கிறித்துவர்களால் அங்கங்கே நில ஆக்கிரமிப்பு என்கிற செய்தி புறக்கணிக்கக் கூடியது அல்ல, எப்போதும் நடைபெறுவது தான். வேளாங்கன்னி என்கிற கிராமம் தற்போது சிறுநகரம் என்கிற வளர்ச்சியை எட்டியுள்ளது, 90 விழுக்காட்டு இடங்கள் பல்வேறு தரப்பினரிடம் மிருந்து தானமாகவோ, இனாமாகவோ, விலை கொடுத்தோ பெறப்பட்டு வேளாங்கன்னி ஆலய நிர்வாகத்தினரிடம் இருக்கிறது, வேளாங்கன்னியில் நிலங்களை மாதா கோவில் நிர்வாகம் வளைப்பதாக குற்றச்சாட்டுகள் உண்டு. தற்பொழுது 90 விழுக்காட்டு சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் மாத கோவில் நிர்வாகத்திடம் தான் உள்ளது. கிறித்துவர்களோ, இஸ்லாமியர்களோ யாரும் வெளியில் இருந்து வந்து குதித்தவர்கள் அல்ல, அவர்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு என்பதால் வழிபாட்டு இடம் அனைவருக்கும் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் ஒட்டுமொத்தமாக வளைத்துப் போடுவது என்பது சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் பல இடற்களை உண்டாக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காக மேற்கண்டதைக் குறிப்பிட்டேன்.
அதே போல் நாகையில் காயாரோகன - நீலாயதாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான குளத்தை முற்றிலுமாக ஆக்கிரமித்து அரபு / மதராசா பள்ளிகள் கட்டப்பட்டிருந்தது, அதுகுறித்து 10 ஆண்டுக்கும் மேல் வழக்கு நடைபெற்று பிறகு இடம் கோவிலுக்கு உரிமை உடையது என்பதாக தீர்பளிக்கப்பட்டது, இது குறித்து வழக்கு நடைபெறும் போது அதன் தீர்வுகளை அச்சில் கோர்த்தவன் என்கிற முறையில் எனக்கு முழுவிவரம் தெரியும் என்பதால் நான் இட்டுக்கட்டி எதையும் எழுதவில்லை, சம்பந்தப்பட்ட குளத்தை கோவில் குளம் அல்ல, அதன் பெயர் பேய் குளம் என்றெல்லாம் கூறி முடிந்த மட்டில் அந்தக் குளத்தை ஆக்கிரமிக்கவே முயற்சிகள் நடைபெற்றன. இது போன்ற வழக்குகள் அங்கங்கே நடைபெறுவது தான். இட ஆகிரமிப்பு பொது இடம் அல்லது தனிப்பட்டவர்களின் இடம் என்றால் கூடப் பரவாயில்லை, இந்துக் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட இடத்தை பிற மதத்தினர் ஆக்கிரமிக்கும் போது அது மதப்பிரச்சனையாகிறது என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும், அது பாபர் மசூதி என்று பெரிய அளவிலான பழைய ஆக்கிரமிப்பாக இருந்தாலும் ஈரோட்டு மாரியம்மன் கோவில் நில ஆக்கிரமிப்பு என்ற சிறு அளவிலான ஆக்கிரமிப்பாக இருந்தாலும் பாதிக்கப்படும் தரப்பு எதிர்க்க அதே மத அரசியலைத்தான் எடுக்கும்.
******
அண்மையில் ஈரோட்டில் பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சி சார்ப்பில் இந்துக்களைத் திரட்டி மாரியம்மன் கோவில் நிலத்தை கிறித்துவர்களிடமிருந்து மீட்கும் மாபெரும் போராட்டம் நடைபெற்றது என்கிற தகவலை நான் தமிழ் இந்து தளத்தில் இருந்து படித்தேன். இன்றைய இந்துக் கோவில்களில் குறிப்பிடத் தகுந்த அளவு கோவில்கள் குறிப்பாக காஞ்சிபுரம் உள்ளிட்ட பழைய கோவில்கள் பவுத்த சமண ஆலங்கள் இருந்த இடத்தில் அமைக்கப்பட்டவை தான். அன்றைய மன்னர்களின் ஆணைகளில் அதைச் செய்வது மிகவும் எளிது, பள்ளி என்று முடியும் அனைத்து கிராம நகரங்கள் அனைத்தும் பவுத்த சமண ஆலயங்கள் இருந்த இடம் தான். ஊர் பெயர்கள் (திருச்சிறாப்பள்ளி) தவிர்த்து இன்றைக்கு சமண பவுத்த அடையாளங்களை தமிழகத்தில் பார்க்க முடியாது. மாரியம்மன் கோவில் போன்ற சிறுவழிபாட்டு நாட்டார் தெய்வங்களுக்கான கோவில்கள் சமண / பவுத்த பள்ளிகளை இடித்து ஆக்கி இருக்க வாய்ப்பு இல்லை, இவை சுமார் 300 ஆண்டுகளுக்கு குறைவான வரலாறு கொண்ட கோவில்கள் என்பதால் யாரேனும் தானம் / கொடை செய்த நிலங்களில் பெரும்பாலும் தனியார்களால் கட்டி வைக்கப்பட்டவையே மாரியம்மன், காளியம்மன், முனீஸ்வரன் மற்றும் சிறு தெய்வ வழிபாட்டுக் கோவில்கள்.
முழுக்க முழுக்க கோவிலும் கோவிலுக்கும் சொந்தமான நிலமும் கோவில் சார்ந்த சொத்து எனலாம். பிற்காலத்தில் இந்துக் கோவில்களில் வருமானம் உள்ளவற்றை அறநிலையத் துறைக்குள் கொண்டு வந்தது தவிர்த்து அரசுகள் கோவில்களுக்கு பெரிதாக ஒன்றும் செய்வதில்லை. குறிப்பாக 1000 ஆண்டு நிறைவு விழா தஞ்சை பெரிய கோவிலுக்குக் கொண்டாடப்பட்டது என்பதான தகவல்கள் அனைத்தும் வெறும் வரலாற்றுகான குறிப்பு ஏற்படுத்துதல் என்பது தவிர்த்து கோவில்களுக்கு அரசுகள் பெரிதாக எதுவும் செய்வது இல்லை. இந்துகோவில்களை பராமரிக்க போதிய வருமானம் உண்டு முன்பு அதை கோவில் நிர்வாகிகள் உண்டார்கள், தற்பொழுது அரசாங்கமும் கோவில் நிர்வாகமும் சேர்த்து உண்ணுகிறது, அவ்வளவு தான்.
ஈரோட்டு மாரியம்மன் கோவில் நிலம் கிறித்துவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் அது மீட்கப்படுவதாகவும் போராட்டம் நடைபெறுகிறது. நல்லது நீதி உள்ள பக்கம் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துவோம். அதே சமயத்தில் மாரியம்மனுக்கு பார்பன இந்து மதம் செய்த கொடும் செயல் பற்றி சிறிது குறிப்பிடுகிறேன், அதையும் சரி செய்தால் மாரியம்மனின் அருள் நிலம் மீட்பாளர்களுக்கு கிட்டும். மாரியம்மன் பழந்தமிழ் தெய்வங்களுள் எஞ்சி இருக்கும் பெண் தெய்வத்தின் தொடர்ச்சி, இயற்கை வழிபாடு என்னும் நீட்சியில் மழையை (மாரி) பெண்ணாக நினைத்து வழிபட்டதே மாரியம்மன் வழிபாடு, மாரியம்மன் கிராம தெய்வங்களுல் முதன்மையானது, கோடையில் அம்மை போன்ற நோய்கள் பெருகும் என்பதால் மாரியாம்மன் வழிபாட்டுத் தொடர்ச்சி இன்றும் சிறப்பாகவே நடைபெறுகிறது.
அழிக்க முடியாத மக்கள் செல்வாக்கு பெற்ற வழிபாட்டையும் அதன் தெய்வங்களையும் பார்பனிய வடமொழிமயமாக்கி, வேத காலத் தெய்வங்கள் என்று காட்டுவது தான் பார்பனிய இந்து மதத்தின் நடைமுறை. மாரியம்மனை முற்றிலுமாக தமிழர்கள் மனதில் அகற்ற முடியாது என்று உணர்ந்து கொண்டோர் அதற்கு வேத வடிவம் கொடுத்த சக்தியின் வடிவம் ஆக்கினர். மாரியம்மனை பலர் வெறும் தலையை மட்டும் வழிபடுவதைப் பார்த்திருக்கிறோம், இன்றும் உக்கிரமான மாரியம்மன் சிலைகள் வெறும் தலைகளுடன் இருக்கின்றன. மற்ற தெய்வங்களை முழுதுமாக வழிபடுபவர்கள் மாரியம்மனை தலையை மட்டும் வழிபடும் காரணம் என்ன ? காரணம் மிகவும் அருவெறுப்பும், சமூக சீக்கும் நிறைந்தவை. பரமசிவன் கூப்பிடும் போது குளித்துக் கொண்டிருந்த பார்வதி உடனே வரவில்லையாம், சினமுற்ற பரமசிவன், மகன் பரசு இராமனை கூப்பிட்டு அவள் தலையை கொய்துவா என்றாராம். தந்தைச் சொல் மிக்க மந்திரமில்லை என்று உடனே வேண்டுகோளை நிறைவேற்றினானாம் பரசு இராமன், பிறகு அவசரப்பட்டுவிட்டோமே என்று வருந்திய பரமசிவன் வழி இன்றி உடல் பாகத்தைத் தேட அது கிடைக்காமல் போக அந்த பக்கமாக சென்ற பறைப்(தலித்) பெண் ஒருத்தியின் தலை வெட்டிவிட்டு அந்த உடலை பார்வதியின் தலையுடன் பொருத்து பார்வதியை உயிருடன் எழுப்பினாராம். இந்தப் புதுப்பிறவி மாரியம்மன் எனப்படும் என்பது மாரியம்மன் தோற்றத்திற்கான பார்பனிய வரலாற்றுக் கதை. இந்தக் கதையை இன்றும் நம்பும் பார்பனர்கள் மாரியம்மனின் உடலை பற உடம்பு என்பதாக ஒதுக்கி வைத்து தலையை மட்டும் வழிபடுவது தான் இன்றும் தொடர்கிறது. சாமியை சிலையாக வழிபட்டாலும் அந்த சிலையில் கழுத்துக்கு கீழே இருப்பது பறச்சியின் உடல் அதனை வழிபடக் கூடாது என்பதாக வெறும் தலையை மட்டும் வைத்து வழிபடுகின்றனர். மாரியம்மனுக்கு மட்டுமல்ல ஆனைத் தலை பிள்ளையாருக்கும் தலை மட்டும் எப்படி யானை ஆகியது என்பதற்கும் அருவெறுப்பான கதைகள் உண்டு.
முண்டமற்ற வெறும் தலையாக இருக்கும் மாரியம்மன் சிலைகள் இன்னும் பல்வேறு கோவில்களில் வழிபடப் படுகிறது. அங்கெல்லாம் மாரியம்மனை முழுவுடலாக மாற்றி வழிபட இத்தகைய மாரியம்மன் நிலமீட்பு குழுவினர் உடல் மீட்கவும் போராடினார்கள் என்றால் மக்களுக்கு நன்மையோ இல்லையோ மாரியம்மனுக்கு நன்மையாக முடியும். உடல் சிதைக்கப்பட்ட சிலையாக நிற்கும் மாரியம்மன் பழந்தமிழர் தாய் தெய்வ வழிபாட்டின் நீட்சியாகும், அதை முழு உடலாக்கி நிறுத்தி செம்மை படுத்துவதும் தமிழர்கள் கையில் தான் உள்ளது
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
13 கருத்துகள்:
தலையை வைத்து வழிபடுவதா, உடலை வைத்து வழிபடுவதா என்ற வாதங்களெல்லாம் பின்னால்....
இந்தியாவின் தென் மாநிலங்கள் தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும், பன்னிரெண்டு ஜோதிலிங்கத்தலங்கள் உட்பட்ட அனைத்து கோவில்களிலும் கருவரைக்குள் நுழைந்து, தொட்டு, வழிபாடு செய்ய ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. (காசி உட்பட்) இங்கு மட்டும் தான் நாம் சூத்திரன் ஆகி வெளியே நிற்கின்றோம். (இது அனைத்து உயர்சாதி இந்துக்களுக்கும் பொருந்தும்) இதைப்பற்றி பேச எந்த இந்துத்வா கட்சிகளும் அதன் அடிவருடிகளும் தயாராக இல்லை.
ஈரோட்டின் மிகப் பழமைவாய்ந்த கோவிலாக கருதப்படுவதும், பல்வேறு சரித்திர நிகழ்வுகளுக்கு சான்றாக அமைந்ததுமானதும், நகரின் நடுமையத்தில் அமைந்திருப்பதுமான கொங்கலம்மன் ஆலயத்தின் சொத்துக்கள், பல ஆண்டுகளாக சிறு குத்தகை தொகையில் ஊர்ப்பெரிய மனிதர்களால் ஆக்கிரமிக்கப் பட்டு, உள்வாடகைக்கு அதிகத் தொகைக்கு கொடுக்கபடுவதையும் கேட்க எவருக்கும் திராணி இல்லை.
குறைவான குத்தகைத் தொகையும் செலுத்தாமல் இழுத்தடிப்பு செய்வதை தட்டிக் கேட்க ஏன் இந்த போலி மதவாதிகளால் இயலவில்லை என்பது ஆச்சரியமானது.
இப்படி பேசிக் கொண்டே போகலாம்...
நடிப்புச் சுதேசிகள்....
பரமசிவன் கூப்பிடும் போது குளித்துக் கொண்டிருந்த பார்வதி உடனே வரவில்லையாம், சினமுற்ற பரமசிவன், மகன் பரசு இராமனை கூப்பிட்டு அவள் தலையை கொய்துவா என்றாராம். தந்தைச் சொல் மிக்க மந்திரமில்லை என்று உடனே வேண்டுகோளை நிறைவேற்றினானாம் பரசு இராமன்
பரசுராமன் சிவனின் மகனா ? தவறான தகவல் போல உள்ளது. சரி பார்க்கவும். ஆதாரம் ஏதும் உள்ளதா ? பரசுராமர் ஜமதக்னி முனிவரின் மகன் என்ற ஞாபகம்
இங்கு மட்டும் தான் நாம் சூத்திரன் ஆகி வெளியே நிற்கின்றோம்
கோவிலில் பூஜை செய்பவர் ஆதிசைவர்கள் - அவர்கள் பிராமணர்களா ?
//பரசுராமன் சிவனின் மகனா ? தவறான தகவல் போல உள்ளது. சரி பார்க்கவும். ஆதாரம் ஏதும் உள்ளதா ? பரசுராமர் ஜமதக்னி முனிவரின் மகன் என்ற ஞாபகம்//
அது ஒண்ணும் பெரிய விசயமே இல்லை. தலை வெட்டப்பட்டது தான் முக்கியம் மற்றும் சொல்ல வந்ததும். உங்கள் வசதிக்கு வேண்டுமானால் ஜெமதக்னி முனி பரமசிவன் அம்சம் என்று வைத்துக் கொள்ளுங்களேன் :)
கிறிஸ்தவர்களின் நில ஆக்ரமிப்பு பற்றி பதிவு எழுதி இன்னும் போஸ்ட் செய்யாமல் உள்ளது. வட போச்சு.
கோவியாரே, தவறான கதை.
//ஜெமதக்னி முனி பரமசிவன் அம்சம் //
இதுவும் தவறே .....
தெரியாத கதையை என் தவறாக உபயோகப் படுத்துகிறீர்கள். கதை தெரியாவிடில் எழுதக் கூடாது. துவேசம் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் எல்துஐ உபயோகிக்காதீர்கள்
// LK said...
கோவியாரே, தவறான கதை.
//ஜெமதக்னி முனி பரமசிவன் அம்சம் //
இதுவும் தவறே .....
தெரியாத கதையை என் தவறாக உபயோகப் படுத்துகிறீர்கள். கதை தெரியாவிடில் எழுதக் கூடாது. துவேசம் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் எல்துஐ உபயோகிக்காதீர்கள்//
ஜமதக்னி முனி கதை இன்னும் கேவலமானது, பரமசிவன் - பார்வதி இணைந்த உருவத்தில் பெண்ணை வலம் வரக்கூடாது என்பதற்காக வண்டாக உடலை துளைத்து ஆண் உடலை மட்டும் வழிபடும் படுகேவலமான பெண்ணிய சிந்தனைக்கதை
//செந்தழல் ரவி
கிறிஸ்தவர்களின் நில ஆக்ரமிப்பு பற்றி பதிவு எழுதி இன்னும் போஸ்ட் செய்யாமல் உள்ளது. வட போச்சு.//
பதிவுக்கு முந்து பந்திக்கு பிந்துன்னு பழமொழியை மாற்றனும்
//ஜமதக்னி முனி கதை இன்னும் கேவலமானது, பரமசிவன் - பார்வதி இணைந்த உருவத்தில் பெண்ணை வலம் வரக்கூடாது என்பதற்காக வண்டாக உடலை துளைத்து ஆண் உடலை மட்டும் வழிபடும் படுகேவலமான பெண்ணிய சிந்தனைக்கதை//
நீங்கள் குறிபிட்டது மீண்டும் தவறு. அது ஜமதக்னி முனிவர் அல்ல. மேலும், ஒரு குறிப்பிட்ட இறை உருவத்தை மட்டும் வெளிப்படுவது என்பது இன்றும் உள்ளது. இதற்கும் ஆணாதிக்க/பெண்ணாதிக்க சிந்தனைக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை.
நீங்கள் சொல்லிய சம்பவத்தில் வரும் முனிவர் ப்ருகு முனிவர்.
// கிறிஸ்தவர்களின் நில ஆக்ரமிப்பு பற்றி பதிவு எழுதி இன்னும் போஸ்ட் செய்யாமல் உள்ளது. வட போச்சு.
2:36 PM, August 10, 2010
Delete
Blogger LK said...
கோவியாரே, தவறான கதை.
//ஜெமதக்னி முனி பரமசிவன் அம்சம் //
இதுவும் தவறே .....
தெரியாத கதையை என் தவறாக உபயோகப் படுத்துகிறீர்கள். கதை தெரியாவிடில் எழுதக் கூடாது. துவேசம் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் எல்துஐ உபயோகிக்காதீர்கள்/
உங்களுக்கான கதையை தினமலர் சொல்லுது படித்துக்கொள்ளவும்
தவறை ஒத்துகொள்ளவும் ஒரு நெஞ்சு உரம் வேண்டும். எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதுமுன் ஆதாரங்களை சரி பார்த்து எழுதவும்.
//Ramachandranwrites said...
தவறை ஒத்துகொள்ளவும் ஒரு நெஞ்சு உரம் வேண்டும். எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதுமுன் ஆதாரங்களை சரி பார்த்து எழுதவும்.//
கதைக்கும் நேர்மைக்கும் என்னக் குறைவு, அதுதான் ஆதாரம் தினமலர் கட்டுரையை பின்னூட்டத்தில் சுட்டியாகக் கொடுத்து இருக்கிறேனே. உங்களுக்கு கத்திரிக்காய் சொத்தையாகத் தெரிந்தால் இல்லைன்னு நீங்கள் தான் காட்டனும், மாரியம்மன் தலையை மட்டும் வெட்டி வைத்து வழிபட காரணம் என்ன என்று சொல்லிவிட்டு புலம்பலாமே.
//அண்மையில் ஈரோட்டில் பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சி சார்ப்பில் இந்துக்களைத் திரட்டி மாரியம்மன் கோவில் நிலத்தை கிறித்துவர்களிடமிருந்து மீட்கும் மாபெரும் போராட்டம் நடைபெற்றது//
ஈரோடு கொஞ்சமாவது முன்னேறட்டும்னு ஒரு பாலம் கட்ட போறாங்க, அதை தடுக்க இந்த்துவா போடும் பிட்டு தான் கிஸ்துவர்களிடமிருந்து நிலம் மீட்பு!
உள்ளே ஒரு ரோடு இருக்காம், அது வழியா பாலம் கட்டலாம்னு சொல்றானுங்க, அங்கிருக்கும் சி.எஸ்.ஐ பள்ளியும் சொந்த இடம் இல்லைன்னும் சொல்றாங்க!
கருத்துரையிடுக