பின்பற்றுபவர்கள்

25 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : ஒருவார காலம் நிறைவு பெறுகிறது !

தாழ்வு மனப்பான்மை இருக்கும் வரை நாம் நினைப்பதை எதையும் செயல்படுத்த முடியாது. தாழ்வு மனப்பான்மை என்பது ஐம்பது விழுக்காடு தன்னுணர்வுகளால் இயல்பாக இருப்பவை, பிறரைப் பார்த்து அவற்றை நாமே நீக்கிக் கொள்ள முடியும். மீதம் ஐம்பது விழுக்காடு சமூகம் நம்மீது திணிப்பது. ஒரு ஆசிரியர் ஒரு மாணவனைப் பார்த்து 'நீ மாடுமேய்க்கத்தான் லாயக்கு' என்று சொல்லும் போது, அதே போன்று வசை மொழிகளைப் பெற்ற 90 விழுக்காடு மாணவர்களுக்கு தாழ்வு உணர்ச்சி வந்துவிடும் மீதம் 10 விழுக்காட்டினரே 'நாமும் வாத்தியாருக்கு பாடம் கற்றுக் கொடுப்போம்' என்று எதிர் உணர்வுகளால் தூண்டப்பட்டு தாழ்வுணர்வுகளில் இருந்து மீண்டு மிளிர்வர்.

சமுதாய அளவிலும் நடப்பதும் இதேதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, அல்லது தன் காலடியில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கும் சமூகங்களை, ஆதிக்க சக்திகள் அமுக்கியே / அடக்கியே தொடர்ந்து வைத்திருப்பதற்கு இதே உத்தியைத்தான் பயன்படுத்துகின்றன. 'அறிவு, திறமை எல்லாம் 'வித்தில்' இருந்தே வருபவை எனவே நாங்களே அறிவாளிகள், இந்த கீழ்சாதியில் பிறந்தவர்களான நீங்கள் அறிவு சார்ந்த வேலைகளையோ, கல்விகளையோ நினைத்தாலும் உங்களால் அடைவதற்கான அறிவு அற்றவர்கள். உங்கள் நிலை என்பது ஆண்டவனே ஆக்கியது, எனவே இதுதான் உங்கள் தலையெழுத்து' என்பர். இதைப் பற்றி சிறிதேனும் சிந்திக்காமல் 'நாம் அப்படித்தான்' என்று முடங்கிவிடுகின்றனர். பார்க்கப்போனால் அறிவு, திறமை, சாதுரியம் மற்றும் அறிவுசார் அனைத்தும் திருடர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் கூட இருக்கிறது. சமூகங்களை கீழிறக்கும் அறிவும், நுட்பமும் கூட இத்தகையது தான், இவை தன் நலம் சேர்ந்தவை. இதை 'புத்திசாலித்தனம்', 'பிறப்பின் அடையாளம்' என்று நினைத்துக் கொண்டு பெருமையடைபவர் அடையட்டும்.

********

நான் அண்மையில் 'ஓம்பிரகாஷ் வால்மிகி' என்ற வடநாட்டு தலித்திய இலக்கிய செல்வர் எழுதிய இந்தி நூலின் தமிழ் ஆக்கமான 'எச்சில்' என்பதை படித்தேன். அதில் அவர் தலித்துகளின் தாழ்வு நிலைபற்றி, அதாவது மனித மலத்தை தலையில் சுமப்பதைப் பற்றி எழுதி இருந்தார். அவர் சுட்டி எழுதிய அனைத்தும் சுதந்திர வாங்குவதற்கு முந்தைய நிகழ்வு அல்ல. எல்லாம் 1980 களில் நடந்தவை. இன்றும் நடப்பவை, நண்பர் சிவபாலன் கூட அதுபற்றி எழுதியிருந்தார். எல்லாவித கொடுமைகளைப் பற்றியும் எழுதிய அவர் அங்காங்கே குறிப்பிட்ட சில பற்றியங்களும் மனதை ரொம்பவுமே உறுத்தியது. அதாவது விழிப்புணர்வு பெற்று படித்து எழுபவர்களும் நகரத்தில் உயர்ந்த அரசாங்க வேலையில் அதிகாரியாக அமர்ந்துவிட்டால், அங்கு தம்மை சந்திக்கவரும் தங்கள் சமூகத்தின் உறவினர்கள் எவரையும் வீட்டுக்குள் அனுமதிப்பது இல்லை என்றும், முடிந்த அளவுக்கு உறவினர்கள் தங்களை நகரங்களில் வந்து சந்திப்பதை தவிர்க்கவே விரும்புகின்றனர். ஏனென்றால் இவர்களெல்லாம் உறவினர்கள் என்று தெரிந்துவிட்டால் தங்களுக்கு கிடைக்கும் சமூக மரியாதை கிடைக்காமல் போய்விடும் என்று தயங்குகிறார்கள் என்றெல்லாம் நிகழ்வுகளுடன் எழுதி இருந்தார். அது உணர்வுகளை பேசும் ஆக்கம்.

அவர் சுட்டிக்காட்டிய இந்த தாழ்வுணர்வை என்னவென்று சொல்வது ? தலித் சமூகம் அல்லது தாழ்த்தப்பட்ட சமுகத்திடமிருந்து, அவர்களில் ஒருவராக இருந்தவர்கள் தப்பி வந்து சுதந்திரகாற்றை சுவாசிப்பது போல் நினைத்துக் கொள்கிறார். தன் நிலை உயர்ந்தால் போதும் என்ற மனப்பான்மையில் தொடருவதால், கொடுமைகளை அனுபவித்தவர்களே எதிர்க்க தயங்கும் போது இவர்களால் அந்த சமூகத்தினருக்குதான் என்ன லாபம் ? இங்கு அந்த சமூகத்தை சேர்ந்தவர்களே தம் சமூகத்தை ஒதுக்கிறார்கள் என்று தெரிகிறது. இது பிறர் சாதியினர் அந்த சமூகத்துக்கு எதிராக செய்யும் துரோகத்தைவிட கொடுமையானது. தம் சமூகம் தாழ்ந்தது அல்ல, கல்வி, கேள்விகளில் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று வெளிப்படுத்த இவர்களுக்கு வாய்ப்பு இருந்தும் தம் உறவினர்களால் தம் சாதி வெளியே தெரிந்துவிட்டால் வெளியில் கிடைக்கும் மரியாதை கிடைக்காமல் போய்விடும் என்று, அந்த மரியாதைக்காக மாய வேலியை தங்களுக்குள் போட்டுக் கொள்கிறார்கள். படிப்பறிவு பெற்றும் கோழைகளாகவே இருக்கும் இவர்களின் இந்நிலை மாறவேண்டும்.

*******

கடவுளை நம்பாதவர் இவை இவையெல்லாம் மூடநம்பிக்கை என்று சுட்டிக் காட்டி அதன் பிறகு அவையெல்லாம் மாறுவதற்கு பதில், அந்தந்த மதத்தில் இருப்பவர்களே மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத ஒன்றை மதம் என்ற பெயரில் சிலர் தாங்கிப் பிடிப்பதை உணர்ந்து, அவற்றை விலக்க முன்வரவேண்டும். அதில் உள்ளவர்களுக்கு மட்டுமே எவை எவை கீழான, தாழ்வான மற்றும் மூட நம்பிக்கைகள் என்பது நன்கு தெரிந்திருக்கும். கடவுளை நம்பாதோர் எவரும் வழிபாட்டு உரிமை தங்களுக்கு வேண்டும் என்பதற்கு போராடவில்லை, நம்பிக்கையுடன் வருபவர்களை மறுக்காதே என்று தான் போராடுகிறார்கள், இதில் சுயநலம் என்பது எங்கே இருக்கிறது ? அதையும் தாண்டி மக்களால் அவர்களது சிந்தனைகள் கவரப்படலாம், மக்கள் அவர்களுக்கு தங்கள் சார்பில் பேசுகிறவர் என்ற அங்கீகாரம் கொடுக்கிறார்கள்.

இதை ஆத்திகர்களே செய்யலாமே. மதங்கள், கடவுள் நம்பிக்கை சமூக நல்லிணக்கத்துக்குத்தான் என்று நம்பும் ஆத்திகர்களுக்குத்தான் மூடநம்பிக்கை பிசாசுகளை விரட்ட வேண்டிய அந்த பொறுப்பு நிறையவே இருக்கிறது. இதை விடுத்து எதிர்ப்புகளை எதிர்பாக நினைத்து தற்காக்க சப்பைக்கட்ட நினைத்தால் நாத்திகன் பேசிக் கொண்டுதான் இருப்பான். மூடநம்பிக்கைக்கு நாத்திக பேச்சுகள் (பிரச்சாரம்) அடங்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்திகர்கள் மூடநம்பிக்கைக்கு எதிரான போராட்டங்களை தங்களே கையில் எடுத்துக் கொள்ளவேண்டும். இவர்கள் செய்ய வேண்டியதை நாத்திகர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆத்திகர்கள் நன்றி கூற கடமைப்பட்டவர்கள். நம்மிடையே இருக்கும் சில பதிவர்கள் குறிப்பாக பதிவு நண்பர் ஜி.ராகவன் மற்றும் பதிவு நண்பர் குமரன் ஆகியோர் பக்தியை வளர்த்தும், தமிழையும் வளர்த்தும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் அவ்வப்போது எழுதி வருகிறார்கள் அவர்களை பாராட்டுகிறேன். நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் இனி அவற்றில் கவனம் செலுத்தப் போவதாக ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தார் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.

*******

பரம்பரைகளுக் கென்றே உரிமை உள்ள சொத்துக்களும், உழைத்து வாழ வேண்டிய நிலை என்று எதுவும் இன்றி அல்லது உழைப்பே தேவையின்றி நிரந்தர வருமானம் இருந்தால் பொழுது போகாமல் அல்லது அதுமட்டுமே வேலை என வேதங்களை, புராணங்களைப் படித்து இறைவன், பேரானந்தம், மாயை, பிரம்மம் போன்ற பேருண்மைகளை உலக்குக்கு சொல்லும் 'உயர்ந்தவர்கள்', 'சமயத்தலைவர்கள்' ஆகமுடியும் அதில் அறிந்தபடி தமிழ் சூத்திர பாசை என்ற கண்டுபிடிப்பையும் வெளியில் சொல்லமூடியும். இதற்கெல்லாம் வாய்பே இல்லாமல் இருப்பவர்களுக்கு வேதங்களும் மதப்பெருமைகளும் புரியுமா என்ன ? :)) அவர்கள் அறிந்திருப்பது பாமரத் தமிழ்தானே.

இவர்களையெல்லாம் கோவிலுக்குள் எப்படி அனுமதிப்பது ? ஆனாலும் எப்படியோ,

கோவிலுக்குள் நுழையும் உரிமை பெற்றுவிட்டோம், நல்ல முன்னேற்றம்! இதில் வளர்ச்சியடைந்திருப்பது கோவில் உண்டியல்களின் உயரமும் x அகலமும், கை நுழையும் அளவுக்கு அகன்றிருக்கும் அதன் வாயும் தான். கருவறைகள் அதே இருட்டில் அதே புனித பூச்சில் இருக்கின்றன. இறைவன் எங்கும் இருக்கையில் கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும் ? என்ற பக்தியாளரின் கேள்விக்கு ஒரு பக்தி நூலில், 'பசுவின் உடம்பு முழுவது பால் இருந்தாலும் மடியில் கறந்தால் மட்டுமே கிடைக்கும் என்று சொல்வர், இதுதான் இறைவனுக்கும் பொருத்தும்' என்ற அறிவு (பூர்வமான) முழுமையான பதில் போல் இருந்தது. இதில் சொல்லாமல் சொல்லி இருப்பது, எங்கும் இருக்கும் இறைவனை மறு(தலி)த்தும், கோவில் என்பது ஒரு அமைப்பு, அதற்கென்றே சில நடைமுறைகள், கட்டுப்பாடுகள் இருக்கிறது அவற்றை மீறக்கூடாது என்பதையும் தான். நாம் நம்வீட்டில், சாமி அறையில், நம்கையால் தூய்மை செய்து, பூசை செய்வதெல்லாம் கடவுள் இல்லையா ? அவை வெறும் பதுமைகள் என்று மறைமுகமாக துனிந்தே ஆகமத்தின் பெயரால் சொல்கின்றனர். நாத்திகன் கூட அவ்வாறெல்லாம் சொல்வதில்லை. கோவில் என்பதன் அமைப்பே பொதுமக்கள் கூடும் ஒரு இடம், இறைவனின் பெயரால் கூடுகிறார்கள். அங்கு வருகிறார்கள். இதற்கனவே திருவிழாக்கள் அமைக்கப்பட்டு இருகின்றன. அரசாங்க அறநிலையத்துறையின் கண்காணிப்பில் இருக்கும் கோவில்கள் பொது சொத்து. இதில் இறை நம்பிக்கை உடையவர் சென்று தம் மொழியில் பாடுவதற்கு அனுமதி இல்லை, காரணம் ஆகமங்கள் அனுமதிக்கவில்லை புனிதம் கெட்டுவிடும் என்று சொல்வதெல்லாம் மறைமுகமாக இறைவன் எங்கும் இல்லை எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறான் என்று சொல்வதைத்தான். ஆத்திக அன்பர்கள் சிந்தித்து புறக்கணிக்க வேண்டும் அல்லது மாற்ற முயலவேண்டும்.

********

நட்சத்திர இடுகைகளுக்கு என்று எழுதிய அனைத்தையும் வெளியிடவில்லை. பேசும் பொருள் வேறு வேறு என்றாலும் அதாவது, சாதி வெறி, மதமூடநம்பிக்கைகள், தமிழ் தூற்றல் ஆகிய பற்றியங்களில் எழுதும் போது இவையெல்லாம் சமுதாயத்திற்கு எதிராக, ஆதயத்துக்காக ஒரே கட்டாக முப்புறி நூல்களால் பினை(யாக்)கப்பட்டு இருக்கின்றன என்பது தெரிகிறது. இவை வெறும் நைந்து போன நூல்கள் தான். பெண்கள் மஞ்சள் கயிற்றுக்கு கணவனுக்கு கொடுக்கும் மரியாதையைப் போலவே, நைந்த நூல்களை 'புனிதம், உயர்வு, வேதங்களில் சொல்லி இருப்பது, ஆகமம்' என்று இறைநம்பிக்கை, மதநம்பிக்கை என்ற பெயரில் மாயத் தளைகளை அப்படியே விட்டு வைத்திருக்கிறோம். சாம்ராஜ்ஜியங்களே காலவெள்ளத்தில் காணமல் போகும் போது நைந்த நூல்கள் நிலைக்காது என்று நம்புகிறேன்.

நட்சத்திர இடுகைகள் யாவிலும் நான் எழுதியவை கருத்துப் பரிமாற்றம் மட்டுமே எதையும் வரையறுக்கவும், வலியுறுத்துவதற்காக எழுதவில்லை. அனைத்து பதிவுகளிலும் தங்களுக்கு பிடித்த பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்ட பதிவ நண்பர்களுக்கு /நண்பிகளுக்கு மிக்க நன்றி. படித்து விட்டு மெளனமாக சென்ற மற்றவர்களுக்கும் நன்றி. பின்னூட்டங்களுக்கு உடனடியாக மறுமொழி கூற இயலாமல் போனதற்கும் வருந்துகிறேன். எழுதுவதற்கு இலவச தளம் அளித்த கூகுள் நிறுவனத்தாருக்கும், ஒருவாரம் நட்சத்திரமாக இருப்பதற்கு அழைப்பும், வாய்ப்பும் அளித்த தமிழ்மணம் நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றி !

அடுத்து நடசத்திரமாக அமரப்போகும் பதிவருக்கும் முன்கூட்டியே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழிய நற்றமிழ் ! வாழிய வாழியவே !!!

அன்புடன்,

கோவி.கண்ணன்



33 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

நாளை ஞாயிறு என்பதால், இன்றே வெளியிட்டுவிட்டேன்.

TBCD சொன்னது…

கோவி..எனக்கு கேவி கேவி அழனும் போல இருக்கு..
எதுக்குன்னு கேக்குறீங்களா,
கண் வலி...
அதுக்கு நீங்க தான் காரணம்..
பாண்டு சைஸா மாத்துங்கப்பூ...

கலக்கிட்டீங்க...
இந்த வாரத்து நட்சத்திரம்-"நச்"சத்திரம்...

சிவபாலன் சொன்னது…

GK,

என்ன.. இன்னும் 36 மணி நேரம் இருக்கு அதற்குள் முடித்துக்கொண்டீர்கள்..

நீங்கள் இருக்கும் சிங்கையைப் பற்றி எதும் எழுதாதது எனக்கு ஒரு சிறு ஏமாற்றம். சிங்கையின் அன்றாட வாழ்க்கையை சித்தரிக்கும் புகைப் படங்களுடன் ஒரு பதிவு போடுவீர்கள் என எதிர்ப்பார்த்தேன்.

எனினும் மிகச் சிறப்பான வாரம். நல்ல அருமையான இடுக்கைகளை தந்து எங்கள் சிந்தனைக்கு விருந்து படைத்தீர்கள்.

நட்சத்திர வார பதிவுகளுக்கு மிக்க நன்றி!

Unknown சொன்னது…

//தங்களுக்கு பிடித்த பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்ட பதிவ நண்பர்களுக்கு/நண்பிகளுக்கு மிக்க நன்றி.//
இந்த நட்சத்திரத்தின் வாரம் நன்றாகவே இருந்தது. நன்றி ஜிகே

கோவி.கண்ணன் சொன்னது…

/TBCD said...
கோவி..எனக்கு கேவி கேவி அழனும் போல இருக்கு..
எதுக்குன்னு கேக்குறீங்களா,
கண் வலி...
அதுக்கு நீங்க தான் காரணம்..
பாண்டு சைஸா மாத்துங்கப்பூ...

கலக்கிட்டீங்க...
இந்த வாரத்து நட்சத்திரம்-"நச்"சத்திரம்...
//

நண்பரே TBCD,

பாராட்டுக்கு நன்றி, உங்கள் அறிவுறுத்தல் படி எழுத்துறு அளவை பெரிதாக்கிவிட்டேன். கண் வழி பின்னூட்டம் படிக்க வரும் போது இருக்காது.

கோவி.கண்ணன் சொன்னது…

// சிவபாலன் said...
GK,

என்ன.. இன்னும் 36 மணி நேரம் இருக்கு அதற்குள் முடித்துக்கொண்டீர்கள்..//

சிபா,
முற்றுப் புள்ளையை முன்பே வைத்துவிட்டு வேறுவேலையில் கவனம் செலுத்த முடிவெடுத்து முடித்துவிட்டேன்.

//நீங்கள் இருக்கும் சிங்கையைப் பற்றி எதும் எழுதாதது எனக்கு ஒரு சிறு ஏமாற்றம். சிங்கையின் அன்றாட வாழ்க்கையை சித்தரிக்கும் புகைப் படங்களுடன் ஒரு பதிவு போடுவீர்கள் என எதிர்ப்பார்த்தேன்.//

சிங்கை அனுபவம் ஒவ்வெருவருக்கும் மாறுபடும், சிறந்த புகைப்படங்கள் எடுக்க எனக்கு திறமை இல்லை. அதனால் சிங்கைபற்றி எழுதும் எண்ணம் எனக்கு எழவில்லை. பிறகு எப்போதாவது உங்கள் ஆவலை நிறைவேற்றுகிறேன்.

//
எனினும் மிகச் சிறப்பான வாரம். நல்ல அருமையான இடுக்கைகளை தந்து எங்கள் சிந்தனைக்கு விருந்து படைத்தீர்கள்.
//

மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி சிபா !

கோவி.கண்ணன் சொன்னது…

/சுல்தான் said...
இந்த நட்சத்திரத்தின் வாரம் நன்றாகவே இருந்தது. நன்றி ஜிகே
//
சுல்தான் ஐயா,
இடுகைகள் அனைத்தையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவ்வப்போது பாராட்டியதற்கும், இங்கும் மறக்காமல் வந்து பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா.

குமரன் (Kumaran) சொன்னது…

நட்சத்திர வாரம் நன்றாக இருந்தது கோவி.கண்ணன். வாழ்த்துகள்.

தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்கு பயன்படுத்தித் தமிழ்மணத்தின் நட்சத்திர வாரங்களின் நோக்கத்தை நன்கு நிறைவேற்றியிருக்கிறீர்கள். மே மாதத்திற்குப் பின் ஆகஸ்டில் நிறைய உழைப்பைச் செலவிட்டிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

இரவிசங்கரும் பதிவெழுத வந்த நாள் முதல் தமிழுக்கும் தொண்டாற்றுகிறார்; சாதி வேறுபாடுகளையும் சாடி எழுதுகிறார். இந்தப் பின்னூட்டத்தில் அவர் சொன்னது 'பொதுவாகத்' தெரியாத ஆனால் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியதை இனி மேல் கவனமெடுத்து எழுதப் போவதாக. செல்வன் அவர் பதிவில் சொல்லியிருப்பது போல் அவர் தான் தற்போதைக்குத் தமிழ்மணத்தில் இருக்கும் ஆன்மீக சுப்ரீம் ஸ்டார். அவர் ஜனரஞ்சகமாக அனைவரும் தெரிந்து கொள்வதை எழுதுவார் என்று எண்ணுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
நட்சத்திர வாரம் நன்றாக இருந்தது கோவி.கண்ணன். வாழ்த்துகள்.

தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்கு பயன்படுத்தித் தமிழ்மணத்தின் நட்சத்திர வாரங்களின் நோக்கத்தை நன்கு நிறைவேற்றியிருக்கிறீர்கள். மே மாதத்திற்குப் பின் ஆகஸ்டில் நிறைய உழைப்பைச் செலவிட்டிருக்கிறீர்கள். பாராட்டுகள். //

குமரன்,
மனம் திறந்த தங்களின் பாராட்டுக்கு நன்றி, தங்கள் பாராட்டு மன நிறைவை தருகிறது. உங்கள் எழுத்துக்களைக் குறிப்பிடவில்லை என்றால் ஆன்மிகப் பதிவர்களின் பொறுப்புணர்வுகளை நான் புறக்கணித்தாகிவிடும் அல்லது அறியாதவன் / கேலி செய்தவன் என்றாகிவிடும்.ஆன்மிகம் என்பது நாத்திகர் நினைக்கும் அளவுக்கு மோசமானது அல்ல என்பதைக் காட்டவும் உங்களைப் போன்றவர்களை குறிப்பிட்டு காட்டுவது தேவை மிக்கது. எனக்கு நாத்திகம் ஆத்திகம் இரண்டும் கண்கள் போன்றவை. :) ஒன்று பழுதாகிவிடக் கூடாது என்ற அக்கரையில் பல விமர்சனங்களை செய்திருக்கிறேன். இதை பலரும், நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

//இரவிசங்கரும் பதிவெழுத வந்த நாள் முதல் தமிழுக்கும் தொண்டாற்றுகிறார்; சாதி வேறுபாடுகளையும் சாடி எழுதுகிறார். இந்தப் பின்னூட்டத்தில் அவர் சொன்னது 'பொதுவாகத்' தெரியாத ஆனால் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியதை இனி மேல் கவனமெடுத்து எழுதப் போவதாக. செல்வன் அவர் பதிவில் சொல்லியிருப்பது போல் அவர் தான் தற்போதைக்குத் தமிழ்மணத்தில் இருக்கும் ஆன்மீக சுப்ரீம் ஸ்டார். அவர் ஜனரஞ்சகமாக அனைவரும் தெரிந்து கொள்வதை எழுதுவார் என்று எண்ணுகிறேன்.
//

இரவி சங்கர் ஆன்மிக சூப்பர் ஸ்டார் என்று சொல்வதை நானும் வரவேற்கிறேன். அவரது எழுத்துக்களை எவரும் சாடாமல், முத்திரைக் குத்தாத அளவுக்கு அவர் அமைத்துக் கொண்டு, இதே நிலையில், நகைச்சுவையுடன், சிறந்த இடுகைகளை எழுதி மேலும் பாராட்டுக்களைப் பெறவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

அவரைப்பற்றி நீங்கள் சொல்லும் கருத்துக்கள் இங்கு பொருத்தமானவை.

மீண்டும் நன்றி ! பாராட்டுக்கள் !

Thamizhan சொன்னது…

அருமையான கருத்துக்களை அனைவரது எண்ண ஓட்டங்களும் எப்படி இருந்த்து,இருக்கிறது என்பதைக் காட்டி எப்படி இருக்க வேண்டும் என்று கோடி காட்டி ஓளி வீசினீர்கள்.வாழ்த்துக்கள்.
கருத்து மோதல்கள் இருக்கலாம்,அது கண்ணியமாக இருக்க முடியும் என்று எடுத்துக் காட்டினீர்கள்.
சிங்கையிலே சீன்,மலாய்,தமிழர்கள் எப்படி பள்ளிகளில்,குடியிருப்புகளில்,கட்டாய படைப்பயிற்சியில் ஒன்றாக இருக்கக் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள்.தாய் மொழி,ஆங்கிலக் கல்வி என்று முன்னேறி வருகிறார்கள்.
சாதி ஒழிய மனிதன் மனிதனை மனிதனாக மதித்து மனித நேயத்துடன் வாழ்வது நம் ஒவ்வொருவரின் மனதில்தான் ஆரம்பிக்கவேண்டும்.அதைச் சீரிய முறையில் தொடங்கி வைத்துள்ளீர்கள்.மீண்டும் வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Thamizhan said...
அருமையான கருத்துக்களை அனைவரது எண்ண ஓட்டங்களும் எப்படி இருந்த்து,இருக்கிறது என்பதைக் காட்டி எப்படி இருக்க வேண்டும் என்று கோடி காட்டி ஓளி வீசினீர்கள்.வாழ்த்துக்கள்.
கருத்து மோதல்கள் இருக்கலாம்,அது கண்ணியமாக இருக்க முடியும் என்று எடுத்துக் காட்டினீர்கள்.
சிங்கையிலே சீன்,மலாய்,தமிழர்கள் எப்படி பள்ளிகளில்,குடியிருப்புகளில்,கட்டாய படைப்பயிற்சியில் ஒன்றாக இருக்கக் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள்.தாய் மொழி,ஆங்கிலக் கல்வி என்று முன்னேறி வருகிறார்கள்.
சாதி ஒழிய மனிதன் மனிதனை மனிதனாக மதித்து மனித நேயத்துடன் வாழ்வது நம் ஒவ்வொருவரின் மனதில்தான் ஆரம்பிக்கவேண்டும்.அதைச் சீரிய முறையில் தொடங்கி வைத்துள்ளீர்கள்.மீண்டும் வாழ்த்துக்கள்.
//

தமிழன் ஐயா,

தாங்கள் அனைத்துப் பின்னூட்டங்களும் எனக்கு நல்ல ஊக்கம் கொடுத்தது. இங்கு தாங்கள் குறிப்பிட்டு பாராட்டியிருப்பதும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு சிங்கைபற்றி குறிப்பிட்டுள்ளது சரியான உதாரணம்.

மனித நேயம் வளர எல்லோரும் சேர்ந்து முயற்சிப்போம் !

பாராட்டும், கருத்துக்களும் மிக்க நன்றி ஐயா.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

நட்சத்திரப் பதிவிலே முழு வாரமும் அமர்களமாக எழுதி ஆச்சரியப் படுத்தி விட்டீர்கள். ஆத்மீகம்,நாத்திகம் என் இரு கண் போல், எனக் கூறியது உங்கள் எழுத்தில் பளிச்சிட்டது.
ஆழ,அகலமான உங்கள் ஆய்வில் பல விடயங்களை உணர முடிந்தது. எந்த வெகுசனப் பத்திரிகையிலும் காணமுடியாததை இந்த இணையம் தருவது மகிழ்வே!!
தொடர்ந்து எழுதுங்கள்.

துளசி கோபால் சொன்னது…

நல்ல வாரமும், சிந்திக்க வைக்கச் செய்த பதிவுகளும்.

நன்றி ஜிகே.

கோவி.கண்ணன் சொன்னது…

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
நட்சத்திரப் பதிவிலே முழு வாரமும் அமர்களமாக எழுதி ஆச்சரியப் படுத்தி விட்டீர்கள். ஆத்மீகம்,நாத்திகம் என் இரு கண் போல், எனக் கூறியது உங்கள் எழுத்தில் பளிச்சிட்டது.
ஆழ,அகலமான உங்கள் ஆய்வில் பல விடயங்களை உணர முடிந்தது. எந்த வெகுசனப் பத்திரிகையிலும் காணமுடியாததை இந்த இணையம் தருவது மகிழ்வே!!
தொடர்ந்து எழுதுங்கள்.
//

யோகன் ஐயா,
மனமார்ந்த பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் பாராட்டுக்கள் ஊக்கமளிக்கிறது. ஆத்திகம் அதற்கு மாற்றாக நாத்திகம் இரண்டுமே நல்ல கொள்கைகள் தான், நிறுவனங்களாக பரிணாமம் பெற்றதால் அவற்றில் நோக்கங்கள் காற்றில் பறக்கின்றன. என்னால் முடிந்தமட்டில் நான் அறிந்த செய்திகள் வழி அவற்றை சுட்டிக்காட்டினேன். அதற்கு வாய்பளித்த கூகுளாண்டவருக்கும் கூட நான் நன்றி சொல்லியாக ஆகவேண்டும்.

:)

அடுத்த இன்னும் கொஞ்ச காலம் இடைவெளிவிட்டு எழுத உள்ளேன். மற்ற வேலைகளிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நன்றி ஐயா !

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
நல்ல வாரமும், சிந்திக்க வைக்கச் செய்த பதிவுகளும்.

நன்றி ஜிகே.
//

துளசியம்மா, தங்கள் பாராட்டும் உற்சாகம் அளிக்கிறது. நன்றி அம்மா!

குமரன் (Kumaran) சொன்னது…

//அடுத்த இன்னும் கொஞ்ச காலம் இடைவெளிவிட்டு எழுத உள்ளேன். மற்ற வேலைகளிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நன்றி ஐயா !
//

இதற்குப் பெயர் Star Week Fatigue. எனக்குத் தெரிந்து நட்சத்திர வாரத்திற்காக நன்கு உழைத்தவர்களில் பலரும் இதனைச் செய்திருக்கிறார்கள். :-)

வெற்றி சொன்னது…

நல்லதொரு வாரம் கோ.க

அறிந்திராத பல தகவல்களை உங்களின் பதிவுகள் மூலம் அறியக் கிடைத்தது.

ஒவ்வொரு பதிவும் மிகவும் சிரத்தையெடுத்து பல ஆய்வுகள் செய்து எழுதியிருந்தீர்கள்.

மிக்க நன்றி.

நட்சத்திர வாரம் ஓய்ந்தாலும் தொடர்ந்தும் இதுமாதிரியான பதிவுகளைத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

VSK சொன்னது…

குழலியார் சொன்னது போல எரிநட்சத்திரம் ஆகாமல், ஒளிநட்சத்திரமாக முழுவாரமும் ஒளிர் விட்டு அரிய பல .... நீங்கள் நம்பிய ..... கருத்துகளைப் பதித்திருக்கிறீர்கள்!

அயராத உங்கள் உழைப்பும், நீங்கள் படித்துணர்ந்ததே உண்மையென நம்பும் உங்கள் உறுதியும் தெரிகிறது!

நட்சத்திர வாரத்தில் மிக அதிக பதிவு இட்டவர் என்ற வகையில் கின்னஸில் பரிந்துரைக்கலாம் உங்களை!

வாழ்த்துகள், என் இனிய நண்பரே!

கொஞ்சம் ஓய்வெடுங்கள் எனச் சொல்லமாட்டேன்!

தொடருங்கள் உங்கள் பணியை!
:))

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

மிகச்சிறப்பாக இருந்தது கோவி! ஓவ்வொரு இடுகையும் மிக ஆழமான அலசலை செய்தது... வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...

இதற்குப் பெயர் Star Week Fatigue. எனக்குத் தெரிந்து நட்சத்திர வாரத்திற்காக நன்கு உழைத்தவர்களில் பலரும் இதனைச் செய்திருக்கிறார்கள். :-)
//

குமரன்,
சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள், கடந்த ஒருவார காலம் பள்ளி இறுதி தேர்வு எழுதியதுபோல் இருந்தது எனக்கு.

கடைசி நேரத்தில் படித்தது தான் கை கொடுத்தது.

மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வெற்றி said...
நல்லதொரு வாரம் கோ.க

அறிந்திராத பல தகவல்களை உங்களின் பதிவுகள் மூலம் அறியக் கிடைத்தது.

ஒவ்வொரு பதிவும் மிகவும் சிரத்தையெடுத்து பல ஆய்வுகள் செய்து எழுதியிருந்தீர்கள்.

மிக்க நன்றி.

நட்சத்திர வாரம் ஓய்ந்தாலும் தொடர்ந்தும் இதுமாதிரியான பதிவுகளைத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
//

நண்பர் வெற்றி,
அவ்வப்போது உங்களைப் போன்றோர் தந்த உற்சாகம், கட்டுரை நல்ல முறையில் தனிமனிதர் எவரையும் குறைசொல்லாமல் வரவேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது. நான் இங்கு எழுதியது சமூகங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்பதை கவனத்தில் எடுத்துக் கொண்டேன். சமூகத்தில் ஒருவனாக இருப்பதால் நிறை/குறை சுட்டிக் காட்டுவதில் தவறில்லை. நமது உரிமையை பேசவிட்டால் எல்லாம் சரியாக இருக்கிறது என்று சமூகம் நினைத்துக் கொள்ளும் அல்லது இவ்வளவுதானோ என்று அடிமையாகவே இருந்துவிடும்.

நட்சத்திர வாரத்துக்கு எழுதிய பல இடுகைகள் தூங்குகின்றன. கொஞ்ச நாள் சென்றதும் போடுவேன்.

பாராட்டியதற்கு மிக்க மகிழ்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
குழலியார் சொன்னது போல எரிநட்சத்திரம் ஆகாமல், ஒளிநட்சத்திரமாக முழுவாரமும் ஒளிர் விட்டு அரிய பல .... நீங்கள் நம்பிய ..... கருத்துகளைப் பதித்திருக்கிறீர்கள்!

அயராத உங்கள் உழைப்பும், நீங்கள் படித்துணர்ந்ததே உண்மையென நம்பும் உங்கள் உறுதியும் தெரிகிறது!

நட்சத்திர வாரத்தில் மிக அதிக பதிவு இட்டவர் என்ற வகையில் கின்னஸில் பரிந்துரைக்கலாம் உங்களை!

வாழ்த்துகள், என் இனிய நண்பரே!

கொஞ்சம் ஓய்வெடுங்கள் எனச் சொல்லமாட்டேன்!

தொடருங்கள் உங்கள் பணியை!
:))

10:03 AM
//

வீஎஸ்கே ஐயா,

மாற்றுக் கருத்து இருந்தாலும், மறக்காமல் வந்து எழுத்தைப் பாராட்டியதற்கு நன்றி, பதிவர்களுக்கிடையே புரிந்துணர்வு வரவேண்டும் என்பதை உங்கள் பின்னூட்டம் சொல்லாமல் சொல்வதை அனைவரும் புரிந்து கொள்வர்.

என்னைவிட மிக்க எழுதியவர்கள் என பலர் உளர். நான் எழுதியது மிக்கவை அல்ல. உங்களுக்கு அப்படி தெரிவது என்மீது தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பதாலேயே, இதனை பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன்.

வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றிகள் !

மாயா சொன்னது…

நட்சத்திர வாரம் நன்றாகவே இருந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//பாரி.அரசு said...
மிகச்சிறப்பாக இருந்தது கோவி! ஓவ்வொரு இடுகையும் மிக ஆழமான அலசலை செய்தது... வாழ்த்துக்கள்.
//

பாராட்டுக்கு நன்றி பாரி,
எனது கட்டுரைகள் படிக்க தூண்டி இருக்கிறது என அறிகிறேன்.
மிக்க மகிழ்வாக உள்ளது !

கோவி.கண்ணன் சொன்னது…

//மாயா said...
நட்சத்திர வாரம் நன்றாகவே இருந்தது.
//

மாயா,
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
மகிழ்வளிக்கிறது.

ஜெகதீசன் சொன்னது…

அனைத்துப் பதிவுகளும் சிறப்பானதாக இருந்தது. நட்சத்திர வார பதிவுகளுக்கு மிக்க நன்றி!

கருப்பு சொன்னது…

இந்த ஒருவாரமும் இனிய வாரமாகச் சென்றது கோவி.கண்ணன்.

வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
அனைத்துப் பதிவுகளும் சிறப்பானதாக இருந்தது. நட்சத்திர வார பதிவுகளுக்கு மிக்க நன்றி!

11:01 AM, August 27, 2007
//

ஜெகதீசன் அனைத்துப் பதிவுகளிலும் உங்கள் பின்னூட்டம் பெரிதும் ஊக்கப்படுத்தியது. பாராட்டுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//விடாதுகருப்பு said...
இந்த ஒருவாரமும் இனிய வாரமாகச் சென்றது கோவி.கண்ணன்.

வாழ்த்துக்கள்.
//

கருப்பு ஐயா,
ஒருவாரப் பதிவுகளை நீங்களும் படித்திருகிறீர்கள் என்று இதன் மூலம் தெரிகிறது. பாராட்டுக்கு மிக்க நன்றி !

☼ வெயிலான் சொன்னது…

///அடுத்து நடசத்திரமாக அமரப்போகும் பதிவருக்கும் முன்கூட்டியே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.///

வாழ்த்துக்கு நன்றி! ஜிகே.

///நட்சத்திர வாரத்தில் மிக அதிக பதிவு இட்டவர் என்ற வகையில் கின்னஸில் பரிந்துரைக்கலாம் உங்களை!///

கனத்த கருத்துக்களுடனான பதிவுகள் போட்டு கலக்கீட்டீங்க!

கோவி.கண்ணன் சொன்னது…

//வெயிலான் said...

வாழ்த்துக்கு நன்றி! ஜிகே.


கனத்த கருத்துக்களுடனான பதிவுகள் போட்டு கலக்கீட்டீங்க!
//

வெயிலான், பாராட்டுக்கு நன்றி !

உங்கள் வலைப்பூ வேர்ட் ப்ரஸில் இருந்தது, இங்கு ப்ளாக்கரில் லாகன் பண்ணி பின்னூட்டம் போட்டு சென்றிருக்கிறீர்கள். அதற்காக மறுபடியும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மணியன் சொன்னது…

//படித்து விட்டு மெளனமாக சென்ற மற்றவர்களுக்கும் நன்றி.//

நன்றி சொன்ன கோவியாருக்கு நன்றி. உங்கள் அலசலை அலசும் அளவிற்கு நேரம் கிடைக்காததே பின்னூட்டங்கள் இட இயலவில்லை. ஆனாலும் உங்கள் கருத்துக்கள் விதைத்த வித்துக்கள் எங்கள் எழுத்திலும் செயலிலும் விளையும் என்பது உங்கள் நட்சத்திர வார வெற்றி.

ஆன்மீகம் மனதிற்கும் நாத்திகம் அறிவிற்கும் ்இதமளிப்பது. இரண்டுமே மனிதத்தோடு இயைந்தால் இன்பமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணியன் said...

நன்றி சொன்ன கோவியாருக்கு நன்றி. உங்கள் அலசலை அலசும் அளவிற்கு நேரம் கிடைக்காததே பின்னூட்டங்கள் இட இயலவில்லை. ஆனாலும் உங்கள் கருத்துக்கள் விதைத்த வித்துக்கள் எங்கள் எழுத்திலும் செயலிலும் விளையும் என்பது உங்கள் நட்சத்திர வார வெற்றி.

ஆன்மீகம் மனதிற்கும் நாத்திகம் அறிவிற்கும் ்இதமளிப்பது. இரண்டுமே மனிதத்தோடு இயைந்தால் இன்பமே.
//

மணியன் ஐயா,

மிக்க மகிழ்ச்சியாகவும் நெகிழ்வாகவும் இருக்கிறது.

சிவமே அன்பு, அன்பே சிவம் என்று சொல்லி இருப்பது பலருக்கு புரியாததுதான் வியப்பே.

எல்லாம் ஒன்றை ஒன்று அழிக்க வந்தாக நினைக்கும் குழப்பமே, என்னைப் பொருத்து ஆத்திகத்தை தூய்மை படுத்த துணை புரிவது நாத்திகம்.

நற்கருத்துக்களை நெற்கறுது போல் ஒரு கொத்தாக முத்தாக சொல்லிச் சென்றிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் மற்றும் நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்