6 ஜூலை, 2006

உடன்கட்டை !!!



அந்த அவலம்,
இன்றும் உடன்கட்டை தொடர்கிறதே ....
ஏன் இந்த நின்தனை ?

இராஜா ராம்மோகன்ராய்
தற்போது இல்லையென்று
துணிச்சலுடன் அந்த செயல்
இன்றும் தொடர்கிறதே !

புளு கிராஸ் மெம்பர்களே !
விழித்துக் கொள்ளுங்கள் ...

சனிப் பொணம் தனியாகப்
போகது என்று ...
தலை கீழாக கட்டப்பட்டு,
ஒரு கோழிக் குஞ்சு ...
விருப்பின்றி உடன் கட்டை
ஏறுகிறப் போகிறதாம் !

எதற்கு இந்த தண்டனை ?
என்ன அநியாயம் இது !

5 கருத்துகள்:

  1. //சனிப் பொணம் தனியாகப்
    போகது என்று ...
    தலை கீழாக கட்டப்பட்டு,
    ஒரு கோழிக் குஞ்சு ...
    விருப்பின்றி உடன் கட்டை
    ஏறுகிறப் போகிறதாம் !
    //

    சீரியஸான மேட்டரா அதே சமயம் நச்சுன்னு சூப்பராவும் எழுதி என்னை கலாய்க்க விடாமல் என் கைகளை கட்டிப் போடுவது ஏனோ?

    பதிலளிநீக்கு
  2. //
    நாமக்கல் சிபி @15516963 said...
    சீரியஸான மேட்டரா அதே சமயம் நச்சுன்னு சூப்பராவும் எழுதி என்னை கலாய்க்க விடாமல் என் கைகளை கட்டிப் போடுவது ஏனோ? //
    ஆமாங்க சிபி ... ஊரில் பார்த்திருக்கிறேன் ... இந்த பெருசுங்கல்லாம் சேர்ந்து கொண்டு இந்த கூத்தை அரங்கேற்றும்

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கவிதையைப் படித்த போது அருட்பெருங்கடல் வள்ளலாரின் " வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றது.

    பதிலளிநீக்கு
  4. //கலை அரசன் said...
    உங்கள் கவிதையைப் படித்த போது அருட்பெருங்கடல் வள்ளலாரின் " வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றது.
    //
    சரியாக சொன்னீர்கள்...வள்ளலாரின் தாக்கமும் எனக்கு உண்டு

    பதிலளிநீக்கு
  5. கோவி.கண்ணன் அய்யா,

    கவிதை மற்றும் கருத்து அருமை.

    1000 பெரியார் வந்தாலும் இவங்களை திருத்தமுடியாது......

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !