பின்பற்றுபவர்கள்

23 செப்டம்பர், 2012

நன்றிக் கடன் !


சென்ற திங்கள் கிழமை மாலை 7 மணிக்கு சிங்கையை அடுத்துள்ள மலேசியா ஜோகூர்பாருவுற்கு மாத்திரைகள் வாங்கச் சென்றேன், சிங்கையை ஒப்பிட விலை சற்று குறைவு என்பதால் ஜோகூரில் அதே நிறுவனம் தயாரிக்கும் மாத்திரைகளை வாங்குவது வழக்கம், போதிய பணம் கையில் இருக்கும் நினைப்பில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு மருந்து கடைக்குச் சென்று மாத்திரைகள் வாங்கிவிட்டு,  விலை கேட்க, அவர்கள் சொன்னத் தொகைக்கு சற்று குறைவது போல் இருந்தது,  இருந்ததைக் கொடுத்து எண்ணிப் பார்க்கச் சொன்னேன், பணத்தை எண்ணிவிட்டு இன்னும் இரண்டு ரிங்கிடடுகள் வேண்டும் என்றனர் (பில் போடும் இடத்தில் இருவர் இருந்தனர்) சில்லரைகள் தேறுமா என்று எண்ணிக்கொண்டிருந்தேன், இடையில் பின்னால் நிற்பவர் காக்க வைக்க வேண்டாம், அவருக்கு பில் போடுங்கள், எனக்கு அப்பறம் போடலாம் என்று சொல்லிவிட்டு சில்லரைகளை துளாவிக் கொண்டு இருந்தேன், , 'பற்றாக் குறைக்கு சிங்கப்பூர் நாணயம் தரட்டுமா ?' என்று கேட்டேன், சிங்கப்பூர் நாணயம் நாங்கள் வாங்குவதில்லை என்றார்கள், சிங்கப்பூர் ஒருவெள்ளிக்கு 2.5 ரிங்கிட்டுகள் மாற்று என்றாலும் அவர்கள் முடியாது என்றார்கள், உடனே எனக்கு பிறகு வாங்கியர் என்றே நினைக்கிறேன், ஒரு மலாய் பெண் (25 வயது இருக்கும், தலை முக்காட்டுடன் முகம் மறைக்காமல் இருந்தவர்,

 'If you don't have enough money, I will give you lah' என்று கூறி 10 ரிங்கிட்டுகளைக் கையில் வைத்துவிட்டு திரும்பி நடந்தார், நான் சற்றும்  இதை எதிர்ப்பார்க்காததால் கையில் இருந்து நழுவி பணம் தரையில் விழுந்தது, குணிந்து எடுத்தேன், நான் முகத்தை சரியாகப் பார்க்கவில்லை, 'Why you want to give me ?' நான் கேட்ட பிறகும் காதில் வாங்காதது போல் விரைந்து வெளியே சென்றுவிட்டார், அப்போது நான்  பில் விவகாரத்தை முடிக்காததால் என்னால் பின் தொடர்ந்து சென்று அவரிடம் காரணம் கேட்க முடியவில்லை. பில்போடும் மலாய் பெண்ணிடம் யார் அவர் எனக்கு எதற்கு பணம் தரவேண்டும் ? என்று ஆங்கிலத்திலேயே கேட்டேன்.

உன்கிட்ட இல்லை (You dont have,  so she give you lah), அதான் கொடுத்தார்' என்றார், I never asked her, 'நான் கேட்கவில்லையே'  என்றேன் 'Never Mind, keep quite, take the change' என்று கூறி அந்த பத்து ரிங்கிட்டில் 2 ரிங்கெட் போக மீதம் 8 ரிங்கிட்டுகளை என்னிடம் கொடுத்தார், நான் மீதியை அந்தப் பெண் திரும்ப வந்தால் கொடுத்துவிடுங்களேன், என்றேன், வாங்க மறுத்துவிட்டார்கள். ஆழ்ந்த யோசனைகளுடன் குழப்பங்களுடன் வெளியே வந்தேன், அடுத்து வந்து எனக்கு வந்த ஐயங்கள்.

  •  நாம் ஒருவருக்கு உதவி செய்ய நினைத்தால் தேவைப்படும் அளவுக்கு தானே செய்வோம், ஏன் கூடுதலாகக் கொடுத்துவிட்டு உடனடியாக நகரவேண்டும் ?
  • நான் பணமே இல்லாமல் நிற்கவில்லை, அருகில் பணமாற்று இடத்திற்குச் சென்று மாற்றி வந்து கொடுத்திருக்க முடியும், என்னிடம் சிங்கை வெள்ளிகள் இருப்பதையும் நான் பில் போடுவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன், இருந்தும் ஏன் எனக்கு உதவி செய்ய வேண்டும் ?
  • யாருக்காவது மருந்து வாங்கும் இடத்தில் போதிய பணம் இல்லை என்றால் நாம் உடனடியாக உதவ வேண்டுமா (தமிழ் படத்தில் மருந்து வாங்க பணம் இன்றி, கடை கடையாக ஏறி வெறும் கையோடு திரும்பி வரும் காட்சிகள் போன்று அந்த பெண் நிறைய காட்சிகளை பார்த்திருப்பாரா ?
  • ஒருவேளை  அவர் மருந்தகத்தின் பங்குதாரா ?
  • கடைசியாக வந்த ஐயம் நம்மிடம் வரும் பணம்  (வட்டிப் பணமோ, வேறு முறையற்ற பணமோ)  வந்த வழி  நன்கு தெரிந்து பாவங்களை கழுவ பாதிக்கப்படுவருக்கு கொடுத்து புண்ணியம் கட்டிக் கொள்வது நமது தவறுகளை ஞாயப்படுத்தும் என்று நம்பி இவ்வாறு செய்வார்களா ? 

இந்த கேள்விகளின் விடைகளாக என்னால் எதையும் உறுதி செய்ய முடியவில்லை, அடுத்த ஒருமணி நேரம் குடைந்து கொண்டிருந்த கேள்விகள் இவை. யார் அது ? ஏன் எனக்கு உதவ வேண்டும் ?  அந்த இடத்தை விட்டும் அகலும் முன் எடுத்துச் சென்ற உடைமைகள் எல்லாம் சரியாக இருப்பதையும் உறுதி செய்து கொண்டேன். மலேசியாவில் 10 ரிங்கிட்டுகள் என்பது அவ்வளவு எளிதாக ஈட்டக் கூடிய பணமும் இல்லை, 

அந்த பெண் அந்த மருந்தகத்தின் வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்கிற நம்பிக்கையில் அடுத்த முறை குறிப்பிட்ட மருந்தகத்திற்குச் பில் போடுவரிடம் எனக்கு கிடைத்த 10 ரிங்கிட் பற்றி சொல்லி அதை கொடுத்தவரிடம் திருப்பிக் கொடுத்தே ஆகவேண்டும் என்று நினைத்துள்ளேன்.

நமக்கெல்லாம் ஓரளவு பாத்திரமறிந்து பிச்சை இடு என்று தான் சொல்லி இருக்கிறார்கள், நானும் உதவிகள் செய்வதுண்டு ஆனால் உதவி வேண்டும் என்று கேட்டால் மட்டுமே தவிர எவ்வளவு வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டும் அதுவும் என்னால் உடனடியாக முடிந்தால் செய்வேன். அந்த பெண்ணின் செயலை என்னால் எந்த வகைக்குள்ளும் அடக்க முடியவில்லை. ஒரு உதவியைப் போய் இவ்வளவு சிந்தித்துக் கொண்டு இருக்க முடியுமா ? உதவியும், உதவும் குணமும் பெரிது, பாராட்டத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை அதனால் தான் இவ்வளவு சிந்தனைகளும் எழுந்தது.

*****

இந்த தகவலை கூகுள் +ல் பகிரும் பொழுது ஒரு ஆண் இவ்வாறு உதவி இருந்தால் இத்தனை ஐயங்கள் உங்களுக்கு வந்திருக்குமா ? என்றனர் சிலர்.

ஆணோ, பெண்ணோ நான் கேட்காமல் செய்ததால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது, உதவியவர் ஒரு தமிழ் பெண்ணாக இருந்தால், எனக்கு வந்த ஐயங்களில் ஒன்றாக ஒருவேளை சக தமிழன் என்பதால் கொடுத்திருப்பாரோ ? என்று கூடுதலாக நினைத்திருப்பேன்.

தேவையற்ற நன்றிக் கடன்கள், வற்புறுத்தல்கள், அன்புத் தொல்லைகள் இவற்றை முடிந்த அளவுக்கு நானும் செய்வதில்லை, என்னை நோக்கி வருவதையும் நான் விரும்பியதில்லை.  அவ்வாறு நடந்தது அதிர்ச்சி, வியப்பு, கேள்விகள் என பல உணர்வுகளை ஏற்படுத்தியது. அவ்வாறு நடந்ததை நான் ரசிக்கவில்லை என்பதும் உண்மை.

நாம ஒருவருக்கு உதவி செய்தால் , குறைந்தபட்சம் சின்ன எதிர்பார்ப்பான 'நன்றி' என்கிற சொல்லுக்கு ஏங்கி ஒரு வினாடி அங்கிருந்து, நாமெல்லாம் வள்ளல் வாரிசுகள் போல் ஒரு பெருமிதத்தில், இதெல்லாம் 'பெரிய விசயமே இல்லைன்னு' ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு செல்வோம், அவர் சற்றும் தாமதிக்கமல் சென்றது எனக்கு வருத்தத்தையே ஏற்படுத்தியது

ஒரு காஃபீருக்கு ஒரு மும்மின் உதவியதை நம் வஹாபி பதிவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ ? என்ற ஐயமும் இந்த இடுகை எழுதும் பொழுது ஏற்பட்டது. :))))))

46 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

கோவி,

வித்தியாசமான அனுபவம் தான்.

இந்தியர், தமிழர் என்பதை வைத்து கஷ்டப்பட்டு வேலை செய்துக்கொண்டு இருப்பவராக இருக்கலாம் என நினைத்து உதவி இருக்கலாம்.

// 'If you don't have enough money, I will give you lah' //

இப்படி சொன்னதில் இருந்து ,நீங்கள் சிங்கை வெள்ளி வைத்திருப்பதை கவனிக்கவில்லை என்றே நினைக்கலாம்.

சரி உதவி செய்தால் , நன்றி சொல்வோம்,ஏன் ரொம்ப ஆராய்ந்து கொண்டு.

ஒரு வேளை நம்ம ரேஞ்ச்சுக்கு நமக்கே காசு கொடுத்து கேவலப்படுத்திட்டாங்களேனு மனசுக்குள் குறுகுறுப்பா இருக்குமோ?

ஹி...ஹி நீங்க ஒரு பிரபலபதிவர் என்பதால் கூட உதவி இருக்கலாம், உங்க வசாகியா இருக்க போறாங்க :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஹி...ஹி நீங்க ஒரு பிரபலபதிவர் என்பதால் கூட உதவி இருக்கலாம், உங்க வசாகியா இருக்க போறாங்க :-))//

இதெல்லாம் ஓவர், மலாய்காரர்களுக்கு தமிழே வராது இதில் பதிவு வேற படிக்கிறாங்களாக்கும்

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ
நல்ல பதிவு. மனிதம் சாவது இல்லை.அவ்வபோது தன் இன்முகம் காட்டுவது அதன் சிறப்பு. ஆயினும் ஒரு மனித நேய உதவியையும் பலவாறு நோக்கமுடையதாக சிந்திக்கும் சூழலில் வாழ்கிறோம்.
*************

நம் வஹாபி சகோக்கள் என்ன சொல்வார்கள்?

வெளியில்: இதுதான் இஸ்லாமின் பெருமை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண்
நன்னயம் செய்து விடல்

என்பதை நடைமுறையில் நாங்கள் பின்பற்றுவதால் திருவள்ளுவரே எங்கள் ஆள் என உங்களுக்கு நிரூபித்து விட்டோம்.
***
உள்ளே: சரி ஜக்காத்தில் கொஞ்சம் கண்க்கு கழிந்தது என சகோதரி நினைத்து இருப்பார். இது தெரியாமல் இந்த காஃபிர்கள் குழம்புகிறார்கள்.சிந்திக்கா மாட்டார்களா[காஃபிர்கள்]
[http://en.wikipedia.org/wiki/Zakat]
ஜக்காத் என்பது ஒவ்வொரு முஸ்லிமும் 2.5%[?] வருட வருமானத்தில் தானம் செய்ய வேண்டும்.

நன்றி!!!



கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு மனித நேய உதவியையும் பலவாறு நோக்கமுடையதாக சிந்திக்கும் சூழலில் வாழ்கிறோம்.//

:)
இதை எழுதுவதால் எழும் எதிர்மறை விமர்சனங்கள் தெரிந்து தான் எழுதினேன். என்னைப் பற்றிய பிம்பங்களை நான் வலிந்து உருவாக்க முயற்சிப்பதில்லை.

Flavour Studio Team சொன்னது…

// நாம் ஒருவருக்கு உதவி செய்ய நினைத்தால் தேவைப்படும் அளவுக்கு தானே செய்வோம், ஏன் கூடுதலாகக் கொடுத்துவிட்டு உடனடியாக நகரவேண்டும் ?
நான் பணமே இல்லாமல் நிற்கவில்லை, அருகில் பணமாற்று இடத்திற்குச் சென்று மாற்றி வந்து கொடுத்திருக்க முடியும், என்னிடம் சிங்கை வெள்ளிகள் இருப்பதையும் நான் பில் போடுவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன், இருந்தும் ஏன் எனக்கு உதவி செய்ய வேண்டும் ?
யாருக்காவது மருந்து வாங்கும் இடத்தில் போதிய பணம் இல்லை என்றால் நாம் உடனடியாக உதவ வேண்டுமா (தமிழ் படத்தில் மருந்து வாங்க பணம் இன்றி, கடை கடையாக ஏறி வெறும் கையோடு திரும்பி வரும் காட்சிகள் போன்று அந்த பெண் நிறைய காட்சிகளை பார்த்திருப்பாரா ?
ஒருவேளை அவர் மருந்தகத்தின் பங்குதாரா ?
கடைசியாக வந்த ஐயம் நம்மிடம் வரும் பணம் (வட்டிப் பணமோ, வேறு முறையற்ற பணமோ) வந்த வழி நன்கு தெரிந்து பாவங்களை கழுவ பாதிக்கப்படுவருக்கு கொடுத்து புண்ணியம் கட்டிக் கொள்வது நமது தவறுகளை ஞாயப்படுத்தும் என்று நம்பி இவ்வாறு செய்வார்களா ?
/// இத்தனை கேள்விகள் எதற்கு சகோ கோவி..! ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும் அது.. மனிதாபிமானம்..!

அஜீம்பாஷா சொன்னது…

உங்களுக்கு உதவி செய்த அம்மையாருக்கு இதே அனுபவம் (சில்லறை குறைவாக இருந்திருக்கலாம்)
அப்போது அவருக்கு உதவ யாரும் இல்லாததால் மருந்து வாங்க முடியாமல் திரும்பி போய் இருக்காலம், அந்த நிலை உங்களுக்கு ஏற்படாமல் இருக்க உதவியிருக்கிறார் என்று நினைத்து கொள்ளுங்கள் கண்ணன்.

suvanappiriyan சொன்னது…

தூய்மையான இஸ்லாத்தை (வஹாபியத்தை) உளப்பூர்வமாக பின்பற்றும் பெண்மணியாக இருந்திருக்கலாம்.

"பல ஊர்வாசிகளிடம் இருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவை அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் அவருடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியவையாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்கள் இடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்காமல் மற்றவர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, இவ்வாறு பொருளைப் பங்கிடும்படி அல்லாஹ் கட்டளையிடுகின்றான். (குர்ஆன் 59:7)

"அபூதர்ரே! நீர் ஆணம் சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்திக்கொண்டு பிறகு உமது அண்டை வீட்டாரைக் கவனித்து நல்லவிதமாக அவர்களுக்கும் சிறிது கொடுங்கள்" (ஸஹீஹ் முஸ்லிம்).

"அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருளிலிருந்து நீங்கள் அவர்களுக்குக் கொடுங்கள்" (குர்ஆன் 24:33)

இந்த வசனங்களை எல்லாம் தனது வாழ் நாளில் செயல்படுத்தக் கூடிய பெண்ணாக இருக்கலாம்.

இதை எல்லாம் செயல்படுத்தியதால் சகோதரி சொல்வது போல் மனிதாபிமானியாக மாறியிருக்கலாம்.


சிராஜ் சொன்னது…

கோவி கண்ணன் அண்ணன்...

இது மனிதாபிமானம் சம்பந்தப்பட்ட விஷயம் ... இதில் அந்த மலாய் முஸ்லிம் பெண்ணை பாராட்டிவிட்டு போய் இருக்கலாம். அல்லது ஒன்றும் சொல்லாமல் விட்டு இருக்கலாம்..

ஆனால் இதிலும் வஹாபி பதிவர்கள் என்று முஸ்லிம்களை குறை சொல்வதை தான் முன்னிறுத்துகிறீர்கள்...

இது நல்ல அறிகுறி இல்லை..இதற்க்கு மேல் சொல்ல ஒன்னும் இல்லை..

சிராஜ் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சதுக்க பூதம் சொன்னது…

ஏன் ரொம்ப யோசிக்கிரிங்க.Pay It Forward படம் பாணியில் முகம் தெரியாத மூன்று பேருக்கு எதாவது உதவி செய்து விடுங்கள்

சிராஜ் சொன்னது…

// உள்ளே: சரி ஜக்காத்தில் கொஞ்சம் கண்க்கு கழிந்தது என சகோதரி நினைத்து இருப்பார். இது தெரியாமல் இந்த காஃபிர்கள் குழம்புகிறார்கள்.சிந்திக்கா மாட்டார்களா[காஃபிர்கள்]
[http://en.wikipedia.org/wiki/Zakat]
ஜக்காத் என்பது ஒவ்வொரு முஸ்லிமும் 2.5%[?] வருட வருமானத்தில் தானம் செய்ய வேண்டும். //

ஒரு முஸ்லிம் பெண்மணி கோவி அண்ணன் யார்? எந்த மதம் எதுவும் விசாரிக்காமல் உதவி செய்துவிட்டு கவுரவமாக சென்று விட்டார்... உதவி பெற்றுவிட்டோமே என்று அண்ணனும் கவுரவமாக கவலை பட்டுவிட்டார்...

ஆனால் தேவை இல்லாமல் குறுக்கே புகுந்து நீங்கள் முஸ்லிம்களை திட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்... யார் ? என்ன என்று விசாரிக்காமல் உதவிய அந்த முஸ்லிம் பெண்ணின் கால் தூசிக்குக் கூட நீங்கள் சமம் ஆக மாட்டீரகள் சகோ...சாரி டு சே திஸ்..

வவ்வால் சொன்னது…

கோவி,

என்ன அப்படி சொல்றிங்க, ஜப்பான் பொண்ணுங்க எல்லாம் தமிழ் படிக்க தமிழ்நாட்டுக்கு வராங்க(உபயம் ரஜினி)

அதே போல மலாய் பொண்ணுங்களும் தமிழ் படிக்க கற்று இருக்கலாம்ல. வலைப்பதிவுல உங்க படம் பார்த்து இருப்பாங்க ஆஹா இவ்ளோ பிரபல பதிவரே சில்லைறையில்லாம கஷ்டப்படுறாங்கலேன்னு உதவி இருக்கலாம்.

உங்களுக்கு இதை சரியா பதிவாக்க தெரியவில்லை, உதவி செஞ்சுட்டு ,நான் உங்க பதிவை விடாம படிப்பேன் ,உங்க வாசகின்னு சொல்லி அதிர்ச்சி கொடுத்தாங்க, வலையில் எழுதுவதால் என்ன பயன் என நினைத்தேன் ,என் எழுத்துக்கும் ஒரு சக்தி இருக்குன்னு நிருபிச்ச சம்பவம் ,கண்கள் கலங்கின ,என்ன தவம் செய்தேன்,என்ன பெருசா எழுதிட்டேன்னு என் மேல் இத்தனை அன்பு என செண்டிமெண்டா எழுதி நெஞ்ச நக்கி இருக்க வேண்டாமோ :-))

அப்போ தான் பிரபலப்பதிவர்னு ஒரு ஒளிவட்டம் கிடைக்கும் :-))

------
//ஒரு காஃபீருக்கு ஒரு மும்மின் உதவியதை நம் வஹாபி பதிவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ ? என்ற ஐயமும் இந்த இடுகை எழுதும் பொழுது ஏற்பட்டது. :))))))//

இந்த வரியை கூட எடுத்து விடலாம் என நினைக்கிறேன், சிரிப்பான் எல்லாம் போட்டிருந்தாலும் ,தேவை இல்லாத சர்ச்சையை ஒரு நல்ல சம்பவத்தினை பதியும் போது ஏன் கொடுக்க வேண்டும்.

------

சிராஜ் ,

கூல் ...கூல், சார்வாகன் உதவி செய்த சம்பவத்தினை அப்படி மத ரீதியாக சொல்லி இருக்க கூடாது , தவறு தான். ஆனால் அவர் ஒரு நகைச்சுவை/பகடிக்காகவே அப்படி சொல்லி இருக்கிறார் ,எனவே நீங்களும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விடலாம்,

பாருங்க சு.பி.சுவாமிகள் வகாபின்னு தான் சொல்லுறார், பொதுவா மனித நேயம்னு மதமில்லாமலே பார்க்கலாம்.

சென்னையில் பெரும்பாலும் பேருந்து நிறுத்தங்களில் ஊருக்கு போக பணம் இல்லைனு பொய்யோ /உண்மையோ சொல்லிக்கேட்பது சகஜம் , சரி போவுதுன்னு கையில் இருப்பதை கொடுப்பேன். எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை தான் ,நாளைக்கு நாம வெளியூரில் இப்படி நின்னா ஒருத்தர் உதவ மாட்டாங்களானு தான்:-))

என்ன ஒரு சுயநலம்!!!

அசீம் பாஷா கூட இவ்வகையில் உதாரணம் காட்டி இருக்கார் பாருங்க.

சக மனிதனுக்கு ,மனிதன் உதவுவது தான்.

எல்லாவற்றையும் சீரியசாவே எடுத்துக்காதிங்க, இல்லைனா தமிழனுக்கு நகைச்சுவை உணர்ச்சி குறைஞ்சு போச்சுன்னு சொல்லிடுவாங்க :-))

வவ்வால் சொன்னது…

//ஏன் ரொம்ப யோசிக்கிரிங்க.Pay It Forward படம் பாணியில் முகம் தெரியாத மூன்று பேருக்கு எதாவது உதவி செய்து விடுங்கள்//

சதுக்க பூதம் சொன்னது போலவும் செய்யலாம்.

அந்த படம் பேரு இதானா? தெலுங்கில் ஏ.ஆர்.முருக தாஸ் இயக்கத்தில் ,சிரஞ்சீவி நடித்த ஸ்டாலின் படத்தின் கதையும் இதான், அப்போவே இங்கிலிஷ் படம் காப்பினு சொன்னாங்க பேரு தான் மறந்து போச்சு, இப்போ எடுத்துக்கொடுத்திட்டிங்க,நன்றி!

குட்டிபிசாசு சொன்னது…

கோவி,

எல்லாம் ஒரு மனிதாபிமானம்தாங்க. நான் கூட காசு தொலைச்சிட்டு, ஊருக்கு திரும்பபோக வேலூர் பஸ் ஸ்டாண்டில் எல்லாரிடமும் கேட்டு இருக்கேன். ஒரு பயலும் கொடுக்கல. கடைசியில கைகடிகாரத்தை வித்துட்டு ஊருக்கு போனேன்.

வவ்வால்,

////ஒரு காஃபீருக்கு ஒரு மும்மின் உதவியதை நம் வஹாபி பதிவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ ? என்ற ஐயமும் இந்த இடுகை எழுதும் பொழுது ஏற்பட்டது. :))))))//

இந்த வரியை கூட எடுத்து விடலாம் என நினைக்கிறேன், சிரிப்பான் எல்லாம் போட்டிருந்தாலும் ,தேவை இல்லாத சர்ச்சையை ஒரு நல்ல சம்பவத்தினை பதியும் போது ஏன் கொடுக்க வேண்டும்.//

கோவி என்ன நமக்கா சொல்லி இருக்கார். வரக்காபி பிரியர் சு.பி அண்ணனுக்கு சொல்லி இருக்கார். அவரும் வழக்கம் போல வந்து பதிலை சொல்லிவிட்டார். வரவர ரெண்டு பேரும் கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் (கண்ணனும் ராதையும் போலனு சொல்லலாம்னு இருந்தேன்! எதுக்கு வம்பு. எவனா காவி பெய்ண்ட் டப்பாவோட வந்து சாயம் பூசுவான்) போல ஆகிட்டாங்க. :))

Packirisamy N சொன்னது…

//இது மனிதாபிமானம் சம்பந்தப்பட்ட விஷயம் ... இதில் அந்த மலாய் முஸ்லிம் பெண்ணை பாராட்டிவிட்டு போய் இருக்கலாம். அல்லது ஒன்றும் சொல்லாமல் விட்டு இருக்கலாம்..

ஆனால் இதிலும் வஹாபி பதிவர்கள் என்று முஸ்லிம்களை குறை சொல்வதை தான் முன்னிறுத்துகிறீர்கள்...

இது நல்ல அறிகுறி இல்லை..இதற்க்கு மேல் சொல்ல ஒன்னும் இல்லை.. //

True.

Packirisamy N

ப.கந்தசாமி சொன்னது…

சற்று வித்தியாசமான பெண்"மணி"தான் அவர்.

Flavour Studio Team சொன்னது…

////இது மனிதாபிமானம் சம்பந்தப்பட்ட விஷயம் ... இதில் அந்த மலாய் முஸ்லிம் பெண்ணை பாராட்டிவிட்டு போய் இருக்கலாம். அல்லது ஒன்றும் சொல்லாமல் விட்டு இருக்கலாம்..

ஆனால் இதிலும் வஹாபி பதிவர்கள் என்று முஸ்லிம்களை குறை சொல்வதை தான் முன்னிறுத்துகிறீர்கள்...

இது நல்ல அறிகுறி இல்லை..இதற்க்கு மேல் சொல்ல ஒன்னும் இல்லை.. //// agree..!

ssk சொன்னது…

தங்கள் உருவம் கண்டு அங்கு வேலை செய்யும் உடல் நலம் இல்லா வெளி நாட்டு தொழிலாளி என்று நினைத்து உதவி இருக்கலாம்.
அவர் முன்பு இந்த தொழிலாளிகளை எளனபடுத்தியோ, கஷ்டபடுத்தியோ இருக்கலாம். இப்போது ஒரு கழுவாய்.
அடிப்படை உங்கள் உருவம். பல இடங்களில் எனக்கு இது மாதிரி நடந்துள்ளது. வருவாய் தவிர எனக்கும் இங்கு வேலை செய்யும் நம் சகோதரர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்கள் தனியே நாம் குடும்பத்துடன்.

சார்வாகன் சொன்னது…

சகோ சிராஜ்
//ஆனால் தேவை இல்லாமல் குறுக்கே புகுந்து நீங்கள் முஸ்லிம்களை திட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்... யார் ? என்ன என்று விசாரிக்காமல் உதவிய அந்த முஸ்லிம் பெண்ணின் கால் தூசிக்குக் கூட நீங்கள் சமம் ஆக மாட்டீரகள் சகோ...சாரி டு சே திஸ்..//

நான் என்ன சொன்னேன்??

இஸ்லாமியர்களுக்கு ஜக்காத் என்ப்படும் தானம் 2.5% கொடுக்க வேண்டி உள்ளதால் ,சகோ கோவிக்கு செய்த உதவியை அது சார்ந்து செய்து இருக்கலாம் என்றுதானே.இதில் என்ன தவறு?

இல்லை அதுக்கும் இஸ்லாமுக்கு தொடர்பே இல்லை தனிப்பட்ட மதம் சாரா மனித நேயம் என்றாலும் எனக்கு சரிதான்.

முஸ்லிம்களில் கடன் வாங்கியவன் திருப்பித் தரமுடியாவிட்டால் சரி உனக்கு ஜக்காத் கொடுத்ததாக நினைக்கிறேன் என்பது மிக வழக்கமான சொல்லாடல்.

இப்ப்ப நீங்க சொன்னது என்னை திட்டியதாக நான் சொல்லவே மாட்டேன். என்னைத் திட்ட அனைவருக்கும் உரிமை உண்டு.

பாவம் நீங்களே குழப்பத்தில் இருப்பவர்கள்.ஆக்வே கோபப் படவே மாட்டேன்!

பாருங்கள் ஜக்காத் என்றால் காஃபிரான எனக்கு இருக்கும் தெளிவு கூட இல்லாமல் என்ன குழப்பு குழப்புகிறார்கள் என்று.இதைப் படித்தால் சிரிக்க ஆரம்பித்து விடுவீர்கள் என நான் உறுதி கூறுகிறேன்

http://www.readislam.net/zakat_issue.htm

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//இத்தனை கேள்விகள் எதற்கு சகோ கோவி..! ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும் அது.. மனிதாபிமானம்..!//

நீங்க இதைச் சொல்றிங்க, சகோ சுபி குரான் ஹதீஸ் வெளக்கத்துடன் அக்மார்க் முத்திரையும் காரணமாக இருக்கலாம் என்கிறார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப் பிரியன் கூறியது...
தூய்மையான இஸ்லாத்தை (வஹாபியத்தை) உளப்பூர்வமாக பின்பற்றும் பெண்மணியாக இருந்திருக்கலாம்.//

உங்க மிதவாத தலிபானியம் அதாவது வஹாபியத்தில் பெண்கள் தனியாக சகோதரர் அல்லது கணவர் துணையின்றி வெளியே செல்லக் கூடாது என்கிற அறிவுறுத்தல் உண்டு, உளப்பூர்வமாக, உணர்வுபூர்வமாக பின்பற்றுவராக இருந்தால் அவர் தனித்து வந்திருக்கமாட்டார்.

//அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியவையாகும்.//

இடையிடையே பிராக்கெட்டுகள் இல்லாததால் முஸ்லிம் அல்லாதவரும் இவர்களில் உள்ளடக்கம் என்று கொள்ள வேண்டுமா ?

//உமது அண்டை வீட்டாரைக் கவனித்து //

அண்டைவீட்டார் ஒரு இந்துத்துவாதி என்றால் கவனிப்பீரா ?

*****

நான் அவருடைய உதவி செய்யும் நோக்கத்தை மதத்திற்குள் வைத்துப் பார்க்க வில்லை, அவருடைய அடையாளம் குறித்து சொல்ல மலாய்காரர் என்று குறிப்பிட்டு இருந்தேன்

கோவி.கண்ணன் சொன்னது…

// ssk கூறியது...
தங்கள் உருவம் கண்டு அங்கு வேலை செய்யும் உடல் நலம் இல்லா வெளி நாட்டு தொழிலாளி என்று நினைத்து உதவி இருக்கலாம். //

:))

அந்தளவுக்கெல்லாம் எனக்கு மோசமான தோற்றம் இல்லை என்றே நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால் இதிலும் வஹாபி பதிவர்கள் என்று முஸ்லிம்களை குறை சொல்வதை தான் முன்னிறுத்துகிறீர்கள்...
//

இஸ்லாமியர்களில் வஹாபியர்கள் உண்டு, இஸ்லாமியர்கள் அனைவரும் வஹாபியர்கள் இல்லை, எனவே உங்கள் கருத்தை புறந்தள்ளுகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//சதுக்க பூதம் கூறியது...
ஏன் ரொம்ப யோசிக்கிரிங்க.Pay It Forward படம் பாணியில் முகம் தெரியாத மூன்று பேருக்கு எதாவது உதவி செய்து விடுங்கள்//

இங்கு இரயில் நிலையங்களுக்கு அருகே, முடியாதவர்கள், வயதானவர்கள், உடல்குறையுற்றோர் அமர்ந்திருப்பர், அவர்கள் இரந்து கேட்காமல் திசு பாக்கெட்டுகள் வைத்திருப்பர், அதைப்பார்ப்பவர்கள் அவர்களிடம் இரண்டோ மூன்றோ பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு இயன்ற பணத்தை கொடுத்துச் செல்வர். நானும் அவர்களைப் பார்க்கும் பொழுது திசு பாக்கெட்டுகள் வாங்கமலேயே பணம் கொடுத்துவிட்டு செல்வதுண்டு.

ஜோ/Joe சொன்னது…

இந்த பதிவில் உங்கள் தொனியும் , சில பின்னூட்டங்களில் உங்கள் கருத்துக்களும் .. சாரி ..பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

//அந்தளவுக்கெல்லாம் எனக்கு மோசமான தோற்றம் இல்லை என்றே நினைக்கிறேன்.//

வெளிநாட்டு தொழிலாளிகள் அந்த அளவுக்கு மோசமான தோற்றத்தில் இல்லை என்றே நினைக்கிறேன்.

நன்பேண்டா...! சொன்னது…

////இது மனிதாபிமானம் சம்பந்தப்பட்ட விஷயம் ... இதில் அந்த மலாய் முஸ்லிம் பெண்ணை பாராட்டிவிட்டு போய் இருக்கலாம். அல்லது ஒன்றும் சொல்லாமல் விட்டு இருக்கலாம்..

ஆனால் இதிலும் வஹாபி பதிவர்கள் என்று முஸ்லிம்களை குறை சொல்வதை தான் முன்னிறுத்துகிறீர்கள்...

இது நல்ல அறிகுறி இல்லை..இதற்க்கு மேல் சொல்ல ஒன்னும் இல்லை.. //// agree..! its not good

நன்பேண்டா...! சொன்னது…

நீங்கள் இஸ்லாமியர்களை குறை கூற வேன்டும் என்பதற்காக உஙளுக்கு செய்யப் பட்ட ஒரு உதவியை கூட மத சாயம் பூசி பதிவிடுவது உங்களை ஒரு நேர்மயான பதிவர் தானா என சந்தேகம் கொள்ள செய்கின்றது.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெளிநாட்டு தொழிலாளிகள் அந்த அளவுக்கு மோசமான தோற்றத்தில் இல்லை என்றே நினைக்கிறேன்.//

உங்களுக்கு தான் பெட்டர் லக் நெக்ஸ் டைம் சொல்லனும்.

இங்கு பின்னூட்டம் போட்ட எஸ் எஸ் கேவும் சரி, நானும் சரி வெளிநாட்டு ஊழியர்கள் தோற்றம் குறித்து எதையும் சித்தரிக்கவில்லை, உடல் நலமில்லாதவர்களின் நலன் பற்றிக் கூறும் போது வெளிநாட்டு ஊழியர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதுவும் மலேசிய நிகழ்வு என்பதால் உதாரணத்திற்கு அவர் கூறினார், நானும் அதற்கு பதில் சொன்னேன்.

உங்களுக்கோ, எனக்கோ உடல் நலமில்லாமல் போனால் தோற்றம் பரிதாபப்படும் படி இருக்கும் என்பதை நான் ஒப்புக் கொள்வேன் நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா தெரியாது.

நான் நல்ல உடல் நலத்துடன் தான் சென்றேன், உடல் நலமில்லாத தோற்றத்துடன் செல்லவில்லை என்பதைத் தான் குறிப்பிட்டுள்ளேன், தமிழை புரிந்து கொள்வதில்லை என்ன சிக்கலோ ? உடல் நலமில்லாதவர்களிடம் உடனடி கரிசனம் ஏற்பட அவர்களின் தோற்றம் தான் முதன்மை.

பெட்டர் லக் நெக்ஸ் டைம்.

மீறியும் நீங்கள் இப்படித்தான் வெளிநாட்டு ஊழியர்கள் குறித்த மோசமான மனநிலையில் சொல்லி இருக்க முடியும் என்று வாதாட வந்தால் அது உங்கள் தனிப்பட்ட கருத்து, நான் என்ன நினைத்து எழுதினேன் என்பதை உறுதிப்படுத்த உங்களிடம் எதுவும் இல்லை.

புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன், புரியாவிட்டாலும் பரவாயில்லை.

:)

ஜோ/Joe சொன்னது…

கோவி,
நல்ல சமாளிப்பு ,But again Better luck next time :)

கோவி.கண்ணன் சொன்னது…

//நன்பேண்டா...! சொன்னது…
நீங்கள் இஸ்லாமியர்களை குறை கூற வேன்டும் என்பதற்காக உஙளுக்கு செய்யப் பட்ட ஒரு உதவியை கூட மத சாயம் பூசி பதிவிடுவது உங்களை ஒரு நேர்மயான பதிவர் தானா என சந்தேகம் கொள்ள செய்கின்றது.//

:) அதை நான் ஒன்றும் செய்ய இயலாது. என் வரையில் என்னைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என்றூ கவலை கொள்வதில்லை, கேட்காமல் உதவி செய்த பெண் குறித்த சிந்தனையில் தலைப்பில் சிறப்பு செய்துவிட்டேன். அது போதும், மற்றவர்களின் பாராட்டு சான்றிதழ்களை வாங்கி வைக்க என்னிடம் இடம் ஏதுவும் இல்லை தலைவரே

நன்னயம் சொன்னது…

@ ஜோ/Joe
நீங்கள் முகம் குப்புற விழுந்து விட்டீர்கள் ஆனால் மீசையில் மண் படவில்லை.
(மீசை இல்லாமல் இருக்கலாம்)

நன்னயம் சொன்னது…

"உங்களுக்கு உதவி செய்த அம்மையாருக்கு இதே அனுபவம் (சில்லறை குறைவாக இருந்திருக்கலாம்)
அப்போது அவருக்கு உதவ யாரும் இல்லாததால் மருந்து வாங்க முடியாமல் திரும்பி போய் இருக்காலம், அந்த நிலை உங்களுக்கு ஏற்படாமல் இருக்க உதவியிருக்கிறார் என்று நினைத்து கொள்ளுங்கள் கண்ணன்."

ஆசீம் பாஷா சொன்னதுதான் சரியான காரணமாக இருக்கலாம்.

நன்னயம் சொன்னது…

"ஒரு காஃபீருக்கு ஒரு மும்மின் உதவியதை நம் வஹாபி பதிவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ ? என்ற ஐயமும் இந்த இடுகை எழுதும் பொழுது ஏற்பட்டது. :))))))"

அப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு இருந்தால் இந்த பதிவை போட்டிருக்க தேவையில்லை. அந்த பெண்ணும் இந்த பதிவை பார்க்க போவதில்லை.

நன்னயம் சொன்னது…

@ சார்வாகன் ,
இதை குறிப்பிடுவதற்கு மன்னிக்க வேண்டும் .நிச்சயமாக அந்த பெண் சகாத் நோக்கத்திற்காக அந்த பணத்தை வழங்கியிருக்க வில்லை. மனிதநேயம் மட்டுமே.
@கோவி,
"மலேசியாவில் 10 ரிங்கிட்டுகள் என்பது அவ்வளவு எளிதாக ஈட்டக் கூடிய பணமும் இல்லை, "
யாருக்கு ? நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள். ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் (ரிங்கட்) உழைக்கும் மலேசியர்களும் இருக்கிறார்கள் , ஒரு நாள் முழுவதும் உழைத்து 30 வெள்ளிக்கு குறைவாக வருமானம் பெறுபவர்களும் இருக்கிறார்கள். முதலாளித்துவ பொருளாதாரத்தில் எல்லாம் சகஜம்.

நன்னயம் சொன்னது…

"ஆனால் இதிலும் வஹாபி பதிவர்கள் என்று முஸ்லிம்களை குறை சொல்வதை தான் முன்னிறுத்துகிறீர்கள்...

இது நல்ல அறிகுறி இல்லை..இதற்க்கு மேல் சொல்ல ஒன்னும் இல்லை..""
@சிராஜ் , கோவி அவ்வாறு கூறியபடி நடக்காது விட்டிருந்தால் தான் பிரச்சினை ஆனால் நடந்தது ,
சின்ன கேப் கிடைத்தாலும் சந்தில் சிந்து பாடும் சுவன பிரியன் ஐயா "தூய்மையான இஸ்லாத்தை (வஹாபியத்தை) உளப்பூர்வமாக பின்பற்றும் பெண்மணியாக இருந்திருக்கலாம்." என்று தொடக்கி ஒரு குரான் பிரச்சாரத்தை செய்து விட்டார்.
ஷர்மிளா ஹமீத் அக்கா இந்த பதில் உங்களுக்கும் தான்.

நன்னயம் சொன்னது…

சுவன பிரியன் ஐயா இந்த மாதிரி சந்தில் சிந்து பாடும் வேலை விடுமட்டும் இந்தமாதிரி :வஹாபி பதிவர்கள் என்று முஸ்லிம்களை குறை சொல்வதை" தொடரத்தான் செய்யும். சுவன பிரியன் சிந்து பாடும் வேலை நிறுத்தவும் போவதில்லை மற்றைய தரப்பு குறை சொல்லவதை விட போவதும் இல்லை

நன்னயம் சொன்னது…

அந்த பெண்ணின் உதவியிலும் கோவி அண்ணனிற்கு ஏற்பட்ட மன உழைச்சலுக்கும் காரணம் கலாச்சார முரணே. ஒருவருக்கு உதவி செய்ய முன் உதவி பெற போகிறவரிடம் அனுமதி (can help you) அவர் அனுமதி வழங்கிய பின் உதவி செய்ய வேண்டும். இந்த கலாச்சார பண்பே சிங்கபூரிலும் ஏனைய மேற்கத்தைய நாடுகளிலும் பின் பற்றபடுகிறது. மேற்கத்தைய நாடுகளில் முதியவர்களுக்கு கூட அவர்கள் அனுமதி பெறாது உதவி செய்ய கூடாது. அதை அவர்கள் தங்களின் தன்மானத்திற்கு இழுக்காக கருதுவார்கள்.
கோவி அண்ணையின் பிரச்சினையில் அந்த பெண் அனுமதி கேட்காது செய்ததுதான் பிரச்சினை (கோவி அண்ணை வசிப்பது சிங்கப்பூரில் அதுவும் நல்ல நிலைமையில் இருக்கிறார். இந்த சம்பவம் அவருக்கு ஒரு மன தாக்கத்தை ஏற்படுத்திருக்கும். ) மலேசியாவில் இரண்டு வகையான கலாச்சாரங்களும் உண்டு. (அனுமதி கேட்டுதான் உதவி செய்ய வேண்டும் , அனுமதி பெறாது உதவி செய்தல்) உதவி செய்பவர்கள் எந்த கலாச்சாரத்தை சார்ந்திருக்கிறார்கள் என்பதை பொறுத்து அவர்களின் செயல்பாடு அமைந்திருக்கும். அந்த பெண்ணிலும் தவறு அல்ல. கலாச்சார முரண்பாடு தான் காரணம். நாமும் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன் அவர்களின் அனுமதி பெற்ற பின்பே செய்ய வேண்டும் என்ற பாடத்தை கற்று கொள்ளவோம்.

வவ்வால் சொன்னது…

எதிகலிஸ்ட்,

//(கோவி அண்ணை வசிப்பது சிங்கப்பூரில் அதுவும் நல்ல நிலைமையில் இருக்கிறார். இந்த சம்பவம் அவருக்கு ஒரு மன தாக்கத்தை ஏற்படுத்திருக்கும். ) //

இது தான் முக்கியமான காரணமாக இருக்கும், இதனை மனதில் ஏற்பட்ட குறு குறுப்பு என முதலிலேயே சொல்லிவிட்டேன், பல நேரங்களில் அனைவருக்கும் இது போல நடக்கும்.

இந்த இடத்தில் மேலும் ஆய்வது , எதனையும் நினைக்காமல் உதவி செய்த ஒருவரையும் கொச்சைப்படுத்துவதாக அமையும்.

சு.பி.சுவாமிகள் வழக்கம் போல என்பதால் கணக்கில் கொள்ள வேண்டாம்.

மற்றவர்களும் சு.பியை மட்டும் கணக்கில் வைத்து பேச வேண்டாம் என்பதால் தான் சார்வகன் சொன்னதும் தேவையில்லை என்றேன்.
----------------

குட்டிப்பிசாசு,

அது என்னமோ உண்மைதான், கோவி ,சு.பியை மனதில் வைத்தே அந்த வரியை எழுதி இருப்பார் போல, நல்ல மனப்பொருத்தம் தான் :-))

ஜோக்கு சொன்னா சிரிக்கணும், உதவி செய்தா நன்றி சொல்லணும், ரொம்ப ஆராய கூடாது :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//எதிகலிஸ்ட்,

//(கோவி அண்ணை வசிப்பது சிங்கப்பூரில் அதுவும் நல்ல நிலைமையில் இருக்கிறார். இந்த சம்பவம் அவருக்கு ஒரு மன தாக்கத்தை ஏற்படுத்திருக்கும். ) //

இது தான் முக்கியமான காரணமாக இருக்கும், இதனை மனதில் ஏற்பட்ட குறு குறுப்பு என முதலிலேயே சொல்லிவிட்டேன், பல நேரங்களில் அனைவருக்கும் இது போல நடக்கும்.
//

வவ்ஸ், நான் சிங்கப்பூரில் தொழில் அதிபர் இல்லை, நானும் தமிழகத்தில் இருந்து பொழைப்புக்காக வந்தவன் தான், மருநதுகள் விலை கொஞ்சம் குறைவாக இருக்கிறது என்பதற்குத்தான் நான் ஜோகூருக்குச் சென்றேன். நீங்கள் இருவரும் சொன்னது போல் நான் நினைக்கவில்லை.

Flavour Studio Team சொன்னது…

//அண்டைவீட்டார் ஒரு இந்துத்துவாதி என்றால் கவனிப்பீரா ?
/// நிச்சயமாக..!!

வேடிக்கை மனிதன் சொன்னது…

நீங்கள் உதவி கேட்க தயங்குவதாக நினைத்துக் கூட உதவி இருக்கலாம், உதவி செய்தவர் ஒரு மலாய் பெண் என்பதால் பதிலுக்கு காத்திருக்க முடியாமல் விட்டுப் போயிருக்கலாம்

வேடிக்கை மனிதன் சொன்னது…

நீங்கள் உதவி கேட்க தயங்குவதாக நினைத்துக் கூட உதவி இருக்கலாம், உதவி செய்தவர் ஒரு மலாய் பெண் என்பதால் பதிலுக்கு காத்திருக்க முடியாமல் விட்டுப் போயிருக்கலாம்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நன்றியையும் பாராட்டையும் ஒரு மந்திர சொல்லாக வைத்துக்கொள்ளவே கூடாது...

வவ்வால் சொன்னது…

கோவி,

பணக்காரர் அதனால அப்படின்னு சொல்வதாக இல்லை, வழக்கமாகவே இப்படி எதிர்ப்பாராமல் ,நாம் கேட்காமல் யாராவது உதவி செய்துவிட்டால் ஒரு குறுகுறுப்பு ...மனசில் ஓடும் அதனை சொன்னேன்.

ஒரு முறை மத்தியான வெயில் நேரத்தில் ஆட்டொ கிடைக்குமா என நின்று பார்த்துக்கொண்டு இருந்தேன்,பல ஆட்டோ நிற்காமலே போச்சு, நான் ஆட்டோவை கையை காட்டி நிறுத்தப்பார்த்தப்போது ,பைக்கில் வந்தவர் நான் லிஃப்ட் கேட்கிறேன் போல என நிறுத்திவிட்டார், இல்லை நீங்க போங்க, நான் ஆட்டோவுக்காக கையை காட்டினேன் என சொன்னேன்,ஆனாலும் பரவாயில்லை வாங்க என என்னை ஏற்றிக்கொண்டார்,அந்த நேரத்துக்கு கொஞ்சம் குறுகுறுன்னு இருந்தது.

நாம ஒன்னு நினைக்க வேற ஒன்னா போச்சே என்பதால்.

Sathish Murugan . சொன்னது…

கோவி அண்ணே, உதவில எங்க மதம் வந்தது? (ஆனா சூனா பானா சாமியாரு அப்படித்தான் விளக்கம் கொடுத்தாரு) மனிதர்களாகவே இருப்போம், மதவாதிகளாக அல்ல(என்ன பண்ண, சில நேரங்களில் சிலருக்கு சிலவற்றை திருப்பி அளிக்க, சிலவற்றை ஒதுக்கி வைக்க வேண்டியுள்ளது) #நல்ல வேலை பாதி பேருக்கு இது புரியாது ;)

Unknown சொன்னது…

கோவி கண்ணன்,

உங்கள் பதிவினை சுவனப்பிரியன் படிக்கிறார் என்று எனக்கு தெரியும். அதனால் சுவனப்பிரியன் அவர்களிடம் நான் கேட்கும் கேள்வியை இங்கே பதிக்கிறேன். அவர் பதிவில் கேட்டால் சென்ஸார் பண்ணுகிறார். நான் ஆதாரத்தினைக் கொடுத்துதான் கேட்கிறேன்.




சுவனப்பிரியன் அய்யா,

சஹீஹுல் புஹாரி, பகுதி 1, புத்தகம் 5, எண் 268, எனும் செய்திபடி (ஹதீஸ்), நபி முகம்மது அவர்கள் பெண்களை புணர்வதில் 30 ஆண்களின் புணர்திறன் பெற்றிருந்தார் எனக் கூறுகிறது. இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான வலிமையான ஹதீஸ் என இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் ஒருமித்து கருத்தப்படுகிறது.

ஏன் ஒரு இறைத்தூதருக்கு, அவருடைய வேலைக்கு சம்பந்தமில்லாதவாறு, 30 பெண்களை வரிசையாகப் போடும் திறனை அவருக்கு அல்லாஹ் அளித்தான்?

கொஞ்சம் விளக்குங்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்