7 ஜூலை, 2006

மாறாத இயல்புகள் ...


இன்றும்,
இலக்கு நோக்கி சரியான
இடத்திற்கு செல்கிறது
மேகப் பஞ்சினுள் தண்ணீர் !

அச்சு பிசகாமல்
அதன் சுற்றுப்பாதையில்
உருண்டு செல்கிறது பூமி !

ஒப்பற்ற ஒளிக் கதிர்களை தந்து
ஒளிர்ந்து கொண்டிருக்கிறது
கதிரவன் !

மூலை முடுக்கு எங்கும்
மூச்சின் சுவாசத்தை
சீர் செய்கிறது காற்று !

ஓசோன் படலத்தை தாண்டி
ஓம்கார நிசப்தத்தில் தூய்மையாக
இருக்கிறது வானம் !

இயன்றவரை நானும் என்
இயல்பு மகிழ்ச்சியில்
திளைத்து மலர்வேன்
இன்றும் !

படம் உதவி : நன்றி திரு சிறில் அலெக்ஸ்

9 கருத்துகள்:

  1. ஆம்! இப்போழுதே சிரிக்கத் தொடங்குவீர்!

    பதிலளிநீக்கு
  2. //நாமக்கல் சிபி @15516963 said...
    ஆம்! இப்போழுதே சிரிக்கத் தொடங்குவீர்! //
    கூடவே வாங்க .....:-)

    பதிலளிநீக்கு
  3. ///
    ஓசோன் படலத்தை தாண்டி
    ஓம்கார நிசப்தத்தில் தூய்மையாக
    இருக்கிறது வானம் !
    ///

    இது நல்லயிருக்குங்க...

    பதிலளிநீக்கு
  4. //குமரன் எண்ணம் said...
    ஓசோன் படலத்தை தாண்டி
    ஓம்கார நிசப்தத்தில் தூய்மையாக
    இருக்கிறது வானம் !

    இது நல்லயிருக்குங்க...
    //
    நன்றி குமரன், நன்றி !!
    திடிரென்று பஞ்ச பூதங்களும் அவற்றின் தன்மைகளும் ஞாபகம் வந்தது ... கூடவே என்னையும் அதில் இணைத்துக் கொண்டேன்

    பதிலளிநீக்கு
  5. ம்ம் நல்லா தான் இருக்கு ஒவ்வொன்னும்.....

    பதிலளிநீக்கு
  6. நன்றாக உள்ளது..

    நன்றி

    பதிலளிநீக்கு
  7. கவிதை கலக்கல். எல்லா வரிகளும் கவர்கின்றது.

    பதிலளிநீக்கு
  8. அட நம்ம படத்த வச்சு ஒரு கவிதை...

    அதுவும் நல்ல கவிதை..

    வாழ்த்துக்கள்.

    :)

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !