10 ஜூலை, 2006

கண்டதே(வி) காட்சி !


அன்று
ஊர் கூடுவதற்காக
இழுபட்ட தேர்கள்
இன்று
தேர்கள் கூடுவதால்
ஊர்கள் இழுபடுகின்றன
வீன்
வம்புக்காகவும்,
வீம்புக்காகவும் !

12 கருத்துகள்:

  1. மிகப் பொருத்தமான கவிதை!
    அன்று கூடிவாழ்ந்தால் கோடி நன்மை,
    இன்று கூடியிருந்தால் 144!

    பதிலளிநீக்கு
  2. //At 7:45 PM, மணியன் said…

    மிகப் பொருத்தமான கவிதை!
    அன்று கூடிவாழ்ந்தால் கோடி நன்மை,
    இன்று கூடியிருந்தால் 144!
    //
    திரு மணியன் அவர்களே
    குறும்கவிதை வடிவில் அழகாக சொல்கிறீர்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  3. ஆண்டவனுக்கு நடக்கும் அவமானம்!
    யோகன் பாரிஸ்

    பதிலளிநீக்கு
  4. //paarvai said...
    ஆண்டவனுக்கு நடக்கும் அவமானம்!
    யோகன் பாரிஸ்
    //
    யோகன்,
    ஆண்டவன் பெயரில் நடக்கும் அவமானங்கள்

    பதிலளிநீக்கு
  5. நல்ல சிந்தனை
    நல்ல கவிதை
    வாழ்த்துக்கள்....




    அன்புடன்...
    சரவணன்.

    பதிலளிநீக்கு
  6. உண்மையைச் சொன்னீர்கள்
    கண்டதேவியின் தேரையும் காண வைத்தீர்கள்

    பதிலளிநீக்கு
  7. //At 9:03 PM, உங்கள் நண்பன் said…
    நல்ல சிந்தனை
    நல்ல கவிதை
    வாழ்த்துக்கள்....

    அன்புடன்...
    சரவணன்.
    //
    அன்பு சரவணன் ... வாழ்த்துக்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. //Ennar said...
    உண்மையைச் சொன்னீர்கள்
    கண்டதேவியின் தேரையும் காண வைத்தீர்கள்
    //
    Ennar
    கருத்துக்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. கன்டதேவிகளும், பாப்பாரப்பட்டிகளும், கீரிப்பாளையங்களும்
    தமிழகத்தின்,
    தமிழரின்,
    தமிழின்
    அவமானச் சின்னங்கள்!

    இவற்றை இன்னும் ஒழிக்காமல்,
    முப்பதான்டு ஆண்டேன் எனச்சொல்லுவதில்
    என்ன பெருமை இருக்கிறது?!

    பதிலளிநீக்கு
  10. //கன்டதேவிகளும், பாப்பாரப்பட்டிகளும், கீரிப்பாளையங்களும்//
    நாட்டார் மங்களம் விடுபட்டு போய்விட்டது.

    பதிலளிநீக்கு
  11. ///ஆண்டவனுக்கு நடக்கும் அவமானம்!
    ///

    உள்குத்தோ ?

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !