பின்பற்றுபவர்கள்

15 ஜூலை, 2012

கடன் வாங்கிக் களித்தல் !


தலைப்பில் எழுத்துப் பிழையில்லை , நகைக்காமல் முகம் சுளிக்காமல், தொடர்ந்து வாசிக்கலாம், எனது இடுகைகளின் எழுத்துப் பிழைகள் தட்டச்சு வேகத்தினால் வருவது தவிர்த்து தமிழ் சொற்கள் குறித்த அறியாமையினால் குழப்பத்தினால் ஏற்படுவது இல்லை, மறுவாசிப்பு செய்யும் முன் வெளி இட்டுவிட்டு நேரமிருந்தால் திரும்பப் படித்து சரிசெய்வேன், அல்லது யாரேனும் சுட்டிக்காட்டினால் சரி செய்து கொள்வேன். எழுத்துப் பிழையுடன் தமிழில் எழுதுவது குற்றம் இல்லை என்றாலும் குறைத்துக் கொண்டு எழுதினால் நல்லது என்பதே எனது பரிந்துரை. தவிர பதிவு எழுதவும், வெளி இடவும் நான் நேரம் பார்ப்பது கிடையாது, அதிகாலை நான்கு மணிக்கு கூட வெளி இட்டு இருக்கிறேன், எழுதுவதற்கு கிடைக்கும் நேரம் தான் வெளி இடுவதற்கு கிடைக்கும் நேரம், அந்த நேரத்தில் வாசிப்பார்களா ? ஹிட்ஸ் தேறுமா என்பது குறித்த கவலை எனக்கு இல்லை, என்னைப் பொறுத்த அளவில் வலைப்பதிவுகளில் எழுதுவது என்பது திறந்த நாள் குறிப்பில் எழுதுவது போன்றது, வாசிப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலை கொள்வது கிடையாது, அதே நேரத்தில்  எழுதுவதில் இரண்டு வரியாவது வாசித்தவர்களுக்கு பிடித்திருக்க வேண்டும், ஏனெனில் அவர்களின் நேரத்தில் சில நிமிடங்களை வாசிக்கும் போது, என்(எழுத்துகளி)னால் விழுங்கப்பட்டுவிடுகிறது என்கிற புரிந்துணர்வும் பொறுப்பும் எனக்கு உண்டு. 

*****

சில வாரங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் மூலம் கடனட்டை வழங்கும் வங்கிகள் எப்படிமுக நூல் (பேஸ் புக்)  வாடிக்கையாளர்களை பின் தொடர்கிறார்கள் என்பதைக் காட்டி இருந்தார்கள், அந்த நிகழ்ச்சியின் பெயர் குற்றமும் பின்னனியும், துப்பறிந்து மிகுந்த முயற்சியால் கண்டுபிடிக்கப் பட்ட ஒரு நிகழ்வு போலவும், இதன் மூலம் பேஸ் புக் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பது போன்ற தொனியில் நிகழ்ச்சி படைக்கப்பட்டு இருந்தது, அதாவது முகம் தெரியாத பெண்ணிடம் அசடு வழிந்து தனது தொடர்பு எண்களைக் கொடுத்த ஒரு இளைஞர் எப்படி சிக்க வைக்கப்பட்டார் என்பது தான் நிகழ்சியில் காட்டபட்டது, இதில் சித்தரிக்கப்பட்ட காட்சியில் நடிக்கும் பெண்ணையும், பாதிக்கப்பட்டவர் பற்றியும் அவர் எவ்வாறு வீழ்த்தப்பட்டார் என்றும் காட்டினார்கள், இந்த நிகழ்ச்சியைப் பார்பவர்கள் முக நூலில் இப்படியெல்லாம் மோசடி நடக்கிறதா ? என்று விழி விறிய வியப்படைந்தாலும் முக நூல் பயன்படுத்தும் நமக்கெல்லாம் அது ஒரு மொக்கை தகவல் தான், ஆனாலும் விஜய் தொலைகாட்சியின் குறிப்பிட்ட நிகழ்ச்சியின் நேர்மை கேள்விக் குறி.

கடன் வாங்காமல் யாரும் வாழவே முடியாது வெளியில் கடனே இல்லாவிட்டாலும் பெற்றக் கடன், வளர்த்தக் கடன், நன்றிக் கடன் என ஏகப்பட்ட கடன்களோடு தான் வாழ்கிறோம், அது தவிர மிகவும் தேவையான வேலைகளில் கடன் வாங்குவதும் திருப்பிக் கொடுப்பதும் வாடிக்கையான ஒன்று தான், கடன் வாங்குவது கேவலமான, மானக் கேடான பிழைப்பு இல்லை, ஆனால் அவற்றை முறையாக குறிப்பிட்ட தவணைகளில் செலுத்த வேண்டும் என்கிற நேர்மை இருக்க வேண்டும், இந்த நேர்மையை நம்பித்தான் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் கொடுக்கின்றன, அவ்வாறு நேர்மை தவறியவர்களிடம் வசூலிக்க தான தண்டத்தையெல்லாம் பயன்படுத்துகின்றன, அவர்களின் வழிமுறைகள் தவறாக இருந்தாலும் கொடுத்த கடனை மீட்பதற்கு அவர்கள் நேர்மையற்றவர்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும், நான் இதில் கந்து வட்டிக் கொடுமைகளைப் பற்றி தற்காத்து எதுவும் சொல்லவில்லை,  அது போன்றவே கடன் கட்டமுடியாமல் நெருக்குதலுக்கு ஆளாகி தற்கொலை செய்து  கொள்ளும் விவாசாயிகள் குறித்து எதுவும் சொல்லவில்லை, அவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள், அரசே மனது வைத்து கடனை தள்ளுபடி செய்தால் தான் உண்டு, அவை வேறு,  இங்கு பேசப்படுவது வங்கிகளில் கடனட்டை மூலம் பெற்றுக் கொள்ளும் கடன் குறித்தது தான்.

குறிப்பிட்ட நிகழ்சியில் கடன் அட்டை மூலமாக செலவு செய்து கடன் வாங்கியதாகக் காட்டப்பட்ட நபர் பணத்தை தண்ணி போல் செலவு செய்துவிட்டு திருப்பிக் கொடுக்க முடியாமல் லட்சம் ரூபாய் கடனை வைத்துவிட்டு பெங்களூரை விட்டு விட்டு சென்னைக்கு ஓடி வந்து வேறொரு நிறுவனத்தில் வேலை செய்பவர். வங்கி முகநூல் வழியாக  தன் முகவரை பொறி(ரி)யாக வைத்ததால் அந்த இளைஞர் வசமாக சிக்கினார். இவ்வளவையும் காட்டிய விஜய் தொலைகாட்சி, அந்த இளைஞரிடம் உங்களைப் போன்ற நேர்மை அற்றவர்களால் தான் இது போன்று நடந்து கொள்ளும் சூழலை கடன் வழங்கும் வங்கிக்கு ஏற்படுகிறது என்பதைச் சொல்லவே இல்லை. இது போன்ற நபர்கள் அரசு துறைக்கோ, அல்லது பெரிய நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் உயரும் பொழுது கையாடல், லஞ்சம் என்ற வகையிலெல்லாம் அந்த அமைப்பிற்கே பலத்த சேதம் ஏற்படும் என்பதையும் விஜய் தொலைகாட்சி சுட்டிக் காட்டி இருக்கலாம்.

கடன் அட்டையைப் பெற்றுக் கொண்டு வங்கிகளை எப்படி ஏமாற்றுவது என்பதையும், தான் அவ்வாறு ஏமாற்றி இருக்கிறேன் என்றும் சிலர் வெளிப்படையாகப் பேசும் போது அவர்களது அடிப்படை நேர்மையை போட்டு உடைத்துவிடுகிறார்கள் என்பதை அவர்களில் பலர் நினைப்பது இல்லை, இதை ஒரு சாகச நிகழ்ச்சி போலவும், தன்னை திறமை கொண்டவராகவும் காட்டுவதாக நினைக்கிறார்கள்,நேற்று ஏமாற்றியது வங்கி என்றால் நாளைக்கு ஏமாறப்படுவது யாரோ ?

வங்கிகளை ஏமாற்றுபவர்களை வங்கி தனது இணையத் தளத்தில் நிழல்படத்துடன் வெளி இட்டால் இப்படியான வங்கிக் கொள்ளையர்கள் குறையலாம். ஆனாலும் மனித உரிமை அடிப்படை மற்றும் திருந்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால் இவற்றை நான் பரிந்துரைக்க மாட்டேன்.

6 கருத்துகள்:

பழனி.கந்தசாமி சொன்னது…

பதிவு நன்றாக இருக்கிறது.

கிரி சொன்னது…

கோவி கண்ணன் நீங்கள் கூறுவது சரி தான். கடன் வாங்குவது என்பது ஏதாவது ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாதது. வங்கிகள் ஏமாற்றுபவர்களை இப்படி பிடிக்க முயற்சிக்கின்றன அதோடு சில நேரங்களில் வசூலிக்க அநாகரீகமான வழிமுறைகளையும் பின்பற்ற தயங்குவதில்லை. இவரைப் போல ஏமாற்றுவார்கள் இடையே நிஜமாகவே சிரமத்தில் உள்ளவர்களிடமும், நேர்மையான காரணங்கள் உள்ளவர்கள் இடையேயும் ஆள் வைத்து அடித்து பிடுங்கின்றன.

இதில் கடன் வாங்கியவர் தன்னுடைய ஆடம்பர செலவுகளை குறைத்து கூடுமானவரை கடனை இவர்களிடம் வாங்காமல் இருப்பது நல்லது.

தருமி சொன்னது…

முதல் பத்தியின் பின்னணி என்ன?

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

கடனைப் பற்றி இப்பொழுதுதான் பேசிக்கொண்டிருந்தோம்

ஜோதிஜி திருப்பூர் சொன்னது…

இருவருக்கும் ஒரே எண்ணம்.

வணிக ரீதியான பத்திரிக்கைகள் சில எனக்கு வாய்ப்பு அளிக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணம், வட்டம், நோக்கத்தை என்னால் முழுமையாக செயல்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றேன். காரணம் உங்கள் எண்ணத்தைப் போல இந்த வலைபதிவு எழுத்துக்களை ஒரு நாள் குறிப்பு போல என்னைச் சார்ந்த விசயங்களைப் படைக்கத் தான் விருப்பபடுகின்றேன்.

முதல் பத்தியில் நிறைய வார்த்தைகளை பிரித்து பிரித்து எழுதியிருக்கிங்க. டீச்சர் வந்தா இதுக்கு குட்டு விழும். ஜாக்கிரத.

ஒசை சொன்னது…

உங்களின் இந்த பதிவு தந்த பாதிப்பில் - இந்த பதிவு.


கடன் வாங்காமல் வாழ இயலாதா?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்