பின்பற்றுபவர்கள்

17 ஆகஸ்ட், 2007

பகவத் கீதை போர்களத்தில் உபதேசிக்கப்பட்டதா ?

பகவத் கீதையைப் பற்றி குறிப்பிடுபவர்கள், அது மகாபாரதக் கதையின் முடிவில் போர்களத்தில் அர்ஜுனன் போர் செய்யத் தயங்கியபோது கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நிகழ்ந்த உரையாடல்களின் தொகுப்பு என்று சொல்லப்படுகிறது.

இவை உண்மை என்று வைத்துக் கொண்டாலும் 18 அத்தியாயங்கள் வரை நீளும் பகவத் கீதையை உரைத்து முடிக்க கிருஷ்ணனுக்கு போர்களத்தில் போதிய அவகாசம் கிடைத்திருக்குமா ? அதில் உள்ள சுலோகங்களை படித்து முடிக்கவே குறைந்தது 3 நாள்களாவது அல்லது அதற்கும் மேல் ஆகும் என்று நினைக்க முடிகிறது.

இரண்டுபக்கமும் படைகள் அணிவகுத்து நின்ற போது 2 - 3 நாட்கள் கிருஷ்ணன் தொடர்ச்சியாக உபதேசம் செய்துவந்திருந்தால் அங்கு நின்ற மற்ற வீரர்களும், கவுரபடை, பாண்டவப்படை என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

தெரிந்தவர்கள் விளக்கலாம்.

நான் சில நூல்களில் படித்தபோது பகவத் கீதை மகாபரதத்தின் இடை சொருகல் என்று பல்வேறு தரப்பினர் சொல்கின்றனர். மேலும் முழு பகவத்கீதையும் ஒரே காலகட்டத்தில் உருவானவை அல்லவென்றும், வேறு வேறு காலகட்டத்தில் எழுதிய சுலோகங்களின் தொகுப்பாக இருக்கிறது என்றும் அதற்கான காரணங்களாக கர்மயோகமும் பக்தியோகமும் முரண்பட்டு இருப்பதையும், செய்யுள் நடையில் வேறுபாடுகள் இருப்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

எல்லாம் மாயை என்று சொல்லும் பக்தியோகம் மற்றும் ஞானயோகம், பின்பு ஏன் போர் செய்வதை கர்மயோகத்தில் கடமை என்று சொல்கிறது என்று ஞாயமான கேள்வி எழுப்புகிறார்கள். மாயை என்று சொல்லிவிட்டால் அங்கு செயல்பாடுகள் அர்த்தமற்றுப் போகிறது. பின்பு ஏன் செயலான போரைக் குறித்து ஒரு அத்யாயம் எடுத்துக் கொண்டு கருத்துக்கள் சொல்ல வேண்டும் என்று கேட்க்கிறார்கள்.

நன்கு தெரிந்தவர்கள் விளக்குங்கள் மற்றவர்கள் கருத்து கூறுங்கள் !


அன்புடன்,

கோவி.கண்ணன்

29 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

அர்ஜுனன் ரெம்பப் பாவங்க. யாராவது என்கிட்ட 10 நிமிசம் மொக்க போட்டாலே தாங்க முடியாது.. அவ்வளவு மொக்கய எப்படித்தான் தாங்கினாரோ பாவம்...
(பாததுங்க பக்த்த கோடிங்க ஆட்டோ அனுப்பிடப் போறாங்க)
//நன்கு தெரிந்தவர்கள் விளக்குங்கள//
நானும் விளக்கங்களுக்குக் காத்திருக்கிறேன்..

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வணக்கம் கோவி,

குருவிகரம்பை வேலு அவர்களின் 'சிந்து முதல் குமரி வரை' நூல் படித்திருக்கிறீர்களா? உங்களுடைய கேள்விகள் சிலவற்றுக்கு அதன்மூலம் விடைகிடைக்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

//பாரி.அரசு said...
வணக்கம் கோவி,

குருவிகரம்பை வேலு அவர்களின் 'சிந்து முதல் குமரி வரை' நூல் படித்திருக்கிறீர்களா? உங்களுடைய கேள்விகள் சிலவற்றுக்கு அதன்மூலம் விடைகிடைக்கும்
//
பாரி,
கேள்விபட்டதே இல்லைங்க. உங்களுக்கு தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்

வடுவூர் குமார் சொன்னது…

விடை : சொன்ன கிருஷ்ணரும் கேட்ட அர்சுணனும் வந்து சொன்னால் தான் தெரியும்.்

அரை பிளேடு சொன்னது…

ஒரு சின்ன கணக்கு.

கீதையில கிட்டத்தட்ட 700 ஸ்லோகம் இருக்கு,
ஒரு ஸ்லோகம் சொல்ல அரைநிமிடம்னா ஒரு நிமிடத்துல இரண்டு.
அப்ப 700 க்கு 350 நிமிடம். கிட்டத் தட்ட ஆறு மணி நேரம்.

முதல் நாள் கண்ணன் ஆறு மணி நேரம் எடுத்து கீதை சொல்லியிருப்பாரு. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
அர்ஜுனன் ரெம்பப் பாவங்க. யாராவது என்கிட்ட 10 நிமிசம் மொக்க போட்டாலே தாங்க முடியாது.. அவ்வளவு மொக்கய எப்படித்தான் தாங்கினாரோ பாவம்...
(பாததுங்க பக்த்த கோடிங்க ஆட்டோ அனுப்பிடப் போறாங்க)
//நன்கு தெரிந்தவர்கள் விளக்குங்கள//
நானும் விளக்கங்களுக்குக் காத்திருக்கிறேன்..
//

ஜெகதீசன்,

பகவத் கீதையை மொக்கை என்றுல்லாம் சொல்ல முடியாது, அதை வைத்து பின்னப்பட்ட அரசியல்களைப் பற்றி விரைவில் எழுதுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
விடை : சொன்ன கிருஷ்ணரும் கேட்ட அர்சுணனும் வந்து சொன்னால் தான் தெரியும்.்
//

குமார்,

உங்கள் விடை எளிமை என்றாலும் உண்மையும் கூட
:)

வெத்து வேட்டு சொன்னது…

Krishnar freezed Gourava and their army and taught Arjun..happy now?

கோவி.கண்ணன் சொன்னது…

//somberi said...
Krishnar freezed Gourava and their army and taught Arjun..happy now?
//

அப்படியா ?

அப்போது போருக்கே அவசியமில்லாமல் பாண்டவர்களை வெற்றிபெற வைத்திருக்கும் சக்தியை கொடுத்திருக்கலாமே ? அல்லது வெற்றி அடைந்தது போல் ஒரு மாயையை ஏற்படுத்தி இருக்கலாமே
:))

சிறில் அலெக்ஸ் சொன்னது…

//Krishnar freezed Gourava and their army and taught Arjun..happy now?//

impossible. Freezer was not invented those days.

:))

Dr.N.Kannan சொன்னது…

மாபாரதம், இராமாயணம் இரண்டையுமே ஒற்றைப் பரிமாணத்தில் ஒரு சரித்திர நோக்கில் பார்க்க முடியாது. இக்கதைகளுக்கு உட்கரு ஒன்று இருக்கிறது. அதைச் சொல்ல முற்படும் போது வட்டத்துள், வட்டம் என்று விரிந்து பரந்து விடுகிறது. இராமன் கதையில் தன்னை மனிதன் என்று சொன்னாலும், இராமாயணம் முழுவதும் அமாஷ்யமானதே. அதே போல்தான் மகாபாரதமும். இதனாலேயே இவைகளை 'உபவேதம்' என்று சொல்லி, தத்துவங்களை விளக்கப் பிறந்த இதிகாசங்கள் என்று நம் பெரியோர் கருதினர். அந்த வகையில் பார்த்தால் மட்டுமே இவை பொருள் உள்ளவை ஆகின்றன. 65,000 மனைவிகளை வைத்துக் கொண்டு கிருஷ்ணர் என்ன செய்வார்? இராமர் 60,000 ஆண்டுகள் ஆண்டதாக இராமாயணம் சொல்கிறது. ஒற்றைப் பரிமாணத்தில் இவை ஒன்றுக்கும் உதவாது. ஆயின் தத்துவக் குறியீடுகள் என்று பார்த்தால் மிக ஆழமானவை.

விஜயன் சொன்னது…

கேள்வி நல்லாத்தான் கேட்டிருக்கீங்க.

இதுக்கு பதில கீதையை நல்லா படிச்சு புரிஞ்சிகிட்டவங்க பதில் சொன்னாத் தான் சரியாக இருக்கும்.

நானும் படிச்சு குழம்பியிருக்கேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆயின் தத்துவக் குறியீடுகள் என்று பார்த்தால் மிக ஆழமானவை.//

கண்ணன் ஐயா,

அந்த ஆழம் தான் சாதியின் சல்லிவேர் சாகமல் வருணமரம் பட்டுப் போகமல் பாதுகாத்து வருகிறது.

Unknown சொன்னது…

In epics everything should not be taken literally.RKRaj

Thamizhan சொன்னது…

சமஸ்கிருதத்தை உலகுக்கெடுத்துச் சென்ற மேக்ஸ்முல்லர் "வேதங்களிலோ,பாணிணியின் இலக்கண்த்திலோ பாண்டவர் அல்லது பாண்டு என்ற வார்த்தையே இல்லை"என்கிறார்.

ரிக் வேதத்திலே ரவி நதிக்கரையில் பரதா மன்னனுக்கும் பத்து மன்னர்களின் கூட்டத்திற்கும் நடந்த சிறு போர் குறிப்பிடப் ப்ட்டுள்ளது ஆனால் இந்தபெரிய மஹா பாரத்ப் போர் குறிப்பிடப் பட வில்லை.

வி.ஆர்.ராமச்சந்திர தீட்சதர் மொத்த்ம் 18 அக்ஷ்ஹினிஸ் குருசேத்திரத்தில் சண்டையிட்டார்கள் என்று கூறுகிறார்.
அதாவது
3,93,660 ரதங்கள்
3,93,660 யானைகள்
11,80,980 குதிரைகள்
19,68,300 காலாட் படை

மொத்தம் இறந்தவர்களோ 166 கோடி!
பிரதாப் சந்திர ராய் அவர்களின் மொழி பெயர்ப்பில்(ஆங்கிலம்).
ஆக போர்க்களம் பற்றி ,அப்படி ஒன்று ந்டந்திருக்க முடியுமா என்று கேட்டுக் கொள்ளுங்கள்.

குமரன் (Kumaran) சொன்னது…

//நான் சில நூல்களில் படித்தபோது பகவத் கீதை மகாபரதத்தின் இடை சொருகல் என்று பல்வேறு தரப்பினர் சொல்கின்றனர். //

கோவி.கண்ணன். இந்தக் கருத்தினை நானும் படித்திருக்கிறேன். ஆனால் ...

//மேலும் முழு பகவத்கீதையும் ஒரே காலகட்டத்தில் உருவானவை அல்லவென்றும், வேறு வேறு காலகட்டத்தில் எழுதிய சுலோகங்களின் தொகுப்பாக இருக்கிறது என்றும் அதற்கான காரணங்களாக கர்மயோகமும் பக்தியோகமும் முரண்பட்டு இருப்பதையும், செய்யுள் நடையில் வேறுபாடுகள் இருப்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
//

இந்தக் கருத்தைப் படித்ததில்லை. பல்வேறு உரைகளுடன் சிறு வயது முதல் படித்ததில் கீதை சொல்பவற்றுள் முரண்பாடு இருப்பது போலவும் நடையில் வேறுபாடுகள் இருப்பது போலவும் எனக்குத் தோன்றவில்லை. அதனால் அப்படி மற்றவருக்குத் தோன்றக்கூடாது என்றும் சொல்வதற்கில்லை. எந்த நூலிலும் முரண்பாடுகளையும் நடையில் வேறுபாடுகளையும் காண இயலும். வேறு எந்த நூலையும் குறிப்பாகச் சொன்னால் இடுகையின் கருத்தினைத் திசை திருப்புவதாகச் சிலர் எண்ணக்கூடும் என்பதால் எந்த நூலையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

//எல்லாம் மாயை என்று சொல்லும் பக்தியோகம் மற்றும் ஞானயோகம், பின்பு ஏன் போர் செய்வதை கர்மயோகத்தில் கடமை என்று சொல்கிறது என்று ஞாயமான கேள்வி எழுப்புகிறார்கள். மாயை என்று சொல்லிவிட்டால் அங்கு செயல்பாடுகள் அர்த்தமற்றுப் போகிறது. பின்பு ஏன் செயலான போரைக் குறித்து ஒரு அத்யாயம் எடுத்துக் கொண்டு கருத்துக்கள் சொல்ல வேண்டும் என்று கேட்க்கிறார்கள்.
//

இது மிகத் தவறான புரிதல் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். இது சரியா தவறா என்பதை நேரம் இருப்பவர்கள் கீதையைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிக் கொள்கிறேன். விளக்கிச் சொல்ல எனக்கு நீண்ட நேரம் தேவைப்படும். காலம் வந்தால் கீதையையும் எடுத்துக் கொண்டு இடுகைகளை வருங்காலத்தில் இடுகிறேன்; இப்போது ஏற்கனவே தொடங்கிவற்றை நிறைவு செய்வதில் முயற்சியை மேற்கொள்கிறேன்.

குமரன் (Kumaran) சொன்னது…

பகவத் கீதையை முழுவதும் சொல்லும் வரை போர்க்களத்தில் இருப்பவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வியைப் பலரும் எழுப்பி விடை சொல்ல முயன்றுள்ளதையும் படித்திருக்கிறேன். எல்லாம் வல்ல இறைவனால் அந்த 700 சுலோகங்களில் இருப்பதை ஒரே நொடியில் அருச்சுனனுக்குப் புரிய வைக்க முடியும்; அதனைத் தான் அந்த இக்கட்டான நேரத்தில் கண்ணன் செய்திருப்பான்; நமக்காக 700 சுலோகங்களில் அந்த உபதேசத்தை வியாசர் மகாபாரதத்தில் விரித்திருக்கிறார் என்று சொன்ன விளக்கத்தை மட்டுமே இப்போது என் நினைவிலிருந்து எடுத்துச் சொல்ல முடிகிறது - ஆனால் இந்த விளக்கம் பக்தியாளர்களுக்கு வேண்டுமானால் ஒத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கலாம். மற்றவர்களுக்கு? இது போக மற்ற விளக்கங்கள் இப்போது நினைவில்லை. சுவாமி சித்பவானந்தரும் பாரதியாரும் இந்தக் கேள்வியைக் கேட்டு விளக்கம் சொல்லியிருப்பதாக நினைவிருக்கிறது. ஆனால் சரியாகத் தெரியவில்லை.

குமரன் (Kumaran) சொன்னது…

//அந்த ஆழம் தான் சாதியின் சல்லிவேர் சாகமல் வருணமரம் பட்டுப் போகமல் பாதுகாத்து வருகிறது.
//

இது உங்கள் புரிதலாக இருக்கலாம். ஆனால் எத்தனை பேருக்கு கீதையில் க்ஷத்திரிய தர்மத்தைப் பற்றிய பேச்சும், வருணத்தைப் பற்றிப் பேசும் ஒன்றிரண்டு சுலோகங்களும் இருக்கின்றன என்று தெரியும். பெரும்பாலோனோருக்கு (எல்லோருக்கும் என்றே சொல்லலாம்) தெரிந்தது கீதாசாரம் என்று பிரபலமாக இருக்கும் 'என்ன கொண்டு வந்தாய்...' போன்ற வரிகள் மட்டுமே. சாதியின் சல்லிவேரை எங்கே வேண்டுமானாலும் காணலாம். நான் மிக மதிக்கும் திருக்குறளிலிருந்தும் 'அந்தணர் என்போர் அறவோர்...' என்ற குறளை சாதியைப் போற்றுகின்றது என்ற புரிதலுடன் விளக்கலாம். இல்லையா? மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுபவர்களே அந்தணர்கள் என்ற விளக்கம் இங்கே தரப்படும். அதனை விடுத்து அந்தணர்கள் என்பவர்களே அறவோர்; மற்றவர் இல்லை என்கிறார் வள்ளுவர் என்றும் விளக்கம் தரலாம். எந்த விளக்கத்தை யார் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது அவரவர் புரிதலைப் பொறுத்தது. அது போல் மற்றவர்களைக் காக்கும் தரும யுத்தம் செய்பவன் க்ஷத்திரியன்; அந்த வாழ்க்கையையே நீ பிறந்தது முதல் வாழ்ந்து வந்திருக்கிறாய்; அதனால் உன் கடமையான போரைச் செய் என்று சொல்கிறான் கண்ணன் என்று ஒரு விளக்கம் தரலாம். அதே சுலோகத்தை எடுத்துக் கொண்டு போரையும் கொலையும் வலியுறுத்துகிறது கீதை; அதனால் அது கொலைநூல் என்றும் ஒரு விளக்கம் தரலாம். தரப்படுகிறது. நூற்களில் உள்ள வரிகள் எந்த விதமான விளக்கத்தையும் தர வழி தருகிறது என்பதென்னவோ உண்மை.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் said..இது உங்கள் புரிதலாக இருக்கலாம். ஆனால் எத்தனை பேருக்கு கீதையில் க்ஷத்திரிய தர்மத்தைப் பற்றிய பேச்சும், வருணத்தைப் பற்றிப் பேசும் ஒன்றிரண்டு சுலோகங்களும் இருக்கின்றன என்று தெரியும். பெரும்பாலோனோருக்கு (எல்லோருக்கும் என்றே சொல்லலாம்) தெரிந்தது கீதாசாரம் என்று பிரபலமாக இருக்கும் 'என்ன கொண்டு வந்தாய்...' போன்ற வரிகள் மட்டுமே. சாதியின் சல்லிவேரை எங்கே வேண்டுமானாலும் காணலாம். நான் மிக மதிக்கும் திருக்குறளிலிருந்தும் 'அந்தணர் என்போர் அறவோர்...' என்ற குறளை சாதியைப் போற்றுகின்றது என்ற புரிதலுடன் விளக்கலாம். இல்லையா? மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுபவர்களே அந்தணர்கள் என்ற விளக்கம் இங்கே தரப்படும். அதனை விடுத்து அந்தணர்கள் என்பவர்களே அறவோர்; மற்றவர் இல்லை என்கிறார் வள்ளுவர் என்றும் விளக்கம் தரலாம்.
//
குமரன் ஐயா,
நானும் உங்கள் புரிதல் என்று சொல்லவில்லையே. 'உள்ளமே கோவில், ஊனுடம்பே ஆலயம் எனவே வாழ்வை மகிழ்வுடன் வாழுங்கள், உடலை பேனுங்கள்' என்று சொல்லும் தமிழ் சித்தர் தம் தத்துவங்களைவிட, எதைக் கொண்ட்டுவந்தாய் என்று சொல்லும் கீதையின் மாயாவாதம் எந்த வகையில் உயர்ந்தது என்று தெரியவில்லை. அந்தணர், யாத்தார், ஐயர் யாவும் சங்கத் தமிழனின் தொழில் பெயர்கள் என்பது எனக்கு தெரியும்,எனவே 'அந்தணர் என்பவர் அறவோர்' என்று திருவள்ளுவர் பார்பனர்கள் குறித்து தான் புகழ்பாடினார் என்பது என்றைக்கோ நிராகிறிக்கப்பட்டுவிட்டது.

//எந்த விளக்கத்தை யார் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது அவரவர் புரிதலைப் பொறுத்தது. அது போல் மற்றவர்களைக் காக்கும் தரும யுத்தம் செய்பவன் க்ஷத்திரியன்; அந்த வாழ்க்கையையே நீ பிறந்தது முதல் வாழ்ந்து வந்திருக்கிறாய்; அதனால் உன் கடமையான போரைச் செய் என்று சொல்கிறான் கண்ணன் என்று ஒரு விளக்கம் தரலாம். அதே சுலோகத்தை எடுத்துக் கொண்டு போரையும் கொலையும் வலியுறுத்துகிறது கீதை; அதனால் அது கொலைநூல் என்றும் ஒரு விளக்கம் தரலாம். தரப்படுகிறது. நூற்களில் உள்ள வரிகள் எந்த விதமான விளக்கத்தையும் தர வழி தருகிறது என்பதென்னவோ உண்மை.
//

எனது விளக்கங்கள், ஐயங்கள் எதுவும் நம்பிக்கையாளர்களை அசைத்துவிடாது என்பது எனக்கும் தெரியும் ஐயா, எனது பதிவை படித்துவிட்டு இந்து மதத்தை பாதிக்கப்பட்டவர் புறம்தள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை. உங்கள் விளக்கங்களுக்கு நன்றி. தாங்கள் அருளியபடி என் பதிவில் எதையோ நான் கிறுக்கிவிட்டு போகிறேன். பழமைக்கும் முட்டுக் கொடுக்கவும் அதே சமயத்தில் பாமரர் நிலை குறித்து கண்ணீர் வடிக்க பலர் இருக்கிறார்கள். இதில் இரண்டாவதாக இருப்பதைத்தான் நான் செய்கிறேன். முதலில் உள்ளதை என்னால் செய்ய முடியாது.

புரிதலுக்கு நன்றி !

VSK சொன்னது…

//மாயை என்று சொல்லிவிட்டால் அங்கு செயல்பாடுகள் அர்த்தமற்றுப் போகிறது. பின்பு ஏன் செயலான போரைக் குறித்து ஒரு அத்யாயம் எடுத்துக் கொண்டு கருத்துக்கள் சொல்ல வேண்டும் என்று கேட்க்கிறார்கள்.//

மாயை எனத் தெரிந்தும் ஒரு படத்தில் ஒருவன் ஏன் நடிக்கிறான்

அது மாயை எனத் தெரிந்தும் ஏன் பல்லாயிரக்கணக்கான மக்கள் அதைப் பார்க்கிறார்கள்?

செயல்பாடு என்பது மாயைக்கும் இல்லை; நிகழ்வுக்கும் இல்லை.

இதைப் புரிந்துகொண்டால், இந்தக் கேள்விகளுக்கும் அர்த்தமில்லை!

தான் ரஜினி என்பதைத் தெரிந்த ஒருவனே, சிவாஜி வேடத்தில் வந்து கலக்குகிறான்.

ரஜினி என்பவன் நடிக்கிறான் எனத் தெரிந்து, அவன் மேல் கொண்ட அபிமானத்தால், அத்தனை ஜனமும் வந்து ஆரவாரிக்கிறது, அந்த ரஜினி என்கிற 58 வாயது ஆளை இளைஞன்
சிவாஜியாக, அபிமானத்துடன் பார்த்து.

நேற்று விஜய் டிவி லொள்ளுசபாவில் பிதாமகனை உல்ட்டா பண்ணிக் கன்பித்தார்கள்!

அதில் ஒரு வசனம் வரும்.

வெட்டியான் விக்ரமாய் வந்தவருக்கு அடிபட்டு ரத்தம் வந்தது போல மேக்கப் போட்டு அனுப்புவார்கள்!
அதைப் பார்த்து, சூர்யா, மற்றும் பலரைப் போல நடித்தவர்கள், கதறிக் கதறி அழுவார்கள்

இன்ஸ்பெக்டர் வந்து, அவார்டு வாங்கணும்னு வெறும் மேக்கப்புக்குக்கே எப்படில்லாம் ஆளாளுக்கு நடிக்கறாங்க பாருய்யா! என வியப்பார்.

இந்த வசனத்தில் எதுனாச்சும் உங்களுக்குப் புரிஞ்சா, கீதையும் புரியும்.

இல்லியா, இருக்கவே இருக்கு.... அடுத்த பிறவி!

வந்து புரிஞ்சுக்கலாம்!
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//இன்ஸ்பெக்டர் வந்து, அவார்டு வாங்கணும்னு வெறும் மேக்கப்புக்குக்கே எப்படில்லாம் ஆளாளுக்கு நடிக்கறாங்க பாருய்யா! என வியப்பார்.

இந்த வசனத்தில் எதுனாச்சும் உங்களுக்குப் புரிஞ்சா, கீதையும் புரியும்.

இல்லியா, இருக்கவே இருக்கு.... அடுத்த பிறவி!

வந்து புரிஞ்சுக்கலாம்!
:)) //

எஸ்கே ஐயா,

வரலாறுகளை / பக்திக் கதைகளை சினிமாக்கள் வழி அறிந்துவருகிறோம் என்பது மறுப்பதற்கு இல்லை.
தத்துவங்களை சினிமாவை வைத்து விளக்கினால் தான் புரியும் என்ற முயன்றிருப்பதால் அதன் பயன்பாடுகள் எந்த அளவுக்கு அன்றாடம் தேவையாக இருக்கிறது என்று தெரியவருகிறது.


பின்னூட்டத்திற்கு நன்றி !

//இல்லியா, இருக்கவே இருக்கு.... அடுத்த பிறவி!

வந்து புரிஞ்சுக்கலாம்!//

ஓ அப்படியா ? அங்கும் வந்து விளக்குங்கள் உங்களுக்காக காத்திருக்கிறேன்.

:)

குமரன் (Kumaran) சொன்னது…

//தாங்கள் அருளியபடி என் பதிவில் எதையோ நான் கிறுக்கிவிட்டு போகிறேன். //

இது ஏதோ ஒரு புரிந்துணர்வில் ஏற்பட்ட தவறால் வந்த சொற்கள் என்று எண்ணுகிறேன். உங்கள் உள்ளம் புண்பட வேண்டும் என்று எதையும் சொல்லவில்லை. அப்படி உள்ளம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும். தத்துவங்களைப் பற்றிப் பேச நேரம் இல்லை; தற்போது ஆர்வமும் இல்லை என்பதால் தங்கள் பதிவில் எழுதுங்கள் என்றேன். 'தாங்கள் அருளிய படி என் பதிவில் எதையோ 'கிறுக்கிவிட்டுப்' போகிறேன்' என்று நீங்கள் சொல்லும்படி என் எழுத்துகள் இருந்தததற்கு வருந்துகிறேன்.

நான் செய்வது பழமைக்கு முட்டு கொடுப்பது என்றோ பழமைக்கு முட்டு கொடுப்பது மட்டுமே என் வேலை என்றோ நீங்கள் சொல்லவில்லை என்று நம்புகிறேன். பாமரர் நிலையைக் கண்டு கண்ணீர் மட்டும் விட்டு நிறுத்தாமல் அதற்கும் மேலாக நானும் நீங்களும் செய்வதை நாம் அறிவோம்.

என் சொற்களை நான் உங்களை என் பதிவுகள் பக்கம் வர வேண்டாம் என்று சொன்னதாகத் தவறாகப் புரிந்து கொண்டு ஏற்பட்ட வருத்தத்தால் நானும் உங்கள் பதிவுகள் பக்கம் வர வேண்டாம் என்று சொன்னீர்கள் என்றால் அந்தக் கட்டளைப் படி 'பேசாமல் படித்து விட்டுச்' செல்கிறேன்; அல்லது இங்கே சொல்ல நினைப்பதை என் பதிவில் 'கிறுக்கிவிட்டுப்' போகிறேன். தங்கள் கட்டளை என்ன என்று சொல்லுங்கள்.

குமரன் (Kumaran) சொன்னது…

கீதாசாரம் என்று பிரபலமாக இருப்பது கீதையின் தத்துவம் தானா என்பதிலேயே எனக்கு ஐயம் உண்டு. கீதை மாயாவாதத்தைப் பேசுகிறது என்பது கீதையின் பல்வேறு உரைகளில் ஒரு உரை சொல்லும் விளக்கம். இந்த கீதாசாரம் என்ற பிரபலமான சொற்றொடர்கள் காந்தியடிகளால் கீதையின் சாரமாகச் சொல்லப்பட்டு பிரபலமடைந்தது என்று நினைக்கிறேன்.

மாயாவாதத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை என்பது பாரதியின் 'நிற்பதுவே நடப்பதுவே' பாடலுக்கு 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவில் நான் எழுதிய விளக்கங்களைப் பார்த்தவர்களுக்குப் புரியும். ஆனால் அது ஒரு முக்கியமில்லாத விடயம்; எனக்கு எதில் ஒப்புதல் இருக்கிறது எதில் இல்லை என்பதை நாம் பேசவில்லை. இல்லையா?

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் said...என் சொற்களை நான் உங்களை என் பதிவுகள் பக்கம் வர வேண்டாம் என்று சொன்னதாகத் தவறாகப் புரிந்து கொண்டு ஏற்பட்ட வருத்தத்தால் நானும் உங்கள் பதிவுகள் பக்கம் வர வேண்டாம் என்று சொன்னீர்கள் என்றால் அந்தக் கட்டளைப் படி 'பேசாமல் படித்து விட்டுச்' செல்கிறேன்; //

குமரன் ஐயா,

ப்ளாக்கர் கொடுத்திருப்பது இலவச கணக்கு, நான் அதைப் பயன்படுத்துகிறேன் அவ்வளவே, இதைப் படிக்காதீர்கள், பின்னூட்டம் போடாதீர்கள் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு எனக்கு (குறுகிய) மனப்பாண்மை இல்லை.

உங்கள் மற்ற புரிந்துணர்வு விளக்கங்கள் உங்களுக்கு மகிழ்வுதருமாயின் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

Deva Udeepta சொன்னது…

Mr. Kannan,

Does this post came in because of your real intentions to understand what happened or to spark off some controversy?

If your intentions are to understand it better, there are lots of explanatory books available and you can go ahead and read them and publish a informed post.

But your intentions does not seem to be so, at least from my perspective( The way that you closed the chapter on the Thirukkural). You will be better off not paying attention to Bhagavat Gita or what so ever.

It needs a unbiased, seeking mind to understand these. You showed that you are totally mis-fit, when you raised the question of which one is better Siddha's poems or Gits? As an Indian & As a Hindu, I need both. Those are the treasures of this land and they call for a little more effort from your side to understand them.

Might be you are not supposed to understand.

ஜமாலன் சொன்னது…

பயனுள்ள விவாதம். கண்ணனது கேள்விகள் எளிமையாக இருந்தாலும்.. அவற்றிற்கான தர்க்கரீதியான பதில் எதுவும் இல்லை. படியுங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்பது பதிலாகாது. அது ஒரு அனுபூதி நிலை அனுபவ பரவசம் என்பதெல்லாம் கவைக்குதாவதவை. கீதை இடைச்செருகல் என்பதும் அதன் மூலம் உபுநிஷத் ஒன்றில் (அதன் பெயர் நினைவில் இல்லை) வரும் ஒரு சின்ன உரையாடலே பின்னால் கீதையாக விரித்துக் கூறப்பட்டுள்ளது. மகாபாரதமே ஜெயா என்கிற பயரில் மக்களிடம் நிலவிவந்த நாட்டுப்புறக்கதைகளின் தொகுப்பாக உருவானதுதான். பல சிற்றனங்களை ஒருங்கினைக்கும் செயலே மகாபாரதத்தின் வரலாற்று முக்கியத்தவம் ஆகும். இன்றைய மகாபாரதத்தின் வடிவம் என்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதும் ஆய்வுகள் காட்டும் உண்மை (கொசாம்பி ஜராவதி கார்வே போன்ற அறிஞர்கள் இதனை விளக்கி உள்ளனர்.) கீதை தன்னளவில் நிறைய முரண்பாடுகளைக் கொண்டிருப்பதாக அறிஞர்கள் விளக்கி உள்ளனர். அதனால்தான் மிதவாதியான காந்தியும் தீவிரவாதம் பேசிய திலகரும் அத்வைதத்தை உருவாக்கிய சங்கரரும் அதனை எதிர்த்த உருவான விஷிஷ்டாத்வைதரான இராமணுஜரும் உரை எழுதி உள்ளனர்.

Chittoor Murugesan சொன்னது…

அண்ணே,
பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி என்று ஒரு தொடர் ஆரம்பித்துள்ளேன். பார்த்திங்களா?

http://kavithai07.blogspot.com/2010/05/2.html

Sivamjothi சொன்னது…

கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

தவம் செய்ய வேண்டும்!!!

தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல!

தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல! தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!

நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

லிங்க்ஐ படியுங்க.

http://tamil.vallalyaar.com/?page_id=80


blogs

sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in

video
ஞானிகள் ஏன் கோயிலை உருவாக்க வேண்டும்?
http://www.youtube.com/watch?v=dLIBK-eptxg

Bakthi Yogam சொன்னது…

அந்த இடத்தில் நீ இருந்தா இப்படி சொல்லுவீங்களா

நீயும் freeze ஆகி இருந்துருப்ப

டைம் டிராவல் பண்ணி போய் பாரு போடாடாடாங்க👺👺👺👹👹👺👹👹👹💀☠️👻☠️👺☠️☠️👿👿👿👽👽👽👽👽👽👽

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்