பின்பற்றுபவர்கள்

18 ஜூலை, 2007

அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

சிங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை முடிந்து காத்திருக்கும் இடத்தில் இருவர் பேசிக் கொண்டது காதில் விழுந்தது. பொதுவாக மற்றவர்கள் பேசுவதில் நாம் கவனம் கொள்வதற்கு அந்த விடயம் கொஞ்சமேனும் நாம் அறிந்து வைத்திருப்பவராகவோ, அதுபற்றிய ஆர்வமுடையவராகவோ இருக்கவேண்டும், அப்படி இருந்தால் உன்னிப்பாக என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்கவே செய்வோம்.

பேசிக் கொண்டிருந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாதாவர்கள் என்பதும் அவர் பரஸ்பரம் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு இருப்பதால் நேர போக்கிற்கு (டைம் பாஸ்) பேசிகிறார்கள் என்பதும் அந்த இடத்திற்கு முன் இருக்கையில் முன்பே அமர்ந்துவிட்டதால் எனக்கு புரிந்தது. முதலாமவர்,

"சார்... எந்த ஊர் ?"

"சென்னையில் தான் ******* ஒர்க் பண்ணுகிறேன்...ஒரு பிசினஸ் விசயமாக வந்தேன்...நீங்க ?"

"நானும் சென்னைதான்..."

"ஓகோ"

பெயர்களை சொல்லிக் கொண்டார்கள்

முதலாமவர்,

"சார்... எனக்கு நோய்டாவில் நல்ல பொசினில் வேலை கிடைச்சு ...டெல்லி பக்கம் சென்றிருக்க வேண்டியது"

"ஏன் என்ன ஆச்சு ?"

"இண்டர்வூயூ எல்லாம் நல்லாதான் பண்ணினேன். அவன் கேட்ட அனைத்து தகுதியும் என்னிடம் இருந்தது"

"!!!???"

"கடைசியாக ஒண்ணே ஒண்ணு கேட்டுவிட்டு ... வேலை இல்லை என்று சொல்லிவிட்டாங்க "

"என்ன சார் கேட்டாங்க ?"

"இந்தி எழுதப்படிக்க தெரியுமான்னு கேட்டாங்க"

"ஏன் உங்களுக்கு தெரியாதா ?"

"போங்க சார், நம்ம அரசியல் வாதிங்க நம்மை எங்கே சார் ஹிந்தி படிக்க விட்டாங்க...?"

"ஆமாம்..."

"இவங்க போராட்டம் நடத்தி இந்தியை துறத்தியதால் நாம பாதிக்கப்படுகிறோம்..."

"புரியுதுங்க சரிதான்"

"கேடுகெட்ட அரசியல் வாதிங்க சார் "

இதுவரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர்... உசுப்பேற்றலால் அவரும் சும்மா இருந்தால் அரசியல், நாட்டு நடப்பு ஒண்ணும் தெரியாதவர் என்று நினைத்துவிடுவார் என நினைத்தாரோ, என்னவோ... பிறகு அரசியல் வாதிக்கு எதிராகவும், இந்திக்கு ஆதரவாகவும் கருத்துக்களைச் சொல்ல ஆரம்பித்தார்

"ஆமாங்க...எல்லாம் பச்சை அரசியல்தனம், நாம் தான் பாதிக்கப்டுகிறோம்"

"அண்ணாதுரை என்ற புண்ணியவான் ஆரம்பிச்சு வச்ச இந்தி எதிர்ப்பு போராட்டம்...இப்பவும் அதை பிடித்து தொங்குறாங்க"

"நாட்டை கொடுத்துட்டானுங்க சார்...காங்கிரஸ் ஆட்சி பரவாயில்லை"

இதுக்கு மேல் பேச்சு செல்லவதற்குள் அனைவருக்கும் அழைப்பு வரவே விமானத்துக்குள் சென்றோம்

********************************************
அது உண்மை சம்பவம் தான்...

இப்படித்தான் திட்டமிட்டே பொது இடத்தில் முன்பின் தெரியாவதர்களிடம் கருத்துக்கள் பரப்பப்பட்டும், திரிக்கப்பட்டும் சொல்லப்படுகிறது. ஒன்றும் தெரியாதவராக ஒருவர் இருந்துவிட்டால் போதும் அவரையும் சேர்த்தே தலையாட்ட வைத்து எதிர்ப்புக்கு ஆள் சேர்த்துவிடுவார்கள்.

இந்தி தெரியாத தமிழ்நாடு இந்தியாவில் முன்னேற்றத்தில் பின்தங்கி இருக்கிறது? இந்தி தெரிந்த பீகார் முன்னேறி இருக்கிறது ?

"இந்தி திணிப்பு மறுத்தல்" என்பதை "இந்தி எதிர்ப்பு" என்று மட்டுமே திரித்து இன்னும் எத்தனைக் காலத்துக்கு அதையே சொல்லி ஏமாற்றுவார்களோ ?

விருப்பப்பட்டவங்க போய் படிங்க யார் வேண்டாம் என்றது. உமக்கு பிடிகிறதே என்பதற்காக நானும் மற்றும் என்னைப் போன்ற பலரும் ஏன் அந்த வேண்டாத ஒன்றை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கவேண்டும் ? மொழி கற்றுக் கொள்வது என்பது வேறு... இந்த மொழியை கற்றுக் கொள் என்று திணிப்பது வேறு. இந்த அடிப்படை தெரியாமல் "இந்தி வேண்டும் !" என்று பிதற்றியும் அதற்கு ஆதரவாக திரிப்பவர்களிடம் எச்சரிக்கை தேவை.

35 கருத்துகள்:

Subbiah Veerappan சொன்னது…

இந்தியாவில் மற்ற மாநிலங்களைப்போல
தமிழகக் கல்விக்கூடங்களில் இந்தியை அடித்து விரட்டிய பாவம் அரசியல்வாதிகளையே சேரும்.மறுப்பதற்கில்லை

பள்ளிப்பருவத்திலேயே கற்றுக்கொள்வது என்பது வரம்!

ஜோ/Joe சொன்னது…

100 சதவீதம் வழிமொழிகிறேன்.

ரவி சொன்னது…

நான் கூட வலைப்பதிய ஆரம்பிக்கும் காலத்தில் இந்தி திணிப்பு மற்றும் இந்தி எதிர்ப்பு இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் தெரியாமல் உளறினேன்...

நிறைய வாசிக்கவும் தேடிப்பிடிக்கவும் ஆரம்பித்த பிறகு தான் உண்மையான அர்த்தம் எனக்கும் புரிந்தது...

இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்ற ஒரு மீட்டிங்கில் கொரிய நன்பரிடம் சொன்ன இந்திக்காரனை பிரிச்சு மேய்ச்சுட்டேன்...

டாய்ய்ய்ய்ய் என்று வீடு கட்டி...அம்பேத்கார் எழுதுன காண்ஸ்ட்டியுஷனல் லா தெரியுமாடா உனக்கு...அதுல 96 ஆவது செக்ஷன்ல என்ன சொல்லியிருக்கு தெரியுமாடா என்று கிழித்து எறிந்துவிட்டேன்...

பிறகு சுற்றியுருப்பவர்களுடன் அவனும் சேர்ந்து எதுக்கு ரவி இவ்ளோ டென்ஷன், சரி ஒத்துக்கறேன் விடு என்று சொல்லும் அளவுக்கு ஆனது...

எனக்கு இந்த தகவல்கள் எல்லாம் கிடைத்த இடம் திராவிட தமிழர்கள் வலைத்தளம்...இந்த சமயத்தில் அவங்களுக்கு நன்றி...!!!!

ILA (a) இளா சொன்னது…

http://vetri-vel.blogspot.com/2006/12/articles-on-1965-hindi-imposition.html
and Also i have written the same kind of post but with different thought and experience.

சிவபாலன் சொன்னது…

சரிதான்!

அவரவர் தேவைக்கு ஏற்ப படித்துக்கொள்ளவேண்டியதுதான், அதற்காக எல்லோரும் படிக்க வேண்டும் என்பது சரியல்ல.

ILA (a) இளா சொன்னது…

my exp

Unknown சொன்னது…

///விருப்பப்பட்டவங்க போய் படிங்க யார் வேண்டாம் என்றது. உமக்கு பிடிகிறதே என்பதற்காக நானும் மற்றும் என்னைப் போன்ற பலரும் ஏன் அந்த வேண்டாத ஒன்றை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கவேண்டும். மொழி கற்றுக் கொள்வது என்பது வேறு... இந்த மொழியை கற்றுக் கொள் என்று திணிப்பது வேறு. இந்த அடிப்படை தெரியாமல் "இந்தி வேண்டும் !" என்று பிதற்றியும் அதற்கு ஆதரவாக திரிப்பவர்களிடம் எச்சரிக்கை தேவை. //

எயியே மே போலா உதர் ப்ளாகர் மீட்டிங்க் பே , லேகின் ஓலொக் போலா "கோன் ச்சோடா ஹிந்தி பட்னேக்கேலியே? நையே ?. கிதர் ஹிந்தி ஸ்கூல்மே ச்சோடிதியா? குச் நா குச் ஹிந்தி ஸ்கூல்மேதோ , கிஸ்கி சையேதோ சீக்சக்தே ஐசா நையே பிர் கெய்சா சிக்கேகா ஹிந்தி?

கதிர் சொன்னது…

சரியா சொன்னிங்க கோவி.கண்ணன்.

எனக்கு இந்தி தெரிலன்னு எந்த இந்திக்காரனாவது கேலி பண்ணான்னா அவனை உண்டு இல்லேன்னு பண்ணிடுவேன். என்னவோ உலகமே இந்தி மட்டும்தான் பேசுற மாதிரி.

எனக்கு அதை பேச இஷ்டம் இல்லன்னு சொன்னால், இந்த மதராசிகளே இப்படித்தான்னு சொல்வாங்க.

என்னோட கரூத்து என்னன்னா இந்தியும் தேவைதான் ஆனால் அதை விருப்பப்பட்டு நாமே தேர்ந்தெடுக்கணும். திணிக்க கூடாது.

பக்கத்துல இருக்கவங்க ஆழமா கவனிக்கறிங்க போல!

ILA (a) இளா சொன்னது…

express: க்யா ஆலே பாய்? டீக் ஹே?
ila: க்யா ஹாலே பாய்
ஆலே இல்லீங்கன்னா


express: டீக்க்கே
ம்


ila: டீ ஹை?
டீக் ஹை?
க்யா சல்ரஹா ஹைய்?


express: டீக் "கை"


ila: காபி கை


express: அச்சா சல்ரே
:)


ila: அச்சா சல்ரஹாஹே க்யா?
ஃபிர் கியூன் எசே ?


Sent at 12:57 AM on Wednesday
express: கெய்சா
?


ila: அப்புறம் ஏன் இப்படின்னு கேட்டேன் அவ்ளோதான்


Sent at 12:58 AM on Wednesday
express: அதான் எப்பறம் எப்படி?
நல்லாத்தான இருக்கு


ila: சரி சை
சரி விடுங்க
சண்டை நடக்குமான்னு பார்த்துட்டு இருக்கேன்
http://osaichella.blogspot.com/2007/07/blog-post_5153.html
வெயிட்டிங்


Sent at 12:59 AM on Wednesday
express: ஏக் பின்னூட்டம் சோடுதியா
ஜிக்கே ப்ளாக்பே
ப்ளாக்சே


ila: கஹான் சே
ஜி பிலாக்பே?


Sent at 1:00 AM on Wednesday
express: ம்


ila: க்யா ஹை உஸ்மே?


express: லேகின் அபிதக் பப்ளிஷ் னை ஹோகா
ஹிந்தி சிக்னேகா
குச் லிக்கா உஸ்மே


ila: ஹா மேன் பி தோ கமெண்ட் டால்தியா. \


express: கோயி தேக்கா ஜிகே?
ila: பத்தா நஹி க்யா ஹுவா


Sent at 1:02 AM on Wednesday
express: ஜிகே சோஜா க்யா?


ila: பத்தா நஹி
அபி சேட் மே பி நஹி ஹை


express: ஹே சேட்மே


ila: பஹார் சலாகியா


express: தோடி பிஸி நை ஆஜ்


ila: சேட் மே ஐடியல் ஸ்டேடஸ் ஆரஹா ஹை


express: இதர் பி அய்சா


ila: பிஸி, குச் பி நஹி ஹை
தம் மார்னா கேளியே ..


express: ஒயியே
ஓயகா.ஏக் தின்மே 10 சிகார்
ஏத் தோ அச்சா னஹி
பெஹலே ஓலுக் "லொக் லொக் கர்ரே".அபிதக் சோட்னேவலா நை

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
இந்தியாவில் மற்ற மாநிலங்களைப்போல
தமிழகக் கல்விக்கூடங்களில் இந்தியை அடித்து விரட்டிய பாவம் அரசியல்வாதிகளையே சேரும்.மறுப்பதற்கில்லை

பள்ளிப்பருவத்திலேயே கற்றுக்கொள்வது என்பது வரம்!
//

ஐயா,

தலைப்பை மட்டும் படித்துவிட்டு பின்னூட்டம் போட்டால் இப்படித்தான் வந்துவிடுமோ ?

:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
100 சதவீதம் வழிமொழிகிறேன்.

12:29 PM, July 18, 2007
//

வாங்க ஜோ,

நாம இட்லி கடையில் பேசியது கருத்து தான் இங்கே !

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தழல் ரவி said...
நான் கூட வலைப்பதிய ஆரம்பிக்கும் காலத்தில் இந்தி திணிப்பு மற்றும் இந்தி எதிர்ப்பு இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் தெரியாமல் உளறினேன்...
//

ஆமாங்க ரவி,

என்னுடைய ஒரு பதிவை நீங்க லிங் பண்ணி எழுதி ரகளை பண்ணிக்கிட்டு இருந்திங்க.

நல்லா ஞாபகம் இருக்கு.
:))

கோவி.கண்ணன் சொன்னது…

// மகேந்திரன்.பெ said...


எயியே மே போலா உதர் ப்ளாகர் மீட்டிங்க் பே , லேகின் ஓலொக் போலா "கோன் ச்சோடா ஹிந்தி பட்னேக்கேலியே? நையே ?. கிதர் ஹிந்தி ஸ்கூல்மே ச்சோடிதியா? குச் நா குச் ஹிந்தி ஸ்கூல்மேதோ , கிஸ்கி சையேதோ சீக்சக்தே ஐசா நையே பிர் கெய்சா சிக்கேகா ஹிந்தி? //

மகி,

உனக்கு நல்லா வாயில வருதா ? என்ன சொல்றேன்னே புரியல
:))

Unknown சொன்னது…

என்னையும் யாரும் ஹிந்தி படிக்கவிடாமல் இந்த திராவிட திம்மிகளின் அரசாங்கமும் அண்ணாத் துரையும் தடுத்து என் கைகால்களை கட்டி போட்டு விட்டனர் நான் அதனால் எல்லாம் ஹிந்தி தெரியாமல் இப்போது சோத்துக்கு சிங்கி அடிக்கிறேனா என்ன? தேவைப் பட்டா எல்லாத்தையும் கத்துக்க முடியும் ஆனா பசிக்கிற புள்ளைக்கு சோரு குடுக்கிற மாதிரி இருக்கனும் அடிச்சி கொடுத்தா சாப்பிட முடியுமா?

கோவி.கண்ணன் சொன்னது…

//தம்பி said...
சரியா சொன்னிங்க கோவி.கண்ணன்.

எனக்கு இந்தி தெரிலன்னு எந்த இந்திக்காரனாவது கேலி பண்ணான்னா அவனை உண்டு இல்லேன்னு பண்ணிடுவேன். என்னவோ உலகமே இந்தி மட்டும்தான் பேசுற மாதிரி.

எனக்கு அதை பேச இஷ்டம் இல்லன்னு சொன்னால், இந்த மதராசிகளே இப்படித்தான்னு சொல்வாங்க.

*********************
என்னோட கரூத்து என்னன்னா இந்தியும் தேவைதான் ஆனால் அதை விருப்பப்பட்டு நாமே தேர்ந்தெடுக்கணும். திணிக்க கூடாது.
*********************
//

தம்பி அவர்களே.....!

அதுது...... சும்மா அதிருதில்லே....

லக்கிலுக் சொன்னது…

//நான் கூட வலைப்பதிய ஆரம்பிக்கும் காலத்தில் இந்தி திணிப்பு மற்றும் இந்தி எதிர்ப்பு இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் தெரியாமல் உளறினேன்...//

மிக விரைவில் நண்பர் ரவிக்கு இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வும் வரவேண்டும் என்று எல்லாம் வல்ல மகர நெடுங்குழைகாதனை வேண்டி கொள்கிறேன்!

Unknown சொன்னது…

பள்ளிக்கோடத்தில இல்லை அதனால படிக்கலைன்னு சொல்றவன் எல்லாம் சும்மா பேத்தல் கத்துக்கனும்னா எப்படி வேனா செய்யலாம் (வீட்டுக்கு தெரியாம ப்ளூப்லிம் பாக்க செலவு பன்ற நேரத்தில்தினமும் ரெண்டு வார்த்தை ஹிந்தி படிக்கலாம் )

Unknown சொன்னது…

//இந்தியாவில் மற்ற மாநிலங்களைப்போல
தமிழகக் கல்விக்கூடங்களில் இந்தியை அடித்து விரட்டிய பாவம் அரசியல்வாதிகளையே சேரும்.மறுப்பதற்கில்லை

பள்ளிப்பருவத்திலேயே கற்றுக்கொள்வது என்பது வரம்! //


அய்யா அடித்தெல்லாம் விரட்ட வில்லை விருந்தாளிக்கும் அழையா விருந்தாளிக்கும் வித்யாசம் இருக்கிறது. எனக்கு இது தேவை என்பதற்கும் உனக்கு இது தேவை என்பதற்கும் இருக்கும் வித்யாசம்தான் அது

Unknown சொன்னது…

//பக்கத்துல இருக்கவங்க ஆழமா கவனிக்கறிங்க போல! //

இதை பப்ளிகாய் சொல்வதை நான் வன்மையாக கண்ணடிக்கிறேன்

யாத்ரீகன் சொன்னது…

ஏக் காவ்ன் மே _______ ரஹதாத்தா.....

கோவி.கண்ணன் சொன்னது…

//வீட்டுக்கு தெரியாம ப்ளூப்லிம் பாக்க செலவு பன்ற நேரத்தில்தினமும் ரெண்டு வார்த்தை ஹிந்தி படிக்கலாம்//

மகி,

எப்படியோ உன் ரகசியத்தை வந்து போட்டு ஒடைச்சிட்டு போற...ரொம்ப நல்லவரு.

:))

Unknown சொன்னது…

அரசியல் வாதிகளும் காவல் துறைகளும், சட்டமும் சொல்லும் எத்தனையோ நல்ல விஷயங்களை கேட்காமல் போனது போல இந்த மடத் தமிழன் ஹிந்தி தினிப்பு எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் தமிழ்நாடும் "இந்தியா" ஆகியிருக்குமே.?

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...

மிக விரைவில் நண்பர் ரவிக்கு இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வும் வரவேண்டும் என்று எல்லாம் வல்ல மகர நெடுங்குழைகாதனை வேண்டி கொள்கிறேன்!
//

லக்கி,
நெடுங்குலை'காதன்' தான் காது கொடுத்து கேட்பாரோ ?

ILA (a) இளா சொன்னது…

நானும் மஹியும் ஒன்னும் ஸ்கூலுல கத்துக்கல, ரெண்டு பேருமே கிராமத்தானுங்க தான். எங்க ரெண்டு பேருக்குமே மொதல்ல கஷ்டமாத்தான் இருந்துச்சு அப்புறம் பழகியாச்சு. தேவைப்பட்டா ஹிந்தி கத்துக்கலாம், இதுக்கு அரசியால்வாதிங்க மறுப்பு சொல்ல போறது இல்லே. ஆனா நானும் அரசியல்வாதிங்களை திட்டிட்டுதான் ஹிந்தி கத்துகிட்டேன். ஏன்னா இன்னும் நம்ம மக்கள் ஹிந்திய தார் போட்டுதான் அழிச்சுட்டு இருக்காங்க.

ரவி சொன்னது…

///மிக விரைவில் நண்பர் ரவிக்கு இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வும் வரவேண்டும் என்று எல்லாம் வல்ல மகர நெடுங்குழைகாதனை வேண்டி கொள்கிறேன்!///

இட ஒதுக்கீடு பற்றி சொன்னால் நான் ம.க.இ.க வின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளலாம் என்று இருக்கிறேன்....

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
http://vetri-vel.blogspot.com/2006/12/articles-on-1965-hindi-imposition.html
and Also i have written the same kind of post but with different thought and experience.
//

இளா,

உங்க பதிவை படித்து பின்னூட்டமும் போட்ட ஞாபகம் !
:))

பின்னூட்டியதற்கு நன்றி !

Subbiah Veerappan சொன்னது…

///பெ.மகேந்திரன் அவர்கள் சொல்லியது:அய்யா அடித்தெல்லாம் விரட்ட வில்லை விருந்தாளிக்கும் அழையா விருந்தாளிக்கும் வித்யாசம் இருக்கிறது. எனக்கு இது தேவை என்பதற்கும் உனக்கு இது தேவை என்பதற்கும் இருக்கும் வித்யாசம்தான் அது//

மகிக் கண்ணா - அதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. நான் படித்தகாலத்தில் இந்தியை அழையா விருந்தாளியாக்
காட்டவில்லை. தமிழை விழுங்க வந்த பிசாசாக உருவகப் படுத்திவிட்டார்கள்.

தில்லி, மும்பை, சார்ஜா, அபுதாபி என்று வேலை வாய்ப்பின் காரணாமச் சென்றவர்களுக்கெல்லாம் இந்தி வசப் பட்டது. தமிழ் நாடே கதி என்றிருக்கும் எங்களைப் போன்றோர்களின் நிலை என்ன?

கோவி.கண்ணன் சொன்னது…

//தில்லி, மும்பை, சார்ஜா, அபுதாபி என்று வேலை வாய்ப்பின் காரணாமச் சென்றவர்களுக்கெல்லாம் இந்தி வசப் பட்டது. தமிழ் நாடே கதி என்றிருக்கும் எங்களைப் போன்றோர்களின் நிலை என்ன?//

ஐயா,

நான் நாகப்பட்டினமே கெதி என்று இருந்தால் எனக்கு ஹிந்தி அவசியமா ?

விளக்கமாக சொல்லுங்க.

படிப்பறிவே இல்லாத நம்ம ஊரு கூலிக்காரர்கள் மும்பைக்கு இரயிலேறி வரும் போது ஹிந்தியில் பொழந்து கட்டி பேசுகிறார்கள்.

லக்கிலுக் சொன்னது…

//இட ஒதுக்கீடு பற்றி சொன்னால் நான் ம.க.இ.க வின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளலாம் என்று இருக்கிறேன்....//

உங்களுக்கு பத்ரி அவர்களின் இடஒதுக்கீடு பதிவுகளை சிபாரிசு செய்கிறேன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

// சிவபாலன் said...
சரிதான்!

அவரவர் தேவைக்கு ஏற்ப படித்துக்கொள்ளவேண்டியதுதான், அதற்காக எல்லோரும் படிக்க வேண்டும் என்பது சரியல்ல.
//

சிபா,
முனிசிபால் ஸ்கூலில் படிப்பது கெளரவ குறைச்சல் என்பார்கள்...ஆங்கில வழிக்கல்வியை பணம் கட்டி படிக்கிறார்கள்...அப்படியே ஹிந்தியும் படித்துக் கொள்ள வேண்டியதுதானே.

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
நானும் மஹியும் ஒன்னும் ஸ்கூலுல கத்துக்கல, ரெண்டு பேருமே கிராமத்தானுங்க தான். எங்க ரெண்டு பேருக்குமே மொதல்ல கஷ்டமாத்தான் இருந்துச்சு அப்புறம் பழகியாச்சு. தேவைப்பட்டா ஹிந்தி கத்துக்கலாம், இதுக்கு அரசியால்வாதிங்க மறுப்பு சொல்ல போறது இல்லே. ஆனா நானும் அரசியல்வாதிங்களை திட்டிட்டுதான் ஹிந்தி கத்துகிட்டேன். ஏன்னா இன்னும் நம்ம மக்கள் ஹிந்திய தார் போட்டுதான் அழிச்சுட்டு இருக்காங்க.

1:39 PM, July 18, 2007
//

இளா,

மகி எந்த டீச்சரிடம் ஹிந்தி படித்தார் என்று என்னிடம் சொல்லிவிட்டார். டீச்சர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//மகேந்திரன்.பெ said...
அரசியல் வாதிகளும் காவல் துறைகளும், சட்டமும் சொல்லும் எத்தனையோ நல்ல விஷயங்களை கேட்காமல் போனது போல இந்த மடத் தமிழன் ஹிந்தி தினிப்பு எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் தமிழ்நாடும் "இந்தியா" ஆகியிருக்குமே.?
//


அதுதுதுதுதுதுதுதுதுதுதுது............!!!ருதுல்ல..............!

ஜீவி சொன்னது…

அரசு கெஜட்டில் கூட இந்தி எதிர்ப்பு-
மொழிப்போராட்ட வீரர்கள் என்று தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அந்தக் காலத்தில் வாழ்ந்த அய்யா
சுப்பையா போன்றவர்கள் அனுபவப்பட்டு சொல்வதை ஏற்றுக்
கொள்ள வேண்டும்.
"வீம்புக்காக சில விஷயங்களை மறுப்பது அதுபற்றிய புரிதல் இல்லாமலே நம்மைச்செய்து
விடும்."-- அண்ணல் அம்பேத்கார் அவர்கள்.

Unknown சொன்னது…

இந்தி சாதிகளுக்கு இடஒதுக்கீடு தரும் 'தமிழ்'நாடு

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாம வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?

Karthick Chidambaram சொன்னது…

இந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்று குஜராத் நீதி மன்றம் சொல்லியாச்சு!
இந்தியாவில் இன்னும் பலர் விழித்துகொள்ளவில்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்