19 மே, 2010

தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் ஹிந்து மதம் !

பழமை வாதம் என்பது எந்த ஒரு தனிப்பட்ட மதத்திற்கும் மட்டுமே உரிமையுடைய சொத்தோ சொந்தமோ இல்லை, அனைத்து மத்திலும் விழுக்காடு அடிப்படையில் பழமைவாதங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. வேண்டுமானால் ஒரு மதத்தின் பழமைவாதம் அல்லது மூடத்தன விழுக்காடு என்பவை அந்த மதம் கண்டறியப்பட்ட காலங்களைப் பொருத்தது, இப்படியாக பார்க்கும் போது எந்த ஒரு மதம் மிகப் பழமையானதோ அவற்றில் மூட நம்பிக்கை மற்றும் பழமைவாதம் மிகுதியாக இருக்கும், பிறவற்றில் அவை குறைந்து காணப்படும். கடந்த 1000 ஆண்டுகளாக உலகலவில் பின்பற்றுவதாக மிகப் பெரியதாக புதிய மதங்கள் எதுவும் ஏற்படாததால் நமது மதச் சிந்தனைகள் அனைத்துமே 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 1000 ஆண்டுகளுக்கு முன்பான மதச் சிந்தனைகளின் இன்றைய 'எச்சத்தில்' எது சிறந்தது என்பதில் தான் மதவாதிகள் வேறுபடுகிறார்கள்.

எங்கள் மதத்தில் அற்புதங்கள் நிறைந்தது என்று சொல்வதில் எந்த ஒரு மதமும் விதிவிலக்கு இல்லை. இத்தகைய அற்புதம் குறித்த நம்பிக்கை மதங்களின் கூறுகள் என்றாலும் அதையும் தாண்டி தெய்வீகத் தன்மை என்பதை நிருபனம் செய்ய 'இயற்கையை வென்று அல்லது கட்டுப்படுத்திக் காட்டுவதால்' முடியும் என்று மதவாதிகள் நம்புகிறார்கள், இவர்களின் நம்பிக்கைக்கு அறியாமலேயே செயலாக இருப்பவர்கள் மதம் குறித்த எந்த ஒரு அறிவும் இல்லாமல் விருப்ப தெய்வத்த்தை விரும்பிய படி வழிபடும் படித்த மற்றும் பாமரமக்கள்.
அலகு குத்துதல், தீ மிதித்தல், தலையில் தேங்காய் உடைத்தல், மண்ணுக்குள் புதைத்து எழுப்பது, நடை பயணம் என உடலை வருத்திக் கொள்ளும் வேண்டுதல்களை மதம் சார்ந்த நம்பிக்கையாகப் பார்ப்பதும் பரப்புவதும் மதவாதிகளின் வேலை.

வாயில் இருந்து லிங்கம் (ஏற்கனவே விழுங்கியதை வாந்தியாக எடுக்கும் போது தொண்டையில் சிக்காத அளவுக்கு மிகவும் வளவளப்பாகச் செய்யப்பட்டது, கீழ் பீடம் இல்லாதது) எடுக்கும் சாமியார்களை இவர்கள் வெவ்வேறு சீரியல் எண்களின் 1000 ரூபாய் தாள்களை எடுத்துத் தரச்சொல்வது இல்லை. இந்த மேஜிக் ஏமாற்று மோசடிகளைப் பற்றி வெளிப்படையாக எவனும் பேசினால் அவனை மூளையை அடகு வைத்த பகுத்தறிவாதி என்றும் மத எதிரி என்றும் காட்டுவது இந்துமதவாதிகளின் வழக்கம். தங்க மோதிரம் வரவழைத்து தரும் சாமியார்களிடம் தேவைப்படுவோருக்கு கிட்னி, கண்கள் போன்ற உடல் உறுப்புகளை வரவழைத்து தரச் சொல்ல இவர்களால் முடியவில்லை.



பிர்லா கோளரங்கத்தில் அறிவியல் முறையில் தீயை எப்படி கையாளுவது என்கிற செய்முறை விளக்கம் தீ மிதி போன்ற 'ஹிந்து' நம்பிக்கைகளை கேலி செய்கிறதாம், இந்து மதம் அவமானப்படுத்தப்படுகிறதாம், ஐயகோ.....சாமியார்களின் படுக்கை அறை காட்சிகளாலும், அப்பு உள்ளிட்ட ரவுடிகளின், கூலிப் படைகளின் தொடர்பில் ஒரு சாமியார் கைது செய்யப்படும் போது ஏற்படாத 'இந்து மத' அவமானம் அறிவியலை தெரிந்து கொள்வதில் ஏற்பட்டுவிடுமா ?

இந்த நாட்டில் மண்ணின் மைந்தர்களை பிறப்பு வழியாக அடையாளம் காண்வது தொடர்வதும், அவர்களை குறிப்பிடும் விதமாக 'தலித்' என்கிற சொல் வழங்கப்படுவதுடன், அவர்களை பல்வேறு வகைகளில் புறக்கணிப்பதிலும், அவமானப்படுத்துவதையும் கண்டு கொள்ளாது (அவரவர் பிறப்பு என்பது ஆண்டவன் கொடுத்தது என )ஆசிர்வதிக்கும் இந்து மதம் தீ மிதி குறித்த செய்முறை விளக்கத்தால் அவமானம் அடைகிறது என்று கவலை கொள்ளும் உணர்ச்சித் தூண்டல் ஏமாற்றுப் பேர்வழிகளை எதால் அடிக்கலாம் ?



18 கருத்துகள்:

  1. உங்கள் பதிவில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் இருக்கு....!

    படத்தில் இருக்கும் லிங்கம் நர்மதா நதியில் கிடைக்கும் பாண லிங்கம்.
    இதை யாரும் வாயிலிருந்து எடுக்கமாட்டார்கள். காரணம் இது இயற்கையா கிடைக்கும்.

    சம்பந்தம் இல்லாத படம் போட்டு பதிவு எழுதியதால்
    இதை கண்டித்து பதிவிலிருந்து வெளியேறுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. //படத்தில் இருக்கும் லிங்கம் நர்மதா நதியில் கிடைக்கும் பாண லிங்கம்.
    இதை யாரும் வாயிலிருந்து எடுக்கமாட்டார்கள். காரணம் இது இயற்கையா கிடைக்கும்.//

    பிரபல (சாயாத) பாபா இந்த(மாதிரி) லிங்கங்களைத்தான் வாந்தியாக எடுக்கிறார்.

    //சம்பந்தம் இல்லாத படம் போட்டு பதிவு எழுதியதால்
    இதை கண்டித்து பதிவிலிருந்து வெளியேறுகிறேன்.//

    சம்பந்தம் இல்லையா ? இறை அற்புதம் என்று பரப்புவது யாவும் பிராடுதனம் என்பதை தொடர்பு படுத்தும் படம் அது.
    :)

    பதிலளிநீக்கு
  3. Indian Levitation trick revealed- நல்ல வீடியோ. போலிகள் இது போல பல ட்ரிக் செய்து ஏமாற்றுகிறார்கள். ஆன்மீக துறை கணக்கில் அடங்கா போலிகள் கொண்டது.

    ஆனால் அதற்காக பழங்காலத்தில் யோகிகள் இது போல நிஜத்தில் செய்திருக்கவே முடியாது என்று என்னவும் தேவை இல்லை.

    Art of Living போன்ற பயிற்சிகளுக்கு செல்லும் நண்பர்கள் பிரானாயாமம் செய்வதன் மூலம் நல்ல எனர்ஜி கிடப்பதுடன் சாப்பாட்டு அளவையும் எளிதாகக் குறைக்க முடியும் என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  4. //Art of Living போன்ற பயிற்சிகளுக்கு செல்லும் நண்பர்கள் பிரானாயாமம் செய்வதன் மூலம் நல்ல எனர்ஜி கிடப்பதுடன் சாப்பாட்டு அளவையும் எளிதாகக் குறைக்க முடியும் என்கிறார்கள்.//

    அதுபற்றி நித்தி நிறைய புத்தகம் (அவர் பெயரில் பிறரால் எழுதப்பட்டது) எழுதியதாக வெளியாகி இருந்தது.

    பதிலளிநீக்கு
  5. //இந்து மதம் அவமானப்படுத்தப்படுகிறதாம், ஐயகோ.....சாமியார்களின் படுக்கை அறை காட்சிகளாலும், அப்பு உள்ளிட்ட ரவுடிகளின், கூலிப் படைகளின் தொடர்பில் ஒரு சாமியார் கைது செய்யப்படும் போது ஏற்படாத 'இந்து மத' அவமானம் அறிவியலை தெரிந்து கொள்வதில் ஏற்பட்டுவிடுமா ?

    இந்த நாட்டில் மண்ணின் மைந்தர்களை பிறப்பு வழியாக அடையாளம் காண்வது தொடர்வதும், அவர்களை குறிப்பிடும் விதமாக 'தலித்' என்கிற சொல் வழங்கப்படுவதுடன், அவர்களை பல்வேறு வகைகளில் புறக்கணிப்பதிலும், அவமானப்படுத்துவதையும் கண்டு கொள்ளாது (அவரவர் பிறப்பு என்பது ஆண்டவன் கொடுத்தது என )ஆசிர்வதிக்கும் இந்து மதம் தீ மிதி குறித்த செய்முறை விளக்கத்தால் அவமானம் அடைகிறது என்று கவலை கொள்ளும் உணர்ச்சித் தூண்டல் ஏமாற்றுப் பேர்வழிகளை எதால் அடிக்கலாம் ?//

    ஆழமான கருத்துக்கள். இவர்களை புறம்தள்ளுங்கள் கண்ணன்

    பதிலளிநீக்கு
  6. //அவர்களை குறிப்பிடும் விதமாக 'தலித்' என்கிற சொல் வழங்கப்படுவதுடன், //


    'தலித்’ என்ற சொல் மராத்தி மொழி. இந்து மதத்தில் ஒடுக்கப்பட்டோர், அல்லது தாழ்த்தப்பட்டோரை, காந்தி அரிசனங்கள் என்றார். ஆனால், தாழ்த்தப்பட்டோர் அச்சொல்லை நிராகரித்தனர். காரணம்: காந்தி வருணாஷ்ரமக்கொள்கையை ஏற்றுக்கொண்டே தீண்டாமையை எதிர்த்தவர் என்பதால், பாரதியைப்போல.

    எனவே மகாராஷ்ட்ராவில தாழ்த்தப்பட்டோர் தம்மை ‘தலித்து’ என்றழைத்துக்கொண்டனர். பிறர் அப்படி அழைக்கவில்லை.

    இங்கு ஒரு நுண்ணிய அரசியலுமுண்டு: தலித்து என்பது ஒடுக்கப்பட்டவன். அவன் எம்மத்தத்தையும் சேர்ந்தவனாகயிருப்பினும். In other words, the word is persons-centric; not religion-centric.

    எனவே, சீக்கியர்களிடமும் தலித்துகள் உண்டு. கிருத்துவர்களிடமும் உண்டு.

    ‘அத்தொழில்களைச்’ செய்யும் அனைவரும் தலித்துகளே.

    இப்படி மத்த்தை உதாசீனம் செய்வதால்,

    பூஜயசிரி ஜெயெந்திர சுவாமிகள் ஒருமுறை சொன்னாரகள்:

    ‘தலித்து என்று உன்னையழைத்துக்கொண்டு, கோயிலுக்குள் நுழையாதே.
    அரிசனன் என்று சொல்லி வா, உனக்கு கோயில் சாமி எல்லாமுண்டு’

    சரிதானே?

    சுவாமிகள் எதைச்சொன்னாலும் சரியாகத்தான் சொல்வார். அவர் தலித்துகளைப்போற்றுபவர் என்பதை இப்பதிவாளருக்கு நினைவுபடுத்துவது என் தெய்வீககடமையாகும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பிராமனர்களின் பிரித்தாலும் சூழ்ச்சியால் தான் 99% இந்துக்கள் வேதம் படிக்காமலே (அதற்க்கு நாம் தகுதியற்றவன்) காலத்தை வீணடித்து உண்மை இறைவனை அறியாமையிலே இறந்து விடுகிறார்கள். பாவம்.
    வேதம் படித்து சத்தியத்தை உணர்ந்த ‌பண்டிட் வேத் பிரகாஷ். அவரின் ஆய்வரிக்கை
    உண்மையை உணர்வோம் கிளிக்
    http://nouralislam.org/tamil/islamkalvi/religions/islam_hindu_comparision_01.htm

    comments : alquran54.17@gmail.com

    பதிலளிநீக்கு
  8. // Abdul said...

    பிராமனர்களின் பிரித்தாலும் சூழ்ச்சியால் தான் 99% இந்துக்கள் வேதம் படிக்காமலே (அதற்க்கு நாம் தகுதியற்றவன்) காலத்தை வீணடித்து உண்மை இறைவனை அறியாமையிலே இறந்து விடுகிறார்கள். பாவம்.
    வேதம் படித்து சத்தியத்தை உணர்ந்த ‌பண்டிட் வேத் பிரகாஷ். அவரின் ஆய்வரிக்கை
    உண்மையை உணர்வோம் கிளிக்
    http://nouralislam.org/tamil/islamkalvi/religions/islam_hindu_comparision_01.htm

    comments : alquran54.17@gmail.com//

    கிடக்கிறவ கிடக்கா கிழவியைத் தூக்கி மனையில் வைங்கிற பழமொழி தான் நினைவு வருகிறது. உண்மையான இஸ்லாம் எது பொய்யான் இஸ்லாம் எது என்பதை தீவிரவாதம் செய்யும், தீவிரவாத பயிற்சியில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு சொல்லாமே சார்.

    எல்லாம் சிட்டுக்குருவி லேகிய மோசடி பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது ஒட்டகப்பாலில் காபிப் போடலாம் தெரியுமாங்கிற மாதிரி குறிக்கிடுறிங்க.

    பதிலளிநீக்கு
  9. //தனி காட்டு ராஜா said...

    http://thanikaatturaja.blogspot.com/2010/05/blog-post_07.html//

    இதற்கும் இடுகைக்கும் என்ன தொடர்பு என்று தெரியல. நன்றி!

    பதிலளிநீக்கு
  10. //smart said...

    நல்ல நகைச்சுவைப் பதிவு//

    நன்றி

    பதிலளிநீக்கு
  11. இந்து மதம் அவமானப்படுத்தப்படுகிறதாம், ஐயகோ.....சாமியார்களின் படுக்கை அறை காட்சிகளாலும், அப்பு உள்ளிட்ட ரவுடிகளின், கூலிப் படைகளின் தொடர்பில் ஒரு சாமியார் கைது செய்யப்படும் போது ஏற்படாத 'இந்து மத' அவமானம் அறிவியலை தெரிந்து கொள்வதில் ஏற்பட்டுவிடுமா ?
    ////////////
    உண்மைய சொன்னா எரியுது

    பதிலளிநீக்கு
  12. //ஐயகோ.....சாமியார்களின் படுக்கை அறை காட்சிகளாலும், அப்பு உள்ளிட்ட ரவுடிகளின், கூலிப் படைகளின் தொடர்பில் ஒரு சாமியார் கைது செய்யப்படும் போது ஏற்படாத 'இந்து மத' அவமானம் அறிவியலை தெரிந்து கொள்வதில் ஏற்பட்டுவிடுமா ?//

    நியாயமான கேள்வி.

    இதற்கு என்னுடைய பதில், இந்து மதம் எதனாலும் அவமானம் அடைவதில்லை, அவமானப்படுத்தவும் முடியாது என்பதுதான்.

    சில பலஹீனமான தனி நபர்கள் செய்கிற தவறுகள் மதத்தை எந்த விதத்திலும் பாதிக்காது.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  13. //சம்பந்தம் இல்லையா ? இறை அற்புதம் என்று பரப்புவது யாவும் பிராடுதனம் என்பதை தொடர்பு படுத்தும் படம் அது.
    :)//

    சேம் பிளட்!

    எனக்கும் கடவுள் மேல் இருக்கும் நம்பிக்கை இந்த ஸோ கால்ட் அற்புதங்களில் கிடையாது.

    நிஜமான ஞானிகள் யாரும் இந்த மாதிரி ஜாலவித்தைகள் செய்ததில்லை.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  14. சாதியும் மதமும் சமயுமும் காணா
    ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

    சாதியும் மதமும் சமயமும் பொய் என
    ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

    திருவடி தீக்ஷை(Self realization)

    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
    நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


    Utube videos:
    (First 2 mins audio may not be clear... sorry for that)
    PART-1 Click here
    PART-2 Click here
    PART-3 Click here


    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !