நான்கு வேதங்கள் பற்றிய பெயரையாவது இந்துக்களில் பெரும்பான்மையினர் அறிந்திருப்பர். நான்கு வேதங்களில் ரிக் வேதமே பழமையானது, அதர்வண வேதம் அவற்றுள் பிந்தையது. வேதங்களை எழுதியவர் யார் என்று தெரியாது, ஆனால் அவற்றைத் தொகுத்தவராக வேதவியாசர் என்பவரைச் சொல்லுகிறார்கள். வேதங்களை யார் எழுதியது என்பது தெரியாமல் இருக்க அவை தான் தோன்றியோ கடவுளால் படைக்கப்பட்டது என்கிற கூற்றைவிட அவை எழுதப்படாமல் மனப்பாடமாக (ஸ்ம்ருதி) வழிவழியாக கொண்டு செல்லப்பட்டது என்பதே பொருத்தமான கூற்றாக இருக்க முடியும். பருப்பொருள்கள் எதுவுமே மூலம் எதுவும் மின்றி தோன்றி இருக்க வாய்ப்புகள் கிடையாது. இப்படியான ஒரு கூற்றில் தான் சமணத் துறவி நீலி கேசி என்பவள், நட்ட நடுவீதியில் மலம் கிடந்தால், இருந்தவர் யார் என்று அறிய முடியாத சூழலில் அது தானாகவே வந்திருக்கும் என்று கூற முடியாதே, என்று சொல்லி வேதம் குறித்த 'தான் தோன்றிக்' கருத்துகளை மறுத்தாள்.
காலத்திற்கு முற்பட்டவை, காலம் அறியமுடியாதது, கல்தோன்றாக் காலத்து போன்ற காலத்தை வைத்து செய்யப்படும் சொல்லப்படும் கூற்றுகள் யாவும் வரலாறு என்பதற்கு போதிய தோற்றமை காட்ட ஒன்றும் இல்லாத போது உயர்வு நவிர்ச்சியாக அவ்வாறு சொல்லப்படுமேயன்றி எவராலும் எழுதப்படாத தான் தோன்றி ஆக்கங்கள் என்றுக் கூறக் கூடியது எதுவுமே இல்லை. மொழியாகிலும், தத்துவங்களாகிலும் இவை உருவாகி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளவை என்கிற புரிதலே அறிவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். தெய்வ மொழி, தெய்வ வேதம் போன்ற சொல்லாடல்கள் புனிதத் தன்மைகள் கற்பிக்கப்ப(ட்)ட வலுக்கட்டாயமாக புகுத்தப்பட்ட வெறும் சொற்களேயன்றி இவை புனிதப் பூச்சு என்பதைத் தவிர்த்து புனிதம் என்கிற ஒன்றை ஒருகாலமும் தந்துவிடாது. குறிப்பிட்ட தத்துவங்களை, வேதங்களை எழுதிய புத்தகங்கள் நெருப்பில் வேகாது என்று எவரும் காட்ட முடியாது. ஆனால அவ்வாறெல்லாம் கூடச் சொல்லப்பட்ட நெருப்பில் இட்டும், தண்ணீர் வீசியும் பல சோதனைகளை தமிழ் நூட்கள் மீது நடந்திருப்பதை அனல்வாதம் புனல் வாதம் ஆகியவற்றின் மூலம் அறியலாம். ஆனாலும் வென்றதாகச் சொல்லப்பட்ட நூல்கள் இன்றும் நெருப்பில் எரியாமல் இருக்கும் என்பதை ஒருவராலும் நிருபனம் செய்ய முடியாது, ஏனெனில் அன்றைக்கு பனவோலையில் என்ன விதமான இராசயனம் பூசப்பட்டு நெருப்பில் அல்லது நீரில் போடப்பட்டது என்பதை நாம் அறிவதற்கு இல்லை :)
நான்கு வேதங்களில் இருப்பவையாக சொல்லப்படுபவைகளில் பெரும்பான்மைச் செய்யுள்கள் அன்றாட சடங்கு மற்றும் வழிபாட்டு முறைகளை கொண்டது. இந்திரன் சோமன், ஐம்பூதங்களின் வழிபாடுகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. சோமபானத்தின் உயர்வும் புனிதத் தன்மையும் அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி, இன்பம் ஆகியவைச் சொல்லப்பட்டு இருக்கிறது. இதைத் தவிர்த்து அதர்வண வேதத்தில் இசைகள் குறித்து பேசப்படுகின்றன. மற்றபடி நான்கு வேதத்தில் பிரம்மம் என்ற சொல்லோ, அத்வைதத் தத்துவமோ பேசப்படவில்லை. எந்த ஒரு மதமாக இருந்தாலும் அது குறித்த புதிய நூல்களை எழுதும் போது மூல நூல்களின் மேற்கோளுடன் தான் எழுதுவர். இதே அடிப்படையில் தான் இந்து அல்லது இந்திய சமயங்களில் பவுத்தம், சமணம் தவிர்த்து அனைத்தும் வேதத் தொடர்புடையதாகவே எழுதப்பட்டது. இதில் வேடிக்கை என்ன வென்றால் வேதங்களையும், வேதக் கடவுளையும் மறுக்கும் சார்வாகம், மீமாம்சை போன்றவைகளைக் கூட பின்னால் வேதத்தொடர்புடன் இருப்பதாகவே சொல்லப்படும் இட்டுக்கதைகள். காரணம் இதை எழுதியவர்கள் பார்பன்ர்கள் என்பது தவிர்த்து வேறெதுவும் இல்லை. மீமாம்சகர்களும், குமரிலா போன்றோர்கள் பார்பனர்கள் என்றாலும் அவர்கள் தத்துவ ரீதியில் வேதங்களையும், வேதக்கடவுள்களையும், சிருஷ்டி குறித்த வேதக்கருத்துகளையும் கடுமையாக எதிர்த்தவர்கள். இவர்களின் கருத்துகளை வேதத்துடன் தொடர்புடையது என்று சொல்வதன் மூலம் புதிதாக தெரிந்து கொள்ள எதுவுமே இல்லை என்கிற கண்ணோட்டத்தில் அவர்களது நாத்திகக் கருத்துகள் புறக்கணிக்கப்படும் என்கிற வெறும் வைதீக அரசியல்.
நாத்திகக் கருத்துகளை மறுப்பவர்கள் முதலில் சொல்வது இது ஒன்றும் புதிதல்ல, நாத்திகம் என்பது வேதத்திலேயே அனுமதிக்கப்பட்டவை என்றும் சொல்லுவார்கள். அது உண்மையென்றாலும் ஏனைய கடவுள் ஏற்பு நூல்களைப் போன்ற மதிப்பு கொடுப்பது இல்லை, மேலும் சார்வாகம் குறித்த விளக்கங்களையும் பேசத் தயங்குவர். காரணம் கடவுள் குறித்தும் கடவுள் நம்பிக்கை குறித்தும் இந்த நூல்கள் மிகுதியாகவே கேள்வி எழுப்பி இதுவரை விடை இல்லாததால் அதை வேதாந்தக் கருத்தாக ஏற்றாலும் புனிதத் தன்மை கொடுப்பது சிக்கலாகிவிடும் என்கிற தாழ்வுணர்ச்சியே. புத்தரின் தத்துவங்களை மறுக்க புத்தரை விஷ்ணுவின் எட்டாவது அவதாராமாக்கிவிட்டால் ஒரு இந்துவுக்கு புத்தர் என்ன சொன்னார் என்ற அக்கரை இருக்கப் போவதில்லை. நாட்டார் தெய்வங்களை வைதிக தெய்வங்களின் கோவில்களுக்கு எல்லைச் சாமிகள் ஆக்கினால் அவற்றை வணங்குபவர்கள் தொண்டனை விட தலைவனையே வணங்கினால் போதும் என்று நினைத்துவிடுவர். இவை வழிபாட்டு அளவில் தான்.
தத்துவ நூல்கள் பற்றியும் இதே நடைமுறை, வேதாந்தங்கள் எனப்படும் உரைநடைகள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடை பட்டவையே என்கிறார்கள். ஆனால் இவற்றில் வேதக் குறிப்புகளை வைத்து எழுதப்பட்டு இருப்பதால் அவை முழுமையான வேதாந்தம் என்பதாகவே கற்பிக்கப்படுகிறது. நான்கு வருணங்களில் சூத்திரன் தவிர்த்து மூன்றே மூன்று வருணம் தான் நான்கு வேதங்களில் இடம் பெற்றிருக்கிறது. நாலவது வருணம் பற்றிப் பேசுவது புருச சூக்தம் மட்டுமே, அதற்கு பிறகு மனுஸ்மிருதி ஆகியவை புருச சூக்ததின் மேற்கோளில் எழுதப்பட்டவை. இவை அனைத்தையும் வேதத்துடன் தொடர்பு படுத்துவதால் இவற்றில் பேசும் ஏற்றத்தாழ்வு அனைத்திற்கும் வேதம் அனுமதி கொடுத்திருப்பதாகவே கொள்ள முடியும் என்பதாக இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையாதாகச் சொல்லப்பட்டது. இந்திய தத்துவ ஞானம், இந்திய ஞான மரபு போன்ற சொல்லாடல்களை வைதீக வாதிகளும் ஆதரவாளர்களும் மிகுதியாகவே பயன்படுத்திவருகின்றனர். ஆனால் இந்த ஞான மரபு என்கிற ஒற்றைச் சொல்லில் அனைத்து தத்துவங்களும் அடங்கி இருப்பதாக இவர்கள் நினைப்பதற்கு மாறாக ஞான மரபு என்ற சொல்லில் அனைத்து தத்துவங்களும் நீர்த்துப் போகின்றன என்பதை நினைப்பது இல்லை.
இந்து / வைதீக மதத்தில் நாத்திகமும் ஒரு தத்துவம் தான் என்பது உண்மையானால் வேத பாடசாலைகளில் நாத்திக வாதங்கள் சொல்லிக் கொடுக்கலாமே ? நாத்திகமும் புனிதத் தன்மை வாய்ந்தது என்று சொல்லலாமே ? உண்மையில் தத்துவங்கள் என்று உயர்வு கற்பிக்கப்படுபவற்றில் அவை உண்மை பேசுகிறது என்பதைத் தவிர்த்து வேறெதும் இல்லை, அரிஸ்டாட்டில், பிளாட்டோ, கன்பூசியஸ் அல்லது நம் கவுதம புத்தர் இவர்களின் தத்துவங்களைப் படித்தால் அவற்றில் உண்மைகளை மிகத் தெளிவாகப் பேசி இருப்பதை உணரலாம். உண்மைகளில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை என்றாலும் சூழல்களால், தன்னலத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதைத் தவிர்த்து அவ்வுண்மைகளில் மறுப்புக்கான சொற்பக் காரணங்கள் கூட இருப்பதில்லை. உண்மைகள், மெய்கள் என்பதையே தத்துவம் என்பதாக சொல்லப்படும் பொழுது அதில் தேவையற்ற புனிதம் போய் ஒட்டிக் கொண்டு, அதை கடைப்பிடிப்பதில் இருந்து தடுக்கிறது, அல்லது ஒரு அச்சத்தை ஏற்படுகிறது என்கிற பரவலான புரிந்துணர்வு இருப்பதில்லை என்று சொல்வதற்கில்லை என்றாலும் ஆனால் அவை ஏன் புனித மற்றும் தத்துவ என்கிற அரசியல் அடைமொழிகளைக் கொண்டு உயர்வாக்கப்பட்டு இருக்கிறது என்றால் அதை வியாபாரமாக்கும் ஒரு செயல் அல்லது அதைவைத்து பிழைத்தல் என்பதே ஆகும். சூத்திரன் வேதம் படித்தால் அவன் காதில் ஈயத்தைக் காய்து ஊற்று என்கிற மனு ஸ்மிருதிகள் கூட இந்த வகை தந்திரங்களினால் எழுந்த எழுத்து ஆவணங்களே. அதையும் தாண்டிய அரசியல் வேதங்களோ, வேதாந்தங்களோ அவற்றில் என்ன எழுதி இருக்கிறது என புரியாதது என்று ஒன்றும் கிடையாது, ஆனால் அதை எல்லோரும் படித்துவிட்டால், 'பூ......இவ்வளவு தானா ?' என்று மிகச் சாதரணாமாக்கப்பட்டுவிடுமோ என்கிற தேவையற்ற அச்சமும் பிரிதொரு காரணமாக இருக்கிறது.
வேதம் வேதாந்தம் இவற்றின் இன்றைய பயன் எதுவும் இருக்கிறதா என்கிற கேள்வி மற்றொரு விவாததற்கு உட்பட்டது. ஒரு கிறித்துவருக்கு நெருக்கமாகவும் அன்றாடமும் பயனில் இருக்கும் பைபிள், அதே போன்று இஸ்லாமியருக்கு இருக்கும் குரான் போன்று இந்துக்களின் ஒவ்வொரு பிரிவிற்கும் (சைவம், வைணவம்) ஒன்று என்று சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லை என்று பார்க்கும் போது இந்து சமயங்களின் வேதங்களின் மீது கட்டப்பட்ட மித மிஞ்சிய புனிதத் தன்மை தவிர்த்து வேறு என்னவாக இருக்க முடியும் ? இந்திய தத்துவ ஞானம், அல்லது இந்து ஞான மரபு என்கிற ஒற்றைச் சொல்லில் தத்துவங்களையும் சமய நூல்களையும் முடக்குபவர்கள் அவற்றை இந்து மக்களின் பொதுப்பயன்பாட்டில் இருந்து விலக்கி எடுத்துச் செல்கிறார்கள் என்பதை உணர்வார்களா ?
பின்குறிப்பு : நண்பர் ஒருவருக்கு மின்னஞ்சலாக எழுதியதன் தொகுப்பு
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
15 கருத்துகள்:
//இந்து / வைதீக மதத்தில் நாத்திகமும் ஒரு தத்துவம் தான் என்பது உண்மையானால் //
அது உண்மையல்ல!, சுஜாதாவின் ஜீனோ வில் வரும் ஹீரோவும் வில்லனும் ஒருவனே போன்று, நாங்கள் இப்படியெல்லாம் முன்பே யோசித்து இருக்கிறோம் என்று சொல்ல செய்த ஏற்பாடு என்றே சொல்லவேண்டும்
கோவியாருக்கு இல்லாத கடவுளே ?இந்த பதிவரும், பதிவும் அமைதியாகும் நாள் எப்போது?
வனக்கம் கொவியாரெ,
இப்படியெல்லாம் படிச்சிபுட்டு உண்மையப் பொட்டு உடைச்சி ஒன்னும் தெரியாத அப்பாவி மக்கள அறிவாளிங்களா மாத்தி எங்க பொழப்புல (தெவநாதன் குருக்கள் மற்றும் காஞ்சி 'காம'கொடி ஜெயெந்திர சரசுவதி சுவாமிகள் எல்லொரும் நினைவுக்கு வந்தால் நான் பொருப்பல்ல) மண்னள்ளி பொட்டுடுவீங்கன்னு தான் இரெண்டாயிரம் ஆண்டா பாப்பானத் தவிர வேர எவன் (சூத்திரன்) படிச்சாலும் வாயில சூடு வைக்கனும், படிக்கறதக் கெட்டா காதுல ஈயத்த காய்ச்சி ஊத்தனும், சொன்னா நாக்க அருக்கனும்னு எழுதி வச்சொம். அப்படி இருந்தும் படிச்சிட்டு எங்க பொழப்ப கெடுகுரீங்களே அய்யா. அனா மக்கள் மெல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு பெரியாரில் தொடங்கி எத்தன பெரு எவ்வளவு ஆதாரத்தொட எடுத்துச்சொன்னாலும் மக்கள் எங்கள கைவிடமாட்டாங்க அந்த நம்பிக்கையில தான் பலவெலைகளைச் செய்யிறொம்.
நல்ல பதிவு கொவியாரெ, தொடருங்கள்.
வாழ்துக்களுடன்,
கொகுலகிருட்டிணன்
//வீர அந்தனன் said...
எங்கம்மா ஒரு மோசமான தே...
//
மிஸ்டர் அந்தனன் உங்க அம்மாவை நீ ஆபசமாக பேசிய பின்னூட்டம் நீக்கப்பட்டுள்ளது
கருத்து சுதந்திரம் உள்ளது என்பதற்காக ஆபாசமாக பின்னூட்டம் இடலாமா..? வார்த்தைகளில் நாகரீகம் வேண்டாமா.? 2000 வருடங்களாக ஏமாற்றி பிழைத்தவற்களுக்கு உண்மையை சொன்னால் கோபம்தான் வரும்...!
Atleast for few months, enable comment moderation.
கீதை உபதேசம் என்று பல வீடுகளில் தொங்கும் வாசகங்கள் கீதையில் இல்லாதவை.
அது போல எதற்கெடுத்தாலும் வேதத்தில் உள்ளது என்று சொல்பவர்களுக்காக வேதங்களின் உண்மை மொழி பெயர்ப்புக்கள் தமிழில் வரவேண்டும்.
மன்னர் அம்மனமாக இருக்கிறாரா ஆடையுடன் இருக்கிறாரா என்பது தெரிந்து விடும்.
// (சைவம், வைணவம்) ஒன்று என்று சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லை //
நன்றாக ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை. வேதங்கள் இந்தக் காலத்திற்கு உதவாது என்பதால் தான் அவைகள் மூட்டை கட்டப்பட்டன.
அனால் சைவமும்,வைனமும் வேதம் அல்ல. நாயன்மார்கள்,ஆழ்வார்களின் பாடல்களில் பொதுவாழ்விற்கு நிறைய கருத்துக்கள் உள்ளன.
ஆண்டாளின் பாடலில் விஞ்ஞானம் கூட உள்ளது. எப்படி நாம் எல்லா உணவும் ஏற்றுக் கொள்ள, அல்லது புறந்தள்ள முடியாதோ அது போல அனைத்தையும் குப்பை என ஒதுக்கி விட முடியாது.
தங்களின் தலைப்பு மிகவும் அருமை. அதில் கூட ஒரு விஷயம் உள்ளது. உரித்தால் ஒன்றும் இல்லாத பகுத்தறிவு வெங்காயத்தை வீட வேதத்தின் பெருங்காயத்தில் வாசனையாவது மிஞ்சும் அல்லவா. நன்றி அண்ணா.
//பித்தனின் வாக்கு said...
// (சைவம், வைணவம்) ஒன்று என்று சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லை //
நன்றாக ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை. வேதங்கள் இந்தக் காலத்திற்கு உதவாது என்பதால் தான் அவைகள் மூட்டை கட்டப்பட்டன.
அனால் சைவமும்,வைனமும் வேதம் அல்ல. நாயன்மார்கள்,ஆழ்வார்களின் பாடல்களில் பொதுவாழ்விற்கு நிறைய கருத்துக்கள் உள்ளன. //
ஐயா சாமி நான் சொன்னதையே நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை, ஒரு கிறித்துவனுக்கு பைபிள் போல இஸ்லாமியருக்கு குரான் போல இந்து (சமய) பிரிவினருக்கு அன்றாடம் பயன்படக் கூடியதாக எதுவுமே இல்லை என்று கூறி இருக்கிறேன்.
பித்தனின் வாக்கு ஐயா,
ஒரு குப்பைக்கு வக்காலக்த்து வாங்கும் உங்கள் பின்னூட்டத்தை வெளி இடவில்லை. மன்னிக்கவும்.
பாலியல் தொழில் செய்யாத சாதியினர் என்று எந்த ஒரு சாதியும் இல்லை என்று உணருங்கள் நண்பரே.
//வீர அந்தனன் Said..
நான் ஒரு கிறுக்கன்,
எங்கம்மா ஒரு தே...//
உன் பின்னூட்டம் நிராகரிக்கப்பட்டது
‘பஞ்ச ஜனா மம ஹோத்ரம் ஜுஷத்வ’
என்று ஒரு வரி ரிக் வேதத்தில் வருவதாக அறிகிறேன்.
இதற்குப் பொருள் ஐந்து வகை ஜனங்கள் வேதம் கற்கலாம் என்பதாகச் சொல்வார்கள். ஐந்தாவது என்று குறிப்பிடுவது பெண்களை என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். வேதத்தைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் எனக்கு ஞானம் போதாது. இது என் முன்னோர்கள் சொல்லக் கேட்டது.
http://kgjawarlal.wordpress.com
// Jawahar said...
‘பஞ்ச ஜனா மம ஹோத்ரம் ஜுஷத்வ’
என்று ஒரு வரி ரிக் வேதத்தில் வருவதாக அறிகிறேன்.
இதற்குப் பொருள் ஐந்து வகை ஜனங்கள் வேதம் கற்கலாம் என்பதாகச் சொல்வார்கள். ஐந்தாவது என்று குறிப்பிடுவது பெண்களை என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.//
காலத்திற்கு ஏற்றவாறு சொல்லிக் கொள்ள வேண்டியது தான். இந்துக்களுக்கு மட்டுமல்ல உலகில் இருக்கும் ஐந்து வகை மனித இனங்களுக்கும் என்று கூட இன்னும் ஒரு 100 ஆண்டு கழித்துச் சொல்லிக் கொள்ளலாம். நான் படித்த வரையில் நான்கு வேதங்களில் சூத்திரன் என்ற பிரிவு இருந்திருக்கவில்லை என்றே படித்தேன். :)
// வேதத்தைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் எனக்கு ஞானம் போதாது. இது என் முன்னோர்கள் சொல்லக் கேட்டது.
http://kgjawarlal.wordpress.com//
ஆர்வம் என்பதைத் தவிர்த்து ஒன்று புரியாமல் போக அது மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத மொழியில் இருந்தால் தான் கடினம்.சமஸ்கிரதமும் மனிதர்கள் பேசும் மொழியே. அதைப் பற்றி உயர்வாக சொல்வதற்காக அது புரியாது என்று சொல்லி வைத்துவிடுவார்கள். மற்றபடி புரியாத மொழி நடை, புரியாத சொற்களைக் கொண்டது என்று எந்த ஒரு மொழியும் இருப்பதாகத் தெரியவில்லை, பழமையான இலக்கியங்கள் நேரடியாக புரியாது, ஆனால் அதில் பயிற்சி பெற்றவர்கள் தற்போது இருக்கும் நடைமுறையில் தான் அவற்றிற்கு உரை நடை எழுதுவார்கள்.
இந்திய தத்துவ இயல் - ஓர் அறிமுகம் ஆசிரியர் தேவி பிரசாத்
அதில் அனைத்தும் சுறுக்கமாக தெளிவாக எழுத்தப்பட்டு இருக்கிறது
நன்றி கண்ணன்ஜி எனக்கு சமஸ்க்ரிதம் தெரியாது. நீங்கள் சொன்ன புத்தகத்தைப் படிக்கிறேன். ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
http://kgjawarlal.wordpress.com
கருத்துரையிடுக