பின்பற்றுபவர்கள்

27 மார்ச், 2008

அழகு அழகு அழகு !

இன்று காலை சிங்கை வானொலியில் அழகு சிகிச்சை செய்து கொள்வது பற்றிய 'வெளிச்சம்' நிகழ்ச்சி பலதரவுகளுடன் வாசிக்கப்பட்டது. அதை ஒட்டிய சில எண்ணங்களை எழுதுகிறேன்.

"அழகு என்பது தோற்றம் குறித்ததென்றால் அன்னை தெரசா உலக அழகியும் இல்லை, மகாத்மா ஆணழகனும் இல்லை" என்று அழுத்தமான கருத்தை அறிவிப்பாளர் பொன்.மகாலிங்கம் அவர்களின் மென்மையான குரல் வழி கேட்க முடிந்தது.

100 விழுக்காடு உண்மைதான். அழகு தோற்றம் குறித்தது அல்ல, ஆனால் தோற்றத்தின் வழி அப்படி ஒன்றை பார்பவர்கள் மனதில் ஏற்படுத்திவிட முடியும் என்பதால் தானே அழகு சாதனபொருள்கள் சந்தையில் பரவிக்கிடக்கின்றன. தன்னைப் பற்றிய நல்லெண்ணம் வரவேண்டும் என்பதைவிட தான் மிடுக்கானவன்(ள்) என்று காட்டுவதையே பெரும அளவில் பெண்களும், அதற்கு கொஞ்சம் குறைவாக ஆண்களும் நினைக்கிறார்கள். நல்ல நேர்த்தியான உடை உடுத்துபவரைப் பார்க்கும் போது இவர் எல்லாவற்றையும் சரியாக செய்பவர் என்ற எண்ணம் வரும். அப்படி இல்லாதவர்கள் பொறுப்பற்றவர்கள் என்ற எண்ணமும் இயல்புதான். அதன் பிறகு ஆடம்பர உடை மற்றும் அணிகலன்களை வைத்து அவர் எவ்வளவு ஆடம்பர விரும்பி என்பதை அது காட்டும். ஆடம்பர உடை அணிவதில் ஒருசிலர் அவர்களுக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பைப் பொருத்து அணிவார்கள். இந்த தகுதி உள்ளவர் இதை அணிவது தான் அவருடைய மதிப்பை அப்படியே வைத்திருக்கும் என்ற வெளிப்படையான காரணங்களினாலேயே அரசர், உயர்பதவியில் உள்ளவர்களுக்கென்றே தனிப்பட்ட (பிரத்தியோக) ஆடைகள் இருக்கும்.

தற்பொழுது அலுவலகங்களில் சாதாரண உடைகள் (கேசுவல் டிரஸ்) அணியும் பழக்கம் சாதாரணமாகிவிட்டது. எந்த உடையாக இருந்தாலும் அவை நேர்த்தியாக இருக்க வேண்டும். அப்படி அணிபவர்க்கள் தாம் பொறுப்பானவர் என்று சொல்லிக் கொள்ளத் தேவை இல்லை. அதற்காக தலையை கலைந்தது கூட கவனிக்காமல் இருப்பவர்களெல்லாம் பொறுப்பற்றவர் என்று சொல்லிவிட முடியாது. மற்றதில், வேலையில் அவர்கள் பொறுப்பானவர்கள் ஆனால் தன்னைப் பற்றி கூடுதல் கவனம் கொள்ளாதவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அணியும் உடைபற்றிய என் எண்ணம் இதுதான்.

உடல் தோற்றம் அழகா ? யாரும் தான் இப்படி தான் வடிவமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று வடிவமைத்துக் கொண்டு பிறப்பதில்லை, அதில் பெற்றோர்களின் பங்கு ஜீன்களை தம் தலையில் சுமத்தியது மட்டுமே, 'ஏம்மா, என்னை கருப்பா பெத்தே ?' என்ற வசனம் நகைச்சுவைக்கு என்றாலும் கருப்பாக இருக்கிறோம் என்ற தாழ்வுணர்வு எல்லோருக்கும் இருக்கிறது. கருப்பு நிறமாக இருப்பவர் உயர்வதற்கு கருப்பு நிறம் தடையாக இல்லை என்பதை ரஜினி போன்றவர்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பின்பு ஏன் கருப்பு நிறம் குறித்து இவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்று தெரிவதே இல்லை.

நான் இந்தியன் என்பதால் எனது நிறத்தை கேலி செய்யும் சீனர்கள் இருக்கிறார்கள், ஆனால் 'ஜோக்கு' என்று சொல்லிவிட்டே கூடும் அறைகளில் (மீட்டிங் ரூம்) வெளிச்சம் குறைவாக இருக்கும் போது 'i cannot see your face' என்று சொல்ல பலரும் கலகலவென சிரிப்பார்கள். நான் அலட்டிக் கொள்வது இல்லை. பதிலுக்கு அவர்களின் சப்பை மூக்கைப் பற்றி கமெண்ட் அடிக்க தோன்றினாலும் அவர்களே எண்ணிக்கையில் கூடுதல் என்பதால் அங்கு சொல்லாமல் தனியாக அது போன்ற கமெண்ட் அவரும் போது பதிலுக்கு பதில் பேசிவிடுவது உண்டு. எப்படியாவது ஒருவரை குறைச் சொல்ல நிறம் அரசியலுக்கு மட்டுமே பயன்படுகிறது, அவர்களுக்கும் தெரியும் அதே சீனர்களையும், ஜப்பானியர்களையும் 'மஞ்சள்' பிசாசுகள் என்று தான் ஆங்கிலேயர்கள் அழைப்பார்கள்.

ஆக நிறம் என்பது பிறர் ஒருவரை கேலி செய்வதற்கு அரசியல் ரீதியாக பயன்படுகிறது என்பதைத்தவிர அந்த நிறத்தில் பிறந்தவர்களுக்கு எந்த கெடுதலையும் செய்வது இல்லை. வெள்ளைக்காரர்களைவிட ஆப்பிரிக்க இனமே எனக்கு அழகாக தெரிகிறது. பலரும் அதுபோலவே சொல்கிறார்கள். அழகு சிகிச்சை என்ற பெயரில் முகத்தை கூடுதல் சிகப்பாக்க பயன்படும் இராசாயண கலவைகள் தற்காலிக பலன் தரும், குறிப்பாக பயன்படுத்தும்
வரை தான் பலன் தரும், எங்கள் ஊரில் தெரிந்த கடைக்காரர் ஒருவர் பேர் அண்ட் லவ்லி போட்டு முகத்தை பளபளப்பாக வைத்திருந்தார். பின்பு கடையில் லாபம் இல்லை என்பதால் சென்னைக்கு வேறுவேலை செய்யச் சென்றுவிட்டார், குறைந்த வருமானம். அவரை சென்னையில் சந்தித்த போது அவரா இவர் என்று ஒருகனம் திகைத்தேன். அதன் பிறகுதான் தெரிந்தது, அழகு சாதனப் பொருள்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வரைதான் பலன் தரும் என்ற உண்மை.

நண்பர் ஒருவர் உடலில் வெண்தோல் படர்ந்ததும் ஆடிப்போனார். சமூகம் நம்மை கேலியாக பார்க்குமோ என்று குறுகிப்போனார், அதுபோன்று நடந்துவிட்டால் அப்படித்தான் இருப்பார்கள் போல, தனக்கு என்று வந்தால் தெரியும் என்பது போல் தான் கொள்ள முடிகிறது. ஆனால் அவருடன் பழகிய நண்பர்கள் யாரும் அதை பெரிய விசயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. உறவினர்களும் பெரியவிசயமாக கொள்ளவில்லை. பின்பு ஏன் இதுபோன்றவர்கள் மனம் குறுகிக் கொள்ளவேண்டும் ? தோற்றம் குறித்து சமூகம் கட்டிவைத்துள்ள தவறான கட்டுமானமே தான் இவற்றிற்க்கான காரணம். வெளிநாடுகளில் வெள்ளைத்தோல் படர்தவர்களையெல்ல்லாம் யாரும் அன்னியமாக் பார்பது இல்லை. ஒரே ஒரு இடத்தில் அதுபோன்ற ஒருவரைப் பார்த்தேன், அவர் உணவு தயாரிக்கும் சிற்றுண்டி கடையில் உணவு தயாரித்துக் கொண்டிருந்தார். நம் ஊரில் அதுபோன்றவர்களிடம் கைகுலுக்குவதைக் கூட அவரிடம் பழகாதவர்கள் தயக்கம் காட்டுவார்களோ என்று அவரையே எண்ணவைத்து தாழ்வு மனநிலைக்கு தள்ளப்பட்டு வைத்திருக்கிறது இந்திய சமூகம்.

தேவையற்ற கூடுதல் அழகுபடுத்திக் (அலங்காரம்) கொள்ளுவது நம் வெளிப்பகட்டிற்கு தான். இவையாவும் உறவினர்களையோ, நண்பர்களையோ கவராது. நாம் எப்படிப்பட்டவர் என்பது நம்மோடு இருப்பவர்களுக்கு தெரியும். தெரியாதவர்களுக்கு ஒன்றை நாம் வெளிப்பகட்டிற்காக செய்தால் அப்படி செய்து கொள்பவருக்கு அதனால் என்ன நன்மை ?

தானே தேடிக் கெடுத்துக் கொள்ளும் உடல் தோற்றக் கோளாறுகள் அதாவது உடல்நலத்தில் கவனம் கொள்ளாது உண்டுவிட்டு கொழுப்பைக் குறைக்க, ஊசி மூலம் உறிஞ்சும் சிகிச்சைகளில் பலருக்கு மாறாத வடுக்கள் தோன்றுகிறதாம். கொளுப்பைக் குறைக்கும் மாத்திரைகளால் கல்லீரல் பாதிப்படைந்து பலர் மரணமடைந்து பிறகு அம்மாத்திரைகள் தடை செய்யப்பட்டதும் நடந்திருக்கிறது.

அகஅழகைவிட முகஅழகு அல்லது ஒருவரின் தோற்றம் அவ்வளவு முதன்மையானது அல்ல. முகம் காட்டாத உள்ளங்களை நேசிக்க முடியுமா ? இன்றைய இண்டெர்னெட் உலகில் அவை கூறுகளே (சாத்தியம்) பதிவர்கள் பலருக்கும் அந்த அனுபவம் இருக்கலாம்.

16 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

ஒலியின் தரமான நிகழ்ச்சிகளில் இந்த “வெளிச்சம்” க்கு முதல் இடம் தரலாம்.
அழகு தமிழில் நயம்பட உரைப்பார்கள்.
இன்றும் கேட்டேன்.
இன்றைய அவசர கால கதியில் எவ்வளவு பேர் அக அழகை பார்க்கிறார்கள்.
நேர் காணலுக்கு கேசுவல் உடையில் போக முடியாதே!!
நிகழ்ச்சியில் சொன்ன மாதிரி (பாமா) 25 ஆண்டுகாலமாக ஒப்பனை பணி செய்பவர் எந்தவிதமான பிளீச்சிங் முறையையும் செய்வதில்லை என்பது போன்ற உபயோகமான தகவல்கள் கிடைத்தது - எனக்கல்ல.:-)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
ஒலியின் தரமான நிகழ்ச்சிகளில் இந்த “வெளிச்சம்” க்கு முதல் இடம் தரலாம்.


அழகு தமிழில் நயம்பட உரைப்பார்கள்.
இன்றும் கேட்டேன்.
//

மிகச்சரி, பொன்.மகாலிங்கம் அண்ணாமலையில் சிவில் படித்தவர், 38 வயது இருக்கும். நன்றாக பேசுவார், செய்தி வாசிப்பார்.

//இன்றைய அவசர கால கதியில் எவ்வளவு பேர் அக அழகை பார்க்கிறார்கள்.
நேர் காணலுக்கு கேசுவல் உடையில் போக முடியாதே!!//

நான் நேர்காணல் குறித்து சொல்லவில்லை. அலுவலகத்தில் அணியப்படும் உடை குறித்துதான் சொன்னேன். எனது அலுவலகத்தில் டி சட்டை அணிந்து சொல்லலாம்.

//நிகழ்ச்சியில் சொன்ன மாதிரி (பாமா) 25 ஆண்டுகாலமாக ஒப்பனை பணி செய்பவர் எந்தவிதமான பிளீச்சிங் முறையையும் செய்வதில்லை என்பது போன்ற உபயோகமான தகவல்கள் கிடைத்தது - எனக்கல்ல.:-)
//

குமார் அந்த தகவல் ...எனக்கும் அல்ல !
:)

தமிழ் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கோவி.கண்ணன் சொன்னது…

//திகழ்மிளிர் said...
இது தான் பருத்துப்பார்வை என்பது.

/"அழகு என்பது தோற்றம் குறித்ததென்றால் அன்னை தெரசா உலக அழகியும் இல்லை, மகாத்மா ஆணழகனும் இல்லை"/
//

திகழ்மிளிர் ,

பருந்துப்பார்வை என்று இருக்க வேண்டும்.

பருந்துப் பார்வை பற்றி அண்ணா ஒரு கருத்தைச் சொன்னார், அது இங்கே பொருத்தமாக இருக்காது, அதாவது "எவ்வளவுதான் உயரே பரந்தாலும், பருந்தின் பார்வை செத்த எலியைத்தான் தேடுமாம்"

தமிழ் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜெகதீசன் சொன்னது…

நல்ல பதிவு...
:)

இப்படிக்கு,
‍‍பதிவைப் படிக்காமல் பின்னூட்டம் போடுபவன்......
:)))

RATHNESH சொன்னது…

பெங்களூரில் உலக அழகிப்போட்டிக்கு அமிதாப்பச்சன் கார்ப்பொரேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்த போது அகில இந்திய அளவில் நிறைய எதிர்ப்புக்கள் வந்தன. லாலுபிரசாத் யாதவிடம் அவருடைய கட்சியின் மகளிர் அணித் தலைவிகள் "நாமும் ஏதாவது எதிர்ப்பு காட்டிப் போராட்டம் நடத்தலாமா?" என்று கேட்டார்களாம். அவர்களுக்கு லாலு சொன்ன பதில் : "நீங்கல்லாம் அழகா இல்லைங்கற காரணத்துக்காக அழகிப் போட்டியே நடக்கக் கூடாது என்று சொல்வது நியாயமில்லை"

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
பெங்களூரில் உலக அழகிப்போட்டிக்கு அமிதாப்பச்சன் கார்ப்பொரேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்த போது அகில இந்திய அளவில் நிறைய எதிர்ப்புக்கள் வந்தன. லாலுபிரசாத் யாதவிடம் அவருடைய கட்சியின் மகளிர் அணித் தலைவிகள் "நாமும் ஏதாவது எதிர்ப்பு காட்டிப் போராட்டம் நடத்தலாமா?" என்று கேட்டார்களாம். அவர்களுக்கு லாலு சொன்ன பதில் : "நீங்கல்லாம் அழகா இல்லைங்கற காரணத்துக்காக அழகிப் போட்டியே நடக்கக் கூடாது என்று சொல்வது நியாயமில்லை"
//

ரத்னேஷ் அண்ணா,

எதுக்கு இதைச் சொன்னீர்கள் என்று புரியவில்லை. லல்லு கருத்தை ஆமோதிக்கிறீர்களா ?

புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.
:)

மாட்டுத்தீவன ஊழல் என்று கொம்போடு லல்லுவைப் பற்றி போடப்பட்ட தினமலர்கார்டூன்களை லாலு பார்கல.
பார்த்திருந்தால், "மனுசனுக்கு கொம்பு இல்லை என்பதற்காக ஆசையாக கொம்பு போட்டு பார்க்கிறார்கள்" என்று அவர்களை பாராட்டினாலும் பாராட்டி இருப்பார்.

RATHNESH சொன்னது…

அழகு என்கிற விஷயம் குறித்து நீங்க மகாலிங்கம் என்பவருடைய பார்வையைச் சொன்னீங்க, அது உங்க மனசைத் தொட்டதனால். நான் லாலுவின் பார்வையைச் சொன்னேன். கூடவே பாரதிதாசனின் குடும்பவிளக்குப் பாடலும் நினைவு வந்தது தான்.அப்போது எழுதும் முன் வேறு வேலை குறுக்கிட்டது. 'மதியல்ல முகம் அவள்க்கு வறள்நிலம்; குழிகள் கண்கள், சதிராடும் நடையாள் அல்லள் தள்ளாடி விழும் மூதாட்டி, எது எனக்கின்பம் நல்கும்; இருக்கின்றாள் என்பதொன்றே" என்று வரும் அப்பாடல்.

அழகு என்பது OBJECT -ல் இல்லை; பார்வையில் இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
அழகு என்கிற விஷயம் குறித்து நீங்க மகாலிங்கம் என்பவருடைய பார்வையைச் சொன்னீங்க,
அது உங்க மனசைத் தொட்டதனால். நான் லாலுவின் பார்வையைச் சொன்னேன்.//

பொன்.மகாலிங்கம் பற்றி சொன்னது இடுகையின் முதல் இரண்டு பத்திதான். அது இந்த இடுகையை எழுத ஒரு தூண்டுதல்

மற்றதெல்லாம் நானாக எழுதியது. :) கன்ப்யூஸ் இல்லையே ?

// கூடவே பாரதிதாசனின் குடும்பவிளக்குப் பாடலும் நினைவு வந்தது தான்.அப்போது எழுதும் முன் வேறு வேலை குறுக்கிட்டது. 'மதியல்ல முகம் அவள்க்கு வறள்நிலம்; குழிகள் கண்கள், சதிராடும் நடையாள் அல்லள் தள்ளாடி விழும் மூதாட்டி, எது எனக்கின்பம் நல்கும்; இருக்கின்றாள் என்பதொன்றே" என்று வரும் அப்பாடல்.
அழகு என்பது OBJECT -ல் இல்லை; பார்வையில் இருக்கிறது.

//

குழப்பத்துக்கு காரணம், பெண்கள் அலங்காரத்திற்கு பணம் செலவு செய்ய முனுகும் கணவர்களைப் பற்றி முன்பு எழுதி இருந்தீர்கள், அதனால் ஒப்பீடு அளவில் லாலு சொன்னதை ஆமோதிக்கிறீர்களோ என்று நினைத்தேன். வேறொன்றும் இல்லை.

எதைக்கேட்டாலும், எதாவது ஒரு மேற்கோளுடன் உடனே சொல்லிவிடுகிறீர்களே !!!

எதையாவது படிக்கும் போது எனக்கு
அதன் தொடர்புடைய சில விசயங்கள் எப்போதாவது நினைவு வரும்.

உங்கள் நினைவாற்றல் எனக்கு வியப்புதான். எல்லாவற்றையும் மனனம் செய்து வைத்திருக்கிறீர்கள். பாராட்டி இன்னும் நாலுவரி சொல்லலாம்

கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன். :)) ஏனென்றால்

"விரைவிலேயே உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் வண்ணம் நடந்து கொள்கிறேன்" அறிவன் சாருக்கு நீங்கள் சொன்ன பதிலும் ஞாபகம் வருது.

//அழகு என்பது OBJECT -ல் இல்லை; பார்வையில் இருக்கிறது. // - இங்கே பார்வை என்பதும் கண்பார்வை இல்லையே ?
:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//'ஜோக்கு' என்று சொல்லிவிட்டே கூடும் அறைகளில் (மீட்டிங் ரூம்) வெளிச்சம் குறைவாக இருக்கும் போது 'i cannot see your face' என்று சொல்ல பலரும் கலகலவென சிரிப்பார்கள். நான் அலட்டிக் கொள்வது இல்லை. பதிலுக்கு அவர்களின் சப்பை மூக்கைப் பற்றி கமெண்ட் அடிக்க தோன்றினாலும் அவர்களே எண்ணிக்கையில் கூடுதல் என்பதால் அங்கு சொல்லாமல் தனியாக அது போன்ற கமெண்ட் அவரும் போது பதிலுக்கு பதில் பேசிவிடுவது உண்டு. எப்படியாவது ஒருவரை குறைச் சொல்ல நிறம் அரசியலுக்கு மட்டுமே பயன்படுகிறது, அவர்களுக்கும் தெரியும் அதே சீனர்களையும், ஜப்பானியர்களையும் 'மஞ்சள்' பிசாசுகள் என்று தான் ஆங்கிலேயர்கள் அழைப்பார்கள்.//

சிங்கையில் எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் தான் அழகு என்று நினைத்துக் கொள்கிறார்கள்.(நான் அப்படி நினைக்கவில்லை) நான் அவர்களின் அளவு என்று நினைக்கிறேன்.

நம்மாள்(சிலர் மட்டும்)
எப்படி Act குடுக்கிறான்னு(இரு பாலருக்கும் பொருந்தும்) இப்படி எழுதினேன்.


தன்னை மறைத்துக்கொண்ட நிர்வாணம்!


வெள்ளையைப் பார்த்து
வெளிரிப் போனது
தன் நிறம் மறந்து

மஞ்சளைப் பார்த்து
மறைத்துக் கொண்டது -தன்
மகிமையை

கறுப்பைப் பார்த்து
கவிழ்ந்து விட்டது
கடைச் சரக்காகி

சாயம் வெளுத்துக்கொண்டு
மகிழ்ந்திருந்தது
தன்னையே மாற்றிக் கொண்டு
சமூகப் பண்பாடு மறந்த
மாந்தளிர்...!

அன்புடன்,
ஜோதிபாரதி.

நையாண்டி நைனா சொன்னது…

அட, அட, அட...... என்னம்மா வெலக்கம் கொடுத்திருக்காக,
இதெல்லாம் படிச்சிப்புட்டு,
கண்ணேறைஞ்ச பொன்னு மக்கா....
இந்த மாமனை வெலக்காம,
ஒரு லவ் லெட்டர் போடுங்கடீ........

sury siva சொன்னது…

//"அழகு என்பது தோற்றம் குறித்ததென்றால் அன்னை தெரசா உலக அழகியும் இல்லை, மகாத்மா ஆணழகனும் இல்லை"//

அழகு என்பதற்கு என்ன பொருள் ?
இந்தச் சொல்லுக்கு பலர் பலவிதமாகப் பொருள் சொல்லுகிறார் என்பதைக்காட்டிலும்,
ஒருவரே, தனது வாழ் நாளில் பல்வேறு கால கட்டங்களில, பன்விதமாக இச்சொல்லின்
பொருளினை உணர்கிறார் என்றே நினைக்கிறேன்.
அழகு என்பது முக அழகா ! இல்லை தோல் அழகா ? கருப்பா சிவப்பா ?
அழகு என்பது அணியும் நகைகளைப் பொறுத்ததா ? இல்லை, உடைகளைப் பொறுத்ததா ?

இவை எல்லாம் இல்லை எனச் சொல்லப்போகும் நேரத்தில் இவைக்கெல்லாம் அப்பாற்பட்ட‌ ஒன்று,
என்றைக்கும் உள்ள அழகு தென்படும்போது உண்மையில் அழகின் பொருள் புரிகிறது.

ஆங்கிலத்தில் சொல்லப்போனால்,
beauty is not confined to one's physique. Beauty is that speaks of one's total personality,
the image that one seeks to build of oneself. It pervades qualities like empathy, hospitality,
magnanimity, grace, a perception of Truth and equally a Divine nature which seeks to forget and forgive.

இதனால் தான் நாம் அன்னை தெரஸாவில் அழகை மானுட நேயமாக‌க் காண்கிறோம். காந்தியின் கண்களிலே
கனிவைக் காண்கிறோம். பாபாவின் முகத்திலே ஒரு புனிதத்தைக் காண்கிறோம்.

இன்னும் ஒரு சின்ன உதாரணம். சிவன் கோவிலோ அல்லது பெருமாள் கோவிலோ அல்லது
மாரியம்மன் கோவிலோ...
அம்மன் அல்லது தாயார் சன்னதி முன் நின்று அம்பாளின் ஜ்வலிக்கும் பேரழகைக்க் கண்டு, பிரமித்து நிற்கிறோம்.

அது என்ன ? ஆண்டவனுக்கு உரித்தான அன்புப் புன்னைகை அவள் அதரங்களிலே.. எல்லோருக்கும் அருள் பாலிக்கும் கடாக்ஷம். உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன், ஏனைய எந்த வித்தியாசமும் இல்லாது
ஒரே கருத்தாக அந்தக் கண்கள் அன்பின் ஒளிதனை அள்ளி வீசுகின்றனவே !
அந்த அன்பு தான் அழகு.
அந்த அன்புள்ளம் கொண்டோர் யாவருமே அழகர் தான்.
இன்னும் கேளீர்.

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல... நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.

உங்கள் பொறுமையைச் சோதித்து விட்டேனோ ?

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.com



//

sury siva சொன்னது…

//
பருந்துப்பார்வை என்று இருக்க வேண்டும்.

பருந்துப் பார்வை பற்றி அண்ணா ஒரு கருத்தைச் சொன்னார், அது இங்கே பொருத்தமாக இருக்காது, அதாவது "எவ்வளவுதான் உயரே பரந்தாலும், பருந்தின் பார்வை செத்த எலியைத்தான் தேடுமாம்//

எத்தனை இடையூறுகளிடையும் தன் இலக்கை மனத்தில் நிறுத்தி அதையே தன் மனக்கண் கொண்டு
பார்த்துக் கொண்டே இருப்பவனை த்தான் பருந்துப் பார்வை படைத்தவன் .One with lots of die-hard concentration and adherence to goal undeterred by distractions.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.com

கோவி.கண்ணன் சொன்னது…

//எத்தனை இடையூறுகளிடையும் தன் இலக்கை மனத்தில் நிறுத்தி அதையே தன் மனக்கண் கொண்டு
பார்த்துக் கொண்டே இருப்பவனை த்தான் பருந்துப் பார்வை படைத்தவன் .One with lots of die-hard concentration and adherence to goal undeterred by distractions.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.com//

சுப்பு ரத்தினம் ஐயா,

இன்றுதான் உங்கள் பதிவை பார்த்தேன், ஆன்மிகம் இலக்கியம் ஆகியவற்றில் உங்கள் ஈடுபாடு சிலிர்க்க வைக்கிறது.

உங்கள் பதிவை தமிழ்மண திரட்டியில் இணைத்தால் பலரும் படித்து மகிழ்ந்து பாராட்டுவார்கள்.

sury siva சொன்னது…

அழகு என்ன என ஒரு அழுத்தமான கேள்விக்கணை தொடுத்த
தங்களுக்கு தருகிறார்கள் ஒரு பூச்செண்டு
http://arthamullavalaipathivugal.blogspot.com
Beauty is Truth and Truth Beauty,

That is all ye know on earth and
All we need to know
என்பான் கீட்ஸ்.
சத்யம் சிவம் சுந்தரம்.
அனித்யம் ஒன்றே அழகு. அந்த வகையில்
அன்னை தெரஸா அழகோ அழகு !!
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்