"சார்...உங்களைப் பார்க்கத்தான் வந்தேன், பையன் ஒரு வீடுகட்ட ஆசைப்படுகிறான், நல்ல இடமாக இருந்தால் சொல்லுங்க" - புரோக்கர் பொன்னுசாமியை சந்தித்து சொல்லிக் கொண்டு இருந்தார், ரிடையர்ட்டு தெய்வசிகாமணி
"அடடே, சரியான சமயத்துக்குத்தான் வந்திருக்கிங்க"
"ஓ ! அப்படியா ?"
"ஆமாம் பஸ்டாண்டுக்கு 5 நிமிச நடையில் போக முடிவது போல, சின்னத் தெருவில், ஒரு மனை இருக்கு"
"நல்ல இடம் மாதிரி இருக்கே, பேசுறிங்களா ?"
"ஓனர் நம்மகிட்டதான் வந்திருக்காங்க, பெரிய ரூவாயில் நாலு ரூவாய் சொல்கிறார்கள்"
"ஓ, அதிகமாகத்தான் இருக்கு, அதுக்கு பக்கத்தில் என் தம்பி கூட இடம் வாங்கினான், அவ்வளவு இல்லையே ?"
"பாருங்க, ஒரு பெரிய ஷாப்பிங் காம்ளெக்சும், இரயில்வே ஸ்டேசனும் இப்போ பஸ்டாண்டு பக்கத்திலேயே வரப்போகுது, அதுதான் திடீரென்று விலை எகிறிவிட்டது, மூனறை ரூவாய்க்கு பேசி முடிச்சிடுலாம்"
"இன்னும் கொறைக்க பாருங்க"
"இதுக்கு மேல் குறைக்க முடியாதுன்னு நினைகிறேன், வீடு உங்களுக்குத்தான், நாளைக்கு பார்டியை வரச் சொல்கிறேன், பேசி முடிச்சிடலாம்"
"நல்லது, நாளைக்கு சாயங்காலம் வருகிறேன், முடிச்சு கொடுத்துடுங்க"
"உங்களுக்கு செய்யாமல் யாருக்கு செய்யப் போகிறேன்"
விடைபெற்றார் தெய்வசிகாமணி
**********************
மறுநாள் வழக்கம்போல் காய்கறி கடைக்குச் சென்றார்
"இந்தாம்மா, கீரை வேற இல்லையா ?"
"இல்லைங்கைய்யா "
"சரி சரி, என்ன விலை வழக்கமாக போடுகிற 1 அரை ரூவாதானே ?"
"இல்லைங்கையா, காய்கறி வண்டி இன்னிக்கு வரலை, அதனால் பையனை விட்டு பக்கத்தூரு மார்கெட்டில் இருந்து வாங்கியாரச் சொன்னேன், அடக்கவிலையே 2 அரை ஆச்சுங்க, 5 கட்டுதான் வாங்கியாந்தான் கட்டு 3 ரூவான்னு 4 கட்டு ஓடிடுச்சு, இதுதான் கடைசி, உங்களுக்காக வேண்டுமானல் நாலனா குறைச்சிக்கிறேன்"
"வெலையை ஏத்தி விக்க எதாவது காரணம் சொல்லுவிங்களே, சரிம்மா, எடுத்துவை, மளிகை கடைவரை போய்டு வருகிறேன்"
ஐந்து நிமிடம் சென்று திரும்பவும் காய்கறி கடைக்கு வந்தார்.
யாரோ ஒரு பெண்மணியுடன் காய்கறிகாரி கையை ஆட்டி மறுத்து விவாதம் செய்து கொண்டிருந்தார், இவர் அருகே செல்லச் செல்ல தெளிவாக கேட்டது
"ஐஞ்சு ரூவா தருகிறேன், கீரையை கொடு, மாமியாருக்கு கீரை இல்லாட்டி சாப்பாடு எறங்காது"
"இந்தாம்மா, ஐஞ்சு ரூவா இல்லே, லெட்ச ரூவா தர்ரேன்ன்னு சொன்னாலும் இந்த கீரைகட்டை கொடுக்கமாட்டேன்"
"அப்படி என்னதான் இருக்கு அந்த கீரையில ?"
"கீரை எப்பவும் போலத்தாம்மா இருக்கு, அதை கோடிவீட்டு ஐயா ஏற்கனவே வாங்கி வச்சுட்டார்"
"ரொம்பவும் தான் நேர்மை, ஹூம்..." என்று முகம் சுளித்தபடி மற்றவற்றை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டாள்
காய்கறிகாரி விலையேற்றத்திற்காக பொய் சொல்லவில்லை, என்ற நிம்மதியுடன் கீரையை வாங்கிக் கொண்டு வீடுவந்து சேர்ந்தார்.
******
சாயங்காலம் ஆனதும், புரோக்கர் பொன்னுசாமியை சந்திக்க சென்றார்,
'ரொக்கமாக ஐம்பதாயிரம் கமிசன் கொடுக்குறிங்க... போய்டு வாங்க தம்பி, நாள் குறிச்சுட்டு ரிஜிஸ்ட்ரேசன் வச்சிக்குவோம்' பொன்னுசாமி ஒரு இளைஞருக்கு விடை கொடுத்துக் கொண்டு இருந்தார்.
தெய்வசிகாமணியின் வருகையை கண்டதும் உற்சாகம் குன்றியவராக காணப்பட்டார் பொன்னுசாமி, தலையை சொறிந்தவாரே,
"நானே, உங்களை நேரில் பார்கலாமுன்னு..."
"உங்களுக்கு எதுக்கு சிரமம், அதான் நானே வந்துட்டேன்"
"இல்லைங்க, அது இல்லை... அதாவது அந்த ஓனர் இடத்தை விக்கப் போறதில்லையாம், மகன் எதோ பிரச்சனை பண்ணுகிறானாம்"
தெய்வசிகாமணிக்கு சற்று வருத்தம் ஆகிவிட்டது,
"அடடே, நல்ல இடமாச்சேன்னு, இரண்டாம் முறை கூட யோசிக்காமல் சரி என்று சொன்னேன், இப்போ கிடைக்கலை, நமக்கு கொடுத்து வைக்கல, என்ன செய்றது, வேற எடம் இருந்தால் சொல்லுங்க"
"சொல்கிறேன்...உங்களுக்கு சொல்லாமல் யாருக்கு சொல்லப் போகிறேன் ?"
"நல்லது, வருகிறேன்" விடைபெற்றார்
**********
மாலை 6 மணிக்கு மேல் ரேசன் கடைக்குச் சென்றார், அங்கு இரு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர்
"அக்கா, என் தம்பி சின்னத் தெருவில் இடம் வாங்கிப் போட்டு இருக்கான்"
"உனக்கு என்னடி அம்மா, தம்பி பேங்கில வேலைப் பார்கிறான், இடம் சல்லிசா வந்தால் வாங்கிப் போடாமல் என்ன செய்யப் போறிங்க, பணத்தை சேர்த்து வச்சா பாசிதானே புடிக்கும்"
"உங்க கிட்ட சொன்னேன் பாருங்க, சல்லிசா வரலை மாமி, 5 லட்சம் ஆச்சாம், புரோக்கர் பொண்ணுசாமின்னு பைக்கில போவரு இல்லையா ? அவருதான் ஆறு லட்சம் வெலை உள்ள இடததை இவனுக்காக பேசி 5 லட்சத்துக்கு இன்னிக்கு மதியம் தான் முடிச்சுக் கொடுத்து இருக்கார், அட்வான்ஸ் கொடுத்துட்டான்...லோன் போட்டு இருக்கானாம், வாங்கப்போறதா சொல்றான் தம்பி"
"ஒரு லட்சம் குறைச்சி பேசி இருக்காரே, நல்ல மனுசன்டி அந்த புரொக்கர்"
'ஆமாம் ஆமாம் நல்ல மனுசன் தான்', மனதுக்குள் செல்லிக் கொண்டார் ! காய்கறிகாரி காலையில் ஒரு பெண்ணிடம் கீரைக்கட்டை லட்ச ரூபாய் தந்தாலும் தரமுடியாது என்று மறுத்தது நினைவுக்கு வந்தது.
படம் : விகடன் (நன்றி)
பின்பற்றுபவர்கள்
2 ஜூலை, 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
21 கருத்துகள்:
பெரிய டீலிங்கெல்லாம அப்படித்தான்
இருக்கும்,
காய்கறிவிற்கும் பெண்மூலம் தர்மம் இன்னும் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள்
பாத்திரங்கள் பேசும் மொழியிலேயே கதையை நகர்த்திய விதம் நன்றாக உள்ளது, கண்ணன்!
பிடியுங்கள் பாராட்டுக்களை!
(முன்னாள்)
வாத்தியார்
வாங்க வாத்தியாரே,
உங்களை இங்கே கண்டதும் மற்றற்ற மகிழ்ச்சி.
தங்களின் பாராட்டுக்கு நெகிழ்ச்சி.
முன்னாள் வாத்தியார் வேறு யாருக்காவது, எனக்கு என்னாளுமே நீங்க தான் வாத்தியார்.
இதே கருவில் ஒரு கதை எழுதலாம்னு கொஞ்ச நாள் முன்ன யோசிச்சுட்டிருந்தேன்..பெசண்ட் நகர்ல சொல்லிட்டேனா :))
எளிய நடையில் அருமையா சொல்லியிருக்கீங்க!
அய்யா எங்க போனீங்க இம்புட்டு நாளா ஒங்களை காணோமின்னு பதிவு போடலாமுன்னு இருந்தேன்
அதே அன்புடன்
அடங்காத மாணவன்
//கப்பி பய said...
இதே கருவில் ஒரு கதை எழுதலாம்னு கொஞ்ச நாள் முன்ன யோசிச்சுட்டிருந்தேன்..பெசண்ட் நகர்ல சொல்லிட்டேனா :))
எளிய நடையில் அருமையா சொல்லியிருக்கீங்க!
//
கப்பி,
நீங்க சொல்லாட்டியும், பெசண்ட் நகர் பீச்சு காத்துவாக்கில காதில விழுந்துடாதா ?
பாராட்டுக்கு நன்றி !
//இதே கருவில் ஒரு கதை எழுதலாம்னு கொஞ்ச நாள் முன்ன யோசிச்சுட்டிருந்தேன்..பெசண்ட் நகர்ல சொல்லிட்டேனா //
ஜிகே உங்க சந்தேகம் தீந்துதா>
புடிங்க பயல பின்னி எடுத்துடலாம்
// மகேந்திரன்.பெ said...
ஜிகே உங்க சந்தேகம் தீந்துதா>
புடிங்க பயல பின்னி எடுத்துடலாம்
//
மகி,
பெசண்ட் நகர் என்று சொன்னவுடனே, கப்பி அண்ணன் தான் ஜேகே பதிவில் கோவி.கண்ணன் பெயரில் பின்னூட்டி இருக்காருன்னு தெரிஞ்சுது. நான் உங்களை சந்தேகப்பட்டுவிட்டேன். வெர்ர்ர்ர்ர்ர்ரி சாரி.
:)
நல்லா இருக்குங்க கதை.
//இலவசக்கொத்தனார் said...
நல்லா இருக்குங்க கதை.
//
கொத்ஸ் பாராட்டுக்கு நன்றி. இது இலவசம் அல்ல ! வெகுமதின்னு எடுத்துக் கொள்கிறேன்.
நன்றி !
//ஜிகே உங்க சந்தேகம் தீந்துதா>
புடிங்க பயல பின்னி எடுத்துடலாம்//
கப்பி,
உனக்கு ஏனய்யா இந்த வேலை!
அதெல்லாம் பக்காவா செய்யணும்!
பாரு! எப்படி மாட்டிகிட்டேன்னு!
கோவி,
கதை அருமையா இருக்கு!
(ரொம்ப நாள் கழிச்சி யாரோ ஒருத்தர் சிபியோட பதிவுல எட்டிப் பாத்திருக்காரு போல)
//கப்பி அண்ணன் தான் ஜேகே பதிவில் கோவி.கண்ணன் பெயரில் பின்னூட்டி இருக்காருன்னு தெரிஞ்சுது. நான் உங்களை சந்தேகப்பட்டுவிட்டேன். வெர்ர்ர்ர்ர்ர்ரி சாரி.
//
ஆகா..நல்லா இருக்கே கதை..அது நான் இல்ல..மகி பேச்சைக் கேட்டு என் மேல சந்தேகப்படாதீங்க :(
//கப்பி பய said...
ஆகா..நல்லா இருக்கே கதை..அது நான் இல்ல..மகி பேச்சைக் கேட்டு என் மேல சந்தேகப்படாதீங்க :(
//
கப்பி,
தப்பு...தப்பு...தப்பு...!
'நான் அவன் இல்லை' - என்று சொல்லனும் அதுதான் சரி.
:)
//நாமக்கல் சிபி said...
கோவி,
கதை அருமையா இருக்கு!
(ரொம்ப நாள் கழிச்சி யாரோ ஒருத்தர் சிபியோட பதிவுல எட்டிப் பாத்திருக்காரு போல)
//
சிபி,
பாராட்டும் சுருக்கமாக அருமையாக இருக்கு ?
ஆவிகளெல்லாம் அப்ப்பீட்டு ஆயிட்டா ? இப்போவெல்லாம் பார்க்க முடியல, கேட்டதாக சொல்லுங்க.
:)
பணத்துக்கும் குணத்துக்கும் சம்பந்தம் இல்லை.
சொல்லியிருக்கும் விதம் மிகவும் அருமை.
:))
வாத்தியாரையே வரவழைச்சிட்டீங்களே!
அதும் முதலாக!
அதுக்கே தனியா பாராட்டலாம்!
வாங்கய்யா வாத்தியாரய்யா!
வரவேற்க வந்தோமையா!
விரைவிலேயே பதிவுகளை எதிர்பார்க்கிறேன்!
//VSK said...
பணத்துக்கும் குணத்துக்கும் சம்பந்தம் இல்லை.
சொல்லியிருக்கும் விதம் மிகவும் அருமை.
:))
வாத்தியாரையே வரவழைச்சிட்டீங்களே!
அதும் முதலாக!
அதுக்கே தனியா பாராட்டலாம்!
வாங்கய்யா வாத்தியாரய்யா!
வரவேற்க வந்தோமையா!
விரைவிலேயே பதிவுகளை எதிர்பார்க்கிறேன்!
//
எஸ்கே ஐயா,
பாராட்டுக்கு நன்றி,
என்னைப் போலவே வாத்தியாரை வரவேற்பதற்கும் மகிழ்ச்சி. பார்ப்போம், வகுப்பு கண்மணிகளின் வேண்டுகோளை ஏற்று விடுப்பை குறைத்துக் கொண்டு வகுப்பிற்கு வருகிறாரா என்று.
ஆஹா, கோவி. கலக்கிட்டீங்க. தர்மம் எல்லா இடத்துலையும் இருக்குமா? காசு பணம் பார்த்தா வருது நியாயம்? மனுசங்களை மதிக்க வேண்டாமா?
கோவி,
கதை ரொம்ப நல்லா இருந்துச்சுங்க.... :)))
நாநயம் உள்ளவர்களெல்லாம் நாணயமானவர்களா என்ன?
நாணயம் தரம் பார்த்து வருவதில்லை, குணம் பார்த்து வருவது.
நல்ல கதை ஜிகே.
// ILA(a)இளா said...
ஆஹா, கோவி. கலக்கிட்டீங்க. தர்மம் எல்லா இடத்துலையும் இருக்குமா? காசு பணம் பார்த்தா வருது நியாயம்? மனுசங்களை மதிக்க வேண்டாமா? //
இளா,
பாராட்டுக்கு நன்றி.
நீங்க கேட்கிற கேள்விக்கு பதில் தனிமனிதர்களின் செயலும், மனமும் தான் விடை.
// இராம் said...
கோவி,
கதை ரொம்ப நல்லா இருந்துச்சுங்க.... :)))
//
இராம்,
ரொம்ப நாளைக்குப் பிறகு காலத்தில் கால் வைத்திருக்கிறீர்கள்.
சரி இனிமேல் நல்ல கதைகளாக எழுத முயற்சி பண்ணுகிறேன். அடிக்கடி வருவீங்கல்ல.
:)
கருத்துரையிடுக