மே.10 கடந்த மே 8ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க 154 இடங்களில் வெற்றி பெற்று இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் பெரும் அதிர்சியை கொடுத்துள்ளது. இந்த வெற்றியைப் பற்றி அதன் தலைவர் திரு.விஜயகாந்த் அறிவிக்கையில். தான் இதனை எதிர்பார்த்தாகவும், 140இடங்களில் தன் கட்சி ஜெயிக்கும் என்று நினைத்திருந்ததாகவும் 154 இடங்கள் கிடைத்தது ஒரு இமாலய வெற்றி என்றும் குறிப்பிட்டார். எதிர்கட்சிகளும், பத்திரிக்கைகளும் தன் கட்சியின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டதற்கு அவர்களே தங்கள் முகத்தில் கரிபூசிக் கொண்டதாகவும் குறிப்பிட்டார். எம்ஜியாருக்கு பிறகு தமிழ்னாட்டை தன்னால் தான் காக்க முடியும் என்று தமிழ்மக்கள் நம்புவதாக இந்த தேர்தல் காட்டுகிறது என்றும், ஊழல் திராவிடக் கட்சிகளை ஒழித்தது தமிழ்மக்கள் தங்களுக்கு விடுதலை தேடிக் கொண்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
விஜியகாந்தின் வெற்றியை பற்றி குறிப்பிட்ட திரு கருணாநிதி, அதிமுகவிற்கு மாற்றாக ஒரு நல்ல அரசு தமிழ்னாட்டில் அமைந்தை நினைத்து தான் மகிழ்சி அடைவதாகவும், இனி தான் அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.
மருத்துவர் ராமதாசும், திரு தொல்.திருமாவளவனும் இன்று கூட்டாக அனுப்பிய அறிக்கையில், தமிழர்களின் இம்முடிவு கவலை அளிப்பதாகவும், இருந்தாலும் புதிய அரசுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், தங்களின் தமிழ் போராட்டம் தொடரும் என்று அறிவித்திருந்தனர்.
திரு வைகோ பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில், தமிழகம் தலை நிமிர்ந்துள்ளதாகவும். தமிழனை தமிழன் ஆளவேண்டும் என்ற தன் கனவு நினைவு ஆனதற்கு திரு விஜயகாந்து அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாக அறிவித்திருந்தார்.
தமிழக பா,ஜ.க தலைவர் இல.கனேசன் பத்திரிக்கை பேட்டியில், தன் கட்சி தொடங்கும் நாளில் தன்னை ஒரு இந்துவாக அடையாளப் படுத்திக் கொண்டதால் இந்துக்கள் வாக்கை பெற்று திரு விஜயகாந்த் வெற்றி பெற்றதாக தெரிவித்த அவர். மேலும் விஜயகாந்தின் ஆட்சி தமிழகத்திற்கு ஒரு ராம ராஜ்யமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவிப்பதாக கூறினார்.
முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அறிக்கையில், கறுப்பு எம்ஜி.ஆர் என்று பொய்யான தகவல் பரப்பியே விஜயகாந்த் வெற்றி பெற்றிருப்பதாகவும், அதனால் தே.மு.தி.க கட்சி பெற்ற வெற்றி செல்லாது என்ற வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் ஜோதி தலைமையிலான ஒரு குழு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
மே. 11. தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திரு விஜயகாந்தின் கட்சி அலுவலகமான ஆண்டால் அழகர் மண்டபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், திரு விஜயகாந்த் பெண்களுக்கு முன் உரிமை அளிக்க வேண்டும் என்ற கொள்கையில் தான் உறுதியாக இருப்பதாகவும் அதனால் அவருடைய மனைவி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் முதல்வர் பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிக்கையில் திரு விஜயகாந்த் தான் உள்துறை அமைச்சர் பொறுப் பேற்றுக் கொண்டு, தமிழ்னாட்டில் உள்ள தீவிரவாதிகளையும், ஊழல்வாதிகளையும் ஒழிக்க பதவியேற்பு நாளில் சபதம் ஏற்றுக் கொள்ளப்போவதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது.
மே.12 அமிர்த ராஜ் எனப்படும் திரு விஜய காந்தின் தே.மு.தி.க திருமதி. பிரேம லதா விஜயகாந்த் முதலமைச்சராகவும், திரு விஜயகாந்த் உள்துறை அமைச்சராகவும் அவரது மச்சான் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவியேற்க ஆட்சி அமைத்தது.
தேர்தல் முடிவு 4 தொடரும் ...



