முதலில் குட்டிக் கோவியார் வருகைக்கு அலைபேசி, பதிவு, Buzz, மின் அஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் நேரில் என பல்வேறு வகையில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மற்றும் குட்டிக் கோவியாரின் வணக்கம்.
*****
ஐந்தாண்டுக்கு முன்பு வரை இருந்த இரண்டாம் குழந்தை ஆசை பிறகு மெல்ல மெல்ல காணாமல் போனது, காரணம் பெரிதாக இல்லை, ஒரு குழந்தையையே வீட்டில் வைத்து வளர்க்க (வேறு) வழியில்லாமல் பள்ளி முடிந்ததும் மாணவ காப்பகத்திற்கு அனுப்பி வைத்து மனைவியோ, நானோ இருவரில் முன்பே செல்லும் ஒருவர் அலுவலகம் முடிந்த பிறகு அழைத்துவரும் நிலையில் இரண்டாவது தேவையா ? என்கிற எண்ணம் தான். பிறகு சென்ற ஆண்டு மகளாகவே கேட்கத் துவங்கினாள், எங்கு சென்றாலும் பல இடங்களில் இரு குழந்தைகளைப் பார்த்துவிட்டு.....'நம்ம வீட்டில் ஏன் இன்னொரு பேபி வரவே இல்லை.......எப்போதான் வருமோ ?' என்று ஒருவித ஏக்கமாக கேட்க்கத் துவங்கினாள். பொருளியல் தேவையை சீராக வைத்திருக்கவும், மகளின் எதிர்காலத்திற்கு நல்லக் கல்வியைக் கொடுக்கவும் எண்ணம் இருப்பதால் உடனடியாக மனைவி வேலையை விட மனதில்லா சூழலில் 'பணிப் பெண்ணை அமர்த்திப் பார்த்துக் கொள்ளச் செய்யலாம்.....இரு குழந்தைகளை மாணவ காப்பகத்தில் விடுவதும் பணிப்பெண் வைத்திருப்பதிற்கும் மிகப் பெரிய செலவின வேறுபாடுகள் இல்லை என்பதால் இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்வது என்று முடிவாகியது.
இருந்தாலும் எங்களது வயது ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அடுத்து பெண் குழந்தையாகப் பிறந்தால் அவளுக்கு திருமணம் முடிக்கும் வரை கூட பொறுப்புணர்வு என்கிற டென்சன் இருக்குமே என்கிற டென்சன் இருக்கத்தான் செய்தது. எப்படி இருந்தாலும் நம் குழந்தை தான், அப்படியே பெண்ணாக பிறந்தாலும் ஏற்கனவே இருக்கும் மகளைப் போல் இன்னொரு மகள் தானே பிறப்பாள், அவளை நேசிப்பது உண்மை என்றால், அவள் செயல்களை போற்றுவது உண்மை என்றால் பிறக்கப் போகும் மற்றொரு பெண் குழந்தையையும் அவ்வாறு நேசிக்க முடியாமலோ போய்விடும் ? என்றெல்லாம் எண்ணம் தோன்ற ஆணோ பெண்ணோ எதுவாகிலும் சரி என்ற முடிவில் செயலாற்ற, மகள் தனக்கு உடன்பிறப்பு வேண்டும் என்று சொல்லிவிட்டு பள்ளி விடுமுறைக்குச் தமிழகம் சென்ற அந்த திங்களிலேயே அவள் ஆசை நிறைவேறத் துவங்கியது.
என் மகள் தெளிவாக இருந்தாள், தம்பி தங்கச்சி எதுவாகிலும் என்னுடையவர்கள் தானே என்று சொல்லிக் கொண்டு இருந்தாள். சிங்கையில் குழந்தை வளர்ச்சியை ஸ்கேனிங்க் செய்து பார்க்கும் போது பாலினம் தெரிய துவங்கும் ஐந்தாம் திங்களில் பெற்றோர்கள் விரும்பினால் குழந்தையின் பாலினம் பற்றிச் சொல்லிவிடுவார்கள். அவ்வாறு தெரிந்து கொள்வது பெற்றோர்களின் உரிமை என்பதால் சிங்கையில் பாலினம் தெரிந்து கொள்வது சட்டப்படி எந்த குற்றமும் இல்லை. ஐந்தாம் மாதத்தில் பிறக்கப் போவது ஆண் குழந்தை என்று சொல்லிவிட்டார்கள், இருந்தும் குழந்தை பிறக்கும் வரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்பது மனைவியின் அடிப்படை பயம் கலந்த கட்டளையாக இருந்தது. நெருங்கிய நண்பர்கள் தவிர்த்து இரண்டாம் குழந்தை பற்றி யாரிடமும் சொல்லவில்லை.
கடைகுட்டி, மூத்தவ(ள்)ன், நடுவுள்ளவ(ள்)ன் என்கிற செல்லப் பெயர்களெல்லாம் தற்போதான இருகுழந்தை கட்டுப்பாடுகளினால் காணாமல் போய்விட்டது, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா இதில் ஏதோ ஒன்று தான் இரு குழந்தைகளாக பிறக்கும் குழந்தைகளின் வாரிசுகளுக்கு கிடைக்கும் உறவுப் பெயர்கள், அதிலும் ஒரே குழந்தையாக வளரும் குழந்தைகள் வளர்ந்து திருமணம் ஆனதும் தன்னைப் போன்றே தனித்து பிறந்தவர்களை திருமணம் செய்ய அவர்களின் வாரிசுகளுக்கு இந்த உறவு முறைகளில் எதுவுமே கிடைக்காது.
பெண்ணோ ஆணோ எந்த குழந்தையும் சரி என்று முடிவு செய்திருந்தாலும் ஏற்கனவே பெண் குழந்தை இருப்பதால் இரண்டாவதாக ஆண் குழந்தை என்று அறிந்த போது கூடுதல் மகிழ்ச்சி தான் ஏற்பட்டது. மகப்பேறுக்கு முதல் நாள் வரையில் சீனர்கள் அலுவலகம் சென்று வருவார்கள், ஆகஸ்ட் 30 ஆம் தேதி பேறு நடக்கலாம் என்று மருத்துவர் சொல்லி இருந்தார் இன்னும் நாள் இருக்கிறதே என்பதாக அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தார் மனைவி. எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்க கடந்த 17 ஆம் தேதி அலுவலகம் சென்று திரும்பியதும், அருகில் இருந்த கடைத் தொகுதிக்குச் தன் தாயாருடன் சென்று திரும்பும் நேரத்தில் பனிக்குடம் உடைந்துவிட்டதாக உணர்ந்த மனைவி மகிழுந்தில் ஏறி உடனே வீட்டுக்கு வந்தார். பனிக்குடம் முழுதாக உடையாமல் கசிவாக இருந்ததால் சிறுது நேரம் வீட்டில் இருந்துவிட்டு வலி ஏற்பட்டதுடன் செல்லலாம் என்று காத்திருந்தோம், மேலும் கசிவு ஏற்பட..உடனடியாக வலி ஏற்பட்டால் பதட்டம் ஆகிவிடும் என்பதால் உடனடியாக இரவு 11:50 வாக்கில் மருத்துவமனைக்கு புறப்பட்டோம். மருத்துவ மனையில் சோதனை செய்து மகப்பேறு அறையில் உடனடியாக சேர்த்துவிட்டார்கள், நானும் மகப்பேறு அறையில் மகள் பிறக்கும் போது இருந்தது போலவே அருகில் இருந்தேன்.
17 ஆம் தேதி முடிய 18 ஆம் தேதியும் முடிய போகும் நேரம் வரை குறைவாக விட்டு விட்டு வலி ஏற்பட்டது தவிர்த்து பெரிதாக வலி ஏற்படவில்லை, பனிக்குடம் முழுதாக கசிந்தும் குழந்தை சரியான அமைப்பில் இருந்தும் வெளிவர முயற்சிக்காமல் வழக்கம் போல் உதைத்துக் கொண்டு தான் இருந்தது, ஆனால் நாடித் துடிப்பு குறையத் துவங்கியது, பனிக்குடத்தில் தண்ணிர் இல்லை என்றால் தொப்புள் கொடி சுருங்கி குழந்தைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைய நாடித் துடிப்பு குறையுமாம் , உணர்ந்து கொண்ட மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து எடுப்பது தான் தாய்கும் சேய்க்கும் நல்லது என்று சொல்லி, என்னை அனுப்பிவிட்டு அறுவை சிகிச்சை அறைக்கு சென்று, 18 ஆம் தேதி இரவு 11:55 வாக்கில் அறுவையை துவங்க சரியாக இரவு 12 மணி தாண்டிய சில நிமிடங்களில் ஆங்கில நாள் படி ஆகஸ்ட் 19ல் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி தாயையும் சேயையும் பிரிக்கப்பட்டார்களாம். அறுவை சிகிச்சை அறையில் கணவரை அனுமதிக்கமாட்டார்கள். அறுவை முடிந்து தையல் போடும் நேரத்தில் குழந்தையை குழந்தைகள் வைக்கும் இடத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். நல்லிரவுக்கு மேல் என்பதால் அங்கு கண்ணாடி தடுப்பு இருந்ததும் நாங்கள் பார்க்க வசதியாக அருகில் தள்ளிக் கொண்டு வந்து விட்டனர். ஈரம் முற்றிலும் காயாத நிலையில் பிறந்த 10 ஆம் நிமிடத்தில் கழுத்தைத் திருப்பி அனைவரையும் நன்றாகப் பார்த்து பிறகு மெலிதாக சிரித்தான்.
பிறக்கும் குழந்தை பெயரில்லாமல் பிறக்கக் கூடாது என்பது என் விருப்பம் அதனால் மகளுக்கும் பிறக்கும் மூன்று திங்களுக்கு முன்பே பெயரை முடிவு செய்து பிறந்த மறுநாளே பிறப்பு சான்றிதழில் பதிந்துவிட்டேன். அதே போன்று மகனுக்கும் பெயரை முடிவு செய்யும் போது தமிழ் பெயர் தான் கண்டிப்பாக வைக்க வேண்டும் என்ற உறுதியில் இருந்தேன், கூப்பிட எளிதாக அழகாக இருந்தால் எந்தப் பெயராக இருந்தாலும் சரி என்று சொல்லி இருந்தார் மனைவி. பத்து பெயர்கள் வரை முடிவு செய்து அதில் இரண்டை தெரிவு செய்து மனைவியிடம் சொன்னேன். எல்லோருக்கும் பிடித்தப் பெயராக இருக்க வேண்டும் என்பதாக அதிலிருந்து அவர் தெரிவு செய்து முடிவு செய்தப் பெயர் தான் 'சிவ செங்கதிர்' கூடவே மனைவி பெயரின் முதலெழுத்து, என் பெயரின் முதலொழுத்து சேர்த்து 'GK சிவ செங்கதிர்' என்று மருத்துவமனையை விட்டு வீட்டுக்குச் செல்லும் முன்பே பதிந்து பதிவு சான்றிதழ் பெற்றுவிட்டு சென்ற சனிக்கிழமை வீட்டுக்கு வந்துவிட்டோம். படுக்கையில் அடிக்கடி மகனின் ஒண்ணுக்கு தீர்த்தம்.....வீட்டில் மகிழ்ச்சி மழை தான்.
சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பால்புட்டி, பால்பவுடர், பேம்பர்ஸ்..... ஈரத் தாள்...வாங்கச் சென்று வருகிறேன். இன்னொரு புது உலகம் எனக்கு கிடைத்து போன்று உணர்வுகளாக மகிழ்ச்சியில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கின்றான் மகன் கதிர் .
பின்குறிப்பு : பதிவர்களில் பலர் என் நெருங்கிய நண்பர்களாகவும் நலம் விரும்புவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்களுக்கு தனித்தனியாக அறிவிக்க நேரமின்மையால் இடுகை வழியாக அறிவிக்க, தெரிவிக்க இப்பதிவை எழுதினேன். மற்றபடி இதைப் பதிவாகவே எழுதுவது எனக்கு தயக்கமான ஒன்று தான்.
பின்பற்றுபவர்கள்
27 ஆகஸ்ட், 2010
பிறந்த மற்றொரு புது உலகம் - குட்டிக் கோவியார் !
பதிவர்:
கோவி.கண்ணன்
at
8/27/2010 09:36:00 AM
தொகுப்பு :
அறிமுகம்,
கைப்புள்ள,
தமிழன்,
நிகழ்வுகள்,
பதிவர் வட்டம்,
மகப்பேறு,
வாழ்க்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
174 கருத்துகள்:
அன்பின் கோவி
சிவ செங்கதிருக்கு நல்வாழ்த்துகள்
இடுகையாக இத்தனை விபரமாக இட வேண்டுமா ? கோவி எல்லாவற்றிலும் வித்தியாசமானவர். புகைப்படங்களுடன் இடுகை இடுவார். வாழ்க கோவி
தம்பிப் பாப்பாவுடன் மகிழும் மூத்தவளுக்கும் வாழ்த்துகள் கோவி
தாயும் சேயும் நலமாக - நீண்ட ஆயூளுடன் நல்வாழ்வு வாழ நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
வாழ்த்துக்கள் கோவி அண்ணே
உங்களோடு இருக்கும் படம் அருமை
ஜி கே என்றவுடன் கோவி கண்ணன் என்று நினைத்தேன்
இளைய கோவியார் வாழ்க
என் அன்பான வாழ்த்துக்கள் குட்டி கோவியாருக்கு@சின்ன பெரியவா!!!!
ரொம்ப க்யூட். சுத்தி போட சொல்லலாம்ன்னு இருந்தேன். பரவாயில்லை திருஷ்ட்டி பூசணிக்காயே குழந்தையை தூக்கி வச்சிருப்பதால அந்த பிரச்சனை இல்லை:-)))))))))))
//cheena (சீனா) said...
அன்பின் கோவி
சிவ செங்கதிருக்கு நல்வாழ்த்துகள்
இடுகையாக இத்தனை விபரமாக இட வேண்டுமா ? கோவி எல்லாவற்றிலும் வித்தியாசமானவர். புகைப்படங்களுடன் இடுகை இடுவார். வாழ்க கோவி
தம்பிப் பாப்பாவுடன் மகிழும் மூத்தவளுக்கும் வாழ்த்துகள் கோவி
தாயும் சேயும் நலமாக - நீண்ட ஆயூளுடன் நல்வாழ்வு வாழ நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா//
பின்குறிப்பில் சொல்லியது போல், உங்களைப் போன்று என் நலம் நாடுபவர்களுக்கு என் குறித்து பகிர்ந்து கொள்ள எழுதினேன்.
வாழ்த்துக்கு நன்றி ஐயா.
அப்போ இந்த குட்டி கோவியர் எப்ப பதிவு போடுவார் ?
\\மகள் தனக்கு உடன்பிறப்பு வேண்டும் என்று சொல்லிவிட்டு\\
என் அன்பு குட்டிம்மாவுக்கு என் செல்லங்கள்!!! உனக்கும் என் வாழ்த்துக்கள் அக்காவா பிரமோட் ஆனதுக்கு!!!
:)))
எத்தினி முறை தான் வாழ்த்து சொல்லுறதான்.. சோ இந்த முறை ஒன்லி ரசிச்சிங்!!! :))
வாழ்த்துக்கள் கோவி அண்ணாச்சி
//அபி அப்பா said...
\\மகள் தனக்கு உடன்பிறப்பு வேண்டும் என்று சொல்லிவிட்டு\\
என் அன்பு குட்டிம்மாவுக்கு என் செல்லங்கள்!!! உனக்கும் என் வாழ்த்துக்கள் அக்காவா பிரமோட் ஆனதுக்கு!!!//
சகோதரன் சகோதரி என்று எழுதக் கூடாது என்பதற்காக 'உடன்பிறப்பு' என்று தமிழில் எழுதினேன், 'உடன்பிறப்பு' என்றதும் பாசத்தை பொங்கலாக்கி படைக்கிறிங்களே !
:)
சிவ செங்கதிருக்கும், அவர் வரவால் மகிழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்கள்.
சகோதரன் சகோதரி என்று எழுதக் கூடாது என்பதற்காக 'உடன்பிறப்பு' என்று தமிழில் எழுதினேன், 'உடன்பிறப்பு' என்றது பாசத்தை பொங்கலாக்கி படைக்கிறிங்களே !
////////
என்ன அபி அப்பா இது ?
கழகத்துல சேர சொல்லுவிக போல ?
சிவ செங்கதிருக்கு வாழ்த்துக்கள். (சிவ, செம் என்று இரட்டை வழக்கு அமைத்திருக்கிறீர்களே? ஏதேனும் சொந்தக் காரணம் உண்டோ?)
அன்புடன்,
இராம.கி.
ஹைய்யோ...... கதிரு எவ்வளோ அழகு.
புத்தம்புது பூவைப்போல இருக்கார்.
குழந்தைக்கு எங்கள் ஆசிகள்.
நல்லா இருங்க.
சிங்கை வரும்போது சந்திக்கிறேன்.
ஆமா முதல் போட்டோவை பாருங்க கையை செங்கதிர் போல விரிச்சு வச்சிருக்காரு சிவசெங்கதிர்!!!
நலமேவாழ என்னுடைய வாழ்த்துக்களும்
// இராம.கி said...
சிவ செங்கதிருக்கு வாழ்த்துக்கள். (சிவ, செம் என்று இரட்டை வழக்கு அமைத்திருக்கிறீர்களே? ஏதேனும் சொந்தக் காரணம் உண்டோ?)
அன்புடன்,
இராம.கி.//
வாழ்த்துக்கு நன்றி ஐயா. சிவ செங்கதிர் - 'சிவனின் செவ்வொளி' என்பதாகப் பொருள், இது இரட்டை வழக்கு என்பதாக எனக்கு தெரியவில்லை. கதிருக்கு செம்மை பண்புப் பெயர், சிவ அடைமொழி
//நசரேயன் said...
வாழ்த்துக்கள் கோவி அண்ணே
நசரேயன் said...
இளைய கோவியார் வாழ்க//
நன்றி நசரேயன்.
//Blogger பிரியமுடன் பிரபு said...
உங்களோடு இருக்கும் படம் அருமை
ஜி கே என்றவுடன் கோவி கண்ணன் என்று நினைத்தேன்//
அவருடைய தாத்தாக்கள் இருவர் பெயரும் கூட ஜி, கே வில் தான் துவங்கும்
//அபி அப்பா said...
என் அன்பான வாழ்த்துக்கள் குட்டி கோவியாருக்கு@சின்ன பெரியவா!!!!
ரொம்ப க்யூட். சுத்தி போட சொல்லலாம்ன்னு இருந்தேன். பரவாயில்லை திருஷ்ட்டி பூசணிக்காயே குழந்தையை தூக்கி வச்சிருப்பதால அந்த பிரச்சனை இல்லை:-)))))))))))//
வாழ்த்துக்கு நன்றி அபி அப்பா. நான் பூசனிக்காய், புடலங்காய் இல்லை, லேசான தொப்பையுடன் இருக்கும் சுரக்காய் என்று சொல்லலாம் :)
//அபி அப்பா said...
\\மகள் தனக்கு உடன்பிறப்பு வேண்டும் என்று சொல்லிவிட்டு\\
என் அன்பு குட்டிம்மாவுக்கு என் செல்லங்கள்!!! உனக்கும் என் வாழ்த்துக்கள் அக்காவா பிரமோட் ஆனதுக்கு!!!//
உங்கள் வீட்டுக் குழந்தைகள் அபி, நட்ராஜுக்கு மற்றும் உங்களுக்கு மகள் சார்பில் அன்புகள்
குழந்தை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்
//பிரியமுடன் பிரபு said...
அப்போ இந்த குட்டி கோவியர் எப்ப பதிவு போடுவார் ?//
குட்டிக் கோவியார் முதலில் ஜட்டிப் போடக் கற்றுக் கொண்டு பிறகு பதிவு போடுவார்
:)
சிவசெங்கதிருக்கு நல்வரவு :)
வாழ்த்துக்கள் கோவிஜி.
வணக்கம் வைக்கிறார். அழகா சிரிச்சி போஸ் கொடுக்கிறார்.. சிவ செங்கதிர், நல்ல பெயர்.
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் கோவி. நல்ல அனுபவங்கள்.
நாங்களும் கூட பயணித்தது போல இருந்தது. நல்ல எழுத்து நடை.
சிவ செங்கதிருக்கு ஆசிகள்
இரண்டு குழந்தைகள் இருப்பதுதான் நல்லது.
வாழ்த்துகள் கோவி கண்ணன்.
wishes to you and blessings to siva senkathir
ரெண்டுத்தான் எப்பவுமே ஜாலி..:)
வாழ்த்துக்கள் கோவி சார்........... கதிருக்கும்தான்.......
சிவ செங்கதிருக்கு வாழ்த்துக்கள்...
புதிதாக குழந்தை பெற்றுக்கொள்வோருக்கு உதவும் பதிவு!
குட்டி பதிவர் GKசிவ செங்கதிருக்கு வாழ்த்துகள்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துக்கள்.
குழந்தை உங்களை போலவே இருக்கிறது :-) .
கோவி! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
அபி அப்பா, சரியா சொல்லுங்க கதிர் காட்டுவது உதய சூரியன் :-)
வாழ்த்துகள் அன்பரே!!
சிவ செங்கதிரிற்கு ஆசிகள்.
நீள் ஆயுள்செல்வம்,உயர்புகழ் பெற்று வாழ்க வளமுடன்!
வாழ்த்துகள் கோவி.
நீங்கள் கொடுத்த கடைசி வரி தான் எனக்கும் முதலில் தோன்றியது. செந்தில் கூட ஒரு கவிதையாய் பகிர்ந்து இருந்தார்.
எதையுமே ஒரு சமூக நிகழ்வாக பார்க்கும் உங்கள் பார்வை தான் ஆச்சரியமாக இருக்கு. அதைப் போலவே அத்தனையும் தொகுத்து இருக்கீங்க.
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துகள்.
சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பால்புட்டி, பால்பவுடர், பேம்பர்ஸ்..... ஈரத் தாள்...வாங்கச் சென்று வருகிறேன். இன்னொரு புது உலகம் எனக்கு கிடைத்து போன்று உணர்வுகளாக மகிழ்ச்சியில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கின்றான் மகன் கதிர் ]]
இனம்புரியாத உணர்வு தோனுது அண்ணே!
சிவ செங்கதிருக்கு வாழ்த்துக்கள்!
சிவ செங்கதிருக்கு வாழ்த்துக்கள் . முதல் படத்தில் நான் பதிவு எழுத வந்து விட்டேன் என்று கையை ஆட்டி சொல்கிறார செங்கதிர் ,
நான்காவது படத்தை பார்க்கும் போது எதோ பதிவு எழுத ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார் போல் இருக்கிறது.
செங்கதிருக்கு அத்ரேயனின் அன்பு முத்தங்கள்..
சிவ செங்கதிருக்கு வாழ்த்துக்கள் . முதல் படத்தில் நான் பதிவு எழுத வந்து விட்டேன் என்று கையை ஆட்டி சொல்கிறார செங்கதிர் ,
நான்காவது படத்தை பார்க்கும் போது எதோ பதிவு எழுத ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார் போல் இருக்கிறது.
செங்கதிருக்கு அத்ரேயனின் அன்பு முத்தங்கள்..
வாழ்த்துகள் அண்ணாச்சி :)
சிவ செங்கதிருக்கும் வாழ்த்துகள் :))
குட்டி தம்பி பாப்பா கிடைத்த மகிழ்ச்சியோடு வலம் வந்துகொண்டிருக்கும் பாப்பாவுக்கும் வாழ்த்துகள் :)
வாழ்த்துகள் அண்ணாச்சி :-)
செங்கதிரை அடுத்த முறை இந்தியாவிற்கு அழைத்து வர இப்போதே வேண்டுகோள் வைக்கின்றேன் :-)
தொடர்ச்சிக்கு :-0)
vaalthukkal kannan sir
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
//எம்.எம்.அப்துல்லா
நீள் ஆயுள்செல்வம்,உயர்புகழ் பெற்று வாழ்க வளமுடன்!//
The same
குட்டிக்கோவியாருக்கு நல்வரவு.
// ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
:)))
எத்தினி முறை தான் வாழ்த்து சொல்லுறதான்.. சோ இந்த முறை ஒன்லி ரசிச்சிங்!!! :))//
அத்தனை முறைக்கும் நன்றி !
//Blogger ILA(@)இளா said...
வாழ்த்துக்கள் கோவி அண்ணாச்சி//
மிக்க நன்றி இளா
//ராமலக்ஷ்மி said...
சிவ செங்கதிருக்கும், அவர் வரவால் மகிழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி மேடம்
//
என்ன அபி அப்பா இது ?
கழகத்துல சேர சொல்லுவிக போல ?//
அவங்க கட்சியில் கொள்ளுப் பேரன்களை உள்ளடக்கிய மழலையர் அணி வேற இருக்கும் போல.
வாழ்த்துக்கள் நண்பா.
//துளசி கோபால் said...
ஹைய்யோ...... கதிரு எவ்வளோ அழகு.
புத்தம்புது பூவைப்போல இருக்கார்.
குழந்தைக்கு எங்கள் ஆசிகள்.
நல்லா இருங்க.
சிங்கை வரும்போது சந்திக்கிறேன்.//
உங்கள் வரவை எதிர்நோக்குகிறோம், தங்களது அன்பும் ஆசியும் எங்கள் இல்லத்திற்கு மிகத் தேவையான ஒன்று
//அபி அப்பா said...
ஆமா முதல் போட்டோவை பாருங்க கையை செங்கதிர் போல விரிச்சு வச்சிருக்காரு சிவசெங்கதிர்!!!//
வெறும் செங்கதிர் என்றால் பெயர் என்னதுன்னு பொதுவுடமைக்காரர்களும் திமுகவினர் உரிமை பிரச்சனை எழுப்புவாங்கன்னு தெரியும்.
//வலசு - வேலணை said...
நலமேவாழ என்னுடைய வாழ்த்துக்களும்//
மிக்க நன்றி வலசு
// சின்ன அம்மிணி said...
குழந்தை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி சின்ன அம்மிணி
// ..:: Mãstän ::.. said...
சிவசெங்கதிருக்கு நல்வரவு :)
வாழ்த்துக்கள் கோவிஜி.//
மிக்க நன்றி நண்பரே
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
வணக்கம் வைக்கிறார். அழகா சிரிச்சி போஸ் கொடுக்கிறார்.. சிவ செங்கதிர், நல்ல பெயர்.
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்//
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
அன்பின் நண்பரே! என் மனம் கனிந்த வாழ்த்துகள்!
//ஸ்வாமி ஓம்கார் said...
நாங்களும் கூட பயணித்தது போல இருந்தது. நல்ல எழுத்து நடை.
//
4 ஆண்டுக்கும் மேலாக பதிவுலகில் பெருக்கிக் கூட்டுகிறோமே.... :)
// சிவ செங்கதிருக்கு ஆசிகள்//
அன்புக்கு நன்றி ஸ்வாமி
//கக்கு - மாணிக்கம் said...
வாழ்த்துக்கள் கோவி. நல்ல அனுபவங்கள்.//
மாணிக்கம் சார் மிக்க நன்றி !
//Robin said...
இரண்டு குழந்தைகள் இருப்பதுதான் நல்லது.
வாழ்த்துகள் கோவி கண்ணன்.//
வாழ்த்துக்கு மிக்க நன்றி இராபின்
//ராம்ஜி_யாஹூ said...
wishes to you and blessings to siva senkathir//
நன்றி திரு இராம்ஜி
// Cable Sankar said...
ரெண்டுத்தான் எப்பவுமே ஜாலி..:)//
மன்னன் பட வசனமா ? :)
// வழிப்போக்கன் - யோகேஷ் said...
வாழ்த்துக்கள் கோவி சார்........... கதிருக்கும்தான்.......//
மிக்க நன்றி திரு யோகேஷ்
//கண்ணகி said...
சிவ செங்கதிருக்கு வாழ்த்துக்கள்...//
மிக்க நன்றி மேடம்
//Blogger அத்திவெட்டி ஜோதிபாரதி said...
புதிதாக குழந்தை பெற்றுக்கொள்வோருக்கு உதவும் பதிவு!
குட்டி பதிவர் GKசிவ செங்கதிருக்கு வாழ்த்துகள்!//
தங்கள் இல்லத்தினரோடு மகன்களோடு மருத்துவமனைக்கே வந்து வாழ்த்தியது மறக்க முடியாதது. மிக்க நன்றி திரு வெளிச்சப்பதிவரே
// சிங்கக்குட்டி said...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துக்கள்.
குழந்தை உங்களை போலவே இருக்கிறது :-) .//
வாழ்த்துக்கு மிக்க நன்றி சிங்கக்குட்டி
//ramachandranusha(உஷா) said...
கோவி! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
அபி அப்பா, சரியா சொல்லுங்க கதிர் காட்டுவது உதய சூரியன் :-)//
திமுக, கம்யூனிசம் வேண்டாம்னு தான் பெயரில் 'சிவ' சேர்த்து வச்சிருக்கேன்.
:)
// ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
வாழ்த்துகள் அன்பரே!!
சிவ செங்கதிரிற்கு ஆசிகள்.//
மிக்க நன்றி திரு செந்தில்.
//எம்.எம்.அப்துல்லா said...
நீள் ஆயுள்செல்வம்,உயர்புகழ் பெற்று வாழ்க வளமுடன்!//
நன்றி தம்பி
//வானம்பாடிகள் said...
வாழ்த்துகள் கோவி.//
பெரியவரின் வாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி
//ஜோதிஜி said...
நீங்கள் கொடுத்த கடைசி வரி தான் எனக்கும் முதலில் தோன்றியது. செந்தில் கூட ஒரு கவிதையாய் பகிர்ந்து இருந்தார்.
எதையுமே ஒரு சமூக நிகழ்வாக பார்க்கும் உங்கள் பார்வை தான் ஆச்சரியமாக இருக்கு. அதைப் போலவே அத்தனையும் தொகுத்து இருக்கீங்க.
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துகள்.//
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஜோதிஜி. தங்கள் குழந்தைகளுக்கும் எங்களது அன்புகள்
// நட்புடன் ஜமால் said...
சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பால்புட்டி, பால்பவுடர், பேம்பர்ஸ்..... ஈரத் தாள்...வாங்கச் சென்று வருகிறேன். இன்னொரு புது உலகம் எனக்கு கிடைத்து போன்று உணர்வுகளாக மகிழ்ச்சியில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கின்றான் மகன் கதிர் ]]
இனம்புரியாத உணர்வு தோனுது அண்ணே!//
உண்மை தான். மிக்க நன்றி தம்பி
// ரவிச்சந்திரன் said...
சிவ செங்கதிருக்கு வாழ்த்துக்கள்!//
நன்றி ரவி.
// Kesavan said...
சிவ செங்கதிருக்கு வாழ்த்துக்கள் . முதல் படத்தில் நான் பதிவு எழுத வந்து விட்டேன் என்று கையை ஆட்டி சொல்கிறார செங்கதிர் ,
நான்காவது படத்தை பார்க்கும் போது எதோ பதிவு எழுத ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார் போல் இருக்கிறது.
செங்கதிருக்கு அத்ரேயனின் அன்பு முத்தங்கள்..//
தங்கள் மகன் ஆத்ரேயனுக்கும் எங்களது அன்புகள் மற்றும் முத்தங்கள்
//ஆயில்யன் said...
வாழ்த்துகள் அண்ணாச்சி :)
சிவ செங்கதிருக்கும் வாழ்த்துகள் :))
குட்டி தம்பி பாப்பா கிடைத்த மகிழ்ச்சியோடு வலம் வந்துகொண்டிருக்கும் பாப்பாவுக்கும் வாழ்த்துகள் :)//
மிக்க நன்றி ஆயில்யன். எங்கள் மகள் எங்களைக் காட்டிலும் மிகவும் மகிழ்வாக உள்ளாள்.
//TBCD said...
வாழ்த்துகள் அண்ணாச்சி :-)
செங்கதிரை அடுத்த முறை இந்தியாவிற்கு அழைத்து வர இப்போதே வேண்டுகோள் வைக்கின்றேன் :-)//
அடுத்தமுறை எப்போது வந்தாலும் நாம் சந்திப்பது வழக்கம் என்பது என்னுறுதி.
//LK said...
vaalthukkal kannan sir//
மிக்க நன்றி LK
//ஆறுமுகம் said...
//எம்.எம்.அப்துல்லா
நீள் ஆயுள்செல்வம்,உயர்புகழ் பெற்று வாழ்க வளமுடன்!//
The same//
நன்றி திரு ஆறுமுகம்
// சாலிசம்பர் said...
குட்டிக்கோவியாருக்கு நல்வரவு.//
மிக்க நன்றி நண்பரே
// தேவன் மாயம் said...
அன்பின் நண்பரே! என் மனம் கனிந்த வாழ்த்துகள்!//
தங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி
அவங்க கட்சியில் கொள்ளுப் பேரன்களை உள்ளடக்கிய மழலையர் அணி வேற இருக்கும் போல.
ஆகா ட்ச்சிங்
// gokul said...
வாழ்த்துகள்//
வாழ்த்துக்கு நன்றி கோகுல்
//வந்தியத்தேவன் said...
வாழ்த்துக்கள் நண்பா.//
வாழ்த்துக்கு நன்றி நண்பரே
சிவ செங்கதிருக்கு நல்வாழ்த்துகள்
நட்புடன் சக்திவேல்
சிவ செங்கதிருக்கு நல்வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் கோவி
நல்ல பதிவுங்க.. நல்வாழ்த்துக்களும்...
வாழ்த்துக்கள் பெரிய கோவியும் சின்ன கோவியும் இருக்கும் அந்த படம் செம சூப்பருப்பு....
நல்வரவு சிவ செங்கதிர் :)
நல்ல நடை.
என்னைக்கேட்டால் இரண்டு குழந்தைகள் நல்லது என்பேன்.
அழகு பாப்பாவிற்கு என் ஆசிகள் :)
வாழ்த்துக்கள் கோவி கண்ணன்
வாழ்த்துகள் கோவியாரே...
புதியதோர்(பதிவு) உலகத்தில்....புதியதோர்.. வரவு..
புதியதோர்.....பிறப்பில்.புத்துயிர்ப்பில்...எத்தனை...நெகிழ்வு.மகிழ்வு
தாயுடன்..சேயும்..தந்தையும்..
சுற்றமும்...நட்பும்...மனமகிழப்......பிறந்தவன்.....
இந்தத் தரணியெங்கும் மணம் பரப்பி வாழ..மனமுவந்து வாழ்த்துகிறோம்.
தம்பி..செங்கதிருக்கு...எப்பங்கண்ணா....நீங்க பதிவெழுதுவீங்க.!!!!??
நலம் பல சூழ வாழ்த்துகள் ஜிகே!
செங்கதிருக்கு வாழ்த்துகள்
அழகான பெயர்
நல்வாழ்த்துகள்!!!
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் கண்ணன்.
வாழ்த்துக்கள் சார் உங்கப்பொண்னு ரொம்பசந்தோஸமா இருக்கும் உங்களை விட.
.
அன்புள்ள கோவி,
இப்போதுதான் இந்த இடுகை கண்ணில் பட்டது.
உங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறேன்.
புதிய குழந்தை சிவ செங்கதிர் , அக்காவாக பிரமோசன் ஆகியிருக்கும் மூத்த பெண் மற்றும் தாய் அவர்களுக்கும் வாழ்த்தைச் சொல்லிவிடுங்கள்.
சிவ செங்கதிர் நீண்ட ஆயுள், கல்வி, புகழ், செல்வம் அனைத்தும் பெற்று, பெற்றவர்களுடனும், உற்றவர்களுடனும் இனிதே வாழ்க!
எல்லா நலன்களையும் அருள இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் கண்ணன்.
புதல்வன் என்ற அத்தியாயம் மனித வாழ்வில் சில புதிய பக்கங்களைத் துவக்குகிறது..
உங்களுக்கும்,உங்கள் துணைவிக்கும்,சகோதரத் தவம் செய்த உங்களது புதல்விக்கும் புது வரவான கதிரோனுக்கும் வாழ்த்துக்கள்..
எப்படியும் சிவன் உங்கள் சிந்தையிலும்,நெஞ்சிலும்,கடைசி வரையில் இருக்கப் போவதை கட்டியம் கூறி விட்டீர்கள்!
நல்ல பதிவு.உங்களுக்கு இருக்கும் ஆதரவு மலைக்க வைக்கிறது.பின்னூட்டத்துலயே செஞ்சுரி அடிக்கறீங்களே
வாழ்த்துக்கள் கண்ணன்.
புதியவருக்கு என் வணக்கத்தைத் தெரிவியுங்கள்.
வாழ்த்துகள் சார்! :-)
வாழ்த்துகள்.
குட்டிப்பையனுக்கு அன்பு முத்தங்கள்.
அன்று மழை மற்றும் நேரமின்மையால் வர இயலவில்லை.விரைவில் சந்திப்போம்
அன்புடன்
சிங்கை நாதன்
சிவ செங்கதிருக்கு நல்வாழ்த்துகள்
நண்பர் கண்ணனுக்கும் அவர்களின் குடும்பதார் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்
சிவ செங்கதிருக்கு அன்பு முத்தங்கள்.. வாழ்த்துகள் கோவி
congrats Govi.Kannan.
Congratulations for second release. Looks like your photocopy;)
வாழ்த்துக்கள் கில்லாடி கண்ணன் :-)
அழகு. தங்கள் வாழ்வில் மீண்டும் ஒரு வசந்தம். சிவசெங்கதிர் அவர்கள் பெற்றோருக்கு கொண்டு வந்துள்ள மகிழ்ச்சி முடிவில்லாமல் நிலைக்க வாழ்த்துகள்.
My heartiest wishes for your son siva sengathir. He looks really cute !
கோவி கண்ணன் அண்ணனுக்கு இனிய வாழ்த்துக்கள். கோவியார் அண்ணனின் துணைவியாருக்கும் வாழ்த்துக்குள். சிவ செங்கதிருக்கு வாழ்த்துக்கள் . அண்ணன் அண்ணியாரின் போட்டோவையும் போடுங்கள்.
தந்தையானதிற்கு வாழ்த்துகள் கோவி.கண்ணன்.
எஸ்ஸெஸ்கேவுக்கு என் அன்பு! இந்தியா வர்றப்ப அவனை வீட்டுக்குக் கூட்டியாங்க...
மகிழ்ச்சியான செய்தி. செங்கதிருக்கு வாழ்த்துக்கள். கிரியா ஊக்கிக்கும் அக்காவானதற்கு வாழ்த்துக்கள். பெற்றோருக்கும் வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் கோவியார்.
// Sakthivel said...
சிவ செங்கதிருக்கு நல்வாழ்த்துகள்
நட்புடன் சக்திவேல்
சிவ செங்கதிருக்கு நல்வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் கோவி//
வாழ்த்துக்கும், நட்புக்கும் நன்றி சக்திவேல்
//க.பாலாசி said...
நல்ல பதிவுங்க.. நல்வாழ்த்துக்களும்...//
க.பாலாசி மிக்க நன்றி !
// ஜாக்கி சேகர் said...
வாழ்த்துக்கள் பெரிய கோவியும் சின்ன கோவியும் இருக்கும் அந்த படம் செம சூப்பருப்பு....//
ஜாக்கி,
இரண்டு கோவியாரும் தங்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறோம்.
// யாசவி said...
நல்வரவு சிவ செங்கதிர் :)
நல்ல நடை.
//
மிக்க நன்றி.
// என்னைக்கேட்டால் இரண்டு குழந்தைகள் நல்லது என்பேன்.//
குழந்தைகளின் எதிர்காலம் உடன்பிறப்புகளினால் வளப்படுத்தப்படும்.
// அழகு பாப்பாவிற்கு என் ஆசிகள் :)
வாழ்த்துக்கள் கோவி கண்ணன்//
வாழ்த்துக்கு நன்றி யாசவி
// மறத்தமிழன் said...
வாழ்த்துகள் கோவியாரே.../
நன்றி மறத்தமிழன் அவர்களே
// வானவன் யோகி said...
புதியதோர்(பதிவு) உலகத்தில்....புதியதோர்.. வரவு..
புதியதோர்.....பிறப்பில்.புத்துயிர்ப்பில்...எத்தனை...நெகிழ்வு.மகிழ்வு
தாயுடன்..சேயும்..தந்தையும்..
சுற்றமும்...நட்பும்...மனமகிழப்......பிறந்தவன்.....
இந்தத் தரணியெங்கும் மணம் பரப்பி வாழ..மனமுவந்து வாழ்த்துகிறோம்.//
நெடிய வாழ்த்துக்கு மிக்க நன்றி யோகியாரே.
//தம்பி..செங்கதிருக்கு...எப்பங்கண்ணா....நீங்க பதிவெழுதுவீங்க.!!!!??//
இப்பவும் பாயில் பதிவு எழுத முயற்சித்துக் கொண்டு இருக்கிறார். :)
// சுல்தான் said...
நலம் பல சூழ வாழ்த்துகள் ஜிகே!//
தங்களின் தனி மின்னஞ்சல் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும் மாபெரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தனி மின் அஞ்சல் வாழ்த்து என் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தியது மீண்டும் நன்றி ஐயா
// திகழ் said...
செங்கதிருக்கு வாழ்த்துகள்
அழகான பெயர்//
மிக்க நன்றி திகழ். உங்களுக்கு தமிழ் சார்ந்த அழகு பெயர்கள் என்றால் கொள்ளை விருப்பம், இந்தப் பெயரையும் விரும்பாமல் இருப்பீர்களா என்ன !!
:)
// gulf-tamilan said...
நல்வாழ்த்துகள்!!!//
மிக்க நன்றி gulf-tamilan !
//குமரன் (Kumaran) said...
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் கண்ணன்.//
மிக்க நன்றி குமரன்
//ராஜவம்சம் said...
வாழ்த்துக்கள் சார் உங்கப்பொண்னு ரொம்பசந்தோஸமா இருக்கும் உங்களை விட.//
நன்றி ராஜவம்சம் ஐயா. மகள் மிக்க மகிழ்சியாக உள்ளாள்
//கல்வெட்டு said...
.
அன்புள்ள கோவி,
இப்போதுதான் இந்த இடுகை கண்ணில் பட்டது.
உங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறேன்.
//
உங்கள் பின்னூட்டத்தில் மகிழ்ச்சி தெரிகிறது கல்வெட்டு அண்ணா.
// புதிய குழந்தை சிவ செங்கதிர் , அக்காவாக பிரமோசன் ஆகியிருக்கும் மூத்த பெண் மற்றும் தாய் அவர்களுக்கும் வாழ்த்தைச் சொல்லிவிடுங்கள்.//
தங்களுக்கு மிக்க நன்றி
//எஸ். கிருஷ்ணமூர்த்தி said...
சிவ செங்கதிர் நீண்ட ஆயுள், கல்வி, புகழ், செல்வம் அனைத்தும் பெற்று, பெற்றவர்களுடனும், உற்றவர்களுடனும் இனிதே வாழ்க!
எல்லா நலன்களையும் அருள இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.//
தங்களின் நல்லாசிக்கு மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி திரு கிருஷ்ணமூர்த்தி ஐயா
// அறிவன்#11802717200764379909 said...
மனமார்ந்த வாழ்த்துக்கள் கண்ணன்.//
வாழ்த்துக்கு நன்றி அறிவன் சார்.
// புதல்வன் என்ற அத்தியாயம் மனித வாழ்வில் சில புதிய பக்கங்களைத் துவக்குகிறது..//
உண்மை தான்.
// உங்களுக்கும்,உங்கள் துணைவிக்கும்,சகோதரத் தவம் செய்த உங்களது புதல்விக்கும் புது வரவான கதிரோனுக்கும் வாழ்த்துக்கள்..//
மீண்டும் நன்றி !
// எப்படியும் சிவன் உங்கள் சிந்தையிலும்,நெஞ்சிலும்,கடைசி வரையில் இருக்கப் போவதை கட்டியம் கூறி விட்டீர்கள்!//
ஏற்கனவே 10 ஆண்டுகளாக அப்படித்தான் மகள் பெயரிலும் சிவ இருக்கிறது :)
// சி.பி.செந்தில்குமார் said...
நல்ல பதிவு.உங்களுக்கு இருக்கும் ஆதரவு மலைக்க வைக்கிறது.பின்னூட்டத்துலயே செஞ்சுரி அடிக்கறீங்களே//
நல்வாழ்த்துகளும், நல்லாசிகளும் வழங்கும் நல்ல நண்பர்கள் நிறைய பெற்றிருக்கிறேன் பதிவுலகம் வழியாக என்பதைத்தான் காட்டுகிறது. மிக்க நன்றி செந்தில் குமார்
// சத்ரியன் said...
வாழ்த்துக்கள் கண்ணன்.
புதியவருக்கு என் வணக்கத்தைத் தெரிவியுங்கள்.//
வாழ்த்துக்கு நன்றி கண்ணன்.
//சிங்கை நாதன்/SingaiNathan said...
வாழ்த்துகள்.
குட்டிப்பையனுக்கு அன்பு முத்தங்கள்.
அன்று மழை மற்றும் நேரமின்மையால் வர இயலவில்லை.விரைவில் சந்திப்போம்
அன்புடன்
சிங்கை நாதன்//
தங்களின் வாழ்த்துகள் உற்சாகம் அளிக்கின்றன. இளைபாரும் நேரம் கிடைக்கும் போது இல்லத்தினருடன் வீட்டுக்கு வாருங்கள் செந்தில்
//பா.ராஜாராம் said...
வாழ்த்துகள் சார்! :-)//
நன்றி ராஜாராம் ஐயா
//ஆ.ஞானசேகரன் said...
சிவ செங்கதிருக்கு நல்வாழ்த்துகள்
நண்பர் கண்ணனுக்கும் அவர்களின் குடும்பதார் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்//
தங்கள் இல்லத்தினருக்கும் நல்வாழ்த்துகள். வாழ்த்துக்கு நன்றி ஞானசேகர்
//முத்துகுமரன் said...
சிவ செங்கதிருக்கு அன்பு முத்தங்கள்.. வாழ்த்துகள் கோவி//
சிவ செங்கதிருக்கு தங்களின் இனிப்பான அன்பு முத்தங்களுக்கு மிக்க நன்றி நண்பர் முத்துகுமரன்.
//MuthuThamizhini said...
Congratulations for second release. Looks like your photocopy;)//
நன்றி நண்பரே. குழந்தைகள் இருவருமே என்னைப் போல் இருப்பதாக நேரில் பார்த்தவர்கள் எல்லோரும் சொல்லுகிறார்கள்.
// கிரி said...
வாழ்த்துக்கள் கில்லாடி கண்ணன் :-)//
சின்னக் கோடம்பாக்கம், சின்ன ரஜினி கிரி அவர்களே வாழ்த்துக்கு நன்றி.
//Jack said...
அழகு. தங்கள் வாழ்வில் மீண்டும் ஒரு வசந்தம். சிவசெங்கதிர் அவர்கள் பெற்றோருக்கு கொண்டு வந்துள்ள மகிழ்ச்சி முடிவில்லாமல் நிலைக்க வாழ்த்துகள்.//
தங்கள் நெஞ்சார்ந்த நல்வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஜாக்.
// மணிகண்டன் said...
My heartiest wishes for your son siva sengathir. He looks really cute !//
இதயங்கனிந்த வாழ்த்துக்கு இதயம் நிறையந்த நன்றி மணி.
// rajesh said...
கோவி கண்ணன் அண்ணனுக்கு இனிய வாழ்த்துக்கள். கோவியார் அண்ணனின் துணைவியாருக்கும் வாழ்த்துக்குள். சிவ செங்கதிருக்கு வாழ்த்துக்கள் . அண்ணன் அண்ணியாரின் போட்டோவையும் போடுங்கள்.//
வாழ்த்துக்கு மிக்க நன்றி ராஜேஷ். விமர்சன கட்டுரைகள் எழுதுபவர்கள் இல்லப் பெண்களின் நிழல்படங்களை போடும் அளவுக்கு வலையுலகில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துபவர்களும் கனிசமாக உள்ளனர் என்பதால் மகள் படத்தைக் கூட போடுவதை தவிர்த்தே வருகிறேன்
//பரிசல்காரன் said...
எஸ்ஸெஸ்கேவுக்கு என் அன்பு! இந்தியா வர்றப்ப அவனை வீட்டுக்குக் கூட்டியாங்க...//
எல்லாவற்றையும் எளிமையாக்கிப் பார்க்கிறீர்கள். :)
கோவை சுற்றுலா வரும் போது அழைத்துவருகிறேன்.
நன்றி பரிசல்
// தருமி said...
மகிழ்ச்சியான செய்தி. செங்கதிருக்கு வாழ்த்துக்கள். கிரியா ஊக்கிக்கும் அக்காவானதற்கு வாழ்த்துக்கள். பெற்றோருக்கும் வாழ்த்துகள்.//
நன்றி தருமி ஐயா. தங்களைப் போன்ற மூத்தோர்களின் நல்வாழ்த்துகள் மகனின் எதிர்காலத்தை நல்வழியில் கொண்டு செல்லும்.
// முரளிகண்ணன் said...
வாழ்த்துக்கள் கோவியார்.//
நன்றி முரளிகண்ணன்.
//Indian Said..
தந்தையானதிற்கு வாழ்த்துகள் கோவி.கண்ணன். //
வாழ்த்துக்கு மிக்க நன்றி இந்தியன்
வாழ்த்துகள்.
தாய்கூம் சேய்கூம் தண்தய்கூம் வாழ்தூக்கள்
மிக்க மகிழ்ச்சி.
தாய்,சேய் மற்றும் உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்பின் கோவி,
இனிய நற்செய்தி! சிவசெங்கதிர் அருமையான பெயர்.
மகிழ்ச்சியும், வாழ்த்துகளும். தாமதத்துக்கு மன்னிக்கவும். இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்.
நன்றி - சொ.சங்கரபாண்டி
வாழ்த்துக்கள் தல!
innaikkithan parthen mikka makilchi.
manam niraiya santhosam valthukkal anna.
வாழ்த்துகள் கோவி. மிக்க மகிழ்ச்சி.
அன்பின் கோவி கடந்த கவிமாலைக்கு நீங்கள் வந்தபோது எனக்கு தெரியாது. இப்பொழுதான் உங்களின் பதிவை படித்து அறிந்தேன்.
செங்கதிருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
அன்பு மிக்க கோவி.கண்ணன் அங்கிள்,
தனிமடல் மூலம் எங்கப்பாவுக்கு GK சிவசெங்கதிரின் உதயம் குறித்துத் தெரிவித்த தங்கள் அன்பிற்கு நாங்க மூணு பேரும் நெகிழ்ந்து போயிருக்கிறோம். கிருஷ்ண ஜெயந்தி அன்று வந்துள்ளது உங்கள் மடல்.
மகன் பிறந்தால், சில தந்தைகள் தலைகால் புரியாமல் இருப்பார்களாம்; இந்த 'தல', 'காலம்' புரியாமல் இருக்கிறதோ!
தங்களின் கடிதத்தில் தம்பியின் பிறந்த நாளாக நீங்க குறிப்பிட்டுள்ள தேதியைப் பாருங்க.
//சென்ற செப் 19 ல் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு சிங்கையில் தான் பிறந்தான். மீண்டும் அப்பாவான தகவலை நான் உங்களிடம் சொல்லி இருக்கவில்லை காரணம் பத்து மாதத்திற்கும் மேல் நாம் தொடர்பில் இல்லை.
இரண்டாம் குழந்தை பற்றிய தகவல்களை மகன் பிறந்த பிறகு வரலாறு புவியிலோடு பதிவில் எழுதி இருக்கிறேன்.
http://govikannan.blogspot.com/2010/08/blog-post_27.html வாசித்துப் பார்க்கவும்.//
வாழ்த்துக்கள் - உங்களுக்கும், ஆண்ட்டிக்கும், "அக்கா"வுக்கும்.
அன்புடன்,
MH ரத்னேஷ்.
வாழ்த்துக்கள்.... இன்னைக்குத்தான் பார்த்தேன். படத்தில உங்க முகத்தில ஒரு பெருமை தெரியுதே!
http://kgjawarlal.wordpress.com
ஆகா!
ஆகா!
ஆகா!
கோவி!
கோவி!
கோவி!
இன்றே கண்டேன்!
நன்றே கண்டேன்!!
சிவ செங்கதிரா வருக!
நவ நவமாய் நீ வருக!!
இனிய வாழ்த்துக்கள் அண்ணி & கோவி அண்ணா!
பதிவை கொஞ்சமா வெட்கப்பட்டுக் கொண்டே எழுதினா மாதிரி தெரியுது! :))
குழந்தை சிரித்துக் கொண்டே தூங்கும் படம் சூப்பர்! :)
பல்லாண்டு பல்லாண்டு, நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!
அப்பாலிக்கா...வீட்டில் ஒவ்வொருத்தரும்...குறிப்பா பெரியவள் என்ன சொல்லிக் கூப்பிடறா-ன்னும் சொல்லுங்க!
சிவா
கதிர்
செங்கதிர்
செங்கா
Siv
Chenk
:)))
//மாயவரத்தான்.... said...
வாழ்த்துகள்.//
வாழ்த்துக்கு நன்றிங்க மாயவரத்தான்
// Ram said...
தாய்கூம் சேய்கூம் தண்தய்கூம் வாழ்தூக்கள்//
தட்டச்சக் கடினப்பட்டு இருக்கிறீர்கள் என்று தெரிகிறது, இருந்தாலும் முயற்சித்து வாழ்த்தும் உங்கள் உள்ளம் புரிகிறது. நன்றி ராம்ஸ்.
// சிநேகிதன் அக்பர் said...
மிக்க மகிழ்ச்சி.
தாய்,சேய் மற்றும் உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.//
அனைவர் சார்பிலும் நன்றி அக்பர்.
//-/சுடலை மாடன்/- said...
அன்பின் கோவி,
இனிய நற்செய்தி! சிவசெங்கதிர் அருமையான பெயர்.
மகிழ்ச்சியும், வாழ்த்துகளும். தாமதத்துக்கு மன்னிக்கவும். இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்.
நன்றி - சொ.சங்கரபாண்டி//
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அண்ணன்.
//வால்பையன் said...
வாழ்த்துக்கள் தல!//
நன்றிங்க தல
// பித்தனின் வாக்கு said...
innaikkithan parthen mikka makilchi.
manam niraiya santhosam valthukkal anna.//
வாழ்த்துக்கு நன்றி சுதா.
// K.R.அதியமான் said...
வாழ்த்துகள் கோவி. மிக்க மகிழ்ச்சி.//
மிக்க நன்றி அதியமான் தங்கள் வீட்டுக்கு இரட்டையர்களுக்கும் நல்வாழ்த்துகள்
// பாண்டித்துரை said...
அன்பின் கோவி கடந்த கவிமாலைக்கு நீங்கள் வந்தபோது எனக்கு தெரியாது. இப்பொழுதான் உங்களின் பதிவை படித்து அறிந்தேன்.
செங்கதிருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.//
நான் கவிமாலை நிறைவுறும் வேளையில் வந்ததால் என்னாலும் அங்கே தகவலைச் சொல்ல முடியவில்லை. வாழ்த்துக்கு மிக்க நன்றி பாண்டி
//RATHNESH said...
அன்பு மிக்க கோவி.கண்ணன் அங்கிள்,
தனிமடல் மூலம் எங்கப்பாவுக்கு GK சிவசெங்கதிரின் உதயம் குறித்துத் தெரிவித்த தங்கள் அன்பிற்கு நாங்க மூணு பேரும் நெகிழ்ந்து போயிருக்கிறோம். கிருஷ்ண ஜெயந்தி அன்று வந்துள்ளது உங்கள் மடல்.//
உங்கள் அனைவரிடம் தகவலை பகிர்ந்து கொண்டதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.
// மகன் பிறந்தால், சில தந்தைகள் தலைகால் புரியாமல் இருப்பார்களாம்; இந்த 'தல', 'காலம்' புரியாமல் இருக்கிறதோ!
தங்களின் கடிதத்தில் தம்பியின் பிறந்த நாளாக நீங்க குறிப்பிட்டுள்ள தேதியைப் பாருங்க.
//
:) அலுவலகம் முடியும் நேரத்தில் விரைவாக எழுதிய மின்னஞ்சல் அதனால் அந்தப் பிழை ஏற்பட்டுவிட்டது
// வாழ்த்துக்கள் - உங்களுக்கும், ஆண்ட்டிக்கும், "அக்கா"வுக்கும்.
அன்புடன்,
MH ரத்னேஷ்.//
உனக்கும் நல்வாழ்த்துகள், நல்லா படித்து அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நற்பெயர், பெருமை பெற்றுத்தரனும்.
// Jawahar said...
வாழ்த்துக்கள்.... இன்னைக்குத்தான் பார்த்தேன். படத்தில உங்க முகத்தில ஒரு பெருமை தெரியுதே!
http://kgjawarlal.wordpress.com//
ஜவஹர் அண்ணா, உங்களைப் போன்று நல்ல நண்பர்களுடன் மகன் பிறந்த தகவலை பகிர்ந்து கொண்டு வாழ்த்துப் பெருவதில் மிக்க மகிழ்கிறேன்
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆகா!
ஆகா!
ஆகா!
கோவி!
கோவி!
கோவி!
இன்றே கண்டேன்!
நன்றே கண்டேன்!!
சிவ செங்கதிரா வருக!
நவ நவமாய் நீ வருக!!
இனிய வாழ்த்துக்கள் அண்ணி & கோவி அண்ணா!
பதிவை கொஞ்சமா வெட்கப்பட்டுக் கொண்டே எழுதினா மாதிரி தெரியுது! :))//
வெட்கமெல்லாம் எதுவுமில்லை, ஒளிவு மறைவு இல்லாமல் அனைத்து தகவல்களையும் கொட்டி இருக்கேனே.
வாழ்த்துகளுக்கு நன்றி தம்பி.
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குழந்தை சிரித்துக் கொண்டே தூங்கும் படம் சூப்பர்! :)
பல்லாண்டு பல்லாண்டு, நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!
அப்பாலிக்கா...வீட்டில் ஒவ்வொருத்தரும்...குறிப்பா பெரியவள் என்ன சொல்லிக் கூப்பிடறா-ன்னும் சொல்லுங்க!
சிவா
கதிர்
செங்கதிர்
செங்கா
Siv
Chenk
:)))//
மகள் மகனை தம்பி என்று தான் தற்போதைக்கு கூப்பிடுகிறாள்
:)
கருத்துரையிடுக