பின்பற்றுபவர்கள்

4 ஏப்ரல், 2007

எனக்கு ஒரு வயசு ஆகுது !

வலைப்பதிவில் விபத்தாக வழுக்கி விழுந்து இன்றுடன் ஒரு ஆண்டு பூர்த்தியாகிறது. இதில் கற்றதும், பெற்றதும் பெரும்பாலும் நல்ல விசயங்களே.

நிறைய நண்பர்கள் அறிமுகம் கிடைத்தது. நிறைய நண்பர்களை சந்தித்து இருக்கிறேன். என்னை வந்து சந்தித்தும் இருக்கிறார்கள். இதில் முதன்மையாக நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளது திரு (வி) எஸ்கே ஐயா அவர்கள். என்மீது அன்பு கொண்ட பல நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.

அறிமுகப் பதிவில் குறிப்பிட்டது போலவே அரசியல்,கதை, கவிதை, கட்டுரை என எல்லா பிரிவுகளிலும் என் அறிவுக்கு எட்டியவற்றை எழுதி தள்ளி இருக்கிறேன். காலம் மற்றும் காலங்களிலும், சொல் ஒரு சொல், சற்றுமுன் மற்றும் வ.வா.ச வுக்கு 2 பதிவுகள் என 300 ++ பதிவுகள் எழுதி இருக்கிறேன். மொக்கை பதிவுகளின் விழுக்காடு அதிக அளவில் இருக்கிறது :)). 5,000 க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெற்றும் 15,000க்கு அதிகமான பின்னூட்டங்களைப் நண்பர்களின் வலைப்பதிவுகளுக்கு போட்டு ஊக்கப்படுத்தி இருக்கிறேன்.

எனது பதிவுகளில் எந்த தனிமனித தாக்குதல்களும் இருந்ததாக தெரியவில்லை.

ஒரு வயசு இன்னிக்கு பூர்த்தி ஆகிவிட்டது.



-- அன்புடன்,
கோவி.கண்ணன்
Blogger Sites :
http://kaalangkal.blogspot.com

http://govikannan.blogspot.com


குருமா (கூட்டு) பதிவுகள் :
http://solorusol.blogspot.com

http://satrumun.blogspot.com





26 கருத்துகள்:

வெட்டிப்பயல் சொன்னது…

வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி சொன்னது…

வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி சொன்னது…

வெட்டிப் பயல்

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

:))

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

வாழ்த்துக்கள்.

செல்லி சொன்னது…

வாழ்த்துக்கள்!மேலும் உங்க பணி தொடரட்டும்!

Subbiah Veerappan சொன்னது…

Vaazththukkal Mr.G.K

தருமி சொன்னது…

கொடுத்துள்ள statistics பார்த்தால் ரொம்பவே பிரமிப்பா இருக்குதுங்க.
ஒரு சொல் பாராட்டு; அம்மாடியோவ் !

வாழ்த்துக்கள்.........

SurveySan சொன்னது…

தொடர்ந்து கலக்குங்க. வாழ்த்துக்கள்.

வியர்டலயோ இன்னும்? பர்த்டே அன்னிக்கே வியர்டிடுங்களேன்.

துளசி கோபால் சொன்னது…

ஹேப்பி பர்த்டே டூ யூஊஊஊஊஊஊஊஊஊ

வாழ்த்து(க்)கள் .

வெற்றி சொன்னது…

/* 10000 க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெற்றும் 30000க்கு அதிகமான பின்னூட்டங்களைப் நண்பர்களின் வலைப்பதிவுகளுக்கு போட்டு ஊக்கப்படுத்தி இருக்கிறேன். */

Wow! எழுதிய பின்னூட்டங்கள் எத்தனை, மற்றவர்கள் உங்களுக்கு எழுதிய பின்னூட்டங்கள் எவ்வளவு என்பதெல்லாம் ஞாபகம்[கணக்கு] வைத்திருக்கிறீர்கள்.:))

கோ.க, உங்களின் பல பதிவுகளைப் படித்திருக்கிறேன். குறிப்பாக எம்மினத்தில் புரையோடிக் கிடக்கும் ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மிகவும் பண்பாக, மனிதநேயத்துடன் பல பதிவுகளில் வலியுறுத்தியிருந்தீர்கள். தொடர்ந்தும் எழுதுங்கள்.

ஓராண்டுப் பூர்த்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் பதிவுலகில் இன்னும் பல ஆண்டு விழாக்கள் காணத் தமிழன்னையை வணங்கி நிற்கிறேன்.

Unknown சொன்னது…

உள்ளேன் அய்யா இன்னும் பல்லாண்டு எழுதி எங்களை பதம்பார்க்க சாரி பதப்படுத்த வேண்டுகிறேன்

பெயரில்லா சொன்னது…

நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!! இன்னும் பல்லாண்டு பலவாண்டு எழுதி இம்சிக்க வேண்டுகிறேன்.

ILA (a) இளா சொன்னது…

ஒரு வருஷ காலமும், எங்க பின்னூட்டத்தையெல்லாம் சகிச்சு கிட்டு, அடிவாங்கியும் வாங்காமையும், வளைஞ்சும், நெளிஞ்சும் வெற்றிகரமா கில்லி மாதிரி பதிவு போடும் கோவிச்சுக்கத் தெரியாத கோவிக்கு என்னோட வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

தொடர்ந்து கலக்கி, வாகை சூட வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

ஒரு வருடம் தானா கண்ணன்.

நிறைய எழுதி இருக்கிறீர்கள்.
வளம் தரும் சிந்தனைகள் மேலும் தர வாழ்த்துக்கள்.

வடுவூர் குமார் சொன்னது…

இரண்டாவது வருடத்துக்குள் நுழையும் கோவியாரை வாழ்த்தி வரவேற்கிறேன்.

இலவசக்கொத்தனார் சொன்னது…

வாழ்த்துக்கள்.

ப்ரசன்னா (குறைகுடம்) சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//வழுக்கி விழுந்து இன்றுடன்//

வாழ்த்துக்கள் கோவி ஐயா! தொடர்ந்து கலக்குங்க!!
அது என்ன வழுக்கி விழுந்து? பழம் வழுக்கிப் பாலில் விழுந்தது போலவா? :-)

//10000 க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெற்றும் 30000க்கு அதிகமான பின்னூட்டங்களைப்//

ஹை...இதையெல்லாம் இவ்வளவு சுலபமா எப்படி கணக்கெடுக்கறீங்க? Bank Pass book மாதிரி ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க! புண்ணியமாப் போவும் :-)))

மங்கை சொன்னது…

கோவி...

தலைப்பு படிக்கிறப்போ இந்த "ஒரு" விட்டுட்டு படிச்சிட்டேன்...அதான் ஓடி வந்தேன்..:-))...வாழ்த்துக்கள்..

குமரன் (Kumaran) சொன்னது…

குருமா பதிவுகளிலும் கலக்க வாழ்த்துகள் அண்ணா. :-)

காட்டாறு சொன்னது…

வாந்த்துக்கள். விமரிசையாக கொண்டாடியிருக்கிறீர்கள்!
// 10000 க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெற்றும் 30000க்கு அதிகமான பின்னூட்டங்களைப் நண்பர்களின் வலைப்பதிவுகளுக்கு போட்டு ஊக்கப்படுத்தி இருக்கிறேன். //

சிவபாலன் சொன்னது…

GK,

வாழ்த்துக்கள்.!!

Many More returns! :))

கப்பி | Kappi சொன்னது…

வாழ்த்துக்கள்!! :)

சினேகிதி சொன்னது…

vaalthukkal :-))) enkau 2 vayasagapoguthe :-) en birthday ku vaango :-)

priyamudanprabu சொன்னது…

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்