பின்பற்றுபவர்கள்

19 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : ஒருவார 'காலம்' உங்களோடு ...

வணக்கம் நண்பர்களே,

தமிழ்மணத்தில் இருந்து நட்சத்திர பதிவுகள் எழுத நான்கு வாரங்களுக்கு முன்பே அழைப்பு வந்துவிட்டது. பல பதிவர்களை பாராட்டிய மேடை என்பதால் கூட்டத்துடன் கோஷமிட்டுக் கொண்டிருந்த எனக்கு இது கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், அந்த கூட்டத்தில் ஒருவனான எனக்கும் தனிமேடையாக ஒருவாரத்துக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்கிறேன். அதற்காக தமிழ்மணம் நிறுவனத்தாருக்கு எனது நன்றிகள்.

****************

ஓர் ஆண்டுக்கும் மேலாக எழுதுவதால் என்னைப் பற்றிய தன்(சுய) அறிமுகம் தேவை இல்லை என நினைக்கிறேன். மேலும் என்னைப் பற்றிய இலவச விளம்பரங்களை அவ்வப்போது நெருங்கிய நண்பர்களே அன்புடன், மகிழ்வுடன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், தி(க?)ட்டாமல் வேண்டுகோளும் வைத்திருக்கிறாகள் என்பதால் அறிமுகம் முற்றிலும் தேவை இல்லை. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் (என் 'காலத்திலும்') கண்ணனுக்கே. :))

கிழே பெரிய டிஸ்கி... :))

வலைப்பதிவு எழுதுவதற்கு முன், பதிவு நடப்புகள் ஓரளவுக்கு தெரிந்ததால் எழுத ஆரம்பிக்கும் போது எதை எதையெல்லாம் எழுதலாம் என்று ஒரளவுக்கு தெளிவு கிடைத்தது. மூன்று விடயங்களில் பொதுவாக எல்லோரும் ஆர்வம் செலுத்துகிறார்கள். ஒன்று சமூகம், இரண்டு அரசியல், மூன்றாவது அன்றாடம் புதிதாக முளைக்கும் எல்லாம் கலந்த பிணக்குகள். கும்மிகள் தனிவகை :)). எனவே இதில் கும்மியைக் குறைத்துக் கொண்டு எழுதுவது எனக்கு கடினமாக இருக்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் நிகழ்வுகளைப் பார்த்து வருவதால் அரசியலில் நடக்கும் கூத்துக்களை விமர்சித்திருக்கிறேன். தவறுகளைச் சுட்டிக் காட்டுவதில் தயங்கியதில்லை. அதே சமயத்தில் திராவிடக் கட்சிகள் பிடிக்கும் என்பதால் சப்பைக் கட்டும் கட்ட முயற்சிக்கவில்லை என்றே நினனக்கிறேன். அடுத்தது சமூகம் ... நேற்று வெற்றி அடைந்த காதல் திரைப்படம் வரை சாதீயக் கெடுதிகளைப் பொதுப்படுத்திப் பேசதவர்களே இல்லை. சாதியம் என்பது ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களை கூறுபோட்டு பிரிவினையை வளர்ப்பதே. அன்றாடம் சாதிகளை மையமாக வைத்து பிணக்குகள் எழும் போது அவற்றைப் பற்றி பேசமால் இருக்க முடியாது.

முற்றிலும் இந்திய சூழலில், சாதிகளின் தற்காப்பு கேடயமாக இருப்பது மதம், எந்த மதம் ? கிறித்துவத்தில் சாதி பார்பது வழக்கில் உள்ளதை கிறித்துவ பதிவர்கள் சிலர் எழுதி இருக்கின்றனர், இஸ்லாமிலும் கஃபீர் என்ற சொல் இஸ்லாமியர் அல்லாதவர்களைக் குறித்தாலும் காஃபிர் என்ற சொல்லை தாழ்வாக விளிப்பதற்கான குறீயீட்டுச் சொல்லாக வழக்கில் பயன்படுகிறது என்பதை வெளிப்படையாக இஸ்லாமிய சகோதரர்கள் ஒப்புக் கொள்ள மறுப்பர், ஆனாலும் இன ரீதியான மோதல்களை 'ஆம்' என்று சொல்வர். எனக்கு மற்ற மதங்கள் பற்றிய கவலை தேவையில்லை. அதை அந்த மதத்துக்கு சகோதரர்கள் பார்த்துக் கொள்ளட்டும். பிறக்கும் போதே என் மீது விழுந்திருக்கும் மதத்தின் மேலுள்ள சேறுகளை அகற்றி தூய்மை படுத்துவதற்கு என்னளவில் நான் நான் முயற்சிப்பது தவறில்லை என நினைக்கிறேன். என்மதத்தை சேர்ந்த சீர்திருத்தவாதிகள் விவேகநந்தர் முதல் திரு சுகிசுவம் வரை பலரும் சீர்படுத்துவதில் முயன்றிருக்கிறார்கள், வருகிறார்கள் என்பதையும், தந்தைப் பெரியாரும் மதத்திலிருந்து கொண்டே சவுக்கை சுழற்றினார் என்பதையும் அறிந்திருக்கிறேன்.

சாதியத்தை மத ஆர்வலர்கள் தாங்கிப் பிடிக்கும் போது சாதியத்தால் விளைந்த கேடுகளை குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது தேவை (அவசியம்) என்றாகிறது, அதன் காரணிகளாக, தொடர்ச்சியாக மதத்தில் காணப்படும் கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகளை குறைசொல்லாமல் இருக்க முடியாது. இன்றைக்கு, தாம் இந்த சாதியில் பிறந்தோம் என்பதை மாற்ற முடியாவிட்டாலும் சாதிப் பெருமைப் பேச பொதுவாக இளைஞர்கள் தயங்குகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது சாதியத்தை பலரும் கடுமையாக விமர்சிப்பதே அந்த நல்ல மாற்றத்திற்கான காரணம் என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. சாதியம் வேண்டும் என்பவர்களின் காட்டுக் கூய்ச்சல் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கத்தான் செய்யும், அவற்றைப் புறம் தள்ளி குலப் பெருமை பேசும் எந்த சாதியாக இருந்தாலும் அவை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியதே. [என் குடும்பத்தை இழுத்து என் உறவுகளை பல சாதி ஆண்களுக்கு பங்கு வைத்தால் சமத்துவம் காணமுடியும், எனவே முயற்சி செய்யேன் !!! என்ற பொருள்படும் ஆபாச சொற்களால் எழுதப்பட்ட பின்னூட்டங்கள் *அறி'வுறுத்தகள்' ?* கூட வந்திருக்கிறது.] மனக்குப்பையை கொட்டி தூய்மைப் படுத்திக் கொள்ளட்டுமே. இறைவன் இருப்பதை நம்பும் 'எவரும் பாவமண்ணிப்பு கேட்கும் போது தம் பாவங்களைத்தானே எடுத்துக் கொள்ளச் சொல்லி நன்மைக்காக வேண்டுவார்கள் இல்லையா ?' அந்த நோக்கில் அவர்களின் (மன) அழுக்குகளை ஏற்கலாம்.

***********

எதிர்பாராத விதமாக சாதிகளின் பெயரில் (ரீதியான) இருக்கும் இட ஒதிக்கீடுகளினால் சாதிப்பற்றாளர்களின் சாதிபோற்றும் ஆசையில் இன்னும் சில காலங்களுக்கு மண் விழாது என்று அவர்கள் ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். ஆனாலும் முன்பு போல் எவரையும் சாதியைச் சொல்லி தாழ்த்த முடியாது என்பதால் வரும் காலத்தில் சாதியின் பயன்பாடு குறைந்து சாதிகள் அழியும் சாத்திய கூறுகள் உருவாகும் என்றே கருதுகிறேன்.

தமிழ்மணத்தில் தொடர்ந்து என் இடுகைகளைப் படித்தவர்களுக்கு நன்கு தெரியும். அதாவது நான் எந்த தனிமனிதரையும் தாக்கி எழுதியது இல்லை. மூட நம்பிக்கைகளினால் பலரும் பாதிக்கப்படுவதையும், அறிவுக்கு ஓவ்வாத ஒன்றை உயர்வாக எண்ணிப் பேசுவதையும் அதை உண்மை என்று கூறி மக்களை ஏமாற்றுவதையும் பன்னெடும் காலமாக 'மகான்கள்' எதிர்த்தே வந்திருக்கின்றனர். தமிழ் சித்தர்கள் 18 பேர்களும் பக்தியை வளர்க்க பாடுபட்டது போலவே மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கத்தி வீசியிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டால் என் எழுத்துக்கள் அதில் ஒரு விழுக்காடு கூட இருக்காது என்றே கூறிக்கொள்கிறேன். அதற்காக என்னை சித்தர்களுடன் ஒப்பிடுகிறேன் என்று தவறாகவும் பொருள் கொள்ள வேண்டாம். இந்து மதத்தில் சீர்திருத்தம் வேண்டும், மதம் மக்களுக்காக பயன்படவேண்டும் என்று நினைப்பவர்களும், இறைவன் அனைவருக்கும் பொது என்று நினைப்பவகள், குறிப்பாக தமிழக இந்துக்கள் என எவரும் என் கருத்துக்கள் அவதூறு என்று சொன்னது கிடையாது. புரியாதவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தூங்குபவர்களாக நடிப்பவர்களையும், செத்துப் போனவர்களையும் ஒருபோதும் எழுப்ப முடியாது. என் மதம் இழிவானது எனவே மாற்று மதத்தை நாடுங்கள் என்று தவறான கருத்தை நான் தெரிவித்தது இல்லை. என்னைப் பொருத்து மதமே தேவையற்றது. இறைவன் என்று ஒருவன் இருப்பதை நம்பும் போது அவற்றை மதத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் மூலமே புரிந்து கொள்ள முடியும் என்று எவரேனும் சொன்னால் அது நிராகரிக்கக்கூடிய கருத்து என்று உலகலவில் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். மதங்களைக் கடந்த சூஃபி ஞானிகள் நல்லதையும், ஒற்றுமையையுமே வளர்த்து இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.

இந்த சிந்தனையில் எனது இடுகைகளை இந்தவாரம் முழுதும் இருக்கும். அதே சமயத்தில் எல்லாமும் சமுகம் சார்ந்ததாக இருக்காது. சில சிறுகதைகள், சில கட்டுரைகள், சில விமர்சனங்கள், நகைச்சுவை(கள்) இருக்கும்.

பின்னூட்டமிட்டு வாழ்த்தப் போகும் மற்றும் கருத்துச் சொல்லப் போகிற உடன் (சக) பதிவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் முன்கூட்டியே நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த இடுகை ?
கடவுள் வாழ்த்து ! :))

எந்த கடவுள் ?
தாடி வைத்த தமிழ்க் கடவுள் பற்றியது, இந்திய நேரப்படி இன்று மாலை வரும்.

99 கருத்துகள்:

வெட்டிப்பயல் சொன்னது…

வாங்க வாங்க...
நட்சத்திர வாழ்த்துக்கள்

ILA (a) இளா சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

வாழ்த்துக்கள் GK!
நட்சத்திர வாரம் ஜொலி ஜொலி என்று ஜொலிக்கட்டும்! :-)

VSK சொன்னது…

எப்போ வந்தாலும், சுயத்தோடு வருவேன் என்பது போல, முதல் பதிவே... மன்னிக்க... நட்சத்திரப்பதிவே... அதிரடியாய் வந்திருக்கிறது!

உங்களுக்குக் கிடைத்த இந்தப் பெருமை என்னையும் பெருமை கொள்ளச் செய்கிறது.

என்னுடைய மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவருக்குக் கிடைத்த இந்த அந்தஸ்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

ILA (a) இளா சொன்னது…

//சாதியின் பயன்பாடு குறைந்து சாதிகள் அழியும் சாத்திய கூறுகள் உருவாகும் என்றே கருதுகிறேன்.//
கண்டிப்பாக.

அதைப்பத்தி யாரும் பேசாம இரூந்தாலே அழிஞ்சுடும், பேசாம இருக்க முடியுமா சொல்லுங்க?

//இதில் கும்மியைக் குறைத்துக் கொண்டு எழுதுவது எனக்கு கடினமாக இருக்கவில்லை///
இதுதான் உங்களுக்கு வரலையே, அப்புறம் என்னவாம்?

ILA (a) இளா சொன்னது…

//எந்த கடவுள் ?
தாடி வைத்த தமிழ்க் கடவுள் பற்றியது, //
சீக்கிரம் ஆரம்பிக்கட்டும் வாண வேடிக்கை

ILA (a) இளா சொன்னது…

//ஜொலி ஜொலி என்று ஜொலிக்கட்டும்!//
KRS, அவர் என்ன ____ கடையா வெச்சு இருக்காரு? கொலிக்குதே ஜொலி ஜொலிக்கிதேன்னு விளம்பரம்போட.

ஜெகதீசன் சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி!!

சிவபாலன் சொன்னது…

எங்கள் தங்கத் தலைவன் ஜிகே வை தமிழ்மண நட்சத்திரமாக தேர்ந்தெடுத்ததன் மூலம், தமிழ்மண நட்சத்திரத்திற்கு புதிய மரியாதை கிடைத்துள்ளது..

தலைவா, நீங்க கலக்குங்க..

ஒரு அருமையான வாரத்தை கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில்..

வெற்றி சொன்னது…

கோ.க,
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

Ayyanar Viswanath சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்

அடிச்சி ஆடுங்க :)

குசும்பன் சொன்னது…

வாங்க வாங்க...
நட்சத்திர வாழ்த்துக்கள்

வவ்வால் சொன்னது…

கோவி,

வாழ்த்துகள். எனக்கு ஒரு சந்தேகம் நீங்க வெறும் நட்சத்திரமா ...இல்லை வால் நட்சத்திரமா? :-))

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி!!!

பாரதி தம்பி சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே..

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள். தாடி வைத்த தமிழ்கடவுள் திருவள்ளுவர் தானே

கோவி.கண்ணன் சொன்னது…

//சின்ன அம்மிணி said...
வாழ்த்துக்கள். தாடி வைத்த தமிழ்கடவுள் திருவள்ளுவர் தானே
//

அம்மிணி,

இது தவறு !

ஐயன் திருவள்ளுவரை நான் குறிப்பிடவில்லை. மாலை வரை பொறுங்களேன்.

கப்பி | Kappi சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் GK!

கருப்பு சொன்னது…

அன்புக் கண்ணன்,

இந்த ஒருவாரமும் தெவிட்டாத செந்தமிழ் தெள்ளமுதை வாறி வழங்குங்கள். நுனிப்புல் எமக்கு வேண்டாம். அடிக்கரும்பே சாப்பிட்டுப் பழகியவர் நாங்கள்.

பகுத்தறிவு, மூடச் சிந்தனைகள், ஆத்திகம், நாத்திகம், சமூகம், சிந்தனை, நகௌச்சிவை என அனைத்தையும் தொட்டு வாருங்கள்.

கண்களைத் துடைத்துக் கொண்டு வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறோம்!!!

SurveySan சொன்னது…

கலக்குங்க கோ.க!

ஆனா, பதிவு ரொம்ப பெருசா எழுதாதீங்க. அழகா குட்டியா இருந்தா நல்லது :)

மாயா சொன்னது…

வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் சொன்னது…

vaazhthukkaL Kannan.

Greetings to the Star of the Week.

TBCD சொன்னது…

சுழட்டுங்கள் சாட்டையயை....நாலா பக்கமும்...
காத்திருக்கிறேன்(றோம்)...
நல்ல..கணேன்று எரியும்..பதிவுகளுக்காக..

Thamizhan சொன்னது…

வாழ்த்துக்கள்!
உண்மையான ஆக்கபூர்வமான சிந்தனைகளுடன் செயல் பட்டால் வெற்றி கட்டாயம்.தமிழர்கள் ஒற்றுமை என்பது கானல் நீராகவே இருந்தாலும் சாதி ஒழிய வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து வருவது மகிழ்ச்சி யளிக்கிறது.நாம் நம்மால் முடிந்ததைக் கட்டாயம் சாதி ஒழிப்பிற்காகச் செய்வோம் என்ற உறுதி பூணும் வகையில் தங்கள் பதிவுகள் ஒளிர்வது மிக ந்ன்றாக இருக்கிறது.இணையம் நல்ல தளம்,அதிலே இதயங்களைத் திருத்தும் உங்கள் முயற்சிகளுக்கு எங்கள் ஒத்துழைப்பு கட்டாயம் உண்டு.

துளசி கோபால் சொன்னது…

அட! நீங்களா இந்தவார நட்சத்திரம்? கூடுதல் ஜொலிப்புக்கு காரண்டிதானே?

ஜிகேதான் ஸ்டாருன்னதும் எங்க ஜிகே காலரைத் தூக்கிவிடாத குறையா ஒரு பார்வையையும்
வீசிக்கிட்டு, ச்சும்மா ஒரு கெத்தோட நடந்து போறார்:-))))

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

வடுவூர் குமார் சொன்னது…

இது எத்தனையாவது தடவை? நட்சத்திரமாக?
முதல் முறையா?
நம்ப முடியவில்லை.இருந்தாலும் வாழ்த்துக்கள்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள்...!

குழலி / Kuzhali சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள் கோவி

சின்னக்குட்டி சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி. கலக்கப் போவது கோவிக் கண்ணனா கலக்குங்க.

Unknown சொன்னது…

சம்பந்தி உங்களுக்கு நான் வாழ்த்து சொல்லித்தான் ஆகனுமாய்யா?
பரவால்ல வச்சுக்கோங்க இல்லைன்னா உங்களுக்கும் எனக்கும் எதோ சண்டைன்னு புரளி கிளம்பிடும்

"வாழ்த்துக்கள் "

மஞ்சூர் ராசா சொன்னது…

இந்த வார நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள் நண்பரே.

ஷைலஜா சொன்னது…

நட்சத்திர*கோவிகண்ணனுக்கு வாழ்த்துகள்!
ஷைலஜா

லக்கிலுக் சொன்னது…

இவ்வார நட்சத்திரத்துக்கு உதயசூரியனின் வாழ்த்துக்கள்!

இராம்/Raam சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் கோவி.... :)

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் ஜிகே.
படம் தெரிகிறது ஆனால் தெளிவாக இல்லையே.
உங்களின் ஒரு வாரம் நல்ல பதிவுகளாக இருக்கும் என்று துணிந்து நம்பலாம்.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

தாடி வைத்த தமிழ்க் கடவுள் பற்றி; அதாவது கடவுளே இல்லை என்றவர் பற்றியா? கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றவர் பற்றியா? அவரானால் எனக்கு மிகப்பிடிக்கும்; ஏனேனில் எனக்கு கடவுளையும் பிடிக்கும்; மாற்றுக் கருத்தையும் பிடிக்கும்.

வசந்த் சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி கண்ணன், தஙகள் பதிவுகளை தொடர்சியாக படித்து வருவதால் இந்த வாரம் மிகச் சிறப்பாக இருக்கும் என்பது எனக்கு உறுதி.

கலக்குங்க..

நன்றி
வசந்த்

Jazeela சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெட்டிப்பயல் said...
வாங்க வாங்க...
நட்சத்திர வாழ்த்துக்கள்
//

பாலாஜி,
முதல் தடம் உங்களது, நன்றி நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
நட்சத்திர வாழ்த்துக்கள்
//

இளா,

வாழ்த்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
வாழ்த்துக்கள் GK!
நட்சத்திர வாரம் ஜொலி ஜொலி என்று ஜொலிக்கட்டும்! :-)
//

KRS,

மிக்க நன்றி ! அப்போ ஜோலியெல்லாம் ஒருவாரத்துக்கு அம்பேல் தான் :)

கோவி.கண்ணன் சொன்னது…

// VSK said...
எப்போ வந்தாலும், சுயத்தோடு வருவேன் என்பது போல, முதல் பதிவே... மன்னிக்க... நட்சத்திரப்பதிவே... அதிரடியாய் வந்திருக்கிறது!

உங்களுக்குக் கிடைத்த இந்தப் பெருமை என்னையும் பெருமை கொள்ளச் செய்கிறது.

என்னுடைய மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவருக்குக் கிடைத்த இந்த அந்தஸ்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
//

விஎஸ்கே ஐயா,

இன்ப துன்பம் நம்மோடு இணைந்ததிருப்பது என்றுமே இனிமைதான். எது 'கிடைத்தாலும்' இருவருக்கும் தான் அது !
:))

மனம் திறந்த பாராட்டுக்கு மகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சி. நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
கண்டிப்பாக.

அதைப்பத்தி யாரும் பேசாம இரூந்தாலே அழிஞ்சுடும், பேசாம இருக்க முடியுமா சொல்லுங்க?
//

பேசாமல் இருந்தால் அழிஞ்சுடும், ஆனால் செயல்வடிவத்தை என்ன செய்வது ?

//
இதுதான் உங்களுக்கு வரலையே, அப்புறம் என்னவாம்? //

அப்படியெல்லாம் தப்புக் கணக்கு சொல்லாதிங்க 50 50 நானும் கும்மி அடிச்சிருக்கேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...

சீக்கிரம் ஆரம்பிக்கட்டும் வாண வேடிக்கை //

இரவில் தான் வாணவேடிக்கை. ஆரம்பிச்சாச்சு !

கோவி.கண்ணன் சொன்னது…

// ILA(a)இளா said...

KRS, அவர் என்ன ____ கடையா வெச்சு இருக்காரு? கொலிக்குதே ஜொலி ஜொலிக்கிதேன்னு விளம்பரம்போட.
//

பின்னூட்ட கடை திறந்து இருக்கு, ஆனால் அக்வண்ட் வச்சிருக்கும் வாடிக்கையாளர்களுக்குத்தான் கிடைக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
வாழ்த்துக்கள் கோவி!!
//

பாராட்டுக்கு நன்றி ஜெகதீசன் !

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் said...
எங்கள் தங்கத் தலைவன் ஜிகே வை தமிழ்மண நட்சத்திரமாக தேர்ந்தெடுத்ததன் மூலம், தமிழ்மண நட்சத்திரத்திற்கு புதிய மரியாதை கிடைத்துள்ளது..

தலைவா, நீங்க கலக்குங்க..

ஒரு அருமையான வாரத்தை கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில்..
//

சிபா,

மேலே சொன்னவை சில...அன்பினால் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.

கடைசியாக இருக்கும் உங்கள் எதிர்பார்புக்கள் முடிந்த வரையில் நிறைவேறும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெற்றி said...
கோ.க,
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.
//

வெற்றி அவர்களே,

பாராட்டுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// அய்யனார் said...
நட்சத்திர வாழ்த்துக்கள்

அடிச்சி ஆடுங்க :)
//

அய்யனார் அவர்களே,

நீங்க பின்னூட்ட பந்தை வீசுங்க, அடிச்சிடுவோம். வாழ்த்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//delphine said...
நட்சத்திர வாழ்த்துக்கள் ...GK...:)))))
:)
//

டெல்பின் அம்மா, வாழ்த்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
வாங்க வாங்க...
நட்சத்திர வாழ்த்துக்கள்
//

குசும்பன்,
வாழ்த்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் said...
கோவி,

வாழ்த்துகள். எனக்கு ஒரு சந்தேகம் நீங்க வெறும் நட்சத்திரமா ...இல்லை வால் நட்சத்திரமா? :-))
//

வவ்வால் அவர்களே,

உங்களுக்கு பெயரில் 'வால்' இருப்பதால், அப்படி சொல்கிறீர்கள் சரியா ?
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//அருட்பெருங்கோ said...
வாழ்த்துக்கள் கோவி!!!
//

பாராட்டுக்கு நன்றி கவிஞரே !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆழியூரான். said...
நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே..
//

மிக்க நன்றி நண்பரே !

கோவி.கண்ணன் சொன்னது…

//கப்பி பய said...
நட்சத்திர வாழ்த்துக்கள் GK!
//

கப்பி சார்,

வாழ்த்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//விடாதுகருப்பு said...
அன்புக் கண்ணன்,

இந்த ஒருவாரமும் தெவிட்டாத செந்தமிழ் தெள்ளமுதை வாறி வழங்குங்கள். நுனிப்புல் எமக்கு வேண்டாம். அடிக்கரும்பே சாப்பிட்டுப் பழகியவர் நாங்கள்.

பகுத்தறிவு, மூடச் சிந்தனைகள், ஆத்திகம், நாத்திகம், சமூகம், சிந்தனை, நகௌச்சிவை என அனைத்தையும் தொட்டு வாருங்கள்.

கண்களைத் துடைத்துக் கொண்டு வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறோம்!!!
//

கருப்பு சார்,

உங்கள் உணர்வு பூர்வமான எழுத்தும், ஐயா பெரியார் புகழைப் பரப்பும் நற்செயலும் கூட பாராட்டக் கூடியது. தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயல்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
கலக்குங்க கோ.க!

ஆனா, பதிவு ரொம்ப பெருசா எழுதாதீங்க. அழகா குட்டியா இருந்தா நல்லது :)
//

சர்வேசன்,

நான் எப்போதும் மூன்று நிமிட பதிவுகள் தான் எழுதுவேன். ஒரு வாரத்துக்கு ஐந்து நிமிட பதிவுகள், சுறுக்கினால் டிரய்லர் பார்த்தது போல் இருக்கும்.

கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//மாயா said...
வாழ்த்துக்கள்
//


மாயா அவர்களே,

வாழ்த்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வல்லிசிம்ஹன் said...
vaazhthukkaL Kannan.

Greetings to the Star of the Week.
//

வல்லி அம்மா,

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
சுழட்டுங்கள் சாட்டையயை....நாலா பக்கமும்...
காத்திருக்கிறேன்(றோம்)...
நல்ல..கணேன்று எரியும்..பதிவுகளுக்காக..
//

TBCD,

சாட்டையை சுழற்றனுமா ? நான் சாத்வீகன் எனக்கு அதெல்லாம் வராது.
:))

Kasi Arumugam சொன்னது…

அட, நீங்கதான் நிச கோவி.கண்ணனா? உங்க பேரை வெச்சு சிபி சென்னையிலே நிறையக் கூத்தடிச்சாருங்க. பாத்து, உங்க பேர்ல டீக்கடையில் அக்கவுண்ட் எதாவது தொறந்துரப்போறாங்க! :-)
வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Kasi Arumugam - காசி said...
அட, நீங்கதான் நிச கோவி.கண்ணனா? உங்க பேரை வெச்சு சிபி சென்னையிலே நிறையக் கூத்தடிச்சாருங்க. பாத்து, உங்க பேர்ல டீக்கடையில் அக்கவுண்ட் எதாவது தொறந்துரப்போறாங்க! :-)
வாழ்த்துக்கள்.
//

காசி அவர்களே,

உங்கள் வரவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுக்கு நன்றி.

பலருக்கு போலி பதிவுகள் மட்டும் தான் இருக்கு, என் பெயரில் போலி ஆளுங்களே இருக்கிறார்கள்.

:))

முத்துகுமரன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள் கோவி.

பதிவு இன்னும் படிக்கவில்லை

அமீரகம் வந்தாச்சு :-)

காட்டாறு சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் கோவி கண்ணன்!

G.Ragavan சொன்னது…

ஆகா! நீங்கதான் இந்த வார மிண்மிணியா...சூப்பர். என்னுடைய வாழ்த்துகள்.

சாதீயக் கொடுமை உண்மையிலேயே கொடுமையானது. உலகத்தில் ஒவ்வொரு மூலையிலும் ஏதாவது ஒரு விதத்தில் அடுத்தவனைத் தாழ்ந்தவனாக நினைக்கும் வழக்கும் உள்ளது. அதைச் சொன்னால் "உங்களைப் போல நாங்கள் அல்ல" என்பார்கள். விட்டுத்தள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுதும் திருந்தினால் நல்லது. ஆனால் இயற்கை விதிப்படி அதற்கு வாய்ப்பு குறைவு என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் வாலு போயி கத்தி வந்தது டும்டும்டும். பார்க்கலாம். என்ன நடக்கிறது என்று.

தருமி சொன்னது…

முதல் பதிவே அதிருதில்ல ...

வாழ்த்துக்கள்

Thekkikattan|தெகா சொன்னது…

கலக்குங்க கோவியாரே!

PRINCENRSAMA சொன்னது…

நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்!

கண்மணி/kanmani சொன்னது…

வாழ்த்துக்கள் நட்சத்திர வாரத்திற்கு.

Sud Gopal சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள்!!!

Agathiyan John Benedict சொன்னது…

மறைவே இல்லாத முழுநேர நட்சத்திரமாய் வலையுலக வானில் நின்று ஜொலிக்க வாழ்த்துகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Thamizhan said...
வாழ்த்துக்கள்!
உண்மையான ஆக்கபூர்வமான சிந்தனைகளுடன் செயல் பட்டால் வெற்றி கட்டாயம்.தமிழர்கள் ஒற்றுமை என்பது கானல் நீராகவே இருந்தாலும் சாதி ஒழிய வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து வருவது மகிழ்ச்சி யளிக்கிறது.நாம் நம்மால் முடிந்ததைக் கட்டாயம் சாதி ஒழிப்பிற்காகச் செய்வோம் என்ற உறுதி பூணும் வகையில் தங்கள் பதிவுகள் ஒளிர்வது மிக ந்ன்றாக இருக்கிறது.இணையம் நல்ல தளம்,அதிலே இதயங்களைத் திருத்தும் உங்கள் முயற்சிகளுக்கு எங்கள் ஒத்துழைப்பு கட்டாயம் உண்டு.
//

தமிழன்,

மனம் திறந்த பாராட்டு நெகிழ்ச்சியளிக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
அட! நீங்களா இந்தவார நட்சத்திரம்? கூடுதல் ஜொலிப்புக்கு காரண்டிதானே?

ஜிகேதான் ஸ்டாருன்னதும் எங்க ஜிகே காலரைத் தூக்கிவிடாத குறையா ஒரு பார்வையையும்
வீசிக்கிட்டு, ச்சும்மா ஒரு கெத்தோட நடந்து போறார்:-))))

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.
//

வாங்கம்மா,

ஜிகேவும் என் நிறம்தேனே. அதுவும் அதோட மகிழ்ச்சிக்கு காரணம்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
இது எத்தனையாவது தடவை? நட்சத்திரமாக?
முதல் முறையா?
நம்ப முடியவில்லை.இருந்தாலும் வாழ்த்துக்கள்.
//

நம்புங்க சார்,

நட்சத்திர பதிவர் பட்டியல் தமிழ்மணத்தில் இருக்கே. வேறு பெயரில் நட்சத்திரமாக ஆகலை. வேறு பெயரும் இல்லை, பதிவும் இல்லை
:)

கோவி.கண்ணன் சொன்னது…

/ பாரி.அரசு said...
நட்சத்திர வாழ்த்துகள்...!

1:36 PM, August 20, 2007 //

பாரி,

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// குழலி / Kuzhali said...
நட்சத்திர வாழ்த்துகள் கோவி

1:37 PM, August 20, 2007 //

நன்றி, நண்பரே !

கோவி.கண்ணன் சொன்னது…

//
சின்னக்குட்டி said...
நட்சத்திர வாழ்த்துக்கள் //

சின்னக்குட்டி அவர்களே நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தில் குமரன் said...
வாழ்த்துக்கள் கோவி. கலக்கப் போவது கோவிக் கண்ணனா கலக்குங்க.

2:03 PM, August 20, 2007
//
செந்தில் குமரன்,
:))

சரி, நீங்கள் எப்போது விட்டதை தொட(ர)ப் போகிறீர்கள் ?

கோவி.கண்ணன் சொன்னது…

// மகேந்திரன்.பெ said...
சம்பந்தி உங்களுக்கு நான் வாழ்த்து சொல்லித்தான் ஆகனுமாய்யா?
பரவால்ல வச்சுக்கோங்க இல்லைன்னா உங்களுக்கும் எனக்கும் எதோ சண்டைன்னு புரளி கிளம்பிடும்

"வாழ்த்துக்கள் "

2:06 PM, August 20, 2007
//

யோவ்....
ஒன்னைய நம்பித்தான் களத்தில் இறங்கி இருக்கேன். கைவிட்டுடாதே.

கோவி.கண்ணன் சொன்னது…

//மஞ்சூர் ராசா said...
இந்த வார நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள் நண்பரே. //

நன்றி மீஞ்சூராரே !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஷைலஜா said...
நட்சத்திர*கோவிகண்ணனுக்கு வாழ்த்துகள்!
ஷைலஜா
//

ஷைலஜா அவர்களே நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// லக்கிலுக் said...
இவ்வார நட்சத்திரத்துக்கு உதயசூரியனின் வாழ்த்துக்கள்!
//

உதய சூரியனுக்கும், அதிர்ஷ்ட பார்வையாருக்கும் நன்றிகள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//
இராம் said...
நட்சத்திர வாழ்த்துக்கள் கோவி.... :)

2:53 PM, August 20, 2007
//

நன்றி இராம்.

கோவி.கண்ணன் சொன்னது…

// சுல்தான் said...
வாழ்த்துக்கள் ஜிகே.
படம் தெரிகிறது ஆனால் தெளிவாக இல்லையே.
உங்களின் ஒரு வாரம் நல்ல பதிவுகளாக இருக்கும் என்று துணிந்து நம்பலாம்.

4:31 PM, August 20, 2007
//
சுல்தான் ஐயா,
உங்கள் வாழ்த்துக்கு நன்றி. நான்கு நாள் இடுகைகள் எப்படி ?
:))

கோவி.கண்ணன் சொன்னது…

// பொன்ஸ்~~Poorna said...
வாழ்த்துக்கள் கோவி :)
//

நன்றி யானையார் அவர்களே !
6:05 PM, August 20, 2007

கோவி.கண்ணன் சொன்னது…

//
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
தாடி வைத்த தமிழ்க் கடவுள் பற்றி; அதாவது கடவுளே இல்லை என்றவர் பற்றியா? கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றவர் பற்றியா? அவரானால் எனக்கு மிகப்பிடிக்கும்; ஏனேனில் எனக்கு கடவுளையும் பிடிக்கும்; மாற்றுக் கருத்தையும் பிடிக்கும்.
//

யோகன்,
தாடிவைத்த கடவுளை காட்டியாகிவிட்டது. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//வசந்த் said...
வாழ்த்துக்கள் கோவி கண்ணன், தஙகள் பதிவுகளை தொடர்சியாக படித்து வருவதால் இந்த வாரம் மிகச் சிறப்பாக இருக்கும் என்பது எனக்கு உறுதி.

கலக்குங்க..

நன்றி//


வசந்த் மிக்க நன்றி, கேட்கும் போது நெகிழ்சியாக இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜெஸிலா said...
நட்சத்திர வாழ்த்துகள்.
//

ஜெஸிலா,
உங்கள் எழுத்துக்களும் என்னை கவர்ந்தவை. பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// முத்துகுமரன் said...
நட்சத்திர வாழ்த்துகள் கோவி.

பதிவு இன்னும் படிக்கவில்லை

அமீரகம் வந்தாச்சு :-) //

முத்துகுமரன்,
சீக்கிரமே படித்து கருத்தைச் சொல்லுங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//காட்டாறு said...
நட்சத்திர வாழ்த்துக்கள் கோவி கண்ணன்!

1:35 AM, August 21, 2007 //

நன்றி காட்டாறு அவர்களே !

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
ஆகா! நீங்கதான் இந்த வார மிண்மிணியா...சூப்பர். என்னுடைய வாழ்த்துகள்.

சாதீயக் கொடுமை உண்மையிலேயே கொடுமையானது. உலகத்தில் ஒவ்வொரு மூலையிலும் ஏதாவது ஒரு விதத்தில் அடுத்தவனைத் தாழ்ந்தவனாக நினைக்கும் வழக்கும் உள்ளது. அதைச் சொன்னால் "உங்களைப் போல நாங்கள் அல்ல" என்பார்கள். விட்டுத்தள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுதும் திருந்தினால் நல்லது. ஆனால் இயற்கை விதிப்படி அதற்கு வாய்ப்பு குறைவு என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் வாலு போயி கத்தி வந்தது டும்டும்டும். பார்க்கலாம். என்ன நடக்கிறது என்று.
//

ஜிரா,

பாராட்டுக்கு மிக்க நன்றி.

நீங்கள் சொல்வது சரிதான். இருத்தல், வெளிப்படுத்திக் கொள்ளுதல் என்பதில் தான் அனைத்து உயர்களும் தம்மை அமைத்துக் கொள்கிறேன். ஏற்ற /தாழ்வு, அதன்பிறகு சமச்சீர் என எப்போதும் நிகழ்வுகள் மாறி மாறி நிகழும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
முதல் பதிவே அதிருதில்ல ...

வாழ்த்துக்கள்
//

தருமி ஐயா,
உங்கள் நட்சத்திர வாரத்தில் நீங்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்ததைவிடவா ?
:)

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan|தெகா said...
கலக்குங்க கோவியாரே!
//
தெகா, நன்றி !
:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//
PRINCENRSAMA said...
நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்! //

வாருங்கள் பெரியார் தொண்டரே, வாழ்த்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// கண்மணி said...
வாழ்த்துக்கள் நட்சத்திர வாரத்திற்கு.

9:40 PM, August 21, 2007
//
கண்மணி அவர்களே,

வாழ்த்துக்கு நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// சுதர்சன்.கோபால் said...
நட்சத்திர வாழ்த்துகள்!!!

3:38 AM, August 22, 2007
//
சுதர்சன்.கோபால் அவர்களே,
நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//John P. Benedict said...
மறைவே இல்லாத முழுநேர நட்சத்திரமாய் வலையுலக வானில் நின்று ஜொலிக்க வாழ்த்துகிறேன். //

ஜான் பெனிடிக்ட் ஐயா,

ஒருவாரம் தான் கால அவகாசம் இங்கு ! :)

வாழ்த்துக்கு நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்