பின்பற்றுபவர்கள்

31 மார்ச், 2014

இந்துத்துவாவை மறைமுகமாக வளர்பவர் யார் ?

இன்னிக்கு செய்தி ஒன்றை படித்தேன், 'நாணயத்தில் ஸ்ரீவைஷ்ணவதேவி உருவப்படம்: - ' முஸ்லிம் அமைப்புகள் கண்டனம். இந்தியாவில் கண்டனம் செய்வதற்கு காரணங்களே தேவை இல்லை. ஏதாவது ஒன்றை தமக்கு எதிர்ப்பாக நினைத்துக் கொண்டாலே போராட்டம், சாலை மறியல், மனு கொடுப்பது உள்ளிட்டவற்றை செய்துவிடலாம்.

காலம் காலமாக பணத்தை லெட்சுமி, தெய்வம் என்ற பொருளில் தான் இந்தியர்கள் நம்பிவந்தார்கள், இன்றும் நம்பிக் கொண்டார்கள், ஒருசிலரின் மதமாற்றத்திற்கு பிறகு ஒட்டுமொத்தமாக அனைவருமே அந்த நம்பிக்கையை தூக்கி எரியவேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் அனைவரும் 'மதச்சார்பின்மை' என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளவேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

'ஹலல்' என்ற எழுதப்பட்ட கறிவிற்கும் கடையில் 'அல்லா சாமியை வேண்டி' வெட்டியதை நாங்கள் வாங்கமாட்டோம் என்று ஏனைய மதத்தினர் புறக்கணித்தால், கறிக்கடைக்காரர் வயிற்றில் ஈரத்துணியை நனைத்துப் போட்டுக் கொள்ள வேண்டியது தான், இதெல்லாம் விட நாத்திகரும் வாழும் நாட்டில் குழாய் ஒலிப்பெருக்கியில் 'அல்லாஹு அக்பர்' தொழுகை நேர அறிவிப்பு மற்றவர்களின் மதசார்பின்மையெல்லாம் கேட்டு தான் பின்னர் எழுப்பப்படுகிறதா ?

கிட்டதட்ட 95 விழுக்காடு நெல்வயல்களும் தாணியங்களும் பயிறிடும் முன் விருப்ப தெய்வத்திற்கு வேண்டிவிட்டு தான் விதைக்கப்படுகின்றன, அது போன்று அறுவடையில் முதலில் படையலுக்கு எடுத்துவைத்துவிட்டு தான் பிறகு விற்பதற்கான தாணியங்களை அறுத்து எடுக்கிறார்கள், ஏன் விளைச்சல் நன்றாக விளைந்தால் தான் நம்பிய கடவுள் கொடுத்தவையே அவை என்று நம்புகிறார்கள். மேற்கண்ட போராட்ட அமைப்புகள் இந்த தாணியங்களையெல்லாம் வாங்கி உண்ணாமல் எதை உண்ணுகிறார்கள் ? மதச்சார்பற்ற தாணியங்கள் என்று ஏதேனும் விளைகிறதா ?

உலகிலேயே இஸ்லாமியர்கள் மக்கள் தொகையில் முதலில் இருக்கும் இந்தோனிசியாவில் பிள்ளையார் படத்தை ரூபியாவில் அடித்து புழக்கத்தில் விட முடிகிறது, இராமயண நாயகர்களை, இந்து கோவில்களை பணத்தில் அச்சடித்து விட முடிகிறது, அங்கெல்லாம் அந்த நாட்டு இஸ்லாமிய அமைப்புகளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை.




தீவிரமாக இந்து நம்பிக்கைக் கொண்ட ஒருவன் மேற்கண்ட செய்தியைப் படித்தால் தனக்குள்ளே கேள்வி கேட்கவே மாட்டானா ? இந்து பெரும்பான்மை உள்ள ஒரு நாட்டில் தங்கள் நம்பிக்கை சார்ந்த ஒன்றை கவுரவப்படுத்தும் பொழுது அதனை எதிர்ப்பது தனது நம்பிக்கையை மதிப்பதையும் எதிர்பதாகும் என்று நினைக்கமாட்டானா ?

மதச்சார்பின்மை என்பது எனது எல்லைக் கோட்டிற்குள் நீ வராதே என்பதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது, அதனால் இந்தியாவிற்கு தேவை மதச்சார்பின்மை அல்ல மதச் சகிப்புத் தன்மையே. இவர்களின் எதிர்ப்பு தேவையற்ற காழ்புணர்வுகளையும் இந்துத்துவத்தை வளக்கவே உதவும். இவர்களது வைஷ்ணவி உருவம் பதிக்கப்பட்ட நாணய எதிர்ப்புணர்வும், இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்காதே என்கிற இந்துத்துவ கோஷமும் ஒன்றே.

இன்னும் இவர்கள் தமிழ்நாட்டு அரச முத்திரையில் இருக்கும் கோபுரத்தை தூக்கவேண்டும் என்று சொல்லாதது வியப்பளிக்கிறது, ஒருவேளை தமிழ்நாட்டின் அரசு சின்னத்தில் கோபுரம் இருப்பதை இவர்கள் கவனிக்கவில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

மேற்கண்ட போராளிகள் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் ஏதேனும் ஒருவகையில் மதம் அல்லது வேலை ஆகிவற்றில் தொடர்பு வைத்திருப்பவர்கள் தான், இவர்கள் ஏன் அந்த நாடுகளில் இவர்கள் விரும்பும் மதசார்பின்மையை பரிந்துரைத்து ஏக உலகத்தில் மதசார்பு அற்ற அரசுகள் ஏற்படுவதை முன்னெடுக்கக் கூடாது ?

39 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

மதச்சார்பின்மை அல்ல மதச் சகிப்புத் தன்மையே


அதென்ன நீங்களும் ஹிந்து எதிர்ப்பு (அ) ஆதரவு (அ) வளர்ப்பு என்கிற ரீதியில் தான் இதை பார்க்கின்றீர்களா?

கிறிஸ்துவம், முஸ்லீம் மதம் குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடப்படவே இல்லையே?

மோடியை கண்டம் துண்டமாக வெட்டுவேன் என்று ஒருவர் பகிங்கரமாக சவால் விடுகின்றாரே?


ஜோதிஜி சொன்னது…

சமயம் இருக்கும் போது படித்துப் பாருங்க.

http://deviyar-illam.blogspot.com/2014/03/blog-post_27.html

http://deviyar-illam.blogspot.com/2014/03/2_26.html


கோவி.கண்ணன் சொன்னது…

//அதென்ன நீங்களும் ஹிந்து எதிர்ப்பு (அ) ஆதரவு (அ) வளர்ப்பு என்கிற ரீதியில் தான் இதை பார்க்கின்றீர்களா?//

சொல்லப் போனால் நாத்திக அமைப்புகள் தான் இவற்றையெல்லாம் எதிர்க்க வேண்டும், ஆனால் மதம் சார்ந்தவர்கள் மதச்சார்பின்மை பேசுவது தான் வியப்பளிக்கிறது :)

கோவி.கண்ணன் சொன்னது…

கண்டிப்பாக நாளை அலுவலகம் செல்லும் போது பயண நேரத்தில் படிக்கிறேன். நன்றி

வவ்வால் சொன்னது…

இந்திய செக்கியுலரிசம் என்றால் என்ன தெரியுமோ?

சிறுபான்மை மதநம்பிக்கைக்களை ஆதரிப்பது :-))

# நெத்தியில் பொட்டு வச்சு வந்த எம்பியை மஞ்சத்துண்டு கிண்டலடித்தார்,ஆனால் இப்தார் நோம்புக்கு தொப்பி போட்டு போவார்,அவரு நாத்திகராம் :-))

# இந்திய அரசியல் நிர்ணய சட்டம் "மதச்சார்பற்றது என இயற்றப்படவே இல்லை, 1971 இல் கம்யூனிச ரஷியாவின் ஆதரவைப்பெற "செக்கியூலர்" எனச்சேர்த்து சட்ட திருத்தம் செய்தது இந்திராக்காந்தி தான்.

எனவே இப்ப பெரும்பான்மை உள்ள மத்திய அரசாளும் கட்சி நினைத்தால் செக்கியூலர் என்ற சொல்லை அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிஆம்பிளில் இருந்து நீக்க முடியும்.

சிலப்பேர் எதுக்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்னு கிளம்பி இந்தியாவை மதச்சார்பு நாடாக மாத்திடுவாங்களோனு தான் தோன்றுது அவ்வ்!

பொன் மாலை பொழுது சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பொன் மாலை பொழுது சொன்னது…

//தமிழ்நாட்டு அரச முத்திரையில் இருக்கும் கோபுரத்தை தூக்கவேண்டும் என்று சொல்லாதது வியப்பளிக்கிறது, ஒருவேளை தமிழ்நாட்டின் அரசு சின்னத்தில் கோபுரம் இருப்பதை இவர்கள் கவனிக்கவில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது//

சென்ற வருடம் சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழ் நாடு அரசின் இந்த சின்னத்தை மாற்றவேண்டும் என ஒருவர் இது குறித்து வழக்கு போட்டு அது பின்னர் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பி.ஜே.பி க்கு நாடு முழுவதும் பெருகி வரும் ஆதரவின் காரணம் மோடி அல்ல இந்து மத எதிர்பாலர்கலால்தான் என்பதுதான் உண்மை.

பெயரில்லா சொன்னது…

அதற்கென்ன, இன்னொரு காசில் மெக்காவின் காபாவையும், இன்னொரு காசில் இயேசுவின் திருவுருவையும், போட்டுவிட்டால் போச்சு... நம் கொடியிலேயே பௌத்த சின்னமான சக்கரம் தான் உள்ளது.. இருந்துவிட்டு போகட்டுமே, அனைத்து மதச் சின்னங்களும் மூதாதையரின் பாரம்பரியமாக பார்த்தால் இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.. !

viyasan சொன்னது…

நல்ல பதிவு. மெக்காவின் காபாவும், ஏசுவும் மூதாதையரின்பாரம்பரிய சின்னங்களா என்று கேட்டால், தமிழர்கள் (திராவிடர்கள்)- சுமேரியர்கள், அவர்கள் மத்திய கிழக்கிலிருந்து தான் வந்தார்கள், அதனால் மத்திய கிழக்கு மதங்களின் அடையாளமாகிய காபாவும், ஏசுவும் மூதாதையர்களின் சின்னம் என்றும் ஒரு பதிவைப் போட்டாலும் போடுவார் இக்பால் செல்வன். :-)

பெயரில்லா சொன்னது…

வந்தேறிய ஆரிய பாதங்களை நக்கிக் கொண்டு அவர் தம் வேதங்களையும், மதங்களையும், கடவுள்களையும் தம் பாரம்பரியமாய் இந்தியர் மாற்றிக் கொண்ட போது, வந்தேறிய ஆபிரகாமிய சின்னங்களை மட்டும் அதுவும் 15 % இந்தியர்கள் பின்பற்றும் மரபை பொது இந்திய சின்னங்களில் அடையாளப்படுத்துவதில் என்னய்யா தப்பு..

காசில் லக்ஷ்மியை போடுங்க, துர்க்கையை போடுங்கோ, அம்மணமான அம்மன்களையும் அப்ஷரசுகளையும் போடுங்கோ யார் வேண்டாம் என்றால் . கூடவே மற்ற மதச் சின்னங்களை போடுங்க..

வியாசன் போன்ற நக்கிகளுக்கு ஆரியர் கொண்டு வந்தவை மட்டும் அமிர்தமாக இனிக்கும் போல, ஆபிரகாமியம் என்றால் கசக்குமோ..

வருண் சொன்னது…

பாபர் மசூதியை ராமர் பேண்ட இடம்னு சொல்லி இடிச்சது 1992 வில். அதனால் எற்பட்ட "மனநோயின்" விலைவே இந்த ஓவெர் ரியாக்சன். அது செய்யாமல் இருந்து இருந்தால் இன்னைக்கு எதுக்கெடுத்தாலும் இஸ்லாமியர் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை!

நம்ம பண்ணிய அயோக்கியத்தனத்தை எல்லாம் அரசியல்வாதிபோல மறந்துபுடுறது.

அப்புறம் இஸ்லாமியர்தான் இந்துத்தவாவ ளர்க்கிறான்னு நாயம் பேசுறது. இதைத்தானே நடுநிலைவாதிகள் செய்றீங்க இல்லையா?

வவ்வால் சொன்னது…

வியாசர்வாள் மற்றும் இக்பாலின் கொள்கை என்னனே புரியலை அவ்வ்!

வியாசர்வாள் , ஒரு நாணயத்தில் பெரும்பாண்மை மக்களூக்காக எதையாவது போட்டால் என்ன ? இல்லை சிறுப்பான்மை மக்களுக்காக போட்டால் என்ன?

ஏற்கனவே 2 அல்லது1 ரூவாய் காசுல சிலுவை போட்டாச்சு தெரியுமோ?

மேலும் 10 ரூபாய் நாணயத்தில் வைஷ்ணவ தேவி படத்தினைப்போட்டு வெளியிட்டு ஒரு ஆண்டுக்கு மேல ஆச்சு, இப்போ தான் காச(10 ரூ) பார்க்கிறாங்களோ?


ஆனால் கொடுத்த காசுக்கு பொருள் கிடைச்சா போதாதா?

-------------------

இக்பால்,

ஆரியர்கள்னு தனியா யாருமே இந்தியாவில் இல்லை எல்லாமே கலப்புத்தான்னு சார்வாகன் பதிவில் சொன்னிங்களே என்னாச்சு அவ்வ்!

நான் ஆர்யர்கள் /வேத மதத்தினர் அறிமுகப்படுத்தியது தான் புருச சூக்தம்/மனு என கருத்து சொல்லி இருந்தேன்.

பதிவுக்கு பதிவு கருத்தை மாத்தாதிங்க எனக்கு கொழப்பமா இருக்கு :-))

இப்போ ரெண்டு பேருமா சேர்ந்து என்னை பிறாண்டப்போறாங்க அவ்வ்!

viyasan சொன்னது…

//வியாசன் போன்ற நக்கிகளுக்கு //
"கூத்தாடுவதும் குண்டி நெளிப்பதும் ஆத்தாதவன் செயலே" (பழமொழி) ;-)

//ஆரியர்கள்னு தனியா யாருமே இந்தியாவில் இல்லை எல்லாமே கலப்புத்தான்னு சார்வாகன் பதிவில் சொன்னிங்களே என்னாச்சு அவ்வ்!//

பதிவுக்கும், பதிவருக்குமேற்றவாறு கருத்தை மாற்றுவதில் என்ன தவறு கண்டீர்? :-)

கவியாழி சொன்னது…

தங்களின் வாதமும் சரியே. மதம் வளர்க்க மனிதனுக்கு மதம் பிடிக்க வேண்டிய அவசியமில்லை.

பெயரில்லா சொன்னது…

வவ்வால் - ஆரிய என்பதை கலாச்சார மொழி வகையாத் தான் கூறினேன், இன வகையா தனியா முஸ்லிம், கிறித்தவர் இந்தியாவில் உண்டா? இல்லையே. அதே போல ஆரியரும் இல்லை, ஆனால் ஆரியம் உண்டு, ஆரிய மொழியும், கலாச்சாரமும் உண்டு. இங்குள்ள தமிழர் இந்த ஆரிய கலாச்சாரத்தையும், மதத்தையும் பற்றிக் கொண்டு, எதோ அது அவன் தாத்தன் சொத்து போல, மற்ற தமிழர் இஸ்லாமியத்தையும், கிறித்தவத்தையும் பின்பற்றுவதை பரிகாசம் செய்வதை எதிர்க்கிறேன். உங்களுக்கு இரான் வழி வந்த ஆரிய மதம் பெருசு என்றால், அவர்களுக்கு அரபு வழி, ஐரோப்பா வழி வந்த இஸ்லாமும், கிறித்தவமும் பெருசு. எல்லாவற்றையும் ஏற்பது தான் இந்திய கொள்கை, ஏற்றுவிட்டு போவோமுங்கிறேன்..

பெயரில்லா சொன்னது…

மாற்றிப் பேச வேண்டிய அவசியமே இல்லை, மரபணு வகையாக ஆரியரும் திராவிடரும் தெலிங்கரும் தமிழரும் பார்ப்பனரும் பஞ்சமரும் இங்கு கிடையாது. மனதளவில் பற்றிக் கொண்ட கலாச்சார கூறுகள் உண்டு, மதம் உண்டு. எல்லாம் கலந்துவிட்டும் உள்ளன. 3500 ஆண்டுகளுக்கு முன் வந்த ஆரிய கடவுள்களுக்கு காசில் இடம் உண்டு எனில், 1500 ஆண்டுக்கு முன் வந்த கிறித்தவத்துக்கும், 1000 ஆண்டுக்கு முன் வந்த இஸ்லாமுக்கும் ஏன் காசில் இடம் தரக்கூடாது என்பதே என் கேள்வி. போட்டா எல்லாவற்றையும் போடுங்கள், நீக்கினால் அனைத்தையும் நீக்குங்கள்.. அவ்வளவு தான்.

Saha, Chennai சொன்னது…

திரு காவி.கண்ணன் (எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்க.), அந்த so called முஸ்லிம் அமைப்புகள் தெரிவிச்ச கண்டனத்தை முழுசா படிக்கலையா?
//அரசு அலுவலகங்களில் இந்து வழிப்பாடுகள,; புகைப்படங்கள் வைத்தல் என மீறிய அதிகார வர்க்கம் இன்று நாணயத்திலும் காட்டி நாட்டை சீர்குலைத்து உள்ளது. ரிசர்வ் வங்கி செய்த இந்த செயல் சாத்தியம் என்றால் எல்லா மத கடவுளையும் போடவேண்டும் இல்லையேல் இதுக்கு வருத்தம் தெரிவித்து சர்ச்சைக்கூரிய இந்த நாணயங்களை திரும்ப பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். //

ரிபீட்டு // ரிசர்வ் வங்கி செய்த இந்த செயல் சாத்தியம் என்றால் எல்லா மத கடவுளையும் போடவேண்டும் இல்லையேல் இதுக்கு வருத்தம் தெரிவித்து சர்ச்சைக்கூரிய இந்த நாணயங்களை திரும்ப பெற வேண்டும். //
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=119002

//உலகிலேயே இஸ்லாமியர்கள் மக்கள் தொகையில் முதலில் இருக்கும் இந்தோனிசியாவில் பிள்ளையார் படத்தை ரூபியாவில் அடித்து புழக்கத்தில் விட முடிகிறது, இராமயண நாயகர்களை, இந்து கோவில்களை பணத்தில் அச்சடித்து விட முடிகிறது, அங்கெல்லாம் அந்த நாட்டு இஸ்லாமிய அமைப்புகளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை.//

காரணம் என்னவாயிருக்கும்? அங்கெல்லாம் இன்னும் உங்களை போன்ற நடுநிலை வேஷம் போடும் காவி சிந்தனாவாதிகள் ஆதிக்கம் செலுத்தவில்லையோ?

அப்புறம், அரசு அலுவகங்கள், பொதுத்துறை வங்கிகள், அரசு பேருந்துகள் போன்ற பொது சொத்துகளில் பெரும்பான்மை மத அடையாள சின்னங்கள், வழிபாடுகள் செய்யப்படுவது மத சார்பற்ற அரசு இயந்திரத்திற்கும் உங்களை போன்ற "நடுநிலை" நாத்தீகர்களுக்கும் தெரியாதா? அதையெல்லாம் சகித்துகொண்டு பிற சமய மக்களும் அவைகளை உபயோகப்படுத்துவது போல இதையும் பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டியது தான்.

Gujaal சொன்னது…

**
திரு காவி.கண்ணன் (எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்க.), அந்த so called முஸ்லிம் அமைப்புகள் தெரிவிச்ச கண்டனத்தை முழுசா படிக்கலையா?
//அரசு அலுவலகங்களில் இந்து வழிப்பாடுகள,; புகைப்படங்கள் வைத்தல் என மீறிய அதிகார வர்க்கம் இன்று நாணயத்திலும் காட்டி நாட்டை சீர்குலைத்து உள்ளது. ரிசர்வ் வங்கி செய்த இந்த செயல் சாத்தியம் என்றால் எல்லா மத கடவுளையும் போடவேண்டும் இல்லையேல் இதுக்கு வருத்தம் தெரிவித்து சர்ச்சைக்கூரிய இந்த நாணயங்களை திரும்ப பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். //
**

அவர் சொல்றாருனு அல்லா அல்லது முகமது நபியின் படத்தைப் போட்டா ரிசர்வ் பேங்கையே கொளுத்தக்கூடிய ஆட்களும் உள்ளனரே. என்ன செய்ய?

வேகநரி சொன்னது…

சரியான ஒரு பதிவு.

Unknown சொன்னது…

இவங்களுக்கு 10 முதல் 20 சதவீதம் இடஒதுக்கீடு வேணும். அதுக்கு நாங்க தாழ்த்தப்பட்டவங்க என்று சொல்லணும். எவன்யா ஒங்களத் தாழ்த்தினான், ஒங்க மதத்திலதான் சாதியே இல்லையேன்னு யாராவது கேட்டா என்ன சொல்றது. சும்மா 3500 வருசத்துக்கு முன்னால வந்த வந்தேறிகள்தான் 1500 வருசத்துக்கு முன்னால வந்த எங்களத் தாழ்த்திவிட்டான் என்று எடுத்து விடவேண்டியதுதான். மத்ததையெல்லாம் கட்சித் தலைவங்களும் நம்ம பகுத்தறிவுப் பசங்களும் பாத்துப்பாங்க.

கோபாலன்

கோவி.கண்ணன் சொன்னது…

//Saha, Chennai கூறியது...//

சகா காக்கா, அவர்களே.

அவங்க சமூகத்திற்கு அளிக்கு சிறப்பு எங்களுக்கும் செய்யனும் என்று கேட்டால் அது ஞாயம், அதை விடுத்துவிட்டு கண்டனம் தெரிவிக்கிறேன் பேர்வழி என்று கண்டபடி பேசிவிட்டு பின்னர் எங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை / புறக்கணிக்கப்படுகிறோம் என்று புலம்புவது வீன்.

அடுத்தவனுக்கு சூடுபோட்டால் எனக்கு இரண்டு கூடுதலாப் போடுங்க என்றும் கேட்பார்களோ. என்ன ஒரு ஞாயமோ !

பெரும்பான்மையினர் விருப்பம் குறித்த சகிப்புத் தன்மை எல்லா நாடுகளிலுமே உள்ள நடைமுறை தான், அதில் புதிதாக கண்டுபிடித்துக் கூற ஒன்றுமே இல்லை. இரண்டாம் தரமாக நடத்தப்படுகிறோமா ? என்பது மட்டும் தான் கேள்விக்கு உட்படுத்தக் கூடியது

சீன அலுவலகத்தில் வேலை பார்க்கிற நான் அலுவலகத்தில் ஆங்கிலம் சீன மொழித் தவிர்த்து தமிழையும் நடைமுறை படுத்துங்கள் என்று கேள்வி கேட்டால் துறத்தி விடுவார்கள்.

கிழே பின்னூட்டத்தில் ஒரு ஐயா கூறி இருக்கிறார் பாருங்கள், இந்து தலித்துகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு அரசு அய்யோகியத்தனம் இஸ்லாமிய தலித்துகளுக்கும் இட ஒதுக்கீடு தாருங்கள் என்று நீங்கள் எல்லாம் ஏன் போராடக் கூடாது ?

ராவணன் சொன்னது…

///இக்பால் செல்வன் சொன்னது…

வந்தேறிய ஆரிய பாதங்களை நக்கிக் கொண்டு அவர் தம் வேதங்களையும், மதங்களையும், கடவுள்களையும் தம் பாரம்பரியமாய் இந்தியர் மாற்றிக் கொண்ட போது, வந்தேறிய ஆபிரகாமிய சின்னங்களை மட்டும் அதுவும் 15 % இந்தியர்கள் பின்பற்றும் மரபை பொது இந்திய சின்னங்களில் அடையாளப்படுத்துவதில் என்னய்யா தப்பு..

காசில் லக்ஷ்மியை போடுங்க, துர்க்கையை போடுங்கோ, அம்மணமான அம்மன்களையும் அப்ஷரசுகளையும் போடுங்கோ யார் வேண்டாம் என்றால் . கூடவே மற்ற மதச் சின்னங்களை போடுங்க..

வியாசன் போன்ற நக்கிகளுக்கு ஆரியர் கொண்டு வந்தவை மட்டும் அமிர்தமாக இனிக்கும் போல, ஆபிரகாமியம் என்றால் கசக்குமோ..////

இந்த குண்டி நக்கி இக்குபாலு என்ன சொல்லவர்ராரு?

"…அம்மணமான அம்மனையும்...." தமிழர்களின் தெய்வம் மாரியம்மனையும் இந்த அடைப்புக்குள் வைப்பாரா?

…முனியாண்டியும்..கருப்பசாமியும் எந்த நாட்டிலிருந்துந்தும் இறக்குமதி செய்யப்பட்டவர்களல்ல.

…இந்த இக்குபாலு பாதி முஸ்லீம்....பாதி கிறித்துவன்...பாதி சிங்களவன். பின்ன எப்படி தமிழில் என்று கேட்டால்..... தமிழ் பேசும் முஸ்லீம் தந்தைக்கும்... சிங்கள கிறித்துவ தாய்க்கும் பிறந்த நவீன புத்தர். தமிழை....தமிழர்களைப் பிடிக்காது. தமிழை... தமிழர்களை எப்படியெல்லாம் இழிவு படுத்தமுடியுமோ அப்படியெல்லாம் எழுதி அரிப்பைத் தீர்த்துக்கொள்ளும் சிங்கள அடிவருடி.

வருண் சொன்னது…

இக்பால் செல்வன் என்கிற பேரில் ஒரு குழுமே இயங்கியதாச் சொன்னவர் இந்த ராகவன்.

இப்போ குழுமம் உடைந்து பல வேறு பேர்களில் இவர்கள் எழுதுவதாகத் தெரிகிறது.

அந்தக் குழுமத்தில் "இகபால் செல்வன்" என்ற பெயரை இப்போதும் தொடர்பவரை ராவணனுக்கு ஏன் இம்பூட்டு பிடிக்கலைனு தெரியலை! :)))

ராவணன் பத்தி ராமனுக்கும் சீதைக்கும்தான் தெரியும். நமக்கென்ன தெரியும்/ :)))

வருண் சொன்னது…

இக்பால் செல்வன் என்கிற பேரில் ஒரு குழுமே இயங்கியதாச் சொன்னவர் இந்த ராகவன்.

should read as

இக்பால் செல்வன் என்கிற பேரில் ஒரு குழுமே இயங்கியதாச் சொன்னவர் இந்த ராவணன்.

வருண் சொன்னது…

ஒரு காலத்தில் இஸ்லாமியர் வெறுப்புக்கு மட்டும் ஆளான "இக்பால் செல்வன்" இப்போ ஈழத்தமிழர்கள் மற்றும் பல தமிழ் பற்றாளர்கள் பலரின் வெறுப்புக்குள்ளாகி நிற்கிறார் பாவம். :(

நல்ல முன்னேற்றம்தான்! :)

வருண் சொன்னது…

****K Gopaalan சொன்னது…

இவங்களுக்கு 10 முதல் 20 சதவீதம் இடஒதுக்கீடு வேணும். அதுக்கு நாங்க தாழ்த்தப்பட்டவங்க என்று சொல்லணும். எவன்யா ஒங்களத் தாழ்த்தினான், ஒங்க மதத்திலதான் சாதியே இல்லையேன்னு யாராவது கேட்டா என்ன சொல்றது. சும்மா 3500 வருசத்துக்கு முன்னால வந்த வந்தேறிகள்தான் 1500 வருசத்துக்கு முன்னால வந்த எங்களத் தாழ்த்திவிட்டான் என்று எடுத்து விடவேண்டியதுதான். மத்ததையெல்லாம் கட்சித் தலைவங்களும் நம்ம பகுத்தறிவுப் பசங்களும் பாத்துப்பாங்க.

கோபாலன்****

இந்த விஷப்பார்ப்பானை யாருப்பா உள்ள விட்டது?!

சங்கர் ராமன் வீட்டுல போயி கேதம் கேக்க அனுப்பிவைங்க இந்த பார்ப்பன நாயை!

வவ்வால் சொன்னது…

ராவணன்,

//இந்த குண்டி நக்கி இக்குபாலு என்ன சொல்லவர்ராரு? //

ஏன்யா "ராவணன்" என நல்லப்பேர வச்சுக்கிட்டு இப்படிப்பொசக்கெட்டத்தனமா பேசிட்டு திரியிறீர்?

இந்தப்பேச்சலாம் தேவையில்லாதது ராசா, வழக்கம் போல பேசுறதா இருந்தா பேசுங்க, பொதுவில் என்னவேண்டும்னா பேசலாம்னு பேசிட்டு திறியாதீர் , அப்பாலிக்கா "உமக்கும்" வலிக்கும் :-))

ராவணன் பொஞ்சாதி ரொம்ப பாவம் அவ்வ்!

வவ்வால் சொன்னது…

இக்பால்,

//அதே போல ஆரியரும் இல்லை, ஆனால் ஆரியம் உண்டு, ஆரிய மொழியும், கலாச்சாரமும் உண்டு//

ஆரியம்,ஆரியக்கலாச்சாரம் தானாக வரலையே, ஆர்யர்கள் தானே கொன்டு வந்தாங்க?

அவங்க எல்லாம் 100 சதம் கலப்பினமானதா எல்லாம் சான்று இல்லை, அதே சமயம் கலப்பினமானாலும் "ஆர்ய சமூகப்படி" நிலையை நிலைநிறுத்திவிட்டார்கள், அதனை எதிர்க்க ஆர்ய அடையாளத்தினை சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

# காசுல சிறுபான்மையினருக்கு வேண்டும்னாலும் போட்டுக்கட்டும் என சொல்லிட்டேனே.

எனக்கு கல்யாணம் ஆகலை ,அதனால உன் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்னுனு கேட்காகம ,அவங்களும் கல்யாணம் செய்ய சொல்லிக்கேட்கட்டுமே அவ்வ்!

எனக்கு எந்த காசா இருந்தா என்ன ,காசுக்கேத்த பண்டம் கிடைச்சால் சரி அஃதே!

பெயரில்லா சொன்னது…

ஆரிய கலாச்சாரம் தானா வரலை, ஆரியரோடு வந்தது, அப்புறம் இங்கே இருந்தவர்களோடு கலந்தது. அது எல்லாம் போகட்டும். ஏன் மதங்களை ஒரு அரசில் பொது அடையாளங்களில் கொண்டு வரவேண்டும். ஒன்று மதச் சின்னங்களையே எந்த அரசு எந்திரத்திலும் பொது அடையாளங்களிலும் கொண்டு வரக் கூடாது, அப்படி கொண்டு வருவது என்றால் அனைத்தையும் கொண்டு வரவேண்டும். முஸ்லிம், கிறித்தவம், சமணம், பழங்குடி, நாத்திகம், என அனைத்து சின்னங்களையும் கொண்டு வரவேண்டும். இந்து மதத்தில் கூட பார்ப்பனியக் கடவுளை மட்டும் குறியிடாமல் அனைத்துக் கடவுளையும் காசில் போடட்டுமே, மாடசாமி, முனுசாமி, அய்யனார், என கிராமத்து தெய்வங்களையும் இடலாமே.

காசில் இந்து மதச் சின்னத்தையும் அதுவும் ஆரிய பார்ப்பனியரின் தெய்வங்களை மட்டும் இடுவது நிச்சயம் அநியாயமான ஒன்று. போலி நாத்திகம் பேசுவோரும், போலி திராவிடம் பேசுவோருக்கும் வேண்டுமானால் இதில் உடன்பாடாக இருக்கலாம்.

எனக்கு இதில் உடன்பாடில்லை. மதச் சின்னம் போடக் கூடாது, போட்டால் அனைத்தையும் போட வேண்டும்.

பெரும்பான்மை மக்களை மட்டும் தான் அடையாளபடுத்துவோம் மற்றவன் மூடிக்கிட்டு போ என்ற வாதம், சிங்கள இனவாதத்தையும், தாலிபானியத்தையும் ஒத்தக் கருத்தாகப் படுகின்றது.. இது ஒருவகை பாசிச சிந்தனைவடிவமே.

வருண் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வருண் சொன்னது…

நீங்க தொடருங்கள்ப்பா! நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாச்சு! :)

தனேஷ் இரத்தினசாமி சொன்னது…

தமிழருக்கு மதம் கிடையாது, வடமொழி அன்னியரது, இந்து மதம் வந்தேரிகளால் உண்டானது
என்று கூறுபவர்க்கு:
இப்படி நடந்திருக்கும் அப்படி நடந்திருக்கும் என்று கூறுவதே (புனைவதே) திராவிடவாதிகள் வழி.
இலக்கிய, கல்வெட்டு, வரலாற்று ஆவணங்களை ஆய்ந்து பார்த்தாலே தமிழர் இந்துக்கள் என்பது விளங்கும்.
எப்படி இன்று தமிழரும், கன்னடரும், தெலுங்கரும், மலையாளிகளும்
தனிமொழியினங்களாக உருவாயினவோ அப்படியே வடமொழியும் தென்மொழியும் உருவாயின.
இவையிரண்டும் பல்லாயிரமாண்டு வரலாறு உடையவை. இந்து மதம் பாரதம் தழுவியது.
மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இம்மண்ணில் தோன்றிய தெய்வீக வேத சித்த ஞான நாட்டார் மரபுகள்
அனைத்தின் கூட்டே இந்து. இந்துஸ்தானத்தில்(சிந்து நதியின் கிழக்கில்) வழங்கியபடியால் இந்து வெனப்பட்டது.

இந்தியாவில் ஆரியர் திராவிடர் என்று கூறி நம்மை பிரித்தாளும் வகை ஆங்கிலேயரால் செய்யப்பட்ட சூழ்ச்சி.
சங்க இலக்கியங்கள் இந்து மதத்தை பேசுவதில்லையா?
வேள்விகளை பேசுவதில்லையா? நான்மறைகள் வருவதில்லையா?
வேதியர், அந்தணர், மறையவர், ஐயர் வருவதில்லையா?
சமணரான இளங்கோ தமிழர்களை இந்துக்களாக சொல்லவில்லையா?
பிறவா யாக்கைப் பெரியோன் யாரோ?
திருமுருகாற்றுப்படை சங்க இலக்கியமில்லையா?
அதில் முருகன் மட்டும் தான் வருகிறானோ?!!
பாண்டியர்களும், சேரர்களும், சோழர்களும் வேள்விகள் வேட்டியதில்லையா???
வடமொழியும் தென்மொழியும் ஒருங்கே சிவனார் தந்தார் எனத் திருமந்திரம் கூறுவதில்லையா?
தொல்காப்பியர் கூறும் சேயோன் சிவனுக்கும் முருகனுக்குமான பொதுப்பெயர் என்பதையும்
இருவரும் ஒன்றென்னும் கருத்தைக் கூறவந்த சொல்லென்பதை அறியமாட்டீர்களா?
மாயோனைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லையா?
வேந்தன்(இந்திரன்), வருணன், கொற்றவை(காளி) தமிழர் தெய்வம் தானே? இல்லையெங்கிறாரா தொல்காப்பியர்?
(தமிழர் தெய்வமென்பது தமிழரால் ஆதிகாலந்தொட்டு வணங்கப்பட்ட தெய்வமென்று அறிக.
தமிழரால் பிறருக்கு வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும், தமிழர் மட்டுமே அவர்களை வணங்கியிருக்க வேண்டும்,
அவ்வழக்கம் பிறரிடம் இருந்திருக்கக் கூடாது என்று கூறினால் மூடத்தனம்).
பாண்டியரும் சோழரும் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள்?
நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் சிறு தெய்வங்கள்.
அவை இந்து மதத் தெய்வங்களே!
தேவையில்லாமல் ஆரியர் திராவிடர் என்று வடவரும் தென்னவரும் சண்டையிடுவது
இருவரும் தம்மிடையே இருந்த மரபைவிட்டு விலகியதே காரணம்.
நம் நாட்டின் வழக்கங்கள் பிறழ்ந்ததற்கு இஸ்லாமிய மற்றும் வெள்ளையர் படியெடுப்புகளே காரணம்.
இதெல்லாம் ஆரியர் சூழ்ச்சி, வந்தேரிகள் சூழ்ச்சி, பார்ப்பனர் சூழ்ச்சி என்று கூறுவது மடமையே.

திராவிடவாதிகளின் அரசியல் வார்த்தைகளை நம்பாதீர்! அவர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியில் கைதேர்ந்தவர்கள்.
அவர்கள் பொதுசனங்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டனர். யாருக்கும் தம்முன்னோர் பிற இனத்தவரைவிட சாதனையாளர்
என்று கேட்க பெருமை கொள்வர். ஆனால் வரலாற்றை மறைத்து, மாற்றி, திரித்து தம் புனைவுகளை தம் நலனிற்காக பயன்படுத்தியது
திராவிடவாதிகள் சூழ்ச்சி.

தனேஷ் இரத்தினசாமி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
உசிலை விஜ‌ய‌ன் சொன்னது…

நீங்களே சொல்லிவிட்டீர்களே. இஸ்லாம் நாடுகளில் இந்து கடவுள்களை, மற்றும் இந்து கோவில்களை ரூபாய் நோட்டுக்க்ளில் போடுவார்கள். ஆனால் இந்தியாவில் இந்து கடவுள்களை மட்டும்தான் அரசாங்கம் மதிப்பு கொடுக்கும் என்று.

ராவணன் சொன்னது…

////வவ்வால் சொன்னது…

ராவணன்,

//இந்த குண்டி நக்கி இக்குபாலு என்ன சொல்லவர்ராரு? //

ஏன்யா "ராவணன்" என நல்லப்பேர வச்சுக்கிட்டு இப்படிப்பொசக்கெட்டத்தனமா பேசிட்டு திரியிறீர்?

இந்தப்பேச்சலாம் தேவையில்லாதது ராசா, வழக்கம் போல பேசுறதா இருந்தா பேசுங்க, பொதுவில் என்னவேண்டும்னா பேசலாம்னு பேசிட்டு திறியாதீர் , அப்பாலிக்கா "உமக்கும்" வலிக்கும் :-))

ராவணன் பொஞ்சாதி ரொம்ப பாவம் அவ்வ்!//////

வவ்வாலு உமக்கு இது தேவையா? உம்ம சோலிக்கு நான் எப்பவும் வருவது இல்லை.

வேகநரி சொன்னது…

அமெரிக்க அவர்கள் உண்மைகள் பதிவர் தந்த தகவலின்படி அமெரிக்காவில் பிற மதத்தவங்களின் எதிர்பால் கிறிஸ்மஸ் நாட்களில் கிறிஸ்தவங்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லுவது, கிறிஸ்மஸ் மரம் நடுவது நிறுத்தபட்டுவிட்டது என்கிறார். கிறிஸ்தவங்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வதில் அமெரிக்காவில் உள்ள அந்த பிற மதத்தவங்கு அப்படி என்ன தான் பிரச்சனை?
கிறிஸ்மஸ் மரம் இவர்களை குத்திச்சா?
எங்களுக்கும் தான் வெள்ளை இனத்தவர்கள், கிறிஸ்தவங்க தீபாவளி வாழ்த்து மற்றும் தங்களுக்கு தெரிந்த வாழ்துகளை எங்களுக்கு தெரிவிக்கிறார்கள்.இஸ்லாமியர்களில் கூட தீபாவளி வாழ்த்து தெரிவிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்ல எதிர்ப்பு,கிறிஸ்மஸ் மரம் நட எதிர்ப்பு தெரிவித்த பிற மக்கள் மீது காழ்புணர்வும்,துவே ஷமும் கெண்டவர்கள் அமெரிக்காவில் இருப்பது போலவே இந்தியாவிலும் காசில் லக்ஷ்மியை போட எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இருக்கிறார்கள்.

வருண் சொன்னது…

***கிறிஸ்தவங்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வதில் அமெரிக்காவில் உள்ள அந்த பிற மதத்தவங்கு அப்படி என்ன தான் பிரச்சனை? ***

நீங்க நினைப்பது போல், இல்லை. இது முக்கியமாக "யூத மதத்தவரின்" எதிர்ப்பு! அதனால்த்தான் இது அமெரிக்காவில் "வாங்கப் படுகிறது". நீங்கள் உங்க இஷ்டத்துக்கு இதையும் திசை திருப்ப முயல வேண்டாம்! அப்படி செய்தால் எதற்கெடுத்தாலும் இஸ்லாமியரையே கைகாட்டும் உங்க "இந்து ம்தப்பற்று" தான் ப்லருக்கும் தெரியும். கவனம். You are being watched by people! Try to be fair. Analyze things carefully!

Moreover, you brought this up from somewhere else to finger at others? And who are the others here? Islam followers, right?

Unknown சொன்னது…

//கிறிஸ்தவங்க தீபாவளி வாழ்த்து மற்றும் தங்களுக்கு தெரிந்த வாழ்துகளை எங்களுக்கு தெரிவிக்கிறார்கள்.இஸ்லாமியர்களில் கூட தீபாவளி வாழ்த்து தெரிவிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். //

அப்படிப் பார்த்தால் இந்தியாவில் ஓணம் பண்டிகை கொண்டாடும் கிருத்துவர்கள், முஸ்லீம்கள் கூட உள்ளார்கள்.

ஒழுங்கா நடந்து கொண்டிருந்த சந்தனக்கூடு விழாவை கலைக்கக் கூட முயற்சிகள் நடக்கின்றன. பண்பாட்டிற்கும் மதத்திற்கும் வித்யாசம் தெரியதவர்க்ள் இப்போது பெருகிவிட்டார்கள்.

டிபிஆர்.ஜோசப் சொன்னது…

இஸ்லாமிய அமைப்புகள்தான் கண்டனம் தெரிவித்திருப்பார்கள், இஸ்லாமியர்கள் அல்ல. தொழிலாளர்களின் விருப்பத்தை கேட்காமலே தொழில்சங்க நிர்வாகிகள் போராட்டத்தை அறிவிப்பதில்லையா? அதுபோலத்தான் இதுவும். இந்துத்வா கொள்கையையும் கூட இந்து அமைப்புகள் மட்டுமே விடாப்பிடியாக பிடித்துக்கொண்டுள்ளன. பெரும்பான்மை இந்துக்கள் அல்ல அல்லவே. மதச்சார்பின்மை இப்போதும் நாட்டில் நடைமுறையில் உண்டென்றால் அது பெரும்பான்மை சமூகத்தினரிடையே உள்ள மதச் சகிப்புத்தன்மைதான். அது பாஜக அல்ல யார் வந்தாலும் அழிந்துவிடப்போவதில்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்