பின்பற்றுபவர்கள்

18 ஆகஸ்ட், 2007

ரா.. றா.. சரசக்கு raa Raa ...

கசடதபற வல்லினம், யரலவழள இடையினம். ஙஞணநமன மெல்லினம் எல்லாம் தமிழ் என்றதில் எழுத்தாக இருக்கும் ஓரினம். ற, ர என்பது வல்லினம் இடையினம் இரண்டிலும் ஒரே ஒலியில் இருந்தாலும் மாத்திரையில் (ஒலி அளவு) வேறு பாடு இருப்பதால் வேறுவேறு எழுத்துக்கள். சொற் பலுக்களில் அழுத்தம் கொடுத்து நன்கு பழகாததால் அவ்வப்போது எழுதும் போது எதை பயன்படுத்துவது என்பதில் பயிற்சியின்மையால் குழப்பங்களும் ஏற்படும். இது தமிழில் எழுத முயல்பவர்களுக்கும் மட்டுமல்ல நன்றாக எழுதுபவர்களுக்குக் கூட அவ்வப்போது சில சறுக்கல்களை கொடுத்துவிடும்.

ஆனாலும் ஒலி ஒன்றியிருப்பதால் அவ்விரு எழுத்தைப் பற்றி பேசும் போது வேறுபடுத்திக் காட்ட சி'றி'ய 'ர', பெ'ரி'ய 'ற' என்று வழக்கில் சொல்லுவோம். ஒரு வியப்பு பாருங்கள், சிறிய என்று எழுதுவதற்கு பெரிய 'ற' வையும் பெரிய என்று எழுதுவதர்கு சிறிய 'ர' வையும் பயன்படுத்துகிறோம். நமக்கு 'ர, ற' குழப்பங்கள் இருப்பது இயல்பு என்றாலும் 'ஒலிக்கும்' அல்லது பலுக்கும் (உச்சரிப்பு) போது மிகச்சரியாக கையாளுவோம்.

புதிதாக தமிழ்கற்றுக் கொள்ள வரும் வேற்றுமொழிக்காரர்களுக்கு 'ற' பெரும் குழப்பத்தைக் கொடுக்கும், ஏனென்றால் 'ஒலி'யின் தன்மையை வைத்து சொற்களை படிக்க அவர்கள் முயலும் போது அதை கேட்கும் நமக்கு அந்த சமயம் நகைச்சுவையாகவும் சிலருக்கு வருத்தமளிப்பதாகவும் ஆகிவிடும்.

வெற்றி என்பதை அவர்கள் படிக்க முயலும் போது 'வெ' ..'ற்'...'றி' அதாவது வெர்றி என்று படிப்பார்கள் நல்ல நகைச்சுவை. சென்னையில் இருக்கும் போது தமிழ் எழுத்துக்களைக் கற்றுக் கொண்ட தெலுங்கு (மனவாடு) நண்பர் ஒருவர், ஆட்டோவில் பின்னால் எழுதி இருக்கும் 'பெண்ணுக்கு 'ஏற்ற' திருமண வயது 21' என்று படித்தபோது அருகில் இருந்த எனக்கு எப்படி ஆகியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இது அவருக்கு பயிற்சி இன்மையால் வந்த குழப்பம் என்று தான் நினைக்க முடிகிறது. நண்பருக்கு தமிழ் அவ்வளாவாக தெரியாது என்பதால் அதை கிண்டல் செய்யவோ, அவர் கிண்டல் செய்தார் என்றெல்லாம் கொள்ள முடியவில்லை.

இந்தியர்களுக்கு எந்த மொழி பேசுபவராக இருந்ததலும், ஏன் இந்தியாவுக்கும் 'ரா' வுடன் உறவு நல்ல உறவே, ச'ர'ளமாக நாவில் பு'ர'லும். ஆங்கிலேயர்கள் 'ர' அதாவது 'R' ல் அழுத்தும் கொடுத்து பேசமாட்டார்கள் அதுவும் சொற்களின் இடையில் இருந்தால் முழுதுமாக தவிர்த்துவிட்டு அல்லது மென்மையா பலுக்கி பயன்படுத்தவார்கள். சீனர்கள் ? அவர்களுக்கு ' R' மிகக் கடினம். வரவேவராது. சிங்கப்பூர் சீனர்கள் 'R' என்பதை சொல்லச் சொன்னால் 'ARA' 'ஆரா' என்று ஒலிக்கும் படி சிரமப்பட்டு சொல்லுவார்கள். சீன எழுத்துக்களில் 'R' ன் பயன்பாடு மிகக் குறைவு என்பதால் சீனர்கள் குறிப்பாக சீனாவில் இருந்து வரும் சீனர்களுக்கு 'R' வ'ர'வே வ'ரா'து. அப்படியும் சொல்லச் சொல்லிக் கேட்டால் அல்லது R இடம் பெற்றிருக்கும் ஆங்கில சொற்களை அவர்கள் பேசும் போது துப்பாக்கியால் சுடப்பட்ட பிற்கு குரலில் 'ரா' வை சொல்ல மிகவும் சிரமப்பட்ட முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போல இருக்கும். எம் ஆர் டி என்பதை 'எம்மாத்தி' என்பார்கள்

அன்புடன்,

கோவி.கண்ணன்

3 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

எனக்கும் சில சமயம் இந்த "ற" எழுதும் போது தவற விட்டுவிடுவேன்.
சீனர்கள் "ற/ர" உச்சரிப்பு நீங்கள் சொன்னது சரி தான் ஆனால் "குமார்" மட்டும் சரியாக உச்சரிப்பார்கள்.
ஏனென்றால் சிங்கையில் பல குமார்கள் உண்டு.பல காலமாக.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
எனக்கும் சில சமயம் இந்த "ற" எழுதும் போது தவற விட்டுவிடுவேன்.
சீனர்கள் "ற/ர" உச்சரிப்பு நீங்கள் சொன்னது சரி தான் ஆனால் "குமார்" மட்டும் சரியாக உச்சரிப்பார்கள்.
ஏனென்றால் சிங்கையில் பல குமார்கள் உண்டு.பல காலமாக.
//
குமார்,

எனக்கும் வியப்பாக இருக்கிறது, இன்னும் ஒரு முறை ஊன்றி கவனித்துப் பாருங்கள் 'குமா' ன்னு சொன்னாலும் சொல்லுவார்கள்
:)

TBCD சொன்னது…

அது போலே இன்னும் ஒரு தகராறு உண்டு....அது தான்...
"பு'ர'லும்"- ழ,ல,ள..
அது புரளும்... ஹி ஹி ஹி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்