பின்பற்றுபவர்கள்

13 ஆகஸ்ட், 2010

அப்துல்லாவுக்கு ஆதரவாக நான் பொங்குறேன்...

ஒரு பெண்ணுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக ஓடிவந்து தாம் பெண்களுக்கு காவலன் என்று காட்டிக் கொள்வோர் எவரும் அதே (போன்று) பெண்ணால் ஒரு ஆணுக்கு பிரச்சனை என்றால் யாரும் தட்டிக் கேட்பதில்லை. குறைந்த பச்சம் கோரப்பாயாவது கேட்கலாம் இல்லையா. கேளுங்க கேளுங்க என்று பதிவெழுதும் குழுவும் சரி, இந்தியாவை 2020ல் வல்லராசாக்க அப்துல்கலாமுக்கு உதவுகிறேன் என்று எழுதித் தள்ளும் பெருந்தவ அரசரும் வாயைத் திறக்கக் காணும். நர்சிம்முக்கு எதிராக 150+ பதிவுகள் வந்தது (வலைச்சரத்தில் ஒருவாரம் பல்வேறு தரப்பில் எழுதப்பட்ட தொகுப்பாக ஆக்கும் அளவுக்கு எழுதித் தள்ளினார்கள்) அப்துல்லாவுக்கு ஆதரவாக அல்லது திட்டி ஒரு ஐந்து பதிவாவது வரும் என்று பார்த்தால் ஒருவரும் எழுதவில்லை.

ஆண்களைக் குறிப்பிட்டு எதுவும் பேசிவிடலாம் யாரும் கேட்கமாட்டார்கள், ஆனால் பெண்களைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லிவிட முடியாது என்பது நிருபனம் ஆகிவிட்டது. சொம்பு தூக்கிகள் (நாட்டாமைகள் தான்) யாரும் சொம்பு வாங்க வராததால் சேலம் சொம்பு மொத்த வியாபரமும் நொடித்து போய் மூடும் நிலைமைக்குச் சென்றுவிட்டதாம். சொம்பு வியாபாரிகளுக்கு பெருத்த நட்டம். அடிக்கடி பெண்கள் பாதிக்கப்படக் கூடாதா என்ற வேண்டுதல் வைக்க அனைவரும் பழனிக்கு காவடி எடுக்கப் போவதாகக் கேள்வி. அப்துல்லாவுக்கு ஆதரவாக யாருமே பொங்காததால்,

நான் பொங்குறேன்.


21 கருத்துகள்:

குகன் சொன்னது…

பிரச்சனை நடக்கவில்லை என்று சந்தோஷப்படுவதை விட்டு.... கவலைப்படுற மாதிரி தெரியுது...

நாட்டுல பெண்களுக்கு ஒரு நீதி.. ஆண்களுக்கு ஒரு நீதி இருக்கு...தெரியாதா

இராகவன் நைஜிரியா சொன்னது…

வலைப்பதிவில் இதெல்லாம் சகஜமப்பா...

இதுவாவது பொங்கிச்சேன் சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான்..

தமிழ் அமுதன் சொன்னது…

நானும் அப்துல்லாவுக்கு ஆதரவாக ..

பொங்கி.. பொங்கி.. கெடா வெட்டி பொங்கல் வைக்கிறேன்..!;)

நட்புடன் ஜமால் சொன்னது…

காமெடி ஆக்கிட்டீங்க :(

கோவி.கண்ணன் சொன்னது…

// நட்புடன் ஜமால் said...

காமெடி ஆக்கிட்டீங்க :(//

அப்படியும் தெரியும். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//குகன் said...

பிரச்சனை நடக்கவில்லை என்று சந்தோஷப்படுவதை விட்டு.... கவலைப்படுற மாதிரி தெரியுது...//

நாட்டாமை தீர்ப்புகளுக்கு ரொம்ப மதிப்புக் கொடுப்பவன், நாட்டாமைகள் யாரும் சொம்பு தூக்காதது வருத்தம் தான்.

/ நாட்டுல பெண்களுக்கு ஒரு நீதி.. ஆண்களுக்கு ஒரு நீதி இருக்கு...தெரியாதா//

நாட்டுல பெண்களுக்கு ஒரு நீதி.. ஆண்களுக்கு எப்பவும் அநீதி இருக்கு...தெரியாதா - ன்னு இருக்கனும்

கோவி.கண்ணன் சொன்னது…

// இராகவன் நைஜிரியா said...

வலைப்பதிவில் இதெல்லாம் சகஜமப்பா...

இதுவாவது பொங்கிச்சேன் சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான்..//

வாங்கண்ணே ஊருப் போய் சேர்ந்தாச்சா.....

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் அமுதன் said...

நானும் அப்துல்லாவுக்கு ஆதரவாக ..

பொங்கி.. பொங்கி.. கெடா வெட்டி பொங்கல் வைக்கிறேன்..!;)//

நான் சைவம் என்பதால் அப்துல்லாவுக்கு பொங்குறேன். நீங்க பிரியாணி போடுங்க.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

அண்ணே யாரும் பொங்கணும்னு நினைச்சு நான் அந்த இடுகையை எழுதலை. அதேபோல நம்ம மங்களூர் சிவா மாதிரி நீதி கேட்டு நெடும் பயணம் எல்லாம் போகலை :))

நான் எழுதக் காரணம் ஒரு பத்து பேரிடம் என்னை அவ்வாறு தவறாக பொய்யாகச் சொல்லும்போது அதில் ஒரு ஐந்து பேர் அதை உண்மை என்று நினைக்கலாம் அல்லவா?? அதைத் தடுக்கத்தானே தவிர அவர் அப்படிச் சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்ல. காரணம்

”தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்”

அப்படி இருக்க நான் வேற ஏன் தனியா சுடணும்??

அப்புறம் நீங்க பொங்குறதுக்கே நான் இடுகை எழுதினதுக்கு அப்புறம் 5 நாள் ஆயிருக்கு!! இதுல அடுத்தவுகளுக்கு வேற கேள்வி கேக்குறீக?!?!?!

ஆணியே புடுங்க வேண்டாம் :)))

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

எது எப்படியோ எனக்கு ஆதரவா இடுகை இட்ட ஒரே நபர்னு வரலாற்றில் இடம் பெற்றுட்டீங்க.

மைண்ட்ல வச்சுக்கிறேன்.பின்னாடி யூஸ் பண்ணிக்கிறேன்.

:))

MOON_LIGHT சொன்னது…

Paakalame? Annan intha vaati en comment ah release panraara nu:-) eppo kaathadichalum thuni kaaya vechuduraare.

வால்பையன் சொன்னது…

நல்லா பொங்குனிங்க!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

குறைந்த பச்சம் கோரப்பாயாவது கேட்கலாம் இல்லையா.//

இரத்தம் தோய்ந்த பாய் தானே!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

எம்.எம்.அப்துல்லா


எது எப்படியோ எனக்கு ஆதரவா இடுகை இட்ட ஒரே நபர்னு வரலாற்றில் இடம் பெற்றுட்டீங்க.//

அண்ணே இந்த எடத்துல உங்க தலைவர் வந்து போறாரே!

//மைண்ட்ல வச்சுக்கிறேன்.பின்னாடி யூஸ் பண்ணிக்கிறேன்.//

காதல் படத்துல நடிச்ச டைரக்குடர ஞாபகப்’படுத்துறியளே!

:)))

மணிஜி சொன்னது…

கோவி..என்னையும் சேர்த்துக்கங்க..(வெங்காய சட்னி இருந்தா நல்லாயிருக்கும்)

அறிவிலி சொன்னது…

லீவு நாள்ல வூட்ல சமைக்க சொன்னத கூட பதிவாக்கிட்டாரு பாருங்க கோவி

Unknown சொன்னது…

நான் எழுதியிருப்பேன். குழுமத்துல வந்து அப்துல்லாண்ணே இதைப் பத்தி இனிமே யாரும் பேசவேண்டாம்னு சொன்னதுனால விட்டுட்டேன்.

Unknown சொன்னது…

//எது எப்படியோ எனக்கு ஆதரவா இடுகை இட்ட ஒரே நபர்னு வரலாற்றில் இடம் பெற்றுட்டீங்க.

மைண்ட்ல வச்சுக்கிறேன்.பின்னாடி யூஸ் பண்ணிக்கிறேன்.//

அண்ணே ஆதரவா பின்னூட்டம் போட்டவங்களுக்கு ஒன்னும் கிடையாதா ?

சிங்கக்குட்டி சொன்னது…

என்ன நடக்குது இங்க! ஏதாவது பிரச்சனையா? ஒன்னுமே புரியவில்லை.

சிங்கக்குட்டி சொன்னது…

என்ன நடக்குது இங்க! ஏதாவது பிரச்சனையா? ஒன்னுமே புரியவில்லை.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

என்ன காமடி நடக்குதுன்னு புரியலயே!.... அண்ணன் அப்துல்லாவிற்கே வெளிச்சம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்