பின்பற்றுபவர்கள்

17 ஜூலை, 2007

கலைகள் குலத்தொழிலா ?

முறையாக பயின்றவர் மட்டுமே அந்தந்த துறையில் ஜொலிக்க முடியும் என்ற கோட்பாடுகள் அரை நூற்றாண்டு வரை இருந்தது. அதை உடைத்தவர் பலர். சாஸ்திரிய சங்கீதம் அறிந்தவர் தான் பாடகர், முறையாக நடனம் பயின்றவரே நடிகர் என்று நாடகம், திரையுலகம் போன்றவை ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் மட்டுமே இருந்து வந்தது. இவர்கள் வெளிப்படுத்தும் கலைகள் பெரும்பாலும் அவர்கள் வாழும் சமுகத்தைச் சுற்றியே இருந்தது.

இந்திய சூழலில் மக்கள் வாழ்க்கை என்பது நகரத்தையோ, மாநகரத்தையோ, பிரதிபலிப்பது அல்ல. அது கிராம மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதே.

ஏறுபூட்டி போவோமே, அண்ணே சின்னண்ணே..
ஏர்முனைக்கு நேரிங்கு எதுவுமே இல்லை..
பட்டிக்காடா பட்டணமா ?

போன்ற பாடல்கள் இடம் பெற்ற படங்களெல்லாம் கிராம வாசனையுடன் வந்த பாடல்கள். நன்றாக ஓடியதாக அறிகிறோம். சினிமா ஹிரோக்களின் வெற்றிப்படங்கள் பெரும்பாலும் அன்று முதல் இன்றுவரை கிராமத்தை மையமாக வைத்து எடுத்த எதார்த்த படங்களே வெற்றி பெற்றன.

இவை சினிமாவின் வியாபரா யுக்தி மட்டுமே, சினிமா துறை 90 விழுக்காரு முற்பட்ட சமுகத்தினரிடம், ஆதிக்க சக்திகளிடம் இருந்தது ( தேவர் பிலிம்ஸ், ஏவிஎம் நிறுவனங்கள் போன்ற சில நிறுவணங்கள் தவிர்த்து), இயக்குனர்களும் அவ்வாரே இருந்தனர். இவர்கள் இயக்கிய இந்த படங்களில் நடித்தவர்கள் சிவாஜி கனேசன், மற்றும் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கெளெல்லாம் முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சிவாஜி நடிப்பில் இமயமென உயர்ந்ததற்குக் காரணம் அவர் கிராம / நகர மக்களின் இயல்பை வெளிப்படுத்தினார். எம்ஜிஆர் கிராமத்தினரையே குறிவைத்து படக்கதைகளை அமைத்துக் கொண்டார்.

தற்காலத்தில் இன்றைய திரையுலகம் கிராமத்தில் இருந்து படையெடுத்த இளைஞர் கையில் இருக்கிறது. அவர்களால் தான் மக்கள் வாழ்கையை பிரதிபலிக்கும் பிரச்சனைகளை அவர்கள் பார்வையில் பார்த்து வெளிப்படுத்த முடியும்.

எந்த ஒரு இசைப் பின்னனியும் (முறையாக) இல்லாத இளையராஜாவால் தமிழ் திரையுலகையே 20 வருடங்களுக்கும் மேலாக தன் ஆளுகைக்குக் கொண்டுவர முடிந்ததென்றால் அவரிடம் இருந்த கிராமத்து மணமும், தனித் திறமையுமே காரணம். இளையராஜாவுக்கு முன்பு இசை அமைப்பாளர்களெல்லாம் முற்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவர்களாகவும், முறையாக பயின்றவர்களாகவும் இருந்தார்கள். அதுவே அளவு கோலாகவும் பார்க்கப்பட்டது. அதை முதன் முறையாக உடைத்து எறிந்தவர் இசைஞானி இளையராஜா. இளையராஜாவை இன்றைக்கும் விமர்சிப்பவர்கள் இருகிறார்கள். ஆதங்க வெளிப்பாடாகவே அவைகள் அவ்வப்போது வருகின்றன.

பாரம்பரியம், பழக்கவழக்கம், வழிவழிவருவது, இவர்களால் தான் இதைச் செய்ய முடியும் என்று சில சமூகத்தினரால் அடக்கியாளப்பட்டு மாய வித்தை போன்று நம்ப வைக்கப்பட்டு இருந்தது கலைகள். இந்த கலைகள் எல்லாமும் எல்லோராலும் செய்ய முடியும் என்று குலவழி வழக்கத்துக்கு முற்றுப் புள்ளிகளை பல்வேறு துறைகளில் நம் தமிழர்கள் வைத்து வந்திருக்கிறார்கள், வைத்துக் கொண்டு இருக்கிறார்கள், வைப்பார்கள்.

1 கருத்து:

G.Ragavan சொன்னது…

எந்தத் தொழிலும் குலத்தொழில் அல்ல. யாருக்கு எது வருகிறதோ..அதைச் செய்து பிழைக்க வேண்டும். செய்வன திருந்தச் செய்தால் போதும். எல்லாமும் எல்லார்க்கும் பொது. உங்கள் கருத்தை ஏற்கிறேன்.

// எந்த ஒரு இசைப் பின்னனியும் (முறையாக) இல்லாத இளையராஜாவால் //

இது தவறான தகவல் கோவி. இளையராஜா இசையை முறையாகப் பயின்றவர். பாரம்பரிய சங்கீதம் மட்டுமின்றி மேற்கத்திய சங்கீதமும் கூட. அத்தோடு இவர் மெல்லிசை மன்னரிடம் இசைக்கருவி வாசிப்பவராகவும் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகவும் இருந்திருக்கிறார். அவரது கடின உழைப்பு இந்த நிலைக்கு உயர்த்தியது. ஆனால் அவரது குடும்பப் பின்னணி இசைப்பின்னணி அல்ல. உழைப்பாலும் படிப்பாலும் உயர்ந்தவர் அவர்.

// இளையராஜாவுக்கு முன்பு இசை அமைப்பாளர்களெல்லாம் முற்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவர்களாகவும், முறையாக பயின்றவர்களாகவும் இருந்தார்கள். //

இது இளையராஜாவுக்கு முன்னமே மாறத்தொடங்கியிருந்தது. மெல்லிசை மன்னரும் முற்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் அல்லர். அவரிடம் உதவியாளராக இருந்த கணேஷ் (சங்கர்-கணேஷ்) அவரும் அப்படியே. ஆனால் அதற்கு முன்னால் அப்படியிருக்கவில்லை. ஆனாலும் அத்தி பூத்தாற்போல் கே.பி.சுந்தராம்பாளும், சீர்காழி கோவிந்தராஜனும் வந்தனர்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்