பின்பற்றுபவர்கள்

5 ஜூலை, 2012

'ஹிக்ஸ் போஸான்' பற்றி பூனையார் !


பூனையார் மதம் பற்றி ஏற்கனவே பலர் அறிந்திருப்பீர்கள், பூனையார் மதத்தின் அதிகாரபூர்வ தலைமை பூசாரி நான் தான், இன்னும் சிலர் பொறுப்பேற்றுக் கொள்ள தயாராக இருக்காங்க, தமிழ் கூறும் நல்லுலகிற்கு பூனையாரை அறிமுகம் செய்தவன் என்கிற முறையில் 'ஹிக்ஸ் போஸான்' பற்றி பூனையார் மதம் 5000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி உள்ளது என்பதை எல்லா மதவாதிகளுக்கும் முன்பாக எடுத்துக் கூறுவதில் பெருமை அடைகிறேன், மத்த மதவாதிகள் 'ஹிக்ஸ் போஸானை' சொந்தக் கொண்டாடினால் செல்லாது, காப்பிக் கேட் என்று தூற்றப்படும் என்று சொல்லிக் கொள்கிறேன்.

ஹிக்ஸ் போஸான் என்றால் என்ன ? அணுக்களுக்கு எடை தரும் ஒரு துகள் என்கிறார்கள் அறிவியலாளர்கள்,  இதன் மூலம் போட்டான்(ஒளித் துகள்) தவிர்த்த அணுத்துகள் வடிவமும் எடையும் கொண்டிருப்பதற்கு ஹிக்ஸ் போஸானே காரணம் என்கிறார்கள், அணுக்கருவில் உள்ள துகள்களின் எண்ணிக்கை மற்றும் அதற்குக் ஹிக்ஸ் போஸான் மூலம் கிடைக்கும் எடை ஆகியவற்றின் மூலம் தான் உலகில் உள்ள அண்டங்கள் முதல் அனைத்தும் எடைகளை பெருகின்றன. இதைப் பற்றி பூனையார் மார்க்கத்தில் ஏதேனும் சொல்லப்பட்டு இருக்கிறதா என்று பார்க்க, பூனையாரை நாடினேன், பூனையார் ஒரே போடாக போட்டார்.

"உலகில் உள்ளது அனைத்தையும் படைத்தது பூனையார்" என்று சொல்லிய பூனையார், அனைத்தும் என்றால் அதில் ஹிக்ஸ் போஸானும் தானே உள்ளது, இதை ஏன் உறுதி செய்யும் மனப்பான்மையுடன் மடத்தனமான கேள்வி எழுப்பினாய் என்று கேட்க. 'அட ஆமாம்லே' என்று வியப்படைந்தேன்.

மேலும் பூனையார், "சிக்ஸ் பேக்குக்கும் ஹிக்ஸ் போஸானுக்கும் உள்ள தொடர்ப்பு தெரியுமா ?" என்று கேட்டார். "அதிகமாக அதிகமாக உடற்பயிற்சி செய்ய உடலின் அணுத்துகள்கள் இறுக சிக்ஸ் பேக் கிடைக்கிறது, உடற்பயிற்சியின் ஆற்றலின் போது உண்டாகும் ஹிக்ஸ் போஸானின் சக்தி சிக்ஸ் பேக்காக மாறுகிறது" என்றார்

ஹிக்ஸ் போஸான் மற்றும் பூனையார் கடவுளுக்குமான தொடர்பின் இணைப்புகள்.


ஹிக்ஸ் போஸான் பற்றி வேறென்ன சொல்கிறீர்கள் பூனையாரே ?

நான் என்னத்தச் சொல்வது, வைரமுத்து முதல் கார்கி வரை 'ஹிக்ஸ் போஸானை' திரைப்பட பாடல் வரிகளாக்கி பிழிந்து எடுத்துவிடுவார்கள், உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லட்டமா ?

"என் இதயத்தில் மையம் கொண்டு வெடித்த பெருவெடிப்பு நீ தானோ ?"
"என் இமைகளுக்கு எடை தந்த ஹிக்ஸ் போஸான் நீ தானோ நீ தானோ"

- கவிஞர் கரடி வாயன்

"என் மனதில் உன் அழுத்தம் எப்பொழுது வெடிக்குமோ பெருவெடிப்பாக"
"உன் இல்லாத இடைக்கு எடையாக நான் இருப்பேன் ஹிக்ஸ் போஸானாக"

- கவிஞர் சொந்த குமார்

"என் காதல் போஸாக்கே"
"உன் மோதல் போஸானே"

- கவிஞர் குணேகன்


ஸ்ப்பா முடியல, அறிவியல் அவியல்களை தனதாக்கிக் கொள்வதில் முனைப்புக் காட்டுபவர்கள் மதவாதிகளா ? கவிஞர்களான்னு பட்டிமன்றமே நடத்தலாம்.

எது எப்படியோ, ஹிக்ஸ் போஸான் பற்றி 5000 ஆண்டுகளுக்கு முன்பே பூனையார் சொல்லிவிட்டார், பூனையார் சொல்லிவிட்டார்...............பூனையார் சொல்லிவிட்டார்.


பின்குறிப்பு : 2 வாரமாக வலைப்பதிவு எழுதாமல் காத்துவாங்குது, காலாட்டிக் கொண்டு இருந்தால் தானே இருப்பு தெரியும், அதற்கு உதவிய பூனையாருக்கு நன்றி

21 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

இன்னும் சிலர் பொறுப்பேற்றுக் கொள்ள தயாராக இருக்காங்க
///

நல்ல வருமானம் தரும் பொறுப்ப என்கிட்ட கொடுங்க...:)):))

சார்வாகன் சொன்னது…

அருமையான பதிவு,

மியாவ் மியாவ் பூனை

அணுவில் துகள்களில் (ஒன்றான) ஹிக்ஸ் போசான் கண்டுபிடிக்கப் பட்டதும் மகிழ்சி,அதையே பூனையார் 5000 வருடங்களுக்கு முன் அழகிய முறையில் விள்க்கியது இன்ப அதிர்ச்சி.

பூனைக்கு மிக்கார் எவருள்ளார் (நாமறிந்த மற்றும் அறியா) பேரண்டத்தில்

டிஸ்கி:

ஏன் 99.99% என அறிவியலாளர்கள் ஹிக்ஸ் துகள் பற்றி கூறுகிறார்கள் எனில் கண்டுபிடிக்கப்பட்ட துகள் ஒரு போசான்(விசை துகள்).அது ஹிக்ஸ் போசானா என ஹிக்ஸ் செயலாக்கம் பற்றி பரிசோதனை செய்தே உறுதிப் படுத்துவார்கள்.

இது குறித்த நம் சில பதிவுகள்



அணு இயக்கவியல அறிவோம்.:1:அணு துகள்கள்
http://aatralarasau.blogspot.com/2011_09_01_archive.html

**********
அணு துகள் இயக்கவியல் அறிவோம் 2: ஹிக்ஸ் துகளை தேடி
http://aatralarasau.blogspot.com/2011/10/2.html

நன்றி

துளசி கோபால் சொன்னது…

தலைமையகத்துக்கு இன்னும் வசூலித்த நன்கொடை பணம் வந்து சேரவில்லை என நினைவூட்டுகிறேன்:-)

ம்யாவ்.......

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் கூறியது...
தலைமையகத்துக்கு இன்னும் வசூலித்த நன்கொடை பணம் வந்து சேரவில்லை என நினைவூட்டுகிறேன்:-)

ம்யாவ்.......//

அதெல்லாம் உலகத்திலேயே மிகப் பெரிய கோவில் கட்ட சேமித்து வைக்கப்படுகிறது. அப்பறம் கோவிலைக் காட்டி வசூலிப்போம்ல அதில் இருந்து அனுப்புவோம்

கோவி.கண்ணன் சொன்னது…

// சார்வாகன் கூறியது...
அருமையான பதிவு,

மியாவ் மியாவ் பூனை

அணுவில் துகள்களில் (ஒன்றான) ஹிக்ஸ் போசான் கண்டுபிடிக்கப் பட்டதும் மகிழ்சி,அதையே பூனையார் 5000 வருடங்களுக்கு முன் அழகிய முறையில் விள்க்கியது இன்ப அதிர்ச்சி.//

சார்வாகன், பின்னூட்டத்திற்கும் இணைப்பு தகவல்களுக்கும் மிக்க நன்றி.

உங்களைப் போன்றவர்களின் நல்லாதரவினால் தான் பூனையார் மதத்தை நம்மால் மீட்டெடுக்க முடியும் என்கிற நம்பிக்கை வெகுவாக துளிர்த்திருக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரியமுடன் பிரபு கூறியது...
இன்னும் சிலர் பொறுப்பேற்றுக் கொள்ள தயாராக இருக்காங்க
///

நல்ல வருமானம் தரும் பொறுப்ப என்கிட்ட கொடுங்க...:)):))//

தம்பிறி நல்ல வருமானமா ? சிங்கையில் ஒரு பாஸ்டர் வருமானம் வந்ததை சொந்த செலவு செய்துவிட்டு கம்பிக்கு காத்திருக்கிறார், தெரியாதா நோக்கு ? இன்னுமா ஆசை

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அட நம்மைப்போன்றே ஒரு ...!!!!
வாழ்த்துக்கள்
பார்க்க:இந்த பூனைக்கு என்ன பெயர் வைக்கலாம் ?.
http://nanduonorandu.blogspot.in/2012/07/blog-post.html

பெயரில்லா சொன்னது…

பூனையார் மதத்தில் நானும் இணைந்துக் கொள்ளலாமா ??? ஹிஹி !!!

இப்படிச் சொன்னால் கூட அவர்களுக்கு புரியப் போவதில்லை சகோ.... !!!

Unknown சொன்னது…

நானும் பூனையார் மதத்தில் சேரலாமா என எண்ணிக் கொண்டிருக்கிறேன்.அந்த ஒரு சதவீதம் தான் அகில உலகை படைத்து பாதுகாப்பவர் என்று இன்னுமா புரியல? எனவே பகிர்தலுக்கு நன்றி.

இனியவன்..

கோவி.கண்ணன் சொன்னது…

//நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
அட நம்மைப்போன்றே ஒரு ...!!!!
வாழ்த்துக்கள்
பார்க்க:இந்த பூனைக்கு என்ன பெயர் வைக்கலாம் ?.
http://nanduonorandu.blogspot.in/2012/07/blog-post.html//

நன்றி நண்டு @நொரண்டு

கோவி.கண்ணன் சொன்னது…

//இக்பால் செல்வன் கூறியது...
பூனையார் மதத்தில் நானும் இணைந்துக் கொள்ளலாமா ??? ஹிஹி !!!//

Open to All, சீக்கிரம் சேர்ந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் தீர்ப்பு நாளில் சொர்க்கக் கதவுக்கு முன்னால் நிறுத்தப்படுவீர்கள்

//இப்படிச் சொன்னால் கூட அவர்களுக்கு புரியப் போவதில்லை சகோ.... !!!//

:) அதெல்லாம் புரிந்துவிட்டால் பிறகு மதவியாபாரம் எப்படி நடத்துவது.

கோவி.கண்ணன் சொன்னது…

//நானும் பூனையார் மதத்தில் சேரலாமா என எண்ணிக் கொண்டிருக்கிறேன்.அந்த ஒரு சதவீதம் தான் அகில உலகை படைத்து பாதுகாப்பவர் என்று இன்னுமா புரியல? எனவே பகிர்தலுக்கு நன்றி.

இனியவன்..//

பூனையார் மதம் எல்லோருக்காகவும் (மதில் மேல்) காத்து நிற்கிறது, பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு நீர் நிறைந்த சொர்க்கம்.

naren சொன்னது…

எல்லாம் புகழும் பூனையாருக்கு.

பூனையார் துகளில்லிருந்து மனிதனை உருவாக்கினார்.
மனிதன் பூனையாரை துகளாக்கினார்.

தருமி சொன்னது…

//இன்னும் சிலர் பொறுப்பேற்றுக் கொள்ள தயாராக இருக்காங்க,//

அதென்ன .. எனக்கு என்னமோ confirmation order வராதது மாதிரில்லா பேசிக்கிட்டு போறீங்க!

‘தனனைப் பற்றி மட்டும் (புகழ்சியாக) பேசுவது எனக்குப் பிடிக்காது. அதைப் பார்த்து நான் (எனக்குள்) சிரித்துக் கொள்கிறேன். (நீங்கள் அதை) யோசிக்க மாட்டீர்களா? -- பூனையார் (78:60)

கல்வெட்டு சொன்னது…

பூனை மதத்தில் இருந்து இப்படி ஒரு அறிக்கை ஏன் வரவில்லை என்று நான் நேற்றே (அதாவது ஒன்றைக்கு முன் வந்த நாள்) நான் கேட்டிருந்தேன்.
------------------------------------


‍‍‍ஒரு வழியாக விஞ்ஞானிகள் கடவுளை சமைத்துக் காட்டிவிட்டார்கள். #GoddamnParticle

யாருலே அது இன்னமும் சும்மா இருப்பது?

" இது ஏற்கனவே பூனை மதப்புத்தகத்தில் 94 ஆவது பக்கத்தில் மூனே முக்கால் வசனத்தில் 'சலசலப்ப ஜிங்கா மில்க்கைக் கொண்டா' என்று இருக்கும் சொல்லின் மூலச்சொல்லின் வேர்ச்சொல்லான‌து இதையேதாம் சொல்கிறது என்பதால் இதையும் செய்தது "எனது கடவுள் பூனை" தான் என்று மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது" .......என்று சொல்லாமல் நேரத்தைப் போக்குவது?

"பட்டாய பட்டயா சட்டாய சந்திற்குள் பொந்து" என்று எலி மதத்துக்காரன் சொல்லி விளக்குவதற்குள் நாம் முந்தவேண்டாமா?
------------------------

ஆதாரம்:
https://plus.google.com/104594757340298036421/posts/cL3eXbvUD77

.

suvanappiriyan சொன்னது…

இந்த பதிவை படித்தவுடன் எனக்கு நித்தியானந்தாதான் அநியாயத்துக்கு ஞாபகம் வருகிறது. நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு......அப்புறம் என்ன ஆன்மீகம்... மதம்.... பூனையார்......:-)

ஆன்மீக வாதிகளுக்கு அறிவியல் அறிஞர்கள் பச்சை கொடி காட்டியாகி விட்டது. அறிவியல் சென்னால் அனைத்தையும் ஒத்துக் கொள்வோம் என்று சொன்ன நாத்திகர்கள் இனி வேறு ஏதாவது காரணம் தேடி அலைய வேண்டும்.....பாவம்.......

மதுரை சரவணன் சொன்னது…

கொள்ளுங்கள் மியாவ் மியாவ் நானும் இருக்கேன்..

கோவி.கண்ணன் சொன்னது…

// சுவனப் பிரியன் கூறியது...
இந்த பதிவை படித்தவுடன் எனக்கு நித்தியானந்தாதான் அநியாயத்துக்கு ஞாபகம் வருகிறது. நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு......அப்புறம் என்ன ஆன்மீகம்... மதம்.... பூனையார்......:-)

ஆன்மீக வாதிகளுக்கு அறிவியல் அறிஞர்கள் பச்சை கொடி காட்டியாகி விட்டது. அறிவியல் சென்னால் அனைத்தையும் ஒத்துக் கொள்வோம் என்று சொன்ன நாத்திகர்கள் இனி வேறு ஏதாவது காரணம் தேடி அலைய வேண்டும்.....பாவம்.......//

வாங்க சார், அறிவியலாளர்கள் இரவில் சூரியன் அல்லாவின் நாற்காலிக்கு பின்னால் ஒளிந்து கொள்வதற்கு வெளக்கம் கொடுக்கவில்லை, அதை நினைச்சா தான் பாவமாக இருக்கு, எதுக்கும் வெயிட் பண்ணிப் பார்க்கலாமா ? அறிவியல் முட்டப் பசங்க இன்னும் எவ்வளவு நாள் தான் எடுத்துக் கொள்ளுவானுங்களோ அந்த உண்மையை கண்டுபிடிக்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//பூனை மதத்தில் இருந்து இப்படி ஒரு அறிக்கை ஏன் வரவில்லை என்று நான் நேற்றே (அதாவது ஒன்றைக்கு முன் வந்த நாள்) நான் கேட்டிருந்தேன்.
------------------------------------//

உங்க கூகுள் + தான் இந்த இடுகைக்கு தூண்டுதல் கல்வெட்டு. தூங்கி இருந்த பூனையாரை எழுப்பிவிட்டது.
:)

கல்வெட்டு சொன்னது…

வரலாற்றில் பூனை மதத்தின் கருத்தினைப்பதிந்த உங்களுக்கு பூனைமதம் கடமைப்பட்டுள்ளது கோவி.

அடைப்புக்குறிக்குள் எதையாவது போட்டு எல்லாத்தையும் (அதாவது ஒன்று கண்டுபிடித்தயுடன்) நாங்க முன்னாலேயே சொல்லியிருக்கோம் அதுதான் இது இதுதான் அது என்று பல்லவி பாடிவிட வேண்டும்.

எங்கே பூனை மதம் அதில் பின்தங்கி , எலி மதம் முந்திவிடுமோ என்ற அச்சத்தில் நான் கேள்வி கேட்டேன்.

கவனிக்க நான் முதலில் கேள்விகேட்டேன். என்பது இங்க ரொம்ப முக்கியம். இல்லையென்றால் கேள்வியும் எலி மதத்தில் உள்ளது என்று வரலாற்றைத் திருப்பிவிடும் அபாயம் உள்ளது.

நிற்க...முதலில் என்பத‌ற்கு அர்த்தம் மூல மொழியான "இட்டான்ஸ்க்கு உடான்ஸ்" என்ற மொழியில் "பஸ்ட்டான்ஸ் முதல்டான்ஸ்" என்ற பொருள் கொண்டது. அதன்படி பார்க்கும்போது (பூனை உங்களை நோக்கும்போது ) அதுவே எல்லாம் அறிந்தது (பூனையே எல்லாம் அறிந்தது) என்று பொருள் என்று கொள்ளவேண்டும். அதாகப்பட்டது (அது ஆகப்பட்டது) எல்லாம் சொல்லியாகிவிட்டது என்று பொருள்.

#தாவுதீருது
#எப்படித்தான்_சளைக்காம‌_சங்கு_ஊதுறாங்களோ
.

கல்வெட்டு சொன்னது…

பூனை மதத்தில் ஏற்பட்டுள்ள பூசல்கள்

1.பூனையை மட்டும் வணங்கும் (அஞ்சும் குழு) #பூனையேபூனம்மதம்

2.பூனையை வணங்கி பூனையின் கட்டகடைசி பிரசங்கியான கோவியின் வழிநடத்தல். #கோவியாபூனையாமதம்

3.பூனையை வணங்குவதுடன் பூனைமாதவையும் வணங்குதல் #பூனைப்பிரியைதுளசிமேடமாய‌மதம்

4.பூனைக்கு புணுகு எடுக்கும் பிரசானையில் பிரிந்தவர்கள் #பூனைபுணுகுப்ரோட்டாசண்டைமதம்

5.பூனையை கேள்வி கேட்டே நொங்கெடுப்பவர்கள் (பால்குடம் போன்று அன்பினால்) #கேள்விப்பூனைதருமியாவ்மதம்

6.கதைவைத்திற பூனை வரட்டும் குழு #நித்தியபூனைமதம்

7.பொம்பளப்பூனை வேலைக்குப்போனால் சோரம் #காஞ்சிப்பூனைமதம்

இன்னும் உடையும்

பக்கவாட்டுகுறிப்பு:
இப்படியெல்லாம் உடையும் என்று பூனை மதத்தில் ஏற்கனவே உள்ளதால் பிம்ளிக்காபிங்கி

இப்படிக்கு:
அக்மாரக் ஒரிஜினல் பாரம்பரிய சித்த வைத்திய பரம்பரை பூனைமதம்.

#தாவுதீருது
#எப்படித்தான்_சளைக்காம‌_சங்கு_ஊதுறாங்களோ

:-)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்