பின்பற்றுபவர்கள்

26 ஏப்ரல், 2006

தேர்தல் முடிவு 1.

மே 10. கடந்த மே 8 ஆம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில், அதிமுக 150 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதைப் பற்றி முதல்வர் ஜெயலலிதா கூறுகையில், கருணாநிதியின் இலவச அறிவிப்பை மக்கள் நம்பாததும், தன்னுடைய பொற்கால ஆட்சியும் தான் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் என்றும் குறிப்பிட்டர். விரைவில் ஆளுனரை சந்திக்க இருப்பதாகவும் ஆட்சி அமைத்து உடனடியாக சட்ட சபையை கூட்ட இருப்பதாகவும் அறிவித்தார்.

மே. 11. தேர்தல் தோல்வியைப் பற்றி இப்போதைய சூழ்நிலையில் தான் கருத்து தெரிவிக்கவில்லை என்றும், விரைவில் பொதுக் குழுவைக் கூட்டி தோல்விக்கான காரணங்கள் ஆரயப்படும் என்றும் கருணாநிதி தெரிவித்தார்.

மே 12. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தது, அது இன்று காலை அறிவித்த அமைச்சர் பட்டியலில் பெரும் மாற்றம் இருக்கும் என்று பத்திரிகை செய்திகள் அறிவிக்கின்றன. சரியான அமைச்சர் பட்டியல் மாலை நேரத்தில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மே.13. (காலை செய்தி) பதவியேற்பு விழாவில் அதிமுக மதிமுகவை புறக்கணித்தது.

மே 13. (மாலை செய்தி) வைகோ அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார். அவர் இன்று விடுத்த அறிக்கையில் தன்னால் தான் அதிமுக அமோக வெற்றி பெற்றதாகவும், காரியம் ஆனவுடன் மதிமுக புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றம் சாற்றினார்.

மே. 14. மதிமுக ஐந்து தொகுதிகளில் வென்றது அதிமுக போட்ட பிச்சை என்று முதல்வர் ஜெயலலிதா வைகோவை சாடினார்.

மே 15 : மேம்பால ஊழல் வழக்கிற்காக ஸ்டாலின் நல்லிரவில் மீண்டும் கைது. முன்னதாக கருணாநிதியையும் கைது செய்ய திட்டம் இருந்ததாகவும், வயதை கருத்தில் கொண்டு கைவிடப்பட்ட தாகவும், ஆனால் வழக்கு தொடரப் போகதாவும் அதிமுக அரசு அறிவித்தது.
தேர்தல் முடிவு 2. தொடரும்...

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தீர்க்கதரிசி சார் நீங்க...!!!!

பெயரில்லா சொன்னது…

mudive pannittinga pola

பெயரில்லா சொன்னது…

அப்படியே 'ஜெ' தோற்றால் என்ன சொல்லுவார் என்பதையும் போட்டிருக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

தங்க வேலு, சிட்டுக்குருவி,
கொஞ்சம் பொறுங்கள், தேர்தல் முடிவு 2 : தொடரும்னு போட்டிருக்கேன் இல்லையா ?

பெயரில்லா சொன்னது…

லண்டனில் இருந்து எழுதும் ஜெயக்குமார் என்பவனும் மாயவரத்து ரமேஷ்குமார் என்பவனும் இந்த பதிவைப் படிக்க வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

சூப்பர் கோவி சார்.... நிச்சயமாகவே ஜெ. வந்தால் 100 சதம் இது தான் நடக்கும்....

TBCD சொன்னது…

அருள் வாக்கு அன்னாச்சி....வாய்க வாய்க

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்