பின்பற்றுபவர்கள்

16 ஆகஸ்ட், 2010

கலவை 15 ஆகஸ்ட் 2010 !

விடுதலை நாள் : ஆகஸ்ட் 15 1947 க்கு முன்பும் காங்கிரஸ் கட்சி தான் இந்தியாவை ஆண்டது, தற்போதும் அப்படியே....இதுல சுதந்திர தினம் நாம கொண்டாடுவதற்கான காரணம் வெள்ளைக்கா'ரன்' ஓடிவிட்டான் என்பது தவிர்த்து வேறு எதுவும் உண்டா ?
இங்கிலாந்திடம் அடிமைப்பட்ட இந்தியா தற்போது இத்தாலிக்கு அடிமை. நல்லவேளை பிரதமர் பதவி வேண்டாம் என்று அந்தம்மா பெரிய மனசு பண்ணி மன்மோகனிடம் ஒப்படைத்துவிட்டார். முள்ளிவாய்கால் முள் வேலிகளுகள் மனிதர்கள் இல்லாத போது தமிழர்கள் அனைவருமே சுதந்திர தினம் கொண்டாடலாம். சொந்த நாட்டுக்குள் அடிமை மக்களை இருத்தி வைப்பதற்கு ஆதரவு கொடுக்கும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு நாம சுதந்திர தினம் கொண்டாடுவது பாதிக்கப்பட்டவர்களின் தீராத சாபத்தையே ஏற்படுத்தும்.

சன்திரன் : சன் டிவியைத் தவிர்த்து தமிழ் வழிச் செய்தி வழிக்கு வேறு வழி இல்லாததால் சன்னைப் பார்க்க வேண்டிய சூழல், தற்போது செய்திகளில் தலைப்புச் செய்தியாக எந்திரன் இசை வெளியீடுகள் செய்தியாகின்றன. எந்திரன் ரோபோவுக்கு பாரிஸில் இருந்து மாவு வாங்கிய விதம் (ப்ளாஸ்டராப் பாரிஸில் எந்திரன் செய்தது எப்படி?) எப்படி என்பதெல்லாம் இனி நிகழ்ச்சியாகும் போல, இன்னும் ஆறுமாதத்திற்கு சன் பக்கம் தலைகாட்டாமல் இருப்பதே நல்லதுன்னு நினைக்கிறேன். எந்திரனில் பணி புரிந்த டெக்னீசியன், டச்சப் பாய் பேட்டிகள் ஒவ்வொன்றாக வரும் போல தெரிகிறது (டெக்னீசியன், டச்சப்பாய்களை குறைத்துச் சொல்லவில்லை, அரைகுறையாக புரிந்து கொள்ள வேண்டாம்).

காங்கிரிட் வீடுகள் : குடிசைகளை அகற்றி காங்கிரிட் வீடுகள் கட்டப்படும் திட்டம் சுதந்திர நாளில் தமிழக அரசால் துவங்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. அரசு செலவில் ஓட்டு வங்கியை உருவாக்கும் திட்டம் என்பது தவிர்த்து வேறெதும் சொல்லத் தெரியவில்லை. ஏற்கனவே சமத்துவ புறங்கள் என்ன ஆயின, அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு ? எப்படி இருந்த போதிலும் தரமான வீடுகள் எப்போதும் கட்டித்தரப்படுவதில்லை. அரசு வீடுகள் ஐந்தாண்டுகள் கூட உறுதியாக இருப்பதில்லை. சென்ற முறை கருணாநிதி ஆட்சியில் பணப்புழக்கம் இல்லை என்று எதிர்கட்சிகளினால் குற்றம் சாட்டப்பட்டு ஆட்சி அகற்றப்பட்டது, இந்த முறை பணப்புழக்கம் இருக்கிறது என்றாலும் நடுத்தரவாசிகளின் சொந்த வீட்டுக் கனவு வெறும் கனவு தான். வீட்டு மனைகள் விலை, வீடுகட்டும் பொருள்கள் விலை இவையெல்லாம் கணக்கிட்டால் நகரங்களில் வீடுகட்டுவோம் என்கிற நடுத்தர கனவெல்லாம் என்றுமே நிரைவேறாது போலும். நடுத்தரவாசிகள் சொந்த வீடுகட்ட இனி புறநகரங்களுக்கு, கிராமங்களுக்குச் சென்றால் தான் உண்டு என்னும் நிலை தற்போது இருக்கிறது. புறநகரமாக இருந்தாலும் 25 லட்சத்திற்கு குறைவாக எவரும் ஓரளவு வசதியான வீட்டைக் கட்டிவிட முடியாது என்னும் நிலை தான்.

தனிமனித தாக்குதல் : வலைப்பதிவில் முன்னைப் போல் இல்லாமல் புரிந்துணர்வுகள் குறைந்துவிட்டன. கட்சி ஆதரவாளர்களால் வலைப்பதிவு ஊடகம் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, கட்சிகளையும், கட்சித்தலைவர்களையும் விமர்சனம் செய்தால் அடிப்பொடிகள் அடிக்காத குறையாக மோசமாக அர்சிக்கிறார்கள், முன்பெல்லாம் மதவெறியர்களால் அனானிகளால் அர்சிக்கப்படும் நிலை இருந்தது, தற்போது கட்சி அபிமானிகளால் அந்த நிலை, வலைப்பதிவில் தொடர்ந்து எழுதுவதும் பொதுவானவற்றை, மக்கள் பிரச்சனைகளை விவாதிப்பது கூட இயலாது போய்விடும் போல இருக்கிறது, Buzz ல் கூட அதே நிலைதான். வலைப்பதிவுகள் குழுமங்களாக குறிப்பிட்டவர்களுக்குள் செயல்பட்டால் தான் பாதுகாப்பானது என்னும் அடுத்தக் கட்டத்திற்குள் தள்ளிவிடும் வேலையை சிலர் முனைந்து செய்கிறார்கள், பெயர் குறிப்பிட விரும்பவில்லை. நாம பழகுவது கட்சிகாரனிடமா என்பது தெரியாமல் வலைப்பதிவர்களை நண்பர்களாக நினைப்பது என்னைப் பொருத்த அளவில் வீன் வேலை மற்றும் தேவையற்றது. கொள்கை சார்புடையவர்களிடம் தீவிரமாக விவாதம் செய்வது பலனற்றது மேலும் நாம் அவர்களின் எரிச்சலை பெற்றுக் கொள்கிறோம் என்பதை கடந்த ஓராண்டாக கண்டுவந்திருக்கிறேன் :(

இளையர்களுக்கான ஒலிம்பிக் : ஆகஸ்ட் 14ல் யூத் ஒலிம்பிக் 2010 சிங்கப்பூரில் கோலாகலமாக துவங்கியது, ஆகஸ்ட் 26 வரையில் நடைபெறும். விளையாட்டுகள் மற்றும் நடைபெறும் தேதி, பதக்கபட்டியல் ஆகியவற்றைக் காண இங்கே அழுத்துங்கள்.

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

//தனிமனித தாக்குதல் : வலைப்பதிவில் முன்னைப் போல் இல்லாமல் புரிந்துணர்வுகள் குறைந்துவிட்டன. கட்சி ஆதரவாளர்களால் வலைப்பதிவு ஊடகம் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது,//

ஆமாண்ணே அரைவேக்காடுகள் நிறைய எழுத வந்து கழுத்தை அறுக்கின்றனர்...

Kesavan சொன்னது…

இந்த மாதிரி கீழ்த்தரமாக எழுதுபவர்களின் வாலை ஓட்ட நறுக்க வேண்டும்

Kesavan சொன்னது…

இந்த மாதிரி கீழ்த்தரமாக எழுதுபவர்களின் வாலை ஓட்ட நறுக்க வேண்டும்

Unknown சொன்னது…

கரெக்டண்ணே..

இங்க யாருமே கருத்தோட மோத மாட்டேங்குறாங்க. கருத்து சொன்ன ஆளத்தான் தாக்கு தாக்குனு தாக்குறாங்க. என்னத்த சொல்ல.

கிரி சொன்னது…

//டெக்னீசியன், டச்சப்பாய்களை குறைத்துச் சொல்லவில்லை, அரைகுறையாக புரிந்து கொள்ள வேண்டாம்//

அந்த பயம் இருக்கட்டும் :-))) யோவ் எந்திரனை இழுக்கலைனா உங்களுக்கு தூக்கம் வராதா..

//Kesavan
இந்த மாதிரி கீழ்த்தரமாக எழுதுபவர்களின் வாலை ஓட்ட நறுக்க வேண்டும்//

ஹலோ கேசவன்! கோவியை எதுக்கு திட்டறீங்க :-))))

ஜோதிஜி சொன்னது…

கொள்கை சார்புடையவர்களிடம் தீவிரமாக விவாதம் செய்வது பலனற்றது மேலும் நாம் அவர்களின் எரிச்சலை பெற்றுக் கொள்கிறோம்

எனக்கு தாமத ஞானம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்