பின்பற்றுபவர்கள்

9 டிசம்பர், 2009

ஆன்மிகம் மிகைப்படுத்துதல், தூற்றுதல் !

"தெய்வமே நீங்க எங்கேயோ போய்டிங்க" என்று சொல்லும் போது அந்த வரியில் இருக்கும் மிகைப்படுத்துதல் ஒருவரின் செயலை கடவுளுக்கு ஒப்பாக குறிப்பிடுவது என்பதாகிறது. இது மிகச் சாதாரணமான பயன்பாடுதான்.

மதம், கடவுள் சித்தாந்தங்களில் இந்த மிகைப்படுத்துதல் புனிதம் அல்லது பக்தி என்னும் ஏனைய பெயர்களில் செய்யப்படுகிறது. மதத்திற்கு அறிவியல் சாயம் பூசுகிறவர்கள் இதை மிகுதியாகவே செய்கிறார்கள். முழுக்காலத்திற்கும், முழு மனித குலத்திற்கும் மாறாத உண்மைகளை எங்கள் மதம் கொண்டிருக்கிறது, கண்டிருக்கிறது என்பவை மிகைப்படுத்துதல் தான். இறைவன் மனிதர்களை நோக்கி நீங்கள் என் புகழை மிகைப்படுத்திப் பேசுங்கள் என்று எந்த மதத்திலும் கூறியது போல் தெரியவில்லை. மத நம்பிக்கையாளர்கள் அதை வலிந்து செய்யும் போது அவை பிறரால் விமர்சனம் செய்யப்படுகிறது. கடவுள் பற்றி கேள்வி கேட்பவர்கள் தவறு செய்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் மதங்கள் மற்றும் வேதங்கள் குறித்து தேவைக்கு மிகுதியாக கட்டமைக்கப்படுவது குற்றம் இல்லையா ? இட்டுக்கட்டும் உருவகங்கள், உருவங்கள் (சிலை வணக்கங்கள்) அனைத்தும் ஒன்றே, ஒன்று சொற்களால், மற்றது வடிவத்தால்.

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று மிகைப்படுத்தும் போது, சாணியில் இருப்பானா ? என்று கேட்பது அபத்தமான கேள்வியாகுமா ? சர்கரை என்கிற ஒரு பொருள் இருக்கிறது, அதை புகழ்ந்து பேச அதனுடன் சந்தனத்தை கலந்து வைத்தால் சர்க்கரையின் தனித் தன்மை என்பது அழிக்கப்பட்டுவிடும், அதை சானியில் கலந்து பேசுபவர்களின் செயல்மட்டும் தரம்தாழ்ந்தாகுமா ? சர்கரை எதனுடன் கலந்தாலும் சர்கரைக்கு தன்மை இழப்பு தான்.

இயல்புக்கு மாறாக ஒன்றை திரித்து திரித்து பெருமைபட பொருள் கூறுவதும் அதைத் தூற்றிப் பொருள் கூறுவது ஒன்றே. மதங்களின் கொள்கைகள் விமர்சனம் ஆகுவது அவை தேவைக்கு மிகுதியாக இட்டுக் கட்டிப் பொருள் கொள்வதினாலும் பொருள் கூறப்படுவதாலும் ஏற்படும் ஒவ்வாமையின் பக்க விளைவுகளே. மதம் சிறந்ததாக இருந்தால் பின்பற்றலாம், ஆனால் அறிவுறுத்தல் கொடுமையானது.

பொருள் முதல்வாதம் என்னும் பயன்பாடு ரீதியில் வளர்ந்தது அறிவியல், இன்றைக்கு அறிவியல் உண்மைகள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சிந்திக்காமல் மனிதன் இருந்திருந்தால் அறிவியல் வளர்ந்திருக்காது. கருத்து முதல்வாதம் எனும் ஆன்மிக/மதவியாக்கானங்கள் அறிவியலை எதிர்த்தே வந்திருப்பது வரலாறு. ஏனெனிறால் ஆன்மிகம், மதம் இவை யாவும் விதியை நம்புபவை, விதிக்கு மீறியது அல்லது இறைவன் விட்ட வழிக்கு மாற்று கிடையாது என்கிற சித்தாந்தம் கொண்டவை. இவ்வுலக வாழ்க்கை என்பதே மறுவுலக வாழ்க்கைக்கான தேர்வு (பரிட்சை) என்று உலக வாழ்கைக்கு தற்காலிகமானது என்ற நம்பிக்கைக் கொண்டவை. ஆன்மிக, மதக் கருத்துக்களை புறம்தள்ளிவிட்டு, தனிமனிதனுக்கு வேண்டுமானால் இவை நிரந்தமற்றவையாக இருக்கலாம், ஆனால் மனித குலம் என்பது தொடர்ந்து இருப்பதே என்று கூறி சிந்தனையால் வளர்ந்தவையே அறிவியல், அதற்கு ஊட்டமளித்தது பொருள் முதல்வாதம். அதாவது அறிவியல் என்பது பொருள் முதல்வாதத்தின் குழந்தை, அதை பொருள் முதல்வாதம் என்றுமே வளர்த்துக் கொண்டிருக்கும். ஆனால் இந்த அறிவியலுக்கு மதவாதிகள் சொந்தம் கொண்டாடுவதும், அறிவியலை மதத்துடன் ஒட்டவைப்பதும் எந்தவிதத்திலும் ஞாயமே இல்லை.

மிகைப்படுத்தப்படும் ஆன்மிகம் அல்லது மதவாதம், மத நூல்கள் அனைத்துமே நாத்திக கருத்துகளை அதாவது இறைச் செயல் என்பதை மறுக்கும் அறிவியலை நோக்கி நகர்வது விந்தையாக இருக்கிறது. அறிவியல் இதுவரை 'இறை' என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மதம், ஆன்மிகம், இறைவன் இவற்றை மிகைப்படுத்தும் உரிமையை அவரவர் எடுத்துக் கொள்வதும் சரியா ?

மதங்கள், வேத நூல்கள், இறைவன் குறித்து இட்டுக்கட்டி மிகைப்படுத்துவதும், அதை நாத்திக வாதமாக தூற்றுவதும் ஒன்றே !

14 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

//இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று மிகைப்படுத்தும் போது, சாணியில் இருப்பானா ? என்று கேட்பது அபத்தமான கேள்வியாகுமா ?//

ஐ லைக் யூ!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

அருமையான இடுகை

சர்க்கரை சந்தனத்திலோ சாணியிலோ எதில் கலந்தாலும் தனித்தன்மை இழந்து விடும் - உண்மை உண்மை

நல்ல சிந்தனை

நல்வாழ்த்துகள்

Unknown சொன்னது…

இருப்பான்--நம்பிக்கையின் பதில்

இருப்பானா--கேள்வி அவநம்பிக்கை

ஆன்மீகம் என்பது மீகைப்படுத்துதல்

கதம்பச்சொறு மாதிரி,பசியாய் இருப்பதால் சுவை பார்ப்பதில்லை

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

இறைவன் மிகப்பெரியவன்..!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...

இறைவன் மிகப்பெரியவன்..!//

ஏன் மிக மிகப் பெரியவனாக இருக்கக் கூடாது ?
:)

வால்பையன் சொன்னது…

//இறைவன் மிகப்பெரியவன்..! //

அதனால சாணியில இருக்க முடியாதுங்கிறிங்களா?

சாணியில புழுவே இருக்கு இறைவன் இருக்க முடியாதா?

வேடிக்கை மனிதன் சொன்னது…

தெய்வமே நீங்க எங்கேயோ போய்டிங்க

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

பலசரக்குக் கடையில் உள்ள தராசு சாமான்களை எடைபோட மட்டுமே உதவும்! அவைகளின் தரத்தை அறியத் தராசினால் முடியாது!

அதுபோலவே, அறிவியல்,தான் எடுத்துக் கொண்ட விஷயங்களை மட்டுமே, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட அலகுகளில் ஆராய்கிறது. அதில் தெரியவராத ஒன்பை ஏற்றுக் கொள்வதில்லை என்பதில் வியப்பு ஒன்றுமில்லை!

விஷயத்தைவிட்டு விட்டு நீங்க தான் எங்கேயோ போயிடறீங்க!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல சிந்தனை. மதங்கள் ஆரம்பித்தது எல்லாம் மக்களை நல்வழிப்படுத்தவே.

ஆனால் அதை வைத்து பிரச்சனை செய்பவர்கள்தான் பெறுகிவிட்டனர். அனைவரையும் இறைவன் தான் படைத்தான் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருந்தால் என் இறைவன் உன் இறைவன் என்று சொந்தம் கொண்டாட வேண்டிய அவசியமில்லை என்பது புரிந்திருக்கும்.

நிச்சயமாக நாம் தேடவேண்டியது இறைவனை அல்ல மனிதத்தை.(இருப்பதை போய் யாராவது தேடுவார்களா)

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார்


இறைவன் மிகப்பெரியவன்..!
//

என்ன ஒரு ஒரு கி.மீ உயரம் இருப்பானா ? -:)))

தருமி சொன்னது…

//அனைவரையும் இறைவன் தான் படைத்தான் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருந்தால் என் இறைவன் உன் இறைவன் என்று சொந்தம் கொண்டாட வேண்டிய அவசியமில்லை என்பது புரிந்திருக்கும்.//

அசத்தீட்டிங்க அக்பர்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நன்று கோவியாரே!

முகவை மைந்தன் சொன்னது…

நல்ல இடுகை. அப்படியே தமிழ் மணம் பரிந்துரைக்கும் அனுப்பிற வேண்டியதுதானே!

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி


பலசரக்குக் கடையில் உள்ள தராசு சாமான்களை எடைபோட மட்டுமே உதவும்! அவைகளின் தரத்தை அறியத் தராசினால் முடியாது!

அதுபோலவே, அறிவியல்,தான் எடுத்துக் கொண்ட விஷயங்களை மட்டுமே, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட அலகுகளில் ஆராய்கிறது. //

சரி

//அதில் தெரியவராத ஒன்பை ஏற்றுக் கொள்வதில்லை என்பதில் வியப்பு ஒன்றுமில்லை!

விஷயத்தைவிட்டு விட்டு நீங்க தான் எங்கேயோ போயிடறீங்க!//

புலன்களுடன் தொடர்புடையது அறிவியல் அல்லது புலன்களின் நீட்சி அதை ஏன் ஆன்மிகத்துடன் ஒட்டவைக்கனும் ? அதைத்தான் நான் மிகைப்படுத்தல் என்று கூறுகிறேன். புலன்களை அடக்கினால் அல்லது அடங்கினால் அல்லது அதற்கும் அப்பாற்பட்டது தானே ஆன்மிகம், புலன் தொடர்பில் வரும் அறிவியலுடன் ஆன்மிகம் எப்படி ஒப்பிட முடியும் ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்