பின்பற்றுபவர்கள்

21 ஜூலை, 2007

வவாச போட்டிக்கு மொ மொ மொக்கை பதிவு

மொக்கை பதிவு போடனும் ஆரம்பித்தால் எதாவது சிக்கலில் கொண்டு விடுது... மனசை தேத்திக்கிட்டு... மொக்கை போட முடியாது...என்னால் முடியாது... மணிரத்தினம் வசனம் நினைவுக்கு வந்து துவண்ட போது செந்தழல் ரவி ஜிடாக்கில் வந்து ஆறுதல் கூறினார்..
'கோவியாரே நாங்களெல்லாம் இருக்கோம், தெகிரியமாக களத்தில இரங்குங்கன்னு' தேற்றினார்.

விதிவலியது...செந்தழலின் வழியதன் மூலம் வந்து நுழையுது

மொக்கை என்பதை ஆராய்ந்து பார்த்தேன். மொக்கை என்றால் என்ன விரல் இல்லாத வெறும் கையா ?
எங்க ஊரில் மரத்தில் இலை கொட்டிவிட்டால் மரம் மொக்கையாக இருக்குன்னு சொல்லுவாங்க, அப்பறம் முடி 'போடா' என்று உதிர்ந்து கொண்ட மன்னர்களை 'மொக்கையன்' போறான் பாரு என்பார்கள். கோளக ஆடி, குழியாடின்னு வாத்தியார் பாட்டுக்கு பாடம் நடத்திக்கிட்டு இருப்பார்... டேய் சாரோட தலை கோளக ஆடிதேனே...ஒளி தெரியுதடா' படிக்கிற காலத்தில் வாத்தியாரின் மொக்கையை குறித்து சக மாணவர்கள் அடித்த கமெண்ட்

நாயர் டீக்கடையில் பிட்டு விளம்பரத்தைக் கூட விட்டுவிடாமல் படிக்கும் பெருசுகள் போடும் மொக்கை உலக மொக்கை. எங்க அண்ணன் பையன் துபாயில் இருக்கான் ( மகேந்திரன் இல்லை) அப்பறம் எங்க மாமம் பொண்ணு பாரிசில் இருக்கா...' சுயபுராண மொக்கைகள்

'இவன் கெட்ட பையன் சார்'... சொல்லிக்கிட்டு அறு அறு என்று அறுக்கும் விசய ஞானிகளைக் கண்டால் அஜீரணம் கூட ஆவது உண்டு. சில மொக்கையர் எதிராளி என்ன சொல்கிறான் என்று காது கொடுத்து கேட்காமல்... தான் ஒரு அறிவு ஜீவி என்றே நிரூபிக்க முயல்வர்கள். இரண்டு மொக்கைகள் ஒண்ணா சேர்ந்துட்டா போதும்...'இந்த நாயை தெரியாதா ?... ஒன்னுக்கு அடிக்கிற இடம் கூட விடாமல் துறத்தி பெருமையை பேசுறான் பாரேன்' இன்று இருவருமே முனுகிக் கொண்டே மொக்கையில் கண்ணாகவே இருப்பார்கள்.

அப்பறம் 'அந்த காலத்தில தம்பி...' ஆரம்பிச்ச உடனே ஒடினவன் இருக்கானானு பார்காமலே....ஒரு மணி நேரம் சென்று...'இப்ப அப்படியா ...காலம் கெட்டுப்போச்சு...என்னத்த சொல்ல...' பெருசுகளின் ரோதனையை விடவா ஒரு மொக்கை இருக்கிறது ?

பசங்க கிராஸ்பண்ணும் போது பொண்ணுங்க போடுகிற ஆங்கில மொக்கை அல்வா மொக்கை. நாம பதிவர்கள் கூட பின்னூட்ட மொக்கை போடுறாங்க... அட இப்போது போட்ட பதிவுக்கு அதுக்குள்ள பின்னூட்டம் வந்திருக்கா ? நண்பர் லக்கி பதிவில் எட்டிப்பார்த்தால் எல்லாம் 'தமிழ் ஹாப் ப்ளாக்' விளம்பர பின்னூட்டம்...ஆராய்ந்து பார்த்தால் அவரே போட்டுக் கொண்டாராம். இந்த டெக்னிக் எப்படியோ பலருக்கும் தெரிந்து நடைமுறையில் இருக்கிறது.... பின்னூட்டத்தை ஆவலாக படிக்க வர்றவங்களை ஏமாத்தாதிங்கப்பா.

என்னமோ எழுதினேன்...மொக்கையா ? சக்கையா ? முத்திரை அமுக கையில் !

:))

6 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

ரொம்ப விஷ்யத்தோட எழுதிட்டீங்க!

இந்தப் பதிவு மொக்கை வகைல சேராது!

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
ரொம்ப விஷ்யத்தோட எழுதிட்டீங்க!

இந்தப் பதிவு மொக்கை வகைல சேராது!
//

என்ன கொடுமை செந்தழலாரே !

:(

ILA (a) இளா சொன்னது…

இந்தப் பதிவுல விஷயம் நெறய இருக்கு, இது அறிவியல் நுட்பத்துல சேர்க்கனும்.சரி எப்போ மொக்கை போஸ்ட் போடப் போறிங்க?

ILA (a) இளா சொன்னது…

பேச்சில்லாத தமிழ்மணம்
செந்தழல் ரவி

லக்கிலுக்கின் டவுசர் மேலும் கிழியாமல் இருக்க
மகேந்திரன்.பெ

லக்கியின் கிழிந்த டவுஸரை ஒட்ட !!!
செந்தழல் ரவி

சுஜாதா குப்பைகள் ஜல்லி இன்னபிற
மோகன்தாஸ்

டவுசர் கிழியுது!! தாவு தீருது!!!
லக்கிலுக்

சுஜாதா செஞ்சது தப்பா?
ILA(a)இளா

ப.பா.ச விலிருந்து கண்மணி வெளி நடப்பு : கண்மணி

மேலே சொன்னா எல்லாம் ஒரு உதாரணங்கள். மொக்கைன்னா அப்படி இருக்கனும்.

நாமக்கல் சிபி சொன்னது…

//இந்தப் பதிவு மொக்கை வகைல சேராது! //


கோவி: நான் இதுக்கு முன்னாடி மொக்கைப் பதிவு போட்டு பார்த்திருக்கியா நீயி?

பதில் : இல்லை!


கோவி: அப்புறம் ஏன்? என்ன கொடுமை சார் இது!

(Courtesy : Chennai - 600 028)

குசும்பன் சொன்னது…

அருமையான பல தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள்.... சோ இது மொக்கை கிடையாது...

ஹா ஹா ஹா

இளா நீங்க குடுத்து இருக்கும் லிஸ்டில்
தமிழ் மணத்தில் இருந்து விடை பெறுகிறேன் இடம் பெறவில்லை அதை இங்கு வண்மையாக கண்டிக்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்