ஆங்கிலப் படங்களில் வரைகலையுடன் அறிவியல் புனைவுகள் விரும்பிப் பார்ப்பவர்களுக்கு அவதார் படம் நல்ல தீனி. 2:30 மணி நேரம் முப்பரிமான காட்சிகள் பார்க்கும் போது காட்சிகளின் ஊடாக பயணிப்பது போன்ற ஓர் உணர்வை இந்தப் படம் தருகிறது. எதோ ஒரு வேற்றுலக வசிப்பிடத்தை அடையும் மனிதர்கள் அங்கு வாழும் மற்றோர் உயிரினத் தொகுதியை அழித்துவிட்டு, இயற்கை வளங்கள் மிகுந்த அந்த இடத்தைக் கைப்பெற்ற முயல்வதாகக் கதை. அப்படி அங்கு சென்ற மனிதர்களில் வேற்றுலக உயிரின அழிப்பில் உடன்படாதவர்கள் வேற்றுலகத்தினரை காப்பாற்றுவதாகக் கதை முடிகிறது.
மனித உடல் விட்டு வேற்றுலத்தினரின் உடலில் நுழைந்து அவர்களின் உலகத்தினருடன் கதை நாயகன் சேர்வதும், அவர்களது சூழலை, இயற்கையிடன் இணைந்து வாழும் வாழ்வியல் முறைகளை உணர்ந்து அவர்களைக் காப்பாற்றுவதானக் காட்சிகளில் அடுத்தது அடுத்து கணிணி வரை கலைகளில் முற்றிலும் மாறுபாட்ட உலகில் மனித கற்பனை விரிந்து இருக்கிறாது. (கற்பனை என்று எதுவும் கிடையாது, நமக்கு தெரிந்தவைகளின் மாறுபட்ட பார்வை, கொஞ்சம் அலங்காரம் இவையே தான் கற்பனை எனப்படும்). மெர்குரிப் பூக்கள் போல் ஒளிரும் தாவரங்கள், பூக்கள், மரங்கள், நடைபாதைகள் இரவு நேரங்களில் ஒளிர்வதும், மாறுபட்ட உயிரின வகைகள் எந்திரத் தனமாக இல்லாமல் உண்மையானவை போன்று இருந்தன.
2:30 மணி நேரம் காட்சிகள் இப்படித் தான் என்பதாக வரைகலை திகட்ட திகட்ட இருப்பதால் எப்போது தான் படம் முடியுமோ என்கிற அயற்சியை ஏற்படுத்தியதை மறுப்பதற்கில்லை. ஏனைய முப்பரிமானப் படங்களை விட இந்தப் படம் கண்டிப்பாக குழந்தைகளை கூடுதலாகவே மகிழ்விக்கும் படம்.
இந்தப் படத்திற்கான உழைப்புகளை பெரிய அளவில் விளம்பரப் படுத்தி இருப்பதால் படத்தில் அந்த எதிர்பார்ப்பை முழுமை செய்யாத வெறுமை ஏற்படுகிறது. எனக்குத் தெரிந்த அயற்சிக்கு காரணம் வேற்றுலகத்தினர்கள் மனித முகத்தை ஒத்திருந்திருந்ததலும், உடல் (வண்ண) நிறங்கள், உயரம் கூடுதலாகவும், வாலுடனும் இருக்கிறார்கள். அவர்களின் முகம் அந்த அளவுக்கு கவர்ச்சியை ஏற்படுத்தவில்லை.
இதுவரை ஆங்கிலப் படங்களில் வேற்றுலகத்தினரை வில்லனாகக் காட்டுவார்கள். இதில் நல்லவர்களாகக் காட்டி இருப்பதால், நல்லவர்களுக்கான முகங்களாக இந்தப் படத்தின் முகங்களை பொறுத்திப் பார்க்க முடியாமல் போனதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதன் காரணமாக அவர்களின் வீரமும் அடிமைகளின் ஆற்றமையில் எழுந்த வீரம் போல் உணரப்படுகிறது. பொதுவாக சமூகம் நல்லவர்கள் என்று அடையாளம் காட்டும் முகத்தின் கட்டமைப்புகளை வைத்துக் கொண்டு தான் பார்க்கிறோம். அதில் இந்தப் படத்தில் காட்டும் வேற்றுலகத்தினரின் முகம் பொருந்திவரவில்லை. படம் பார்த்து வெளியே சென்ற சீனர்களும் படத்தில் மனநிறைவு அடைந்தது போல் தெரியவில்லை. படத்தில் வசனங்களின் நீளம் மிகுதி.
2012 திரைப்படத்தைவிட இந்தப் படத்தில் வரைகலை நுட்பம் சிறப்பாகவே இருக்கிறது. ஆனாலும் அவதார் விளம்பரப் படுத்தப் பட்ட அளவுக்கு ஓடுமா என்பது ஐயமே. விஜயபடமா, அவதாரமா எது விரைவில் திரையரங்குகளை விட்டு வெளியோறும் என்பதை கடுமையான போட்டியாகவே நடத்தலாம்.
படத்திற்கான இலவச நுழைவுச் சீட்டு : முகவை இராம்
படம் பார்க்க கூடவே வந்த மற்ற அவதாரங்கள் : ஜோசப் பால்ராஜ், ஆமத்தூர் ஜெகதீசன் மற்றும் விஜய் ஆனந்த்
விஜய் ஆனந்த் மற்றும் ஜோசப் பால்ராஜ் (இரு அவதாரங்கள்)
*********
அவதாரம் என்பதற்கு தனித் தமிழ் சொல் தோற்றரவு
அவதார் படம் பற்றிய சிறப்பான விமர்சனங்களுக்கு கேபிள் சங்கர் மற்றும் ஹாலிவுட் பாலா ஆகியோரின் பதிவுகளை பரிந்துரைக்கிறேன்.
13 கருத்துகள்:
இந்த போட்டோ தேவையா ? பயமா இருக்கு :)- தூக்கம் வருமான்னு தெரியல !
மணிகண்டனுக்குத் தூக்கம் வர்ற மாதிரி ஒரு படம் அல்லது தாலாட்டு பார்சல்...:-))
//ஏனைய முப்பரிமானப் படங்களை விட இந்தப் படம் கண்டிப்பாக குழந்தைகளை கூடுதலாகவே மகிழ்விக்கும் படம்//
குழந்தைகள்? படம் PG13 சார்!
அந்த அவதார் காட்டிலும், இந்த அவதாரங்கள் (அனுமன் ஜயந்தி ஞாபகம் வந்தது :) ) அருமை.
இந்த புகைப்படத்தை பார்த்திருந்தால் ஜேம்ஸ் கமரூன் கிராஃபிக்ஸ் செஞ்சிருக்க மாட்டார். அப்படியே கொண்டுபோயி நடிக்க வச்சுருப்பார் :)
நன்றி தலைவரே.. நம்மளை பரிந்துரைத்ததற்கு..
/குழந்தைகள்? படம் PG13 சார்//
மணிவண்ணன். நம்ம குழந்தைங்க பாக்குற யு சர்டிபிகேட் தமிழ் படஙக்ளை விட இதில் ஒன்றுமே இல்லை எனலாம்
அண்ணே ! கண்ணாடியெல்லாம் போட்டு ஜம்முன்னு இருக்கீங்களே !
படம் கண்டிப்பாக வெற்றியாகும் .. அப்ப வேட்டைக்காரன் ?? ...
//இந்த புகைப்படத்தை பார்த்திருந்தால் ஜேம்ஸ் கமரூன் கிராஃபிக்ஸ் செஞ்சிருக்க மாட்டார். அப்படியே கொண்டுபோயி நடிக்க வச்சுருப்பார்//
LOL...
என் விமர்சனம்...
http://jeeno.blogspot.com/2009/12/v-t-r.html
வேட்டைகாரனுக்கு போட்டியா?!?!?
ஸ்வாமி ஓம்கார் said...
அந்த அவதார் காட்டிலும், இந்த அவதாரங்கள் (அனுமன் ஜயந்தி ஞாபகம் வந்தது :) ) அருமை.
இந்த புகைப்படத்தை பார்த்திருந்தால் ஜேம்ஸ் கமரூன் கிராஃபிக்ஸ் செஞ்சிருக்க மாட்டார். அப்படியே கொண்டுபோயி நடிக்க வச்சுருப்பார் :)/
////
ஹ ஹா
உங்க அவதாரம்தான் ரொம்ப அருமை.
நன்றி கண்ணன்! :) :)
http://mapleilai.wordpress.com/ மிகவும் நன்று …. எனது பக்கத்தில் அவதார் திரைப்படம் பற்றி எழுதி உள்ளேன். பார்த்து பயனுறவும். கருத்துக்களை இடவும்
கருத்துரையிடுக