பின்பற்றுபவர்கள்

17 பிப்ரவரி, 2014

பாலுமகேந்திரா விட்டுச் சென்ற பாடம் !

செத்த பிறகு ஒருவரை தூற்றக் கூடாதுன்னு சொல்லுவங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை, ஒருவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் உரையாடல்கள் பேசப்படும் பொழுது தான் நாமும் அதுபற்றி பேசமுடியும். பாலு மகேந்திரா மறைவை ஒட்டி அவரது அருமை பெருமைகளை கூறி, கூடவே பாலா போன்ற சிறந்த இயக்குனர்களை உருவாக்கி இருக்கிறார் என்றெல்லாம் எழுதுகிறவர்கள் எவரும் பாலுமகேந்திராவின் பெண்கள் மீதான பித்தை இலைமறை காய்மறையாக மட்டுமே கூறிவிட்டு வானளவில் புகழ்கிறார்கள். 

சமுக இணைய தளங்கள் இல்லாத பொழுது பொது மக்களின் கருத்து இவை என்று அரசியல்வாதிகளையோ, திரைகலைஞர்களையோ, சாமியார்களையோ, மதவாதிகளையோ, சாதிவெறியர்களையோ போய் சேராது. ஊடகங்கள் பெரிதாக எதையும் கண்டிக்காது, தகவல் என்ற அடிப்படையில் தான் எதையும் அவர்களால் எழுத முடியும். ஆனால் தற்பொழுது நிலைமையே மாறிவிட்டது, இணையத்தை / சமூக இணைய தளங்களை பயன்படுத்துபவர்கள் சில விழுக்காட்டினர்கள் என்றாலும் அவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்களிடமும் அவர்களால் ஒன்றை விவாதம் செய்து பொதுவான பார்வையை மாற்றிவிட முடிகிறது. ஒரு எழுத்தாளரின் கருத்து கதைவழியாக பல வாசகர்களை அடைவதைப் போல் சமூக இணையத் தளங்களில் எழுதுபவர்கள் வெளியில் பலரிடமும் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள், எனவே சமூக இணையதளங்கள் என்பவை சக்திமிக்க ஊடகங்கள் ஆகிக் கொண்டு இருக்கின்றன என்பதை அறிந்து தான் அரசியல்வாதிகள் உள்ளிட்ட போலி சாமியார் உள்பட அனைவரும் அதன் வழியாகவும் கடைவிரித்திருக்கிறார்கள். 

பாலுமகேந்திரா என்கிற தனிப்பட்ட மனிதன் எப்படி திரைக்கு வெளியே நடந்து கொண்டார் என்பது எனக்கு முக்கியம் இல்லை, அவரது படைப்புகளை தான் நான் ரசிக்கிறேன், புகழ்கிறேன் என்று உங்களால் ஒதுங்க முடிந்தால் தனது படைப்புகளின் மூலம் கிடைத்த புகழ் செல்வாக்கு ஆகியவற்றை பெண்கள் மீது வீசும் வலையாகப் பயன்படுத்தி கொண்டதற்கு நீங்களும் தான் பொறுப்பாகிறீர்கள். நிறை குறை அற்றவர் யார் ? குறைகளைப் பேசவேண்டாமே ? என்று எல்லோரும் மவுனித்தால் பிறகு செத்தால் கூட நம்மை தூற்ற ஆட்கள் உண்டு என்று தவறு செய்யும் முன் எவரும் உணரவே மாட்டார்கள்,

ஒருவரின் மரணித்தின் பிறகு அவரின் இழிசெயல்களை தூற்றுவதன் மூலம் தான், அவரைப் போன்று தவறு செய்ய துணிபவர்களுக்கு நாம் அதை நினைத்துப் பார்த்து தவிர்க்கும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.

பாலுமகேந்திராவால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்து கொண்டாள்  'என்மகள் ஷோபா' என்று தொடராக ராணி வார இதழில் ஒரு கண்ணீர் காவியமாகவே அதனை எழுதி, சில ஆண்டுகளில் சோகம் தாங்காமல் தற்கொலையும் செய்து கொண்டார் ஷோபாவின் தாயார். ஷோபாவின் மறைவிற்கு பிறகும் பல நடிகைகளின் தொடர்புகள் இருப்பதையும் செய்தி இதழ்கள் எழுதிவந்தன. நடிக்க வரும் பெண்களின் இயலாமையை படுக்கைக்கு பகடையாக பயன்படுத்திக் கொண்டதை அவருடைய தொழில் திறமைகள் அனைத்திற்குமான சன்மானமாக எடுத்து கொண்டு போற்றப்படவேண்டும் ?

தன்னால் ஏமாற்றப்பட்ட பெண்கள் என்னை மன்னிக்கவேண்டும் என்று இவர் வெளிப்படையாக எதையும் கூறவில்லை. ஒருவர் பாலியல் தொழிலாளிகளிடம் செல்வதை கண்டிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது, ஆனால் ஏமாற்றி, இயலாமையைப் பயன்படுத்தி பெண்களை வேட்டையாடி அவர்களின் வாழ்க்கையையே கெடுத்தவர் என்ற முறையில் நம்மால் விமர்சனம் செய்யாமல் தூற்றாமல் இருக்க முடியவில்லை. இந்த துறையில் இவரைப் பொன்ற தவறான நபர்களிடம் திறமை இருக்கும் பொழுது பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களே.  நாலு இயக்குனர்களை உருவாக்கியது சாதனை என்றால், நான்கு நடிகைகளிடம் நடந்து கொண்டவிததை தூற்றவும் தான் வேண்டும். இவரிடம் வாய்ப்பு கேட்க வந்து எத்தனை பெண்கள் நடிக்கவும் வாய்ப்பு இல்லாமல் பெண்மையையும் இழந்து சென்றார்களோ.

திறமையாளனின் பொறுக்கித்தனங்கள் சகித்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிற பொதுப் புத்தியில் எனக்கு உடன்பாடு இல்லை.

சிறுவயதில் 'என்மகள் ஷோபா' தொடரை படித்தவன் என்ற முறையில் பாலுமகேந்திராவின் மரணம் என்னைப் பொருத்த அளவில் இன்னும் சில மவுனிகாக்கள் வலையில் வீழும் முன் 'ஒழிஞ்சான்'

மேலும் துப்பியவர்களின் இணைப்பு :
சோபாவை கொன்றது ஏன்? ஒலகப் படைப்பாளி பாலு சேர். 

207 கருத்துகள்:

«மிகவும் பழையது   ‹பழையது   207 இல் 201 – 207
ஊர்சுற்றி சொன்னது…

//நீ சாதியக் கட்டி அழ நெல்சன் மண்டேலா உனக்கு வக்காலத்துக்கு வர்ராரா?!//

ராதாகிருஷ்ண படையாச்சி என்கின்ற ஈழத்தமிழ் ஆதரவான தென்னாபிரிக்க அமைச்சரின் பெயரை ராதிகா படையாச்சி என “மாற்றி” (கனவிலும் நடிகை எண்ணம்) அதனை அப்படியே ஈழத்துக்கு முடிச்சுப்போட்டு சாதியத்தை இழுத்தது யார் வருண்?
கொஞ்சம் சொல்லுங்க!!!!

கண்டி, கதிர்காம கமலகாசன் புகழ் ஈழ அறிவு மன்னனின் ஈழப்பதிவை காண ஆவலாயுள்ளேன்!

Unknown சொன்னது…

##இக்பால் செல்வன் இங்கே பின்னூட்டமிட்டு ரொம்பக் காலமாச்சு. இங்கே வந்து ஏன் அவரை கரிச்சுக் கொட்டிக்கிட்டு?

முதல்ல உம்ம கண்ணை நல்லா விரிச்சு பின்னூட்டங்களை படிச்சு பாரும் . இங்கு அவர் பின்னூட்டங்கள் இட்டுள்ளார் . அதில் ஒரு பதிவு அவரது அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களினால் பதிவரால் நீக்கப்பட்டுள்ளது.
##அவரை விட்டுடுங்கோ! சரியா? :)##

என்ன விட்டிடுங்கோ ? நீர் சொல்லிட்டா நாங்க விடுடணுமா ?
நீர் என்ன வலைப்பதிவு நாட்டமையா ?

யாருக்கு பதில் கொடுப்பதென்பது எனது தீர்மானத்திற்குட்பட்டது .உமது அட்வைஸ் எனக்கு தேவையில்லை .நாட்டாமையை வேறு யாரோடும் வைத்துக்கொள்ளும் .

##இகபால் செல்வன் சொன்னதெல்லாம் பொய்னு சொன்ன வெளக்கெண்ணைதானே நீர்?##

தான் சொன்ன பொய் எவ்வளவு பாரதூரமானது என்பதை உணர்ந்து அவரே தனது வலைப்பதிவில் அந்த பகுதிகளை நீக்கி விட்டார் அது சம்பந்தமான பின்னூட்டங்கலையும் அழித்து விட்டார்.இதுக்கு பிறகுமா அவருக்கு வக்காலத்து வாங்குகிறீர் ?

அது சரி , தலையே பேசாம இருக்குது . வால் ஏன் இந்த ஆட்டம் ஆடுது ?

Unknown சொன்னது…

##இக்பால் செல்வன் இங்கே பின்னூட்டமிட்டு ரொம்பக் காலமாச்சு. இங்கே வந்து ஏன் அவரை கரிச்சுக் கொட்டிக்கிட்டு?##

உமது இரண்டு கண்ணையும் நல்லா திறந்து விரிச்சு பாரும் இதே பதிவிலேயே பல பின்னூட்டங்களை இட்டுள்ளார் .

அதில் ஒன்று அ நாகரிகமான வார்த்தை பிரயோகத்தினால் பதிவரால் நீக்கப்பட்டிருந்தது .



##அவரை விட்டுடுங்கோ! சரியா? :)##

நீர் சொல்லிட்டா நான் விட்டிடணுமா ?நீர் என்ன பெரிய வலைப்பதிவு நாட்டாமையா ?
யாருக்கு என்ன பதில் கொடுப்பதென்பது என்னைப்பொறுத்தது .

நீர் உமது மூக்கை நுழைத்து எனக்கு அறிவுரை சொல்ல தேவையில்லை .


##இகபால் செல்வன் சொன்னதெல்லாம் பொய்னு சொன்ன வெளக்கெண்ணைதானே நீர்? உமக்கு என்னைப் பத்தி என்ன எழவு தெரியும்? ##

தனது வலைப்பதிவில் சொன்ன பொய்கள் எவ்வளவு பாரதூரமானது என்பதை உணர்ந்துதான் அந்தப்பகுதிகளையும் அது சம்பந்தமான பின்னூட்டங்களையும் இக்பால் அழித்திருந்தார் .அவருக்குத்தான் இன்னும் வக்காலத்து வாங்கிகொண்டிருக்கிறீர் .

அது சரி, தலையே சும்மாயிருக்குது வால் ஏன் இந்த ஆட்டம் ஆடுது ?



.## இக்பால் சொன்னது சரினு இங்கே யாரும் அவருக்கு வக்காலத்து வாங்கப்போவதில்லை. ##

ஆமாம் அவர்தான் பொறுப்பு . பின்ன நீர்தான் பொறுப்பென்றா சொன்னேன் .

வருண் சொன்னது…

யோவ்!!! பாரா....!!!!

இக்பாலும் நானும் கருத்து வேறுபாடில் கட்டி உருண்டு இருக்கோம்.

நீர் அவர் சொன்னது "பொய் மூட்டை"னு வந்து சொன்னீர் இல்ல?

இப்போ நீர் கடவுளுக்கு சொம்படிக்கிற "ஈழப்பண்டாரமாகி" எந்தவித ஆதாரமமும் இல்லாமல் என்னைப் பற்றி ஏதோ புரிஞ்சமாரி தெரிஞ்ச மாரி உளறுரீரேனு சொல்ல வந்தேன்.

புரியுதா? நீரும் ஒர் எழவும் தெரியாமல் இக்பால் ஈழம் பற்ரி பேசியதுபோல் நீர் என்னைப்பற்றி பேசுகிறீர் என்றேன். அவ்ளோதான்.

நீர் "ஈழப்பண்டாரம்"னு தெளிவு படுத்தியதுக்கு நன்றி.

வேகநரி சொன்னது…

//கடவுள் இல்லை எனச்சொல்லும் நாத்திகர்கள்தான் கடவுளைப்பற்றி அதிகமாக இன்னும் சொல்லப்போனால் ஆத்திகர்களையும் விட அதிகமாக நினைத்து கொண்டிருப்பார்கள்.//
இது என்ன ஒப்பிடுதல்? தினமும் கடவுளை பிரார்த்தனை செய்யும் ஆத்திகர்களைவிட கடவுள் இல்லை எனச்சொல்லும் நாத்திகர்கள்தான் கடவுளைப்பற்றி அதிகமாக நினைச்சுகிட்டு இருக்காங்களா?
வெளிநாடுகளில் குடியேறிய இலங்கை தமிழங்க இப்படி எப்போதும் தப்பு தப்பாகவே சிந்திக்கிறார்கள்.ஆத்திகர்களைவிட கடவுள் இல்லை எனச்சொல்லும் நாத்திகர்கள்தான் கடவுளைப்பற்றி அதிகமாக நினைச்சுகிறார்கள் என்றால் அதில் வெளிநாடுகளில் உள்ள ஈழகாரர்களின் ஆதரவாளர்களான திராவிட பகுத்தறிவார்களும் கடவுளைப்பற்றி அதிகமாக நினைச்சுகிறார்கள்.
திராவிட பகுத்தறிவார்கள் கடவுள் இல்லை என்றார்கள்.ஆனால் இல்லாத பிரபாகரனை இருப்பதாக சொன்னார்கள்.

பதிவர் இக்பால் செல்வன்
தமிழ் பதிவுகளில் இலங்கை தமிழங்க தான் உண்மையான தமிழ் பாஷைபேசும் தமிழர்கள் என்றளவில் மூட நம்பிக்கைகள் உலாவிய காலத்தில்,(நான் கூட நம்பினேன்) பல தமிழ் பதிவர்களும் இதை வைத்தே எழுதி தள்ளி எப்படியாவது தாங்கள் புகழ் அடைந்து விட விரும்பிய காலகட்டத்தில் இது உண்மையல்ல ஈழ தமிழர்கள் எனபடுவங்க மிக குறுகிய இனவாத ஜாதி அடிப்படைவாத சிந்தனை கொண்டங்க என்பதை தமிழர்களுக்கு தெளிவுபடுத்தியவர் சகோ இக்பால் செல்வன். அதனாலே அவரை வெளிநாடுகளில் உள்ள இனவாத அடிப்படையிலான ஈழத்துகாரர்கள் கரித்து கொட்டுவார்கள்.

பெயரில்லா சொன்னது…

முட்டாள் தனமாக விவாதம் போய் கொண்டிருக்கின்றது. தென்னாப்பிரிக்காவில், மொரிசீயசு போன்ற நாடுகளில் தமிழர்கள் 150 ஆண்டுக்கு முன் குடியேறியவர்கள். அக்காலத்தில் பெயருக்கு முன்னால் ஊர் பெயரும் தந்தை பெயரும் பெயருக்கு பின்னால் சாதிப் பெயரும் போடுவது வழக்கம். பெரியாரியத்தின் தாக்கத்தால் சாதிப் பெயர் இடும் வழக்கம் தமிழகத்தில் பார்ப்பனர்களிடம் கூட இல்லாது போனது.

ஆனால் தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் Surname ஆக இன்றளவும் தமது சாதிப் பெயரை இடுவது வழக்கம். அது சாதிப் பெயராக அடையாளப்படாமல் குடும்ப பெயராக மாறிவிட்டது.

கவுண்டர், படையாட்சி, நாயுடு, பிள்ளை, செட்டி என்ற பெயர்கள் அவ்வாறே இன்றளவும் அங்குள்ள தமிழர்களிடம் காணப்படுகின்றது.

பெண்கள் மணமான பின்னர் தமது கணவனின் குடும்ப பெயர்கள் ( சாதிப் பெயர்களை ) எடுத்துக் கொள்வார்கள், அது எந்த சாதி பெயராக இருந்தாலும்.

அந்த வகையில் தான் நவநீதம் பிள்ளை, ராதா படையாட்சி, மிக்க செட்டி, சுப்ரி கவுண்டர் என முக்கியமான பல தென்னாப்பிரிக்க தமிழர்களின் பெயர்களில் சாதி பெயர்கள் Surname-களாக இருக்கின்றன.

இவ்வாறு சாதி பெயர்களை Surname களாக போடும் வழக்கம் மொரிசியஸ் தமிழர்களிடமும் கூட உண்டு. வட இந்தியாவில் வாழும் பல தமிழர்களிடம் கூட உண்டு. தாம் தமிழர் என பிரித்து அடையாளப்படுத்த Surname களில் சாதிப் பெயர்களை சேர்ப்பது வழக்கம்,

அந்த வகையில் மும்பையில் முதலியார், ஐயர் போன்ற Surname கள் பல தமிழர்களிடம் காணப்படுகின்றன.

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
«மிகவும் பழையது ‹பழையது   207 இல் 201 – 207   புதியவை› புத்தம் புதியவை›

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்