கார்த்திக் - ஜெஸ்ஸி - பாஸ்தா !
Saturday, February 27, 2010
இளைய சூப்பர் ஸ்டார் என சிம்புவின் அறிமுகத்துடன் துவங்குகிறது படம், பொறியியல் கல்லூரி முடித்து திரையில் இயக்குனராக வாய்ப்புக்கு அலையும் வாலிபனாக சிம்பு, மலையாளம், ஆங்கிலம் கூடவே தமிழ் மிகுதியாக பேசும் சிம்புவை விட வயதில் கூடியவராக த்ரிஷா அறிமுகம் ஆகுகிறார்கள், முதல் சந்திபிலேயே இருவருக்கும் பற்றிக் கொள்கிறதாம், அதை சிம்பு வெளிப்படுத்த துடித்து வெளிப்படுத்துகிறார். மதம், பெற்றோர் எதிர்ப்பு இவைகளை சுட்டிக்காட்டி மறுத்தப்படியே சிம்புவுக்காக ஏங்கும் த்ரிஷா. த்ரிஷாவை விரட்டிக் கொண்டு கேரளா வரை செல்லும் காதல் பின்னர் சென்னை திரும்பும் வழியில் இருவரும் நெருக்கமாக இருக்கும் தொடர்வண்டி காட்சிகள். த்ரிஷாவின் வீட்டுக்கு தெரிவதால் காதலுக்கு பலமான எதிர்ப்பு, இடையில் த்ரிஷாவுக்கு தேவலயத்தில் ஆலப்புழையில் திருமணம் நடை பெறும் நேரத்தில் வேண்டாம் என்று ஓடிவரும் த்ரிஷா......எனக்கு ஏன் உன்னை புடிச்சிருக்கு, உன்னை ஏன் நான் காதலிக்கனும் படம் முழுவதும் இதையே திரும்ப திரும்ப பேசி சலிக்க வைக்கிறார்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்பம் பெற்றே ஆகவேண்டும் போன்ற படித்தவர்களிடம் எடுபடாத இந்த காலத்திலும் அலைகள் ஓய்வதில்லை மற்றும் பல படங்களில் காட்டிய அதே பார்முலா.....திகட்டுகிறது......போதும் விட்டுடுங்க
படத்தின் இறுதி காட்சியாக காதலர்கள் சேர்ந்தாங்கன்னு சிம்பு எடுக்கும் படத்தின் முடிவாகவும் சேரவில்லை என்பது படத்தின் முடிவாகவும் காட்டுறாங்க படம் முடிவினால் தொங்கினால் எதையாதாவது ஒண்ணை வெட்டிவிட்டு ஒட்டலாம் என்ற திட்டம் போல. கவுதம் மேனன் தமிழ் சினிமாவை ஒலக தரத்திற்கு மாற்றுகிறேன் என்கிற பேரில் முத்த காட்சிகளை படம் முழுவதும் ஓட விடுகிறார். சிறுவர்களையும் பெண்களையும் அழைத்துச் செல்பவர்கள் நெளியக் கூடும். நாயகனும் நாயகியும் அழகானவர்களாகவும் அவங்க இல்லத்து உறுப்பினர்கள் சுமாரனவர்களாகவும் காட்டுவது இந்த படத்திலும் தொடருகிறது. ஏஆர் ரஹ்மான் இசை பாடல்கள் வரி தெளிவாக புரியவில்லை. வரிகள் இருக்கிறது என்பதை ஆங்கில துணை தலைப்புகள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடிகிறது (வெளி நாட்டில் வெளியாகும் படங்களில் இவை உண்டு)
சிம்புவுக்கு நண்பராக வரும் கேமராமேன் சிரிப்பை வரவழைக்கும் இயல்பான பேச்சுரை மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது. படத்தில் சிம்புவும் அவரும் மட்டுமே நன்றாக செய்திருக்கிறார்கள், 75 விழுக்காடு சிம்பு த்ரிஷா காட்சிகள் தான், மற்ற கவுதம் மேனன் படங்களைப் போலவே கதாநாயகனின், நாயகியின் குரல் படம் முழுவதும் பேசுகிறது. கவுதம் மேனனின் ஆக்சன் படங்கள் அளவுக்கு காதல் படங்கள் எடுபடவில்லை. சி செண்டர் எனப்படும் சிறு நகரங்களில் படம் ஒடாது என்றே நினைக்கிறேன். மிகவும் மெதுவாக நகர்கிறது. கல்லூரி மாண மாணவிகளுக்கு த்ரிஷா மேல் ஈர்ப்பு இருக்குமான்னு தெரியவில்லை ஏ பி செண்டர்களிலும் ஓடுமான்னு தெரியவில்லை, தயாரிப்பாளர் உதய நிதியின் கவலை அதை விடுவோம். திருமணம் ஆகாத இளம் பெண்கள் புடவை கட்டுவது இந்த படத்தின் வழியாக மறுபடியும் பேஷனாகலாம், படத்தில் த்ரிஷா புடைவைக் காட்சிகள் நிறைய இருக்கிறது.
இந்த படத்தின் மூலம் என்ன சொல்லவருகிறார்கள் என்றே தெரியவில்லை, கிறித்துவ மலையாள பெண்ணை தமிழ் இந்து வாலிபன் காதலித்தால் அவன் நிறைய அலையனும் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது தான் கவுதம் சொல்ல வருகிறாரான்னு தெரியல. படம் முழுவதும் காதல் பிரிவு ஏற்கனவே 80 களில் தென்றலே என்னைத் தொடு ஜெயஸ்ரீ மற்றும் மோகன் நடிப்பில் வெளியாகி இருந்தது, அது சுவையார்வமாக இருந்தது. உதட்டு முத்தம் சென்சார் படாம இருக்க அதை அமெரிக்க சூழலில் எடுக்கலாம் என்பதைத் தவிர கவுதம் அமெரிக்கா வரை படத்தை இழுத்ததற்கு வேறு அழுத்தமான காரணம் தெரியவில்லை. பிரிவின் வலி பிடிச்சிருக்காம், த்ரிஷா அடிக்கடி சொல்கிறார்.
படம் பார்த்தவர்களுக்கு காதுவலியும் காதில் இரத்தம் வராத குறையாக வெளியே முணுகிக் கொண்டே செல்கிறார்கள். படப் பிடிப்பும், சிம்புவின் இயல்பான நடிப்பும், நகைச்சுவையாக பேசும் கேமரா மேனாக வரும் கணேஷ் ஆகியோர் தான் படத்தில் குறிப்பிட்டு சொல்லும் படி இருக்கிறது.
விண்ணைத் தாண்டி வருவாயா ? காதலில் பிசிஸ்க்ஸும் தெரியல கெமிஸ்ட்ரியும் தெரியல. சிம்பு மட்டும் பாஸ். படத்தில் எதையோ பெரிய முடிவாகச் சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்பு ஏற்படுத்தி தொடர்ந்து பார்க்க வைத்ததைத் தவிர்த்து வேறொன்றும் இல்லை. விண்ணைத் தாண்டி வருவாயா ? பழைய பாஸ்தா மாவு.
பிகு: இந்த படத்தை பதிவர்கள் டொன்லி, ஜோதிபாரதி, விஜய் ஆனந்த், முரு, சரவணன், வெற்றி கதிரவன்,ஜெகதீசன் ஆகியோருடன் பார்த்தேன். யாரும் நல்லா இருக்கிறது என்று சொல்லவில்லை.





















































