அண்மையில் மணப்பாறை பெண்ணுக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த மருத்துவ பெற்றோர்களின் மகன் திருச்சி சிறுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்திருக்கிறான்.
பெற்றோர்களின் ஆர்வக்கோளாரே இந்த குற்ற வழக்கிற்கு முதன்மையாக அமைந்திருக்கிறது. பெற்றோர்கள் வழி நடத்தியதன் மூலம் தான் அந்த சிறுவன் செயல்பட்டு இருக்கிறான் என்பது இதுவரை கிடைத்த தகவல் படி தெரியவருகிறது.
சிறுவர் நீதி மன்றத்தில் அந்த சிறுவன் சரணடைந்திருக்கிறான், போலிசார் வலைவீசி தேடினார்கள் என்றெல்லாம் செய்திகளில் மிகவும் அதிகமாகவே அந்த சிறுவனை புகைப்படத்துடன் போட்டு ரவுடி ரேஞ்சுக்கு எழுதுகிறார்கள். பாவம்... அவனும் பெற்றோர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள் என்பதால் இதை பெற்றோர்களின் தூண்டதல் மூலம் செய்திருக்கிறான். சிறிய வயதிலேயெ, உடன்படிப்போர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மூலம் மிகப் பெரிய அவமானம் தனக்கு காத்திருக்கிறது என்றெல்லாம் நினைத்துப் பார்த்திருக்க மாட்டான். இதையெல்லாம் நினைத்துப்பார்க்க வேண்டிய பெற்றோர்களே மருத்துவம் படித்தும் கவனக்குறைவாகவும், பெறும்பின்மையுடன் நடந்து கொண்ட போது பாவம் பள்ளிச் சிறுவன் என்ன செய்வான் ?
இது உண்மையில் நடந்திருந்தாலும் கூட இந்த வழக்கில் தண்டனை அடைய வேண்டியவர்கள் பெற்றோர்களே அன்றி சிறுவன் அல்ல. அரசும், பத்திரிக்கைகளும் கவனத்துடன் செயல்பட்டால் நன்றாக படிக்கும் ஒரு சிறுவனை மன உளைச்சல் அடைந்து, அவன் எதிர்காலமே கேள்விகுறியாகிவிடும் நிலையை தவிர்க்க முடியும்.
இந்த வழக்கில் சிறுவனை குற்றவாளியாக கருதாமல் சாட்சியாக மட்டும் எடுத்துக் கொண்டு சென்றால் அவனுடைய எதிர்காலம் பாதிப்பு அடையாது. அவனுடைய பெற்றோர்களில் தந்தை தூண்டினாரா ? அல்லது தாய் தூண்டினாரா என்பது சரியாக தெரியவில்லை. சாட்சிகள் மற்றும் வாக்கு மூலங்களின் மூலம் குற்றவாளிகள் என்று தெரிந்தால் கண்டிப்பாக தூண்டியவர் தண்டனைகளை அடைந்தே தீரவேண்டும். இது பலருக்கு பாடமாக அமையும், அதாவது ஆர்வகோளாறு பெற்றோர்கள் திருந்துவார்கள். சிறுவர்களை சிறிய வயதில் சாதனை என்ற பெயரில் அவர்களை கொடுமைபடுத்துவதும் குறையும்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
16 கருத்துகள்:
பொறுப்பற்று பரபரப்பு விளம்பரத்திற்காக செய்தி வெளியிடும் ஊடகங்களின் மற்றொரு பொறுப்பற்ற செய்தி தான் சிறுவன் தலைமறைவு என்பதான செய்தி
சிறுவர்கள்/குழந்தைகள் குறித்து செய்தி வெளியிடும் பொழுது அடிப்படை மனிதநேயத்துடன் செய்தி வெளியிடக்கூட புத்தியல்லாத இந்த ஊடகங்களை தான் நாம் ஜனநாயகத்தின் தூண்களாக கூறிக்கொண்டிருக்கிறோம்
/* செய்திகளில் மிகவும் அதிகமாகவே அந்த சிறுவனை புகைப்படத்துடன் போட்டு ரவுடி ரேஞ்சுக்கு எழுதுகிறார்கள். */
ஊடகங்களுக்கு இப்படியான தீனி கிடைத்தால் போதும், பொறுப்பற்ற விதமாகச் செயற்படுவார்கள். கேட்டால், இது கருத்துச் சுதந்திரம் என்று நியாயம் கற்பிப்பார்கள்.
கனடாவில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் குற்றச் செயல் புரிந்தால் அவர்களின் பெயரையோ படத்தையோ பிரசுரிக்கமாட்டார்கள்.
அத்துடன் தற்கொலைச் செய்திகளையும் பிரசுரிப்பதில்லை. ஏனெனில் ஊடகங்கள் பார்பவர்கள்/படிப்பவர்கள் இவற்றைப் பார்த்து செய்யக் கூடாது என்பதற்காக.
ஆகவே தமிழக அரசு இப்படியான செய்திகளால் சிறுவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு சட்டம் கொண்டு வருவது நல்லது என நான் நினைக்கிறேன்.
GK,
I do agree! But, they have played with life's of many. mmmm
It is critical position!
உண்மை GK.. சிறுவன் மேல் தப்பே இல்லை என கூறமுடியாது... என்றாலும் தண்டிக்கப்படவேண்டியவர்கள் பெற்றோர்களே..
//
தமிழ் சசி/Tamil Sasi said...
பொறுப்பற்று பரபரப்பு விளம்பரத்திற்காக செய்தி வெளியிடும் ஊடகங்களின் மற்றொரு பொறுப்பற்ற செய்தி தான் சிறுவன் தலைமறைவு என்பதான செய்தி
சிறுவர்கள்/குழந்தைகள் குறித்து செய்தி வெளியிடும் பொழுது அடிப்படை மனிதநேயத்துடன் செய்தி வெளியிடக்கூட புத்தியல்லாத இந்த ஊடகங்களை தான் நாம் ஜனநாயகத்தின் தூண்களாக கூறிக்கொண்டிருக்கிறோம்
10:54 AM, July 05, 2007
//
தமிழ் சசி,
ஒன்றிணைந்த கருத்துக்கு மிக்க நன்றி.
பரபரப்புதான் தொழிலே என்று இருக்கும் செய்தியாளர்கள் திருந்தமாட்டார்கள்.
:(
//வெற்றி said...
ஆகவே தமிழக அரசு இப்படியான செய்திகளால் சிறுவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு சட்டம் கொண்டு வருவது நல்லது என நான் நினைக்கிறேன். //
அண்மையில் குற்றம் சாட்டப்படுபவர்களின் படங்கள் செய்தி இதழ்களில் வருவதற்கு தடை என்று செய்திகள் வந்தது, அதை அந்த துறையினரே பாடித்தார்களா என்பது தெரியவில்லை.
:(
// சிவபாலன் said...
GK,
I do agree! But, they have played with life's of many. mmmm
It is critical position!
11:17 AM, July 05, 2007
//
இதில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் பெற்றோர்களே என்பதில் மாற்றுகருத்து இல்லை சிபா.
//மனதின் ஓசை said...
உண்மை GK.. சிறுவன் மேல் தப்பே இல்லை என கூறமுடியாது... என்றாலும் தண்டிக்கப்படவேண்டியவர்கள் பெற்றோர்களே..
//
மவோ,
சிறுவனின் தவறு என்று எதைச் சொல்கிறீர்கள் ? பெற்றோர்கள் சொல்லைக் கேட்டு நடந்ததா ?
அவன் என்ன செய்வான். பெற்றோர்கள் ஊக்கப்படுத்தி செய்யச் சொல்லி இருப்பார்கள்.
சிறுவன் திலீபன் அவர்கள் பெற்றோர்களின் ஊக்குவித்தலின்படி நடந்து கொண்டான். அவனுக்கு தண்டணையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
அடுத்து
//அண்மையில் குற்றம் சாட்டப்படுபவர்களின் படங்கள் செய்தி இதழ்களில் வருவதற்கு தடை என்று செய்திகள் வந்தது, அதை அந்த துறையினரே பாடித்தார்களா என்பது தெரியவில்லை.//
இந்தத் தடை உண்மையில் நடைமுறையில் வந்து விட்டதா?இந்த தடையை பொதுவாக media முழுவதற்கும் இட வேண்டும். முந்தித் தருவதில் தங்களுக்கிடையே உள்ள போட்டியிலும், செய்தியை sensationalஆக மாற்றுவதற்கு உள்ள முயற்சியுமே பாதிக்கப்படுபவர்களைப் பற்றி அவர்களை சிந்திக்கத் தூண்டுவதில்லை. குற்றம் சாட்டப்படுபவர்கள் பின்னர் அக்குற்றத்திலிருந்து விடுபட்டால் அவர்களது எல்லா வகையான இழப்பிற்கும் அவ்வாறு படம் வெளியிட்ட நிறுவனத்தினமிருந்தே நஷ்டஈடும் பெற்றுத்தர வேண்டும்.
அப்போதுதான் mediaக்கள் திருந்தும்.
//இது உண்மையில் நடந்திருந்தாலும் கூட ... நிலையை தவிர்க்க முடியும்////
இது மாதிரி பெற்றோர்களின் எண்ணங்கள் தான் என்ன..இவர்கள் இப்பொழுது அவர்களின் செயல்களை நினைத்துப் பார்த்தால் உணருவார்களா..?
ஊடகங்களும் அவர்களின் பங்குக்கு தங்கள் பங்கை செய்து விட்டது..ஹ்ம்ம்
பாதிக்கப்பட்டது அந்த குழந்தை தான்..
//சுல்தான் said...
சிறுவன் திலீபன் அவர்கள் பெற்றோர்களின் ஊக்குவித்தலின்படி நடந்து கொண்டான். அவனுக்கு தண்டணையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
அடுத்து
இந்தத் தடை உண்மையில் நடைமுறையில் வந்து விட்டதா?இந்த தடையை பொதுவாக media முழுவதற்கும் இட வேண்டும். முந்தித் தருவதில் தங்களுக்கிடையே உள்ள போட்டியிலும், செய்தியை sensationalஆக மாற்றுவதற்கு உள்ள முயற்சியுமே பாதிக்கப்படுபவர்களைப் பற்றி அவர்களை சிந்திக்கத் தூண்டுவதில்லை. குற்றம் சாட்டப்படுபவர்கள் பின்னர் அக்குற்றத்திலிருந்து விடுபட்டால் அவர்களது எல்லா வகையான இழப்பிற்கும் அவ்வாறு படம் வெளியிட்ட நிறுவனத்தினமிருந்தே நஷ்டஈடும் பெற்றுத்தர வேண்டும்.
அப்போதுதான் mediaக்கள் திருந்தும்.
//
ஐயா,
நமது நாட்டில் சட்டம் எவ்வளவு பெரிதாக இருந்தால் என்ன பலமான (வழக்குறைஞர்கள்) இராமன்கள் இருக்கும் வரை வில்லை உடைத்து குற்றவாளிகளை மீட்காமலா இருந்துவிடப் போகிறார்கள்.
சட்டங்களும், ஜனாதிபதிகள் போல பெயர் அளவில் மட்டுமே.
:(
சிறுவன் திலீபனின் நிலை நிச்சயம் பரிதாபமானதுதான். மனோரீதியாக ஒரு பெரிய வடு அவன் மனதில் நிரந்தரமாகத் தங்கிப் போகும் என்றே தோன்றுகிறது.
அதீத ஆர்வக்கோளாறால் பெற்றோர்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை பாழாக்கிவிடக்கூடாது என்ற ரீதியில் ஓங்கி ஒலித்திருக்கும் வலுவான எச்சரிக்கை மணி என்ற ஒரே ஒரு பாசிட்டிவ் பாயிண்ட் மட்டுமே இந்த பிரச்சனையின் மீதமாகக் கூடும்.
இந்த விஷயத்திலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஏதேனும் ஒரு பரபரப்பு கற்பழிப்புப் புகார் மீடியாக்களுக்குக் சீக்க்கிரமே கிடைக்காதா என்ன? தமிழ்நாடு எவ்வளவு பெரிய மாநிலம் ....
மிக சரியான கருத்து
ஆனால் நீங்களும் அந்த சிறுவனின் புகைப்படத்தை பிரசுரித்து "அந்த" ஊடகங்கள் போலவே செயல்பட்டிருக்கிறீர்களே..?
//PPattian said...
மிக சரியான கருத்து
ஆனால் நீங்களும் அந்த சிறுவனின் புகைப்படத்தை பிரசுரித்து "அந்த" ஊடகங்கள் போலவே செயல்பட்டிருக்கிறீர்களே..?
//
எப்படிங்க இப்படியெல்லாம் சிந்திக்கிறிங்க, அந்தப் புகைப்படம் ஏற்கனவே பல ஊடகங்களில் வெளியான ஒன்று, ஒருவரின் புகைப்படம் பொதுமக்கள் பார்வைக்கு குற்றவாளியாக காட்ட பயன்படுவதற்கும், குற்றமற்றவர் என்று காட்டப்படுவதற்கும் உள்ள வேறுபாட்டைக் கூட புரிந்து கொள்ளாமல் கருத்து சொல்லவருவதற்கும் தான் உளறுகிறோமா ? என்று தெளிந்து கொள்ளவேண்டும்.
:(
உங்கள் பதிவில் ஒருவர் குற்றமற்றவர் என்று சொல்ல புகைப்படம் கட்டாயமாக தேவை என்று நினைப்பது உங்கள் உரிமை.
தவறு என் மேல்தான். மன்னிக்கவும்.
இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரைப் பார்க்கவும். அரக்கத்தனமாக ஆட்டம் போட்டிருக்கிறான் இந்த டாக்டர். அதே ATTITUDE ல் தான் பிள்ளையும் இருந்திருப்பான். இப்போது தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்டதால் எல்லாம் வெளியில் தெரிகிறது. எதற்கெடுத்தாலும் குற்றவாளிக்கு வக்காலத்து வாங்குவது (இந்த பிரச்சனையில் வயது) என்ன வகையான அனுகுமுறை என்று தெரியவில்லை. இந்த பையனின் வயது 18 ஆக இருந்தால் என்ன சொல்வீர்கள்?
கருத்துரையிடுக