பின்பற்றுபவர்கள்

22 ஜூலை, 2007

தமிழுக்கு மா(ற்)றுகண் தேவையா ?

எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும். - கொன்றை வேந்தன்

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்.
கண்என்ப வாழும் யிர்க்கு. - திருக்குறள்

என்றெல்லாம் நம் தமிழ்கவிகள் இரு கண்களை நன்றாக எழுதி வைத்திருக்கும் போது வடமொழி அறிந்த ஒரு தமிழறிஞர்... தாம் அறிந்த ஒரு மொழியை போற்றவேண்டும் என்ற உணர்சிப்பெருக்கால் 'வடமொழியும், தென் தமிழும் நம் இருகண்கள்' என்று சொல்லிய ஒன்றை பொதுவாக எல்லோருக்கும் குறிப்பாக தமிழருக்கு அறிவுரையாக சொல்கிறார் என்று தப்பாக முடிவு செய்து கொண்டு போற்றித்தான் ஆகவேண்டுமா ?

'எண்ணும் எழுத்தும்' ஆகிய இருகண்களும் ஒளி பொருந்திய குன்றா விளக்காக தமிழுக்கு இருக்கும் பொழுது இரவல் கண் நமக்கெதற்கு ? நம் கண்கள் புறையோடிப் போனால் ஒருவேளை சரிசெய்ய முயலலாம். அப்படியும் இல்லை என்றால் இரவல் கண்ணை பொருத்திக் கொள்ளலாம். இருக்கும் நல்ல கண்களில் ஒன்றை பிடிங்கி எறிந்துவிட்டு இரவல் கண்ணை வாங்கி வைத்துக் கொண்டு அதை புகழ்வதால் நம் நல்ல கண்ணுக்கு என்ன பெருமை ?

'உனது கண் கண்னே அல்ல அது கொள்ளி வாய் பிசாசின் கண்' என்ற பொருளில் தமிழ் ஒரு 'சூத்திர பாசை' என்று குதர்கமாகவும் பழித்தும் கூறும் ஒரு மொழியை கண்ணாக நினைக்கிறேன் என்று எவரும் சொன்னால் அது அவரது தமிழ் மொழிப் பற்றை கேலியாக நினைக்காமல் வேறு எதும் நினைக்க முடியவில்லை.

தமது பெற்றோருக்கு முதலில் சோறு போடுவோம், பிறகு மாற்றான் பெற்றோர் கவனிப்பார் இன்றி இருந்தால் அப்போது மட்டுமே தமிழருக்கு இருக்கும் பரிதாப உணர்வினால் காப்பாற்ற முனைவோம்.

சூத்திர பாசை என்பதை மற்ற திராவிட மொழிகளுக்கு இவர்களால் சொல்லவே முடியாது அங்கெல்லம் சென்று தம் வடமொழியில் இருந்தே அவைகள் பிறந்ததாக சொல்லுவர். அவர்களும் தேவபாசையின் குழந்தையான நம் மொழியும் தேவ பாசை என்றே நினைத்துக் கொண்டு தேவ பாசையை போற்றுகின்றனர். வாட்டாள் நாகராஜிடம் சென்று கன்னடம் ஒரு சூத்திர பாசை என்று இவர்கள் சொல்லட்டுமே ? இரு கண்களில் ஒன்று பிடுங்கப்படுமா ? இல்லையா ? என்று அப்போது தெரியும்.

நடுநிலைமை என்ற பெயரில் நமது தமிழை விட்டுக் கொடுக்கும் போர்வையில் 'வடமொழியும். தென் தமிழும் என் இருகண்கள்' எனப்படுபவை வரட்டு வேதாதந்தங்களே. நாம் இரு கைகளை நீட்டினாலும் அவர்கள் பதிலுக்கு காலை தூக்கி உதைக்கவே செய்வர். இதுவே நடந்தேறி வருகிறது. எனவே வரட்டு வேதாந்தகளை புறக்கணித்து அல்லது துறந்து நம் தமிழ்தாய் மொழி செழிக்க. எண்ணும் எழுத்துமான நம் இருகண்களை போற்றி ஏற்றம் பெறுவோம்

எந்த மொழியின் துணையின்றி தனித்தியங்கும் செம்மொழியான நம்மொழிக்கு 'மா(ற்)று' கண் எதற்கு ?

வரட்டு வேதாந்திகளையும் அவர்களின் தப்பான வாதங்களையும் புறக்கணிப்போம்.


பின்குறிப்பு : இந்த இடுகை, ஞான வெட்டியான் ஐயா எழுதிய பூந்தியா ? இலட்டா ? என்ற இடுகைக்குப் போடப்பட்ட பின்னூட்டத்தின் நீட்சி.

20 கருத்துகள்:

bala சொன்னது…

//தமிழுக்கு மாறுகண் தேவையா//

ஜிகே அய்யா,

தேவையே இல்லை,ஆனா மூளை தேவை;திராவிட தமிழனுக்கு.அது கொஞ்சம் மிஸ்ஸிங் கமாடிடி தமிழகத்தில்.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜிகே அய்யா,

தேவையே இல்லை,ஆனா மூளை தேவை;திராவிட தமிழனுக்கு.அது கொஞ்சம் மிஸ்ஸிங் கமாடிடி தமிழகத்தில்.

பாலா //

ஆமாம். மூளை இருந்திருந்தால் 'ஒண்டவந்த பிடாறிகளை' கோபுரம் ஏற அனுமதித்திருக்க மாட்டார்கள்...சரியாக சொன்னிங்க பாலா...பாராட்டுகள்

கோவி.கண்ணன் சொன்னது…

பாலா,

உம் திசை திருப்பிய பின்னூட்டம் ரிஜெக்ட் செய்யப்பட்டது.

G.Ragavan சொன்னது…

கண்டிப்பாகத் தேவையில்லை. வடமொழியும் ஒரு கண் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. என்னதான் ஆங்கிலத்திலேயே படித்து வேலையைப் பார்த்தாலும் சம்பாதித்தாலும் ஆங்கிலம் இன்றியமையாத மொழியாக இருந்தாலும் இரண்டாவது கண் என்று ஒப்புக்கொள்ள முடியாத பொழுது, வடமொழியை அப்படி ஒப்புக்கொள்ள முடியாது.

G.Ragavan சொன்னது…

கண்டிப்பாகத் தேவையில்லை. வடமொழியும் ஒரு கண் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. என்னதான் ஆங்கிலத்திலேயே படித்து வேலையைப் பார்த்தாலும் சம்பாதித்தாலும் ஆங்கிலம் இன்றியமையாத மொழியாக இருந்தாலும் இரண்டாவது கண் என்று ஒப்புக்கொள்ள முடியாத பொழுது, வடமொழியை அப்படி ஒப்புக்கொள்ள முடியாது.

ILA (a) இளா சொன்னது…

//கண்டிப்பாகத் தேவையில்லை. வடமொழியும் ஒரு கண் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது//
கண்,அது தமிழ்தான். அடிச்சா அம்மான்னு கத்த வரும். மா'ன்னோ. மம்மின்னோ கத்த மாட்டோம். உதட்டளவுக்கு வேணுமின்னா சம்ஸ்கிருதம் இருந்துட்டு போகட்டும்

குமரன் (Kumaran) சொன்னது…

திரு. கோவி.கண்ணன். ஒரு சிறு விளக்கத்தை மட்டும் கூறிக் கொள்ள விழைகிறேன். ஞானவெட்டியான் ஐயாவின் இடுகையிலோ அந்த இடுகையை எடுத்துச் சொன்ன என் இடுகையிலோ 'தமிழும் வடமொழியும் இருகண்கள்' என்ற கருத்து சொல்லப்படவில்லை. இராகவன் என் இடுகையில் வந்து அந்தக் கருத்தைச் சொல்லி அதனை மறுத்தார். அதற்குப் பின் வந்த அனானிப் பின்னூட்டங்கள் அந்தப் பொருளைப் பற்றி பேசின. அதன் பின் அது இராகவனுக்கும் அனானிக்குமான பேச்சு வார்த்தையாகவே இருந்தது. வடமொழி அறிந்த தமிழறிஞர் என்று நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. ஞானவெட்டியான் ஐயாவின் இடுகைக்கான பின்னூட்டங்களின் தொடர்புடைய இடுகை இது என்றதால் இந்த விளக்கம் சொன்னேன். ஞான வெட்டியான் ஐயாவோ நானோ இந்த 'பூந்தியா? லட்டா?' இடுகையில் இதனைப் பேசவில்லை.

எந்தத் தமிழறிஞரைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்று அறிய விரும்புகிறேன். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மனோன்மனீயம் ஆசிரியர் வரிகளைக் கீழே தருகிறேன். அவரும் தமிழர்களுக்கு தமிழும் வடமொழியும் இருகண்கள் என்று சொல்லவில்லை. கலைமகளுக்குத் தான் தமிழும் வடமொழியும் இருகண்கள் என்று சொல்லித் வடமொழியை விடத் தமிழுக்கு இருக்கும் ஏற்றத்தைப் போற்றுகிறார்.

***

வடமொழி தென்மொழி எனவே வந்த இரு விழி அவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கு மேற்கு உணராரே.

கலைமகளுக்கு வடமொழியான ஆரியமும் தென்மொழியான தமிழும் இரு விழிகள். அவற்றிற்கு இடையே கொடிய வழக்கு (சண்டை சச்சரவு) தொடர்பவர்கள் கிழக்கு மேற்கு அறியாதவர்கள் - உலகம் அறியாதவர்கள்.

வீறுடைய கலைமகட்கு விழி இரண்டு மொழியானால்
கூறு வடமொழி வலமாகக் கொள்வார் குணதிசை அறியார்

பெருமை கொண்ட கலைமகளுக்கு விழிகள் இரண்டு மொழிகளும் என்றால் அவற்றில் வடமொழியை அவளின் வலக்கண்ணாகக் கூறுபவர்கள் குணதிசையாம் கிழக்கு எந்த திசை என்று அறியாதவர்கள்.

கலைமகள் தன் பூர்வதிசை காணும் கால் அவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியாம் மதியாரோ மதியுடையார்

கலைமகள் கிழக்கு நோக்கி நின்றால் அவள் விழிகளுள் வலதுவிழியாக வருவது தென்மொழியாம் தமிழ் தான் என்று அறிவுடையவர் அறியாரோ?

***

நீங்கள் தமிழ்த்தாய் பாட்டு பாடிய தமிழறிஞரின் தமிழ்ப்பற்றைக் கேலியாக நினைக்கவில்லை என்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) சொன்னது…

//ஒருவரை மற்றவர் கட்டாயப்படுத்துவதும், அங்கதம் பேசுவதுமேன்?

இதுவும் தங்களின் சிந்தனைக்கு.//

உங்கள் இடுகையால் ஞானவெட்டியான் ஐயாவின் இடுகையை இன்னொரு முறை படித்தேன். அதில் கடைசியில் வரும் இந்த வரிகள் பிடித்திருந்தன. அவற்றைத் தங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.

குமரன் (Kumaran) சொன்னது…

//கண்டிப்பாகத் தேவையில்லை. வடமொழியும் ஒரு கண் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. //

உண்மை இராகவன். நாம் நேற்று ஜிமெயில் அரட்டையில் பேசியது தான். தமிழருக்கு வடமொழி ஒரு கண் என்று எவரும் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

குமரன்,

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி...

வடமொழி அறிந்த தமிழறிஞர் என்று நான் குறிப்பிட்டது சித்தர்களில் ஒருவரான திருமூல சித்தர்.

"ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்" (தி.6 ப.23 பா.5) என்ற திருபுகழ் பாடல் குறித்துதான்.

இந்த இடுகை எதற்கு என்று பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

மேலும் குமரன் அவர்களே,

நான் மொழிப்பற்றாளர்களை கேலி சொல்லவில்லை அவர்களின் கோட்பாடு குறித்து அதை இன்றைக்கு பொருத்திப் பார்க்கும் அறியாமை குறித்து மட்டுமே சொன்னேன், அவர்களே சொல்லிவிட்டார்கள் என்று அதை காரணமாக பிடித்துக் கொண்டு இருப்பது நம்மை நாம் ஏமாற்றிக்கொள்வது. அவர்கள் வாழ்ந்தகாலத்தில் ஒருவேளை தமிழ் சூத்திர பாசை என்று தூற்றப்படாமல் இருந்திருக்கும்.

அந்தவரிகள் மனோன்மணியம் அவர்கள் இயற்றியது என்று தாங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும்... நான் எடுத்துக் கொண்டது திருபுகழ்...அதிலிருந்து நேரடியாக சொல்லாமல் அதன் பொருளை மட்டும் பூந்தியா ? இலட்டா ? என்பது போல் இருகண்களா ? என்று மாற்றிக் கொண்டேன்.

குமரன் (Kumaran) சொன்னது…

விளக்கத்திற்கு நன்றி திரு. கோவி.கண்ணன். தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பிருந்தது போலும். தவறாகவே புரிந்து கொண்டேன் நீங்கள் சொன்னதை. விளக்கத்திற்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

தமிழர்க்கு வட மொழியெல்லாம் தேவையில்லை ஆங்கிலம் கண்டிப்பா தேவை

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
கண்டிப்பாகத் தேவையில்லை. வடமொழியும் ஒரு கண் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. என்னதான் ஆங்கிலத்திலேயே படித்து வேலையைப் பார்த்தாலும் சம்பாதித்தாலும் ஆங்கிலம் இன்றியமையாத மொழியாக இருந்தாலும் இரண்டாவது கண் என்று ஒப்புக்கொள்ள முடியாத பொழுது, வடமொழியை அப்படி ஒப்புக்கொள்ள முடியாது.
//

ஜிரா,

பதிவின் கருத்தை தாங்களும் இங்கே வலியுருத்துவதற்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
கண்,அது தமிழ்தான். அடிச்சா அம்மான்னு கத்த வரும். மா'ன்னோ. மம்மின்னோ கத்த மாட்டோம். உதட்டளவுக்கு வேணுமின்னா சம்ஸ்கிருதம் இருந்துட்டு போகட்டும்
//

அதே தான்...மாற்றான் மொழிக்கு என்ன மரியாதையோ அதுதான் மற்ற இந்திய மொழிகளுக்கும்.

நம் கண்ணை குத்திவிட்டு இறந்தவர் கண்ணை பொருத்திக் கொள் அதுதான் உனக்கு பொருத்தம் என்றுசொல்வது எவ்வளவு அபத்தமோ, அதே தான் நமது கண்களில் ஒன்றை பிடிங்கி எறிந்து விட்டு இரவல் கண்ணை போற்றுவதும்

கருப்பு சொன்னது…

ஞானசம்பந்தர் தன்னைச் செந்தமிழ்;வல்ல தமிழ்ஞானசம்பந்தன் என்று சொல்வதோடு நில்லாமல் தமிழ்மொழியை சங்கத் தமிழ், சங்கமலித் தமிழ் என வாய்க்கு வாய் போற்றிப் பாடியதோடு தமிழ்மொழி வழிபாட்டை எதிர்த்த பிராமணர்களை 'செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்" எனக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தார்.


ஞானசம்பந்தர் பிராமணனராக இருந்தும் அவர் தமிழைப் போற்றினார் வடமொழியை பின்தள்ளினார் என்ற வெப்பாரம் காரணமாகவே பிற்கால நந்தன் போல் அவர் உயிரோடு கொளுத்தப்பட்டார். அந்தக் கொலையை மறைக்கவே சோதியில் கலந்தார் என எழுதி வைத்தார்கள்.

கருப்பு சொன்னது…

திருஞானசம்பந்தரது பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பிராமணனும் வைப்பதில்லை என்பது மட்டுமல்ல எஞ்சிய சமயகுரவர்களான திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் பெயர்களையும் பிராமணர்கள் வைப்பதில்லை! இன்றுகூட இந்த சமய குரவர் நால்வரும் நீச பாஷையான தமிழில் தேவார திருவாசகம் பாடி இறைவனை வழிபட்டார்கள் என்பதற்காகப் புறக்கணிக்கப்படுகிறார்கள்.


சென்ற நூற்றாண்டில் தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் பள்ளியெழுச்சி பாடிய மகாகவி பாரதியார் பிராமணர்களால் சாதிப் புறக்கணிப்புச் செய்யப்பட்டு அக்கிரகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். பட்டினியாலும் பசியாலும் மெலிந்த பாரதியார் தனது 39வது வயதிலே இயற்கை எய்தினார். யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடித் தனது பாட்டுத்திறத்தாலே இவ் வையத்தை பாலித்த அந்தக் கவிஞனது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர் தொகை எண்ணி 21 பேர்தான்!


ஞானசம்பந்தர் சூத்திரர் அல்லாவிட்டாலும் நான்மறை வேள்வி மல்கச் செய்தார் என்றாலும் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க, பூதபரம்பரை பொலியப் பாடுபட்டார் என்றாலும் நீச பாஷையான தமிழில் பாடிவிட்டார் என்பதால் அவரைச் சூத்திரனாகவே மன்னார்க்குடி ராஜகோபல் போன்ற தீட்சதகர்கள் பார்க்கிறார்கள். சாதி வெறி பிடித்த ஆதி சங்கரர் சம்பந்தரை திராவிட சிசு என அழைத்தார். அதன் பொருள் ஞானசம்பந்தர் சூத்திரன் என்பதாகும்.


இந்துக் கடவுளர்க்கு தமிழ் விளங்காது என்ற நினைப்பில் பூசை எல்லாம் வடமொழியில்தான் இடம்பெறுகிறது. ஆனால், முருகனுக்கும் தமிழ் விளங்காது என்று நினைப்பதுதான் ஏனென்று விளங்கவில்லை!


பிராமணர்களைப் பொறுத்தளவில் தேவார திருவாசகம் பண்டாரப் பாட்டுக்களாகும். அவற்றை ஓதும் பார்ப்பனர்களைப் பார்க்க முடியாது. எனவேதான் தேவார திருவாசம் ஓதுவதற்கு ஓதுவார் என்ற புதிய சாதி உருவாக்கப்பட்டது.

தேவார திருவாசகங்கள் திருமுறையில் சேர்க்கப்பட்டு, திருமுறைதான் சைவத்தின் பிரமாணம் என்று சைவர்கள் சிலர் உச்சி மீது வைத்து மெச்சினாலும், பிராமணர்களைப் பொறுத்தளவில் அவை பண்டாரப்பாட்டுக்கள்தான்!


இந்திய மொழிகளுக்கு எல்லாம் வடமொழியே தாய்மொழி என்று ஒரு காலத்தில் சொன்னார்கள். பக்திபோதை தலைக்கேறிய தமிழர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள். மொழி வல்லுனர் முனைவர் கால்டுவெல் அய்யர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஆய்வுநூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிடும் வரை இந்தப் படிமம் தமிழ் படித்த புலவர்கள், பண்டிதர்கள் உட்பட எல்லா மட்டத்திலும் இருந்தது.

தமிழர்களது பெயர், ஊர்ப்பெயர், கடவுள் பெயரைக் கூட பிராமணர்கள் வடமொழி மயப்படுத்தினார்கள்.


பல்லவர் காலத்தில் தமிழோதி வழிபடவும் கருவறை செல்லவும் உரிமை பெற்றிருந்த தமிழர்கள் சோழர்காலத்தில் வடமொழிக்கு இடங்கொடுத்து கருவறை செல்லும் உரிமையை இழந்தனர். இதற்குக் காரணம் பல்லவர்களை மிஞ்சும் வண்ணம் இராசராசன், இராசேந்திரன் போன்ற சோழ மன்னர்கள் பெருவாரியான பார்ப்பனர்களை காசி, கஷ்மீர், வங்கம் போன்ற வடநாடுகளில் இருந்து கொண்டு வந்து குடியேற்றிமையே.

சங்க காலத்தில் பார்ப்பனர்கள் சேரிகளில் வாழ்ந்தார்கள். பல்லவர் சோழர் காலத்தில் ஆற்றங்கரை நிலங்கள் சூழ்ந்த குளிர்ந்த தனி ஊர்களைப் பெற்று வாழ்ந்தனர். இந்த ஊர்கள் அகரம், அக்கிரகாரம், சதுர்வேதி மங்கலம் பிரமதேயம்
என்றழைக்கப்பட்டன.

சிவபாலன் சொன்னது…

விடாது கருப்பு மிக அழகாக விளக்கியுள்ளார்.

கருத்து ஏற்புடையதே!

வெற்றி சொன்னது…

/* பல்லவர் காலத்தில் தமிழோதி வழிபடவும் கருவறை செல்லவும் உரிமை பெற்றிருந்த தமிழர்கள் சோழர்காலத்தில் வடமொழிக்கு இடங்கொடுத்து கருவறை செல்லும் உரிமையை இழந்தனர். இதற்குக் காரணம் பல்லவர்களை மிஞ்சும் வண்ணம் இராசராசன், இராசேந்திரன் போன்ற சோழ மன்னர்கள் பெருவாரியான பார்ப்பனர்களை காசி, கஷ்மீர், வங்கம் போன்ற வடநாடுகளில் இருந்து கொண்டு வந்து குடியேற்றிமையே. */

அந்தக்காலம் முதல் இன்றுவரை தமிழும் தமிழினமும் தமிழர்களின் அறியாமையால்தான் சிதைவுறுகிறது. இனியாவது தமிழர்கள் விழிப்புணர்வுடன் சிந்தித்துச் செயற்பட வேணும். வந்தாரை வாழ வைக்கும் பூமி என்று வந்தவன் போனவன் எல்லாம் எமது முதுகில் சவாரி செய்ய அனுமதித்தது போதும். எம் முன்னோர் செய்த தவறுகளை நாமும் விடாமல் எமது அடுத்த சந்ததி நாம் சந்தித்த இன்னல்களைச் சந்திக்காமல் நிம்மதியுடன் வாழ நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேணும்.

ஜெகதீசன் சொன்னது…

தமிழ் மட்டுமே போதும்...

//ஆமாம். மூளை இருந்திருந்தால் 'ஒண்டவந்த பிடாறிகளை' கோபுரம் ஏற அனுமதித்திருக்க மாட்டார்கள்...சரியாக சொன்னிங்க பாலா...பாராட்டுகள்//
-இது நெத்தியடி..

நண்பா, நானும் சிங்கப்பூரில் தான் பனி புரிகிறேன். உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்..
என் மின் அஞ்ஞல் : gurujegadeesan@gmail.com

நன்றி!!!

அன்புடன்
ஜெகதீசன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்