பின்பற்றுபவர்கள்

24 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் !

இந்த பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் ? என்பதே கேள்விக்குறி, கேள்விபடும் அளவுக்கு அவர் வளர்ந்திருந்தால் தெரியாமல் போய் இருக்காது என்ற எதிர் கேள்வியும் கூட ஞாயமானதே. அன்றைய அச்சு ஊடகங்களின் ஆதிக்கம் சிலரை கொஞ்சம் அளவுக்கு மிகுந்தே புகழும், சிலரை கண்டு கொள்ளவே கொள்ளாது. எனவே ஊடங்களின் வழி ஒரு சமூகத் தலைவரை கண்டு கொள்ள முடியும் என்பதெல்லாம் சரியான கூற்று அல்ல என நினைக்கிறேன்.அயோத்தி தாச பண்டிதரைப் பற்றி தற்பொழுது பலர் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். ஊடகங்கள் வேண்டுமென்றே அயோத்திதாசரை புறக்கணித்தற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அயோத்தி தாசரின் காலகட்டம் 1845லிருந்து 1914 வரை இருந்தது.

அயோத்திதாசர் பெரியாருக்கும் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்ற தகவலும், அவரது சிந்தனைகளையும் கருத்தில் கொண்டே பெரியார் திராவிட இயக்கத்தை தோற்றுவித்தாக அயோத்திதாசரைப் பற்றி எழுதியிருந்த நூலில் பல பற்றியங்கள் இருக்கிறது

சரி, இவரைப் பற்றி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி கூட வரும். சமயம், இலக்கியம், மறுமலர்ச்சி இதெற்கெல்லாம் வித்திட்டவர்கள் பெரும்பாலும் உயர்சாதியினர் மற்றும் அவர்களுக்கு கீழ் உள்ளவர்கள் என்ற கருத்து நிலவி வருகிறது. தலித்துக்கள் எனப்படும் ஆதி (பூர்வ) குடிமக்கள் இவற்றிற்காக என்ன செய்தனர் ? என்ன செய்தனர் என்பதே வெளியில் தெரியாமல் இருக்கிறது. அவர்கள் எல்லோருமே உடல் உழைப்பாளிகளாக மட்டுமே இருந்ததில்லை, நன்கு படித்தவர்களும், சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒருவர் ஐயா வைகுண்டர், இவரை ஓரளவுக்கு அறிந்திருப்பீர்கள், 18 ஆம் நூற்றாண்டு வரையில் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்ட சாணார் (சான்றோர்) எனப்படும் நாடார் வகுப்பு மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார். அவர் மட்டும் அந்த சமூகத்தில் பிறந்திருக்காவிடில் நாடார் சமூகம் அனைத்தும் கிறித்துவர்களாக மாறி இருந்திருப்பார்கள். தமது மதத்தை கிறித்துவர்களிடம் விட்டுக் கொடுக்கக் கூடாது மேலும் தம் தமத்தில் தமக்கு உரிமை கிடைக்கப் படவேண்டும் என்ற சிந்தனையில் கிறித்துவ மதமாற்றாளர்களுக்கு எதிராக போராடினார், இந்து மதத்து மூடநம்பிக்கைகளை புறம் தள்ளிவிட்டு 'அன்பு வழி' என்று இந்து மத உட்பிரிவு ஒன்றை ஏற்படுத்தினர்.

மற்றொருவர்,
அயோத்திதாச பண்டிதர் பறையர் (தலித்) குலத்தில் பிறந்தவர், நன்கு படித்தவர், முதலில் வைணவராகவும், அத்வைதம் மீது ஈடுபாடு கொண்டவராகவும் இருந்து வந்ததார். அவரை தீயீல் தள்ளிவிட்டதைப் போன்று பின்பு நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் அவர் பலரையும் விழிப்படைய வைத்தார். கிழே அந்த நிகழ்வின் பக்கங்களைக் இணைத்திருக்கிறேன். சொடுக்கி பொருமையாக படியுங்கள், அன்றைய கால கட்டத்தையும், இன்றைய மாற்றங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இன்று வாழும் நாம் முன்னேறி இருப்பதும், விழிப்புணர்வு அடைந்திருப்பது வெள்ளிடை மலையாகக் காட்டும்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் அவரது சிந்தனையில் திராவிட கருத்து வித்தாக ஆனது. 'திராவிட' என்ற சொல்லை 'ஆரிய' என்பதற்கு எதிராக முதன்முதலாக பயன்படுத்த துணிந்தவரும் அவரே. நமக்கெல்லாம் திராவிடக் கழகம் என்பது பெரியார் வழி வந்ததாக மட்டுமே தெரிகிறது. பெரியாருக்கும் அயோத்தி தாசருக்கும் நட்பு இருந்தது, அயோத்திதாசர் நாத்திகர் அல்ல, அவர் பின்பு பல ஆய்வுகளை நடத்தி தமிழக தாழ்த்தப்பட்ட குலத்தினவர் அனைவரும் முன்பு பெளத்த சமயத்தினர் ஆக இருந்தவர்கள், பெளத்த சமயம் சைவ/வைணவத்திடம் வீழ்ந்துவிட்ட பிறகு தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டு சேரிக்கு துறத்தப்பட்டனர் என்று ஆதரங்களுடன் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவர் எழுதிய கட்டுரைகளில் பலவற்றில் அறிய அரிய உண்மைகள் இருக்கிறது, அதில் ஒன்று திருவண்ணாமலை பற்றியது, திருவண்ணமலை தீபத்திருவிழா, பசுநெய்க்கு மாற்றாக ஆமணக்கு எண்ணை கண்டு பிடிக்கப்பட்டதை கொண்டாடுவதற்கு ஏற்பட்ட ஒரு நிகழ்வு என்றும், இன்று அது வேறு புராணங்களுடன் தொடர்பு படுத்திக் கொண்டாடப்படுகிறது என்ற கட்டுரையை நிறைய ஆதரங்களுடன் எழுதியுள்ளார். இது போல் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி போன்றவற்றை பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் இன்றைக்கு சொல்லப்படும் கதைகளைவிட ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருக்கிறது.

அவருடைய கட்டுரை குறிப்பு ஒன்றில் 'பறையர்' என்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருக்கும் பெயர் குறித்து ஒரு சுவையான கட்டுரை இருந்தது, அதாவது பிராமணர்கள் தென்புலத்துக்கு இடம் பெயர்ந்த பொழுது அவர்களை பலரும் துறத்தினர். ஒரு பிராமணர் ஊருக்குள் நுழைந்தால் பறை அடித்து எச்சரிப்பது வழக்கமாம், அதானால் பறைகிறவர்கள் இருக்கும் ஊருக்குச் சொல்லும் போது 'பறையன் இருக்கிறான்' எச்சரிக்கையாக செல்லவேண்டும் என்றும் 'பறைகின்றவர்களை' அச்சமுடன் பார்த்து 'பறையன் வருகிறான்' என்று பிராமணர்கள் அழைக்க ஆரம்பித்தார்கள், பின்னாளில் தலித்துக்கள் அடிமைப் பட்டபோது 'பறையன்' என்ற பெயராக அது நிழைத்துவிட்டது என்றும், பிராமணரும், தலித்துக்களும் என்றுமே எதிரியாக இருந்ததற்கு அதுவே காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அன்புடன்,

கோவி.கண்ணன்











18 கருத்துகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

அருமையான சம்பவத் தொகுப்பு. புத்தகப் பிரதி சேர்த்ததற்கு மிக்க நன்றி!

மாசிலா சொன்னது…

நிறைய விசயங்களை அறியக்கொடுத்தமைக்கு மிக்க நன்றி கோவி.கண்ணன் ஐயா.

Unknown சொன்னது…

அயோத்தி தாசர் பற்றி நல்லதொரு தேவையான அறிமுகம் செய்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

தடம் பதித்த தமிழர்கள் என்னும் பெயரில் சொற்பொழிவுத் தொடர் ஒன்றை தில்லித் தமிழ்ச் சங்கத்துக்காக அளித்து வந்தேன். அங்கு ஆட்சிப்பீடத்தில் இருக்கும் சில நல்லவர்கள் செய்த அரசியலால் அது பாதியில் நின்றது. அந்தத் தொடர் சொற்பொழிவில் ஒரு மாதம் நான் அயோத்தி தாசரைப் பற்றி ஒரு கட்டுரை வாசித்து இருக்கிறேன். அயோத்தியா தாசர் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் என்னுடைய வலைப்பதிவு http://www.sanimoolai.blogspot.com
சொற்பொழிவுகள் என்னும் இணைப்புக்குச் சென்று அங்கு அயோத்தி தாசர் பற்றி எழுதியிருப்பதைப் படியுங்கள்.

அக்கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். உங்கள் கருத்துக்களை எனக்குத் தெரிவித்தால் அதிகமாக மகிழ்ச்சியடைவேன்.

ராகவன் தம்பி

கோவி.கண்ணன் சொன்னது…

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
அருமையான சம்பவத் தொகுப்பு. புத்தகப் பிரதி சேர்த்ததற்கு மிக்க நன்றி!
//

யோகன் ஐயா,

பாராட்டுக்கு மிக்க நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//மாசிலா said...
நிறைய விசயங்களை அறியக்கொடுத்தமைக்கு மிக்க நன்றி கோவி.கண்ணன் ஐயா.
//

வாங்க மாசிலா,
நல்ல செய்திகள் எனக்கு கண்ணில் தெரிவதும் ஒரு காரணம். அதை பலரிடம் சேர்பிப்பதில் எனக்கும் மகிழ்ச்சி.

கோவி.கண்ணன் சொன்னது…

//ராகவன் தம்பி said...
அயோத்தி தாசர் பற்றி நல்லதொரு தேவையான அறிமுகம் செய்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

ஆட்சிப்பீடத்தில் இருக்கும் சில நல்லவர்கள் செய்த அரசியலால் அது பாதியில் நின்றது.
//

ராகவன் ஐயா,

தாங்கள் சொல்வது புரிகிறது. மிகவும் வருத்தத்திற்கு உரிய நிகழ்வு. நீங்கள் அவர்களையெல்லாம் குறிப்பால் வெளிச்சம் போட்டு காட்டுங்கள். இல்லையென்றால் சமத்துவம் சமதர்மம் என்ற வரட்டு வேதாந்தங்களை மட்டுமே பேசிக் கொண்டிருப்பர்.

//http://www.sanimoolai.blogspot.com
சொற்பொழிவுகள் என்னும் இணைப்புக்குச் சென்று அங்கு அயோத்தி தாசர் பற்றி எழுதியிருப்பதைப் படியுங்கள்.//

தங்கள் வலைப் பக்கத்தை இந்த இடுகையின் முதல் பத்தியில் முன்பே இணைப்பாக கொடுத்திருக்கிறேன். இந்த இடுகையை வெளியிடும் முன் அதனை படித்துவந்தேன். அழைப்பிற்கும் மிக்க நன்றி !

சிவபாலன் சொன்னது…

GK,

மிக நல்லன் இடுக்கை.

நட்சத்திரவாரத்தை மிக நேர்த்தியாக எடுத்துச் செல்கிறீர்கள்.

இவரைப் பற்றி நான் அறிந்ததில்லை. அறிய தந்தமைக்கு மிக்க நன்றி!

வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

அன்பு கண்ணன்

என்னுடைய பின்னூட்டத்தில் ஒரு சிறு குழப்பம் தோன்றும்படி எழுதி விட்டேன். இந்த விளக்கம் அதை சரி செய்து விடும் என்று நினைக்கிறேன்.

ஆட்சிப்பீடத்தில் இருக்கும் சில நல்லவர்கள் செய்த அரசியலால் அது பாதியில் நின்றது.

இங்கு ஆட்சிப் பீடம் என்று குறிப்பிட நினைத்தது தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கின்ற சில நல்லவர்களைப் பற்றி மட்டுமே.

என்னுடைய தடம் பதித்த தமிழர்கள் தொடர் சொற்பொழிவை நிறுத்த தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கின்ற சில நல்லவர்கள் மிகவும் கேவலமான அரசியல் விளையாட்டை விளையாடி, என் தன்மானத்தை சீண்டி அந்தத் தொடரை நிறுத்த வைத்தார்கள் என்று சொல்ல வந்தேன்.

என்னுடைய பதிவை இணைத்ததற்கு மிக்க நன்றி.

முத்துகுமரன் சொன்னது…

தமிழ்ச் சமூகத்திற்கு தொண்டாற்றியவர்களுல் அயோத்தி தாச பண்டிதர் மிக முக்கியமானவர். பெரியாருக்கு முன்பே இருந்தவர். சிறந்த கல்வியாளர். பெளத்தத்தை தழுவியவர். பெளத்தம் தமிழுக்கு அந்நியமானது இல்லை அழுத்தமாக நம்பியவர். அது தொடர்பான ஏராளமான கட்டுரைகளையுமெழுதியவர். இவர் தமிழன் என்ற ஏட்டை நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியவர். அதில் ஏராளாமன கட்டுரைகளையும் எழுதி உள்ளார். இது குறித்து தெரிந்துகொள்ள தர்மராஜன் அவர்கள் எழுதிய நான் பூர்வ பெளத்தன் என்னும் நூல் உதவியாக இருக்கும். இப்போது அந்த தமிழன் இதழை மீண்டும் கொண்டுவர விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் முயன்று வருகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அது தொடர்பான முயற்சிகளில் இருக்கிறார்.

தொடக்க காலகட்டங்களில் அயோத்திதாச பண்டிதர் ஆற்றிய சேவை மிக முக்கியமானது. கல்வியறிவின் அவசியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்.

பெரியாருக்கும் அயோத்திதாச பண்டிதருக்கும் நட்பு இருக்க வாய்ப்புகள் குறைவென்றே கருதுகிறேன். ஏனென்றால் பெரியார் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த காலம் அயோத்திதாச பண்டிதருக்கு பிந்தைய காலமே. இருவருக்குமிடையேனா நட்பு பற்றியோ அறிமுகம் பற்றியோ தமிழில் அதிகமான பதிவுகள் கிடையாது.( அறிந்தவர்கள் தந்தால் பலருக்கு பயனுள்ளதாக இருக்க்கும்.)

அயோத்திதாசர் என்ற பெயர் மீள் உச்சரிப்புக்கு வந்தது 1990களுக்கு பிறகே. கிட்டத்தட்ட 80 ஆண்டுகாலத்திற்கு பிறகே தலித் அரசியல், தலித் இலக்கியம் என்ற பேசப்பட்ட தருணத்தில்தான் வெளிவந்தது. ஆனால் இதற்கும் திராவிட இயக்கங்கள்தான் காரணம் என்று சொல்பவர்களும் உண்டு. ஆன்னால் தலித் தலைவர்களே அவரை முன்னெடுக்காமல் இருந்தது ஏன் என்பதை மட்டும் மறந்துவிடுவார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ராகவன் தம்பி said...
அன்பு கண்ணன்

என்னுடைய பின்னூட்டத்தில் ஒரு சிறு குழப்பம் தோன்றும்படி எழுதி விட்டேன். இந்த விளக்கம் அதை சரி செய்து விடும் என்று நினைக்கிறேன்.

ஆட்சிப்பீடத்தில் இருக்கும் சில நல்லவர்கள் செய்த அரசியலால் அது பாதியில் நின்றது.

இங்கு ஆட்சிப் பீடம் என்று குறிப்பிட நினைத்தது தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கின்ற சில நல்லவர்களைப் பற்றி மட்டுமே.

என்னுடைய தடம் பதித்த தமிழர்கள் தொடர் சொற்பொழிவை நிறுத்த தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கின்ற சில நல்லவர்கள் மிகவும் கேவலமான அரசியல் விளையாட்டை விளையாடி, என் தன்மானத்தை சீண்டி அந்தத் தொடரை நிறுத்த வைத்தார்கள் என்று சொல்ல வந்தேன்.
//

ராகவன் தம்பி ஐயா,

நீங்கள் முதல் பின்னூட்டத்தில் சொல்லும் போதே 'நெருக்கடி' என்பதைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்று உடனே புரிந்தது. மறுமுறையும் வந்து விளக்கியதற்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//முத்துகுமரன் said...
தமிழ்ச் சமூகத்திற்கு தொண்டாற்றியவர்களுல் அயோத்தி தாச பண்டிதர் மிக முக்கியமானவர்.
........//

முத்துகுமரன்,

நீங்கள் அயோத்தி தாச பண்டிதர் ஐயா வை பற்றி தெரிந்தவைகள் இவ்விடுகைக்கு மேலும் மெருகூட்டுகின்றன. பாராட்டுக்கள், நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

சிவபாலன் said...
GK,

//மிக நல்லன் இடுக்கை.

நட்சத்திரவாரத்தை மிக நேர்த்தியாக எடுத்துச் செல்கிறீர்கள்.

இவரைப் பற்றி நான் அறிந்ததில்லை. அறிய தந்தமைக்கு மிக்க நன்றி!

வாழ்த்துக்கள்!
//

சிபா,

இந்த நட்சத்திர இடுகைகளில் தேவ நேயப் பாவாணர், மற்றும் அயோத்தி தாசப் பண்டிதர் ஆகிய இருவரும், தமிழுக்கும், தமிழருக்கும் உழைத்து மறைந்தவர்கள். இவர்களைப் பற்றி எழுதியதில் எனக்கும் நெஞ்சம் நிறைகிறது. அவதாரங்களைவிட மக்களுக்காக அவதரித்தவர்களை காட்டுவதற்கு பலரும் முன்வரவேண்டும்.

Unknown சொன்னது…

அயோத்தி தாச பண்டிதர் - நல்ல நட்சத்திரம்.
அறியத் தந்தமைக்கு நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
அயோத்தி தாச பண்டிதர் - நல்ல நட்சத்திரம்.
அறியத் தந்தமைக்கு நன்றி
//

சுல்தான் ஐயா,

*நட்சத்திரம்* என்று குறிப்பிட்டது நட்சத்திர வார இடுகை என்று குறிப்பதற்காக.

அயோத்திதாசர் நட்சத்திரம் அல்ல. அவரும் ஒரு சூரியன்.
:)

Unknown சொன்னது…

நீங்கள் தமிழ்மணத்திற்கு ஒருவார நட்சத்திரம். அவர் காலமெல்லாம் நல்ல நட்சத்திரமாக மக்கள் மனங்களில் ஜொலிப்பார் என்ற எண்ணத்தில் எழுதினேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
நீங்கள் தமிழ்மணத்திற்கு ஒருவார நட்சத்திரம். அவர் காலமெல்லாம் நல்ல நட்சத்திரமாக மக்கள் மனங்களில் ஜொலிப்பார் என்ற எண்ணத்தில் எழுதினேன்.
//

சுல்தான் ஐயா,

எனக்கு ஏற்பட்ட புரிதல் குழப்பம், மீண்டும் வந்து சுட்டியதற்கு மிக்க நன்றி !

Banukumar சொன்னது…

ஐயா,

அயோதி தாசரின் புத்தகங்கள் எந்த பதிப்பகத்தில் கிடைக்கின்றன? தங்களிடம் அவரின் நூட்கள் உள்ளனவா?

இரா. பானுகுமார்,
சென்னை.

பாரி.செழியன் சொன்னது…

in detailed
pl visit
hhtp://www.ayothidhasar.com/
http://www.ayyothidhasapandithar.blogspot.com/

paari chelian

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்