பின்பற்றுபவர்கள்

1 ஜூலை, 2009

அக்கரைச் சீமை அழகினிலே !

இன்றைய நடுதர தமிழக மக்களுக்கு விமானப் பயணம், வெளி நாட்டுச் சுற்றுலா மிகப் பெரிய கனவு இல்லை. ஆண்டுக் கணக்கில் சேர்த்து வைத்து திட்டம் போட்டு செல்ல வேண்டிய நிலலயெல்லாம் இன்று இல்லை. நடுத்தர இல்லங்களின் வருமானம் 30
ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் வரையில் இருப்பதால் அருகில் இருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலா சென்றுவருவது பற்றி மிகப் பெரிய திட்டம் போடத் தேவை இல்லை, விடுமுறைகளுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, குடி நுழைவு அனுமதி பெற்று, விமானப் பயணச் சீட்டு வாங்கிவிட்டால் போதும். சிங்கைக்கு நடுத்தர வருமான இல்லத்தினரின் சுற்றுலா வருகைகள் அண்மையில் மிகுந்திருப்பதை வைத்து இதனைச் சொல்கிறேன்.

இந்திய ஏற்றுமதி மிகாவிட்டாலும், இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட வெளி நாட்டு நிறுவனங்களினால் உற்பத்தி திறனும், வேலை வாய்ப்பும் மிகுந்து ஊதியமும் சிறு அளவிளேனும் வளர்ந்த நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்திருப்பதால் நடுத்தர வருமான இல்லங்களின் ஆண்டு வருமான சராசரி மற்றும் எல்லைகள் உயர்ந்திருக்கிறது. பெற்றோர்களை வெளி நாட்டுச் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று மகிழ்வூட்டுவோர் கனிசமான அளவிற்கு இருக்கிறார்கள், இல்லச் சுற்றுலாவென ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு சென்றுவருபவர்கள் மிகுந்திருக்கிறார்கள். சுற்றுலா அழைத்துச் செல்ல தவணை முறைத் திட்டங்களுடன் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுவதிலிருந்து வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை மிகுந்திருப்பது தெரியவருகிறது. அண்மைய புள்ளி விவரப்படி சிங்கைக்குச் சுற்றுலா வந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்விலிருந்து வந்தோர் எண்ணிக்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
சிங்கப்பூர் 4 மணி நேர விமானப் பயணத் தொலைவில் இருப்பதும், விமான பயணச் சீட்டு ஓரளவு ஏற்கக் கூடிய விலையில் இருப்பதும், சிங்கையில் இந்தியர்கள் கனிசமான அளவில் இருப்பதும், சுற்றுலா வருபவர்களுக்கான சுற்றுலா தலங்கள் இருப்பதாலும், வரிச் சலுகையுடன் அனைத்துப் பொருள்களும் வாங்கும் வழி செய்யும் நாடாக இருப்பதால் சிங்கையை சுற்றுலா செல்லத் இந்தியர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படி வருபவர்களில் குறிப்பிட்டத் தக்க விழுக்காட்டினர் மலேசியாவுக்கு சிங்கை வழியாக பேருந்து அல்லது தொடர் வண்டியில் சென்று வருவதும் உண்டு.

***

நாம் சுற்றுலா செல்லும் இடங்களில் நண்பர்கள், உறவினர்கள் இருந்தால் அவர்களையும் சந்தித்து வருவதால் (அந்த நாட்கள் அவர்களுக்கும் விடுமுறை நாளாக அமைந்திருந்தால்) நமது மகிழ்ச்சி இரட்டிபாக இருக்கும. சிங்கையில் ஏறக் குறைய 100 பதிவர்கள் இருக்கிறார்கள், அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றனர்(வருகின்றோம்) . பதிவு எழுதுவது, பதிவர் கூட்டங்களில் கலந்து கொண்டு நட்புகளைப் பெருக்கிக் கொள்வதாக தொடர்ந்த பதிவுலக பயணத்தில், இளைப்பாறிச் செல்வதுடன் நினைத்துப் பார்க்கக் கூடிய நிகழ்வுகளையும் (memorable events) அமைத்தால் என்ன என்கிற கேள்வியில் சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்தும் கருத்தாய்வு போட்டிக் குறித்துப் பேசப்பட்டும், சிங்கைப் பதிவர்களில் தொடர்பில் இருப்போருட்டன் அளவளாவப்பட்டு, கருத்துகேட்டு கருத்தாய்வு போட்டி நடத்துவது என்று உறுதி செய்து, அதற்காக இணையதளம் அமைத்து, போட்டித் தலைப்புகள், விதிமுறைகள் அமைக்கப்பட்டு மணற்கேணி - 2009 என்று தலைப்பிட்டு அறிவிப்பும் வெளி இடப்பட்டு இருக்கிறது.

இந்த போட்டியில் இடம் பெற்றத் தலைப்புகள் அனைத்தும் தமிழ் சூழலை முன்னிறுத்தி அமைக்கப்பட்டு இருக்கிறது, எந்த ஒரு (தமிழக/இந்திய) அரசுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தலைப்புகள் வைக்கப்படவில்லை. அனைத்தும் சமூகம் சார்ந்த பொதுவான அரசியல் தலைப்புகள் மற்றும் பிறத் தலைப்புகள் தான். சிங்கைப் பதிவர்கள் சார்பில் தமிழ் சூழலுக்கு ஏற்ற, விவாதிக்கப்பட வேண்டிய கருத்தாங்கங்களை
வெளிக் கொண்டுவரவேண்டும் என்கிற நோக்கம் தவிர்த்து வேறெதும் இல்லை.
போட்டியில் இந்தியாவில் இருக்கும் தமிழில் எழுதுவோர்களும், தமிழ் பதிவர்களும் கலந்து கொள்ளலாம்.

சிறந்த கருத்தாய்வுகளை எழுதியோரை பாராட்டும் பரிசாக அவர்களில் முதல் மூவரை சிங்கைச் சுற்றுலா அழைத்து வந்து, அவர்களுக்கான பொதுச் செலவுகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் எழுத்துலகை ஊக்குவிக்க முடியும் என்று நம்புகிறோம். போட்டி வழி நடத்தலுக்கான குழுக்கள் முறையாக அமைக்கப்பட்டு இருக்கிறது. தனிப்பட்ட எந்த ஒருவரின் முறையற்ற தலையீடுகள் எதுவும் இல்லாமல் செயல் திட்டமும் வரையரைகளும் சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி நிர்வாகக் குழுவினருடையது. ஆனால் போட்டியை தரமான கருத்தாய்வுகளைத் தந்து பேச வைக்க வேண்டியது பதிவர்கள் மற்றும் தமிழார்வளர்களின் கையில் தான் உள்ளது. நல்ல பல ஆக்கங்களை தரவேண்டும், தமிழுக்கு பெருமையும், வளமும் சேர்த்து தமிழ் சமுதாயத்திற்கு துணையாக தூணாக இருக்க வேண்டி அனைவரின் பேராதரவை நாடுகிறோம்.

உங்கள் கருத்தாய்வுகள் சிறந்ததென தேர்ந்தெடுக்கப்பட்டால் சிங்கை சுற்றுலா செல்லவதுடன் பதிவுலக உறவுகளையும் சேர்த்து சந்தித்து மகிழலாம்.

போட்டி குறித்த விரிவான தகவல்கள் இங்கே !

17 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

உள்ளேன் ஐயா!

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

பெரியவா, அருமையா எழுதிட்டேள்.

சி தயாளன் சொன்னது…

வந்தேன்..:-)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா

அது என்நாடு என்றாலும் அது நம்நாட்டுக்கு ஈடாகுமா

அருமையாக உள்ளது உங்கள் பதிவு

என் பக்கத்துக்கு வாங்க‌

நட்புடன் ஜமால் சொன்னது…

:)
யாருங்கோ அந்த பரிச வாங்கி இங்கே வாறது

சிநேகிதன் அக்பர் சொன்னது…

கோவி சார்.

தங்கள் குழுவின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

கண்டிப்பா கலந்துகொண்டு சிறப்பிப்போம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//tarjan ( ஸ்டார்ஜன் ) said...
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா

அது என்நாடு என்றாலும் அது நம்நாட்டுக்கு ஈடாகுமா

அருமையாக உள்ளது உங்கள் பதிவு

என் பக்கத்துக்கு வாங்க‌
//

நன்றி ஸ்டார்ஜன்,

சொர்கம் நம்ம ஊருக்கு வராதுன்னு விரக்தியிலும் அப்படிப் பாடுவார்கள், இப்ப இந்தியா சொர்க்கம் போல் தான் இருக்கு :)

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...
கோவி சார்.

தங்கள் குழுவின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

கண்டிப்பா கலந்துகொண்டு சிறப்பிப்போம்.

3:49 PM, July 01, 2009
//

மிக்க நன்றி அக்பர்

கோவி.கண்ணன் சொன்னது…

ஜெக்கு, சின்னவா, டொன்லீ மற்றும் பின்னூட்ட பேரொளி ஜமால் ஆகியோருக்கு நன்றி !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே,

பதிவு அருமை,
உங்களுக்கு,
சிங்கை சுற்றுலா வாரியத்தின் சார்பில் மலர்மாலையும், பதிவர்கள் சார்பாக பூங்கொத்தும்,
பரிசாகத் தருகிறோம்.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

இம்முயற்சியில் ஈடுபட்ட தமிழ்வெளி மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பாராட்டுக்கள். தொடரட்டும் இதுபோன்ற இலக்கியபணிகள்!

அறிவிலி சொன்னது…

அருமை.

வாழ்த்துகள்.

இந்த அணிலின் உதவி எதுவும் தேவை என்றால் ஒரு குரல் கொடுக்கவும்.

ராம்.CM சொன்னது…

நன்றாக இருந்தது.நல்ல அனுபவ பதிவு.

அப்பாவி முரு சொன்னது…

உள்ளேன் அய்(ஐ)யா!(எது தமிழ் என்று தெரியவில்லை, பெரியவாள் கோவி.த்த்துக் கொள்ள வேண்டாம்!)

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

கொவியாநந்தாக்கு தைவான்ல எல்லாம் சீடர்கள் இருக்கின்றார்கள் போல -:)

ஆ.ஞானசேகரன் சொன்னது…

இருக்குறேன் ஐயா!

கிடுகுவேலி சொன்னது…

அருமை....!அசத்துங்கள்....!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்