50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தில் திமுகவின் ஆட்சியும் அதில் பிரிந்துவந்த அதிமுக ஆட்சியும் தான் தமிழகத்தில் நடந்துவந்திருக்கிறது. ஒரு காலத்தில் தனிப்பெரும்பாண்மை பெற்று இருந்த திமுக கழகம் உடைந்த பிறகும் அதன் கிளைக்கட்சி ஆன அதிமுகவும் அல்லாத சமயங்களில் திமுகவும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றனர். திராவிட கட்சிகள் உடைந்தாலும் திராவிட கட்சிகளுக்கே மாநில அளவில் மக்கள் அங்கீகாரம் கொடுத்து வந்திருக்கின்றனர்.
சுயமரியாதை இயக்கம், திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று வளர்சியாகவும் கிளைகளாகவும் தான் திராவிடக் கட்சிகள் ஆகி இருக்கின்றனவே அன்றி திராவிட இயக்கங்கள் தமிழ் மண்ணில் மறைந்து போய்விடவில்லை. கொள்கை அளவில் பெரிய மாற்றங்கள் இருந்தாலும் திராவிட என்ற சொல்லை எடுத்துவிட்டு கட்சி நடத்த எம்ஜிஆரும் துணியவில்லை. நேற்று கட்சி ஆரம்பித்த விஜயகாந்திற்குக் கூட தன் கட்சிப் பெயரில் திராவிட என்று சொல் அவசியம் என்றே உணர்ந்திருக்கிறார். தாழ்த்தப்பட்டு இருந்த மக்கள் தலித் என்ற பெயரில் ஒன்று இணைந்தது போலாவே திராவிட என்ற சொல் தமிழக அனைத்து மக்களையும் ஒன்று இணைக்கும் ஒரு சொல்லாகவே இருந்து வருகிறது
************
சில சமரசங்களையும் அரசியல் லாப நோக்கதிற்கு சில வளைவு சுழிவுகளைக் கொண்டும் திமுக - பாஜக கூட்டணி காலத்தின் கட்டாயத்தால் ஒருகாலத்தில் ஏற்பட்டு இருந்தாலும் திராவிட உணர்வு கொண்ட கட்சி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் திமுகவும் அதன் தலைவரும் பின்வாங்கியதில்லை என்பதை நடவடிக்கையை வைத்து அறியமுடியாவிட்டாலும் திமுக மற்றும் கருணாநிதிக்கு எதிராக எழுப்பப்படும் அவதூறுகள், விமர்சனங்கள் போன்றவற்றின் மூலம் திமுக மற்றும் கருணாநிதி திராவிட உணர்வாளர்கள் என்று தெரிந்து கொள்ள முடிகிறது.
திமுக ஆட்சி நடப்பதால் நாடு சுடுகாடு ஆகிவிட்டது, அமைதி பூங்காவான தமிழகம் கோட்டான்கள் குடியிருக்கும் இடமாக ஆகிவிட்டன என்ற கூச்சல் அண்ணா தமிழக முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே சொல்லப்படும் குற்றச் சாட்டுகள் ஆகும். திமுக ஒரு மோசமான கட்சி அதனால் தமிழகத்துக்கு விமோசனமே இல்லை என்று பத்தி பத்தியாக எழுதினார்கள். ஆனால் அந்த கட்சியில் முன்பு எம்ஜிஆர் பிரிந்து வந்த போது எம்ஜிஆர் என்ற ஒரு நல்லவரை கருணாநிதி வளரவிடாமல் அமுக்கப் பார்த்தார் என்ற குற்றச் சாட்டை அவர்கள் வெளியேறியதும் சொன்னார்கள். அதுநாள் வரை எம்ஜிஆர் என்பவர் திமுக காரர், திமுக என்பது ஒழுங்கீன கட்சி, மக்கள் விரோத கட்சி அவர்களால் நன்மை இல்லை என்பதே பேச்சாக இருந்தது. எம்ஜிஆர் வெளியேறியதும் அவர் உத்தமராக தெரிந்தார். அது போலவே வைகோ மற்றும் பலரும் வெளியேறும் போதும் கட்டம் கட்டப்படும் போது அவர்களை உத்தமர்கள் ஆக்கிப் பார்கின்றனர். அவர்கள் வெளியே வந்ததும் தான் அவர்கள் உத்தமர்கள் என்று சொல்ல முன்வருகிறார்கள்.
இதே போல நேற்றுவரை தமிழக மத்திய அமைச்சர்களால் தமிழகம் பயன்பெறவில்லை, திமுக ஆட்சி வேஸ்ட், கருணாநிதி ஒரு திருடன், தனது பேரனை அமைச்சராக்கி அழகு பார்க்கிறார் என்றெல்லாம் பொறிந்-தார்கள். இன்றைக்கு தயாநிதிமாறன் கட்டம் கட்டப்பட்டதும் திடீர் ஞானோதயமாக திமுக எதிர்பாளர்களுக்கு தயாநிதிமாறன் சுறுசுறுப்பாக செயல்பட்டதும் அவரால் தமிழகத்தூக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு கம்பெணிகள் பற்றிய எண்ணிக்கைகளும் தெரியவருகிறது. தயாநிதியை அறிவாளியாக பார்க்கின்றனர். இதே தயாநிதி அன்று மாநகராட்சி தேர்தலில் தேர்தல் அதிகாரியை மிரட்டினார், அவர் ஒரு ரவுடி என்றும் சொல்லி வந்தனர். வைகோவுடன் ஒண்டிக்கு ஒண்டி வரியான்னு கேட்கிறவனெல்லாம் மத்திய அமைச்சராக இருக்கானாம் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தது.
ஆக திமுக என்ற கட்சிக்குள் இருந்து ஒரு அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ நலத்திட்டங்களை செயல்படுத்தும் போது இவர்களுக்கு தெரியாத கண், அவர்கள் வெளியேறும் போதும், கட்டம் கட்டப்படும் போதும் தெரிவது அரசியல் தாண்டிய அதிசியமாக இருக்கிறது. இவர்கள் எதிர்ப்பது திமுக என்ற திராவிட கட்சியையா ? அல்லது கருணாநிதி என்னும் தனிமனிதனையா ? ஒன்றும் தெரியாத தயாநிதியை உருவாக்கியது போல் 10 தயாநிதிகளை கருணாநிதியால் உருவாக்க முடியாதா ?
இவர்கள் எதிர்ப்பு என்ற பெயரில் நடத்துவது வெற்று ... அரசியல் உள்நோக்கம் கொண்டது.
பின்குறிப்பு : திமுகவின் குடும்ப சண்டைபற்றியோ, 3 அப்பாவிகள் கொல்லப்பட்டது பற்றி ஏற்கனவே எதிர்ப்பை பதிவு செய்தாகிவிட்டது. இங்கு பேசும் விடயம் முன்னாள் திமுகவினர் பின்னால் எப்படி உத்தமர்கள் ஆகிறார்கள் என்பது பற்றிதான் பதிவின் கருத்து. இதுநாள்வரை திமுகவை சேர்ந்தவர்கள் என்பதால் விமர்சனங்களை எதிர்கொண்டவர்களுக்கு திடிர் புகழ்மாலை போடப்படும் புரியாத புதிர்பற்றிதான் பதிவு கேட்கிறது.
பின்பற்றுபவர்கள்
15 மே, 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
17 கருத்துகள்:
சார் திராவிட இயக்கம்னு சொன்ன அது கலைஞர் குடும்பம் மட்டுமா? திமுகவில் கலைஞருக்கு அடுத்தபடியாக யாராவது புகழ் பெற்றாலோ அல்லது அந்த நபர் கட்சியில் தன்னுடைய பிள்ளைக்கு போட்டியாக வந்து விடுவார் என்று கருதினாலோ வைகோவுக்கும், மாறனுக்கும் ஏற்பட்ட கதிதான். வேற என்ன திராவிட அரசியல்ல இருக்கு! திமுக என்ன கலைஞரின் சொத்தா? அது சரிங்க சார்! மதுரையில மூன்று பேர் கொலையானதற்கு யார் காரணம்! சாட்சாத் இவர்களது குடும்ப சண்டைக்கு அப்பாவிகள் மூன்று பேர் பலி! இதுதான் அரசியலா? இதை எதிர்த்தால் திராவிடத்தையே எதிர்ப்பதாக அர்த்தமா?
//ஆக திமுக என்ற கட்சிக்குள் இருந்து ஒரு அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ நலத்திட்டங்களை செயல்படுத்தும் போது இவர்களுக்கு தெரியாத கண், அவர்கள் வெளியேறும் போதும், கட்டம் கட்டப்படும் போதும் தெரிவது அரசியல் தாண்டிய அதிசியமாக இருக்கிறது//
அதானே!!
உண்மைதான்..
தயாநிதி மீதிருந்த விமர்சனங்கள் மறக்கப்பட்டுவிட்டன...
எம்.ஜி.ஆர், வை.கோ போன்றவர்களும் உத்தமர்களானார்கள்..
இந்த David vs. Goliath சமன்பாடு காலந்தொட்டு இருந்துவருவதுதான்..
rooting for the underdogs...
அதுவும் தவிர, ஐம்பது ஆண்டுகாலம் அரசியலில் இருந்தால் கண்டிப்பாக நண்பர்களைவிட விரோதிகளைத் தான் அதிகமாக சம்பாதிக்க முடியும்.
இதுவரை சமயோசிதமாக கலைஞர் பல எதிரிகளை சமாளித்து வெற்றி பெற்றதாக அவரின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால் மற்றொரு p.o.v. ஆட்சிக்காக, சுயநலத்துக்காக எதையும் எப்படிவேண்டுமானாலும் திரித்து வெற்றி பெறுவது சமயோசிதமல்ல, குள்ளநரித்தனம் என்று அவரின் எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்.
இதில் ஒன்றுதான் சரி.. மற்றது தவறு என்று சொல்ல 'யோக்கியவான்' ஒருவர்கூட இல்லையென்பதுதான் நிதர்சனம்...
நல்ல பதிவு...
கட்சிப் பதவிகளில் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது, தமக்கு சாதகமான விஷயங்களை மீடியாவின் உதவியுடன் பெரிதுபடுத்திக் காட்டுவது என்பது தி.மு.க வின் பரம்பரை குணம். இப்போது கூட தவறு செய்த அழகிரியை கண்டிக்க வக்கில்லாத தலைவர். தயாநிதி குறுக்கு வழியில் பதவிக்கு வந்தது விவாதிக்கப்படவேண்டியதே.
எனக்கு புரியாதது ஒன்று தான். இவ்வளவு சுயநலம் படைத்த ஒரு அரசியல்வாதியிடம் இன்னும் ஏன் முட்டாள்தனமான விசுவாசம்? கொஞ்சமாவது யோசிங்கப்பா.
கோவி கண்ணன்
/இதுநாள்வரை திமுகவை சேர்ந்தவர்கள் என்பதால் விமர்சனங்களை எதிர்கொண்டவர்களுக்கு திடீர் புகழ்மாலை போடப்படும் புரியாத புதிர்பற்றிதான் பதிவு கேட்கிறது./
ஆடிக்காத்திலே ஆடாமல் அசையாமல் அம்மியாக ஒரு கருத்தைச் சொல்லியிருக்கின்றீர்கள். இவர்களின் பதிவுகளைக் கிண்டினாலே தயாநிதி மாறனுக்கு எதிராக எழுதிய, எடுத்துப்போட்ட கட்டுரைகளும் கார்ட்டூன்களும் நாறும். இவர்கள்போன்ற சோக்கள் இருக்கும்வரைக்குமேனும் திராவிடக்கட்சிகள் எப்படியாகச் சீரழிந்தாலுங்கூட உயிர்வாழும் வாழவேண்டும்.
சந்திப்பு செல்வப்பெருமாள் போன்ற மார்க்ஸியவிடாய்க்காரர்களுக்குச் சொத்து போன்ற சொற்களை எல்லாவிடத்திலும் உதிர்க்கவேண்டும். இவர்களின் தானைத்தோழர் இந்து ராமின் அண்ணன் மகளைத்தான் தயாநிதி திருமணம் செய்திருக்கின்றார் என்பதாலே வருத்தம் போலும்.
//கொஞ்சமாவது யோசிங்கப்பா. // நல்லா ஓசிச்சிட்டம். கலைஞருக்குத்தான் எங்க ஓட்டு.
// சந்திப்பு said... மதுரையில மூன்று பேர் கொலையானதற்கு யார் காரணம்! சாட்சாத் இவர்களது குடும்ப சண்டைக்கு அப்பாவிகள் மூன்று பேர் பலி! இதுதான் அரசியலா? இதை எதிர்த்தால் திராவிடத்தையே எதிர்ப்பதாக அர்த்தமா?
//
சந்திப்பு,
பதிவின் சாரம் உங்களுக்கு புரியவில்லை என்ற ஐயத்தினால் பின்குறிப்பு சேர்த்திருக்கிறேன்.
:)
//இராமநாதன் said... இதில் ஒன்றுதான் சரி.. மற்றது தவறு என்று சொல்ல 'யோக்கியவான்' ஒருவர்கூட இல்லையென்பதுதான் நிதர்சனம்...
நல்ல பதிவு... //
வாங்க இராமநாதன் சார்.
சிலர் தயாநிதிக்கு ஆதரவு என்ற பெயரில் சொ.செ.சூ வைத்துக் கொள்வதைப் பார்த்தபோது எனக்கு இந்த பதிவின் கருத்து தோன்றியது !
:)
//அறியாதவன் said...
கட்சிப் பதவிகளில் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது, தமக்கு சாதகமான விஷயங்களை மீடியாவின் உதவியுடன் பெரிதுபடுத்திக் காட்டுவது என்பது தி.மு.க வின் பரம்பரை குணம். இப்போது கூட தவறு செய்த அழகிரியை கண்டிக்க வக்கில்லாத தலைவர். தயாநிதி குறுக்கு வழியில் பதவிக்கு வந்தது விவாதிக்கப்படவேண்டியதே.
எனக்கு புரியாதது ஒன்று தான். இவ்வளவு சுயநலம் படைத்த ஒரு அரசியல்வாதியிடம் இன்னும் ஏன் முட்டாள்தனமான விசுவாசம்? கொஞ்சமாவது யோசிங்கப்பா.
//
அறியாதவன் சார்,
எனக்கு அறியாத விசயமே கடுமையாக விமர்சனங்களை மட்டும் செய்துவந்தவர்கள் இதுபோன்ற சூழ்நிலைகளில் எப்படி திடிரென்று ஒருவரின் செயல்பாடுகளை புகழ்கிறார்கள் என்பது தான் !
அதுக்கு பதில் சொல்லுங்க விசுவாசமா ? வெறும் வேசமான்னு அப்பறம் பேசலாம் !
:)
பச்சைப் பார்ப்பனத்தனம்தான் வெளி வருகிறது.
பார்ப்பானையே எதற்கெடுத்தாலும் திட்டுகிறீர்கள்,குறை சொல்கிறீர்கள் என்று நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள் நன்கு பாருங்கள்.
இவர்கள் தயாநிதி மாறனின் ஆதரவாளர்கள் இல்லை.அவர் நல்லது செய்த்போது "கலைஞர் தன் குடும்பம்,தன் பேரன்.."என்று பாடியவர்கள்தாம் இப்போது தயாநிதிக்குப் பட்டங்கள் கொடுத்து வாழ்த்துகிறார்கள்.கலைஞரைத்திட்ட ஒரு சந்தர்ப்பம்.
இட்லி,வடை,சாம்பாரிலே ஒரு அநாமதேயம்"வேசி மகன்" என்று எழுதியிருக்கிறான்.நான் முதலில் அவன் அவனது தாயாரிடம் அவனைப் பற்றித் தெரிந்து கொண்டு எழுதட்டும்,என்றும் அதைப்போட்ட சாம்பாரைக் கண்டித்தும் எழுதியிருந்தேன்.அதைப்போட அந்த ஊச வடைச் சாம்பாருக்குத் துப்புமில்லை,துணிவுமில்லை.அவன் தாயார் என்ன சொன்னார்களோ தெரியாது.
இந்த அநாகரீக வாதிகள் குய்யோ முய்யோ என்று அழும்போதுதான் வேடிக்கையாக் இருக்கிறது.
பார்ப்பனர்களுக்கு மற்ற தமிழர்கள்மீது அக்கரை வருகிறது என்றால் அது தமிழர்களைப் பிரிக்கத்தான் அன்றி புகழ்வதற்கு நிச்சயமாக இருக்காது.
//இட்லி,வடை,சாம்பாரிலே ஒரு அநாமதேயம்"வேசி மகன்" என்று எழுதியிருக்கிறான்.நான் முதலில் அவன் அவனது தாயாரிடம் அவனைப் பற்றித் தெரிந்து கொண்டு எழுதட்டும்,என்றும் அதைப்போட்ட சாம்பாரைக் கண்டித்தும் எழுதியிருந்தேன்.அதைப்போட அந்த ஊச வடைச் சாம்பாருக்குத் துப்புமில்லை,துணிவுமில்லை.அவன் தாயார் என்ன சொன்னார்களோ தெரியாது.
//
தமிழன் உங்கள் கோபம் ஞாயமானதாக இருந்தாலும் வெளிப்படுத்தும் விதம் சரி இல்லை என்று நான் கருதுகிறேன். ஒருவர் நம்மீது சாக்கடையை கையால் அள்ளி வீசுகிறார் என்று பதிலுக்கு நாமும் அவ்வாறு செய்தால் நம் கையிலும் சாக்கடை இருக்கும் என்று சொல்லிக் கொள்கிறேன்.
தயாநிதி திமுக அமைச்சராக இருக்கும் போது
--------------------------------------
கட்சியில் எத்தனையோ சீனியர்கள் இருக்கும் போது ,முரசொலி மாறனின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக தயாநிதியை அமைச்சராக்கினார் கருணாநிதி .இது அப்பட்டமான குடும்ப அரசியல் .குடும்ப பாசம் கண்ணை மறைக்க கட்சி ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்தார் கருணாநிதி .தனக்கு இருக்கும் அதிகார ,பண பலத்தை வைத்து டாட்டாவையே மிரட்டியவர் தயாநிதி .இவர் ஏதோ பெரிய சாதனைகள் செய்து விட்டதாக இவர் குடும்ப ஊடகங்கள் பம்மாத்து பண்ணி வருகின்றன .இவர் செய்வதெல்லாம் வெறும் அதிகார துஷ்பிரயோகம் .கருணாநிதியின் குடும்ப நலனுக்காக அதிகாரத்தை வைத்து எல்லோரையும் மிரட்டுகிறார் .கோடி கோடியாக பணம் சேர்த்ததை விட இவர் சாதித்தது என்ன .
தயாநிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு
---------------------------------------------
ஒரு நல்ல மனிதரை ,உத்தமரை ,தமிழகத்துக்கு பெருமை தேடித்தந்த அமைச்சரை அநியாயமாக கருணாநிதி நீக்கியிருக்கிறார் .கருணாநிதியின் குடும்ப பாசத்துக்காக இந்த பத்தரை மாற்று தங்கத்தை பலி கொடுத்து விட்டார் .இவர் செய்த சாதனைகளுக்கு அளவே இல்லை .நல்லவர்கள் திமுக-வில் குப்பை கொட்ட முடியாது என்பதற்கு இவரே உதாரணம் .இவரை நீக்கியதால் இந்த நாட்டுக்கு கருணாநிதி செய்துள்ள துரோகத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்க முடியுமா ? கருணாநிதிக்கு அவர் குடும்பம் தான் முக்கியம் .அதனால் தான் உத்தமரான தயாநிதியை தூக்கி எறிந்து விட்டார்.
//ஜோ / Joe said...
தயாநிதி திமுக அமைச்சராக இருக்கும் போது
//
ஜோ...!
நீங்கள் எழுதிய 'அன்றும்', 'இன்றும்' சரியான சூடு !
'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே' என்ற வரி ஞாபகம் வருது !
:))))))))))
the author tries to say that ppl who complained on maran then, now praise him and find him innocent. he also brings in vaiko \ MGR into picture whch is totally irrelevant. some blogger link in tamilmanam says the dramas played by mgr to 'force' Muka to send MGR out. thus it created a sympathy wave. Vaiko case is different, he was loyal and perfect both inside and outside. so complaints. actually there are no complaints abt MGR too in this regard.
but i dont know why author chooses to address a very small group(actually its not a group) of pp who once said maran was bad and now says he is innocent. s this primary point itself fails, all other points which arise are useless
its clear that maran too was\is selfish. the only common truth is, no one is allowed to grow beyond Muka's family. and for Muka, even maran & co is a different family, in that regard.
எதிர்ப்பு வாதிகளின் திருட்டுத் தனத்தைக் கவணித்தீர்களா?
இட்லி,வடை,சாம்பார் மிகவும் நல்ல பிள்ளையாக"வேசி மகன்" பின்னூட்டத்தை அனைவரும் பார்த்து முடித்தவுடன் நீக்கியுள்ளது.
ஏதோ ஒன்றுமே தெரியாதது போலவும்,நண்பர் சொன்னதால் நீக்கி விட்டது போலவும் நடித்திருக்கும் நடிப்பைப் பதிவாளர்கள் கவணித்திருப்பார்கள்.
பின்னூட்டம் வந்த உடனே போட்ட எதிர்ப்புகளை வேண்டுமென்றே போடாமல்,பின்னுட்டத்தையும் நீக்காமல்,பின் நீக்கியிருப்பது சிலரைச் சில நாள் ஏமாற்றும் வித்தை.
சரியான பதிவு...எப்பொழுது கருணாநிதி, ஜெயலலிதா போன்ற சினிமா, நாடக ஆட்கள் எல்லாம் திராவிட கட்சிகளை விட்டு செல்கிறார்களோ அப்போதுதான் திராவிட கட்சிகள் தமிழ் நாட்டில் நல்லாட்சி தரமுடியும்..
படித்தவர்களுக்கு எப்பொழுதும் திராவிட கட்சிகளில் அங்கீகாரம் கிடையாது.
செ.கண்ணன்.சென்னை.
//JAY_KAY said...
சரியான பதிவு...எப்பொழுது கருணாநிதி, ஜெயலலிதா போன்ற சினிமா, நாடக ஆட்கள் எல்லாம் திராவிட கட்சிகளை விட்டு செல்கிறார்களோ அப்போதுதான் திராவிட கட்சிகள் தமிழ் நாட்டில் நல்லாட்சி தரமுடியும்..
படித்தவர்களுக்கு எப்பொழுதும் திராவிட கட்சிகளில் அங்கீகாரம் கிடையாது.
செ.கண்ணன்.சென்னை.
//
படித்தவர்கள் இருக்கும் பிஜேபி, காங்கிரஸ் கட்சிகளின் பவிசுகளும் இதைவிட மோசம் தான்.
:)
கருத்துரையிடுக