும் நினைக்க ஆரம்பித்து முடிவில் குடும்ப அமைப்பும் கட்டுப்பாடுகளும் கேலிக் குறியாகிவிடும் என்ற எண்ணத் தோன்றுகிறது. உணர்வலைகளின் உந்துதல் என்பது இயற்கையானது அதை ஏன் கட்டுப்படுத்தவேண்டும் இயல் கேள்வியில், அதை முறைப்படுத்தலில் தலைப்படாமல் மனம் போல் செயல்பட்டு தனது இன்பமே பெரிது என்று நினைக்க ஆரம்பித்து, முடிவில் அதில் விலக மனமின்றி குடும்பம் என்ற அமைப்பு பொறுப்புகள் நிறைந்ததாக (ஐயக்) கருத்தாக்கத்தை / எதிர்கருத்தை பலர் கொண்டுள்ளனர்.

உடலுறவும் அதனால் கிடைக்கும் குழந்தை பேறும் இயற்கை என்பதை விட உடலுறவு உந்துதல் என்பது இயற்கை ....குழந்தை பேற்றை விரும்பினால் செய்து கொள்ளலாம் என்பது வரை இயற்கையை வென்றாகிவிட்டது. இயற்கையின் சிறகுகளை தன் விரும்பும் திசைக்கு மாற்றிவிட்டதால் அல்லது இயற்கையை தனக்கு சாதமாக நினைக்க ஆரம்பித்து பலரும் உடலுறவு இச்சைக்கு எதிர்பாலினர் தேவையே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். இயற்கையின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதால்... உடலுறவு என்பது வாழ்வியலுடன் சேர்ந்த அம்சம் என்பதைவிட பசியைப் போன்ற ஒரு உணர்வு, அதை எப்படியும் தனித்துக் கொள்வதே இயற்கை என்ற நினைக்க ஆரம்பித்து, ஓரினசேர்கை ஆகியவற்றை நோக்கிச் செயல்படுத்திக் கொண்டிருப்பதையும், அதற்காதராவாக உணர்வுகள் 'இயற்கையானது' என்பது போன்ற சித்தாந்தங்களை முன்வைக்கிறார்கள். இதை சமுகம் என்ற கட்டுப்பாட்டு அமைப்பிற்குள் இருந்து பார்கையில் மனித இனம் விபரீதமான பாதையில் செல்வதாக நினைக்க முடிகிறது.

விலங்குகள் போல் புணர்ந்து மகிழலாம் என்பது இயற்கை என்று சொல்பவர்களின் / இப்படி நினைப்பவர்களின் சமூக நலன் குறித்த அக்கரை தான் என்ன ? ஒன்றுமே இல்லை. இதுபோன்ற தனிமனித சுதந்திரம் 100 விழுக்காட்டை எல்லோருமே அடையும் போது விலங்குகளுக்கும் நமக்கும் வேறுபபடு இல்லாமல் போய்விடும். விலங்குகளால் சுதந்திரமாக இருந்தாலும் பிறப்புகளை கட்டுப்படுத்த முடியாது / பாதுகாத்துக் கொள்வதும் எளிதன்று. ஆனால் மனிதன் ? அதாவது தனிமனிதனாகவே வாழ ஆசைப்படுபவர் ஏன் குழந்தை பெற்றுக் கொண்டு பொறுப்புகளை சுமக்க வேண்டும் என்று நினைப்பர். சமூக அமைப்பு சீரழியும். மனிதன் இயற்கையை வென்று ஏற்படுத்திய இயற்கைக்கு மாற்றான சமுக அமைப்பு அவன் கையால் இயற்கைக்கு பலியாகிவிடும்.

தனிமனித சுதந்திரம் எதுவரை ? இதன் எல்லைக் கோடுகள் அகலப்படுத்திக் கொண்டு செல்லும் போது இயற்கை நம்மை வென்றுவிட்டதாக சிரிக்கும். அப்பொழுது ஆதிவாசிகளைப் போல் காட்டில் இல்லாது ஆனால் அவர்களைப் போல் நகரத்தில் வசித்துக் கொண்டிருக்கும் நம் சந்ததிகள்.

தனிமனித சுதந்திரம் ? இந்த கேள்வியில் அனைத்து பெண்களும் தமக்கும் தனிமனித சுதந்திரம் வேண்டும் எனவே எனக்கு பிள்ளை பெற விருப்பமில்லை என மறுத்தால் என்னவாகும் ?

இயற்கை சீற்றம் எதுமின்றியே மனித இனம் முற்றிலும் மறைய ஒரே தலைமுறை போதும்.
மனித இனம் இயற்கையுடன் எப்போதுமே போராடிக் கொண்டு / வென்று கொண்டிருக்க வேண்டும். இயற்கையென்ற தன்நலனை இயன்றவரை சமுக நலன்நோக்கிய பயன்பாட்டை நினைத்து கட்டுப்படுத்த வேண்டும்

நவநாகரீகம் என்ற பெயரில் தனிமனித சுதந்திரம் உயர்ந்தது என்ற பொறுப்பற்ற சிந்தனையை வலியுறுத்தி பேசுபவர்கள் சமூகம் புறக்கணிக்க வேண்டும் அல்லது திருத்த முயலவேண்டும்.

நமக்கு விருப்பம் இல்லாத ஒன்றை எவரும் திணிக்க முடியாது. நாமே எதையும் வர்புறுத்தலால் ஏற்றுக் கொள்ளாத போது, நாம் வாழும் சமூகத்துக்கு நாம்மால் இடையூறே இல்லாது ஒன்றிணைந்து வாழ்வதே தனிமனித சுதந்திரம். சமூகமாக கூடிவாழ்வதில் சில விட்டுக் கொடுத்தலில் தீமைகள் இருந்தாலும் கிடைக்கும் நன்மைகள் கோடி.

இயறகையை வெல்லுவோம்... ஒன்றிணைந்த வாழ்வுடன் இன்புற்று இருப்போம்.


12 கருத்துகள்:

கையேடு சொன்னது…

திரு. கோவி கண்ணன் அவர்களே, உங்களுடைய பல பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுள் நானும் ஒருவன். உங்களுடைய கட்டுரைகள் பல மிகவும் பயனுள்ளதாகவும், தெளிவான கருத்துக்களையும் விவாதங்களையும் முன்வைக்கின்றன. தங்களுடைய பகிர்வுகளுக்கு நன்றிகள்.

தனிமனித மற்றும் குடும்ப அமைப்பு இவை இரண்டிற்கும் இடையே சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்க முற்படும்போது பெரும்பாலும் தவறான புரிதல்களுக்கு உட்படுத்திவிடுகின்றன. இவை இரண்டுக்கும் இடையே இருக்கும் எல்லையை நிர்ணயிப்பது மிகவும் கடினமான ஒரு செயல் என்பது என் கருத்து. இந்த எல்லையை கால மாற்றங்களுக்குத் தகுந்தாற் போல் வரையறுத்துக் கொள்கின்ற பக்குவம் இருந்தால் மட்டுமே இவை இரண்டையுமே பாதிப்பில்லாமல் வளர்த்தெடுக்க முடியும்.

மேற்கூறிய கருத்து தனிமனித மற்றும் குடும்ப அமைப்பு பற்றிய தங்களது கருத்துக்களுக்கான பின்னூட்டம்.

உங்கள் கட்டுரையின் கடைசி இரண்டு பத்திகள் ஒரு தவறான புரிதலின் அடிப்படையில் எழுதப்பட்டது இந்தக் கட்டுரை என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அதற்கான எனது பின்னூட்டம் இனி வருவது.

மனிதனை முதலில் விலங்கிலிருந்து வேறுபடுத்தியிருப்பது மட்டுமே இயற்கைக்கு எதிரான செயல்.
மனிதன் சமூக வாழ்க்கையைக் கற்றுக் கொண்டதே விலங்குகளிடமிருந்துதான். தான் ஒரு விலங்கல்ல என்ற மனிதனின் அராஜக முடிவுதான் முதலில் அவனை இயற்கையிடமிருந்து தனிமைப்படுத்தியது.

மலைப் பகுதிகளில் இருக்கக் கூடிய மழைக்காடுகளை அழிக்க வேண்டுமானால் 30% அழித்தால் போதும் மற்றவை தாமாகவே அழிந்து விடும். அதுவும் ஒரு சமூக அமைப்புதான். குரங்கு, மான், சிங்கம் போன்ற விலங்கினங்களிடம் இல்லாத ஒரு சமூக அமைப்பா நம்மிடம் புதிதாக இருக்கிறது.
தாம் உணவாக உட்கொள்ளும் விலங்குகளின் இனப்பெருக்க காலத்தில் தங்களுடைய உணவிற்கான வேட்டையைக் குறைத்துக் கொள்கிற அளவிற்கு விலங்குகள் சமூக விதிகளைக் கடைபிடிப்பவை. அந்தமான் தீவுகளிலும், ஆப்பிரிக்க காடுகளிலும் வாழ்கின்ற ஆதிவாசிகள் கூட மான், முயல் போன்ற விலங்குகளின் இனப்பெருக்கக் காலங்களில் பழங்களையும், தழைகளையும் தங்களது முதன்மை உணவாகக் கொள்கின்றனர். ஆதலால் சமூக வாழ்க்கையை நவீனகால மனிதனைவிட விலங்குகள்தான் மிகச்சிறப்பாகக் கடைபிடிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் விலங்குகளிடமும் குடும்பம் இருக்கிறது, சமூகக்குழுவும் இருக்கிறது.

சமூக வாழ்க்கையை மனிதன் நிச்சயம் விலங்குகளிடமிருந்துதான் கற்றுக் கொண்டான்.

சமூக வாழ்க்கை வாழ்வதன் மூலம், மேலும் இயற்கையோடு இணைகிறோமே தவிர வெல்லவில்லை என்பது என் கருத்து.

கோவி.கண்ணன் சொன்னது…

//

கையேடு said...
திரு. கோவி கண்ணன் அவர்களே, உங்களுடைய பல பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுள் நானும் ஒருவன். உங்களுடைய கட்டுரைகள் பல மிகவும் பயனுள்ளதாகவும், தெளிவான கருத்துக்களையும் விவாதங்களையும் முன்வைக்கின்றன. தங்களுடைய பகிர்வுகளுக்கு நன்றிகள்.
//

கையேடு அவர்களே, பாராட்டுக்கு மிக்க நன்றி.

உங்களின் மற்ற கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையதே, மாற்றுக் கருத்து இல்லை.
:)

தனிமனித சுதந்திரம் என்பது குடும்பம் என்ற அமைப்பை விட்டு விலகாத அளவுக்கு இருக்க வேண்டும் என்பதே நான் சொல்ல முயன்றது.

சரியாக தெளிவுபடுத்தவில்லை என்பது உங்கள் பின்னூட்டம் வழி தெரிகிறது.

மனிதர்கள் தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் தீவுக்கூட்டங்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே மையக்கருத்து. அதனால் சமூக அமைப்புகள் வலுவிழந்துவிடும், தன்நலம் அவசியம் ஆனால் அவை பொதுநல நோக்கிலும் இருக்கவேண்டும் என்பதை சொல்ல முயன்றேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சமூக வாழ்க்கை வாழ்வதன் மூலம், மேலும் இயற்கையோடு இணைகிறோமே தவிர வெல்லவில்லை என்பது என் கருத்து.//

திரு கையேடு,

சமூகம் அதில் இணைந்த குடும்ப வாழ்கை என்பது இயற்கையானது என்றாலும் கட்டுப்பாடுகள் என்பது செயற்கையானதுதான்.

தனிமனித உடல்/மன வழி உணர்வுகள் அதிகரிக்கும் போது, அவை கட்டுப்படுத்தமுடியாமல் போனால் அது தன்நலம் என்ற பரிணாமத்தில் செல்கிறது. பிறருக்கு உதவுதல் என்ற மனப்பான்மை கூட லாப நோக்கில் ஏன் உதவேண்டும் என்ற கேள்விகள் வந்துவிடும்.

வடுவூர் குமார் சொன்னது…

வாவ்! பதிவும் பின்னூட்டமும் அட்டகாசம்.
கையேடு- புதிதாக இருக்கிறாரே! நல்ல கருத்துக்களை சொல்லியுள்ளார்.

Unknown சொன்னது…

:-))

குடும்ப முறை இயற்கை அல்ல என்றும் அது மனிதன் செயற்கையாக உருவாக்கிக்கொண்ட அமைப்பு என்று வரும் தொனியில் உள்ளது இந்த கட்டுரை. அது தவறு.
**

பாலியல் உறவை வைத்தே நீங்கள் மனிதனின் குடும்ப அமைப்பை மற்ற விலங்கிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறீர்கள். இந்தியாவில், ஏன் தமிழகத்திலேயே கட்டற்ற பாலியல் சுதந்திரம் உடைய அதே சமயம் குடும்ப அமைபும் உள்ள இனக்குழுக்கள் உண்டு.

**
மனிதருக்குள்ளேயே "குடும்பம்" என்ற அமைப்பின் அளவுகோல் மாறும்.

உதாரணம்: நரிக்குறவர்கள் .

இவர்களும் மனிதர்கள் தான். இவர்கள் வாழும் அமைப்பும் குடும்ப முறைதான்.

நீங்கள் (அல்லது பரவலாக எல்லாரும்) புரிந்து கொண்டதே குடும்பம் என்றால் நரிக்குறவர்கள் முறை குடும்பம் கிடையாதா? இல்லை அவர்கள் மனிதர்கள் இல்லையா? :-))

***

விலங்குகளின் குடும்ப அமைப்பை மனிதனின் குடும்ப அமைப்புடன் ஒப்பிட்டு, அங்கே எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று சொல்லி உள்ளீர்கள்.

அது தவறு. அங்கேயும் ஒரு சமூக அமைப்பு உண்டு. உங்கள் பார்வையில் அது குடும்பமாக இல்லாமல் தெரியலாம். இருந்துவிட்டுப் போகட்டும்.
:-)


ஆனால் சேர்ந்து வாழ்வது (ஒரு அமைப்பிற்குள். அந்த அமைப்புகளின் இலக்கணங்கள் மாறுபடலாம்) விலங்கினங்களுக்கே (மனிதன் உட்பட) உள்ள பொதுவான இயற்கை குணம்.

**

பல டாக்குமென்டரி படங்களை உதாரணமாக் கட்டலாம். March of the Penguin (Penguins, A love story) அதில் ஒன்று.

குடும்பம்,பரஸ்பர உதவி, தியாகம் எல்லா உணர்வுகளையும் பார்க்கலாம் இதில்

**

VSK சொன்னது…

இயற்கையை வெல்ல எடுக்கும் ஒவ்வொரு மனித உத்தியும் இயற்கைக்கு சாதகமாகிப் போதலே இயற்கையின் அபரிமித வெற்றியைப் பறை சாற்றிக் கைகொட்டிச் சிரிக்கிறது!

இயற்கையோடு இயைந்த வாழ்வை நோக்கியே மேலைநாட்டுப் பயணங்கள் இப்போது அமைந்து வருகின்றன... அதனை வெல்லுதல் இயலாது எனத் தெளிந்த புரிதலினால்!

ஒரு கேள்வியை உந்துவிக்கிறது என்ற வகையில் இது ஒரு நல்ல கட்டுரையே.... எதிர்மறையாகிப் போயிருந்தாலும்!


அக்கரை= எ.பி.= அக்கறை

கோவி.கண்ணன் சொன்னது…

//கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
:-))

குடும்ப முறை இயற்கை அல்ல என்றும் அது மனிதன் செயற்கையாக உருவாக்கிக்கொண்ட அமைப்பு என்று வரும் தொனியில் உள்ளது இந்த கட்டுரை. அது தவறு.
**//

கல்வெட்டு ஐயா,

குடும்ப முறை என்றால் உறவுகளையும் சேர்த்துதான். விலங்குகளிடம் உறவுகள் இல்லை என்பதற்காக 'குடும்பம்' என்ற சொல்லை இங்கே குறித்தேன். உறவுகளை தவிர்த்த பொருளில் பார்த்தால் மனிதனும் விலங்கும் ஒன்றுதான்.
:)
உறவுகளை அதாவது மாமா,மச்சான்,மாமியார்/மாமனார் மற்றும் பல உறவுகளை நாமே குடும்ப அங்கமாக ஏற்றுக் கொண்டது செயற்கையானது தானே.

//பாலியல் உறவை வைத்தே நீங்கள் மனிதனின் குடும்ப அமைப்பை மற்ற விலங்கிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறீர்கள். இந்தியாவில், ஏன் தமிழகத்திலேயே கட்டற்ற பாலியல் சுதந்திரம் உடைய அதே சமயம் குடும்ப அமைபும் உள்ள இனக்குழுக்கள் உண்டு. //

கட்டற்ற சுதந்திரம் சரி, ஆனால் தனிமனித சுதந்த்ரம் என்ற பொருளில் பார்க்கும் போது விலகியே சொல்கிறார்களே எல்லோரும்.

**
//மனிதருக்குள்ளேயே "குடும்பம்" என்ற அமைப்பின் அளவுகோல் மாறும்.

உதாரணம்: நரிக்குறவர்கள் .

இவர்களும் மனிதர்கள் தான். இவர்கள் வாழும் அமைப்பும் குடும்ப முறைதான்.//

நான் நரிக்குறவர் குடும்ப அமைப்பை குறைத்துச் சொல்லவில்லை. நாகரீக வளர்ச்சிக்கு 100 விழுக்காடு தனிமனித சுதந்திரம் தடையாக இருக்கும் என்பது என்கருத்து.

//நீங்கள் (அல்லது பரவலாக எல்லாரும்) புரிந்து கொண்டதே குடும்பம் என்றால் நரிக்குறவர்கள் முறை குடும்பம் கிடையாதா? இல்லை அவர்கள் மனிதர்கள் இல்லையா? :-))//

நரிக்குறவர் குடும்பம் பற்றி குறைசொல்லவில்லை. ஆனால் அவர்களின் சமூக வளர்ச்சியில் அவர்களின் பங்கு என்பது மிக மிக குறைவு. கற்காலத்தில் இருப்பதற்கும் தற்போது இருப்பதற்கும் வேறுபாடுகள் இல்லை. மேலே நான் குறிப்பிட்ட குடும்பம் என்ற உறவு அமைப்புக்குள் தான் அவர்களும் இருக்கிறார்கள். மேற்சொன்ன தனிமனித சுதந்திரம் என்ற கருத்தை நரிகுறவர் வாழ்வுடன் பொருத்திப் பார்க்க முடியாது. அவர்கள் எவரும் திருமணம் / உறவுகள் சுமை என்று நினைப்பது கிடையாது.

***

//விலங்குகளின் குடும்ப அமைப்பை மனிதனின் குடும்ப அமைப்புடன் ஒப்பிட்டு, அங்கே எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று சொல்லி உள்ளீர்கள்.
அது தவறு. அங்கேயும் ஒரு சமூக அமைப்பு உண்டு. உங்கள் பார்வையில் அது குடும்பமாக இல்லாமல் தெரியலாம். இருந்துவிட்டுப் போகட்டும்.
:-)
//

விலங்குகள் இயற்கையில் ஒன்றி இருக்கின்றன என்பதற்காக சொன்னேன். அவற்றை ஒப்பிடும் போது நாம் இயற்கையை விஞ்சியே இருக்கிறோம் எல்லா விதத்திலும். ஆனால் இயற்கையை விட்டு முற்றிலும் விலகி இருக்கிறோம் என்ற பொருளில் சொல்லவில்லை.

//ஆனால் சேர்ந்து வாழ்வது (ஒரு அமைப்பிற்குள். அந்த அமைப்புகளின் இலக்கணங்கள் மாறுபடலாம்) விலங்கினங்களுக்கே (மனிதன் உட்பட) உள்ள பொதுவான இயற்கை குணம்.//

சரிதான். இல்லை என்று மறுப்பதிற்கில்லை. ஆனால் மனிதன் தனித்து சிந்திக்கும் திறன் உள்ளவன் என்பதால் இயற்கையை மீறி செயல்படுவதால் தானே அவனால் வெற்றிகரமாக இயங்கி வளரமுடிகிறது.

**

//பல டாக்குமென்டரி படங்களை உதாரணமாக் கட்டலாம். March of the Penguin (Penguins, A love story) அதில் ஒன்று.

குடும்பம்,பரஸ்பர உதவி, தியாகம் எல்லா உணர்வுகளையும் பார்க்கலாம் இதில்

**
//

ஐயா,

நான் இங்கு சொல்ல முயன்றதை தனிமனித சுதந்திர திருப்தியில் குடும்பம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவே பலர் தயங்குகிறார்கள். என்ற மைய பொருளிலும் இதை பார்க்கலாம். தனிமனித சுதந்திரத்தில் தியாக மனப்பான்மை, சமுக கடமைகள் காணாமல் போவதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்ல முயன்றேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
இயற்கையை வெல்ல எடுக்கும் ஒவ்வொரு மனித உத்தியும் இயற்கைக்கு சாதகமாகிப் போதலே இயற்கையின் அபரிமித வெற்றியைப் பறை சாற்றிக் கைகொட்டிச் சிரிக்கிறது!

இயற்கையோடு இயைந்த வாழ்வை நோக்கியே மேலைநாட்டுப் பயணங்கள் இப்போது அமைந்து வருகின்றன... அதனை வெல்லுதல் இயலாது எனத் தெளிந்த புரிதலினால்!

ஒரு கேள்வியை உந்துவிக்கிறது என்ற வகையில் இது ஒரு நல்ல கட்டுரையே.... எதிர்மறையாகிப் போயிருந்தாலும்!


அக்கரை= எ.பி.= அக்கறை
//

விஎஸ்கே ஐயா,

உங்கள் இயற்கைக்கு மாறான
ஒரு கேள்வியை உந்துவிக்கிறது என்ற வகையில் இது ஒரு நல்ல கட்டுரையே.... எதிர்மறையாகிப் போயிருந்தாலும்!
என்ற பாராட்டும் வரிகளுக்கும். மேலே சொல்லிய மற்ற கருத்துக்களுக்கும் மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// எதிர்மறையாகிப் போயிருந்தாலும்!//

ஓ... ! அதிலும் ஒரு 'க்' இருக்கிறதா ? கவனிக்கவில்லை.

உங்கள் இயற்கையை நீங்கள் அளவுக்கு அதிகமாக மீறவில்லைதான்.
:)

Unknown சொன்னது…

நீங்கள் சொல்லும் மாமன் மச்சான் ஒரு அடையாளம்தான்.இந்த உறவுகளை ஏற்றுக் கொண்டது செயற்கை அல்ல. அது குழுவாக வாழும் அமைப்பில் வந்த அடையாளம்தான். எனவே அதுவும் இயற்கையே :-)). பக்கத்து வீட்டுக்காரர் எதித்த வீட்டுக்காரர் போல இது ஒரு அடையாளப்படுத்தலே.

மற்ற விலங்குகளிடம் அது இல்லை என்று நம்மால் சொல்லவே முடியாது. நாய்களிடம் அந்த தெரு நாய் இந்தத் தெருநாய் என்ற அளவில் அடையாளப்படுத்தப்படல் உள்ளதை பார்க்கலாம். சரியாக அல்லது விளக்கமாக இன்று நமக்குத் தெரியாமல் இருக்கும் இந்த விசயம் அடுத்து வரும் ஆராய்ச்சிகளால் அறியப்படலாம். யார் கண்டார்கள்? இன்றளவில் அது நம்மால் அறியப்படவில்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

மேலும் , இந்த மாமன் மச்சான் உறவு முறை சம்பந்தமான சடங்குகள் மனிதனுக்குள்ளே சாதி/மத ரீதியில் வித்தியாசப்பட்டுக் கிடப்பதால் இந்த உறவுகளை ஒரு அளவுகோலாக (மனிதருக்குள்ளேயே) எடுத்துக் கொள்ளமுடியாது.

***

கூடி வாழும் சமுதாயத்தில் சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்பது உண்மை. அதே சமயம் தனிமனித சுதந்திரமும் ஒரு வகையில் இயற்கையே :-))

**

நாகரீகம் என்பதும் எல்லாருக்கும் பொதுவான ஒன்று அல்ல. எனவே தனிமனித சுதந்திரம் நாகரீக வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று பொதுமைப் படுத்த முடியாது.
பொது இடங்களில் முத்தமிடும் சுதந்திரம் (தனிமனித சுதந்திரம்) இல்லாததால் இந்தியாவில் நாகரீகம் மற்ற நாடுகள் அளவிற்கு வளர்ந்துவிடவில்லை.

**
// நான் இங்கு சொல்ல முயன்றதை தனிமனித சுதந்திர திருப்தியில் குடும்பம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவே பலர் தயங்குகிறார்கள். என்ற மைய பொருளிலும் இதை பார்க்கலாம்.//

குடும்பம் எனது ஒரு கமிட்மெண்ட். அது மட்டுமே சிக்கலானது அல்ல . குடும்பம்,தனிமனித சுதந்திர சிந்தனைகள் உட்பட எல்லா தளங்களுமே அதற்கே உரிய இலாப/நஷ்டங்களுடன் தான் அமுல்படுத்தப்படுகிறது.

***

ஐயா என்று அழைக்க வேண்டாமே :-))

**

கையேடு சொன்னது…

தெளிவுபடுத்தியதற்கு நன்றிகள் திரு. கோவி கண்ணன்.

பெயரில்லா சொன்னது…

//... அதே சமயம் தனிமனித சுதந்திரமும் ஒரு வகையில் இயற்கையே .. //

இந்தக் கருத்து எனக்கு ஒப்புதல் இல்லை.

இயற்கையின் தளைகளால் கட்டப்பட்டதுதான் மனம். சுதந்திரம் அவற்றுக்கு அப்பாலுள்ள ஆன்மாவின் சம்பந்தம் உடையது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்