பின்பற்றுபவர்கள்

14 மே, 2007

சன் டிவிக்கு பொன்னான வாய்ப்பு !

இதுநாள் வரை சன் டிவி அறிவிக்கப்படாத திமுக ஆதரவு தொலைகாட்சியாகவே இருந்து வந்தது. நடந்து முடிந்த கருத்து கணிப்பும் அதைத் தொடர்ந்த துயர சம்பவங்களும் சொந்த செலவில் சூனியம். ஊழியர்களை பலி கொடுத்துக் கொண்டதுமட்டுமின்றி மத்திய அமைச்சர் பதவியையும் திமுக பறித்ததைத் தொடர்ந்து சன் டிவி இனியாவது கட்சி வேறு தொலைக்காட்சி வேறு என்ற நிலையை எடுக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சன் டிவி திமுக தொலைக்காட்சி என்ற முத்திரையை அகற்றிக் கொள்ள வேண்டும்.

ஆதிக்க சக்திகள் லாபம் கொழிக்கும் தொழிலான பத்திரிக்கை துறையை தங்களுக்கு மட்டும் உரித்தான பரம்பரை தொழில் போல் செய்தது மட்டுமின்றி அவர்கள் தருவதுதான் செய்தி என்று சமுக அமைப்பின் தலையெழுத்தை தங்கள் செய்திகளின் மூலம் நிர்ணயம் செய்து வந்தனர். இந்த நிலைமையில் இருந்து வெற்றிகரமாக அதே தொழிலில் கொடிகட்டிப் பறந்தனர் தினத்தந்தி மற்றும் மறைந்த கே.பி கந்தசாமியின் தினகரன் பத்திரிக்கைகள். இன்றைய நாளில் மீடியா எனப்படும் தகவல் தொடர்பு துறையில் ஆதிக்க சக்திகளை ஓரளவுக்கு பின்னுக்கு தள்ளி சன் தொலைக்காட்சி மற்றும் பல செய்தி ஊடகங்கள் நல்ல முறையில் வளர்ந்திருக்கின்றன.

இந்நிலையில் ஆதிக்க சக்திகள் அல்லாத பிறர் நடத்தும் மீடிய நிறுவனங்கள் தங்கள் மீதான கட்சி சார்பு முத்திரையை விலக்கிக் கொண்டால் மேலும் சிறப்பானதொரு வளர்சியை பெறமுடியும். சன் தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழுக்கு இந்த வேளை ஒரு பொன்னான வேளை தன் மிதான திமுக முத்திரையை அகற்றிக் கொண்டு நடுநிலை நிறுவனங்களாக வளருவதற்கு நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் !

14 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சன் டிவி வளர்ந்ததே தி மு க வினால்தான் என்பதை நிணைவில் கொள்க. தினகரன் பத்திரிகை வாங்கிய போது, கொடுக்கப்பட்ட விலை, தி மு க விலிருந்து ராஜ்யசபை எம் பி பதவி. இதனையும் மறந்து விட கூடாது. சன் டிவி நடுநிலையான தொலைகாட்சியாக இருந்தால், வரவேற்கலாம். ஒரு கருத்தை தினிக்க முயற்சித்தால், ஏற்றுக்கொள்ள முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//சன் டிவி வளர்ந்ததே தி மு க வினால்தான் என்பதை நிணைவில் கொள்க. //

திமுக வின் இமேஜை தக்கவைத்துக் கொள்வதற்கும் சன் டிவி உறுதுணை புரிந்ததையும் மறுப்பதற்கு இல்லை. சன் தொலைக்காட்சி நடுநிலை தொலைக்காட்சியாக நல்ல நிகழ்சிகளை அளிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் !

கருத்துக்கு நன்றி அனானி அண்ணா !

VSK சொன்னது…

நல்ல கருத்து!
வரவேற்கிறேன்!
செய்வார்களா?

கோவி.கண்ணன் [GK] சொன்னது…

// VSK said...
நல்ல கருத்து!
வரவேற்கிறேன்!
செய்வார்களா?
//

நல்ல பின்னூட்டம் மகிழ்கிறேன் !

நன்றி விஎஸ்கே ஐயா !

பெயரில்லா சொன்னது…

ஜிகே அய்யா,
அது சரி;சன் டீவிக்கு பொன்னான வாய்ப்பு தான்.ஆனா உங்களுக்கு அந்த பொன்னான வாய்ப்பு வரவில்லையா?நீங்க ஏன் நடு நிலையா இல்லாமல்,கேவலமாக மஞ்ச துண்டுக்கு ஜல்லி அடிக்கிறீர்கள் என்பதை விளக்குவீர்களா?

பாலா

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

இன்று செய்தி வாசிக்கும் போது கருப்பு சேலை யுடன் வாசித்தார்கள்.
துக்கம் அனுஷ்டிக்கிறார்கள் போல.தயாநிதியின் ராஜினாமாவிற்கு.

அதிகம் பேர் பார்ப்பது சன் டிவி.
நடுநிலை வகித்தால் எங்கேயோ போய்விடும்.

Mugundan | முகுந்தன் சொன்னது…

திமுக-வினால் வளர்ந்த மீடியா சாம்ராஜ்யம் தான்
சன் குழுமம்.

இன்று நடப்பது குடும்ப சண்டைதான்....ஆதாயம் வேண்டி
சீக்கிரம் இணைந்து விடுவார்கள்.

கலைஞர் செய்ய வேண்டியது இன்னும் ஒன்று உண்டு....அண்ணா
அறிவாலயத்திலிருந்து சன் டிவி-யை விரட்டுவது.

சன் குழுமத்தினால் தமிழ் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.
அலசலுக்கு நன்றி கோவி.கண்ணன்

அன்புடன்,
முகு

பொன்ஸ்~~Poorna சொன்னது…

நம்பிக்கை இல்லீங்க கோவி.. முகு சொல்வது போல், எல்லாம் நாடகமாத் தான் தெரியுது, ஏன் என்பது தான் புரியவில்லை..

திமுகவை விட்டாலும் நடுநிலையா இருக்க முடியுமா இவங்களால?... பார்ப்போம்..

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜிகே அய்யா,
அது சரி;சன் டீவிக்கு பொன்னான வாய்ப்பு தான்.ஆனா உங்களுக்கு அந்த பொன்னான வாய்ப்பு வரவில்லையா?நீங்க ஏன் நடு நிலையா இல்லாமல்,கேவலமாக மஞ்ச துண்டுக்கு ஜல்லி அடிக்கிறீர்கள் என்பதை விளக்குவீர்களா?

பாலா //

பாலா ஐயா,

நடுநிலையா அப்படின்னா என்னா ஐயா ? ஆட்சியை கலைச்சிட்டு அம்மா வருனும் என்று ஆசைப்படுவது நடுநிலையா ஐயா ?
:))))

கோவி.கண்ணன் சொன்னது…

//முத்துலெட்சுமி said...
இன்று செய்தி வாசிக்கும் போது கருப்பு சேலை யுடன் வாசித்தார்கள்.
துக்கம் அனுஷ்டிக்கிறார்கள் போல.தயாநிதியின் ராஜினாமாவிற்கு.

அதிகம் பேர் பார்ப்பது சன் டிவி.
நடுநிலை வகித்தால் எங்கேயோ போய்விடும்.
//

முத்துலெட்சுமி,

பார்ப்போம்...சன் டிவியும் திருந்த ஒரு வாய்ப்பு.

கோவி.கண்ணன் சொன்னது…

// முகு said...
திமுக-வினால் வளர்ந்த மீடியா சாம்ராஜ்யம் தான்
சன் குழுமம்.

இன்று நடப்பது குடும்ப சண்டைதான்....ஆதாயம் வேண்டி
சீக்கிரம் இணைந்து விடுவார்கள்.

கலைஞர் செய்ய வேண்டியது இன்னும் ஒன்று உண்டு....அண்ணா
அறிவாலயத்திலிருந்து சன் டிவி-யை விரட்டுவது.

சன் குழுமத்தினால் தமிழ் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.
அலசலுக்கு நன்றி கோவி.கண்ணன்

அன்புடன்,
முகு
//

முகு மாறன் சகோதரர்களிடம் உள்ள பணத்துக்கு 10 அறிவாலயம் கட்டலாம். பங்காளிங்க இன்னிக்கு அடிச்சிக்குவாங்க நாளைக்கு கூடிக்குவாங்க ... ம் சரியாத்தான் சொல்றீங்க !

Unknown சொன்னது…

குடும்பத் தகராறு நாளைக்கே சரியாகிடும்.
நீங்கள் ரொம்பத்தான் ஆசை படுவதாகத் தெரிகிறது.
உங்கள் ஆசைபோல் நடந்தால் நல்லதுதான்.

பெயரில்லா சொன்னது…

//நடுநிலையா அப்படின்னா என்னா ஐயா ? ஆட்சியை கலைச்சிட்டு அம்மா வருனும் என்று ஆசைப்படுவது நடுநிலையா ஐயா ?
:))))//

ஜிகே அய்யா,
மறுபடியும் நடுநிலையா இருக்க ஒரு பொன்னான வாய்ப்பை தவறவிட்டு விட்டீர்களே?கண்ணகிக்கு பிறகு ,அழகிரி அய்யா மதுரையை எரித்த விஷயத்தில் மஞ்ச துண்டுக்கு ஏன் ஜல்லி அடிக்கறீங்கன்னு கேட்டாக்க,
அம்மா ஆட்சின்னு உளற ஆரம்பித்துவிட்டீர்கள்.க்ரீமி லேயர் திராவிடக்குஞ்சுகளுக்கே உரிய,ஆணவமும்,அரைவேக்காட்டுத்தனமும் கலந்த அயோக்யத்தனமா மறுபடி ஜல்லி அடித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜிகே அய்யா,
மறுபடியும் நடுநிலையா இருக்க ஒரு பொன்னான வாய்ப்பை தவறவிட்டு விட்டீர்களே?கண்ணகிக்கு பிறகு ,அழகிரி அய்யா மதுரையை எரித்த விஷயத்தில் மஞ்ச துண்டுக்கு ஏன் ஜல்லி அடிக்கறீங்கன்னு கேட்டாக்க,
அம்மா ஆட்சின்னு உளற ஆரம்பித்துவிட்டீர்கள்.க்ரீமி லேயர் திராவிடக்குஞ்சுகளுக்கே உரிய,ஆணவமும்,அரைவேக்காட்டுத்தனமும் கலந்த அயோக்யத்தனமா மறுபடி ஜல்லி அடித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

பாலா
//

பாலா ஐயா,
நடுநிலை போர்டு நீங்க வச்சிருந்து எல்லோருடைய பதிவிலும் மாட்டுறிங்கன்னு தெரியாமல் போச்சு ஐயா, இனிமே எழுதும் போது உங்க அவார்டை நினைச்சிக்கிட்டே எழுதுறேன் ஐயா. இந்த தடவை பெரிய மனசு பண்ணி விட்டுடுங்க ஐயா !
:))))))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்