பின்பற்றுபவர்கள்

31 ஆகஸ்ட், 2007

கிட்ட பார்வையும் வேண்டாம், தூரப் பார்வையும் வேண்டாம், நெருப்பை நெருப்பின்மையினால் தான் அணைக்க முடியும்

நான் பெளத்தன் அல்ல, ஆனால் எனக்கு புத்தரை பிடிக்கும்,

ஒரு முறை சுஜாதை என்ற பெண்மணி தன் இறந்த மகனை எடுத்துக் கொண்டு, புத்தன் என்ற மகானிடம் சென்றால் பிழைக்க வைத்துவிடலாம் என்று புத்தரிடம் வந்தார்.

அவரிடம் நடந்ததைச் சொல்லி தன் ஒரே மகனை பிழைக்க வைக்கச் சொல்லி கேட்டாள், 'சரி செய்கிறேன் ஆனால் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்றார் புத்தர். 'சரி சொல்லுங்கள்' என்றால் சுஜாதை. 'சரி அம்மா, இந்த ஊரில் யார் விட்டில் துக்கம் இதுவரை நடக்கவில்லையோ அவர்கள் வீட்டிற்கு சென்று சிறிது உப்பு வாங்கிவா, உன் மகனை பிழைக்க வைத்துவிடுகிறேன்' என்றார். இது எளிதான வேலை என்று நினைத்தவள் இறந்த மகனை அங்கேயே விட்டுவிட்டு, வீடுவீடாக சென்று விசாரித்தாள், ஒவ்வொரு வீட்டிலும் எதோ ஒரு விதத்தில் துக்கம் நடந்ததைச் சொல்லி கையை விரித்தார்கள். மாலை வரை ஒவ்வொரு வீடாக சென்றவளுக்கு இறுதியில் மரணம் என்பது இயற்கை என்று தெரிந்தது. பின்பு புத்தரை வணங்கி, தாம் மரணத்தை உணர்ந்து கொண்டதாக சொன்னாள். பின்பு ஒரு நாள் பெளத்த துறவியானாள்.

மரணம் என்பது இயற்கை அது வந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுரையாக சொல்லாமல் அவளாகவே புரிந்து கொள்ள வைத்தார்.

தலைப்பு ? அது புத்தர் கதைகளில் வரும் ஒரு குட்டி கதையில் இடம் பெற்ற அறிவுரை,

கிட்டப் பார்வையும் வேண்டாம் : எல்லோரிடத்திலும் மிக நெருங்கி சென்றுவிடக் கூடாது. அப்படி இருந்தால் எதாவது பிணக்குகள் வந்தால் தாங்கிக் கொள்ள முடியாது.

தூரப் பார்வையும் வேண்டாம் : எப்போதாவது நண்பர்களுக்கு இடையே பிணக்குகள் ஏற்பட்டால் அதை எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் தேவையற்ற விரோதம் வளர்ந்து விரிசல் வளர்ந்து கொண்டே செல்லும், அது முடிவுக்கும் வராது. அதாவது விலகிச் சென்று கொண்டே இருப்பது தூரப் பார்வை !

வெறுப்பை வெறுப்பால் நீக்க முடியாது. நெருப்பை அணைக்க நெருப்பின்மையை (நீரை) பயன்படுவது போல்வெறுப்பை அணைக்க வெறுப்பின்மையை அதாவது மறக்க முயலவேண்டும் அல்லது மன்னித்து அ(ரவ)ணைக்க வேண்டும் !

5 கருத்துகள்:

லக்கிலுக் சொன்னது…

//கிட்ட பார்வையும் வேண்டாம், தூரப் பார்வையும் வேண்டாம், நெருப்பை நெருப்பின்மையினால் தான் அனைக்க முடியும் //

"அனைக்க" அல்ல "அணைக்க"

கோவி.கண்ணன் சொன்னது…

//அனைக்க" அல்ல "அணைக்க"
//
:) நன்றி லக்கியாரே !

மாசிலா சொன்னது…

"கிட்ட உறவு
முட்டப் பகை"


சரீங்களா கோவி?

வடுவூர் குமார் சொன்னது…

கோவியாரே..
தாமரையிலை தண்ணீரைப் போல்,வேண்டும் என்றால் அதன் மேல் இருக்கனும் இல்லாவிட்டால் தண்ணீரோடு கலந்துவிடவேண்டும்.

SurveySan சொன்னது…

இவ்ளோ நாள் எல்லாருமே கண்டுக்காம விட்டும், அடங்காத நெருப்பு, நெரூப்பின்மையால் எப்படி அடங்கும்.

அம்பலப்படுத்தியும், தேன்கூட்டில் மறு நாள் வந்த கேவலங்களை பார்த்தீங்களா?

திருந்துமா இதெல்லாம்?

நெருப்பு இம்முறை கடல் கொண்டு அணைக்கப்படும். எல்லார் உதவியும் தேவை அதுக்கு
:)

நல்ல விஷயங்களுக்கு பயன் படவேண்டிய கருவியை இப்படி மன விகாரங்களுக்கு பயன் படுத்தும் கொடுமையை விட்டு வைக்கக் கூடாது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்