பின்பற்றுபவர்கள்

6 ஜூலை, 2007

விஜய் அடுத்த சூப்பர் ஸ்டாரா ?

சூப்பர் ஸ்டார் கனவும் அதைத் தொடர்ந்து முதல் நாற்காலியும் இளைய நடிகர்களை மிகவும் படுத்துகிறது. சூப்பர் ஸ்டார் கனவில் தற்போது மும்மரமாக இருப்பவர்கள் இருவர் ஒருவர் ஏற்கனவே சிறுவயது முதலே லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற அழைக்கப்பட்டு வரும் சிம்பு, அடுத்தவர் இளைய தளபதி விஜய்.

இவர்கள் படங்களில் பஞ்சு டயலாக் இல்லை என்றால் தயாரிப்பாளர்களுக்கே பஞ்ச் விழும் என்பதால் ஸ்டார் அந்தஸ்து இருக்கிறதே என்று தயாரிப்பாளர்களும் சகித்துக் கொள்கின்றனர்.

தமிழன் படம் ஏன் ஓடவில்லை என்பதற்கு விஜயின் அப்பாவும் இயக்குனருமான சந்திரசேகர் மிக அருமையான கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது அந்த படத்தில் விஜய் இறப்பது போல் காட்சி வைக்கப்பட்டதாம் ( ஆனால் இறக்கவில்லை, பலர் பிரார்த்தனை செய்ய எழுந்துவிடுவார்) அதனால் விஜய் ரசிகர்களுக்கு அந்த காட்சியை ஜீரணிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லையாம் அதனால் படம் தோல்வி அடைந்துவிட்டதாகவும், ரஜினி படம் போல், விஜய் படத்திலும் கதாநாயகன் அடிவாங்குவது போல் இருந்தாலும், அல்லது இறப்பது போல் காட்சி இருந்தால் ரசிகர்கள் திரையை கிழித்துவிடுவார்களாம்.

தற்பொழுது வரும் விஜய் படங்களெல்லாம் ரஜினியின் அறிமுக காட்சி போல காலை தூக்கிக் காட்டிக் கொண்டுதான் வருகிறார். குத்துப்பாட்டுகள் மற்றும் க்ளோசப் காட்சிகள் எல்லாமும் ரஜினி பாணியிலேயே விஜய்படங்களிலும் இருக்கிறது. தானும் ரஜினி ரசிகன் என்று ஸ்டேட்மெண்ட் விடுவதால் ரஜினி ரசிகர்களின் கூட்டமும் ஓரளவுக்கு விஜய்க்கு இருக்கிறது.

இந்த கூத்தைவிட பெரும் கூத்தாக விஜயின் வரும்கால சூப்பர் ஸ்டார் கனவுக்கு தற்பொழுது விளம்பர யுக்தி போன்று 'விஜய் ரசிகன்' என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் வாரநாட்களில் ஒளிபரப்பாகிறது. அதில் கண்தெரியாதவர்கள் முதல் ஊனமுற்றோர் அனைவரும் வந்து விஜயின் புகழை பாடி செல்கின்றனர். எல்லாவற்றிக்கும் மேலாக விஜய் ரசிகர்களின் 'உடல் மண்ணுக்கு, உயிர் விஜய்க்கு' என விஜய்மீது அன்பை பிழிந்து டிவி திரையே கண்ணை மூடிக் கொள்ளும் அளவுக்கு அபத்த டயலாக்குகளை அள்ளி வீசுகின்றனர்.

எம்ஜிஆர், ரஜினி அடுத்து விஜய் மூன்றாவது தலைமுறை சினிமா ரசிகர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இவரது சூப்பர் ஸ்டார் கனவு இவருக்கு பலிக்குமா ? அவரையே பழிக்குமா ?

14 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

அதெல்லாம் ஆச்சு. மக்கள் இப்போ விஜய் ரசிகருங்கதான். ஷங்கரு, விஜய் வெச்சு அடுத்த படம் எடுக்கட்டும்..அப்புறம் பாருங்க கொண்டாட்டத்தை.

Unknown சொன்னது…

விஜய் ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதா அடுத்த பதிவுக்கு அச்சாரம் போட்ட சிங்கை சிங்கம் வாழ்க

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
அதெல்லாம் ஆச்சு. மக்கள் இப்போ விஜய் ரசிகருங்கதான். ஷங்கரு, விஜய் வெச்சு அடுத்த படம் எடுக்கட்டும்..அப்புறம் பாருங்க கொண்டாட்டத்தை.
//

இளா,

சங்கர் படத்துக்கு 2 வருடம் கால்சீட் கொடுக்கனும், விஜய் அவ்வளவு நாள் அடங்கி இருப்பாரான்னு தெரியலையே. கஷ்டம் தான்

கோவி.கண்ணன் சொன்னது…

///மகேந்திரன்.பெ said...
விஜய் ரசிகர்களுக்கு மூளை இருக்கிறதா அடுத்த பதிவுக்கு அச்சாரம் போட்ட சிங்கை சிங்கம் வாழ்க//

மகி,

உனக்கு எப்படியோ கிழுமத்தூர் எக்ஸ்பிரசை ஓட்டனும் அதுக்கு தீனி போட்டு இருக்கிறேன் என்று சொல்லு.
:)

மனதின் ஓசை சொன்னது…

அதான் பிரகாஷ்ராஜே சொல்லிட்டாரே விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்னு.. அப்புரமென்ன..கூடவே திறமைய விட மனிதநேயம்தான் முக்கியமாம்.. அந்த விதத்துல விஜய்தான் மிகப்பெரும் புகழ் வந்தும்(??) அடக்கத்தோட இருக்கரவராம்.

ஜே கே | J K சொன்னது…

அப்ப அடுத்து ஒரு கூட்டம் ரெடியா சூடம் காட்டவும், பால் ஊத்தவும்.

bala சொன்னது…

//மகி,

உனக்கு எப்படியோ கிழுமத்தூர் எக்ஸ்பிரசை ஓட்டனும் அதுக்கு தீனி போட்டு இருக்கிறேன் என்று சொல்லு//

அது சரி,அந்த கீழ்மையான மக்கு எக்ஸ்ப்ரெஸ்க்கு உங்களை மாதிரி அரை டிக்கட்டுக்கள் தான் தீனி போடணும்,வேற யார் போடுவாங்க?

சிவபாலன் சொன்னது…

GK,

விஜய் தான் கிருத்துவர் என்பதால் சில மத மாற்றத்தில் ஈடுபட்டதாகவும், சுனாமியின் போது கிருத்துவ மீனவர்களுக்குத்தான் உதவினார் என்றும், கோவிலுக்குள் செறுப்புடன் சென்றார் என்றும் பாஜக மற்றும் இந்துகட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவை வழுப்பெறாமல் அடங்கிவிட்டது.

ஆனால் விஜய்க்கு இவர்களிடம் இருந்த்து எதிர்ப்பு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் said...

சிபா,

நீங்கள் சொல்வது சரிதான். இந்துத்துவா வாதிகளின் எதிர்ப்பை மீறி இவர் சூப்பர் ஸ்டாராவாரா என்பதை காலம் தான் முடிவு செய்யும். ஏனென்றால் மதவெறிகள் இப்பொழுது இந்துக்களுக்கும் சலைத்தவர்கள் அல்ல என்பது கண்கூடு.

ஜோ/Joe சொன்னது…

சிவாஜி கணேசன் தேவர் நடிகர் ..விஜய் கிறிஸ்தவ நடிகர்.. ஆரம்பிச்சுட்டீங்கய்யா!

கோவி.கண்ணன் சொன்னது…

//மனதின் ஓசை said...
அதான் பிரகாஷ்ராஜே சொல்லிட்டாரே விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்னு.. அப்புரமென்ன..கூடவே திறமைய விட மனிதநேயம்தான் முக்கியமாம்.. அந்த விதத்துல விஜய்தான் மிகப்பெரும் புகழ் வந்தும்(??) அடக்கத்தோட இருக்கரவராம்.
//

மனதின் ஓசை,
கில்லி, சிவகாசி, கடைசியாக வந்தபடம் (பெயர் நினைவு இல்லை) அதிலெல்லாம் பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். அருகில் இருந்து பார்த்தவர் என்பதால் சொல்கிறாரோ ?

கோவி.கண்ணன் சொன்னது…

// J K said...
அப்ப அடுத்து ஒரு கூட்டம் ரெடியா சூடம் காட்டவும், பால் ஊத்தவும்.
//

ஜேகே,

அதெல்லாம் ஏற்கனவே இருக்கு.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...

அது சரி,அந்த கீழ்மையான மக்கு எக்ஸ்ப்ரெஸ்க்கு உங்களை மாதிரி அரை டிக்கட்டுக்கள் தான் தீனி போடணும்,வேற யார் போடுவாங்க?
//

பின்னூட்டத்திற்கு நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோ / Joe said...
சிவாஜி கணேசன் தேவர் நடிகர் ..விஜய் கிறிஸ்தவ நடிகர்.. ஆரம்பிச்சுட்டீங்கய்யா!
//

ஜோ,

இருப்பதைத்தானே சொல்றாங்கே !
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்