பின்பற்றுபவர்கள்

22 செப்டம்பர், 2007

விஜயகாந்தின் மதச்சார்பின்மையும், தமிழ்பற்றும் பல் இளிக்கிறது !

இதுநாள்வரை தாம் அல்லாவுக்காக குல்லா போடுபவர் என்றும் இஸ்லாமியர்கள் எனது ஒன்றுவிட்ட தம்பிகள் என்று சமத்துவம் சமதர்மம் பேசிய விஜய காந்து "இந்துக்களை மட்டுமே முதல்வர் தொடர்ந்து புண்படுத்தும் வகையில் பேசி வருகிறார்". ஆனால் அவர் மற்ற மதத்தினர் விஷயத்தில் தலையிடுவதில்லை. " என்று திருவாய் மலர்ந்துள்ளார். தேமுதிக என்ற தேர முடியாத திக்குமுக்கு கழக தொடக்கவிழாவில் பட்டை ( அந்த பட்டை அல்ல) நெற்றியில் அடித்துவந்து தம் இந்துத்துவ அடையாளத்தை வெளிப்படுத்தி தாம் தமிழர்களுக்காக பாடுபடப்போவதாகவும், மதசார்பற்றவர் என்றும் சொன்னார். "பட்டை" வெளிப்படையாக தெரிந்ததும் பாஜக அவரையே சுற்றி சுற்றி வந்து கூட்டணி அமைத்து சட்டமன்றத்தில் நுழைய முயற்சித்தது. விஜயகாந்தும் தமது இந்துத்துவ வேசம் வெளிப்பட்டுவிட்டால் (போட்ட) முதலும் மோசமாகி முற்றிலும் மோசமாகிவிடும் என்று தவிர்த்தார்.

எந்த கட்சியும் சரியில்லை என்று கருதிய சிலர் வேறுவழியின்றி மக்கள் ஆட்சி தத்துவத்திற்கு மதிப்பளிப்பதற்காக விஜயகாந்துக்கு ஓட்டுபோட்டனர், 60 விழுக்காடு பதிவான வாக்குகளில் 8% விழுக்காடு இவருக்கு கிடைத்தது. 234 தொகுதிகளில் நின்று இந்த வாக்கை பெற்றவர் வெறும் 25 தொகுதிகளில் நின்று காங்கிரசை இவருக்கு கிடைத்த 8% ஓட்டை வைத்து ஓட்டை கணக்கு போட்டு தாம் காங்கிரசை விட பெரிய கட்சி என்று சொல்லி வந்தார். அரசயலை கூர்ந்து கவனிப்பவர்கள் தவிர வேறு எவருக்கும் இதில் உள்ள சூட்சமம் புரியாது. விஜயகாந்துக்கு செல்வாக்கு இருப்பதாக அவரே ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினர். மதுரை இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் கிடைத்ததற்கு விஜயகாந்தின் ஊர் என்பதாலும், அவருடைய உறவினர்கள் என தெலுங்கு பேசுபவர்கள் அதிகம் இருப்பதாலும், ஜெயலலிதா எதிர்கட்சியாகிவிட்டதால் நம்பிக்கை இழந்ததால் விஜயகாந்துக்கு அதிக வாக்குகள் கிடைத்தது, இதைத்தவிர வேறு காரணங்கள் எதுவும் இருக்கவே முடியாது.

"இந்துக்களை மட்டுமே முதல்வர் தொடர்ந்து புண்படுத்தும் வகையில் பேசி வருகிறார். ஆனால் அவர் மற்ற மதத்தினர் விஷயத்தில் தலையிடுவதில்லை. " என்று சொல்லி இருப்பதனால் முஸ்லிம்களின் சகோதரன் என்று சொல்லி வந்த விஜயகாந்து இதன் வழி முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் கருணாநிதி திட்டவில்லையே ஆதங்கப்பட்டு இருப்பது நன்றாக தெரிகிறது. இவருடைய மறைமுக இந்துத்துவ முகமூடி கிழிந்து தொங்குகிறது. தவளை தன் வாயால் கெடும் என்ற "தமிழ் பழமொழியை" பின்வரும் தேர்தல்களில் விஜயகாந்து தெரிந்து கொள்வார்.

"திருவள்ளுவரைப் பற்றி புகழ்கிறீர்களே, அவர் எந்தக் கல்லூரியில் படித்தவர் ?"என்று கருணாநிதிக்கு எதிராக கேள்வி எழுப்பியதில் இருந்து இவருக்கு இதிகாச புராண கதைகளில் வரும் பாத்திரங்களுக்கும், ஒப்பற்றவர்களாக வாழ்ந்து மறைந்த திருவள்ளுவர் போன்றவர்களுக்கு முடிச்சு போடுவதில் இருந்து இவரின் இந்திய / தமிழக வரலாற்றின் அறியாமையும் வெளிப்பட்டுவிட்டது. எந்த ஒருதமிழனும் கேள்வி எழுப்ப துணியாத திருவள்ளுவரை, கற்பனை பாத்திரம் போல் திருவள்ளுவர் காலேஜில் படித்தாரா ? என்று கேள்வி எழுப்பியதில் இருந்தும், திருவள்ளுவரை தாம் புகழந்ததில்லை/மதிக்கவில்லை என்றும் மறைமுகமாக சொல்லி இருப்பதன் மூலம், தமிழகத்தில் பிறந்து, தமிழர்களால் புகழடைந்திருந்தாலும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட தமக்கு இருப்பது தமிழுணர்வு இல்லை என்று வெட்ட வெளிச்சமாக்க்கிக் கொண்டுள்ளார்.

விழித்துக் கொள்ளுங்கள் !

27 கருத்துகள்:

?????????? சொன்னது…

எவனெல்லாம் தமிழன் இல்லையோ அவனுங்க புத்தி எல்லாம் எப்படியாவது வெளிப்பட்டே தீரும்.

மாசிலா சொன்னது…

//இந்துக்களை மட்டுமே முதல்வர் தொடர்ந்து புண்படுத்தும் வகையில் பேசி வருகிறார்". ஆனால் அவர் மற்ற மதத்தினர் விஷயத்தில் தலையிடுவதில்லை.//

'எங்கப்பன் குதிருக்குள் இல்லை!' கதைதான் போங்கள்!

சட்டியில இருக்கிறதுதானப்பா, அகப்பையில வரும்!

இதற்கு ஒரு பதிவா?

ரொம்ப தைரியசாலிதான் நீங்க, கோ.வி!

வி.கா.வின் உதிர்ந்த முத்துக்களை பகிர்ந்தமைக்கு (கடைமைக்காக) நன்றி.
;-D

RATHNESH சொன்னது…

சரியான நேரத்தில் பதிலடி பதிவு. திமுகவிற்கும், அதிமுகவிற்கும், தானே மாற்று என்கிற மாயையை மக்கள் மத்தியில் உருவாக்கி விட்டதான மயக்கத்தில் இருக்கிறார் விஜய்காந்த். அவருக்கு எதிரி, வெளியே இல்லை; அவருடைய வாய்க்குள்ளேயே இருக்கிறது. முன்பே, திமுகவின் ஆரம்ப காலத்தில் கருணாநிதி அதில் கிடையாது என்பது போன்ற திடீர்க் கண்டுபிடிப்புகளால் தன் அரசியல் அறிவின் ஆழத்தை வெளிக்காட்டியவர் தானே இவர். இப்போது தன் தமிழார்வத்தையும் லேசாக வெளிச்சம் போட்டிருக்கிறார்.

RATHNESH

ஜெகதீசன் சொன்னது…

திருவள்ளுவரைப் பற்றிப் பேச இவருக்கு என்ன அருகதை இருக்கிறது?

? சொன்னது…

//எவனெல்லாம் தமிழன் இல்லையோ அவனுங்க புத்தி எல்லாம் எப்படியாவது வெளிப்பட்டே தீரும்.//

அப்படியா? பெரியார், கலைஞர், விஜயகாந்த் எல்லோரும் ஒரே இனமாமே? (அதாவது தமிழர் இல்லையாம்!)??????

TBCD சொன்னது…

கோவி,
விசய காந்தின் அறியாமையயை சுட்டிய நீங்கள் இதற்கு வேறு முலாம பூச முனைவது தவறு...

தமிழ் நாட்டில் பிறந்ததால் அவரின் பாரம்பரிய மொழியயை பேசக்கூடாது அதன் மேல் பற்று இருக்கக்கூடாது என்பது போல் உள்ளது உங்கள் கருத்து..அப்படி பார்த்தால், வெளிநாட்டில், தமிழ் வம்சாவழியினரை தமிழ் பேசுவதை அவர்கள் இருக்கும் நாட்டினர் கண்டித்தால் சரி என்பது போலாகிவிடும்..


இன்றைய அரசியல் தலைமுறை இப்படி தான் திரம் இல்லாமல் இருக்கிறது...

இது ஒரு தவறான வாதமாகும்..திருவல்ளுவரை கேள்வியே கேட்கக்கூடாது என்பதும் தவறு..

அவரின் சாதி, மதம், இனம் நமக்கு முக்கியம் இல்லை..அவர் ஒரு நல்ல தலைவரா...? இல்லையா என்பதை விவாதியுங்களேன்..

மர்ம வீரன் சொன்னது…

//அரசயலை கூர்ந்து கவனிப்பவர்கள் தவிர வேறு எவருக்கும் இதில் உள்ள சூட்சமம் புரியாது.//
சுய தம்பட்டம்?

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
கோவி,
விசய காந்தின் அறியாமையயை சுட்டிய நீங்கள் இதற்கு வேறு முலாம பூச முனைவது தவறு...

தமிழ் நாட்டில் பிறந்ததால் அவரின் பாரம்பரிய மொழியயை பேசக்கூடாது அதன் மேல் பற்று இருக்கக்கூடாது என்பது போல் உள்ளது உங்கள் கருத்து..அப்படி பார்த்தால், வெளிநாட்டில், தமிழ் வம்சாவழியினரை தமிழ் பேசுவதை அவர்கள் இருக்கும் நாட்டினர் கண்டித்தால் சரி என்பது போலாகிவிடும்..
//

டிபிசிடி,

"திருவள்ளுவரைப் பற்றி புகழ்கிறீர்களே, அவர் எந்தக் கல்லூரியில் படித்தவர் ?" என்று திருவள்ளுவரை கருணாநிதி மட்டும் புகழ்வதாக சுட்டி சொல்லுகிறார். ஏன் இவருக்கு திருவள்ளுவர் மீது பற்று இல்லையோ ? இவர் தமிழ்/தமிழர் பற்றோடு கேள்வி கேட்டு இருந்தால், "நாமெல்லாம் புகழும் திருவள்ளுவர் எந்த கல்லூரியில் படித்தவர் " என்ற கேட்டு இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவரவர் மொழியை பேசவேண்டாம் என்று எவருக்கும் சொல்ல தகுதியில்லை. ஆனால் "தமிழ்நாட்டில் பிறந்த தமிழன்" என்று சொல்லும் விஜயகாந்தின் மேற்படிய சுட்டுக்கள். அவர் போடும் இரட்டை வேடம் என்று தான் சொல்லி இருக்கிறேன்.

//வெளிநாட்டில், தமிழ் வம்சாவழியினரை தமிழ் பேசுவதை அவர்கள் இருக்கும் நாட்டினர் கண்டித்தால் சரி என்பது போலாகிவிடும்..//

எந்த நாட்டிற்கு எவர் சென்றாலும் அந்த நாட்டின் பேசும் மொழிக்கு மதிப்பு அளிக்கத்தான் வேண்டும். மாறாக "உன் நாட்டு தலைவனை வணங்குவது மட்டும் உயர்வா ?" என்று கேள்வி கேட்டால் பொட்டில் அறைவார்கள்.

//அவரின் சாதி, மதம், இனம் நமக்கு முக்கியம் இல்லை..அவர் ஒரு நல்ல தலைவரா...? இல்லையா என்பதை விவாதியுங்களேன்..
//

விஜயகாந்தின் அரசியல் அவரது மற்றொரு மெக திரைப்படம், அதில் பேசுவதெல்லாம் வசனம் மட்டுமே. தனது திருமணமண்டபத்தை காக்க எவ்வாறெல்லம் கீழ்தரமான அரசியல் செய்து தோற்றார் என்பது கண்கூடு.

bala சொன்னது…

ஜிகே அய்யா,
மஞ்ச துண்டு கேவலமாக ராமன் எந்த கல்லூரியில் படித்தார் என்று கேட்டதை கண்டு பொங்காத நீங்கள்,கேப்டன் அய்யா கேட்டவுடன் பொங்குவது அயோக்யத்தனம்.நீங்க ஏதோ ஒரு கல்லூரியில் படித்திருந்தாலும்,ஓஸி பிரியாணி குஞ்சுவோட அளவுக்கு தான் உங்களுக்கு IQ, என்று நிருபித்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
ஜிகே அய்யா,
மஞ்ச துண்டு கேவலமாக ராமன் எந்த கல்லூரியில் படித்தார் என்று கேட்டதை கண்டு பொங்காத நீங்கள்,கேப்டன் அய்யா கேட்டவுடன் பொங்குவது அயோக்யத்தனம்.நீங்க ஏதோ ஒரு கல்லூரியில் படித்திருந்தாலும்,ஓஸி பிரியாணி குஞ்சுவோட அளவுக்கு தான் உங்களுக்கு IQ, என்று நிருபித்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

பாலா
//

பாலா,
ஓசி பருப்பு சாதமும், தயிர் சாதமும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தான்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//
?????????? said...
எவனெல்லாம் தமிழன் இல்லையோ அவனுங்க புத்தி எல்லாம் எப்படியாவது வெளிப்பட்டே தீரும்.
//

அப்படியெல்லாம் சொல்ல முடியாது. தமிழ் தமிழ் என்று மேடையில் முழங்கி அதற்கு மாற்றாக செயல்படும் சிலர் இதுபோல் நடந்து கொள்வது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

கோவி.கண்ணன் சொன்னது…

//மாசிலா said...

'எங்கப்பன் குதிருக்குள் இல்லை!' கதைதான் போங்கள்!

சட்டியில இருக்கிறதுதானப்பா, அகப்பையில வரும்!

இதற்கு ஒரு பதிவா?

ரொம்ப தைரியசாலிதான் நீங்க, கோ.வி!

வி.கா.வின் உதிர்ந்த முத்துக்களை பகிர்ந்தமைக்கு (கடைமைக்காக) நன்றி.
;-D
//

மாசிலா,

இதுக்கும் தைரியத்துக்கும் என்ன தொடர்பு ? அவமானத்தில் குறுகாமல் மாற்று கருத்து சொல்வதற்கு பெயர் தைரியமா ? இது எல்லோருக்கும் இருக்கிறது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
சரியான நேரத்தில் பதிலடி பதிவு. திமுகவிற்கும், அதிமுகவிற்கும், தானே மாற்று என்கிற மாயையை மக்கள் மத்தியில் உருவாக்கி விட்டதான மயக்கத்தில் இருக்கிறார் விஜய்காந்த். அவருக்கு எதிரி, வெளியே இல்லை; அவருடைய வாய்க்குள்ளேயே இருக்கிறது. முன்பே, திமுகவின் ஆரம்ப காலத்தில் கருணாநிதி அதில் கிடையாது என்பது போன்ற திடீர்க் கண்டுபிடிப்புகளால் தன் அரசியல் அறிவின் ஆழத்தை வெளிக்காட்டியவர் தானே இவர். இப்போது தன் தமிழார்வத்தையும் லேசாக வெளிச்சம் போட்டிருக்கிறார்.

RATHNESH
//

விஜயகாந்த் பல்டி அடிப்பார். அரசியல் / நடிகர் என்று இருவேடம் போடுபவர் ஆயிற்றே. அவர் பேசிய வசனம் திரைக்கதையாக வைத்து அதற்கு பெரிய வசனம் எழுதி அடுத்த மேடையில் பேசுவார்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
திருவள்ளுவரைப் பற்றிப் பேச இவருக்கு என்ன அருகதை இருக்கிறது?
//
ஜெகதீசன்,
அது இல்லை என்று அவரே நினைத்துக் கொண்டுதானே பேசி இருக்கிறார்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நந்தவனத்து ஆண்டி said...

அப்படியா? பெரியார், கலைஞர், விஜயகாந்த் எல்லோரும் ஒரே இனமாமே? (அதாவது தமிழர் இல்லையாம்!)??????
//

பெரியாரையும் கலைஞரையுமே ஒப்பிட முடியாது. இதில் விஜயகாந்தை ...
நல்ல தமாஷ் சார் நீங்க செய்வது.
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//மர்ம வீரன் said...
//அரசயலை கூர்ந்து கவனிப்பவர்கள் தவிர வேறு எவருக்கும் இதில் உள்ள சூட்சமம் புரியாது.//
சுய தம்பட்டம்?
//

இருந்துட்டு போகட்டுமே, என்பதிவில் நான் எழுதுவதற்கு எவரிடம் கேட்கவேண்டும் ?

நீங்க வேண்டுமானல் ஒரு பதிவு ஆரம்பித்து உங்கள் சுய மேளத்தையே அடித்துக் கொள்ளுங்களேன்.
:)

?????????? சொன்னது…

பாலாவுக்கு கொடுத்த செருப்படி ஆகா.ரசித்தேன்.நந்தவனத்து ஆண்டி என்ன லூசுக்கூவா?

யாரெல்லாம் தமிழன் இல்லையோ அவன் புத்தி வெளிப்பட்டே தீரும் என்பதை மீண்டும் சொல்லிகொள்கிறேன்.

bala சொன்னது…

//யாரெல்லாம் தமிழன் இல்லையோ அவன் புத்தி வெளிப்பட்டே தீரும் என்பதை மீண்டும் சொல்லிகொள்கிறேன்//

?????? அய்யா என்ன சொல்லுது?தமிழனுக்கு புத்தி கிடையாது,அதனால வெளிப்படாதுன்னா?இதைவிட தமிழனை கேவலமா சொல்லமுடியுமா?ஓஸி பிரியாணிக்காக கோவிந்தா போடும் குஞ்சு கோவி இதை எப்படி அனுமதித்தது?

பாலா

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

நுணலும் கெடும் வாயால்...தெரியாமலா? பெரியோர் கூறினார்கள்.
விஜயகாந் அவசரப்படுகிறார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...

?????? அய்யா என்ன சொல்லுது?தமிழனுக்கு புத்தி கிடையாது,அதனால வெளிப்படாதுன்னா?இதைவிட தமிழனை கேவலமா சொல்லமுடியுமா?ஓஸி பிரியாணிக்காக கோவிந்தா போடும் குஞ்சு கோவி இதை எப்படி அனுமதித்தது?

பாலா
//

பாலா ஐயா,

பிரியாணியோ, பருப்பு சாம்பாரோ ? ஆபாசம் இல்லை என்றால் வெளியிடுவேன். படுகேவலமான உங்கள் பின்னூட்டங்களை வெளி இட்டுக்கிறேன்...

கூல்ல்ல்ல்...... ( சிவாஜி பட ரஜினி ஸ்டைலில் படிக்கவும்.)

:)))))))))

nayanan சொன்னது…

//விஜயகாந்துக்கு செல்வாக்கு இருப்பதாக அவரே ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினர். மதுரை இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் கிடைத்ததற்கு விஜயகாந்தின் ஊர் என்பதாலும், அவருடைய உறவினர்கள் என தெலுங்கு பேசுபவர்கள் அதிகம் இருப்பதாலும், ஜெயலலிதா எதிர்கட்சியாகிவிட்டதால் நம்பிக்கை இழந்ததால் விஜயகாந்துக்கு அதிக வாக்குகள் கிடைத்தது, இதைத்தவிர வேறு காரணங்கள் எதுவும் இருக்கவே முடியாது.
//

//
தவளை தன் வாயால் கெடும் என்ற "தமிழ் பழமொழியை" பின்வரும் தேர்தல்களில் விஜயகாந்து தெரிந்து கொள்வார்.
//

திரு.கண்ணன், தங்களின் கூரிய
அரசியல் பார்வைக்குப் பாராட்டுகள்.

தமிழ்நாடு கண்டு கொண்டிருக்கும் "அரிதாரம் பூசிய இன்னொரு அவலட்சணம்" விசயகாந்த்.

திருவள்ளுவர் கேள்விக்கு அப்பாற்பட்டவரா? என்று கேட்பவர்களுக்கு "இல்லை" என்றே பதில் சொல்லலாம். ஆனால் அந்தக் கேள்வியை யார் கேட்கிறார்கள் என்பதும் எந்தச் சூழலில் கேட்கிறார்கள் என்பதும்தான் முக்கியம்.

இதே கேள்வியை அத்வானியோ அல்லது வேதாந்தியோ கேட்டிருந்தால்
ஏன், தமிழக எல்லையைக் கடந்த யார் கேட்டிருந்தாலும் நாம் அவர்களுக்கு பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். ஆனால்,
தமிழ்நாட்டு மக்களின் காசிலேயே வாழ்ந்து தமிழ்நாட்டிற்கே இரண்டகம் செய்து வரும் செயலலிதா, சு.சாமி,
இராம், சங்கராச்சாரியார் மேலும் இவர்களின் அடிப்பொடிகள் வரிசையில் இன்று விசயகாந்தும்
இடம் பெற்றிருக்கிறார் என்பது உண்மை.

அருமையான பதிவு.
பாராட்டுகள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

? சொன்னது…

//நந்தவனத்து ஆண்டி என்ன லூசுக்கூவா?//


ஏங்க கோவி அவர்களே கேள்விக்குறி எழுதிய கெட்டவார்த்தை உமக்கு தெரியவில்லையா?
இது ஆபாசம் இல்லையா?

ஒரு வேளை அது கெட்ட வார்த்தை என உமக்கு தோன்றவில்லை எனில் இது கேள்விக்குறிக்கு ... நீ கேள்விக்கு சொல்ல பதில் முடியாத கேனக்கூ!

கோவி.கண்ணன் சொன்னது…

//நந்தவனத்து ஆண்டி said...
//நந்தவனத்து ஆண்டி என்ன லூசுக்கூவா?//


ஏங்க கோவி அவர்களே கேள்விக்குறி எழுதிய கெட்டவார்த்தை உமக்கு தெரியவில்லையா?
இது ஆபாசம் இல்லையா?

ஒரு வேளை அது கெட்ட வார்த்தை என உமக்கு தோன்றவில்லை எனில் இது கேள்விக்குறிக்கு ... நீ கேள்விக்கு சொல்ல பதில் முடியாத கேனக்கூ!
//

அவரு சொன்னதை லூசுக்கூ(ட்டம்) என்று எடுத்துக் கொண்டேன். நீங்க சொன்னதை கேணக்கூ(ட்டம்) என்று எடுத்துக் கொள்கிறேன்.

இல்லை, அவரும் திட்டினார் அதற்காக உங்களை திட்டினேன் என்று நீங்களே ஒப்புதல் அளித்தாலும் சரி.

:)

TBCD சொன்னது…

//*ஏன் இவருக்கு திருவள்ளுவர் மீது பற்று இல்லையோ ? இவர் தமிழ்/தமிழர் பற்றோடு கேள்வி கேட்டு இருந்தால், "நாமெல்லாம் புகழும் திருவள்ளுவர் எந்த கல்லூரியில் படித்தவர் " என்ற கேட்டு இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவரவர் மொழியை பேசவேண்டாம் என்று எவருக்கும் சொல்ல தகுதியில்லை. ஆனால் "தமிழ்நாட்டில் பிறந்த தமிழன்" என்று சொல்லும் விஜயகாந்தின் மேற்படிய சுட்டுக்கள். அவர் போடும் இரட்டை வேடம் என்று தான் சொல்லி இருக்கிறேன்.
*//
கோவி எல்லோரும் ஒரே மாதிரியாக சிந்திப்பதில்லை...அவரின் துடுக்குத்தனமான வாதத்தை வைத்து அவருக்கு தெலுங்கர் அதனால், அவருக்கு தமிழ் பற்று இல்லை என்று சாயம் பூச வேண்டாம் என்று தான் சொல்ல வருகிறேன்..என் கருத்து, அவருக்கு தெலுங்கும் சரி வர தெரியாது என்பதே..அவரி கருத்து தவறா இல்லையா என்பது தனி வாதம்.
திருவள்ளூவர், எல்லா தமிழர்க்கும் ஆதர்சமாக இருக்க வேண்டும் எனபது என்ன கட்டாயமா..நாம் என்ன ராணுவ ஆட்சியிலா இருக்கிறோம். சனநாயக நாட்டிலே கலைஞருக்கு உரிமை என்றால், இவரைக் கேட்க் விசயகாந்துக்கு உரிமை உண்டு.

//*விஜயகாந்தின் அரசியல் அவரது மற்றொரு மெக திரைப்படம், அதில் பேசுவதெல்லாம் வசனம் மட்டுமே. தனது திருமணமண்டபத்தை காக்க எவ்வாறெல்லம் கீழ்தரமான அரசியல் செய்து தோற்றார் என்பது கண்கூடு.*//
எரிகிற கொள்ளியிலே எந்த கொள்ளி நல்ல கொள்ளி..இவர் புதியவர்....மாற்றி வாக்குளித்து நாம் என்ன கண்டோம்..இது நாள் வரையிலே...இன்னும்..கலைஞரின் பேரன் தான் ஆள வேண்டும் என்று, அடிமை மனோபாவம் நமகெதற்கு...கலைஞர், அண்ணா, போன்றவர்களுக்கு நல்ல ஆசான் இருந்தார்கள், இவருக்கு அந்த நல்வினை இல்லை. மேடை ஏறும் அனைவருமே மக்களிடையே பூசலை உருவாக்ககூடிய வகையிலே பேசுதல் கூடாது என்பது என் கருத்து..அது விசயகாந்து ஆனாலும், சரி..அது கலைஞர் ஆனாலும் சரி..

அழகிரி போன்ற பிள்ளைகளுக்காக தமிழ நாட்டை அடகு வைக்கும் கருணாநிதிக்கு ஒரு மாற்று தேவை..அது நல்லதை சொல்லும், செய்யும் தலைவர்கள் யாராக இருந்தாலும் சரி...அப்படி ஒரு தலைவர் இன்னும் தமிழ் பேசும் தமிழ் மக்களுக்காக இன்னும் வரவில்லை..(மாலடிமை...பழைய தலைவர்..அதே குடும்ப தலைவர்..)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
கோவி எல்லோரும் ஒரே மாதிரியாக சிந்திப்பதில்லை...அவரின் துடுக்குத்தனமான வாதத்தை வைத்து அவருக்கு தெலுங்கர் அதனால், அவருக்கு தமிழ் பற்று இல்லை என்று சாயம் பூச வேண்டாம் என்று தான் சொல்ல வருகிறேன்..என் கருத்து, அவருக்கு தெலுங்கும் சரி வர தெரியாது என்பதே..அவரி கருத்து தவறா இல்லையா என்பது தனி வாதம்.//

TBCD ஐயா, அவர் கட்சி ஆரம்பிக்கும் முன்பே அவரது அலுவலகத்தில் தெலுங்கு பேசுபவர்களுக்குத்தான் அதிக இடம் கொடுத்திருக்கிறாராம். மேடையில் முழங்கும் அவரே முழங்கும் அளவுக்கு விஜயகாந்த் ஒன்றும் தூய அரசியல் வாதியல்ல.
நாமாகவே யாரும் அவரை தெலுங்கர் என்று நினைப்பதில்லை. ஆனால் அவரது பேச்சு அப்படி நினைக்க வைக்க அவரேதான் காரணம்.

//திருவள்ளூவர், எல்லா தமிழர்க்கும் ஆதர்சமாக இருக்க வேண்டும் எனபது என்ன கட்டாயமா..நாம் என்ன ராணுவ ஆட்சியிலா இருக்கிறோம். சனநாயக நாட்டிலே கலைஞருக்கு உரிமை என்றால், இவரைக் கேட்க் விசயகாந்துக்கு உரிமை உண்டு. //

திருகுறள் குறித்து கூட காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்கள் இருப்பதாக விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் திருவள்ளுவர் எந்த கல்லூரியில் படித்தார் என்பதை இந்துமதத்தில் இருந்தாலும் எந்த தமிழனும் பெரும்புலவர் குறித்து கேள்வி எழுப்பமாட்டான். விவாதம் எல்லாம் குறளுக்கு மட்டுமே அதை எழுதியவருக்கு அல்ல.

"திருவள்ளுவரைப் பற்றி புகழ்கிறீர்களே" - என்பதில் அவராகவே தமது அன்னிய தன்மையை சொல்லி இருக்கிறார். விமர்சிக்க உரிமை எவருக்கும் இருக்கிறது. பொறுப்பற்ற விமர்சனங்களுக்கு வரும் எதிர்வினைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கலைஞர் தாம் இராமனைப் பற்றி சொல்லவில்லை என்று அறிக்கை விடவில்லையே. அவரும் விமர்சனங்களை ஏற்றுக் கொண்டுதான் உள்ளார்.

//எரிகிற கொள்ளியிலே எந்த கொள்ளி நல்ல கொள்ளி..இவர் புதியவர்....மாற்றி வாக்குளித்து நாம் என்ன கண்டோம்..இது நாள் வரையிலே...இன்னும்..கலைஞரின் பேரன் தான் ஆள வேண்டும் என்று, அடிமை மனோபாவம் நமகெதற்கு...கலைஞர், அண்ணா, போன்றவர்களுக்கு நல்ல ஆசான் இருந்தார்கள், இவருக்கு அந்த நல்வினை இல்லை. மேடை ஏறும் அனைவருமே மக்களிடையே பூசலை உருவாக்ககூடிய வகையிலே பேசுதல் கூடாது என்பது என் கருத்து..அது விசயகாந்து ஆனாலும், சரி..அது கலைஞர் ஆனாலும் சரி..

அழகிரி போன்ற பிள்ளைகளுக்காக தமிழ நாட்டை அடகு வைக்கும் கருணாநிதிக்கு ஒரு மாற்று தேவை..அது நல்லதை சொல்லும், செய்யும் தலைவர்கள் யாராக இருந்தாலும் சரி...அப்படி ஒரு தலைவர் இன்னும் தமிழ் பேசும் தமிழ் மக்களுக்காக இன்னும் வரவில்லை..(மாலடிமை...பழைய தலைவர்..அதே குடும்ப தலைவர்..)
//

நான் கலைஞரின் குடும்பமே உத்தமானது, அல்லது அவர்கள் தான் பாரம்பரையாக ஆளவேண்டும் என்று எங்கேயும் சொன்னது கிடையாது. நானும் பல பதிவுகளில் கலைஞரை விமர்சித்திருக்கிறேன். எனவே இங்கு விஜயகாந்தப் பற்றி எழுதியது காழ்ப்புவோ, உறைப்போ கிடையாது.

கலைஞர், ஜெ போன்று அரசியல் வாதிகள் எதைப் பேசினாலும் எதாவது விமர்சனம் வரத்தானே செய்யும். ஒரு தலைவர் கருத்து சொல்கிறாரென்றால் விமர்சனங்கள் எழும், ஊடக்கங்கள் காதை தீட்டிக் கொள்ளும், ஏன் கலவரங்கள் கூட வரும்.

இராமர் விசயத்தில் கலைஞர் எழுப்பிய ஆட்சேபங்களை விட ஜெ ஆட்சியில் சிறு தெய்வ மதவழிபபட்டில் செய்த இழிவுகள் அதிகம்.

TBCD சொன்னது…

//*"திருவள்ளுவரைப் பற்றி புகழ்கிறீர்களே" - என்பதில் அவராகவே தமது அன்னிய தன்மையை சொல்லி இருக்கிறார்.*//
இதில் அவர் முட்டாள்தனத்தைக் காட்டியிருக்கிறார் என்று சொல்லலாமே..ஏன் அவர் அன்னியர் என்று சொல்ல வேண்டும்...அதை தான் நான்..சொல்ல வருகிறேன்...கருத்துக்களுக்கு சாதி முலம் பூசுவது எப்படி தவறோ..அதே போல் மொழி, இனம் முலாம் பூசுவதும் தவறு...

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
//*"திருவள்ளுவரைப் பற்றி புகழ்கிறீர்களே" - என்பதில் அவராகவே தமது அன்னிய தன்மையை சொல்லி இருக்கிறார்.*//
இதில் அவர் முட்டாள்தனத்தைக் காட்டியிருக்கிறார் என்று சொல்லலாமே..ஏன் அவர் அன்னியர் என்று சொல்ல வேண்டும்...அதை தான் நான்..சொல்ல வருகிறேன்...கருத்துக்களுக்கு சாதி முலம் பூசுவது எப்படி தவறோ..அதே போல் மொழி, இனம் முலாம் பூசுவதும் தவறு...//

அவரே தாம் அன்னியர் என்று வெளிப்படையாக சொல்லவில்லை என்பதுதான் உங்க ஆதங்கமா ? :)
யாரும் முலாம் பூசலை, அவரே பூசிக் கொண்ட அரிதாரம் தான் பல் இளிக்குது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்